Aggregator

அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின் ஊடாகவே உறுதிப்படுத்தப்படவேண்டும்; காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்குக் கடிதம்

1 month ago

எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசத்தின் ஊடாகவே உறுதிப்படுத்தப்படவேண்டும்; வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்குக் கடிதம்

Published By: Vishnu

11 Dec, 2025 | 01:27 AM

image

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றம் குறித்து ஒரு சமரச அணுகுமுறையைப் பரிசீலித்துவரும் நாடுகளுக்கு நாம் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம். இந்த அரசாங்கம் ஏற்கனவே ஒரு வருடமாக அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் இதுவரை நீதி வழங்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

ஏற்கனவே சரிவடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் தற்போதைய அனர்த்தத்தினால் மேலும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அரசுக்கு எமது விவகாரத்தை விட அக்கறைக்குரிய பல விடயங்கள் உள்ளன. எனவே எமக்கு இழைக்கப்பட்ட கடும் அநீதிகளுக்கான பொறுப்பேற்பு சர்வதேச விசாரணை ஊடாகவே உறுதிசெய்யப்படவேண்டும். அதுவும் காலதாமதமின்றி நிகழவேண்டும் என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவியினால் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

புதன்கிழமை (10) சர்வதேச மனித உரிமைகள் தினமாகும். வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோரும், அன்புக்குரியவர்களுமான நாம், எமது குடும்ப உறுப்பினர்களைத்தேடி 16 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடிவருகிறோம். எமது போராட்டம் பதில்களோ அல்லது நீதியோ இல்லாமல் தொடர்கிறது.

இந்த 'சர்வதேச மனித உரிமைகள் தினம்' 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி முதல் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆண்டு இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தது முதல் இலங்கையில் தமிழர்கள் படிப்படியாக ஓரங்கட்டப்பட்டு, ஒடுக்கப்பட்டு, அவர்களது உரிமைகள் மறுக்கப்பட்டு, இனவழிப்பினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இனவழிப்பின் மிகக்கொடூரமான வடிவமொன்று 2009 ஆம் ஆண்டு மேமாதம் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்டது. சரணடைந்தவர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்படுவார்கள் எனப் பொய்யான வாக்குறுதி அளித்து, அதனை நம்பி தாமாகவே சரணடைந்த 29 குழந்தைகள் உட்பட குடும்பமாகச் சரணடைந்தவர்களும், உறவுகளால் கையளிக்கப்பட்டவர்களும் இலங்கை அரசாங்கத்தினால் வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள். அந்த நாள் முதல் எமது வலியும், போராட்டமும் நின்றபாடில்லை.

சுமார் 16 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிக்காகப் போராடும் எம்மைப் பொறுத்தமட்டில், இந்த ஆண்டு மனித உரிமைகள் தினத்தின் கருப்பொருளாக இந்தக் குற்றங்களுக்கான பொறுப்பேற்பே உள்ளது. அதிகாரத்துக்கு வரும் ஒவ்வொரு அரசாங்கமும், உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நீதியை வழங்குவோம் எனக்கூறி சர்வதேச சமூகத்துக்கு முன்பு தன்னை ஒரு மீட்பராக முன்னிறுத்துகிறது. ஆயினும், ஒவ்வொரு முறையும் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான கோப்பை மூடுவதற்கும், முன்னேற்றம் எட்டப்பட்டிருக்கிறது என்ற மாயையைக் கட்டமைப்பதற்கும் செயற்திறனற்ற பொறிமுறைகள் அல்லது குறுக்குவழிகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சர்வதேசத்தின் ஆதரவுடன் நாம் மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

தமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களைத் தேடிய சுமார் 500 பெற்றோர்களும், உறவினர்களும் எவ்வித பதிலோ, நீதியோ கிட்டாமல் மரணித்துவிட்டார்கள். இந்த எண்ணிக்கை சமீபத்திய 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு நெருக்கமானது. ஆயினும் எமத இறப்புகளுக்கு எந்த நாடும் துக்கப்படவோ, அக்கறைப்படவோ இல்லை. எந்த நாடும் உதவிக்கு வரவில்லை. இந்தத் தொடர்ச்சியான சோகத்தை சர்வதேச சமூகம் ஏன் கருத்திற்கொள்ளத் தவறிவிட்டது?

