Aggregator

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks ago
கடைசிச் சனி எள்ளுச்சட்டி எரித்தது எனக்கு வேலை செய்யுதோ செய்யவில்லையோ ...இந்தியன் பெட்டையளுக்கு நல்லா வேலை செய்யுது (பெட்டையள்_..எழுத்து சுவராசியத்துக்கு பாவித்த சொல்... மன்னிக்கவும்) வந்தவள் ...நிண்டவள் ...எல்லோரும்..அடிதான்.. அட அதைவிட கண்ணுக்கு மைபூசியும் வந்து .. வெளுத்து வாங்குகினம்...

இந்த வாரம் கிளைமேக்ஸ்.. சென்னைக்கு வரும் பாண்டா.. விஜய்க்கு டெல்லி முக்கிய மெசேஜ்.. கூட்டணி ரெடி!

4 weeks ago
நான் நினைக்கிறேன்… விஜை அரசியலில் பெரிதாக எதையும் சாதிக்க போவதில்லை…. சில தம்பிகளின் பிளட் பிரசரை கூட்டியதை தவிர. இருக்கிறதே 8% அதிலையும் பங்கு கேட்டா கோவம் வருமா இல்லையா🤣.

எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் பங்குபற்றப்போவதில்லை!

4 weeks ago
எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் பங்குபற்றப்போவதில்லை! எகிப்து தலைநகர் ஷர்ம் எல்-ஷேக்கில் நாளையதினம் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் அமைப்பினர் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வருகை தொடர்பாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி ஆகியோர் தலைமையில் நாளை ஷர்ம் எல்-ஷேக்கில் காசா அமைதிக்கான மாநாடு நடைபெறவுள்ளதாக எகிப்திய ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. இந்த மாநாட்டில் “இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் புதிய சகாப்தத்தை உருவாக்குதல்” ஆகியன இந்த மாநாடு நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரிட்டனின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் ஸ்பெயினின் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர். இதேவேளை, பிரன்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது வருகையை உறுதிப்படுத்தியுள்ளார். https://athavannews.com/2025/1450169

எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் பங்குபற்றப்போவதில்லை!

4 weeks ago

download-5-2.jpg?resize=318%2C159&ssl=1

எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் பங்குபற்றப்போவதில்லை!

எகிப்து தலைநகர் ஷர்ம் எல்-ஷேக்கில் நாளையதினம் நடைபெறவுள்ள காசா அமைதி மாநாட்டில் ஹமாஸ் அமைப்பினர் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்துள்ள நிலையில் இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வருகை தொடர்பாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எகிப்திய ஜனாதிபதி ஆகியோர் தலைமையில் நாளை ஷர்ம் எல்-ஷேக்கில் காசா அமைதிக்கான மாநாடு நடைபெறவுள்ளதாக எகிப்திய ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.

இந்த மாநாட்டில் “இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருதல், மத்திய கிழக்கில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான முயற்சிகளை மேம்படுத்துதல் மற்றும் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையின் புதிய சகாப்தத்தை உருவாக்குதல்” ஆகியன இந்த மாநாடு நோக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பிரிட்டனின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி மற்றும் ஸ்பெயினின் பெட்ரோ சான்செஸ் ஆகியோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேவேளை, பிரன்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது வருகையை உறுதிப்படுத்தியுள்ளார்.

https://athavannews.com/2025/1450169

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

4 weeks ago
பிகு ஒண்டை கவனித்தீர்களா? ஆகஸ்டு 2025 கருணாநிதி நினைவுநாளில், சீமானின் ஏவலர்களானா தூஷண துரை வகையறாக்கள், கருணாநிதி vs பிரபாகரன் என்ற அவதூறு போரை, அதை தொடர்ந்து இரு பகுதியும் இந்த இருவரையும் மாறி மாறி கேலி செய்யும் கீழ்தரமான சண்டையை முன்னைய வருடங்கள் போல் செய்யவில்லை? ஏன்? #சபரீசன் பெட்டி

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

4 weeks ago
வரும் தமிழ்நாடு சட்ட சபை தேர்தலில் இரண்டு கூட்டணிகள் தான் இருக்கும், ஒன்று திமுக கூட்டணி மற்றையது பிஜேபி கூட்டணி. மற்றவர்கள் எல்லோரும் எதிரணி வாக்குளை பிரிக்க இறக்கப்படும் பினாமிகள் ஆகும். நடிகர் விஜய் பிஜேபி சார்பாக திமுக கூட்டணி வாக்குளை பிரிக்கவும், சீமான் திமுக சார்பாக பிஜேபி கூட்டணி வாக்குளை பிரிக்கவும் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

4 weeks ago
மேலே சொன்னவை அனைத்தும் தமிழக தமிழர் நலனுக்கு சீமான் ஏன் கேடு என்பதற்க்காக வாதங்கள். எமக்கு சீமான் ஏன் கேடு என்பதற்கு இன்னும் சில பத்திகள் எழுத வேண்டும். சுருக்கமாக 2009 க்கு பின் ஈழத்தமிழர் ஒரு இனமாக மீண்டும் திரள்வதை தடுக்க, அவர்களுக்கான வெளி ஆதரவை தடுக்க பலர் பல இடங்களில் இறக்கி விடப்பட்டுள்ளனர். புலத்தில் - அருண், சுமன், கருணா, பிள்ளையான் இத்யாதிகள். புலம்பெயர் தேசத்தில் - ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றுக்கு மேற்பட்டதாக பிரிந்து மாவீரர் தினம் கொண்டாடும் கள்ளர். போலிகா குரூப். தலையில்லாத செயலலகம், மாட்டு பண்ணை இத்யாதிகள். தமிழ் நாட்டில் சீமான். 2009 க்கு பின் இருந்த எம்மீதான பரிவை….மடை மாற்றி… திமுக, அதிமுக, காங், பிஜேபி, விசிக, திக என கிட்டதட்ட தமிழ்நாட்டின் 90% வாக்காளரை…. புலிகள்/ஈழத்தமிழர் அவர்களின் எதிரிகள் என கொண்டு போய் நிறுத்தியவர் சீமான். எமக்கு அடைக்கலம் தந்த அதே மக்களில் இருந்து சிலர் சீமானின் வருகையின் பின் எம்மை “அகதி” என திட்ட ஆரம்பித்தார்கள். ஒரு காலத்தில் கட்சி வேறுபாடின்றி மாவீரன் என போற்றப்பட்ட தலைவர் உருவ கேலிக்கு ஆளானார். இவை அனைத்தும் - சீமான்… தமிழக தலைவர்கள் vs பிரபாகரன் என்ற ஒரு தேவையில்லாத ஆணியை புடுங்கியதன் விளைவு. இதை அவர் திட்டமிட்டே செய்தார். செய்கிறார். இதன் உள்நோக்கம் 2/3 பங்கு தமிழ்நாட்டு மக்களுக்கும், ஈழத்தமிழருக்கும் மாறாத பகைகை மூட்டி விடுவது.

விஜய் உடன் அதிமுக கூட்டணி.. பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி!

4 weeks ago
இங்கே நீங்கள் எழுதியவற்றுக்கான பதில் முன்பே பல தடவை யாழில் விவாதிக்கப்பட்டு உள்ளது. இனவழி தேசியம் வேறு, இனத்தூய்மைவாதம் வேறு. சீமான் தமிழ் நாட்டில் 300-600 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை புறம்தள்ளி, அவர்கள் ஆளதகுதி அற்றவர் எனக்கூறி முன்னெடுப்பது தமிழ் தேசிய அரசியல் அல்ல, அது தமிழ் நாட்டில் வாழும், வாக்குரிமை உள்ள, மக்களிடையே சாதிய பிளவை கூர்மையாக்கும், சாதியை-வைத்து இனம்பிரிக்கும், இனத்தூய்மைவாத வெறுப்பரசியல். எப்படி ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் தமிழக மக்களின் நலனுக்கு கேடோ, அதை ஒத்த கேடே சீமானின் சாதிய அடிப்படையில் அமைந்த இனத்தூய்மைவாதமும். இதில் மேலதிகமாக சீமான், சங்கிகளை பட்டும் படாமலும் விமர்சித்து கொண்டு, அவர்களின் கொள்கைகளை முந்தள்ளுவது, அரசியலை மத மயப்படுத்துவது, அவர் இப்போ இருக்கும்( தெலுங்கு வம்சாவழி ) திராவிட அரசியல்வாதிகளுடன் நேரடி மறைமுக கொஞ்சி குலாவுதல்களை செய்து கொண்டு, அதே சமயம் பச்சை பொய்களை கூறி பெரியாரை, பெரியாரியத்தின் முற்போக்கு விளைவுகளை மறுதலிப்பது அவர் ஒரு அரசியல் தரகர் என்பதையும், பாஜக பி டீம் என்பதையும், இப்போ திமுக சி டீம் என்பதையும் உறுதி செய்கிறது. 2009 க்கு முதல் அன்றாடம் காய்ச்சியாக இருந்த அதன் பின் எந்த தொழிலும் இன்றி நீலம்க்கரையில் 6 கோடி பங்களா, அதி சொகுசு ஜப்பான் பஜெரோ, மலைநாட்டில் கோப்பி தோட்டம் என வலம் வருவது, அவர் அரசியலை பாவித்து களவு எடுத்துள்ளார் என்பதை உறுதி செய்கிறது. அவர் கட்சியில் பொலிஸ் கிராப்புடன் திடீரென தோன்றிய “முன்னாள் இந்திய இராணுவ வீரர்” விங், அவர் வீட்டில் ஆயுதம் தாங்கிய சிவில் உடை தரித்தோர் இருப்பது - அவர் ரோ ஏஜெண்ட் என்பதை காட்டி நிற்கிறது. இத்தனைக்கும் மேலாக சுப முத்துகுமார் மரணம் அதில் சீமான், தூஷண துரைமுருகன் பங்கு. சீமான் தமிழ் இனத்தில் தோன்றியிள்ள புற்று நோய் கட்டி. இது வளர்வது போல் தோன்றினாலும் அது வளர்ச்சி அல்ல. வெட்டி வீசி விடுவதே ஒரே வழி. பிகு : மக்கள் ஆதரவு. புலிகளின் அதிபுச்ச புள்ளியில் கூட டக்லஸ் யாழ்ப்பாணத்தில் 10% வாக்கு எடுத்தார். சீமானுக்கு விழும் வாக்க்கில் பலது நோட்டோவுக்கு சமனாக மக்கள் வேறு தெரிவின்றி போடுவது. அப்படி அவருக்காக விழும் வாக்கு கூட அவரின் நயவஞ்சகம் புரியாத, மேடையில் அவர் பேசுவதுதான் அவரின் உண்மையான முகம் என நம்பும் அப்பாவிகளின் வாக்கு.

தமிழ் மக்கள் ஐநாவில் நம்பிக்கையிழக்கிறார்களா? நிலாந்தன்.

