Aggregator
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சோறு, சப்பாத்தி; சர்க்கரை நோய் பாதிப்பு வராமல் இருக்க எதை சாப்பிட வேண்டும்?
சோறு, சப்பாத்தி; சர்க்கரை நோய் பாதிப்பு வராமல் இருக்க எதை சாப்பிட வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
12 அக்டோபர் 2025, 01:34 GMT
புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்தியர்கள் தங்கள் தினசரி ஆற்றல் தேவைகளில் 62 சதவீதத்தை கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து பூர்த்தி செய்துகொள்வதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கூறுகிறது.
வளர்சிதை மாற்றம் தொடர்பான பிரச்னைகள் குறித்த ஆய்வுக்குப் பின் ICMR இதனை தெரிவித்துள்ளது.
இந்தியர்கள் பெரும்பாலும் தங்கள் ஆற்றலுக்காக சோறு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட தானியங்களைச் சார்ந்திருப்பதாக ஆய்வு கூறுகிறது.
உலகில் உள்ள நீரிழிவு நோயாளிகளில் கிட்டத்தட்ட கால்வாசி பேர் இந்தியாவில் உள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மற்ற நாடுகளை விட அதிகமாகும்.
இந்தியர்கள் தங்கள் அன்றாட ஆற்றல் தேவைகளுக்காக உட்கொள்ளும் உணவில் நிறைவுற்ற கொழுப்பு அதிகமாகவும், புரதம் குறைவாகவும் இருப்பதாக மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஐசிஎம்ஆர் இணைந்து நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்பவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு 22% அதிகம்
கார்போஹைட்ரேட்-க்கும் நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கும் என்ன தொடர்பு?
குறைந்த கார்போஹைட்ரேட்டை உட்கொள்பவர்களை விட அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்ளும் நபர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு 30 சதவீதம் அதிகமாக இருக்கலாம் என நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுகள் கூறுகின்றன.
இவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுவதற்கான வாய்ப்பு 22 சதவீதமும், தொப்பை போடுவதற்கான வாய்ப்பு 15 சதவீதமும் அதிகமாக உள்ளது.
மறுபுறம் கோதுமை, அரிசி அல்லது சோளம் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொருட்களுக்குப் பதிலாக பதிலாக முழு கோதுமை அல்லது சிறுதானிய மாவை பயன்படுத்தினாலும், டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் குறையாது என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் கார்போஹைட்ரேட் பயன்பாடு அதிகமாக இருப்பதை ஆய்வின் சான்றுகள் எடுத்துரைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
"நாடு முழுவதும் உள்ள மக்களின் உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் அவர்கள் தினசரி எடுத்துக்கொள்ளும் ஆற்றலில் 62.3 சதவீதம் பங்களிக்கின்றன. பெரும்பாலான கார்போஹைட்ரேட்டுகள் சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் மற்றும் அரைக்கப்பட்ட முழு தானியங்களில் இருந்து கிடைப்பவை" என்று இந்த ஆய்வின் ஆராச்சியாளர் குறிப்பிடுகிறார்.
"சுத்திகரிக்கப்பட்ட தானியங்களின் பங்கு 28.5 சதவீதமாகவும், முழு தானியங்களின் பங்கு 16.2 சதவீதமாகவும் உள்ளது. மொத்த கொழுப்பு 25.2 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. அதே நேரம் புரதச் சத்து வெறும் 12 சதவீதம் மட்டுமே."

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நாட்டின் மக்கள் தொகையில் 27% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வதை தடுப்பது எப்படி?
மக்களின் உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளின் அளவைக் குறைப்பதும், பால் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளை உட்கொள்வதை அதிகரிப்பதும் வளர்சிதை மாற்ற நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும் என ஆராச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் சுமார் 61 சதவீதம் பேர் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இல்லை, அதாவது அவர்கள் எந்த வகையான உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வதில்லை என்று ஐசிஎம்ஆர் குழு கண்டறிந்துள்ளது.