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசாங்க மாற்றம் குறித்து ஒரு சமரச அணுகுமுறையைப் பரிசீலித்துவரும் நாடுகளுக்கு நாம் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறோம். இந்த அரசாங்கம் ஏற்கனவே ஒரு வருடமாக அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் இதுவரை நீதி வழங்கப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. ஏற்கனவே சரிவடைந்துள்ள நாட்டின் பொருளாதாரம் தற்போதைய அனர்த்தத்தினால் மேலும் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அரசுக்கு எமது விவகாரத்தை விட அக்கறைக்குரிய பல விடயங்கள் உள்ளன. எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இனத்துவேசத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் அரசியல் கட்சிகள் இலங்கையில் இருக்கும் வரை, எந்தக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதியாக இருந்தாலும், எமக்கான நீதியை வழங்குவதற்குத் தயாராகவோ அல்லது எதிர்ப்புக்களை மீறி அதனைச் செய்யக்கூடிய திறனுடையவராகவோ இருக்கமாட்டார். எனவே எமக்கு இழைக்கப்பட்ட கடும் அநீதிகளுக்கான பொறுப்பேற்பு சர்வதேச விசாரணை ஊடாகவே உறுதிசெய்யப்படவேண்டும். அதுவும் காலதாமதமின்றி நிகழவேண்டும்.

எனவே நாம் நீண்டகாலமாக முன்வைத்துவரும் வேண்டுகோளை மீண்டும் வலியுறுத்துகிறோம். இனப்படுகொலை, சர்வதேசக் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் இலங்கையை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்தவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/233026

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

1 month ago
இது. புரியவில்லை. ஆனால். பதவி நீக்கப்பட்டுள்ளது. எனவே. வேலை. ஒப்பத்தப்படி. அப்படி. கூறியது. பிழையாகயிருக்கும். இது. ஒரு. ஊகம். தான். அவரை. பதவி நீக்கியது. கவலையளிக்கிறது. இருப்பினும். இது. எப்படி. சாத்தியம்். என்பதை. அறிய. ஆவல்.

19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

1 month ago
-

வணக்கம்.

1 month ago
வணக்கம்… வல்வை லிங்கம், உங்களை… மீண்டும் காண்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. ஏன்… இந்த நீண்ட இடைவெளி. தொடர்ந்து இணைந்திருங்கள்.

19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

1 month ago
-

வணக்கம்.

1 month ago
நீங்கள் இன்னும் உறுப்பினராக 5 யூரோ கட்டணம் செலுத்த வேண்டும். நான் மடலில் கணக்கு அனுப்பி விடுகிறேன். கட்டிவிடுங்கள் சரியா?

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

1 month ago
உங்கட ஆக்கள் என்ட உடன வந்திற்றியள் பாத்தியளோ... மதம் என்டா மாஞ்சு மாஞ்சு முட்டுக் கொடுப்பியள்.🤪 (அந்த தலீபான் திரியிள குரானை தூக்கிக்கொண்டு வந்து எங்க இருக்கென்டு காட்டவும் என்று முரண்டு பிடிச்சதை நான் இன்னும் மறக்கேல😉.)

வாழைப்பூ வடை

1 month ago
நன்றாகவே இருக்கிறதி அய்யா உங்கள் வாழைப்பூ வடை ...என்னென்று..சார் அங்கை தொட்டு ...இங்கை தொட்டு சாப்பிடுகிறியள் ... நல்லாத்தான் இருக்கு.... கவலை கடைசி வரிதான்...

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

1 month ago
விரைவில் உங்களிருவருக்கும் விசேட பட்டமளிப்பு ஒன்றிருக்கு... முற்கூட்டிய ..வாழ்த்துக்கள் இருவருக்கும்

நிவாரண பொருட்களுடன் யாழ். பலாலி விமான நிலையத்தில் வந்திறங்கியது அமெரிக்க விமானம்

1 month ago
இல்லை. லண்டனில். தான்். பழைய. வீடுகள். சின்ன. அறை. கொண்டவை. தயவுசெய்து அமைதியாக. ஆறுதலாக. விளங்கி. வாசியுங்கள்.

19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

1 month ago
சிம்பாவே, நபீபியா நாட்டில் நடைபெற இருக்கும் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் பெற்றோர் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாக கொண்டவர்கள். https://www.icc-cricket.com/news/peake-to-lead-as-australia-unveil-under-19-world-cup-squad

19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

1 month ago

சிம்பாவே, நபீபியா நாட்டில் நடைபெற இருக்கும் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் பெற்றோர் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாக கொண்டவர்கள்.

https://www.icc-cricket.com/news/peake-to-lead-as-australia-unveil-under-19-world-cup-squad

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

1 month ago
ஆமா.... அவர்களது பழக்கவழங்கங்கள் மத போதனை இருக்கும் பாடசாலையை தவிர்த்து, ஏன் இங்கு வருகிறார்கள்? தங்கள் பழக்கவழக்கங்களை பரப்புவதற்கா அல்லது இவர்களது பழக்கவழக்கங்களை அழிப்பதற்கா? முஸ்லிம் நாடு என தங்கள் நாடுகளை பீற்றிக்கொள்கிறார்கள், பின் ஏன் இவர்கள் சொன்னால் மட்டும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. இதுவே அவர்கள் நாட்டில் அல்லது அவர்களது பாடசாலையில் அவர்களது விதிமுறைக்கப்பால் நடந்திருந்தால் இவர்களது செயற்பாடு எவ்வாறு இருந்திருக்கும். ஆசிரியரை பதவியிலிருந்து விலக்கிய நிர்வாகம் இந்த மாணவர்களின் செயற்பாட்டை ஏற்றுக்கொள்கிறதா? பிற பாடசாலையில் கல்வி கற்க செல்பவர்கள், அந்த பாடசாலையின் விதிமுறைகளை பின்பற்ற தெரிந்திருக்க வேண்டும், இல்லையேல் அங்கு கற்பதை தவிர்க்க வேண்டும். தங்கள் பாடசாலை கல்வி, ஒழுக்கம் நிறைவை தராத படியினாலேயே மற்ற மத பாடசாலையை தெரிந்தெடுத்துள்ளார்கள்.

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

1 month ago
விக்கி கலைக்களஞ்சியத்தில் பார்த்தேன். இப்போது பிரித்தானியாவில் கிறிஸ்தவர்களின் சதவீதம் மொத்த சனத்தொகையில் 40 சொச்சத்திற்கு இறங்கிவிட்டதாம். கிறிஸ்தவம் பிரித்தானியாவில் புகுத்தப்பட்ட ஒன்றுதானே?

Carrom World Cup-ல் தங்கம் வென்ற கீர்த்தனா

1 month ago
ஐ பில் எல் விளையாட்டுக்கு கோடிக்கணக்கில் வீரர்களை ஏலத்தில் எடுக்கின்றார்கள். இந்த பிள்ளைக்கு சில லட்சங்களாவது அனுசரணை வழங்க மாட்டார்களா? இந்தியாவை பொறுத்தமட்டில் என்ன சாதிக்கின்றார்கள் என்பதை விட யார் சாதிக்கின்றார்கள் என்பது முக்கியமானது.