4 weeks ago
தமிழ் மக்கள் ஐநாவில் நம்பிக்கையிழக்கிறார்களா? நிலாந்தன். எர்னெஸ்ற் ஹேமிங்வே ஓர் அமெரிக்க எழுத்தாளர்.அவர் எழுதிய A Farewell to Arms- “போரே நீ போ” என்ற நாவல் உலகப் புகழ்பெற்றது. கதையின் களம் இரண்டாம் உலக மகாயுத்தத் சூழலுக்குரியது. நாவலின் மையப் பாத்திரம் போரினால் சப்பித் துப்பட்ட ஒரு கட்டத்தில் பின்வரும் பொருள்படக் கூறும் “இப்பொழுது சமாதானம்,அமைதி,போர் நிறுத்தம் போன்ற வார்த்தைகள் அவற்றின் புனிதத்தை இழந்து விட்டன.வீதிகளின் பெயர்கள்,ரெஜிமென்ற்களின் பெயர்கள்,படைப்பிரிவின் பெயர்கள்தான் அவற்றுக்குரிய அர்த்தத்தோடு காணப்படுகின்றன.” என்று. இது கடந்த 16ஆண்டுகளாகத் தமிழ் அரசியலில் கூறப்பட்டு வருகின்ற “நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல்,நிலைமாறுகால நீதி”போன்ற வார்த்தைகளுக்கும் பொருந்துமா? மீண்டும் ஓர் ஐநா தீர்மானம் கடந்த ஆறாம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.கடந்த 16 ஆண்டுகளிலும் இவ்வாறு 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன.இந்த தீர்மானங்களால் தமிழ் மக்களுக்குக் கிடைத்தவை என்ன? கடந்த 16 ஆண்டுகளிலும் போர் முடிந்த கையோடு ஐநா மகிந்தவை பாராட்டியது.வெல்லக் கடினமான பயங்கரவாத அமைப்பு ஒன்றை தோற்கடித்தமைக்காக ஐநாவில் மகிந்தவுக்கு பாராட்டு பத்திரம் கிடைத்தது.ஆனால் சில ஆண்டுகளிலேயே ஐநாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு. முதலாவது காரணம் மஹிந்த சீனாவை நோக்கிச் சாயத் தொடங்கியது.இரண்டாவது காரணம் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் உழைப்பு. இந்த இரண்டு காரணங்களின் விளைவாகவும் 2012இலிருந்து ஐநா தீர்மானங்கள் மகிந்த அரசாங்கத்துக்கு எதிராக வரத் தொடங்கின.ஆனால் மஹிந்த அரசாங்கத்தை அசைக்க முடியவில்லை. 2015 ஆம் ஆண்டு ஓர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இந்த ஆட்சி மாற்றத்தில் மேற்கு நாடுகளும் இந்தியாவும் இணைந்து மஹிந்தவைத் தோற்கடித்தன.ரணில்-மைத்திரி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தன.அந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் அதற்கு கால அவகாசத்தை வழங்குவதற்காக அப்பொழுது நடக்கவிருந்த ஐநா கூட்டத்துடன் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.அக்கூட்டத் தொடரில்தான் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது நிலைமாறு கால நீதிக்கான தீர்மானம்-பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம்-நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய பொழுது அப்போது இருந்த இலங்கை அரசாங்கம் அதாவது நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படுகின்ற அரசாங்கம் அந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது. அதன்பின் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஐநா நிலை மாறு கால நீதிச் செய்முறைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்தது. ஆனால் 2018 இல் நடந்த யாப்புச் சதி முயற்சி ஒன்றின்மூலம் மைத்திரிபால சிறிசேன நிலைமாறு கால நீதி முன்னெடுப்புகளைத் தோற்கடித்தார்.அதாவது நிலை மாறு கால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரி அதனைக் காட்டிக் கொடுத்தார்.விளைவாக நிலைமாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட யாப்புருவாக்க முயற்சிகள் இடைக்கால வரைபுடன் நின்று விட்டன. அந்த நிலைமாறுகால நீதிச் செய்முறைகளை சுதந்திரன் தோல்வியுற்ற பரிசோதனை என்று சொன்னார்.2021ஆம் ஆண்டு ஐநா கூட்டத் தொடரை முன்னிட்டு கட்சிகளை இணைத்து ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்கான சந்திப்பு வவுனியாவில் நடந்த பொழுது அதில் வைத்து சுமந்திரன் “ஆறாண்டுகளாக ஒரு பரிசோதனை செய்தோம் அதில் தோல்வி அடைந்து விட்டோம்” என்ற பொருள்படச் சொன்னார்.இத்தனைக்கும் அவர்தான் நிலைமாறு கால நீதியின் தமிழ்ப் பங்காளி. நிலைமாறு கால நீதி என்ற கருத்துருவம் நிலை மாற்றம் ஏற்பட்டிருக்கும் ஒரு நாட்டுக்குத்தான் பொருந்தும்.இலங்கையில் அப்படி என்ன நிலை மாற்றம் ஏற்பட்டது? யுத்தம் நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால் யுத்தத்தை தோற்றுவித்த அரசியல் காரணிகள் அப்படியே உள்ளன.அதற்காக உருவாக்கப்பட்ட படைக் கட்டமைப்பும் புலனாய்வுக் கட்டமைப்பும் அப்படியே உள்ளன.கடந்த 15 ஆண்டுகளின் பின் மாற்றம் என்று கூறிக்கொண்டு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால்கூட இன்றுவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க முடியவில்லை என்பது ஓர் ஆகப்பிந்திய உதாரணம்.அந்தச் சட்டத்தை கடந்த மாதம் நீக்க போவதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தது. எனவே இலங்கைத்தீவில் நிலைமாற்றம் ஏற்படவில்லை.நிலைமாற்றம் ஏற்படாத போது நிலைமாறுகால நீதியை எப்படி ஸ்தாபிப்பது?அப்படி ஸ்தாபிக்க முற்படுவது என்பது குற்றம் சாட்டப்பட்டவர்களே நீதி விசாரணை செய்வதுதான்.எனவே நிலைமாறுகால நீதிச் செய்முறைகள் தோற்றுப் போனதற்கு மைத்திரி மகிந்தவிடம் அப்பம் சாப்பிட்டுவிட்டு குத்துக்கரணம் அடித்தது மட்டும் காரணமில்லை. நிலைமாற்றம் இல்லாத ஓர் அரசியல் சூழலில் நிலைமாறு கால நீதியை அமுல்படுத்தலாம் என்று நம்பியதுதான் தவறு. அதன் பின் கோத்தபாய வந்தார்.ஐநா மீண்டும் இறுக்கிப்பிடித்தது. முடிவில் நிலைமாறு கால நீதிச் செய்முறைகளில் ஏற்பட்ட பின்னடைவுகளின் விளைவாக,ஐநா 2021ஆம் ஆண்டு மற்றொரு தீர்மானத்தின்மூலம் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தை உருவாக்கியது.இந்த அலுவலகமானது இலங்கை தீவில் போர்க்களத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக சான்றுகளையும் சாட்சிகளையும் இன்று வரை சேகரித்து வருகிறது.கடந்த ஆறாம் தேதி நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானமானது மேற்படி அலுவலகத்தைத் மேலும் இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இயங்க அனுமதிக்கின்றது. எனவே இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம் கடந்த 16 ஆண்டுகளிலும் ஐநா மைய தமிழ் அரசியலின்மூலம் கிடைத்தவை எவையெவை என்று பார்த்தால், இடையில் நிறுத்தப்பட்ட பலவீனமான நிலை மாறுகால நீதிச் செய்முறைகள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் இவை இரண்டும்தான். நிலைமாறு கால நீதியின் கீழ் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில் குறிப்பாக காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் போன்றவற்றை பாதிக்கப்பட்ட மக்கள் பொருட்படுத்தவில்லை;நிராகரித்து விட்டார்கள்.அதேசமயம் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் அலுவலகத்தைச் சேர்ந்த ஐநா அலுவலர்கள் இலங்கைக்குள் வர இன்றுவரை அனுமதியில்லை.அனுர ஜனாதிபதியாக வந்த பின்னரும் அதுதான் நிலைமை.அந்த அலுவலகத்தைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்நாட்டு நீதி விசாரணைப் பொறிமுறைக்கூடாகவே பொறுப்புக் கூறமுடியும் என்று அரசாங்கம் கூறிவருகிறது. இதில் ஐநா இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறதா? ஒருபுறம் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம்.அது பன்னாட்டுப் பரிமாணத்தைக் கொண்டது. இன்னொருபுறம் உள்நாட்டுப் பொறிமுறையை வெளிநாட்டு நிபுணத்துவ உதவிகளின்மூலம் பலப்படுத்தலாம் என்று எதிர்பார்ப்பது.அதாவது குற்றம் சாட்டப்படும் தரப்பையே விசாரிப்பதற்கு அனுமதிப்பது. மனித உரிமைகள் பேரவையின் மேற்படி நிலைபாட்டை எதிர்த்தே பாதிக்கப்பட்ட மக்கள் செம்மணியில் மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கையை எரித்தார்கள். கடந்த ஆறாம் திகதி ஐநா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக செம்மணி வளைவில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புகளும் பல்கலைக்கழக மாணவ அமைப்புகளும் ஏனைய அரசியல் செயற்பாட்டாளர்களும் இணைந்து அந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தார்கள்.இப்போராட்டத்தின் முடிவில் செம்மணியில் அணையா விளக்கு இடம்பெற்ற இடத்தில் வைத்து, ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை,பாதிக்கப்பட்ட அம்மாக்களால் எரிக்கப்பட்டது. இதில் ஒரு செய்தி உண்டு. எந்த ஐநாவை தலையிட வேண்டும் என்று கேட்டுத் தமிழ் மக்கள் ஊர்வலம் போனார்களோ,எந்த ஐநாவில் நீதி கேட்டு தமிழ் அரசியல்வாதிகளும் செயல்பாட்டாளர்களும் ஒவ்வொரு ஆண்டும் ஜெனிவாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்களோ,எந்த ஐநா மன்றத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு ஆண்டும் கடிதங்கள் எழுதப்படுகின்றனவோ,எந்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வர வேண்டும் என்று கேட்டு ஒரு சுடரை மூன்று நாட்கள் அணியாமல் ஏற்றி வைத்திருந்தார்களோ,அதே இடத்தில்,அதே ஆணையாளருடைய அறிக்கையைப் பாதிக்கப்பட்ட அம்மாக்கள் ஏரிக்கும் ஒரு நிலைமை.கடந்த 16 ஆண்டு கால ஐநாவை நோக்கிய அரசியலில் தமிழ் மக்கள் ஏமாற்றம் அடைந்து வருவதை அது காட்டுகிறது.இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்ற சொற்கள் அவற்றின் புனிதத்தை இழக்கத் தொடங்கி விட்டதையும் அது காட்டுகின்றதா ? https://athavannews.com/2025/1450118

தமிழ் மக்கள் ஐநாவில் நம்பிக்கையிழக்கிறார்களா? நிலாந்தன்.

