மலையக தமிழ் மக்களை வடக்கில் வாழ்வதற்கு அனுமதிக்க வேண்டும் - சிவபூமி அறக்கட்டளைத்தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் 11 Dec, 2025 | 06:02 PM மலையக தமிழ் மக்களை இனியும் அநாதரவான வாழ்கை வாழக்கூடாது வடக்கு கிழக்கில் வாழ விரும்பும் மக்களை நாங்கள் வரவேற்க வேண்டும் என கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார். ஆறுமுகநாவலரின் குருபூஜை நல்லூர் துர்க்கா மணிமண்டபத்தில் புதன் கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். கடந்த 200 ஆண்டுகளுக்கு மேலாக மலயகத்தில் வாழும் தமிழ் மக்கள் படும் துன்பம் எல்லையற்றது. பிரித்தானியர்களால் தங்கள் தேவைக்கக கொண்டுவரப்பட்ட மக்கள் சொல்லொண்ணாதுயரத்தில் வாழுகின்றார்கள். நிரந்தர நிலமில்லை,வீடும் இல்லை இருப்பிடவசதியற்று அச்சதுடன் வாழ்ந்துவருகிறார்கள். இயற்கை சிற்ரத்தினால் தற்போது தொடர்ந்து அவலத்தை சந்தித்துள்ளார்கள். மலையின் விழிம்பில் மிண்டும் மக்கள் அந்தர நிலயில் வசிப்பதை விட வடக்கு கிழக்கில் வந்து வசிப்பது இலகுவானது மலயகத்தில் இருக்கும் மக்கள் வடக்கில் வாழவிரும்புவார்களானால் நாங்கள் நிலம் தருகிறோம். நீங்கள் வடக்கில் வந்து குடியேறுங்கள், வடக்கில் எவ்வளோ பாடசாலைகள் மூடப்பட்டுள்ளது. வடக்கில் எவ்வளவோ நிலம் இருக்கு என்று அவர்களை நாங்கள் இங்கு வாழவைக்க வேண்டும் இதுவே மனித நேயம், இதுவே தர்மமாகும். மலையகத்திலிருந்து மக்கள் யாராவது வடக்கில் குடியேற விருப்பத்துடன் வந்தால் அவர்களை வரவேற்க வேண்டும். இங்குள்ள எல்லா சிதம்பரத்து காணிகளிலும், கோயில் காணிகளிலும் எல்லா தர்ம காணிகளிலும் அவர்களை குடியேற்றி அவர்களை காப்பாற்ற வேண்டும். அதற்கு எங்களை நாம் தயாராக்க வேண்டும். இதற்கு எம்மை போன்றவர்கள் பூரண ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கின்றோம். அவர்கள் இங்கு வந்தால் விவசாயத்தில் செழிப்பு வரும் என்றார். https://www.virakesari.lk/article/233117
வணக்கம் வரலாறு படைப்போம். உங்களை அன்புடன் வரவேற்கின்றேன். இங்கு யாழ் களத்திலும் நல்ல கருத்தாடல்களும், ஆக்கங்களும் உறவுகளாலும் நட்புகளாலும் மேற்கொள்ளப்படுகின்றன. நீங்களும் உங்களுடயவற்றை இங்கு பதிவு செய்யுங்கள்..............❤️.
அமெரிக்காவில் ஃபுளோரிடா மாநிலத்தின் தென் பகுதிகளில் சில வாழைத் தோட்டங்கள் இருக்கின்றன என்று நினைக்கின்றேன், அண்ணா. கலிஃபோர்னியாவின் தென் பகுதிகளிலும் வாழை நன்றாகவே வருகின்றது. என்னுடைய வீட்டில் வாழைகள் குட்டிகளும், குலைகளுமாக வருடம் முழுவதும் நிற்கின்றன. ஆனால் இங்கு கலிஃபோர்னியாவில் வாழைகளை தோட்டங்களாக நான் பார்த்ததில்லை. அமெரிக்காவின் வாழைத் தோட்டம் தான் தென் அமெரிக்கா. அமெரிக்க நிறுவனங்கள் தென் அமெரிக்க நாடுகளில் காடுகளை எரித்து வாழைத் தோட்டங்களை அமைத்து, அந்த நாடுகளைச் சூறையாடினார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. உலகில் வாழைப்பழங்களை அதிகமாக சாப்பிடுபவர்கள் ஜேர்மனியர்களே என்றும் ஞாபகம். அமெரிக்க நிறுவனங்கள் தென் அமெரிக்காவை எரித்து எடுத்த வாழைப்பழங்களை ஜேர்மனிக்கு ஏற்றுமதி செய்தார்கள்................... First banana, Second banana (முதல் போக வாழைப்பழம், இரண்டாம் போக வாழைப்பழம்) என்னும் குறியீடும், இவை ஒரு வகையான தர அளவீடுகள், இங்கிருந்தே வந்தன. காட்டை எரித்தவுடன் செய்யப்படும் முதல் போகத்தில் விளையும் வாழைப்பழங்கள் பெரிதாகவும், அடுத்த அடுத்த போகங்களில் சிறிதாகவும் ஆகும் என்று சொல்லப்படுகின்றது. இங்கு தொழில்முறை விளையாட்டு வீரர்களை இந்த குறியீட்டால் குறிப்பிடுவார்கள். மிகச் சிறந்த வீரர்கள் - First banana, அடுத்த நிலை வீரர்கள் - Second banana ,....................
மிக்க நன்றி அல்வாயன். சில இன்றைய செய்திகள் அல்லது நிகழ்வுகள் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலாக அமைந்துவிடுகின்றன, அல்வாயன். அப்படியே மனம் போன போக்கில் அலைந்து அலைந்து எழுதுகின்றேன் போல.................... அவனின் முடிவு பெரும் துயரமே..........
இது எங்கள் தமிழ் ஆட்களிடம் தனித்துவமாக இருக்கும் கிரகிப்புக் குறைபாடோ தெரியவில்லை. மருத்துவர்கள் "வாழைத் தண்டிலும் பூவிலும் நிறைய நார்த்தன்மை இருக்கிறது, எனவே கிளைசீமிக் இண்டெக்ஸ்" குறைவு, அதனால் சாப்பிட்டாலும் சுகர் ஏறாது" என்று எழுதினால், வாசிப்போர் "வாழைத்தண்டு, வாழைப்பூ சுகர் வருத்தத்தைக் குணப் படுத்தும் மருந்து" என்று பெருப்பித்து விளங்கிக் கொள்கிறார்கள்! சுகர் வருத்தத்திற்கான மருந்து என்பது இன்சுலின் சுரப்பையோ அல்லது சுரக்கும் இன்சுலின் தொழில்பாட்டையோ அதிகரிக்கும் வேலையைச் செய்தால் மட்டுமே அது சுகர் வருத்தத்திற்கான மருந்து. தற்போதைக்கு மெற்போமின் போன்ற ஆங்கில மருந்துகள் மட்டும் தான் இந்த வேலையைச் செய்கின்றன. வேறெந்த மந்திர மாயமும் நாட்டு வைத்தியமும் இந்த வேலையைச் செய்வதாக ஆதாரங்கள் இல்லை! இந்த கிரகிப்புக் குறைபாட்டை வேறு பல வடிவங்களிலும் காண்கிறேன். அண்மையில் ஒரு நண்பர் தான் வொட்கா குடிக்க ஆரம்பித்திருப்பதாகச் சொன்னார். "நீங்கள் அல்கஹோல் குடிப்பதில்லையே, இப்போது புதிதாக ஆரம்பித்திருக்கிறீர்களா?" என்று கேட்ட போது "வொட்கா குடித்தால் இரத்த சுகர் ஏறாது என்பதால் குடிக்கிறேன்" என்றார்😂. நடந்தது என்னவென்றால், "உடலில் சுகரை ஏற்றாமல் எந்த மதுபானத்தைக் குடிக்கலாம் டொக்ரர்?" என்று எங்கள் தமிழ் நோயாளிகள் கேட்கும் போது சில டொக்ரர் மார் "வொட்காவில் சுகர் இல்லை, எனவே கொஞ்சம் குடிக்கலாம்" என்று பதில் சொல்கிறார்கள். இதனைத் தான் "வொட்கா குடித்தால் சுகர் ஏறாது" என சிலர் விளங்கிக் கொண்டிருப்பதாகத்தெரிகிறது.
அண்ணா, ஏறக்குறைய இந்தக் கதையில் வரும் நிகழ்வுகள் அப்படியே நடந்தவை. அந்தக் கடைசி ஒரு வரி போலவே நண்பனின் வாழ்க்கை அவசரமாக, அநியாயமாக முடிந்தது. சொல்ல முடியாத சோகம் எந்த நாளில் நினைத்துப் பார்த்தாலும். நான் இதை கொஞ்சம் அழுத்தி எழுத வேண்டும் என்று நினைத்தே அப்படி ஒரு (கடைசி) வரியில் முடித்தேன். மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சைகளும் கல்வித் தகுதியும், அனுபவமும் உள்ளவர்களிடமிருந்து மட்டுமே பெறப்படவேண்டும் என்பதே இதன் சாரம், அண்ணா.