Aggregator

சிறிதரன்: தமிழரசில் இன்னொரு இராசதுரையா..?

3 weeks 5 days ago
கணக்காளர் நியமனத்திற்கு விண்ணப்பித்த ஒரு இராணுவத்துக்கு ஆதரவாக வாக்களித்தார் என்கிற குற்றச்சாட்டு வைக்கப்பட்டு சிறிதரனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அதே இராணுவத்தின் பாதுகாப்போடு வலம் வந்த சுமந்திரனுக்கு என்ன தண்டனை? இனவழிப்பு செய்த சிங்களக்கட்சியில் இருந்து வந்து புகுந்த சாணக்கியனுக்கு ஏன் இந்த பதவி உயர்வு? தமிழர் நிலத்தில் புத்தர் சிலை வைத்ததை நிஞாயப்படுத்தி தமிழரை கொச்சைப்படுத்தி பேசிய சஜித்துக்கு வாக்களிக்கச்சொன்ன சுமந்திரன் ஏன் இன்னும் தமிழரசுக்கட்சியில் தொங்கிக்கொண்டிருக்கிறார்? வேறொரு கட்சியை உருவாக்கி வென்று காட்டட்டும் பாப்போம் முடிந்தால். சி .வி. விக்கினேஸ்வரனை கட்சியிலிருந்து விலத்துவதற்காக சுமந்திரன் செய்த செயல்கள் பேச்சுக்கள் அநாகரீகமானவை. அதற்கு எதிராக யாரும் குரல் எழுப்பவில்லை, அதை எல்லோரும் மௌனமாக வேடிக்கை பார்த்தார்கள். அதற்கு சுமந்திரன் பாவித்த ஆள் மாவையர், மாவையரை வீழ்த்த சிறிதரனை பாவித்தார், இனி சிவஞானம், அடுத்து யார்? சுமந்திரனுக்கும் ஒரு சுழியோடி வருவார் அல்லது அதற்கு தேவையில்லாமல் கட்சியே இல்லாமற் போகலாம். விதி வலியது. அன்று தேவையில்லாமல் அழுக்காறு கொண்டு விக்கினேஸ்வரனை அவமானப்படுத்தி வெளியேற்றினார்கள், அதன் பயனை இப்போது அறுவடை செய்கிறார்கள். சிவனே என்று இருந்த ஒருவரை வலிய தேடிச்சென்று கொண்டுவந்து சேர்த்து தங்கள் வேலை முடிந்தவுடன் சேறடித்து அனுப்பினார்கள். தமிழரசுக்கட்சியில் புதிதாக இணைபவர்கள் இவற்றை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். எனக்கென்ன என்று பதவியை கட்டிப்பிடித்துக்கொண்டு மௌனம் காக்காதீர்கள். மக்கள் மனம் வைத்தாலே உங்களுக்கு பதவி.

புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!

3 weeks 5 days ago
உண்மை தான். அப்பாவி தமிழர்களை ஏமாற்றி, தேசிய செயற்பாட்டாளர்கள் என்று தம்மை அழைத்துக்கொண்ட கூட்டதில் ஒரு கும்பல் தான் மக்களின் பணத்தை அடித்தது. இப்ப புலிக்காசை யாரே வேறு கிரகத்தில் இருந்து வந்து யாரோ அடித்தது போல் சம்பந்தப்பட்டவர்களே படம் காட்டுகின்றனர்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 5 days ago
ஓமாம் என்ன‌ தான் த‌ங்க‌ட‌ நாட்டில் காசை கொட்டி நிறைய‌ போட்டிக‌ளை ந‌ட‌த்தினாலும் அவ‌ர்க‌ளிட‌ம் ந‌ல்ல‌ வீர‌ர்க‌ள் கிடையாது.............. அவ‌ர்க‌ள் இட‌ம் பிடித்த‌ குருப்பில் ஓமானின் விளையாட்டு ப‌டு கோவ‌ல‌ம் ஓமான் நாட்டு வீர‌ர்க‌ளின் ப‌ந்து வீச்சை ந‌ம்ப‌ முடியாது...........................

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 5 days ago
பெரிய‌ப்பு இன்னும் போட்டி முடிய‌ல‌............இன்னும் ஒரு கிழ‌மை இருக்கு ஆர‌ம்ப‌ சுற்று போட்டி முடிய‌ அதுக்குள் இந்தியா பெரிய‌ ஸ்கோர் அடிச்சால் புள்ளி சூப்பர்8க்குள் அடிக்க‌ முடியாது........................

என்ன ஆச்சு இவருக்கு? சீமானின் மர்ம அமைதி.. குழம்பிப்போன தம்பிகள்.. பதற்றத்தில் நாம் தமிழர்?

3 weeks 5 days ago
அண்ணனுக்கு டிரைவராக வீட்டிலேயே தங்கி இருந்த தம்பியை அண்ணன் துரத்தி விட்டாராமே? உண்மையா?

புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!

3 weeks 5 days ago
அடித்ததும் “தமிழர்கள்தான் நாங்கள்” என்று இன்றும் மாவீரர் தினம், கல்விக் கழகம் அது இது என்று அப்பாவியாக ஏமாறும் தமிழர்களிடம் அடித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

என்ன ஆச்சு இவருக்கு? சீமானின் மர்ம அமைதி.. குழம்பிப்போன தம்பிகள்.. பதற்றத்தில் நாம் தமிழர்?

3 weeks 5 days ago
ஒவ்வொருநாளும் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். பல பேராட்டங்களை நடத்துகிறார். காவல்துறையால்கைதுசெய்யப்பட்டிருக்கிறார். மாநாட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறார். இதுவெல்லாம் ஒடகங்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. அவர்களுக்கு அத்தி பூத்தாற்போல பனையூர்தலைவர் வெளியே எப்போ வருவார் என்று கமராக்களுடன் பனையூரில் அடைகாத்து இருக்கிறார்கள். தனித்துக்களமாடி 8வீத வாக்குகளுக்கு மேல் பெற்று அங்கீகரிக்கப்பட் கட்சியை இந்த ஊடகங்கள் இன்னும் மற்றவர்கள் என்று வகைக்குள் திணித்து இருட்டடிப்புச் செய்கிறார்கள். போதததுக்கு விஜையின் வருகையால் நாதகவின் வாக்கு வங்கு சரியப் போகிறது என்று திடடமிட்டு பிரச்சாரம் செய்கிறார்கள். வரும் தேர்தலில் இருக்கின்ற 8 சதவீதத்தை நாதக தக்க வைத்துக் கொண்டால் அதற்கு நல்ல எதிர்காலம்இருக்கும். ஆனால் விஜை இந்தத்தேர்தலோடு நடிக்கப் போய்விடுவார்.அவரை நம்பி யாரும் கூட்டணி சேரவரவில்லை. கூட்டணிக்காக தவம் கிடந்து இப்போது வேறு வழியில்லாமல் தனித்துப்போட்டி என்று அறிவித்திருக்கிறார். எல்லாம் சினிமாத்தனமாக இருக்கிறது.இருந்தாலும் விஜையின் அரசியல் வருகையை நான் வரவேற்கிறேன். இன்னொரு கமலகாசனாக மாறமல் இருந்தால்சரி.இன்று கட்சிக்கான புதிய தொலைக்காட்சியை எங்கள்தேசம் தொலைக்காட்சி ஆரம்பித்து வைத்திருக்கிறார்.இங்குள்ள சீமான் எதிர்ப்பாளர்களும் அவரைப்பற்றிய எதிர்மறையான செய்திகளை பதிவிடுவது தமிழ்நாட்டு ஊடகஙகளின் போக்குக்கு ஒத்திசைவாகவே இருக்கிறது https://www.youtube.com/live/7HUexq_r_nA?si=mD0pvXkLR7cI4CyK