4 weeks ago

united-nations-assembly.jpg?resize=672%2

தமிழ் மக்கள்  ஐநாவில் நம்பிக்கையிழக்கிறார்களா? நிலாந்தன்.

எர்னெஸ்ற் ஹேமிங்வே ஓர் அமெரிக்க எழுத்தாளர்.அவர் எழுதிய A  Farewell to Arms- “போரே நீ போ” என்ற நாவல் உலகப் புகழ்பெற்றது. கதையின் களம் இரண்டாம் உலக மகாயுத்தத் சூழலுக்குரியது. நாவலின் மையப் பாத்திரம் போரினால் சப்பித் துப்பட்ட ஒரு கட்டத்தில் பின்வரும் பொருள்படக் கூறும் “இப்பொழுது சமாதானம்,அமைதி,போர் நிறுத்தம் போன்ற வார்த்தைகள் அவற்றின் புனிதத்தை இழந்து விட்டன.வீதிகளின் பெயர்கள்,ரெஜிமென்ற்களின் பெயர்கள்,படைப்பிரிவின் பெயர்கள்தான் அவற்றுக்குரிய அர்த்தத்தோடு காணப்படுகின்றன.” என்று.

இது கடந்த 16ஆண்டுகளாகத் தமிழ் அரசியலில் கூறப்பட்டு வருகின்ற “நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல்,நிலைமாறுகால நீதி”போன்ற வார்த்தைகளுக்கும் பொருந்துமா?

மீண்டும் ஓர் ஐநா தீர்மானம் கடந்த ஆறாம் திகதி திங்கட்கிழமை நிறைவேற்றப்பட்டிருக்கிறது.கடந்த 16 ஆண்டுகளிலும் இவ்வாறு 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டன.இந்த தீர்மானங்களால் தமிழ் மக்களுக்குக் கிடைத்தவை என்ன?

கடந்த 16 ஆண்டுகளிலும் போர் முடிந்த கையோடு ஐநா மகிந்தவை பாராட்டியது.வெல்லக் கடினமான பயங்கரவாத அமைப்பு ஒன்றை தோற்கடித்தமைக்காக ஐநாவில் மகிந்தவுக்கு பாராட்டு பத்திரம் கிடைத்தது.ஆனால் சில ஆண்டுகளிலேயே ஐநாவின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உண்டு. முதலாவது காரணம் மஹிந்த சீனாவை நோக்கிச் சாயத் தொடங்கியது.இரண்டாவது காரணம் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் உழைப்பு.

இந்த இரண்டு காரணங்களின் விளைவாகவும் 2012இலிருந்து ஐநா தீர்மானங்கள் மகிந்த அரசாங்கத்துக்கு எதிராக வரத் தொடங்கின.ஆனால் மஹிந்த அரசாங்கத்தை அசைக்க முடியவில்லை. 2015 ஆம் ஆண்டு ஓர் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. இந்த ஆட்சி மாற்றத்தில் மேற்கு நாடுகளும் இந்தியாவும் இணைந்து மஹிந்தவைத் தோற்கடித்தன.ரணில்-மைத்திரி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தன.அந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் அதற்கு கால அவகாசத்தை வழங்குவதற்காக அப்பொழுது நடக்கவிருந்த ஐநா கூட்டத்துடன் செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது.அக்கூட்டத் தொடரில்தான் 30/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதாவது நிலைமாறு கால நீதிக்கான தீர்மானம்-பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம்-நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய பொழுது அப்போது இருந்த இலங்கை அரசாங்கம் அதாவது நல்லாட்சி அரசாங்கம் என்று அழைக்கப்படுகின்ற அரசாங்கம் அந்தத் தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது.

அதன்பின் தொடர்ச்சியாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் ஐநா நிலை மாறு கால நீதிச் செய்முறைகளைத் தொடர்ந்து கண்காணித்து வந்தது. ஆனால் 2018 இல் நடந்த யாப்புச் சதி முயற்சி ஒன்றின்மூலம் மைத்திரிபால சிறிசேன நிலைமாறு கால நீதி முன்னெடுப்புகளைத் தோற்கடித்தார்.அதாவது நிலை மாறு கால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரி அதனைக் காட்டிக் கொடுத்தார்.விளைவாக நிலைமாறுகால நீதிச் செய்முறைகளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட யாப்புருவாக்க முயற்சிகள் இடைக்கால வரைபுடன் நின்று விட்டன.

அந்த நிலைமாறுகால நீதிச் செய்முறைகளை சுதந்திரன் தோல்வியுற்ற பரிசோதனை என்று சொன்னார்.2021ஆம் ஆண்டு ஐநா கூட்டத் தொடரை முன்னிட்டு கட்சிகளை இணைத்து ஒரு கூட்டுக் கடிதத்தை அனுப்புவதற்கான சந்திப்பு வவுனியாவில் நடந்த பொழுது அதில் வைத்து சுமந்திரன் “ஆறாண்டுகளாக ஒரு பரிசோதனை செய்தோம்  அதில் தோல்வி அடைந்து விட்டோம்” என்ற பொருள்படச் சொன்னார்.இத்தனைக்கும் அவர்தான் நிலைமாறு கால நீதியின் தமிழ்ப் பங்காளி.

நிலைமாறு கால நீதி என்ற கருத்துருவம் நிலை மாற்றம் ஏற்பட்டிருக்கும் ஒரு நாட்டுக்குத்தான் பொருந்தும்.இலங்கையில் அப்படி என்ன நிலை மாற்றம் ஏற்பட்டது? யுத்தம் நிறுத்தப்பட்டு விட்டது.ஆனால் யுத்தத்தை தோற்றுவித்த அரசியல் காரணிகள் அப்படியே உள்ளன.அதற்காக உருவாக்கப்பட்ட படைக் கட்டமைப்பும் புலனாய்வுக் கட்டமைப்பும் அப்படியே உள்ளன.கடந்த 15 ஆண்டுகளின் பின் மாற்றம் என்று கூறிக்கொண்டு வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தால்கூட இன்றுவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்க முடியவில்லை என்பது ஓர் ஆகப்பிந்திய உதாரணம்.அந்தச் சட்டத்தை கடந்த மாதம் நீக்க போவதாக அரசாங்கம் கூறிக் கொண்டிருந்தது.

எனவே இலங்கைத்தீவில் நிலைமாற்றம் ஏற்படவில்லை.நிலைமாற்றம் ஏற்படாத போது நிலைமாறுகால நீதியை எப்படி ஸ்தாபிப்பது?அப்படி ஸ்தாபிக்க முற்படுவது என்பது குற்றம் சாட்டப்பட்டவர்களே நீதி விசாரணை செய்வதுதான்.எனவே நிலைமாறுகால நீதிச் செய்முறைகள் தோற்றுப் போனதற்கு மைத்திரி மகிந்தவிடம் அப்பம் சாப்பிட்டுவிட்டு குத்துக்கரணம் அடித்தது மட்டும் காரணமில்லை. நிலைமாற்றம் இல்லாத ஓர் அரசியல் சூழலில் நிலைமாறு கால நீதியை அமுல்படுத்தலாம் என்று நம்பியதுதான் தவறு.

அதன் பின் கோத்தபாய வந்தார்.ஐநா மீண்டும் இறுக்கிப்பிடித்தது. முடிவில் நிலைமாறு கால நீதிச் செய்முறைகளில் ஏற்பட்ட பின்னடைவுகளின் விளைவாக,ஐநா 2021ஆம் ஆண்டு மற்றொரு தீர்மானத்தின்மூலம் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தை உருவாக்கியது.இந்த அலுவலகமானது இலங்கை தீவில் போர்க்களத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக சான்றுகளையும் சாட்சிகளையும் இன்று வரை சேகரித்து வருகிறது.கடந்த ஆறாம் தேதி நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானமானது மேற்படி அலுவலகத்தைத் மேலும் இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து இயங்க அனுமதிக்கின்றது.

எனவே இப்பொழுது தொகுத்துப் பார்க்கலாம் கடந்த 16 ஆண்டுகளிலும் ஐநா மைய தமிழ் அரசியலின்மூலம் கிடைத்தவை எவையெவை என்று பார்த்தால், இடையில் நிறுத்தப்பட்ட பலவீனமான நிலை மாறுகால நீதிச் செய்முறைகள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம் இவை இரண்டும்தான்.

 

நிலைமாறு கால நீதியின் கீழ் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளில் குறிப்பாக காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் போன்றவற்றை பாதிக்கப்பட்ட மக்கள் பொருட்படுத்தவில்லை;நிராகரித்து விட்டார்கள்.அதேசமயம் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் அலுவலகத்தைச் சேர்ந்த ஐநா அலுவலர்கள் இலங்கைக்குள் வர இன்றுவரை அனுமதியில்லை.அனுர ஜனாதிபதியாக வந்த பின்னரும் அதுதான் நிலைமை.அந்த அலுவலகத்தைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. உள்நாட்டு நீதி விசாரணைப் பொறிமுறைக்கூடாகவே பொறுப்புக் கூறமுடியும் என்று அரசாங்கம் கூறிவருகிறது.

 

இதில் ஐநா இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறதா? ஒருபுறம் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகம்.அது பன்னாட்டுப் பரிமாணத்தைக் கொண்டது. இன்னொருபுறம் உள்நாட்டுப் பொறிமுறையை  வெளிநாட்டு நிபுணத்துவ உதவிகளின்மூலம் பலப்படுத்தலாம் என்று எதிர்பார்ப்பது.அதாவது குற்றம் சாட்டப்படும் தரப்பையே விசாரிப்பதற்கு அனுமதிப்பது.

 

மனித உரிமைகள் பேரவையின் மேற்படி நிலைபாட்டை எதிர்த்தே பாதிக்கப்பட்ட மக்கள் செம்மணியில் மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கையை எரித்தார்கள்.

 

கடந்த ஆறாம் திகதி ஐநா தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பாக செம்மணி வளைவில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் அமைப்புகளும் பல்கலைக்கழக மாணவ அமைப்புகளும் ஏனைய அரசியல் செயற்பாட்டாளர்களும் இணைந்து அந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வந்தார்கள்.இப்போராட்டத்தின் முடிவில் செம்மணியில் அணையா விளக்கு இடம்பெற்ற இடத்தில்  வைத்து, ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கை,பாதிக்கப்பட்ட அம்மாக்களால் எரிக்கப்பட்டது.

