Aggregator
வாழைப்பூ வடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
மின்னல் எச்சரிக்கை!!
மின்னல் எச்சரிக்கை!!
நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 10, 2025 1 Minute
டிட்வா புயல் மற்றும் மண்சரிவினால் பலர் இறந்த நிலையில் இலங்கையில் மீண்டும் வடகீழ் பருவ மழை தொடங்கியுள்ளது இந்நிலையில் நாளாந்தம் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடப்படுகின்றது. இந்நிலையில் மின்னலின் தாக்கத்தினால் வருடாந்தம் 30 தொடக்கம் 50 பேர்கள் இலங்கையில் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவுகின்றனர். மேலும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் தனி நபர்களின் இறப்புக்கள் பெரிதான சமூக கவனத்தினை ஈர்ப்பதில்லை அத்துடன் பல சந்தர்ப்பங்களில் இத்தரவுகள் தேசிய ரீதியான தரவுகளுக்கு செய்வதில்லை. இதன் காரணமாகவே வருடாந்தம் மின்னலின் தாக்கத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காட்டபட்டுள்ளது.
பொதுவாக மின்னலினால் இறப்பவர்கள் வயல், கடற்கரை போன்ற திறந்த வெளிகளில் வேலை செய்பவர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையில் இவ்வாறு திறந்த வெளியில் வேலை செய்பவர்கள் எவ்வாறு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம் என்பதினை இப்பதிவு விளக்குகின்றது.

வெளிவேலைகளுக்கு செல்வதற்கு முன்பாக அன்றைய தினத்திற்குரிய வானிலை அறிக்கையினை கவனத்தில் கொள்ளல் நன்று. இடி மற்றும் மின்னல் பற்றிய எச்சரிக்கை இருப்பின், அந்த வேலையினை அல்லது பயணத்தினை ஒத்திப்போடுவது சிறந்தது.
இடி இடிக்கும் பொழுது அருகில் உள்ள சீமேந்திலால் ஆன கட்டிடங்களுக்குள் செல்லவும். அல்லது வாகனங்களில் உள்ளே இருந்தவாறு கண்ணாடிகளை மூடிக்கொள்ளலாம். மேலும் தகரக்கூரை உடைய கட்டிடங்களை தவிர்க்க வேண்டும்.
உயரமான மலைப்பகுதியில் அல்லது மேடான பகுதியில் இருந்தால் உடனடியாக சமவெளி பகுதி நோக்கி உடனடியாக நகர வேண்டும்.
சமவெளி அல்லது வயல் வெளி பகுதியில் இருந்தால் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு செல்ல வேண்டும். மரங்களுக்கு கீழே செல்ல கூடாது. பொதுவாக மக்கள் மின்னலுடன் மழையும் பெய்யும் சந்தர்ப்பத்தில் மழையில் இருந்து தப்புவதற்காக மரத்தின் கீழ் ஒதுங்குவதினை தவிர்க்க வேண்டும்.
ஆறு மற்றும் குளம் போன்ற நீர்நிலைகளில் இருந்தால் உடனடியாக வெளியேற வேண்டும். அவ்வாறே ஈரலிப்பான நீர் நிறைந்த வயல் வெளிகளில் இருந்தாலும் உடனடியாக வெளியேற வேண்டும். சில சந்தர்ப்பங்களில் இவ்வாறு வெளியறவே ஒருசில மணித்தியாலங்கள் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. அருகில் உள்ள காய்ந்த நிலப்பரப்பிற்கு செல்லவேண்டும்.