இதில் 43 சதவீதம் பேர் அதிக உடல் எடையும், 26 சதவீதம் பேர் உடல் பருமனும் கொண்டுள்ளனர்.
உணவு பழக்கம் மற்றும் உடற்பயிற்சிகளை மேம்படுத்துவதால், டைப் 2 வகை நீரிழிவு நோயை 50 சதவீதம் வரை குறைக்கலாம் என முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.
நாட்டின் மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்கிற்கு அதிகமானவர்கள், அதாவது 27% பேர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்தமாக, கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 83 சதவீதம் பேர் குறைந்தது ஒரு வளர்சிதை மாற்ற நோய்க்கான அபாயத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கணக்கெடுப்பின்படி, ஒட்டு மொத்த நாட்டையும் விட கிழக்கு இந்திய மக்கள் நல்ல நிலையில் உள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தினசரி ஆற்றல் தேவையில் 62% கார்போஹைட்ரேட் உணவுகளில் இருந்து கிடைக்கிறது.
நிபுணர்கள் சொல்வது என்ன?
இந்திய உணவுப் பழக்கத்தில் அதிகளவிலான கார்போஹைட்ரேட்களை உட்கொள்வதால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து நிபுணர்களிடம் கேட்டது பிபிசி.
"சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் எளிய கார்போஹைட்ரேட்டுகள் (சர்க்கரை) இரண்டும் நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்பது உண்மை." என டெல்லியில் உள்ள மனித நடத்தை மற்றும் கூட்டு அறிவியல் நிறுவனத்தின் மூத்த உணவியல் நிபுணர் மருத்துவர் விபுதி ரஸ்தோகி கூறினார்.
"ஆனால் குறைந்த புரதம் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் உட்கொள்வது விரைவான பாதிப்பை ஏற்படுத்தும்," என்று அவர் கூறினார்.
"இந்திய உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக உள்ளன, அதனால்தான் இந்தியர்களிடையே நீரிழிவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான உடல்நலப் பிரச்னைகள் அதிகம் காணப்படுகின்றன." என்றார்.
"நீரிழிவு போன்ற பிரச்னைகளை தடுக்க, உணவில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாகவும், புரதம் அதிகமாகவும் இருக்க வேண்டும். உடல் அசைவுகளை அதிகரிப்பதும் முக்கியம்" என்று அறிவுரை கூறுகிறார்.
நீங்கள் சோறு எடுத்துக்கொண்டாலும் சரி, சப்பாத்தி எடுத்துக்கொண்டாலும் சரி, இரண்டிலும் கார்போஹைட்ரேட்கள் உள்ளன.

பட மூலாதாரம், Getty Images
சோற்றை விட சப்பாத்தி சிறந்ததா?
சோற்றை விட சப்பாத்தியில் கார்போஹைட்ரேட் குறைவாக இருப்பதாகவும், அதனால் சப்பாத்தி உடலுக்கு நல்லது என்று பொதுவாக நம்பப்படுகிறது.
"நீங்கள் அதிக நார்ச்சத்துள்ள சப்பாத்தியை சாப்பிட்டால் பரவாயில்லை, ஆனால் நீங்கள் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படும் சப்பாத்தியை சாப்பிட்டால், அதுவும் அரிசியைப் போன்றதுதான். இதை சாப்பிட்ட பிறகும் சர்க்கரை அளவு வேகமாக அதிகரிக்கும்," என 'டயட்டிக்ஸ் ஃபார் நியூட்ரிஃபை டுடே'வின் தலைவரும் மும்பையைச் சேர்ந்த உணவியல் நிபுணருமான நஸ்னீன் ஹுசைன் கூறினார்.
அதிகம் செறிவூட்டப்பட்ட அரிசியை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, ஆனால் செறிவூட்டப்படாத சிறிய அரிசி இந்த விஷயத்தில் சிறந்தது என்றும் அவர் கூறுகிறார்.