 

இதில் ஒரு செய்தி உண்டு. எந்த ஐநாவை தலையிட வேண்டும் என்று கேட்டுத் தமிழ் மக்கள் ஊர்வலம் போனார்களோ,எந்த ஐநாவில் நீதி கேட்டு தமிழ் அரசியல்வாதிகளும் செயல்பாட்டாளர்களும் ஒவ்வொரு ஆண்டும் ஜெனிவாவுக்குப் போய்க்கொண்டிருக்கிறார்களோ,எந்த ஐநா மன்றத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு ஆண்டும் கடிதங்கள் எழுதப்படுகின்றனவோ,எந்த ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செம்மணிக்கு வர வேண்டும் என்று கேட்டு ஒரு சுடரை மூன்று நாட்கள் அணியாமல் ஏற்றி வைத்திருந்தார்களோ,அதே இடத்தில்,அதே ஆணையாளருடைய அறிக்கையைப் பாதிக்கப்பட்ட அம்மாக்கள் ஏரிக்கும் ஒரு நிலைமை.கடந்த 16 ஆண்டு கால ஐநாவை நோக்கிய அரசியலில் தமிழ் மக்கள் ஏமாற்றம் அடைந்து வருவதை அது காட்டுகிறது.இக்கட்டுரையின் தொடக்கத்தில் கூறப்பட்டதுபோல நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் போன்ற சொற்கள் அவற்றின் புனிதத்தை இழக்கத் தொடங்கி விட்டதையும் அது காட்டுகின்றதா ?

https://athavannews.com/2025/1450118

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக உயர்த்தப்படும்- ஜனாதிபதி உறுதி!

4 weeks ago
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக உயர்த்தப்படும்- ஜனாதிபதி உறுதி! 2025ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. வீட்டு உரிமைப் பத்திரங்களைப் பெறும் 2,000 பயனாளிகளுக்கு ஜனாதிபதி அடையாளமாக சில உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்திருந்தார். வசதியான வீடு, சுகாதாரமான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை அரசு, இந்திய அரசுடன் இணைந்து, மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு்ள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய பிரதிநிதிகள் குழு ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். https://athavannews.com/2025/1450155

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக உயர்த்தப்படும்- ஜனாதிபதி உறுதி!

4 weeks ago

Screenshot-2025-10-12-160542.jpg?resize=

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக உயர்த்தப்படும்- ஜனாதிபதி உறுதி!

2025ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

வீட்டு உரிமைப் பத்திரங்களைப் பெறும் 2,000 பயனாளிகளுக்கு ஜனாதிபதி அடையாளமாக சில உரிமைப் பத்திரங்களை வழங்கி வைத்திருந்தார்.

வசதியான வீடு, சுகாதாரமான வாழ்க்கை என்ற தொனிப்பொருளின் கீழ், இலங்கை அரசு, இந்திய அரசுடன் இணைந்து, மலையக சமூகத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு்ள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய பிரதிநிதிகள் குழு ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

https://athavannews.com/2025/1450155

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

4 weeks ago
கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை! October 10, 2025 சமீபத்தில் கனடாவில் வாழும் தமிழ்த் தேசிய உணர்வாளப் பெண்மணி சிவவதனி பிரபாகரன் என்பவர் தனது மகளான திவ்யாவின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார். மேலும் அவர் தனது முகநூல் பதிவில் “இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது” என்றும் பதிவிட்டுள்ளார். ஒரு தாயார் தனது மகளின் திருமணத்தையிட்டு பேருவகை கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சமூக வலைத்தளத்திலேயே குடும்பம் நடத்தும் இக்காலத்தில், சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமையும் ஒன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால் திருமதி சிவவதனி பிரபாகரன் தனது சம்ந்தக்குடி பற்றி தெரிவித்த தகவல்களே சமூக வலைத்தள தமிழ்த் தலிபான்களுக்கு சும்மா மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்தமாதிரி ஆகிவிட்டது. சிவவதனி அம்மா மகள் திவ்யா காதலித்த ஆபிரிக்க நாடான கொங்கோ நாட்டு இளைஞனை திருமணம் செய்து வைத்தமையை பொறுக்காத தமிழ்த் தலிபான்கள் பின்னூட்டலில் வந்து வசை மாரி பொழிகிறார்கள். அடுத்தவர் வீட்டு படுக்கையறையை எட்டிப் பார்க்க கூடாது என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாத பண்பற்ற தமிழ் ஆண்களும் பெண்களும் புதுமணத் தம்பதிகளுக்கு சாபங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள். சம்பந்தப்பட்ட குடும்பத்தின் அனுமதியின்றி தம்பதிகளின் திருமணப் படங்களை பல்வேறு சமூக வலைத்தள போலிக் கணக்குகளில் பகிர்ந்து தமது காழ்ப்புணர்வை உமிழ்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் வேற்று நாட்டவர்களை மணம் புரிதல் என்பது புதிதல்ல. இரண்டாவது தலைமுறையை கடந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் இடையே வேறு இனத்தவர்களில் ஆண் மற்றும் பெண் எடுத்தல் சகஜமாக நடந்து தான் வருகிறது. அவ்வாறான திருமணப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன. பெரும்பாலான அத்திருமணங்கள் வெள்ளையினத்தவர்களுடான தமிழ்க் கலியாணங்களாக இருக்கின்றன. வெள்ளையினத்தவர்களுடனான கலப்புத் திருமணங்களுக்கு வராத விமர்சனங்கள், கறுப்பு நிற ஆபிரிக்க இனத்தவர்களுடான திருமணங்களுக்கு வருகின்றன. இது தமிழர்களின் நிற வெறியை வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் பளுப்பு நிறமுடைய தமிழர்கள் தங்களை ஆபிரிக்கர்களை காட்டிலும் உயர் இனமாக கருதுகின்றனர். அதனாலேயே வெள்ளை நிறத்தவர்களிடையே ஏற்படும் கலப்பு திருமண பந்தங்களை வரவேற்று கொண்டாடுகின்றனர். அதேநேரம் ஆபிரிக்க இனத்தவரையோ அல்லது வெள்ளையினம் சாராத ஏனைய கலப்புத் திருமணங்களை எள்ளி நகையாடுகின்றனர். இன அடக்குமுறைக்கு எதிராக விடுதலை வேண்டிப் போராடிய இனமான ஈழத்தமிழர்கள் நிறவெறி, சாதிவெறி, மதவெறி, பிரதேச வாதம் மற்றும் பெண்ணடிமைத் தனம் என்ற பிற்போக்குத் தனங்களில் இன்னமும் உழல்வது வெட்கக்கேடானது. தாயகத்தை காட்டிலும் புலத்தில் வாழும் தமிழர்களிடையே இவ்வாறான பிற்போக்குத் தனங்கள் மிகுதியாக காணப்படுகின்றன. கருத்துச் சுதந்திரத்தின் வரையறை தெரியாத காட்டுமிராண்டி சமூகமாக ஈழத்தமிழ்ச் சமூகம் புலம்பெயர் நாடுகளில் வாழ்வது தலைகுனிவானது. சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனது மகள் கலப்புத் திருமணம் செய்ததை ஆதரித்தது உண்மையில் வரவேற்க்கத்தக்க செயலாகும். அவர் சொல்ல வந்த செய்தி கணியன் பூங்குன்றனாரின் “ யாதும் ஊரே யாவரும் கேளிர் “ என்பதன்படி தமிழர்கள் சர்வதேசவாதிகள். உலகில் வாழும் அனைவரும் எமது உறவுகளே. அதேநேரம் உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமதே என்பதாகும். சிவவதனி அம்மையாரின் தூரநோக்கு சர்வதேசப் பார்வையை புரிந்து கொள்ள திராணியற்ற கூட்டமொன்று சமூக வலைத்தளங்களில் குத்தி முறிகிறது. பாலியல் வக்கிரமான சொற்றாடல்களில் பின்னூட்டல்களை இடுகின்றது. அவ்வாறான பின்னூட்டல்களில் பெரும்பாலானவை ஆபிரிக்க மணமகனின் ஆண்குறியை மையமாக கொண்ட வக்கிர கருத்துக்களாக உள்ளன. பெரும்பாலும் இப் பின்னூட்டல்களை இடுபவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஆண்களாகவே உள்ளனர். அவர்களுக்கு தமது ஆண்மையில் இருக்கின்ற குறைபாடுகள் காரணமாகத் தான் ஆபிரிக்க மணமகன் மீது காழ்ப்புணர்வு கொண்டு பாலியல் வக்கிரமான பின்னூட்டல்களை இடுவதாகத் தான் கருத வேண்டியுள்ளது. ஒரு பெண் யாரைத் திருமணம் செய்ய வேண்டும். யாருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் தீர்மானிக்க முடியும். பெண்களின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் பாதுகாப்பில் கூடுதல் முன்னுரிமை கொடுக்கும் மேற்கு நாடுகளில் அகதிகளாக வந்து தஞ்சம் பெற்று வாழும் தமிழ் ஆண்களுக்கு மேற்கூறிய விடயங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. பெண்கள் மீதான அத்துமீறல்களில் மற்றும் வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களுக்கு புலம்பெயர் நாடுகளில் எத்தகைய தண்டனைகள் வழங்கப்படும் என்பதும் தெரிந்திருக்கும். அல்லது தெரிந்து வைத்திருக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மட்டுமல்ல தாயகத்திலும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் பல்வேறு சட்டங்கள் மற்றும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளில் ஒழிந்து கொண்டு வெட்டி வீராப்பு மற்றும் அவதூறு பரப்புகிறவர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்படுவார்கள். எழுதியவர்: கங்கா ஜெயபாலன், சமூக சேவைப் பணியாளர், கல்வி: Social Work & Education (University of Niederrhein), சர்வதேச உறவுகள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), அரசியல் விஞ்ஞானம் (கொழும்புப் பல்கலைக்கழகம்). https://www.thesamnet.co.uk/?p=113593

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

4 weeks ago

கனடிய தமிழ்ப் பெண் கருப்பினத்தவரை மணந்ததால் வெகுண்டெழுந்த தமிழினத்தின் ஆண்மை!

  1. October 10, 2025

Sivavathani_Daughter_Wedding_03-768x1024

சமீபத்தில் கனடாவில் வாழும் தமிழ்த் தேசிய உணர்வாளப் பெண்மணி சிவவதனி பிரபாகரன் என்பவர் தனது மகளான திவ்யாவின் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்திருந்தார்.

மேலும் அவர் தனது முகநூல் பதிவில் “இரு வீட்டாரினதும் தாய் மண்ணின் பண்பாட்டு விழுமியங்களையும் பின்பற்றி கனடிய மண்ணின் பூர்வ குடியினரின் ஆசிகளைப் பெற்று, இணையர்கள் முதன் முதலில் சந்தித்த இந்த மண்ணின் அதாவது கனடாவில் பழங்குடி மக்களிற்குச் சொந்தமான நிலத்தில் தனது மகளின் திருமணம் இனிதே நடந்தேறியது” என்றும் பதிவிட்டுள்ளார். ஒரு தாயார் தனது மகளின் திருமணத்தையிட்டு பேருவகை கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. சமூக வலைத்தளத்திலேயே குடும்பம் நடத்தும் இக்காலத்தில், சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டமையும் ஒன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. ஆனால் திருமதி சிவவதனி பிரபாகரன் தனது சம்ந்தக்குடி பற்றி தெரிவித்த தகவல்களே சமூக வலைத்தள தமிழ்த் தலிபான்களுக்கு சும்மா மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்தமாதிரி ஆகிவிட்டது.

