Aggregator
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
இரசித்த.... புகைப்படங்கள்.
பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
ஆடி மாத சிரிப்புகள்.
சிரிக்கவும் சிந்திக்கவும் .
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
மனித உரிமைகள் ஆணையாளருடைய இறுதி செய்யப்படாத அறிக்கை! நிலாந்தன்.
மனித உரிமைகள் ஆணையாளருடைய இறுதி செய்யப்படாத அறிக்கை! நிலாந்தன்.
மனித உரிமைகள் ஆணையாளருடைய இறுதி செய்யப்படாத அறிக்கை! நிலாந்தன்.
மனித உரிமைகள் ஆணையாளருடைய திருத்தப்படாத அறிக்கையின் முதல் வடிவம் வெளியிடப்பட்டிருக்கிறது. எதிர்பார்க்கப்பட்டதை போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கம் அந்த அறிக்கையில் உண்டு. மூன்று இனங்களுடையதும் ஆணையைப் பெற்று வந்திருக்கும் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் “இறந்த காலத்தில் இருந்து உடைத்துக்கொண்டு வருவதற்கான வாய்ப்புக்களைப் பயன்படுத்த வேண்டும்” என்ற எதிர்பார்ப்பு ஐநாவிடம் இருப்பதாகத் தெரிகிறது. அது ஐநாவின் எதிர்பார்ப்புத்தான். நிச்சயமாக யதார்த்தமல்ல.
இது ஏறக்குறைய 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் வந்த நிலைமையை நினைவுபடுத்துவது.2015 ஆட்சி மாற்றத்தின் போதும் மூவினங்களும் இணைந்து ரணில் மைத்திரி அரசாங்கத்தை கொண்டு வந்தன.எனவே புதிய அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை கொடுக்கும் நோக்கத்தோடு ஜெனிவா கூட்டத்தொடர் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதுவரையிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இலங்கை அரசாங்கங்களுக்கு எதிரானவை.எனவே இலங்கை அரசாங்கங்களும் அதன் நட்பு நாடுகளும் அந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துவந்தன. ஆனால் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பொறுப்புக் கூறலுக்கான ,அதாவது நிலை மாறு கால நீதிக்கான தீர்மானம் எனப்படுவது இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானம் அது.அந்த தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் நிலைமாறு கால நீதியை இலங்கைத் தீவில் ஸ்தாபிப்பதற்கு ஒப்புக்கொண்டது. அதைவிட முக்கியமாக தமிழ்த் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளியாக மாறி அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக உழைத்தது.
இது பழைய கதை. இப்பொழுது அதே கதை திரும்பி வருகிறது. ஆனால் அரசாங்கம் வித்தியாசமானது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பகை நிலைக்கு தள்ளாத விதத்தில் மீண்டும் ஐநா மனித உரிமைகள் பேரவை நகர்வுகளை முன்னெடுப்பதாக தெரிகிறது. இது அண்மையில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்து போனபோது ஊகிக்கப்பட்டது.அவர் தன்னுடைய இலங்கைப் பயணத்தின் முடிவில் தெரிவித்த கருத்துக்களில் இருந்து அதை உணரக்கூடியதாக இருந்தது.
இப்பொழுது அவருடைய வருகைக்குப் பின்னரான திருத்தப்படாத அறிக்கை வெளிவந்திருக்கிறது.அந்த அறிக்கையின்படி புதிய அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஐநாவிடம் இருப்பது தெரிகிறது. அந்த அடிப்படையில்தான் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரிலும் முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதனை இப்பொழுதே ஊகிக்கத்தக்கதாக உள்ளது.
இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.சில கிழமைகளுக்கு முன் யாழ்ப்பாணம் ரில்க்கோ விருந்தினர் விடுதியில் நடந்த சந்திப்பின்போது அதாவது ஐநாவுக்கு கடிதம் எழுதுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பின்போது இது சுட்டிக்காட்டப்பட்டது. ஐநா பல விடயங்களை ஏற்கனவே இறுதி செய்து விட்டது. அதன்படி புதிய அரசாங்கத்திற்கு வாய்ப்புகளை வழங்கும் நோக்கம் ஐநாவிடம் உண்டு என்ற விளக்கம் அந்த சந்திப்பில் இருந்தது.
ஒரு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருப்பதனால் அதற்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று ஐநா சிந்திக்கின்றதா?ஆனால் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கைகள் ஒரு விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் முழுமையாக பொறுப்பு கூறவில்லை என்பதுதான் அது.அவ்வாறு இலங்கையின் சிங்கள பௌத்த அரசாங்கங்கள் கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்புக் கூறத் தவறியிருக்கும் ஒரு வரலாற்று பின்னணியில், புதிய அரசாங்கம் மட்டும் பொறுப்பு கூறும் என்று ஐநா எப்படி எதிர்பார்க்கலாம்?
ஏற்கனவே 2015 இல் இருந்து 18 வரையிலும் ரணில் மைத்திரி அரசாங்கம் பொறுப்புக் கூறும் என்று ஐநா எதிர்பார்த்தது. ஆனால் அந்த அரசாங்கத்தின் தமிழ்ப் பங்காளியாக இருந்து பொறுப்பு கூறுவதற்காக உழைத்த சுமந்திரன் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளின் பின் வவுனியாவில் வைத்துச் சொன்னார்.அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனை என்று. அதாவது ஆட்சி மாற்றத்தின் மூலம் அரசு கட்டமைப்பில் மாற்றம் வரும் என்ற கருதுகோள்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளில் பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்திய சுமந்திரன் கூறுகிறார் அது தோல்வியுற்ற பரிசோதனை என்று.
இப்பொழுது அதே தோல்விகண்ட பரிசோதனையை மற்றொரு புதிய அரசாங்கத்தோடு இணைந்து முன்னெடுக்க ஐநா தயாராகி வருகிறதா? ஏற்கனவே ரணில் மைத்திரி அரசாங்கத்துக்கு அதாவது நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஐ நா வாய்ப்புகளை வழங்கியது.ஆனால் அந்த வாய்ப்புகளை நிலை மாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேனவே தோற்கடித்தார். இப்பொழுது மீண்டும் ஒரு தடவை தேசிய மக்கள் சக்திக்கு ஐநா வாய்ப்பை வழங்கக் கூடுமா?
நிலைமாறு கால நீதிக்கான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிய ஒரு பின்னணிக்குள்தான் 46/1 தீர்மானம் 2021ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.அத் தீர்மானத்தின் பிரகாரம் ஸ்ரீலங்காவை பொறுப்புக் கூற வைப்பதற்கான அலுவலகம் என்ற பெயரில் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு இன்றுவரை விசா வழங்கப்படவில்லை.அதேசமயம்,அந்த அலுவலகம் அமைந்திருக்கும் ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் பொறுப்பதிகாரியான மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கைக்கு வர விசா வழங்கப்பட்டதால் அவர் அண்மையில் இங்கு வந்து சென்றிருக்கிறார். இப்படித்தான் இருக்கிறது ஐநா தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் எப்படி நிறைவேற்றுகிறது மதிக்கிறது என்று அனுபவம்.இப்படிப்பட்டதோர் பின்னணியில் புதிய அரசாங்கத்துக்கு ஐநா வாய்ப்புகளை வழங்க கூடுமா?
கடந்த 16 ஆண்டு கால ஐநா அனுபவத்தை தொகுத்து பார்க்கும் பொழுது தெளிவாக ஒரு சித்திரம் கிடைக்கின்றது. அதன்படி இலங்கையை எதிர் நிலைக்குத் தள்ளும் விதத்தில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கோ அல்லது இலங்கையை பாதிக்கக்கூடிய அழுத்தங்களை பிரயோகிப்பதற்கோ ஐநா தயார் இல்லை. மாறாக ஆட்சி மாற்றங்களின் போது ஏற்படக்கூடிய புதிய வாய்ப்புகளை கையாண்டு எப்படி புதிய இலங்கை அரசாங்கத்தை ஐநாவின் பொறுப்புக்கூறும் செய்முறைக்கு கடப்பாடு உடையதாக மாற்றலாம் என்றுதான் ஐநா முயற்சித்து வருகின்றது. அதாவது ஆட்சி மாற்றங்களின் மூலம் தமக்கு சாதகமான அரசியல் சூழல்கள் உருவாக்கும் பொழுது அவற்றைக் கையாள்வது. 2015-லும் அதைத்தான் செய்தார்கள்.இப்பொழுது 2025லும் அதைத்தான் செய்ய முயற்சிக்கின்றார்களா?
அதாவது அரசாங்கங்கள் மாறும் பொழுது பொறுப்பு கூறுவதற்கான வாய்ப்புகள் மாறும் என்று ஐநா நம்புகிறதா? மேற்கு நாடுகள் நம்புகின்றனவா? ஆனால் இலங்கைத் தீவில் பொறுப்புக் கூறாமை என்பது அரசாங்கத்தின் கொள்கை மாற்றங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் அல்ல. அது சிங்கள பௌத்த அரசுக் கொள்கை. தேசிய மக்கள் சக்தி மட்டுமல்ல யார் அங்கே பொறுப்பில் இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூற மாட்டார்கள். பொறுப்புக் கூறுமாறு மூன்றாவது தரப்பு ஒன்று கடுமையான பயன் பொருத்தமான அழுத்தங்களைப் பிரயோகித்தால் தவிர சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு என்றைக்குமே முழுமையாகப் பொறுப்புக் கூறாது.
இப்போது இருக்கும் தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் முழு அளவுக்கு பொறுப்பு கூறாது என்பதற்கு இரண்டு நடைமுறை உதாரணங்களைக் காட்டலாம். முதலாவது, அனுர ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்பு அசோசியேட்டட் நியூஸ் பிரஸ் ஊடகத்துக்கு வழங்கிய ஒரு பேட்டியில் கூறியது. “பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையை கண்டறிவதற்குத்தான் விரும்புகிறார்கள். குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கவில்லை” என்ற பொருள்பட அந்த பேட்டியில் அவர் கூறுகிறார்.அதாவது அவர் குற்றவாளிகளைத் தண்டிக்க மாட்டார். இதைத்தான் முன்னைய அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருந்த விஜய்தாச ராஜபக்சவும் வேறு வார்த்தைகளில் சொன்னார். நீதி விசாரணையும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் சமாந்தரமாகச் செல்ல முடியாது என்று.
இரண்டாவது எடுத்துக்காட்டு, அனுரவின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த ஐநா கூட்டத் தொடரில் என்ன சொன்னார் என்பது. அங்கே அவர் பன்னாட்டு விசாரணைப் பொறிமுறையை நிராகரித்துப் பேசியிருந்தார். ஏன் அதிகம் போவான்? ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய திருத்தப்படாத அறிக்கையிலும் இலங்கை என்னென்ன விடயங்களில் ஐநா தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே ஐநா தீர்மானங்களில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளாத, ஐநாவில் இயங்கும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தைச் சேர்ந்தவர்களை இலங்கைக்குள் வரவிடாத ஓர் அரசியல் ராஜதந்திரப் பின்னணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று ஐநா கருதுகின்றதா?
ஐநா இந்த விடயத்தில் தன்னை பெருக்கடிக்கு உள்ளாக்காது என்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு தெரிகிறது.உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையைப் பலப்படுத்தலாம் என்ற கருத்தை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் கொண்டிருப்பது தனக்குச் சாதகமானது என்று அனுர கருதுகிறார்.எனவே உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு எப்படி அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கலாம் என்றுதான் அவர் சிந்திக்கின்றார். ஏறக்குறைய ரணில் சிந்தித்தது போல. அந்த அடிப்படையில் தான் செம்மணி விவகாரத்தை அரசாங்கம் கையாண்டு வருகிறது.
மேலும் ஊழலுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் ஐநாவின் ஆர்வத்தை தூண்டக்கூடியவை. முன்னாள் கடற்படை தளபதி போன்றவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதும் உள்நாட்டு நீதியின் மதிப்பை கூட்டும் முயற்சிகள்தான்.ஆனால் ஊழலுக்கு எதிராகவும் படைப்பிரதானிகளுக்கு எதிராகவும் எதுவரை போகலாம் என்பதில் அரசாங்கத்துக்கு வரையறைகள் உண்டு. சிங்கள பௌத்த உயர் குழாமானது ஒரு கட்டத்துக்கு மேல் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை நகர விடாது. அதுபோலவே யுத்த வெற்றி நாயகர்கள் ஆகிய படைத்தரப்பையும் ஒரு கட்டத்துக்கு மேல் விசாரிக்க விடாது. அப்படி விசாரித்தாலும் தண்டிப்பதற்கு அனுரவே தயாராக இல்லை. எனவே பொறுப்புக் கூறல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ன செய்யலாம் என்பதில் அடிப்படையான வரையறைகள் உண்டு. கடந்த 16 ஆண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் அதைத் தொகுத்துக் கண்டுபிடிப்பது ஐநாவுக்கு கடினமான விடயம் அல்ல. ஆனாலும் ஐநா இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் நிகழும் பொழுது குறிப்பாக புதிய அரசாங்கம் ஐநாவை அனுசரித்துப் போவதான ஒரு தோற்றத்தை காட்டும் பொழுது அந்த அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஏன்?
புதிய அரசாங்கம் ஏதாவது மாற்றத்தை காட்டும்; பொறுப்புக் கூறும் என்ற நம்பிக்கையினாலா? எதிர்பார்ப்பினாலா? இரண்டுமே இல்லை. முழுக்க முழுக்க புவிசார் அரசியல் நிலைப்பாடு அது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வர இருந்த பின்னணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இதயமாக கருதப்படுபவர்களில் ஒருவராகிய ரில்வின் சில்வா சீனாவுக்கு போயிருந்தார். சீன சார்பு இடதுசாரி மரபில் வந்த ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியானது இலகுவாக சீனாவின் செல்வாக்குக்குள் விழுந்து விடலாம் என்ற பயம் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் உண்டு. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்ததும் வடக்குக்கு முதலில் வந்த தூதுவர் சீன தூதுவர்தான்.தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி வழங்கிய ஆதரவை அவர் சிலாகித்துப் பாராட்டி இருந்தார். எனவே சீனா தெளிவான செய்தியை ஐநாவுக்கும் இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் ஏற்கனவே வழங்கி விட்டது. சீனாவை நோக்கி இலகுவாகச் சாயக்கூடிய, சீன இடது சாரிப் பாரம்பரியத்தில் வந்த அரசாங்கத்தை அதிகம் பகை நிலைக்குத் தள்ளக் கூடாது என்று மேற்கும் ஐநாவும் இந்தியாவும் சிந்திக்கின்றன. ஒரு கட்டத்துக்கு மேல் நிர்பந்தித்தால் தேசிய மக்கள் சக்தி சீனாவை நோக்கி அதிகமாகப் போய்விடும். எனவே ஐநா இலங்கை அரசாங்கத்தை பொறுப்பு கூறுமாறு நிர்பந்தித்தால்,நெருக்கினால் சீனா இலங்கை அரசாங்கத்தைத் தத்தெடுத்து விடும் என்ற பயம் அவர்களுக்கு உண்டு. இதுதான் பிரச்சினை. இதுதான் பிரதான காரணம்.
பொறுப்புக் கூறலை இலங்கை அரசுக் கட்டமைப்பின் தலைக்கு மேல் நிரந்தரமாகத் தொங்கும் ஒரு கத்தி போல வைத்திருப்பதன் மூலம், ஏற்கனவே சீனாவின் செல்வாக்கு வலையத்துக்குள் சென்றுவிட்ட இச்சிறிய தீவின் மீது தமது பிடியை உறுதிப்படுத்துவதுதான் மேற்கத்திய,ஐ நா வியூகங்களின் நோக்கம். இந்தியாவின் நோக்கமும் அதுதான். இப்படிப்பட்ட ஒரு பின்னணிக்குள் இந்த இடத்தில் தேசிய மக்கள் சக்தி அல்ல எந்த புரட்சிகரமான அரசாங்கம் வந்தாலும் இதுதான் நடக்கும். அதாவது பொறுப்பு கூறல் என்ற விடயம் ஒரு ராஜதந்திரக் கருவியாக மாறிவிட்டது என்பதுதான் கசப்பான உண்மை.
செம்மணி - துண்டி முகாம்கள் வரை கைதாகி சித்திரவதைகளில் உயிரிழந்தோர் மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்டனர் : பல முக்கிய சாட்சியங்களை வழங்குவேன் என்கிறார் மரண தண்டனைக் கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ!
செம்மணி - துண்டி முகாம்கள் வரை கைதாகி சித்திரவதைகளில் உயிரிழந்தோர் மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்டனர் : பல முக்கிய சாட்சியங்களை வழங்குவேன் என்கிறார் மரண தண்டனைக் கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ!
செம்மணி - துண்டி முகாம் வரை கைதாகி சித்திரவதைகளில் உயிரிழந்தோர் மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்டனர் : பல முக்கிய சாட்சியங்களை வழங்குவேன் என்கிறார் மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ!
Published By: DIGITAL DESK 3
17 AUG, 2025 | 09:48 AM
(நா.தனுஜா)
அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு மேலதிகமாக, செம்மணிக்கு அப்பால் பல முக்கிய ஆதாரங்களுடன் சாட்சியமளிக்கத் தயாராக இருக்கிறேன் என நான் ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் வாக்குறுதியளிக்கிறேன் என்று அறிவித்துள்ள கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, 1996 களில் செம்மணி முதல் துண்டி முகாம் வரை சகல சோதனைச்சாவடிகளிலும் மக்கள் கைதுசெய்யப்பட்டதுடன் சித்திரவதைக்கூடங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அண்மையில் கண்டறியப்பட்டு, அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியில் 141 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், 1996 களில் செம்மணி முகாம் - துண்டி முகாம் வரை இடம்பெற்ற கைதுகள், படுகொலைகள் மற்றும் சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் தொடர்பில் மரணதண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ஷ முக்கிய வெளிப்படுத்தல்களைச் செய்துள்ளார். அவரது வெளிப்படுத்தல்களின் முதற்பகுதி வருமாறு:
'கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை மற்றும் செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதனூடாக வெளிப்படுத்துகிறேன். கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதியன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதத்துக்கு மேலதிகமாக, விடயங்களை யாழ் மக்கள் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த தமிழ்மக்களும் தெளிவாகத் தெரிந்துகொள்ளும் பொருட்டு இதனை வெளிப்படுத்துகிறேன்.
எனது மனைவி ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் கடந்த 3 ஆம் திகதியன்று 'வீரகேசரி' பத்திரிகையில் முதற்பக்கத்தில் வெளியானது. அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சகல விடயங்களும் உண்மையானவை என்பதை நான் யாழ் மக்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். அதில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு மேலதிகமாக செம்மணிக்கு அப்பால் முக்கிய ஆதாரங்களுடன் சாட்சியமளிக்கத் தயாராக இருக்கிறேன் என நான் ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்கும் வாக்குறுதியளிக்கிறேன்.
1998 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணையில் செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் வெளிப்படுத்தியபோது, அவை நீதிமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இருப்பினும் கடவுளும், இயற்கையும் அவை உண்மை என்பதை நிரூபித்துள்ளன. 1998 ஆம் ஆண்டு எனக்கு மரணதண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டதன் பின்னர் எனது கூற்று தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே ஊடாக சிறைச்சாலை அதிகாரியான நாமல் பண்டார என்ற அதிகாரி மூலம் எனக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அக்கடிதம் அமைச்சராலேயே எழுதப்பட்டிருந்தது. நான் மேல் நீதிமன்றத்தில் கூறிய விடயம் கோபத்தில் கூறப்பட்டது எனவும், அதனை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. நான் அந்தக் கடிதத்தை வாசித்ததன் பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அதனைக் கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டபோது அந்த அதிகாரி, கடிதத்தை வாசித்துவிட்டுத் திருப்பித்தாருங்கள் என்றார். நான் அந்தக் கடிதத்தைத் திருப்பிக்கொடுப்பதற்கு மறுத்தபோது அவர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் என்னை மிலேச்சத்தனமாகத் தாக்கிக் கொல்ல முற்பட்டனர். இருப்பினும் அங்கிருந்த ஏனைய சிறைக்கைதிகளின் தலையீட்டால் அம்முயற்சி தோல்வியடைந்தது. அவ்வதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு வழக்குத்தொடர்ந்திருந்த போதிலும், அதற்கு என்ன நேர்ந்தது என்று எனக்குத் தெரியவில்லை.
1999 ஆம் ஆண்டு குமார் பொன்னம்பலத்தை போகம்பரை சிறைச்சாலையில் சந்தித்தபோது கடந்த ஜுலை மாதம் 9 ஆம் திகதியன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்த விடயங்களை அவரிடம் கூறினேன். அப்போது அவர் என்னிடம் 'பயப்படாமல் இருங்கள். ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று உங்களை விடுத்து செம்மணி வழக்கின் சாட்சியாளராக மாற்றுகிறேன்' எனக் குறிப்பிட்டார். 1999 ஆம் ஆண்டு இந்த செம்மணி மனிதப்புதைகுழியைக் காண்பிப்பதற்காகச் சென்றபோது எனது சார்பில் முன்னிலையாவதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகைதருவதற்கு குமார் பொன்னம்பலத்துக்கு விமானவசதி வழங்கப்படவில்லை. அதன் பின்னர் அவர் திடீரெனப் படுகொலை செய்யப்பட்டார். அவரது மறைவை அடுத்து அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அனுப்பிவைக்கப்பட்ட இரங்கல் செய்தியில், குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்ட தினத்துக்கு முன்னைய தினத்துக்குரிய திகதியே இடப்பட்டிருந்தது. இவ்விடயம் அவ்வேளையில் ஊடகங்களில் பரவலாகப் பேசப்பட்டது. இதன்மூலம் குமார் பொன்னம்பலம் கொல்லப்படுவதற்கு முன்னரே ஜனாதிபதி அந்த இரங்கல் செய்தியை எழுதியிருந்தார் என்பது தெளிவாகிறது.
1999 ஆம் ஆண்டு நான் மனிதப்புதைகுழிகள் உள்ள இடங்களைக் காட்டிக்கொடுத்த வேளையில், அவற்றைக் காட்டிக்கொடுக்கவேண்டாம் எனவும், ஜனாதிபதி எனக்கு மன்னிப்பு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டதன் காரணமாக சிலவற்றை மாத்திரம் காட்டிக்கொடுத்ததன் பின்னர், அதனைக் கைவிட்டுவிட்டேன். இவ்விடயம் தொடர்பில் மேலதிகமாக பல விடயங்கள் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் செம்மணி மாத்திரமன்றி பலசேனா தலைமையகம் முதல் 1996 ஆம் ஆண்டளவில் யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டிருந்த முகாம்களில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்திச்செல்லப்பட்டமையை அன்றைய பாதுகாப்புச்செயலாளர் தொடக்கம் சந்திரிக்கா வரை அறிந்திருந்தனர் என்பதை நான் யாழ் மக்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரியப்படுத்துகிறேன். அரியாலை 7 ஆவது இலங்கை இராணுவக் காலாட்படையினால் செம்மணி முதல் துண்டி முகாம் வரை சகல சோதனைச்சாவடிகளிலும் மக்கள் கைதுசெய்யப்பட்டதுடன் சி3 முகாமின் 7 ஆவது இராணுவக் காலாட்படைக்கு உரிய சித்திரவதைக்கூடங்களில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மணியம் தோட்டம் என அறியப்படும் பிரதேசத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கு புதைக்கப்பட்டன. அது இராணுவக்கட்டுப்பாட்டின்கீழ் இருந்த பகுதிகளுக்கு வெளியே இருந்த பிரதேசமாகும். அவ்வாறு சடலங்கள் புதைக்கப்பட்ட இடங்கள் எனக்கு சரியாகத் தெரியாவிட்டாலும், அந்தப் பிரதேசம் (மணியம் தோட்டம்) எனக்கு நன்றாகத் தெரியும் என்பதை நான் உங்களுக்குக் கூறுகிறேன். இதற்கு மேலதிகமாக பிரதான கைதுகள் செம்மணியில் இடம்பெற்றதுடன், அங்கு கைதுசெய்யப்படமுடியாதவர்கள் ஏனைய சோதனைச்சாவடிகளில் கைதுசெய்யப்பட்டனர்.'
(சோமரத்ன ராஜபக்ஷவினால் வெளிப்படுத்தப்பட்டுள்ள இவ்விடயங்களின் தொடர்ச்சி எதிர்வரும் ஞாயிற்கிழமை (24) வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரிக்கப்படும்.)
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொதுமகன் மீது வாள்வெட்டு! பக்தர்கள் அச்சம்!
ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொதுமகன் மீது வாள்வெட்டு! பக்தர்கள் அச்சம்!
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொதுமகன் மீது வாள்வெட்டு! பக்தர்கள் அச்சம்!
நல்லூர் கந்தசுவாமி கோவிலில் பொதுமகன் மீது வாள்வெட்டு! பக்தர்கள் அச்சம்!
நல்லூர் கந்தசுவாமி ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த வன்முறை சம்பவம் ஆலய திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தது.
நேற்றையதினம் நல்லூர் திருவிழாவின் கார்த்திகை திருவிழாவில் ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்த நிலையில் வன்முறை கும்பல் ஒன்று நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகாமையில் உள்ள அரசடி பகுதியில் , பெருமளவான மக்கள் கூட்டத்தின் மத்தியில் இளைஞன் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள வீதி தடையை தாண்டி நல்லூர் ஆலய சூழலை நோக்கி தப்பியோடிய போதும் , தாக்குதலாளிகள் வாளுடன் இளைஞனை துரத்தி சென்று தாக்குதல் நடத்த முற்பட்ட நிலையில் ஆலய சூழலில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸார் விரைந்து செயற்பாட்டு தாக்குதலாளிகளில் ஐவரை கைது செய்துள்ளனர்.
அதேவேளை தாக்குதலில் காயமடைந்த இளைஞனை மீட்டு , யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதேவேளை, நல்லூர் ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஆலய சூழலில் 600 க்கும் மேற்பட்ட பொலிஸார் சிவில் மற்றும் சீருடைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில் , வன்முறை கும்பல் ஆலய சூழலில் வாள் வெட்டு தாக்குதலில் துணிந்து ஈடுபட்டமை ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தன.