நார்ச்சத்தை கவனத்தில் கொண்டு, மருத்துவர்கள் அல்லது உணவியல் நிபுணர்கள் பெரும்பாலும் பழுப்பு நிற அரிசி அல்லது செறிவூட்டப்படாத அரிசியை சாப்பிட அறிவுறுத்துகிறார்கள்.
சோற்றை இறைச்சி, முட்டை, பருப்பு, தயிர், காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவது மற்றொரு முக்கிய அறிவுரை ஆகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் மோதல்கள்
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
நாட்டை வந்தடைந்தார் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம்
நாட்டை வந்தடைந்தார் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம்
Published By: Digital Desk 3
12 Oct, 2025 | 12:27 PM
![]()
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) நாட்டை வந்தடைந்தார்.
டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கட்டார், டோஹாவிலிருந்து இன்றைய தினம் காலை 9:40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் ஓய்வறையில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க அவரை வரவேற்றார்.
கொழும்பில் நடைபெறும் 78வது தென்கிழக்கு ஆசிய பிராந்திய சுகாதார உச்சி மாநாட்டில் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பிரதம விருந்தினராக பங்கேற்க உள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உச்சிமாநாடு 13 ஆம் திகதி முதல் 15 வரை கொழும்பில் நடைபெற உள்ளது.
தென்கிழக்கு ஆசிய பிராந்திய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுகாதார அமைச்சர்களும் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க நாட்டுக்கு வருகை தரவுள்ளனர்.
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மாகாண சபை தேர்தலை நடத்த நாட்டில் சட்டமில்லை - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க
மாகாண சபை தேர்தலை நடத்த நாட்டில் சட்டமில்லை - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க
12 Oct, 2025 | 12:51 PM
![]()
(லியோ நிரோஷ தர்ஷன்)
மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம் ஒன்று இன்றி ஆணைக்குழுவால் செயல்பட இயலாது. நாட்டின் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருந்திருந்தால் மாகாண சபை தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலும் தாமதப்படுத்தப்பட்டிருக்காது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக பரிந்துரைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தல் குறித்த பேச்சுகள் தேசிய அரசியலில் சூடுப்பிடித்துள்ள நிலையில், ஆணைக்குழுவின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் போதே ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
மாகாண சபை தேர்தலை எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு தெரியாது. பாராளுமன்றத்தில் உள்ள 225 பேருக்கு மாத்திரம் தான் தேர்தலை எப்படி நடத்தவது என்று தெரியும். ஏனெனில் மாகாண சபை தேர்தலை எந்த முறைமையில் நடத்த வேண்டும் என்ற சட்டம் தற்போது நாட்டில் இல்லை.
அவ்வாறிருக்கும் போது தேர்தல்கள் ஆணைக்குழுவால் எவ்வாறு தேர்தலை நடத்த முடியும். குறிப்பாக மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்று இன்று கோஷமிடுபவர்கள் 2018 ஆம் ஆண்டில் இருந்து தேர்தலை ஒத்திவைக்கவே நடவடிக்கை எடுத்திருந்தனர். எனவே ஆணைக்குழுவால் ஒன்று செய்ய இயலாது.
தேர்தலை அவசரமாக நடத்த வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் பிரேரனை ஒன்றை நிறைவேற்றினால் போதுமானது. ஆனால் இலங்கையின் தேர்தல்களின் புதிய முன்னேற்றங்கள் குறித்து பேசி விட்டு மீண்டும் பழைமையான முறைமைக்கு செல்வது எதற்கு என்பதை சிந்திக்க வேண்டும். மாகாண சபை தேர்தலை அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக மீண்டும் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமை குறித்து பேசுகின்றனர். அவ்வாறாயின் கலப்பு உறுப்பினர் விகிதாசார அல்லது புதிய தேர்தல் முறைமை குறித்து ஏன் பேச வேண்டும்.