சிவவதனி அம்மா மகள் திவ்யா காதலித்த ஆபிரிக்க நாடான கொங்கோ நாட்டு இளைஞனை திருமணம் செய்து வைத்தமையை பொறுக்காத தமிழ்த் தலிபான்கள் பின்னூட்டலில் வந்து வசை மாரி பொழிகிறார்கள். அடுத்தவர் வீட்டு படுக்கையறையை எட்டிப் பார்க்க கூடாது என்ற அடிப்படை நாகரீகம் கூடத் தெரியாத பண்பற்ற தமிழ் ஆண்களும் பெண்களும் புதுமணத் தம்பதிகளுக்கு சாபங்களை அள்ளிக் கொட்டுகிறார்கள்.

சம்பந்தப்பட்ட குடும்பத்தின் அனுமதியின்றி தம்பதிகளின் திருமணப் படங்களை பல்வேறு சமூக வலைத்தள போலிக் கணக்குகளில் பகிர்ந்து தமது காழ்ப்புணர்வை உமிழ்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழர்கள் மத்தியில் வேற்று நாட்டவர்களை மணம் புரிதல் என்பது புதிதல்ல. இரண்டாவது தலைமுறையை கடந்து வாழும் புலம்பெயர் தமிழர்கள் இடையே வேறு இனத்தவர்களில் ஆண் மற்றும் பெண் எடுத்தல் சகஜமாக நடந்து தான் வருகிறது. அவ்வாறான திருமணப் படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டும் வருகின்றன. பெரும்பாலான அத்திருமணங்கள் வெள்ளையினத்தவர்களுடான தமிழ்க் கலியாணங்களாக இருக்கின்றன.

வெள்ளையினத்தவர்களுடனான கலப்புத் திருமணங்களுக்கு வராத விமர்சனங்கள், கறுப்பு நிற ஆபிரிக்க இனத்தவர்களுடான திருமணங்களுக்கு வருகின்றன. இது தமிழர்களின் நிற வெறியை வெளிப்படுத்துகிறது. பெரும்பாலும் பளுப்பு நிறமுடைய தமிழர்கள் தங்களை ஆபிரிக்கர்களை காட்டிலும் உயர் இனமாக கருதுகின்றனர். அதனாலேயே வெள்ளை நிறத்தவர்களிடையே ஏற்படும் கலப்பு திருமண பந்தங்களை வரவேற்று கொண்டாடுகின்றனர். அதேநேரம் ஆபிரிக்க இனத்தவரையோ அல்லது வெள்ளையினம் சாராத ஏனைய கலப்புத் திருமணங்களை எள்ளி நகையாடுகின்றனர்.

இன அடக்குமுறைக்கு எதிராக விடுதலை வேண்டிப் போராடிய இனமான ஈழத்தமிழர்கள் நிறவெறி, சாதிவெறி, மதவெறி, பிரதேச வாதம் மற்றும் பெண்ணடிமைத் தனம் என்ற பிற்போக்குத் தனங்களில் இன்னமும் உழல்வது வெட்கக்கேடானது. தாயகத்தை காட்டிலும் புலத்தில் வாழும் தமிழர்களிடையே இவ்வாறான பிற்போக்குத் தனங்கள் மிகுதியாக காணப்படுகின்றன.

கருத்துச் சுதந்திரத்தின் வரையறை தெரியாத காட்டுமிராண்டி சமூகமாக ஈழத்தமிழ்ச் சமூகம் புலம்பெயர் நாடுகளில் வாழ்வது தலைகுனிவானது. சிவவதனி அம்மையார் தனது மகளின் திருமணப் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு தனது மகள் கலப்புத் திருமணம் செய்ததை ஆதரித்தது உண்மையில் வரவேற்க்கத்தக்க செயலாகும். அவர் சொல்ல வந்த செய்தி கணியன் பூங்குன்றனாரின் “ யாதும் ஊரே யாவரும் கேளிர் “ என்பதன்படி தமிழர்கள் சர்வதேசவாதிகள். உலகில் வாழும் அனைவரும் எமது உறவுகளே. அதேநேரம் உலகில் உள்ள அனைத்து ஊர்களும் நமதே என்பதாகும்.

சிவவதனி அம்மையாரின் தூரநோக்கு சர்வதேசப் பார்வையை புரிந்து கொள்ள திராணியற்ற கூட்டமொன்று சமூக வலைத்தளங்களில் குத்தி முறிகிறது. பாலியல் வக்கிரமான சொற்றாடல்களில் பின்னூட்டல்களை இடுகின்றது. அவ்வாறான பின்னூட்டல்களில் பெரும்பாலானவை ஆபிரிக்க மணமகனின் ஆண்குறியை மையமாக கொண்ட வக்கிர கருத்துக்களாக உள்ளன. பெரும்பாலும் இப் பின்னூட்டல்களை இடுபவர்கள் புலம்பெயர் நாடுகளில் வாழும் ஆண்களாகவே உள்ளனர். அவர்களுக்கு தமது ஆண்மையில் இருக்கின்ற குறைபாடுகள் காரணமாகத் தான் ஆபிரிக்க மணமகன் மீது காழ்ப்புணர்வு கொண்டு பாலியல் வக்கிரமான பின்னூட்டல்களை இடுவதாகத் தான் கருத வேண்டியுள்ளது.

ஒரு பெண் யாரைத் திருமணம் செய்ய வேண்டும். யாருடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட பெண் தான் தீர்மானிக்க முடியும். பெண்களின் சுதந்திரம், சமத்துவம் மற்றும் பாதுகாப்பில் கூடுதல் முன்னுரிமை கொடுக்கும் மேற்கு நாடுகளில் அகதிகளாக வந்து தஞ்சம் பெற்று வாழும் தமிழ் ஆண்களுக்கு மேற்கூறிய விடயங்கள் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

பெண்கள் மீதான அத்துமீறல்களில் மற்றும் வன்முறைகளில் ஈடுபடும் ஆண்களுக்கு புலம்பெயர் நாடுகளில் எத்தகைய தண்டனைகள் வழங்கப்படும் என்பதும் தெரிந்திருக்கும். அல்லது தெரிந்து வைத்திருக்க வேண்டும். புலம்பெயர் நாடுகளில் மட்டுமல்ல தாயகத்திலும் பெண்கள் பாதுகாப்புத் தொடர்பில் பல்வேறு சட்டங்கள் மற்றும் அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆகவே சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளில் ஒழிந்து கொண்டு வெட்டி வீராப்பு மற்றும் அவதூறு பரப்புகிறவர்கள் திருந்த வேண்டும். அல்லது திருத்தப்படுவார்கள்.

எழுதியவர்: கங்கா ஜெயபாலன், சமூக சேவைப் பணியாளர், கல்வி: Social Work & Education (University of Niederrhein), சர்வதேச உறவுகள் (அண்ணாமலைப் பல்கலைக்கழகம்), அரசியல் விஞ்ஞானம் (கொழும்புப் பல்கலைக்கழகம்).

https://www.thesamnet.co.uk/?p=113593

யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025

4 weeks ago
வாத்தியார் அண்ணா சுவி த‌லைவ‌ர் கிருபன் பெரிய‌ப்பு செம்பாட்ட‌ன் அண்ணா வாத‌வூரான் ச‌கோ க‌றுப்பி அக்கா ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா வீர‌ப் பைய‌ன் 26 நாங்க‌ள் இந்தியா வெல்லும் என‌ க‌னித்து இருக்கிறோம் மீதம் 7 உற‌வுக‌ள் அவுஸ்ரேலியா வெல்லும் என க‌னித்து இருக்கின‌ம்............... இந்தியாவின் தொட‌க்கம் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம்.......................

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

4 weeks ago
மகளிர் உலகக் கிண்ணம் : இலங்கையை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிகொண்ட இங்கிலாந்து Published By: Vishnu 12 Oct, 2025 | 02:43 AM மகளிர் உலகக் கிண்ண தொடரில் சனிக்கிழமை (11) நடைபெற்ற போட்டியில், இங்கிலாந்து மகளிர் அணி இலங்கை அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 253 ஓட்டங்கள் குவித்தது. அணியின் தலைவி நாட் ஸ்கிவர்-ப்ரன்ட் (Nat Sciver-Brunt) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 117 ஓட்டங்கள் சேர்த்தார். பின்னர், 254 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, எதிரணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு எதிராக தன்னம்பிக்கையுடன் போராடியபோதும், 45.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இலங்கை அணியில் ஹசினி பெரேரா அதிகபட்சமாக 35 ஓட்டங்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227504

சீனாவில் நடைபெறும் பெண்கள் உலகத் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர்

4 weeks ago
சீனாவை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி Published By: Digital Desk 3 12 Oct, 2025 | 01:56 PM சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று ஞாயிற்றுக்கிழமை (12) சீனாவின் பீஜிங் நகரைச் சென்றடைந்தார். பிரதமரை சீனத் தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் திருமதி. கவோ ஷூமின் (Cao Shumin) வரவேற்றார். இந்த விஜயத்தின் முதல் நாளில், பிரதமர் தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவர் ஆகியவற்றைப் பார்வையிட்டார். யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களான தடைசெய்யப்பட்ட நகரம் (அரண்மனை அருங்காட்சியகம்), ஏகாதிபத்தியக் கட்டிடக்கலை ஆகியன தேசிய அளவில் பாதுகாக்கப்பட்டு வரும் தொகுப்பாகும். அத்தோடு, சீனாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுமானக் கலையின் மகிமையை எடுத்துக்காட்டும் சீனப் பெருஞ்சுவரும், சீனாவின் முக்கியமாகப் பாதுகாக்கப்படும் சின்னங்களாகத் திகழ்கின்றன. எதிர்வரும் நாட்களில், பிரதமர் 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதுடன், சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) மற்றும் சீன மக்கள் குடியரசின் அரச சபைப் பிரதமர் லீ சியாங் (Li Qiang) ஆகியோருடன் இருதரப்புக் கலந்துரையாடல்களையும் மேற்கொள்ள இருக்கின்றார். https://www.virakesari.lk/article/227527

தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட அரட்டை என்னும் செயலி

4 weeks ago
வாட்ஸ்அப்-க்கு சவால் அளிக்குமா அரட்டை செயலி? - இந்திய செயலியின் சாதக பாதகங்கள் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியா வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தை, மேலும் இந்தச் செயலி நாட்டில் கிட்டத்தட்ட ஒரு வாழ்க்கை முறையாக உள்ளது. கட்டுரை தகவல் செரிலான் மோலன் பிபிசி நியூஸ்,மும்பை நெயாஸ் ஃபாரூக்கி பிபிசி நியூஸ், டெல்லி 14 நிமிடங்களுக்கு முன்னர் வாட்ஸ்அப் என்ற மாபெரும் போட்டியாளருடன் இந்தியத் தயாரிப்பு மெசேஜிங் செயலி ஒன்று போட்டியிட முடியுமா? கடந்த சில வாரங்களாக, இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ (Zoho) உருவாக்கிய 'அரட்டை' (Arattai) என்ற மெசேஜிங் செயலி நாட்டில் திடீர் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் ஏழு நாட்களில் இந்தச் செயலி 70 லட்சம் பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளதாக நிறுவனம் கூறுகிறது. இருப்பினும், அதற்கான தேதிகளை அது குறிப்பிடவில்லை. சந்தை ஆய்வுகளை மேற்கொள்ளும் சென்சார் டவர் (Sensor Tower) நிறுவனத்தின்படி, ஆகஸ்ட் மாதத்தில் அரட்டையின் பதிவிறக்கங்கள் 10,000க்கும் குறைவாகவே இருந்தன. தமிழில் 'அரட்டை' என்று பொருள்படும் இந்தச் செயலி, 2021 இல் சாதாரணமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பலர் அதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அமெரிக்க வர்த்தக வரிகளால் இந்தியாவில் ஏற்படும் தாக்கத்தின் விளைவாக, மத்திய அரசு தற்சார்பு இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அந்த செயலியின் பிரபலம் திடீரென அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் கடந்த சில வாரங்களாகத் திரும்பத் திரும்பச் சொல்லும் செய்தி இதுதான்: இந்தியாவில் உருவாக்குங்கள், இந்தியாவில் செலவிடுங்கள். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இரண்டு வாரங்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில் அரட்டை செயலி பற்றிப் பதிவிட்டு, மக்களை "தொடர்பில் இருக்க மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலிகளைப் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார். அதன் பின்னர், மேலும் பல அமைச்சர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் அரட்டை குறித்துப் பதிவிட்டுள்ளனர். அரசின் இந்த முயற்சி "அரட்டை செயலியின் பதிவிறக்கங்கள் திடீரென அதிகரிக்க நிச்சயமாக உதவியது" என்று ஸோஹோ நிறுவனம் தெரிவித்துள்ளது. "வெறும் மூன்று நாட்களில், ஒரு நாளைக்கான புதிய பதிவுகள் 3,000 இலிருந்து 3,50,000 ஆக அதிகரித்ததைக் கண்டோம். எங்கள் செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்துள்ளது, அந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது," என்று ஸோஹோ தலைமைச் செயல் அதிகாரி மணி வேம்பு பிபிசியிடம் தெரிவித்தார். இது, பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய உள்நாட்டுத் தயாரிப்பைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைக் காட்டுவதாகவும் அவர் மேலும் கூறினார். செயலியில் உள்ள பயனர்கள் பற்றிய விவரங்களை நிறுவனம் வழங்கவில்லை. இருப்பினும், இந்தியாவில் 50 கோடி மாதாந்திர பயனர்களைக் கொண்டுள்ள மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப்பின் எண்ணிக்கையிலிருந்து அரட்டை செயலி இன்னும் வெகுதொலைவில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியா வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தை. மொத்தமாக குட் மார்னிங் வாழ்த்துகளை அனுப்புவது முதல் தங்கள் வணிகங்களை நடத்துவது வரை மக்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்துவதால், இது கிட்டத்தட்ட ஒரு வாழ்க்கை முறையாகவே நாட்டில் உள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சென்சார் டவர் சந்தை ஆய்வு நிறுவனத்தின்படி, செப்டம்பர் மாதம் அரட்டையின் மாதச் செயலில் உள்ள பயனர்களில் 95%க்கும் அதிகமானோர் இந்தியாவில் இருந்தனர். அரட்டை, வாட்ஸ்அப்பைப் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இது பயனர்கள் செய்திகளை அனுப்பவும், குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது. இரண்டு செயலிகளும் வணிகத்திற்கான ஒரு தொகுப்பு கருவிகளை வழங்குகின்றன. மேலும், வாட்ஸ்அப்பைப் போலவே, அரட்டையும் குறைந்த விலை போன்களிலும் ,மெதுவான இணைய வேகத்திலும் சீராகச் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் கூறுகிறது. பல பயனர்கள் சமூக ஊடகங்களில் அரட்டையைப் பாராட்டி உள்ளனர். சிலர் அதன் இன்டர்பேஸ் மற்றும் வடிவமைப்பு பிடித்திருப்பதாகக் கூறினர். மற்றவர்கள் அது பயன்பாட்டில் வாட்ஸ்அப்பை ஒத்துள்ளது என்று உணர்ந்தனர். பலர் அது இந்தியத் தயாரிப்புச் செயலி என்பதில் பெருமிதம் கொள்வதுடன், மற்றவர்களையும் அதைப் பதிவிறக்கம் செய்ய ஊக்குவித்தனர். அரட்டை, மிகப்பெரிய சர்வதேசப் போட்டியாளர்களை மாற்றீடு செய்யக் கனவு காணும் முதல் இந்தியச் செயலி அல்ல. கடந்த காலத்தில், கூ (Koo) மற்றும் மோஜ் (Moj) போன்ற இந்தியத் தயாரிப்புச் செயலிகள் முறையே எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் டிக்டாக்கிற்கு (2020 இல் இந்திய அரசு சீனச் செயலியைத் தடை செய்த பிறகு) மாற்றாகப் பேசப்பட்டன. ஆனால், ஆரம்ப வெற்றிக்குப் பிறகு அவை பெரிதாக வெற்றி பெறவில்லை. ஒரு காலத்தில் வாட்ஸ்அப்புக்கு மிகப்பெரிய போட்டியாளராகப் பேசப்பட்ட ஷேர்சாட்டும் (ShareChat) கூடத் தனது எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த தொழில்நுட்ப எழுத்தாளரும், ஆய்வாளருமான பிரசாந்தோ கே ராய் கூறுகையில், வாட்ஸ்அப்பின் பரந்த பயனர் தளத்தைப் பிளப்பது அரட்டை செயலிக்குக் கடினமானதாக இருக்கும். குறிப்பாக, மெட்டாவின் கீழ் உள்ள வாட்ஸ்அப் தளத்தில் அதிக எண்ணிக்கையிலான வணிகங்கள் மற்றும் அரசாங்க சேவைகள் செயல்படுகின்றன. அரட்டையின் வெற்றி புதிய பயனர்களை ஈர்ப்பதில் மட்டுமல்ல, அவர்களை தக்கவைத்துக் கொள்வதிலும் தான் உள்ளது. இதை தேசிய உணர்வால் மட்டும் செலுத்த முடியாது என்று அவர் கூறுகிறார். "தயாரிப்பு நன்றாக இருக்க வேண்டும், ஆனால் அப்படி இருந்தாலும், உலகில் ஏற்கனவே கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள ஒரு செயலியை இது மாற்றுவதற்குச் சாத்தியம் அதிகமில்லை," என்று ராய் மேலும் கூறுகிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 2020 இல் தொடங்கப்பட்ட கூ (Koo) செயலி X-க்கு மாற்றாகப் பேசப்பட்டது, ஆனால் அந்தச் செயலி கடந்த ஆண்டு மூடப்பட்டது. அரட்டையில் உள்ள தரவுப் தனியுரிமை (Data Privacy) குறித்தும் சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் செயலி வீடியோ மற்றும் குரல் அழைப்புகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை (E2EE) வழங்கினாலும், செய்திகளுக்கு இந்த அம்சத்தை தற்போது தரவில்லை. "பாதுகாப்புக் காரணங்களைக் கூறி, செய்திகளின் மூலத்தைக் கண்டறிய அரசாங்கம் விரும்புகிறது, இதை எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் இல்லாமல் எளிதாகச் செய்யலாம்," என்று இந்தியாவில் தொழில்நுட்பக் கொள்கை குறித்துப் பதிவிடும் இணையதளமான மீடியாநாமாவின் (MediaNama) நிர்வாக ஆசிரியர் சசிதர் கே.ஜே. கூறுகிறார். ஆனால், இது மக்களின் தனியுரிமையை அபாயத்திற்குள்ளாக்குகிறது என்றும் அவர் மேலும் கூறுகிறார். அரட்டை செயலி, உரைச் செய்திகளுக்கான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்குவதற்காக தீவிரமாகச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளது. "நாங்கள் ஆரம்பத்தில் E2EE உடன் இந்தச் செயலியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டோம், இது இன்னும் இரண்டு மாதங்களில் நடந்திருக்கும்," என்று மணி வேம்பு கூறினார். "இருப்பினும், காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது. மேலும், சில முக்கியமான அம்சங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவை முடிந்தவரை விரைவாகக் கொண்டு வர முயற்சிக்கிறோம்." வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் அழைப்புகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்குகிறது. ஆனால், அதன் கொள்கையின்படி, சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் சூழ்நிலைகளில் அரசாங்கங்களுடன் மெட்டா தரவைப் (செய்தி அல்லது அழைப்புப் பதிவுகள் போன்றவை) பகிர முடியும். இந்தியாவின் இணையச் சட்டங்களின்படி, சமூக ஊடகத் தளங்கள் சில சூழ்நிலைகளில் மத்திய அரசுடன் பயனர் தரவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கோருகின்றன. ஆனால், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து இந்தத் தரவைப் பெறுவது கடினமானது மற்றும் நேரம் எடுக்கும் செயல். மெட்டா மற்றும் எக்ஸ் போன்ற உலகளாவிய பெரு நிறுவனங்கள், நியாயமற்றவை என்று அவர்கள் கருதும் அரசாங்கக் கோரிக்கைகள் அல்லது விதிகளை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட மற்றும் நிதி ஆதாரங்களை கொண்டுள்ளன. 2021 இல், சமூக ஊடகம் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களில் உள்ள உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு எதிராக வாட்ஸ்அப் இந்தியாவில் வழக்குத் தொடர்ந்தது. அவை வாட்ஸ்அப்பின் தனியுரிமைப் பாதுகாப்புகளை மீறுவதாகக் கூறியது. உள்ளடக்கத்தை முடக்குவதற்கான அல்லது நீக்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் அதிகாரங்களுக்கு எதிராக எக்ஸும் சட்ட சவால்களை எழுப்பியுள்ளது. எனவே, பயனர்களின் தனியுரிமை உரிமைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய அரசாங்கக் கோரிக்கைகளை இந்தியத் தயாரிப்பு அரட்டை செயலியால் தாங்கி நிற்க முடியுமா என்று நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர். தொழில்நுட்பச் சட்டம் குறித்துச் சிறப்பு கவனம் செலுத்தும் ராகுல் மத்தன் கூறுகையில், அரட்டையின் தனியுரிமைக் கட்டமைப்பு மற்றும் அரசாங்கத்துடன் பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தைப் பகிர்வது குறித்த ஸோஹோவின் நிலைப்பாடு பற்றி மேலும் தெளிவு வரும் வரை, பலர் அதைப் பயன்படுத்த தயக்கம் காட்டலாம். மத்திய அமைச்சர்கள் இந்தச் செயலியை விளம்பரப்படுத்துவதால், ஸோஹோ அரசுக்கு கடமைப்பட்ட்டிருப்பதாக அந்த நிறுவனம் உணருவதற்கு வாய்ப்புள்ளது என்று ராய் கூறுகிறார். மேலும், நாட்டின் சட்டங்கள் மற்றும் சட்ட அமலாக்கக் கோரிக்கைகளுக்கு இணங்கச் சொல்லும்போது, ஒரு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் அதை வலுவாக எதிர்ப்பது எளிதல்ல என்றும் அவர் கூறுகிறார். அத்தகைய கோரிக்கைகள் வந்தால் அரட்டை என்ன செய்யும் என்று கேட்டபோது, நிறுவனம் "நாட்டின் தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதோடு, தங்கள் தரவின் மீது பயனர்கள் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்" என்று விரும்புவதாக மணி வேம்பு கூறுகிறார். "முழு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வெளியிடப்பட்டவுடன், பயனர் உரையாடல்களின் உள்ளடக்கத்தை நாங்கள் கூட அணுக முடியாது. எந்தவொரு சட்டப்பூர்வ கடமைகளைப் பற்றியும் நாங்கள் எங்கள் பயனர்களுடன் வெளிப்படையாக இருப்போம்," என்று அவர் கூறினார். வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் போன்ற பழக்கத்தை ஏற்படுத்தும் பெரு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் போது, நிலைமை இந்தியச் செயலிகளுக்கு எதிராகவே உள்ளது என்று அனுபவம் காட்டுகிறது. அரட்டை செயலியால் இதில் வெற்றி பெற முடியுமா - அல்லது அதற்கு முன் இருந்த பல செயலிகள் போல மங்கிவிடுமா - என்பதைக் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cjr5rg8wz8vo

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழி பலி தடைக்கு நீதிமன்றம் கூறிய காரணம் என்ன?

4 weeks ago

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழியை பலியிட உயர் நீதிமன்ற தடை விதித்துள்ளது.

படக்குறிப்பு, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழியை பலியிட உயர் நீதிமன்ற தடை விதித்துள்ளது.

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழியை பலியிடுவது, சமைப்பது, அசைவ உணவை எடுத்துச் செல்வது ஆகியவற்றுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அக்டோபர் 10-ஆம் தேதி தீர்ப்பளித்தது.

இவ்வாறு பலியிடுவது என்பது இந்திய அரசின் பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தலங்களின் விதிகளை மீறுவதாக, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலையை, 'சிக்கந்தர் மலை' என அழைப்பதற்கும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக, சிக்கந்தர் தர்கா நிர்வாகிகள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன? இந்திய தொல்லியல் கழகம் கூறியது என்ன?

திருப்பரங்குன்றம் மலையின் மறுபுறத்தில்அமைந்துள்ள  சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்கா.

படக்குறிப்பு, திருப்பரங்குன்றம் மலையின் மறுபுறத்தில்அமைந்துள்ள சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்கா.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் சுப்ரமணிய சுவாமி கோவிலும் சுல்தான் பாதுஷா சிக்கந்தர் அவுலியா தர்காவும் அமைந்துள்ளன.

கடந்த டிசம்பர் மாதம் ராஜபாளையத்தைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவர், தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழிகளுடன் மலையேற முயன்றார்.

அவரைத் தடுத்து நிறுத்திய காவலர்கள், 'மலையில் ஆடு, கோழியை பலியிட அனுமதியில்லை' எனக் கூறினர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு வக்ஃப் வாரிய தலைவராக இருந்த நவாஸ்கனி எம்.பி உள்ளிட்ட நிர்வாகிகள் மலையில் ஆய்வு நடத்தினர்.

அப்போது மலையின் படிக்கட்டில் அமர்ந்து அசைவ உணவு சாப்பிட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தை முன்வைத்து இந்து அமைப்பினர் திருப்பரங்குன்றத்தில் வேல் ஊர்வலம் நடத்தினர்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இதுதொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டன. திருப்பரங்குன்றம் மலையில் விலங்குகளை பலியிடுவதற்கு தடை விதிக்குமாறு இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்டத் தலைவர் சோலைக்கண்ணன் மனுத்தாக்கல் செய்தார்.

மலையில் உள்ள நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்துவதற்குத் தடை விதிக்குமாறு ராமலிங்கம் என்பவரும் கந்தர் மலையை சிக்கந்தர் மலை என அழைப்பதற்கு தடை விதிக்குமாறு பரமசிவம் என்பவரும் மனுத்தாக்கல் செய்தனர்.

தர்கா தரப்பில் நிர்வாகிகள் ஒசிர்கான் மற்றும் அப்துல் ஜப்பார் ஆகியோர், தர்காவில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு அனுமதி கோரியும் பக்தர்களுக்கு சாலை, குடிநீர், கழிப்பறை ஆகிய வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு அனுமதிக்குமாறும் மனுக்களை தாக்கல் செய்தனர்.

மலையை, 'சமணர் குன்று' என அறிவிக்கக் கோரி சுவஸ்தி ஸ்ரீலட்சுமிசேனா பட்டாச்சார்ய மகா சுவாமி என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுக்களை கடந்த ஜூன் மாதம் நீதிபதிகள் ஜே.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

கடந்த டிசம்பர் மாதம் ராஜபாளையத்தைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழிகளுடன் மலையேற முயன்றார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த டிசம்பர் மாதம் ராஜபாளையத்தைச் சேர்ந்த அபுதாஹிர் என்பவர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆடு, கோழிகளுடன் மலையேற முயன்றார்.

முரண்பட்ட நீதிபதிகள்

அப்போது நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, 'மலையை, திருப்பரங்குன்றம் மலை என்றே அழைக்க வேண்டும். சிக்கந்தர் அல்லது சமணர் குன்று என அழைக்கக் கூடாது' என உத்தரவிட்டவர், 'ஆடு, கோழிகளை பலியிடவும் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்தவும் உரிமையியல் நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும்' எனவும் தெரிவித்தார்.

அதுவரை, மலையில் உள்ள தர்காவில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்கு தடை விதித்து நீதிபதி எஸ்.ஸ்ரீமதி உத்தரவிட்டார். மற்றொரு நீதிபதியான நிஷா பானு அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இரு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பை வழங்கியதால் மூன்றாவது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக ஆர்.விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் இடையீட்டு மனு தாக்கல் செய்தது.

படக்குறிப்பு, இந்த வழக்கில் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் இடையீட்டு மனு தாக்கல் செய்தது.

'கந்தர் மலையா.. சிக்கந்தர் மலையா?'

வழக்கின் விசாரணையின்போது சிக்கந்தர் தர்கா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐசக் மோகன்லால், "1923-ஆம் ஆண்டு வெளியான நீதிமன்ற உத்தரவு மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த எந்தவொரு தீர்ப்பிலும் தர்காவின் சடங்குகளுக்கு கோவிலின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை' என வாதிட்டார்.

தர்காவின் சொத்து மற்றும் இறை நம்பிக்கையைப் பின்பற்றுவதற்கான தன்னாட்சி உரிமைகளை நீதிமன்றங்கள் அங்கீகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

"தர்கா அமைந்துள்ள பகுதி சிக்கந்தர் மலை என்று வரலாற்று ரீதியாக அங்கீகரிக்கப்படும் சான்றுகளும் 1886-ஆம் ஆண்டு சர்வே வரைபடங்களும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளன. வருவாய், நீதிமன்ற உத்தரவுகளில் சிக்கந்தர் மலை என்று குறிப்பிடப்பட்டுள்ளன" எனவும் ஐசக் மோகன்லால் கூறினார்.

இந்த வழக்கில் தமிழ்நாடு வக்ஃப் வாரியம் தரப்பில் இடையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், 'பல தர்காக்களில் விலங்குகளை பலியிடும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. நெல்லித்தோப்பு பகுதியில் பல ஆண்டுகளாக தொழுகை நடத்தப்படுகிறது' எனக் கூறினார்.

தர்காவில் மாற்று சமூக மக்களும் விலங்குகளை பலியிடும் நிகழ்வில் பங்கேற்றதாக வாதிடப்பட்டது.

படக்குறிப்பு, தர்காவில் மாற்று சமூக மக்களும் விலங்குகளை பலியிடும் நிகழ்வில் பங்கேற்றதாக வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பில் முன்வைக்கப்பட்டது என்ன?

வழக்கில் காவல்துறை தரப்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீர கதிரவன், "உள்ளூரில் நல்லிணக்கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சில அரசியல் அமைப்புகள் மட்டுமே நல்லிணக்கத்துக்கு இடையூறு விளைவிக்கின்றன" எனக் கூறினார்.

"தர்காவில் மாற்று சமூக மக்களும் விலங்குகளை பலியிடும் நிகழ்வில் பங்கேற்கின்றனர். அப்படியிருக்கும்போது நல்லிணக்கம் பாதிக்கப்படக் கூடாது" எனவும் அவர் வாதிட்டார்.

மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் சார்பாக ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தங்களின் சொத்துகளை எவ்வாறு அனுபவிப்பது என்பதை முடிவு செய்யும் முழு உரிமையும் தர்கா நிர்வாகிகளுக்கு உள்ளதாக வாதிட்டார்.

ஆடு, கோழிகளை பலியிடுதல் என்பது இஸ்லாமியர்களிடையே நிறுவப்பட்டுள்ள மத நடைமுறை என்றார் ரவீந்திரன்

படக்குறிப்பு, ஆடு, கோழிகளை பலியிடுதல் என்பது இஸ்லாமியர்களிடையே நிறுவப்பட்டுள்ள மத நடைமுறை என்றார் ரவீந்திரன்

'இந்து பக்தர்கள் எதிர்ப்பு காட்ட முடியாது'

ஆடு, கோழிகளைப் பலியிடுதல் என்பது இஸ்லாமியர்களிடையே நிறுவப்பட்டுள்ள மத நடைமுறையாக உள்ளதாக வாதிட்ட ரவீந்திரன், "தர்கா வளாகத்தில் பழங்காலத்தில் இருந்தே விலங்குகளை பலியிடுதல் என்பது நடைமுறையாக உள்ளதைக் காட்டும் பதிவுகள் உள்ளன" எனக் கூறினார்.

"நெல்லித்தோப்பு பகுதியானது இஸ்லாமியர்களின் சொத்தாக அறிவிக்கப்பட்ட நிலையில் அங்கு தொழுகை நடத்த வேண்டுமா... இல்லையா என்பதை இந்து பக்தர்கள் எதிர்ப்பு காட்ட முடியாது" எனவும் ரவீந்திரன் வாதிட்டார்.

தொடர்ந்து தனது வாதத்தை முன்வைத்த அவர், "இந்து சமய மற்றும் அறநிலையத்துறையின் நிர்வாக அலுவலர், கோவில் மற்றும் அவரது கட்டுப்பாட்டில் உள்ள சொத்துகள் பற்றி மட்டும் விளக்கம் அளிக்க முடியும்" எனக் கூறினார்.