தரையில் படுத்த நிலையில் இருந்தால் மின்னல் தாக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
30/30 என்ற விதியினை கைக்கொள்வது நன்று. அதாவது மின்னலினை கண்டபின் 30 இலக்கம் எண்ணுவதற்குள் இடி ஓசை கேட்குமானால்(அதாவது அவர்களிற்கு அண்மையிலேயே மின்னல் தாக்கம் நடைபெறவுள்ளது) மின்னல் பாதுகாப்பான இடங்களிற்கு செல்ல வேண்டும் அதன் பின்னர் கடைசி இடி ஓசை கேட்டு 30 நிமிடங்களின் பின்னரே வெளியே வர வேண்டும் (இடி ஓசை நின்ற பின்னரும் மின்னல் தாக்கம் நிகழ வாய்ப்புள்ளது).
மின்சாரத்தினை கடத்தும் வயர்களுக்கு, உலோக கம்பிகளுக்கு மற்றும் எதாவது உலோக பொருட்களுக்கு அருகாமையில் நிற்றல் அல்லது அவற்றினை தொடுகையில் வைத்திருத்தல் நல்லது அல்ல.
இவ்வாறே கைத்தொலை பேசி, நிரந்தர தொலைபேசி மற்றும் ஏனைய மின்சாதனங்களை இடி மின்னலின் பொழுது கையாழ்வது ஆபத்தினை விளைவிக்கும்.
மரத்தடியில், குறிப்பாக தனியாக உள்ள மரத்தடியில் ஒதுங்க கூடாது.
திறந்த வெளியில் அல்லது வயல் வெளியில் நின்றிருந்தால் , கால்கள் இரண்டையும் மடக்கி குத்தி ,கைகளால் கால்களை சுற்றி, கைகளினால் காதுகளை மூடி கண்களை மூடி, தலை கவிழ்ந்த நிலையில் அமரவேண்டும். இவ்வாறு செய்யவது மின்னல் தாக்கும் பரப்பினை குறைக்க உதவும்.
இடி இடிக்கும் பொழுது குழுவாக இருந்தால் உடனடியாக பிரிந்து செல்ல வேண்டும். இதனால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறைவாக இருக்கும்.
இறப்பர் செருப்புக்களோ வாகனங்களின் ரயர்களோ மின்னலின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பினை தராது.

அண்மையில் மின்னலிடம் இருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்று தமிழில் ஓர் முகப்புத்தக பதிவில் மின்னல் தாக்குவதற்கு முன்னர் குறித்த நபர்களின் தலைமயிர் செங்குத்தாக எழும்பி நிற்கும், உடலில் மெல்லிய கிச்சு கிச்சு மூட்டுவது போன்ற உணர்வு, ஓசோன் மணம் போன்றன ஏற்படும் எனவும் அதனை அறிந்து நிலத்தில் கால்களை மடித்து குந்தியிருந்து மின்னலில் இருந்து தப்பிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது உண்மையா?
உண்மையில் மேற்குறித்த அறிகுறிகள் அனைத்துமே மின்னல் தாக்குவதற்கு சில மில்லி செக்கன்களுக்கு முன்னர் ஏற்படும். மின்னல் தாக்குதலில் தப்பி பிழைத்தவர்கள் மேற்குறித்த அறிகுறிகளை உணர்ந்திருக்கின்றார்கள். ஆனால் முக்கிய விடயம் மின்னல் ஒரு செக்கனில் 300 மைல்கள் பிரயாணிக்கும் மேலும் மேற்படி அறிகுறிகள் தென்பட்டவுடன் ஒருசில சில மில்லி செக்கனில் மின்னல் தாக்கும் (ஒரு செக்கன் காலத்தினை ஆயிரத்தினால் பிரித்து வருவதே ஒரு மில்லி செக்கன்) எனவே மேற்படி அறிகுறிகளை வைத்துக்கொண்டு மின்னலின் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியாது.