எனவே மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமைக்கு தேர்தல்கள் ஆணைக்குழு காரணமல்ல. சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அரச நிறுவனமாகவே தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளது. சட்டம் ஒன்று இன்றி ஆணைக்குழுவால் செயல்பட இயலாது. நாட்டின் தேர்தல்கள் குறித்து தீர்மானிக்கும் முழுமையான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருந்திருந்தால் மாகாண சபை தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலும் தாமதப்படுத்தப்பட்டிருக்காது என்றார்.
பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு!
"காஸாவில் உள்நாட்டுப் போருக்கான சிறந்த சூழல்" - 7,000 வீரர்களுக்கு ஹமாஸ் அவசர அழைப்பு
"காஸாவில் உள்நாட்டுப் போருக்கான சிறந்த சூழல்" - 7,000 வீரர்களுக்கு ஹமாஸ் அவசர அழைப்பு

பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, காஸா தெருக்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஹமாஸ் வீரர்கள்
கட்டுரை தகவல்
ருஷ்டி அபுவாலூஃப்
காஸா நிருபர்
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
காஸாவில் இஸ்ரேலிய படைகள் பின்வாங்கும் இடங்களில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த தனது பாதுகாப்பு படைகளில் 7000 உறுப்பினர்களை ஹமாஸ் மீண்டும் அழைத்துள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் ராணுவ பின்னணி கொண்ட மூன்று ஆளுநர்களையும் ஹமாஸ் நியமித்துள்ளது, இவர்களில் சிலர் ஹமாஸின் ராணுவ பிரிவுகளுக்கு தலைமை தாங்கியுள்ளனர்.
இந்த உத்தரவு தொலைப்பேசிகள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலம் வழங்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்குள் வீரர்கள் பணிக்கு திரும்புமாறு தெரிவிக்கப்பட்டுள்ள அந்த உத்தரவில் அதன் நோக்கம், "இஸ்ரேலுடன் இணைந்து பணியாற்றுபவர்களையும், விரோதிகளையும் காசாவிலிருந்து சுத்தப்படுத்துதல்." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்வேறு மாவட்டங்களிலும் ஆயுதமேந்திய ஹமாஸின் பிரிவுகள் பணியமர்த்தப்பட்டுள்ளதாக காஸாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களில் சிலர் பொதுமக்கள் உடைகளிலும், மற்றவர்கள் காஸா காவல்துறையின் நீல சீருடையிலும் இருந்தனர்.
காஸா நகரின் சப்ரா பகுதியில் ஹமாஸ் சிறப்பு படைகளைச் சேர்ந்த இருவர் துக்முஷ் பிரிவைச் சேர்ந்தவர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது பதற்றத்தை மேலும் அதிகரித்தது. கொல்லப்பட்ட இருவரில் ஒருவர் ஹமாஸின் ஆயுதப் பிரிவின் மூத்த தளபதியான இமாத் அகெலின் மகன் ஆவார். இமாத் தற்போது ஹமாஸின் ராணுவ உளவுப்பிரிவின் தலைவராக உள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
தெருக்களில் விட்டுச் செல்லப்பட்ட அவர்களின் உடல்கள் ஹமாஸிடம் கோபத்தை அதிகரித்து பெரிய ராணுவ பதிலடிக்கான சாத்தியங்களை அதிகரித்தது.
பின்னர் 300 ஆயுதமேந்திய துக்முஷ் குழுவைச் சேர்ந்தவர்கள் மெஷின் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இருந்ததாக நம்பப்பட்ட இடத்தை ஹமாஸ் உறுப்பினர்கள் சுற்றி வளைத்தனர்.
இன்று காலை துக்முஷ் குழு உறுப்பினர் ஒருவரைக் கொன்ற ஹமாஸ் மேலும் 30 பேர் சிறைபிடித்துள்ளது.
இந்தக் குழுவின் ஆயுதங்கள் சில போரின்போது ஹமாஸின் கிடங்குகளிலிருந்து களவாடப்பட்டவை. மற்ற ஆயுதங்கள் பல வருடங்களாக இந்தக் குழுவின் கட்டுப்பாட்டில் இருந்தவை.