மலையில் உள்ள நெல்லித்தோப்பு மற்றும் மலை உச்சியில் உள்ள தர்கா ஆகியவை அவரது நிர்வாகத்தின்கீழ் இல்லை எனவும் ரவீந்திரன் தெரிவித்தார்.

முழு மலைப் பகுதியும் தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என ASI வாதம்.

படக்குறிப்பு, முழு மலைப் பகுதியும் தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது என ASI வாதம்.

இந்திய தொல்லியல் கழகம் கூறியது என்ன?

வழக்கில் இந்திய தொல்லியல் கழகத்தின் (ASI) வாதம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டது.

"சிக்கந்தர் தர்காவில் பலியிடுவது நடைமுறையாக இருந்தால் அது இந்திய தொல்லியல் கழகத்தின் சட்டத்தை மீறுவதாகக் கருதப்பட வேண்டும்" என வாதிட்ட இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், "முழு மலைப் பகுதியும் தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. அவை நினைவுச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டும்." எனக் கூறினார்.

தொடர்ந்து அவர் வாதிடும்போது, "மலையில் உள்ள சமண குகைகளை பச்சை வண்ணப்பூச்சைப் பயன்படுத்தி சேதப்படுத்தியது தொடர்பாக காவல்துறையில் தொல்லியல் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்." எனக் குறிப்பிட்டார்.

மலையில் உள்ள பஞ்ச பாண்டவர் படுக்கைகளைப் (Pancha Pandava beds) பாதுகாப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த வக்ஃப் வாரியம், இந்திய தொல்லியல் கழகத்தின் சட்டப்பிரிவு 19, பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களை மட்டும் கையாள்வதாகவும் வழக்கின் நிலவரங்களுக்கு இது பொருந்தாது எனவும் வாதிட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆர்.விஜயகுமார், இந்திய தொல்லியல் கழகத்தின் இரண்டு அறிவிப்புகளை மேற்கோள் காட்டினர்.

சிக்கந்தர் மலை எனக் கூறப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என நீதிபதி தெரிவித்தார்.

படக்குறிப்பு, சிக்கந்தர் மலை எனக் கூறப்பட்டதற்கு ஆதாரம் இல்லை என நீதிபதி தெரிவித்தார்.

தொல்லியல் கழகத்தின் 2 அறிவிப்புகள்

'இந்திய தொல்லியல் கழகம் கடந்த 29.7.1908 மற்றும் 7.2.1923 ஆகிய ஆண்டுகளில் வெளியிட்ட இரு அறிவிப்பில், மலையின் மேற்குச் சரிவில் பஞ்ச பாண்டவர் படுக்கைகள், சிக்கந்தர் மலையின் உச்சியில் மசூதிக்குப் பின்புறம் உள்ள குகை ஆகியவற்றை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளது' எனத் தெரிவித்தார்.

"சிக்கந்தர் மலை எனக் கூறப்பட்டதற்கு ஆதாரம் இல்லை" எனத் தெரிவித்துள்ள நீதிபதி, "தொல்லியல் கழகத்தின் அறிவிப்பில் திருப்பரங்குன்றம் மலை என்றும் அதில் சிக்கந்தர் மசூதி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

லண்டன் ப்ரிவி கவுன்சில் அளித்துள்ள உத்தரவில், 170 ஏக்கர் பரப்பளவுள்ள திருப்பரங்குன்றம் மலையில் 33 சென்ட் அளவுள்ள நெல்லித்தோப்பு மற்றும் சிக்கந்தர் தர்கா தவிர மற்ற பகுதிகள் கோவிலுக்குச் சொந்தமானதாக கூறப்பட்டுள்ளதாக, தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'மலையின் ஒரு சிறிய பகுதியில் மட்டுமே முஸ்லிம்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த மலையையும் சிக்கந்தர் தர்கா பெயரில் அழைக்க வேண்டும் என்பதை ஏற்க முடியாது' எனத் தீர்ப்பில் நீதிபதி ஆர்.விஜயகுமார் கூறியுள்ளார்.

முன்னதாக, தர்காவில் ஆடு, கோழி பலியிடுவதற்கு தடை விதித்து நீதிபதி ஸ்ரீமதி உத்தரவிட்டிருந்தார்.

இந்தத் தீர்ப்பில் உடன்படுவதாகக் கூறியுள்ள நீதிபதி ஆர்.விஜயகுமார், "பழங்காலத்தில் இருந்து மலையில் ஆடு, கோழி பலியிடப்பட்டு வருவதாக தர்கா நிர்வாகம் கூறுகிறது. ஆனால், மனுதாரர்களும் கோவில் நிர்வாகமும் இந்த நடைமுறை இல்லை என்கின்றனர்" என்கிறார்.

மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு விழா காலங்களில் முருகனின் வேல் எடுத்துச் செல்லப்படுகிறது.

படக்குறிப்பு, மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு விழா காலங்களில் முருகனின் வேல் எடுத்துச் செல்லப்படுகிறது.

'பலியிட அனுமதிக்க முடியாது'

"திருப்பரங்குன்றம் மலையில் சுமார் 172.2 ஏக்கர் பரப்பளவை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக இந்திய தொல்லியல் கழகம் அறிவித்துள்ளது. அங்கு விலங்குகளை எந்த நோக்கத்துக்காகவும் கொண்டு செல்லக் கூடாது" என, நீதிபதி ஆர்.விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

சிக்கந்தர் தக்கா மற்றும் நெல்லித்தோப்பு ஆகிய பகுதிகளின் உரிமையாளர்களாக தர்கா நிர்வாகிகள் உள்ளனர்.

"ஆனால் பழங்கால நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்லியல் தளங்கள் விதிகள் 1959ன்படி (Ancient Monuments and Archaeological Sites and Remains Rules, 1959) துறையின் அனுமதியில்லாமல் விலங்குகளை பலியிட அனுமதிக்க முடியாது" என, நீதிபதி கூறியுள்ளார்.

"அதையும் மீறி அனுமதியை வழங்குவது என்பது தொல்லியல் சட்டத்துக்கு எதிரானது. அந்தவகையில் திருப்பரங்குன்றம் மலையில் விலங்குகளை பலியிடுவதற்குத் தடை விதிக்கப்படுகிறது" என, நீதிபதி ஆர்.விஜயகுமார் உத்தரவிட்டுள்ளார்.

தர்கா அமைந்துள்ள பகுதிக்கு நெல்லித்தோப்பு வழியாக சென்றடைய வேண்டும். இப்பகுதி வழியாக மலையில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்கு விழா காலங்களில் முருகனின் வேல் எடுத்துச் செல்லப்படுகிறது.

இதனைக் குறிப்பிட்டுள்ள நீதிபதி, 'சுப்ரமணிய சுவாமி கோவில் மற்றும் காசி விஸ்வநாதர் கோவில் ஆகியவற்றுடன் இந்தப் படிக்கட்டுகள் இணைக்கப்பட்டுள்ளன. நிபந்தனைகளுக்கு உட்பட்டு பாரம்பரிய படிக்கட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நெல்லித்தோப்பில் தொழுகை நடத்தலாம்" எனக் கூறியுள்ளார்.

'நெல்லித்தோப்பில் பிரார்த்தனை நடத்துவதற்கு அனுமதிக்கக் கூடாது' என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரிய மனுவை நீதிபதி நிஷா பானு தள்ளுபடி செய்ததை மூன்றாவது நீதிபதி ஆர்.விஜயகுமார் ஏற்றுக் கொண்டார்.

முடிவில், மூன்று நீதிபதிகளில் இரண்டு பேர் மலையில் ஆடு, கோழிகளை பலியிடவும் சிக்கந்தர் மலை என அழைக்கவும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இந்து அமைப்புகள் மத்தியில் வரவேற்பும் இஸ்லாமிய அமைப்பினர் மத்தியில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.

படக்குறிப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை.

ஆதரவும் எதிர்ப்பும் சொல்வது என்ன?

"காலம்காலமாக நடைபெற்று வந்த வழிபாட்டு உரிமையைத் தடுப்பது என்பது வேதனையைத் தருகிறது" எனக் கூறுகிறார், சிக்கந்தர் தர்காவின் செயற்குழு உறுப்பினர் அல்தாஃப்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இரு தரப்பிலும் பாரம்பரிய வழிபாட்டு உரிமை தொடர வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. ஆனால், ஆடு, கோழியை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது" எனக் கூறுகிறார்.

"தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து தர்காவில் உள்ள கமிட்டி நிர்வாகம் முடிவு செய்யும்" எனவும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாகக் கூறும் இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலைக்கண்ணன், "திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழிகளை பலியிடக் கூடாது என, கடந்த டிசம்பர் மாதம் தமிழ்நாடு அரசின் காவல்துறை தான் தடுத்து நிறுத்தியது" எனக் கூறுகிறார்.

"ஆனால், அதற்கு மாறாக நீதிமன்றத்தில் தர்கா நிர்வாகத்துக்கு சாதகமாக அரசுத் தரப்பு வாதிட்டது. மலையின் புனிதத்தைக் காக்கும் வகையில் ஆடு, கோழிகளை பலியிடக் கூடாது என வாதிட்டோம். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது" எனக் கூறுகிறார், சோலைக்கண்ணன்.

காலம்காலமாக பலியிடும் வழக்கம் இருந்து வந்ததாக தர்கா நிர்வாகிகள் கூறுவது குறித்துக் கேட்டபோது, "தர்காவில் உள்ள சமாதி மட்டும் தான் அவர்களுக்கு சொந்தமானது. மலையின் மேல் விலங்குகளை பலி கொடுக்கும் வழக்கம் இருந்ததில்லை" எனக் கூறுகிறார், சோலைக்கண்ணன்.

மேல்முறையீடு செய்யவுள்ளதாக எம்.பி நவாஸ்கனி கூறுகிறார்.

படக்குறிப்பு, மேல்முறையீடு செய்யவுள்ளதாக எம்.பி நவாஸ்கனி கூறுகிறார்.

'புதிய தடைகளை எதிர்பார்க்கவில்லை' - நவாஸ்கனி

நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்ய உள்ளதாகக் கூறுகிறார், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவரும் ராமநாதபுரம் எம்.பியுமான நவாஸ்கனி.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஆடு, கோழியை பலியிடும் வழக்கம் உள்ளதால் அந்த உரிமையை வழங்குமாறு தான் நீதிமன்றத்தில் கேட்டோம். அங்கு இஸ்லாமியர்கள் மட்டும் நேர்த்திக்கடன் செலுத்தவில்லை. மாற்று சமூத்தினரும் நேர்த்திக் கடன் செலுத்தி வந்துள்ளனர்" என்கிறார்.

"மலையில் ஆய்வு செய்துவிட்டு நடைமுறை இருப்பதாக அறிந்ததால் அதனைத் தொடர்வதற்கு அனுமதிக்குமாறு கோரினோம். ஆனால், புதிய தடைகளை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சட்டரீதியாக இந்த விவகாரத்தை எதிர்கொள்ள உள்ளோம்" எனவும் அவர் தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy4r4ev9ejlo