மேலும் தற்காலத்தில் ChatGPT இடம் கேள்வி கேட்டால் எல்லாவற்றிற்கும் மறுமொழி கிடைக்கும். மேற்படி பதிவும் அவ்வாறே துறை சார்ந்த நிபுணர் அல்லாத ஒருவரினால் எழுதப்பட்டது முக்கியமாக ஆங்கிலத்தில் கூறப்பட்ட Prewarning ,Impending (Prewarning: The noun or verb (as “prewarn”) refers to the action of warning someone in advance or beforehand. It’s about giving notice early enough to allow for preparation or avoidance) (Impending: An adjective meaning “about to happen” or “imminent”. The word implies inevitability and closeness in time). ஆகியவற்றிக்கு உரிய விளக்கமின்மையினால் சாதாரண பொதுமக்களினை ஆபத்தில் மாட்டிவிடும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
பல சந்தர்ப்பங்களில் ஊடகங்களில் “இடி” தாக்கியதால் உயிரிழந்தார் என்ற செய்தி வருகின்றதே அவ்வாறாயின் மின்னல் தாக்கவில்லையா? எது உண்மையானது
சுருக்கமாக சொல்வதானால் இருவேறு ஏற்றம் கொண்ட முகில்களுக்குக்கிடையே இடையே அல்லது முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே கோடிக்கணக்கான ஏற்றங்கள் பாயும் பொழுதே மின்னல் உருவாகின்றது. முக்கியமாக ஏற்றம் கொண்ட முகில் – பூமியின் மேற்பரப்புக்கு இடையே உருவாகும் பொழுது அது மனிதனை தாக்குகின்றது. மின்னல் ஆனது காற்றில் ஒரு கீற்று வெளியின் ஊடாக பாயும் பொழுது சூழவுள்ள வளி அதாவது காற்று மிக அதிகளவு வெப்பமடைந்து விரிவடைகின்றது, இதன் காரணமாக வெடிப்பு ஏற்படுகின்றது. இங்கு ஏற்படும் வெப்பமானது (30,000–50,000°C)சூரிய மேற்பரப்பு வெப்பநிலையினை விட அதிகமாக இருக்கும். மேலும் இவ்வெடிப்பு காரணமாக பாரிய சத்தம் மற்றும் வெடிப்பு/அதிர்ச்சி அலை உருவாகும். மின்னலும் இடியும் ஒரே நேரத்தில் உருவாகும் எனினும் மின்னல் (ஒளி ) அதிவேகமாக பிரயாணிப்பதால் (300,000 km/s ) முதலில் உணரப்படுகின்றது. இடியின் வேகம் (ஒலி ) 340m /s என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மையில் மின்னல் தாக்கத்தின் பொழுது ஏற்படும் அதிக அழுத்த மின்சாரம், அதிர்ச்சி அலை மற்றும் அதிக வெப்பம் ஆகிய மூன்றும் மனிதனுக்கு மரணத்தினை உண்டாக்குகின்றது. பிரதானமாக மின்னலின் விளைவாகவே இடி உண்டாகின்றது எனவே மின்னல் தாக்குதலினால் இறந்தார் என்று குறிப்பிடுவதே சாலப் பொருத்தமானது ஆகும்.
மின்னல் தாக்குவதை 45 நிமிடங்கள் முன்பே கணிக்கும் தொழில்நுட்பம்
இடியும் மின்னலும் எங்கே தாக்கும் என்பதை முன்கூட்டியே கணித்துவிட்டால், இந்த உயிரிழப்புகளைத் தவிர்க்க முடியும்தானே. அதற்கான ஒரு தொழில்நுட்பத்தை பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இடி-மின்னல் பயணிக்கும் பாதையை உடனுக்குடனே மேப்பில் டிராக் செய்ய முடியும். இந்த நொடி மின்னல் எந்த இடத்தில் பயணிக்கிறது என்று பார்க்க முடியும் என்பது மட்டுமில்லாமல், துல்லியமாக எந்த கிராமத்தை மின்னல் தாக்கப் போகிறது என்பதை 45 நிமிடம் முன்னதாகவே கணிக்க முடியும். ஆனாலும், உயிரிழப்புகளைத் தடுப்பது இன்னும் சவாலானதாகவே இருக்கிறது. குறிப்பிட்ட ஊருக்கு எச்சரிக்கையை அனுப்பிவிட முடியும் என்றாலும், அந்த ஊரிலேயே தனிமையான வயல்வெளிகளில் வேலை செய்கிறவர்கள், நடந்து செல்கிறவர்கள், செல்பேசி இல்லாதவர்கள் போன்றவர்களை எப்படி 45 நிமிடத்துக்குள் தொடர்புகொண்டு எச்சரிப்பது என்பதே சவாலான பணி.
முற்றும்
மின்னல் எச்சரிக்கை!!
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
11 Dec, 2025 | 05:20 PM
![]()
பொலிஎக்யியல் எம்ஆர்ஐ இணக்க (டயிடேனியம்ஃகொபோல்ட் - குறோம்) லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
முதுகெலும்பு சார்ந்த சத்திரசிகிச்சைகளில் முதுகெலும்பை உறுதியாகப் பேணுவதற்கும், தொடர்புபடுத்தலை விருத்தி செய்வதற்கும், முதுகெலும்பு சார்ந்த இயலாமைகள்/ விகாரமடைந்துள்ள நிலைமைகளுடன் செயலாற்றுவதற்கும், என்பு முறிவு மற்றும் ரியூமர் இற்கான சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொலிஎக்யியல் எம்ஆர்ஐ இணக்க (டயிடேனியம்ஃகொபோல்ட் - குறோம்) லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான விநியோகிப்பதற்கான சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 03 விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் கணிசமான பதிலளிப்புக்களை வழங்கிய ஒரோயொரு விலைமனுதாரரான இலங்கையின் யுvenierr Pharma (Pvt) Ltd. (Manufacturer : Miraclus Orthotech (Pvt) Ltd. India) இற்கு வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கோவாவில் விடுதியொன்றில் தீ விபத்து – 25 பேர் உயிரிழப்பு!
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை கிரிக்கெட் நன்கொடை
மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50 மெகாவாற்று காற்றாலை மின்சார நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50 மெகாவாற்று காற்றாலை மின்சார நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50 மெகாவாற்று காற்றாலை மின்சார நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி
11 Dec, 2025 | 05:27 PM
![]()
மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் 2 நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
2030 ஆண்டளவில் நாட்டுக்கான மின்சார வழங்கலின் 70மூ மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களிலிருந்து பூர்த்தி செய்யும் குறிக்கோளை அடைவதற்கான அரசின் விரிவான திட்டத்துக்கமைய 20 ஆண்டு தொழிற்பாட்டு காலப்பகுதியில் நிர்மாணித்தல், உரித்தை கொண்டிருத்தல் மற்றும் அமுல்படுத்துதல் அடிப்படையில் 100 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்திப் பூங்கா (தலா 50 மெகாவாற்று கொண்ட 02 மின்னுற்பத்தி நிலையங்கள்) திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தனியார் துறையின் ஆர்வமுள்ள அபிவிருத்தியாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை கோருவதற்காக 2025-02-10 திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய, சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் முறைமையை பின்பற்றி மேற்குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கான முன்மொழிவு கோரப்பட்டு, ஏழு பேர் (7) தமது திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளார்கள்.