போர் முடிந்த பிறகு காஸாவை யார் ஆட்சி செய்வார்கள் என்பதில் நிச்சயமற்றத்தன்மை நிலவி வரும் சூழலில் ஹமாஸின் அணிதிரட்டல் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.
டிரம்பின் அமைதி திட்டத்தில் இரண்டாவது கட்டத்தை சிக்கலாக்கக்கூடிய முக்கியமான பிரச்னை இது தான். ஹமாஸ் ஆயுதத்தை கைவிட வேண்டும் என டிரம்பின் அமைதி திட்டம் கூறுகிறது.

பட மூலாதாரம், Getty Images
வெளிநாட்டில் உள்ள ஹமாஸ் அதிகாரி ஒருவர் சமீபத்திய படை குவிப்பு பற்றி நேரடியாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டு பிபிசியிடம் பேசுகையில், "இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் பின்னணியில் இருக்கும் கொள்ளையர்கள் மற்றும் ஆயுதமேந்தியவர்களின் கருணையில் நாங்கள் காஸாவை விட்டுவிட முடியாது. எங்களின் ஆயுதங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான சட்டப்பூர்வமானவை. ஆக்கிரமிப்பு உள்ளவரை ஆயுதங்கள் எங்களிடம் இருக்கும்." எனத் தெரிவித்தார்.
காஸாவில் பாலத்தீன அதிகார சபைக்காக பணியாற்றிய முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காஸா மீண்டுமொரு உள்நாட்டு சண்டையை நோக்கி நகர்வதாக அஞ்சுகிறேன் எனத் தெரிவித்தார்.
"ஹமாஸ் மாறவே இல்லை. தற்போதும் கூட ஆயுதமும் வன்முறையும் தான் அதன் இயக்கத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதற்கான வழி என நம்புகிறது," என பிபிசியிடம் தெரிவித்தார்.
"காஸா ஆயுதங்களால் நிறைந்திருக்கிறது. போரின்போது திருடர்கள் ஆயிரக்கணக்கான ஆயுதங்களையும் குண்டுகளையும் ஹமாஸிடமிருந்து திருடிச் சென்றுள்ளனர். அதில் சில குழுக்களுக்கு இஸ்ரேலிடமிருந்து கூட ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது."
"ஆயுதங்கள், கோபம், ஏமாற்றம், குழப்பம் மற்றும் பிளவுபட்ட மற்றும் நொந்து போயிருக்கும் மக்கள் திரள் மீது கட்டுப்பாட்டைச் செலுத்த துடியாக இருக்கும் ஒரு இயக்கம் - உள்நாட்டு போருக்கான சிறந்த சூழல் இது தான்." எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஹமாஸ் தனது கட்டுப்பாட்டை விட்டுக் கொடுப்பதை ஏற்றுக்கொள்ளுமா அல்லது திட்டத்தை செயல்படுத்துவதற்கு முட்டுக்கட்டை போடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கிறார் காஸாவை மையமாக கொண்ட மனித உரிமைகள் வழக்கறிஞர் கலீல் அபு ஷம்மலா.
"தற்போது உள்நாட்டு சண்டைக்கான அனைத்து சூழல்களும் இருப்பதால் காஸா மக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் அச்சத்தில் உள்ளனர்." எனத் தெரிவிக்கிறார் கலீல்.
தீவிர அழுத்தத்தின் காரணமாக தான் ஹமாஸ் அமைதி திட்டத்தை ஏற்றுக்கொள்ள நிர்பந்திக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் அவர், "பாதுகாப்பு விவகாரங்களில் தலையிடுவது உட்பட எந்த வழியிலாவது தனது செல்வாக்கை தக்க வைப்பதற்கான அதன் தொடர் முயற்சிகள் ஒப்பந்தத்தை சீர்குலைத்து காஸா மக்களை மேலும் துயரத்திற்கு இட்டுச் செல்லும் என நம்புகிறேன்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு