Aggregator
இலங்கையின் வெளியுறவில் அமெரிக்கா - சீனா கொள்கை மோதல்
இலங்கையின் வெளியுறவில் அமெரிக்கா - சீனா கொள்கை மோதல்
12 Oct, 2025 | 09:26 AM
![]()
(லியோ நிரோஷ தர்ஷன்)
இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது, தற்போது அரசாங்கத்திற்குள்ளேயே ஒரு தீவிரமான உள்நாட்டுப் போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தில் உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள கொள்கை ரீதியான முரண்பாடுகள் வெளியுறவுக் கொள்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன. குறிப்பாக மேற்குலக சார்பு நிலையில் ஒரு தரப்பும், மார்க்சிசம் அல்லது சோசலிச சீன சார்பு கொள்கையில் மற்றொரு தரப்பும் ஆளும் கட்சிக்குள் செயல்படுகின்றமையானது, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிலையான போக்கில் முன்னெடுப்பதற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன.
எந்தவொரு நாட்டுடனும் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளாது இலங்கையின் பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டு ஜனாதிபதி அநுரகுமர திசநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் செயல்படுகின்றனர். குறிப்பாக மேற்குலக நாடுகளுடன் இவர்கள் கூடுதலான உறவை வளர்க்க விரும்புகின்றனர். இந்த அணுகுமுறை காரணமாகவே அமெரிக்காவின் பக்கமிருந்து பெரும் ஆதரவுகள் அரசாங்கத்திற்கு கிடைத்தன.
ஆனால் மார்க்சிசம் அல்லது சோசலிச சார்பு கொள்கையில் இருக்கும் ஆளும் கடசியின் மற்றொரு தரப்பான மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் செல்வா மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் ஆதரவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
இந்தக் கடுமையான இழுபறி காரணமாக, இலங்கையின் பொருளாதாரத்துக்கு முக்கியமான அம்பாந்தோட்டை சீன எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், கெரவலப்பிட்டிய மற்றும் சப்புகஸ்கந்த போன்ற பல பாரிய வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் இன்னும் ஆரம்பிக்கப்படாமல் முடங்கியுள்ளன.
சமீபத்தில், அரசாங்கம் இந்த கொள்கை ரீதியான நெருக்கடிகளை தீர்க்கும் வகையில் சில திட்டங்களை முன்னெடுத்திருந்தது. கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையின் எஞ்சிய பணிகள் மீண்டும் சீனாவுக்கு வழங்கியது. இதற்கான கடனை அமெரிக்க டொலர்களுக்குப் பதிலாக சீன யுவானில் பெறுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது.
மேலும் அம்பாந்தோட்டை சுத்திகரிப்பு நிலையத்திற்கான சினோபெக் நிறுவனம் கேட்ட 40 வீத சந்தை வாய்ப்பை வழங்கவும் இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அரசாங்கத்தின் இந்த மாற்றத்தைக் கண்காணித்த அமெரிக்கா உடனடியாக எதிர்வினையாற்றியது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் நியூயோர்க் விஜயத்தின் போது, அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் அமெரிக்க தரப்புடன் கலந்துரையாடல்களில் இதன் போது ஈடுப்பட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை சீனாவுக்கு வழங்குவது குறித்து அமெரிக்காவின் கடுமையான கவலைகள் உள்ளதாக இராஜாங்க தினைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணை வெளியுறவுச் செயலாளர் அலிசன் ஹூக்கர் நேரடியாகக் கூறியிருந்ததாகவும், அதற்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், இது முந்தைய அரசாங்கத்தின் முடிவு என்றும், மாற்ற முடியாது என்றும் குறிப்பிட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தது. அத்துடன் இலங்கைக்கு முதலீடுகள் தேவைப்படும ;போது அமெரிக்கா இன்னும் எந்த முதலீட்டையும் செய்யவில்லை என்றும் அரசாங்கம் பதிலளித்துள்ளது.
இதற்குப் பின்னரே, அமெரிக்க வெளியுறவுத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) கொள்கைகள் காரணமாக முதலீட்டாளர்கள் அஞ்சுவதாகவும், வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையில் ஒத்திசைவின்மை இருப்பதாகவும் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிறப்புத் தூதுவரான செர்ஜியோ கோர் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பின் போது, சீன முதலீடுகள் குறித்து விவாதிக்கப்படவில்லை.
அதற்குப் பதிலாக, ஜனாதிபதி ட்ரம்ப் விதித்த 20 வீத வரியைக் குறைப்பது மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டுள்ளது. இதன் விளைவாக, இலங்கையின் பாதுகாப்பிற்காக மேலும் ஒரு கரையோர பாதுகாப்பு கப்பல் மற்றும் கண்காணிப்பு சீ1-30 ஹெலிகொப்டர் வழங்க அமெரிக்கா அவதானம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
மிசிசிப்பி உயர்நிலைப் பள்ளி கால்பந்து விளையாட்டுப் போட்டிகளுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர் .
மிசிசிப்பி உயர்நிலைப் பள்ளி கால்பந்து விளையாட்டுப் போட்டிகளுக்கு அருகில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 6 பேர் கொல்லப்பட்டனர் .
இந்த வார இறுதியில் மிசிசிப்பி முழுவதும் குறைந்தது மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடந்தன, இவை அனைத்தும் உயர்நிலைப் பள்ளி கால்பந்து விளையாட்டுகளுடன் தொடர்புடையதாகத் தெரிகிறது, இதில் கர்ப்பிணித் தாய் உட்பட பலர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் அல்லது சனிக்கிழமை அதிகாலையில் வடமேற்கு மிசிசிப்பி நகரமான லேலண்டில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 12 பேர் காயமடைந்தனர் என்று நகர மேயர் கூறினார்.
நள்ளிரவில் லேலண்ட் நகர மையத்திற்கு அருகில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், நான்கு பேர் கொல்லப்பட்டதாகவும் மேயர் ஜான் லீ CNN இடம் கூறினார். 16 பேரில் இறந்த நால்வரையும் லீ கணக்கிட்டாரா என்பதை அவர் தெளிவுபடுத்தவில்லை.
துப்பாக்கிச் சூடு தொடர்பாக யாரும் காவலில் இல்லை என்று அவர் கூறினார். துப்பாக்கிச் சூடு பற்றிய செய்திகள் குறித்து கேட்டபோது விசாரணை நடந்து வருவதாக லேலண்ட் காவல் துறை CNN இடம் தெரிவித்துள்ளது. அது மேலும் தகவல்களை வெளியிடவில்லை.
லேலண்ட் உயர்நிலைப் பள்ளியின் ஹோம்கமிங் கால்பந்து போட்டிக்குப் பிறகு ஒரு கூட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடந்ததாக CNN துணை நிறுவனமான WAPT, மாநில செனட்டர் டெரிக் சிம்மன்ஸை மேற்கோள் காட்டி தெரிவித்துள்ளது. CNN உடனடியாக சிம்மன்ஸைத் தொடர்பு கொள்ள முடியவில்லை.
ஹைடெல்பெர்க் காவல்துறைத் தலைவர் கார்னெல் வைட், வெள்ளிக்கிழமை இரவு ஹைடெல்பெர்க் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் குறைந்தது இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காயமடைந்ததாகவும் CNN துணை நிறுவனமான WDAM இடம் தெரிவித்தார். சனிக்கிழமை, ஜாஸ்பர் கவுண்டி ஷெரிப் துறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு தொடர்பாக ஒரு நபர் இருப்பதாகக் கூறினர்.
மேலும் ஷார்கி கவுண்டியில், வெள்ளிக்கிழமை இரவு "கால்பந்து விளையாட்டுக்கு வெளியே நடந்த" துப்பாக்கிச் சூடு தொடர்பாக குறைந்தது இரண்டு பேரைக் கைது செய்து குற்றம் சாட்டியுள்ளதாக ஷெரிப் துறை தெரிவித்துள்ளது.
"எங்கள் சமூகத்தில் வன்முறைச் செயல்கள் பொறுத்துக்கொள்ளப்படாது என்பதை ஷெரிப் சீசர் முற்றிலும் தெளிவுபடுத்த விரும்புகிறார்," என்று ஷார்கி கவுண்டி ஷெரிப் துறையின் பேஸ்புக் பதிவு தெரிவித்துள்ளது. "எங்கள் சட்ட அமலாக்க அதிகாரிகள் குழு விரைவாக நீதியைப் பெறுவதற்கும், எங்கள் மாவட்டத்திற்கு வரும் அனைத்து குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் உறுதிபூண்டுள்ளது."
https://www.cnn.com/2025/10/11/us/mississippi-leland-shooting
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
வடக்கு மாகாணத்தில் சட்டவிரோத செயற்பாடுகள் அதிகரித்து செல்கிறது ; பொலிஸாரின் ஒத்துழைப்பு போதாது - வடக்காமாகாண மாவட்ட செயலர்கள் குற்றச்சாட்டு
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இந்திய வெளிவிவகார அமைச்சரை சந்தித்தார் ஆப்கானிஸ்தான் வெளிவிவகார அமைச்சர்
சீனா மீது தற்போதைய விகிதங்களை விட 100% புதிய வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் கூறுகிறார், இது வர்த்தகப் போரை பெருமளவில் அதிகரிக்கிறது.
இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!
கடல்வளம் குன்றுகிறது!
கடல்வளம் குன்றுகிறது!

இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் மீன்பிடிப்பது தொடர்பாக அண்மைக் காலங்களில் மீனவர்களுக்கிடையே நிகழ்ந்துவரும் மோதல் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை கொள்ளச் செய்கிறது. ஒரே நாட்டின் அண்டை மாநில, மாவட்ட மீனவர்களுக்குள்ளேயே ஒற்றுமையோ, விட்டுக் கொடுத்தலோ இல்லாத நிலையில், அயல்நாட்டு மீனவர்கள் விட்டுக்கொடுத்து அவர்களது கடல் வளத்தை நம்மோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?
அண்மையில் கோடியக்கரைக்கு அப்பால் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வெளிமாவட்ட மீனவர்கள் 26 பேரையும், அவர்களது 8 விசைப் படகுகளையும் வேதாரண்யம் மீனவர்கள் பிடித்து ஆறுகாட்டுத்துறை படகு துறையில் சிறை வைத்து விட்டனர்.
காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தைச் சேர்ந்த 24 மீனவர்கள் 2 படகுகளில் ஆந்திர மாநில கடல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அம்மாநில மீனவர்கள் 50-க்கும் மேற்பட்டோரால் தாக்கப்பட்டுள்ளனர். படகுகளை நோக்கி நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன.
வாக்கிடாக்கி, கைப்பேசிகள் மற்றும் மீன்பிடி வலைகள் பறிக்கப்பட்டுள்ளன. மேலும், மீனவர்களை சிறை பிடித்துச் சென்றுவிட்டனர். சமாதான பேச்சுக்குப் பிறகு மீனவர்கள் மட்டும் சொந்த ஊருக்கு திரும்பி வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
தூத்துக்குடி கடல் பகுதியில் நாட்டுப் படகு மற்றும் விசைப் படகு மீனவர்களுக்கு இடையே அவ்வப்போது தொழில் போட்டியால் மோதல் சம்பவங்கள் நிகழ்வது வாடிக்கையாக மாறி இருக்கிறது. கடந்த 2024 மார்ச்சில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மற்றும் கேரள மீனவர்கள் தூத்துக்குடி கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, அங்குள்ள மீனவர்களால் சிறை பிடிக்கப்பட்டனர்.
கிழக்குக் கடற்கரையில் மட்டும்தான் இந்த மோதல் என்றில்லை. மேற்குக் கடற்கரையில் கர்நாடக மீனவர்கள் கோவா கடல் பகுதியில் அத்துமீறி புகுந்து மீன் பிடித்து வருவதாகக் கூறி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த 2022 முதல் 2024 வரையில் அவ்வாறான மோதல் சம்பவங்கள் தொடர்பாக 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் எல்லாவற்றுக்கும் கூறப்படும் ஒரே காரணம் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாகக் கூறுவதுதான் வேடிக்கை.
நாட்டைச் சுற்றியுள்ள வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல், அரபிக் கடல் ஆகிய மூன்று கடல் பகுதிகளிலும் சுமார் 12 கடல் மைல் பகுதிக்கு முழுமையான இறையாண்மை மத்திய அரசுக்குத்தான் உண்டு. சுமார் 200 கடல் மைல் பகுதி வரையில் உள்ள பொருளாதார வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். மாநில அரசுகள் அருகில் உள்ள கடல் பகுதியில் சுற்றுச்சூழல் மற்றும் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு போன்றவற்றை மட்டுமே செய்துகொள்ள முடியும்.
ஒரு மாவட்ட, மாநில மீனவர்கள் கடலைச் சொந்தம் கொண்டாடிக் கொண்டு மற்ற மீனவர்களை தங்களது எல்லைகளுக்குள் வரக் கூடாது என சட்டபூர்வமாக தடுக்க முடியாது. ஆனால், மீனவர்கள் அவரவர் பயன்பாட்டின் அடிப்படையில் செயற்கையான எல்லை ஒன்றை வகுத்துக் கொண்டு மோதிக் கொள்வது வாடிக்கையாகி வருவது வருத்தமளிக்கிறது.
நாட்டின் கடல் பகுதியை எல்லையாகக் கொண்ட 9 மாநிலங்களிலும் மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்த மோதல்களுக்கு முக்கியக் காரணம், கடலில் மீன் வளம் குறைந்து வருவதும், மாறி வரும் நவீன மீன்பிடி தொழில்நுட்ப முறைகளும்தான். அதிவேக விசைப் படகுகள் மற்றும் இரட்டைமடி வலைதான் பிரச்னையின் மையப்புள்ளி.
ஆந்திர மீனவர்கள் 200 முதல் 300 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை மீன்பிடி படகுகளில் பயன்படுத்துகின்றனர். ஆனால், காரைக்கால் மீனவர்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 600 குதிரைத் திறன் கொண்ட என்ஜின்களை பயன்படுத்துகின்றனர். இதனால் வலைகள் மற்றும் மீன் வளம் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் சிதைக்கப்படுவதாக ஆந்திர மீனவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள். தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலை பயன்பாடு நிலைமையை மேலும் மோசமாக்குகிறது.
இதே காரணங்களால் தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைந்துள்ளது. அதனால்தான், ராமேசுவரம் மீனவர்கள் எல்லைதாண்டி மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கைக் கடற்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இங்கு மீன் வளம் குறைந்துள்ள நிலையில், எஞ்சி இருக்கும் கொஞ்ச வளத்தையும் அபகரித்துச் செல்ல வரும் குளச்சல் மற்றும் கேரள மீனவர்களைச் சிறைபிடிக்க வேண்டிய அவசியமும் ஏற்படுகிறது.
ஆந்திர கடல் பகுதியிலும் மீன் வளம் குறைந்துவிட்டதாலும், அடிக்கடி புயல் தாக்குதல் இருப்பதாலும் அம்மாநில மீனவர்கள் கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். ஆதலால், அண்டை மாநில மீனவர்கள் அங்கு வந்து மீன் பிடிப்பது உள்ளூர் மீனவர்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்கிறது.
தடை செய்யப்பட்ட என்ஜின் மற்றும் வலைகளை மீனவர்கள் தொடர்ந்து பயன்படுத்துவதைத் தடுக்க மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினாலும், அவற்றால் பயன் எதுவும் ஏற்படவில்லை என்பதைக் கள நிலவரங்கள் உணர்த்துகின்றன.
கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்புக் குழுமம் கண்காணிப்புப் பணிகளை முறையாக மேற்கொண்டால் இந்த மோதல்களைத் தடுக்க முடியும்.
மோதல்களுக்கான காரணங்கள் கண்கூடு. அவற்றைச் சரி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் கடமை.
https://www.dinamani.com/editorial/2025/Oct/07/marine-resources-are-dwindling