மேற்குறித்த முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் Consortium of Vidullanka PLC & David Pieris Motor Company (Lanka) Limited kw;Wk; Wind Force PLC ஆகியவற்றுக்கு மேற்குறித்த இரண்டு (2) 50 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்தி வசதிகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
அமெரிக்க விசா பெற புதிய நிபந்தனை - 5 ஆண்டு சமூக வலைத்தள வரலாறு சரிபார்க்கப்படலாம்
அமெரிக்க விசா பெற புதிய நிபந்தனை - 5 ஆண்டு சமூக வலைத்தள வரலாறு சரிபார்க்கப்படலாம்
அமெரிக்க விசா பெற புதிய நிபந்தனை - 5 ஆண்டு சமூக வலைத்தள வரலாறு சரிபார்க்கப்படலாம்

பட மூலாதாரம்,Alex Wong/Getty Images
படக்குறிப்பு,டொனால்ட் டிரம்ப்
கட்டுரை தகவல்
ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்
11 டிசம்பர் 2025, 07:05 GMT
பிரிட்டன் உட்பட பல நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள், அமெரிக்காவில் நுழைவதற்கான நிபந்தனையாக அவர்களின் ஐந்து ஆண்டு சமூக ஊடக வரலாற்றை வழங்க வேண்டிய சூழல் உருவாகலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் வெளியிட்டுள்ள புதிய திட்டம் கூறுகிறது.
இந்த புதிய நிபந்தனை, விசா இல்லாமல் 90 நாட்களுக்கு அமெரிக்காவிற்குச் செல்லத் தகுதியுள்ள பல நாட்டு மக்களைப் பாதிக்கும்.
ஆனால் அவர்கள் பயண அங்கீகாரத்திற்கான மின்னணு அமைப்பு (Electronic System for Travel Authorization - ESTA) படிவத்தை நிரப்பியிருக்க வேண்டும்.
ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றதில் இருந்து, டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்பைக் காரணமாகக் கூறி, அமெரிக்க எல்லைப் பகுதிகளை மேலும் கடுமையாக்க பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்தத் திட்டம், அங்கு வரக்கூடிய பயணிகளுக்கு ஒரு தடையாக அமையலாம் அல்லது அவர்களின் டிஜிட்டல் உரிமைகளைப் பாதிக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தத் திட்டம் அமெரிக்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சிக்கு வழிவகுக்குமா என்று கேட்கப்பட்டபோது, டிரம்ப் அதுகுறித்து கவலைப்படவில்லை என்று கூறினார்.
புதன்கிழமையன்று இந்த விவகாரம் தொடர்பாக அவர் பேசுகையில், "இல்லை. நாங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறோம்"என்றார்.
மேலும், "நாங்கள் மக்கள் இங்கு பாதுகாப்பாக வர வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். நாங்கள் பாதுகாப்பை விரும்புகிறோம். பாதுகாப்பு ஏற்பாடுகளை விரும்புகிறோம்" என்றும், "தவறான நபர்கள் எங்களது நாட்டுக்குள் நுழைய அனுமதியில்லை என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்," என்றும் குறிப்பிட்டார்.
அமெரிக்கா அடுத்த ஆண்டு கனடா மற்றும் மெக்சிகோவுடன் இணைந்து ஆண்களுக்கான கால்பந்து உலகக் கோப்பையை நடத்துகிறது, மேலும் 2028-இல் லாஸ் ஏஞ்சலிஸில் ஒலிம்பிக் போட்டியை நடத்துகிறது. இதனால் அடுத்த ஆண்டு பெரும் எண்ணிக்கையிலான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) மற்றும் அதன் அங்கமான சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு முகமை (CBP) ஆகியவற்றால் தாக்கல் செய்யப்பட்ட இந்தத் திட்ட ஆவணம், அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழான ஃபெடரல் பதிவேட்டில் வெளியிடப்பட்டது.

பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,டிரம்ப் எல்லைக் கட்டுப்பாட்டை கடுமையாக்கியுள்ளார் (கோப்புப் படம்)
இந்த முன்மொழிவு, "ஈஎஸ்டிஏ (ESTA) விண்ணப்பதாரர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கான தங்கள் சமூக ஊடக விவரங்களை வழங்க வேண்டும்" என்று கூறுகிறது. இருப்பினும், எந்தெந்த குறிப்பிட்ட தகவல்கள் தேவைப்படும் என்பது குறித்த கூடுதல் விவரங்களை அது வழங்கவில்லை.