திசை ஒன்பது - எனது வாசிப்பு - பா. ரவீந்திரன்

3 weeks 5 days ago
திசை ஒன்பது - எனது வாசிப்பு பா. ரவீந்திரன் சயந்தனின் “திசை ஒன்பது” நாவல் கவனத்தை சிதறவிடாதபடி வாசித்துத் தீர்க்க வேண்டியிருந்த நாவலாக எனக்கு இருந்தது. ஒரு செறிவான ‘நேர்கோட்டின்மை’ (non-linear) கதைசொல்லல்தான் அதற்குக் காரணம். வாசிப்பை குழப்பத்தில் நிறுத்தி, வாசகர் புத்தகத்தை மூடிவைத்துவிடாதபடி, அந்தக் கதைசொல்லல் முறையை கட்டியமைப்பதில் எழுத்தாளர் அதிக சிரத்தை எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். அதனாலோ என்னவோ நூலின் ஆரம்ப அத்தியாயங்களில் எழுத்தாளரது எழுத்துக்குள் எள்ளல்கள் கிண்டல்கள் காணாமல் போய், பின்னர் அவை அவருக்கேயுரிய இயல்பான நடையாக வெளிப்படத் தொடங்கியிருப்பதாக எனது வாசிப்பில் தோன்றியது. அது அப்படியில்லை என இன்னொரு வாசகருக்குத் தோன்றலாம் என்பதையும் ஏற்றுக்கொண்டே எனது இந்த அவதானிப்பைச் சொல்கிறேன். எழுத்தாளனில்லாத ஓர் எழுத்தாளனாக கதையின் நாயகன் இளங்கோ வருகிறான். சிறுவயதில் அவன் எழுதிய கதை முயற்சிகள் கற்பனையோடு சேர்ந்து வளர்ச்சியடைந்து, இந்த நாவலுக்குள் ஒரு கிளைக் கதையாக அல்லது குறுநாவலாக இமையாவின் கதையை எழுதுவதில் ஊற்றெடுக்கிறது. இமையாவை சுவிசிலுள்ள சித்திரம் என்பவர் திருமணம் முடிக்க அழைத்துவிட்டு காத்திருப்பவர். அவளை எல்லைகள் தடுத்து நிறுத்துகின்றன. அலைக்கழிக்கின்றன. அச்சமூட்டுகின்றன. இமையாவை இளங்கோ உக்ரைனில் சந்திக்கிறான். இமையாவின் கதையைத் தொடங்குகிறான். இளங்கோவின் காதலி அமுதி யாழ்ப்பாணத்தில் அவனுக்காகக் காத்திருக்கிறாள். காதலன் சுவிசிலிருந்து தன்னைக் கூப்பிடுவான் என்ற கனவு அவளுக்கு. அவனையும் எல்லைகள் தொடர்ந்து ஏமாற்றுகின்றன. எல்லை கடத்தல்காரனாக தேவாரம் இருக்கிறார். இளங்கோவுக்கும் உக்ரைன்காரி ஹன்னாவுக்கும் இடையில் என்ன உறவு இருக்கிறது, அது எதுவாக மலர்ந்தது, இளங்கோ எங்கு போய்ச் சேர்ந்தான் என்பதெல்லாம் நாவலை வாசித்து அறியவேண்டியவை. மேற்குலகுப் புகலிட இலக்கியத்தில் எழுதப்பட்ட பல நாவல்களும் கவிதைகளும் கதைகளும் ஆரம்பகாலங்களில் மண்ணின் மீதான வாழ்வின் நினைவுகளையும் ஏக்கங்களையும் கொண்டிருந்ததற்கு ஒரு நியாயம் உண்டு. ஆனால் முப்பது நாற்பது வருடங்களாக தமது இளமைக் காலத்தையே புகலிடத்தில் ஒப்புக்கொடுத்து வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் அந்த வாழ்க்கையை எழுதியது குறைவானது என்றே சொல்ல முடியும். அதற்கான காரணங்கள் விரிவான கட்டுரை ஆக்கத்துக்கு உரியன. “திசை ஒன்பது” இந்த புகலிட வாழ்வை எல்லை கடத்தலிலிருந்து தொடங்கி, அந்தந்த நாடுகளில் எதிர்கொண்டவைகளையும், அலைக்கழிப்புகளையும், மனவுளைச்சல்களையும், அச் சூழல்களோடான தற்காலிகத் தகவமைதல்களையும் முன்வைக்கிறது. அகதிகள் எதிர்கொண்ட உண்மைகளை விட்டுவிலகி ஓடாத புனைவுகளால் எழுதிச் செல்கிறது. ஆப்கானிஸ்தான், எரித்திரியா, குர்திஸ்தான், ‘பலுசிஸ்தான்’, சிரியா என வேறு நாட்டு அகதிகளையும் அந்த வாழ்வு குறுக்கிட்டு கடக்க வைக்கிறது. “ஆக்கிரமிக்கப்பட்ட எல்லா நிலங்களுக்கும் ஒரு மொழிதானே” என்ற கதைசொல்லியின் கூற்றுக்கான ஊற்று இங்கிருந்துதான் பிறக்கிறது. சிரிய அகதி கூறியதுபோல “ அறிவுதான் வெளிச்சம். அந்த வெளிச்சத்துக்குப் பயந்தவர்கள் அவரை (தந்தையை) கொன்றனர்” என்பதையும் மேற்சொன்னதுடன் பொருத்திப் பார்க்க முடியும். அத்தோடு, இலங்கையிலிருந்து துரத்திய போரும் இந்த மற்ற நாட்டு அகதிகளைத் துரத்திய போர்களும், இளங்கோவை திரும்பவும் துரத்திய உக்ரைன் போரும் ஒரே மொழியைத்தான் பேசுகின்றன. மனித விழுமியங்களின் தளத்தில் இந்த எடுத்துரைப்புகள் இலக்கிய அழகியலாக இந் நாவலில் வந்தமர்கின்றன. எல்லை கடத்தல் என்பது ஒப்பீட்டு ரீதியில் எண்பதுகளைப் போல் தொண்ணூறுகளில் சுலபமாக இருக்கவில்லை. தொண்ணூறுகளைப் போல் மிலேனியத்துக்குப் பிறகான காலங்களில் சுலபமாக இருக்கவில்லை. இதுவும் உலக அகதிகளுக்கு பொதுவான ஒன்றுதான். நாடே அகதிகளாக பெருக்கெடுத்ததுபோல் சிரிய அகதிகள் கிரேக்கம், துருக்கி என எல்லைகளை தாண்டப் புறப்பட்டு மாதக் கணக்கில் நடந்த கொடுந் துயரமெல்லாம் ஐரோப்பிய தொலைக்காட்சிகளை நிரப்பி பெருக்கெடுத்த செய்திகள். ஆபிரிக்க அகதிகள் பாலைவனப் பயணத்தில் மட்டுமல்ல, இத்தாலியை நோக்கி காலாவதியான படகுகளிலும் கப்பல்களிலும் கடல்தாண்டப் பறப்பட்டு, கவிழ்ந்து கொட்டுண்டு நூற்றுக் கணக்கில் ஒரே நேரத்தில் செத்துமடிந்த துயரங்கள் சொல்லி மாளாதவை. இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தளவில் குளிர் தின்று ஆறுகளில் பலியானோர், எல்லை தாண்ட அவர்களைக் கடத்திவந்த பவுசர்களுக்குள் அதன் மூடி மூடுண்டு மூச்சுத் திணறிப் பலியானோர், கைதாகி திருப்பி அனுப்பப்பட்டோர், கைதாகி சிறைசென்றோர், இடைத்தங்கல் நாடுகளில் நிரந்தரமாக தங்கவேண்டி வந்தோர், மாதக் கணக்காக, வருடக் கணக்காக என காலங்களைத் தின்று தீர்த்த இடைத்தங்கல்கள் என எல்லை கடப்பில் பல வாழ்க்கைச் சிதைப்புகள் நடந்திருக்கின்றன. இதில் சிலவற்றையாவது சொல்ல எத்தனித்திருக்கும் “திசை ஒன்பது” முக்கியமான நாவல்தான். சூழல்தான் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது என்பதன் ஒரு சாட்சியாக “திசை ஒன்பது” நாவலின் பாத்திரங்கள் இருக்கின்றன. அதை ஆசிரியர் காலமும் தூரமும் தீர்மானிக்கின்றன என இன்னொரு பரிணாமத்தில் சொல்கிறார். இளங்கோவினூடாக ஆசிரியர் பேசும் கொசுறுத் தத்துவத்தைவிட, அவர் உருவாக்கியிருக்கும் பாத்திரக் கட்டமைப்புகள் ஒரு சமூகவியல் மற்றும் உளவியல் தளங்களில் நன்றாகவே பேசியிருக்கின்றன. எல்லை கடத்தும் வேலையில் பழம் தின்று கொட்டை போடத் தொடங்கிய தமிழர்களின் ஏமாற்று மொழிகளும் குழைவும் பசப்புகளும் தேவாரத்தினூடாக வெளிப்படுகிறது. இந்தக் கதைசொல்லலுக்குள் சமூக ஊடகங்களின் தாக்கமும் இருக்கிறது. அது தீண்டாமைக்கு உரியதல்ல. மாறாக அது நவீன வாழ்வோடு பிணைந்தது. உலகத்தை நொடிகளில் வைத்து, இற்றைப்படுத்துகிற தகவல்களையும் அறிவு உருவாக்கத்தையும் செழுமைப்படுத்தலையும், அதேநேரம் அதை பகுத்துணர வேண்டிய சவாலையும் மூளைக்கு எடுத்துச் செல்லும் நிகழ்த்துதலை அவை செய்கின்றன. அது நம்மை, நமது வாழ்வை பின்தொடர்கிறது. உக்ரைன் போர் இளங்கோவை நிலக்கீழ் பாதுகாப்பு அறைக்குள் துரத்திவிடுகிறபோது, ஒரு மூடுண்ட உலகம் உருவாகிறது. அந்த உலகத்தை துளைபோட்டு வருகின்றன தமிழ்யூரியூப் செய்திகள். கிசே துரையின் விண்ணாணச் செய்திகள் மூன்று நாளில் உக்ரைன் ரசியாவிடம் வீழ்ந்துவிடும் என அரசியல் ஆடையை அவிழ்த்துப் போட்டுவிட்டு உள்ளே வருகிறபோதும், அது சில தகவல்களையாவது அந்த குகைக்குள் வெளிச்சமாகத் தரவே செய்கிறது. அதை ஆசிரியர் எள்ளலாகச் சொல்லியிருப்பது இந்த முரண்களில் நன்றாக பொருந்திப் போகிறது. அதேபோல் இன்னொரு இடத்தில் “பன்றிக் குட்டிகள் போல் ஒவ்வொரு தை மாதமும் நாவல் எழுத முடியாது” என்ற எள்ளலும் இலக்கியத் தளத்தில் வைத்து ஒரு செய்தியை சொல்லவே செய்கிறது. “சுவிஸ் அண்ணை கட்டிய பதினாறு கோடி மாளிகை” என்பதும் பவுசின் மீதான எள்ளலாக இருக்கிறபோதும்கூட, ஒரு மாயைநிலை வாழ்வின் மீதான செய்தியை ஒவ்வாமையை சொல்லவே செய்கிறது. சயந்தனின் எள்ளலுடன் கூடிய மொழியாளுகையை குறிப்பிடாமல் செல்ல முடியாது. ஒரு ‘நேர்கோட்டின்மைக்’ கதையை செறிவாக பாத்திரங்களினூடாகக் கட்டமைப்பதில் கொண்டிருந்த அவதானத்தையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. புகலிட இலக்கியத்தின் பேசப்பட வேண்டிய இன்னொரு களத்துள் (அதாவது எல்லை கடப்பதின் துயரக் களத்துள்) இந்தக் கதைசொல்லலை தேர்வுசெய்தது குறித்து குறிப்பிடாமல் இருக்க முடியாது. அதேநேரம் சில கொசுறு அரசியல் கருத்துகளும், வாழ்க்கைத் தத்தவங்களும், தலைவரின் மரணம் பற்றிய வலிந்த கதையாடலும், “வேசைப் பொம்பிளை” என்ற ஆணாதிக்கச் சொல்லாடலும் எனது வாசிப்பில் இடறவே செய்தன. அதேபோல் அத்தியாயங்களுக்கான (ஆங்கில எழுத்து) தலைப்புகள் இன்னும் எனது அறிதல் எல்லைக்குள் பிடிபடாதவையாக இப்போதும் இருக்கின்றன. அந்த புரியாமையானது அவற்றை கவனிக்காமல் கடக்கும் மனநிலையோடு வாசிப்பை நிகழ்த்தவே செய்தன என்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்த நாவலின் எந்தப் பாத்திரத்தோடும் ஒன்றித்துச் செல்லும் மனநிலையோ அனுபவமோ எனக்கு வாய்க்கவில்லை. (மற்றவர்களுக்கும் அப்படி இருக்கும் என்பதல்ல அதன் அர்த்தம்). அதனால் எனது வாசிப்பு “தூரப்படுத்தல்” என்ற கலைக் கோட்பாட்டு நிலையில் நின்றே நிகழ்ந்தது. அதாவது மூன்றாவது மனிதனாக வெளியில் நின்று அவதானிப்பது, புரிந்துகொள்வது என்பது பொருளாகும். ஒரு கருத்து நிலைக்குள் அல்லது உணர்ச்சிசார் நிலைக்குள் அல்லது அமைப்புசார் நிலைக்குள் வைத்து அகநிலையாக புரிந்துகொள்ள முயற்சிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், “தூரப்படுத்தல்” என்ற புறநிலையிலும் நின்று அவதானிக்கிறபோது, பல பரிமாணங்கள் உருவாகும். நியாயப்படுத்தல் அல்லது சார்புநிலை தகரும். கட்டுடைப்பு நிகழும். புதிய வெளிச்சங்களை அறிவு தரிசிக்கும். இந்த நாவல் வாசிப்பு என்னளவில் இவ்வாறே நிகழ்ந்தது. “திசை ஒன்பது” புகலிட இலக்கியத்தில் ஒரு முக்கியமான நாவல்தான் என்பதை சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. https://sudumanal.com/2026/02/13/திசை-ஒன்பது/

தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்!

3 weeks 5 days ago
தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்! “இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றார். கட்சியின் தீர்மானங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கட்சி உறுப்பினர்களுக்குத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய தேவை இருப்பதினால், மேலும் எவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று தவிசாளர்களைக் கேட்டிருக்கின்றார். கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இது பற்றிய தகவல்களை அவர் வழங்கியிருக்கின்றார் எனத் தெரிகின்றது. கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் ஆலோசையின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை அவர் தெரியப்படுத்தி இருக்கின்றார் என அறியவந்தது. https://akkinikkunchu.com/359979/

தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்!

3 weeks 5 days ago

தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்!

sumanthiran.jpg

“இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவுகள், தீர்மானங்களைப் பகிரங்க வெளியில் விமர்சிக்கின்ற கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஆகவே அத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதை கட்சி உறுப்பினர்களும் பிரமுகர்களும் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கட்சி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தி இருக்கின்றார்.

கட்சியின் தீர்மானங்களை விமர்சிப்பவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் கட்சி உறுப்பினர்களுக்குத் தமிழரசுக் கட்சியின் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் தெரியப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள அவர், அனைத்து முறைப்பாடுகள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாய தேவை இருப்பதினால், மேலும் எவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் நடந்து கொள்ளுமாறு கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்று தவிசாளர்களைக் கேட்டிருக்கின்றார்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச சபை தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இது பற்றிய தகவல்களை அவர் வழங்கியிருக்கின்றார் எனத் தெரிகின்றது.

கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் ஆலோசையின் அடிப்படையில் இந்த அறிவுறுத்தலை அவர் தெரியப்படுத்தி இருக்கின்றார் என அறியவந்தது.

https://akkinikkunchu.com/359979/

புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!

3 weeks 5 days ago
அது புலிகாசும் இல்லை புளொட் காசும் இல்லை அடித்தது அப்பாவி தமிழர்கள் காசு ஆனால் அதை இலங்கை அரசு அனுபவிக்க இல்லை தானே சில தமிழர்கள் அதை அனுபவித்து மில்லியனர்களாக இருக்கட்டுமே என்ற ஆபத்தான போக்கும் நிலவுகின்றது.

ஆணுறைகள் தீர்ந்ததால் குளிர்கால ஒலிம்பிக் வீரர்கள் நெருக்கடியில்

3 weeks 5 days ago
ஒலிம்பிக் விளையாடப் போற ஆட்கள்... கட்டில் விளையாட்டிலும் ஈடுபடுகிறார்களோ... ஹ்ம்ம்..... நடக்கட்டும்.

பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் ! – அமெரிக்கா, இந்தியா வாழ்த்து

3 weeks 5 days ago
பங்களாதேஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் ! – அமெரிக்கா, இந்தியா வாழ்த்து 14 Feb, 2026 | 12:20 PM பங்களாதேஷில் நடைபெற்ற 13 ஆவது பொதுத்தேர்தலில், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (BNP) கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் கட்சித் தலைவர் தாரிக் ரஹ்மான் நாட்டின் அடுத்த பிரதமராக பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பின்னணி கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் மாணவர் போராட்டங்களின் காரணமாக அந்நாட்டு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. அதன்பின் சுமார் 18 மாதங்கள் கழித்து புதிய அரசை தேர்ந்தெடுக்க பொதுத்தேர்தல் நடைபெற்றது. இது பங்களாதேஷின் 13வது பொதுத்தேர்தலாகும். 300 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட இடங்கள் கைப்பற்றல் 300 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி கூட்டணி 200-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில், பி.என்.பி கூட்டணிக்கும் அதன் முன்னாள் கூட்டுக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. 17 ஆண்டுகளாக வெளிநாட்டில் வசித்துவந்த தாரிக் ரஹ்மான் அண்மையில் பங்களாஷே் திரும்பியிருந்தார். அவர் முன்னாள் பிரதமர் கலீதா ஷியாவின் மகனாவார். அமெரிக்கா வாழ்த்து பங்களாதேஷில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். மேலும், தேர்தலில் வெற்றி பெற்ற பி.என்.பி கட்சிக்கும் அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மோடி வாழ்த்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், “பங்களாதேஷ் நாடாளுமன்றத் தேர்தலில் பி.என்.பி கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்த வெற்றி உங்கள் தலைமையின் மீது பங்களாதேஷ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. ஜனநாயக ரீதியான மற்றும் முற்போக்கான பங்களாதேஷிற்கு இந்தியாவின் ஆதரவு என்றும் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்த புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பிராந்திய அரசியல் மாற்றங்களுக்கு முக்கிய தேர்தல் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்ததையடுத்து நடைபெற்ற இந்தத் தேர்தல், பங்களாதேஷின் அரசியல் எதிர்காலத்தையும் பிராந்திய அரசியல் சமநிலையையும் தீர்மானிக்கும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. பி.என்.பி கூட்டணியின் வெற்றி, அந்நாட்டின் அரசியல் நிலைப்பாட்டில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/238636

தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

3 weeks 5 days ago
தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு! தலங்கம -அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1464739 #################### ############################ அக்குரேகொட கொலை: 10 பொலிஸ் குழுக்கள் விசாரணைக்கு. அக்குரேகொடவில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரிகள் உள்ளடங்களாக 10 பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. தலங்கம, அக்குரேகொட பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றிற்கு முன்னால் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் நேற்று பிற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டனர். குறித்த சட்டத்தரணி ‘கரன்தெனிய சுத்த’ என்ற குற்றவாளியின் நீதிமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், தனது கட்சிக்காரரின் தகவல்களை ‘லொகு பெட்டி’ என்ற குற்றவாளி தலைமையிலான குழுவிற்கு வழங்கிய காரணத்தினால், கரன்தெனிய சுத்தவினால் இந்தத் துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பாதுகாப்புப் பிரிவினர் சந்தேகிக்கின்றனர். அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டியில் இருந்த தம்பதியினரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கார் ஒன்றில் வந்த குழுவினர் ரி-56 ரகத் துப்பாக்கியைப் பயன்படுத்தி சுமார் 10 தடவைகள் சுட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் கூறினர். இதில் வாகனத்தில் இருந்த தம்பதியினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்கள் பிடிகல பகுதியைச் சேர்ந்த மல்வாரச்சி எனும் சட்டத்தரணியும் அவரது மனைவியும் ஆவர். https://athavannews.com/2026/1464783