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

1 month ago
முன்னாள் இங்கிலாந்து பிரதமர் இலங்கை வந்தபோது, அவர் யழ்ப்பாணம் சென்று மக்களை சந்திக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தபோது, இலங்கை அரசாங்கம் அதற்கு பல தடைகளை ஏற்படுத்தியது. ஆனாலும் அவர் அங்கு வந்தபோது தமிழ் மக்கள், செல்வராசா கஜேந்திரன், அனந்தி அவர்களோடு பல மத குருமார் சந்திக்க காத்திருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை சந்திக்க முடியாமல் அவர்களை தடுத்து தள்ளி விழுத்தினர், அப்போது அனந்தி ஒரு பெண்ணாக இருந்தும் சில ஆவணங்கள் ஓடிச்சென்று டேவிட் கமரூனின் வாகனத்தின் யன்னல் வழியாக கொடுத்தார் . அந்நேரம் அங்கெ தமிழ்பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர் வேறு யாருமிருக்கவில்லை. சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்கள் யாழ்நூலகத்திலிருந்து பின்கதவு வழியாக சென்றனர். பின்னர் டேவிட் கமரூன், இடம் பெயர்ந்த மக்களின் குடிசைகளுக்கு சென்று அவர்களின் துயரம் நிறைந்த, வெள்ளம் நின்ற இடங்களில் அவர்களின் தற்காலிக குடிசைகளுக்கு சென்று பார்வையிட்டார், அதன் பின் வேறொரு சம்பவத்தில் சம்பந்தனும் சுமந்திரனும் மக்களை சந்திக்க சென்றபோது மாப்பிளை அழைக்கவா பட்டு வேட்டியோடு வந்தீர்கள் என்று மக்கள் கேள்வி கேட்டு அவர்களோடு உரையாட மறுத்து வெளியேற்றியிருந்தனர். நீங்கள் இணைந்திருந்த படம் கமரூன் மக்களோடு உரையாடியதாக இருந்திருக்கலாம். அந்த போராட்டங்களின் பின்னே மக்களை சென்று பார்வையிட்டார் அங்கு சுமந்திரனோ அல்லது வேறு யாருமோ அவர்களை அழைத்து சென்று உரையாடலை ஏற்படுத்தியிருக்கவில்லை. நாங்கள் உங்களிடம் ஆதாரம் கேட்கவில்லை, அப்படி கேட்டு நான் உங்களுக்காக கருத்து எழுதுவதுமில்லை. சில சமயங்களில் உங்களுக்கு பதில் எழுதாமல் பொதுவாக பதிந்து விட்டு கடந்து செல்வதுண்டு. அதைத்தான் பெட்டிக்கடை மூடுதல் என்று உங்கள் பாஷையில் எழுதுகிறீர்களென நினைக்கிறன். உங்கள் கருத்து அலட்டல், அதை நான் கடந்து செல்வேன் என்பவருக்கு, பதில் எழுதுவதை தவிர்த்தே அப்படி எழுதுவதுண்டு. இனியும் அப்படியே செய்வேன். நீங்கள் உங்கள் பாஷையில் எதை வேண்டுமானாலும் கூறி மகிழ்ந்து கொள்ளுங்கள். அதைப்பற்றி நான் கவலைப்படப்போவதில்லை. தமிழரின் ஏகபிரதிநிதிகள் என்று சொல்லிக்கொள்பவர்கள் எப்படி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதையே எழுதுகிறேன், நீங்கள் தான் எனது கருத்துக்களை கடந்து செல்பவர் என பலதடவை அறிக்கையிட்டிருக்கிறீர்கள், பின் அவற்றிற்கு பதில் கருத்தெழுதி விதண்டாவாதம் செய்வீர்கள், வாசகர்களுக்கு என்னை யாரென அறிமுகப்படுத்தப்போகிறீர்கள் என்கிறீர்கள், என்னை வாசகர்களுக்கு தெரியாது ஏனெனில் நான் களத்திற்கு புதியவர் எனவே நீங்கள்தான் என்னை அவர்களுக்கு அறியப்படுத்தவேண்டும் அப்படி நீங்கள் உங்களுக்குள் எண்ணிக்கொள்கிறீர்கள். எனது கருத்தை கடந்து போகும் நீங்கள் எனது கருத்துக்கு ஏன் பதில் எழுதுகிறீர்கள்? ஏன் என்னை வாசகர்களுக்கு அறியதரவேண்டுமென துடிக்கிறீர்கள்? இங்கு எத்தனையோ கருத்து பதிகின்றேன், ஆனால் சுமந்திரனை பற்றி எழுதினால் மட்டும் நின்று வாசிப்பீர்கள் பதில் தருவீர்கள், பின் அலட்டல் என்பீர்கள். அந்த அலட்டலிலும் நீங்கள் பதில் எழுத ஏதோ உண்மை இருக்கிறது, அதை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை அதுதான் உண்மை. எனக்காக நீங்கள் ஆதாரம் தேடவும் வேண்டாம், நான் உங்களிடம் கேட்கவுமில்லை.