தற்போதுள்ள ஈஎஸ்டிஏ படிவத்தை நிரப்புவதற்கு, பயணிகள் ஒப்பீட்டளவில் குறைவான தகவல்களையும், ஒருமுறை செலுத்த வேண்டிய கட்டணமாக 40 டாலர் (30 பவுண்டு) கட்டணத்தையும் செலுத்த வேண்டும்.
இது பிரிட்டன், அயர்லாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உட்பட சுமார் 40 நாடுகளின் குடிமக்களுக்குக் கிடைக்கிறது. மேலும், குறிப்பிட்ட அந்த நாடுகளின் குடிமக்கள், ஈஎஸ்டிஏ மூலம் விண்ணப்பித்து, இரண்டு வருடத்தில் பலமுறை அமெரிக்கா செல்லும் அனுமதியைப் பெற முடியும்.
சமூக ஊடகத் தகவல்களைச் சேகரிப்பதுடன், கடந்த ஐந்து மற்றும் பத்து ஆண்டுகளில் விண்ணப்பதாரர் பயன்படுத்திய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களையும் சேகரிக்க இந்தப் புதிய திட்டம் முன்மொழிகிறது.
"வெளிநாட்டு பயங்கரவாதிகள் மற்றும் பிற தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து அமெரிக்காவைப் பாதுகாத்தல்," என்ற தலைப்பில் ஜனவரி மாதம் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவை இந்த திட்டம் மேற்கோள் காட்டுகிறது.
சுற்றுலா பயணிகளுக்கான ஈஎஸ்டிஏ தரவு சேகரிப்பு தொடர்பான புதிய திட்டம், 60 நாட்களுக்கு பொதுமக்களின் கருத்துகளை வரவேற்கிறது.
இது குறித்து சிபிபி-ன் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், "அமெரிக்காவிற்கு வருபவர்களுக்கு இந்த விஷயத்தில் எதுவும் மாறவில்லை" என்றும்,
"இது ஒரு இறுதி விதி அல்ல, அமெரிக்க மக்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க புதிய கொள்கை வாய்ப்புகளைப் பற்றி ஒரு விவாதத்தைத் தொடங்க இது ஒரு முதல் படி மட்டுமே," என்றும் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் உரிமைகள் அமைப்பான எலெக்ட்ரானிக் ஃபிரான்டியர் பவுண்டேஷனைச் (Electronic Frontier Foundation) சேர்ந்த சோபியா கோப், இந்தத் திட்டத்தை விமர்சித்து, இது "சிவில் உரிமைகளுக்கு அதிகத் தீங்கு விளைவிக்கும்" என்று நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்தார்.
இதற்கிடையில், குடியேற்றச் சட்ட நிறுவனமான ஃப்ராகோமன் (Fragomen), விண்ணப்பதாரர்கள் ஈஎஸ்டிஏ அனுமதிக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகக்கூடும் என்பதால், நடைமுறையில் சில தாக்கங்கள் இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம்,Getty Images
படக்குறிப்பு,இந்தத் திட்டம் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்களைப் பாதிக்கும்
டிரம்ப் நிர்வாகம் இதற்கு முன்னர், மாணவர் விசாக்களுக்கும், திறன்மிகு தொழிலாளர்களுக்கான ஹெச் -1பி விசாக்களுக்கும் விண்ணப்பிக்கும் வெளிநாட்டினரை பரிசோதிக்கும்போது அவர்களின் சமூக ஊடக கணக்குகளை ஆய்வு செய்யும் என்று அறிவித்தது.
விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களின் "ஆன்லைன் இருப்பு" (online presence) குறித்து மதிப்பாய்வு செய்யப்படும் என்றும், இந்தச் சோதனை நடைபெறுவதற்காக அனைத்து சமூக ஊடக சுயவிவரங்களின் தனியுரிமை அமைப்புகளும் "பொது" (public) நிலையில் வைக்கப்பட வேண்டும் என்றும் வெளியுறவுத் துறை கூறியது.
மெக்சிகோவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மற்றும் துணைத் தூதரகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், குறிப்பிட்ட விசா விண்ணப்பதாரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்திய அனைத்து சமூக ஊடக தளங்களின் பயனர் பெயர்கள் அல்லது 'ஹேண்டில்களையும்' (usernames or handles) பட்டியலிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சமூக ஊடகத் தகவல் ஏதாவது பட்டியலிடப்படாவிட்டால், அது தற்போதைய மற்றும் எதிர்கால விசாக்கள் மறுக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் அது எச்சரிக்கிறது.
மாணவர் விசா கொள்கை குறித்து ஒரு மூத்த வெளியுறவுத் துறை அதிகாரி கூறுகையில்: "தங்கள் அரசாங்கம் நமது நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என்று அமெரிக்க குடிமக்கள் எதிர்பார்க்கிறார்கள், அதைத்தான் டிரம்ப் நிர்வாகம் ஒவ்வொரு நாளும் செய்து வருகிறது," என்றார்.
"குறிப்பிட்ட வெளிநாட்டுப் பயங்கரவாதிகள் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு எதிரான பிற அச்சுறுத்தல்களுக்கு உதவுபவர்கள் அல்லது ஆதரவளிப்பவர்கள், அல்லது சட்டவிரோதமான யூத எதிர்ப்பு துன்புறுத்தல் அல்லது வன்முறையைச் செய்பவர்களை" சோதனை செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அமெரிக்க நிர்வாகத்தின் எல்லைகளைக் கடுமையாக்கும் விரிவான முயற்சியின் ஒரு பகுதியாக, ஆப்ரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் கரீபியன் பகுதிகளில் உள்ள 19 நாடுகளைப் பாதிக்கும் தற்போதைய பயணத் தடை விரைவில் விரிவுபடுத்தப்படலாம் என்று அதிகாரிகள் சமீபத்தில் தெரிவித்தனர்.
இந்த நடவடிக்கை, வாஷிங்டன் டி.சி.யில் இரண்டு தேசிய காவல்படை உறுப்பினர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் அறிவிக்கப்பட்டது. அதில் ஒரு ஆப்கான் நபர் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
டிரம்பின் பதவிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட பயணக் கொள்கை மாற்றங்கள், அமெரிக்கச் சுற்றுலா துறையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என நிபுணர்கள் முன்பு கூறியுள்ளனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலகப் பயணம் மற்றும் சுற்றுலா கவுன்சில் (World Travel & Tourism Council), தான் ஆய்வு செய்த 184 நாடுகளில், 2025-ஆம் ஆண்டில் சர்வதேச சுற்றுலா வருவாயில் சரிவைக் காணக்கூடிய ஒரே நாடாக அமெரிக்கா இருக்கும் என்று தெரிவித்தது.
டிரம்பின் வரிகள் (tariffs) மீதான எதிர்ப்பின் ஒரு வடிவமாக, கனடாவைச் சேர்ந்த பலரும் அமெரிக்கப் பயணத்தைப் புறக்கணித்தது போன்ற நிர்வாகத்தின் பிற கொள்கைகளும், அமெரிக்காவின் சுற்றுலாவைப் பாதித்ததாகத் தெரிகிறது.
அக்டோபர் மாதம், அமெரிக்காவுக்கு வரும் கனடிய பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து 10-வது மாதமாக சரிவைக் கண்டதாகக் குறிப்பிடப்பட்டது.
முன்னதாக, கனடாவைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்கு வருகை தந்த சர்வதேசப் பயணிகளில் சுமார் நான்கில் ஒரு பங்கை கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் ஆண்டுக்கு 20 பில்லியன் டாலருக்கும் அதிகமாகச் செலவழித்துள்ளனர் என்று அமெரிக்கப் பயணச் சங்கம் (US Travel Association) தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு