Aggregator

அமெரிக்காவால் எண்ணெய் கப்பல் கொள்ளை - வெனிசுலா குற்றச்சாட்டு

4 weeks 2 days ago
இங்கே சிலர் அமெரிக்கா ஊடகங்கள் சொல்வதுடன் ஒத்து போகும் கருத்துக்களை சொல்லி இருந்தார்கள். 2 விடயங்கள். ஒன்று, வெனிசுவேலா, எண்ணையை ஏற்றுமதி செய்ய தொடங்கிவிட்டது, இரானில் இருந்து அனுபவத்தை அறிந்து. 2 வைத்து சீன (தனியார்) நிறுவனம், 1 பில்லியன் முதலீட்டில், 2 எண்ணெய் வயல்களை விருத்தி செய்ய தொடகநக்கி விட்டது. இதன் பின்பே டிரம்ப் உம், பொதுவாக அமெரிக்கா ஊடக வாலுகளும், இப்பொது நடக்கும் (இராணுவ) கூத்துக்கு தூபம் போட்டன அதுக்கும் மேலே , கடற்கொள்ளையிலும் மீண்டும் அமெரிக்கா, அதன் படைகள் ஆரம்பித்து இருக்கின்றன.

200 மில்லியன் டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி

4 weeks 2 days ago
200 மில்லியன் டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி Dec 12, 2025 - 12:50 PM இலங்கையின் மிகப்பெரிய பல்நோக்கு நீர் வள அபிவிருத்தித் திட்டமான மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் டொலர் கடன் வசதியை அனுமதித்துள்ளது. இந்த அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக மகாவலி ஆற்றின் மேலதிக நீரை இலங்கையின் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் வறண்ட பிரதேசங்களுக்குத் திருப்புவதே இதன் முதன்மை நோக்கமாகும். இந்த மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத் திட்டம், விவசாயத்துறையின் தாங்குதிறனை வலுப்படுத்துதல் மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் வடமத்திய மாகாணத்தில் உள்ள 35,600 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நேரடிப் பயன்களைப் பெற்றுத்தரும் என ஆசிய அபிவிருத்தி வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது. இத்திட்டத்திற்கான ஒருங்கிணைந்த இணை நிதியளிப்பு முயற்சிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமை தாங்குகின்றது. இதன் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவிக்கு மேலதிகமாக, சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் (OPEC) நிதியத்திலிருந்து 60 மில்லியன் டொலர்களையும், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திலிருந்து (IFAD) 42 மில்லியன் டொலர்களையும் திரட்ட எதிர்பார்க்கப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmj2jf20a02nyo29nnz93ycm3

200 மில்லியன் டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி

4 weeks 2 days ago

200 மில்லியன் டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி

Dec 12, 2025 - 12:50 PM

200 மில்லியன் டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி

இலங்கையின் மிகப்பெரிய பல்நோக்கு நீர் வள அபிவிருத்தித் திட்டமான மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் டொலர் கடன் வசதியை அனுமதித்துள்ளது. 

இந்த அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக மகாவலி ஆற்றின் மேலதிக நீரை இலங்கையின் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் வறண்ட பிரதேசங்களுக்குத் திருப்புவதே இதன் முதன்மை நோக்கமாகும். 

இந்த மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத் திட்டம், விவசாயத்துறையின் தாங்குதிறனை வலுப்படுத்துதல் மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் வடமத்திய மாகாணத்தில் உள்ள 35,600 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நேரடிப் பயன்களைப் பெற்றுத்தரும் என ஆசிய அபிவிருத்தி வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இத்திட்டத்திற்கான ஒருங்கிணைந்த இணை நிதியளிப்பு முயற்சிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமை தாங்குகின்றது. 

இதன் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவிக்கு மேலதிகமாக, சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் (OPEC) நிதியத்திலிருந்து 60 மில்லியன் டொலர்களையும், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திலிருந்து (IFAD) 42 மில்லியன் டொலர்களையும் திரட்ட எதிர்பார்க்கப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cmj2jf20a02nyo29nnz93ycm3

வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை : முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர்

4 weeks 2 days ago
வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை : துறை சார்ந்தோருடன் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம் 12 Dec, 2025 | 03:46 PM (எம்.மனோசித்ரா) வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை மேலும் வலுப்பெறுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய சம்பந்தப்பட்ட சகல துறையினருடனும் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்தியா, பாக்கிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து விசேட குழுக்கள் நாட்டுக்கு வந்து மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இவை தவிர மேலும் பல நாடுகளிடமிருந்து நிவாரண உதவிகளும் கிடைக்கப் பெறுகின்றன. இந்தியா, துருக்கி, பங்களாதேஷ், இஸ்ரேல், ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பாரிய நிவாரண உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை மேலும் வலுப்பெறுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமானது சம்பந்தப்பட்ட சகல துறையினருடனும் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைககளை முன்னெடுத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் வழமைக்கு மாறாக அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேபோன்று வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வழமையை அண்மித்தளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் வழமையை விடக் குறைவான மழை வீழ்ச்சி பதிவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எதிர்வு கூறல்களுக்கமைய சகல முன்னாயத்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தித்வா புயலின் போது பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி காரணமாக மண் ஈரப்பதன் அதிகரித்துள்ளது. நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. எனவே சிறியளவிலான மழை வீழ்ச்சி கூட பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும். எனவே மக்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும். மண் ஈரப்பதன் அதிகரித்துள்ளதால் சிறிய மழை வீழ்ச்சியின் போது கூட மண்சரிவுகள், கற்பாறைப் பிறழ்வுகள் ஏற்படலாம். எவ்வாறிருப்பினும் முப்படையினர் உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு துறையினர் தயார் நிலையிலேயே உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக வடகீழ் பருவ பெயர்ச்சியின் போது பதிவாகிய மழை வீழ்ச்சியின் அளவை அடிப்படையாகக் கொண்டே வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எதிர்வு கூறலை முன்வைத்துள்ளது. குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரியில் காற்றழுத்த தாழ்வு பிரதேசம் காற்றழுத்த மையமாகவோ, சூறாவளியாகவோ வலுப்பெறக் கூடிய நிலைமை காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அவ்வாறான நிலைமை ஏற்பட்ட தற்போதுள்ள காலநிலையில் மாற்றங்கள் ஏற்படும். அவை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தொடர்ந்தும் மக்களை தெளிவுபடுத்தும் என்றார். https://www.virakesari.lk/article/233189

வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை : முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர்

4 weeks 2 days ago

வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை : துறை சார்ந்தோருடன் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம்

12 Dec, 2025 | 03:46 PM

image

(எம்.மனோசித்ரா)

வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை மேலும் வலுப்பெறுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய சம்பந்தப்பட்ட சகல துறையினருடனும் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியா, பாக்கிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து விசேட குழுக்கள் நாட்டுக்கு வந்து மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இவை தவிர மேலும் பல நாடுகளிடமிருந்து நிவாரண உதவிகளும் கிடைக்கப் பெறுகின்றன. இந்தியா, துருக்கி, பங்களாதேஷ், இஸ்ரேல், ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பாரிய நிவாரண உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை மேலும் வலுப்பெறுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமானது சம்பந்தப்பட்ட சகல துறையினருடனும் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைககளை முன்னெடுத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் வழமைக்கு மாறாக அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேபோன்று வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வழமையை அண்மித்தளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் வழமையை விடக் குறைவான மழை வீழ்ச்சி பதிவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எதிர்வு கூறல்களுக்கமைய சகல முன்னாயத்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தித்வா புயலின் போது பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி காரணமாக மண் ஈரப்பதன் அதிகரித்துள்ளது. நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. எனவே சிறியளவிலான மழை வீழ்ச்சி கூட பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும். எனவே மக்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும். மண் ஈரப்பதன் அதிகரித்துள்ளதால் சிறிய மழை வீழ்ச்சியின் போது கூட மண்சரிவுகள், கற்பாறைப் பிறழ்வுகள் ஏற்படலாம்.

எவ்வாறிருப்பினும் முப்படையினர் உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு துறையினர் தயார் நிலையிலேயே உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக வடகீழ் பருவ பெயர்ச்சியின் போது பதிவாகிய மழை வீழ்ச்சியின் அளவை அடிப்படையாகக் கொண்டே வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எதிர்வு கூறலை முன்வைத்துள்ளது. குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரியில் காற்றழுத்த தாழ்வு பிரதேசம் காற்றழுத்த மையமாகவோ, சூறாவளியாகவோ வலுப்பெறக் கூடிய நிலைமை காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அவ்வாறான நிலைமை ஏற்பட்ட தற்போதுள்ள காலநிலையில் மாற்றங்கள் ஏற்படும். அவை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தொடர்ந்தும் மக்களை தெளிவுபடுத்தும் என்றார். 

https://www.virakesari.lk/article/233189

அனர்த்த நிவாரணம் கோருபவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்!

4 weeks 2 days ago
அனர்த்த நிவாரணம் கோருபவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்! Dec 12, 2025 - 04:53 PM "இயற்கைப் பாதிப்பு எவருக்கும் ஏற்படலாம். எனினும், தவறான முறையில் பெறப்படும் நிவாரணம் எவருக்கும் பயனாக அமையாது. எனவே, நிவாரணம் கோருபவர்கள் தங்கள் மனசாட்சிக்கு அமையக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது மட்டக்களப்பில் பாதிப்பு குறைவு என்பதால், எங்களை விடவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்" என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று (12) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்: "மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தத்தினால் மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், எமது மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் இருவர் வவுனியா மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 11 வீடுகள் முழுமையாகவும், 1,946 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு, நேற்று மாலை வரை 6,238 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த கால அனர்த்தங்களின் போது இடம்பெயர்ந்து முகாம்களிலோ அல்லது உறவினர் வீடுகளிலோ தங்கியிருந்தவர்களுக்குக் கூடுதலாக நிவாரணம் வழங்கப்பட்டது. கிராம உத்தியோகத்தர்கள் அவர்கள் தொடர்பான விபரங்களை முதலில் சேகரித்து அனுப்பினர். தற்போது அரசாங்கம் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக விபரங்களைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதேவேளை, பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான கொடுப்பனவுகளும் விரைவாக வழங்கப்படும். பாதிக்கப்பட்ட எவரும் விடுபடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அதேசமயம், பாதிக்கப்படாதவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நிவாரணங்களைப் பெற முயற்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். அனர்த்த நேரத்தில் கிராம உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருந்தனர். எனவே, உங்கள் கோரிக்கை நியாயமாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmj2s3kdy02oco29nn86h2swi

அனர்த்த நிவாரணம் கோருபவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்!

4 weeks 2 days ago

அனர்த்த நிவாரணம் கோருபவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்!

Dec 12, 2025 - 04:53 PM

அனர்த்த நிவாரணம் கோருபவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்!

"இயற்கைப் பாதிப்பு எவருக்கும் ஏற்படலாம். எனினும், தவறான முறையில் பெறப்படும் நிவாரணம் எவருக்கும் பயனாக அமையாது. எனவே, நிவாரணம் கோருபவர்கள் தங்கள் மனசாட்சிக்கு அமையக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது மட்டக்களப்பில் பாதிப்பு குறைவு என்பதால், எங்களை விடவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்" என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று (12) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில்: 

"மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தத்தினால் மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், எமது மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் இருவர் வவுனியா மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 11 வீடுகள் முழுமையாகவும், 1,946 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு, நேற்று மாலை வரை 6,238 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த கால அனர்த்தங்களின் போது இடம்பெயர்ந்து முகாம்களிலோ அல்லது உறவினர் வீடுகளிலோ தங்கியிருந்தவர்களுக்குக் கூடுதலாக நிவாரணம் வழங்கப்பட்டது. 

கிராம உத்தியோகத்தர்கள் அவர்கள் தொடர்பான விபரங்களை முதலில் சேகரித்து அனுப்பினர். தற்போது அரசாங்கம் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக விபரங்களைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதேவேளை, பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான கொடுப்பனவுகளும் விரைவாக வழங்கப்படும். 

பாதிக்கப்பட்ட எவரும் விடுபடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அதேசமயம், பாதிக்கப்படாதவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நிவாரணங்களைப் பெற முயற்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

அனர்த்த நேரத்தில் கிராம உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருந்தனர். எனவே, உங்கள் கோரிக்கை நியாயமாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

https://adaderanatamil.lk/news/cmj2s3kdy02oco29nn86h2swi

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

4 weeks 2 days ago
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 62 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 62 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை புத்தர், இந்த பயங்கரவாத செயலுக்குப் பிறகு வட இந்தியாவில் உள்ள உருவேலவுக்குத் [Uruvela] திரும்பினார். இலங்கையின் பூர்வீகக் குடிகளை விரட்டியடிக்கும் இந்த அத்தியாயத்தின் முடிவு எளிமையாகச் சொல்லப்படுகிறது அல்லது விளக்கப்பட்டுள்ளது: 1 - 42 & 43 பார்க்கவும் : "இவ்வாறு மஹியங்கனை-தூபம் முடிந்தது. அவர் [புத்தர்] எங்கள் தீவை மனிதர்களுக்குத் தகுந்த வசிப்பிடமாக மாற்றியதும், வலிமை மிக்க ஆட்சியாளரும், வீரம் மிக்க வீரருமான புத்தர் உருவேலவுக்குப் புறப்பட்டார்" என்று முடிகிறது. "என்ன ஒரு உருமறைப்பு [camouflage] இது!" அதாவது, வாசிப்பவர்களின் புலனுக்கெட்டாத வகையில், உண்மையை மறைப்பதற்கான ஒரு உத்தியாக இது தெரிகிறது. அதே நேரம், தீபவம்சத்தில், உண்மையை உண்மையாகவே, "இங்கே இயக்கர்களின் அடிபணிதல்" என்று வெளிப்படையாக முடிவு விவரிக்கப்பட்டுள்ளது. வட இந்தியாவில், குறிப்பாக இன்றைய பீகாரில், கௌதம புத்தர் ஞானம் பெற்ற பகுதிக்கு உருவேலா என்பது ஒரு பண்டைய பெயர், இது இப்போது புத்த கயா என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு முக்கிய பௌத்த யாத்திரைத் தளமாகும். தொலைதூரத்தில் இருந்து வந்த ஒருவரால் அல்லது வேறு ஒரு நாட்டில் இருந்து வந்த ஒருவரால், இலங்கையின் பூர்வீக மக்களை அடிபணித்தலும் வெருட்டி பாரம்பரிய இடத்தில் இருந்து அகற்றுவதும் கட்டாயம் அது மனிதகுலத்திற்கு எதிரான ஒரு குற்றமாகும். இதை ஞானம் பெற்ற புனித புத்தர் செய்தார் என்று கூறப்பட்டுள்ளது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்!. என்ன பாவம் செய்தாரோ புத்தர் நான் அறியேன்? இனப்படு கொலை என்ற சொல் [THE TERM "GENOCIDE" ] 1944 க்கு முன் இருக்கவில்லை. போலந்து-யூதச் சட்ட வல்லுனரான ராபேல் லெம்கின் [Raphael Lemkin (1900-1959)] என்பவரே இனப்படு கொலை என்னும் கருத்துருவுக்கு முதன் முதலில் சொல்வடிவம் கொடுத்தவராவார். இனத்தை [இனம், தேசம் அல்லது பழங்குடி] குறிக்கும் geno என்ற கிரேக்க சொல்லையும், கொலையை ["கொலை, நிர்மூலமாக்கல்"] குறிக்கும் cide என்ற லத்தீன் சொல்லையும் ஒன்றிணைத்து 1944 ஆம் ஆண்டு "கைப்பற்றப்பட்ட அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட ஐரோப்பாவில் ஆக்ஸிஸ் ஆட்சி" [Axis Rule in Occupied Europe] என்ற புத்தகத்தில் உருவாக்கப்பட்டது. ஆகவே இனப்படு கொலை என்பது ஒரு சர்வதேச குற்றம் [International Crime] ஆகும். இது முதலில் "ஒரு தேசம் அல்லது ஒரு இனக்குழுவின் அழிவு" [“the destruction of a nation or an ethnic group”] என்று பொருள் கொள்ளப்பட்டது. 1946 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் (UN) பொதுச் சபையானது, தீர்மானம் 96 இல் சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படு கொலையை ஒரு குற்றமாக உறுதி செய்தது, அதில் "கொலை என்பது தனிப்பட்ட மனிதர்களின் வாழ்வதற்கான உரிமையை மறுப்பது போல, இனப்படுகொலை என்பது முழு மனித குழுக்களின் இருப்பு உரிமையை மறுப்பதாகும்; இவ்வாறு, மனித இருப்பதற்கான உரிமையை மறுப்பது, உண்மையில் மனிதகுலத்தின் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒன்றாகும். மேலும் தார்மீக சட்டத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் உணர்வுக்கும் மற்றும் நோக்கங்களுக்கும் முரணானது ஆகும். டிசம்பர் 9, 1948 இல், ஐ.நா பொதுச் சபை தீர்மானம் 260A நிறைவேற்றப்பட்டு, அல்லது இனப்படுகொலை குற்றத்தைத் தடுத்தல் மற்றும் தண்டனை பற்றிய மாநாடு நிறைவேற்றப்பட்டு, ஜனவரி 12, 1951 இல் இவை நடைமுறைக்கு வந்தது [December 9, 1948, the UN General Assembly adopted Resolution 260A, or the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, which entered into force on January 12, 1951.] "வரலாற்றின் எல்லா காலகட்டங்களிலும் இனப்படுகொலை மனிதகுலத்திற்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது" என்று தீர்மானம் குறிப்பிட்டது. இனப்படுகொலையை தடுப்பது தொடர்பான உடன்படிக்கையின் 2ஆம் கட்டுரையின் படி: ஒரு தேசிய, கலாச்சார, இன அல்லது சமயத்தின் மக்களை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்தில் செய்யப்படும் பின்வரும் செயல்கள்: (அ) அந்த இன அல்லது குழுவின் உறுப்பினர்களைக் கொல்லுதல்; (ஆ) இன உறுப்பினர்களுக்குக் கடுமையான உடல் அல்லது மனதிற்குத் தீங்கு விளைவித்தல்; (இ) இனத்தின் இருப்பு சார்ந்த வாழ்க்கையை அழிப்பதற்கான சூழ்நிலையைத் திட்டமிட்டு ஏற்படுத்துதல் .... மற்றும் பலவற்றைக் கூறுகிறது. அப்படியானால், (ஆ) & (இ) வின் படி, இலங்கையின் பூர்வீக குடிகளை விரட்டியடிக்கும் மேற்கண்ட புத்தரின் செயல் நிச்சயமாக மனித குலத்திற்கு எதிரான குற்றமாகும். ஆனால், நிச்சயமாக இன்றைய நேபாளத்தில் உள்ள லும்பினியில் பிறந்த புத்தர் இந்தச் செயலைச் செய்யமாட்டார். ஆனால், மகாவம்ச ஆசிரியர் தான் புத்தரை முன்னிறுத்தி இந்த செயலுக்கு அத்திவாரம் போட்டுள்ளார் என்பதே உண்மை! Part: 62 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 The Buddha, after this terrorist act, returned to Uruvela, in North India. The end of this episode of driving away the original inhabitants of Lanka is simply said or glossed over as: "Thus was 42 the Mahiyangana-thupa completed. When he had thus made 43 our island a fit dwelling-place for men, the mighty ruler, valiant as are great heroes, departed for Uruvela. 'Here ends the Visit to Mahiyangana' ”. What a camouflage it is! The same visit is described as “Here ends the subjection of Yakkhas” in the Dipavamsa. The subjection of the native people of Lanka by a person from a faraway place is simply titled as a ‘Visit to Mahiyangana’ in the Mahavamsa. It is a crime against humanity. The term “genocide”, made from the ancient Greek word genos (race, nation or tribe) and the Latin caedere (“killing, annihilation”), was first coined by Raphael Lemkin, a Polish-Jewish legal scholar, in his 1944 book Axis Rule in Occupied Europe. It originally means “the destruction of a nation or an ethnic group”. In 1946, United Nations (UN) General Assembly affirmed genocide as a crime under international law in Resolution 96, which stated that “Genocide is a denial of the right of existence of entire human groups, as homicide is the denial of the right to live of individual human beings; such denial of the right of existence shocks the conscience of mankind … and is contrary to moral law and the spirit and aims of the United Nations.” On December 9, 1948, the UN General Assembly adopted Resolution 260A, or the Convention on the Prevention and Punishment of the Crime of Genocide, which entered into force on January 12, 1951. The Resolution noted that “at all periods of history genocide has inflicted great losses on humanity”. Article II of the Convention clearly defines genocide as any of the following acts committed with intent to destroy, in whole or in part, a national, ethnical, racial or religious group. If so, the above act of driving away the original inhabitants of Lanka, Will definitely a crime against humanity. But Definitely The Buddha who was born in Lumbini, in what is now Nepal, would not do this act. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 63 தொடரும் / Will follow துளி/DROP: 1937 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 62] https://www.facebook.com/groups/978753388866632/posts/32792834707031753/?

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

4 weeks 2 days ago
இறுதி சண்டையின் பின் வடகிழக்கு தமிழர்களுக்கு கிடைத்த சாபகேடுகளில் முதன்மையானது போரில் எந்த பக்கமும் சம்பந்தமில்லாமல் ஒளித்து கிடந்தவர்கள் கைகளில் தமிழர் களுக்கு தீர்வு பெற்றுத்தரும் அதிகார இயந்திரத்துக்கு பின்கதவால் உள்ளே கொண்டு வந்து தமிழர்களை நம்ப வைத்து மேலும் மேலும் சாணக்கிய சுமத்திர ரை தவிர வேறு ஒருத்தராலும் தமிழர் களுக்கு ஒரு மாங்காய் கூட பறிக்க முடியாது என்று நம்ப வைப்பது . இந்த கோதாவில் இங்கு களத்தில் ஒருத்தர் இருவரை தவிர மற்றைய தமிழ் தேசியத்துக்கு எதிரானவர்கள் முக மூடியுடன் வந்து கருத்து மழை பொழிவதும் நீலி கண்ணீர் விடுவதும் சந்தடி சாக்கில் புலிகள் மீது விமர்சனம் செய்கிறோம் என்று அவதூறு பரப்புவதும் இங்கு நடைபெறுகிறது .

ஜேர்மனியில் யாழ் இளைஞர் விபரீத முடிவு.!

4 weeks 2 days ago
நண்பர்கள் தெரிந்தோர் சொன்னார்கள் இவருடைய அப்பா அம்மா அவுஸ்ரேலியாவில் நல்ல நிலையில் வாழ்கின்றார்கள் இவர் இலங்கையில் ஒரு செல்ல பிள்ளை. இவர் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காக யேர்மனி வரவில்லையாம் அவர் விரும்பினார் வந்தார்.

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

4 weeks 2 days ago
உண்மை தான் அது மட்டுமா கை , முகம் கழுவும் பொது wash basin னில் அவர்கள் முஸ்லிம் மதம் சொல்லிட்டது என்றதிற்காக சிறுநீரக உறுப்பையும் காலை தூக்கி வைத்து கழுவுவதையும் கண்ட பின்பு மற்றவர்களால் (நரகத்திற்கு செல்லும் பாவிகளால்) எப்படி அதை பாவிக்கும் மனநிலை வரும் 😢

முழு புசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் முன்னெடுக்ககூடாது - எம்.ஏ.சுமந்திரன்

4 weeks 2 days ago
தமிழ் தேசியத்தின் இன்னோரு குணாம்சம் என்னவென்றால், தான் செய்த செயல்களால் விளைந்த விளைவுகளுக்கு நேர்மையுடன் பொறுப்பேற்று அதை திருத்திக் கொள்ளாமல் எப்போது பார்ததாலும் தனது தவறுகளுக்கு அடுத்தவர் மீது பழி போட்டு தப்பிக்கும் மன நிலை. இந்த தப்பிக்கும் மன நிலை உங்கள் கருத்திலும் தெளிவாக தெரிகிறது.

“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

4 weeks 2 days ago
அவர்களைக்கால்களைக் கழுவி மலசலகூடத்தை ஈரமாக்கி விட்டுப் போவதால் ஏனையவர்களின் சொக்ஸ்கள் நனைந்துவிடும் குளிர்காலங்களில் நனைந்த சோக்ஸகளுடன் வேலை செய்யும் பொழுது எவ்வளவு அசெளகரியமக இருக்கும்.

கெய்ஷா - ஜெயமோகன்

4 weeks 2 days ago
கெய்ஷா - ஜெயமோகன் அவளை ஒரு கெய்ஷா என்றுதான் கூட்டிவந்தார்கள். நான் அவள் பெயரை கேட்டேன். “கெய்ஷாக்களுக்கு தனியாகப்பெயர் தேவையில்லை. இந்த இரவுக்காக ஒரு பெயர் உங்களுக்குத்தேவை என்றால் சூட்டிக்கொள்ளலாம்” என்றான் வழிகாட்டி. “தேவையில்லை, கெய்ஷா என்ற சொல்லே ஒருபெயர்போலத்தான் இருக்கிறது” என்றேன். “ஒரு கெய்ஷாவின் பெயரைப் பின்தொடர்ந்து சென்று நீங்கள் எதையும் அறிந்துகொள்ளமுடியாது” என்றான். அந்த எண்ணம் எனக்கு இருக்கவுமில்லை கெய்ஷாக்கள் பழைய ஜப்பானிய அரசாட்சிக் காலத்தில் பிரபுக்களை உபசரிப்பதற்காக உருவாக்கப்பட்ட உயர்குடித் தாசிகள். கெய்ஷா என்றால் கலைபயின்றவள், அளிப்பவள் என்று பொருள். ஆணை மகிழ்விக்கும் கலையை ஆயிரம் வருடங்களாக கற்றுத் தேர்ந்தவர்கள். காமத்தை கலைகளாக விரித்து விரித்துச் செல்லும்போதும் அனைத்து முனைகளிலும் ஆணின் அகங்காரத்தையும் நிறைவு செய்யப்பயின்றவர்கள். நமது குலப்பெண்கள் ஆணின் அகங்காரத்தை அலட்சியம் செய்வதற்கு ஓரிரு வருடங்களிலேயே பழகிவிடுகிறார்கள். கெய்ஷாக்களின் காமக்கலைகளைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. கையில் பணத்துடன் ஜப்பானுக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் அந்தக் கனவு விதைக்கப்பட்டிருக்கும். அங்கு உயர்மட்டச் சுற்றுலா பயணிகளிடம் உள்ளூர் வழிகாட்டிகள் ஜப்பானியத் தேநீர் பண்பாடு, காகிதப் பொம்மைக் கலை, ஜென் பௌத்தம், ஹைகூ கவிதை, ஷிண்டோ மதம் என்று வழக்கமான சுற்றுலாக்கவர்ச்சிகளைப் பற்றி சொல்லிச்செல்கையில் மிக இயல்பாக வழுக்கி கெய்ஷாக்களுக்குள் செல்வார்கள். கேட்பவன் தன் தனி ஆர்வத்தை கண்களில் காட்டாமல் இருக்க முயன்றாலும் அவர்கள் அதை எப்போதும் அடையாளம் கண்டுகொள்வார்கள். பல வழக்கமான சொற்றொடர்களுக்குப் பிறகு “இப்போது இருக்கிறார்களா கெய்ஷாக்கள்?” என்று அவன் கேட்கால் இருக்க மாட்டான். “இருக்கிறார்கள், ஆனால் மிக அபூர்வமாகவே…” என்று வழிகாட்டி பதில் சொல்வான். மீண்டும் பல சொற்றொடர்களில் சுற்றியபின் வேறெங்கோ நோக்கியபடி “ஒரு கெய்ஷாவை சந்திக்க முடியுமா?” என்று பயணி வரலாற்றுப்பண்பாட்டு ஆர்வத்துடன் கேட்பான். “கடினம்” என்பான் வழிகாட்டி. மீண்டும் சொற்றொடர்கள். மீண்டும் விழிச்சந்திப்புகள். அதன் பிறகு “எத்தனை செலவானாலும் பரவாயில்லை” என்று பயணி சொல்லியாக வேண்டும் கவலையுடன் “சற்று செலவேறியதுதான். என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவனுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். விசாரித்துப்பார்க்கிறேன். ஒரு நாள் ஆகும். ஆனால் முழுமையாக உறுதி தரமுடியாது, மன்னிக்கவும்” என்று வழிகாட்டி சொல்வான். அவன் திரும்பிவரும்வரை நான் காத்திருந்தேன் அந்த ஒரு முழுநாளும் அற்புதமானது. இணையத்திலும் வழிகாட்டி நூல்களிலும் சென்று கெய்ஷாக்களைப்பற்றி தேடி தெரிந்து கொள்ளலாம். திரும்பத் திரும்ப ஒரே விதமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் குறைவான தகவல்களிலிருந்து கற்பனைகளை விரித்தெடுக்கலாம். காமக்கலைகள்! காமத்தை எப்படி ஒரு கலையாக்க முடியும்? என்னதான் செய்தாலும் அடிப்படையில் அது அனைத்து விலங்குகளும் செய்யும் ஒரு செயல். சரியாகச் சொல்லப்போனால் மிருகத்தனமானது. அதிலிருக்கும் இன்பமே மிருகத்தனத்தின் களிப்புதான். மனிதர்கள் மனிதத்தன்மை என்று அவர்களுக்கு குழந்தையிலிருந்து கற்பிக்கப்பட்ட அத்தனையும் உதறிவிட்டு வெறும் மிருகங்களாக இருக்கும் அந்த சில நிமிடங்களுக்காகத்தான் அதன்மேல் அத்தனை பற்றுக் கொண்டிருக்கிறார்களா? உண்பதிலும் காமத்திலும்தான் வாய் அத்தனைமுக்கியத்துவம் பெற முடியும். ஏனென்றால் மனிதன் அப்போது விலங்கு ஆனால் அந்த எளிய மிருகச் செயல்பாட்டின் மீதுதான் உலகத்தின் அத்தனை கவிதைகளையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அத்தனை கலைகளையும் அதைச் சார்ந்தேதான் நிகழ்த்துகிறார்கள். நினைத்துத் தீராத அத்தனை மெல்லுணர்வுகளையும் அதன் மீதுதான் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அனைத்தையும் கடந்து சென்று அந்த சில அப்பட்டமான நிமிடங்களை அடைய வேண்டும். எழுந்தவுடன் கழற்றி வைத்த ஆடைகளை அணியும் பரபரப்புடன் அத்தனை சொற்களையும் எடுத்து மேலே போட்டுக்கொள்ள வேண்டும். கெய்ஷாக்கள் கலை என்பது எதை? அணிவிப்பதையா? கழற்றுவதையா? ஜப்பானிய தேநீர் கலையை நான் பலமுறை கண்டிருக்கிறேன். உண்மையில் அவர்கள் அப்படித்தான் வழக்கமாகத் தேநீர் அருந்துகிறார்கள் என்றால் அது தேநீரே அல்ல. அல்லது அவர்கள் மனநோயாளிகள். மிக சொகுசான, மிக அரியதான ஒன்றை அருந்துவதான பாவனை மட்டும்தான் அது. பல நூற்றாண்டுகளாக அவர்கள் பழகி வைத்திருக்கும் ஒரு நாடகம், நாட்டியம் என்று சொல்ல வேண்டும். பீங்கான் குடுவையை எடுத்து நீர் நிரப்பி அனலில் வைப்பது தொடங்கி கிண்ணங்களை எடுத்து பரப்புவது, நிமிர்த்து வைப்பது, கால் மடித்து அமர்வது, உடல் வளைத்து வணங்குவது என்று அதன் அத்தனை அசைவுகளும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வகுக்கப்பட்டுவிட்டவை. ஜப்பானிய தேநீர் விருந்தில் தேநீரே தேவையில்லை. கெய்ஷாக்களின் காமவிருந்தில் கடைசியில் காமமே தேவையில்லை என்று சொல்லிவிடுவார்களோ என்று நினைத்தபோது என் விடுதி அறையில் படுத்திருந்தபடி சிரித்துக் கொண்டேன். காமம் என்று இருக்கும் வரைக்கும் ஒரு கலையென அது ஆகமுடியாது கலை என்பது ஒரு பொருளின் மேல் ஒரு வார்த்தையின்மேல் அல்லது செயலின்மேல் மேலும் மேலும் அர்த்தங்களை ஏற்றி வைப்பது. படிமங்கள் தான் கலை. ஒரு நாற்காலியை, மேசை விரிப்பை, மலர்க்கிண்ணத்தை எதை வேண்டுமானாலும் முடிவின்றி விரியும் அர்த்தம் கொண்டதாக ஆக்கும் போதுதான் அது கலை. காமத்தை அப்படி ஆக்கிவிட முடியுமா? எத்தனை அர்த்தங்களை ஏற்றினாலும் அது கடைசியில் இயற்கை அளித்த ஒற்றை அர்த்தத்தில்தானே வந்து நிற்கும்? அதைக் கலையாக்குவதற்காகத்தானே அத்தனை வருடங்களாக கவிதையையும் கதைகளையும் எழுதித் தள்ளியிருக்கிறார்கள். காதல் என்னும் வார்த்தையாக அதை மாற்றியிருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் காலம் தேவை. ஒன்றுடன் ஒன்று இணைந்த நூற்றுக்கணக்கான உணர்வுகளைத் தொடுத்து காமத்தைச் சுற்றி அமைத்து அதை அமரகாதலாக ஆக்குவதற்கு அதுவரைக்கும் மனித இனம் உருவாக்கிய அனைத்து நுண்கலைகளும் தேவை. கூடவே காமம் என்றால் என்னவென்றறியாத இளமை. காமம் சற்றே சலித்துப்போன நாற்பது வயதான பயணிக்கு சிலமணி நேரங்கள் உடன் தங்கிப்போகும் ஒரு பெண் காமத்தை எப்படி கலையாக ஆக்க முடியும்? அவள் கெய்ஷா உடையில் வருவாளென்று நான் நினைத்திருந்தேன். நூல்களில் கெய்ஷாக்களின் பல்வேறு உடைகள் வரையப்பட்டிருந்தன. இடுப்பில் மெத்தைபோல எதையோ கட்டிக்கொண்டவர்கள். கால்வரைவழியும் பெரிய கிமோனாக்கள். பழைய பாணி ஜப்பானிய ஓவியங்களில் வெளிறிய வண்ணங்களில் வரைந்து மேலும் வெளிற வைப்பதற்காக லேசாக நீர் தெளித்து ஒற்றி எடுக்கப்பட்ட ஓவியங்கள். கண்ணாடியில் ஒளிஊடுருவும் தன்மையுடன் ஆடைகள். வந்தவள் சிறுமியோ என்று தோற்றமளிக்கும் சிறிய உடல் கொண்ட இளம்பெண். நவீன மேலை நாட்டுக் குட்டைப்பாவாடை அணிந்திருந்தாள். ஒரு பதின்பருவத்து சிறுவனைப்போல் இருந்தாள். சிறிய கண்கள் இரண்டு நீர்த்துளிகள் போல. சிமிழ் போன்ற மிகச்சிறிய உதடுகள். மாசுமருவற்ற மஞ்சள் நிறம். தோல்நிறத்தில் மஞ்சளுக்கு நிகரானது பிறிதொன்றில்லை. வெள்ளையர் தோல்கள் சுருக்கங்களும் புள்ளிகளும் நிறைந்தவை கரியதோல்கள் ஒளியற்றவை .மாநிறத்தோல் மட்டுமே இந்தியாவில் அழகு கொண்டது. ஆனால் மஞ்சள்நிறத்தோல் தோலா உலோகமா என்றஅறியாத அளவுக்கு மெருகுகொண்டது அவள் என்னை உடல் வளைத்து முறைப்படி வணங்கி முகமன் சொன்னாள். நான் அவளை வரவேற்றதும் பணிவுடன் நாற்காலியில் அமர்ந்து தன் கைப்பையை மேஜைமேல் வைத்தாள். வழிகாட்டி என்னிடம் தனியாக வந்து குனிந்து “புகழ்பெற்ற கெய்ஷா குடும்பத்தைச் சேர்ந்தவள். அரசகுலத்தைச் சேர்ந்தவர்களுடன் மட்டுமே உறவு வைத்திருக்கிறாள். இந்தியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வந்திருக்கிறார் என்றேன். அதை நம்பி வந்திருக்கிறாள். அந்த வார்த்தையை நீங்கள் வாய்தவறாமல் கொண்டு செல்லுங்கள்” என்றான். “நான் உண்மையிலேயே அரசகுடும்பத்தைச் சார்ந்தவன் தான்” என்றேன். அவன் கண்கள் ஐயத்துடன் சற்று மாற ”அப்படியானால் நன்று” என்றான். “இவள் கெய்ஷாவா? உண்மையிலேயே?” என்றேன். “ஆம், கெய்ஷாக்கள் என்பவர்கள் சில குடும்பங்களில் தொன்மையான மரபாக வருபவர்கள். காதற்கலையை அவர்கள் தங்கள் பாட்டிகளிடமிருந்து முறையாகக் கற்றுக் கொள்கிறார்கள். அந்தக் கலைதான் அவளைக் கெய்ஷாவாக்குகிறது. மற்றபடி அவளும் பிறரைப்போல இந்தக் காலத்தில் வாழ்பவள் தான். இந்தப்பெண் இங்கே டோக்கியோவில் ஒரு கல்லூரியில் படிக்கிறாள். படித்து முடித்தபின் எதாவது நிறுவனத்தில் வேலைக்குச் செல்வாள். குழந்தைகளை பெற்றுக் கொள்வாள். பிறரைப் போல் தான் அவள் வாழ்வு இருக்கும். ” நான் “அதுவும் நன்று தான்” என்றேன். அவன் புன்னகையுடன் “அவர்கள் இரவில் மட்டும் தான் கெய்ஷாக்கள்” என்றான். நான் “நன்று” என்று சொல்லி அவன் தோளில் தட்டினேன். “இதற்கான பணத்தை நீங்கள் எனது வங்கிக் கணக்கில் செலுத்தலாம். அதை நான் உங்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறேன். பத்து நிமிடத்தில் நீங்கள் அதை செலுத்த முடியும்” என்றான். “சரி” என்றேன். “அவளிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே செலுத்திவிடலாம். நீங்கள் செலுத்தின தகவலை அவளுக்கு நான் அனுப்பின பிறகுதான் அவள் கெய்ஷாவாக மாறுவாள்” என்றான். அவன் சொல்வதை நான் புரிந்து கொண்டு மீண்டும் “சரி” என்றேன். “சற்றுப்பெரிய தொகை” என்று அவன் சொன்னான். “சரி நண்பா…” என்று அவன் தோளில் மீண்டும் தட்டினேன் அவன் மும்முறை வணங்கி வெளியே சென்று கதவை மூடினான். நான் திரும்பி வரும்போது அவள் கண்ணாடித் திரையிடப்பட்ட பெரிய சாளரத்தின் அருகே நாற்காலியில் பள்ளிக்கூடப்பெண் போல கால்களை மடித்துக் கொண்டு கைகளைக் கட்டி அமர்ந்திருந்தாள் நான் வந்த போது இயல்பான பணிவுடன் எழுந்து நின்று புன்னகை செய்தாள். நான் அவள் அருகே அமர்ந்தேன். முதலில் என்ன பேசுவதென்று தெரியவில்லை. பின்னர் சொற்களை தெரிவுசெய்தேன் “நான் கெய்ஷா என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆகவே தான் உன்னை வரச்சொன்னேன்” என்றேன். “கெய்ஷா என்றால் இரவில் வாழ்பவள் என்று பொருள்” என்றாள். “அப்படியா? விக்கிப்பீடியாவில் அப்படி இல்லையே” என்றேன். “ஜப்பானிய சொற்களை எழுதும் முறையால் அர்த்தம் கொள்ளச்செய்யமுடியும். நாங்கள் கெய்கோ என்போம்” என்றாள். ”ஆம், அதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றேன். “இரவுகளில் மட்டும் ஒரு ஆளுமையை அணிந்து கொண்டு காலையில் கழற்றிவிடுபவர்கள் கெய்ஷாக்கள். உண்மையில் பகலில் சூரியன் எழுவதற்கு முன்பே அவர்கள் இறந்து விடுகிறார்கள்” என்றாள். நான் அவளைப்பார்த்துக் கொண்டிருந்தேன். கெய்ஷாப் பண்பாடு பற்றி ஒரு பேருரை ஆற்றப்போகிறாளா என்று சலிப்பு ஏற்பட்டது. “ஆகவே இரவில்பார்த்த கெய்கோவை பகலில்தேடக்கூடாது” என்றாள். அதைச் சொல்லத்தானா என நினைத்துக்கொண்டு “நான் நாளை மாலை இங்கிருந்து இந்தியா கிளம்புகிறேன்” என்றேன். “கெய்ஷாக்கள் இரவில் அணியும் அனைத்தையும் பகலில் துறந்துவிடுவதனால் இரவில் செய்யும் எந்த பாவமும் அவர்களைத் தொடர்ந்து வருவதில்லை. தொல்பழங்காலத்தில் அரசர்களுக்காக கெய்ஷாக்கள் கொலைகளையும் செய்திருக்கிறார்கள்” என்றாள். நான் சிரித்தபடி, “எனது தொழில் போட்டியாளர்களால் நீ இங்கு அனுப்பப்படவில்லை அல்லவா?” என்றேன். அவளும் சிரித்துக் கொண்டு, “பெரும்பாலும் இல்லை” என்றாள். “ அய்யோ! பயமாக இருக்கிறதே. . ” என்று நான் நடித்தேன். இருவரும் சிரித்த போது சற்று அணுகினோம். இருவர் அணுகிவருவதற்கு நடிப்பு சிறந்த வழிமுறை பின்னர் எளிய அறிமுகச்சொற்களை பேசிக்கொண்டோம். என்னைப்பற்றிச் சொன்னேன். நான் ஒரு நாளிதழின் ஆசிரியன், எட்டுநூல்களை எழுதியிருக்கிறேன் என்றதும் மெல்லிய புருவங்கள் வளைய வியப்புடன் “அப்படியா?” என்றாள். “என் சொந்தப் பத்திரிகை. என் தாத்தா தொடங்கியது” என்றேன். பத்திரிகையின் பெயரை அவள் கேட்டிருக்கவில்லை. “இந்தியாவின் சுதந்திரப் போராட்டகாலத்து நாளிதழ்” என்றேன். அவள் என் நூல்களைப்பற்றிக் கேட்டாள். ஆறுநூல்கள் அரசியல். இரண்டுநூல்கள் பயணம். “நாவல் எழுதும் எண்ணம் உண்டு” என்றேன். அவள் சிரித்தபடி “இதழாளர்கள் நாவல் எழுதுவதுதான் இப்போது பொதுப்போக்கு. பதிப்பாளர் விரும்புவார்கள்” என்றாள். நான் புருவத்தைச் சுருக்கி “ஏன்?” என்றேன். “மற்ற இதழாளர்கள் பாராட்டி மதிப்புரை எழுதுவார்கள்” என்றாள். சுரீலென்று கோபம்வந்தாலும் உடனே அதைக்கடந்து சிரித்துவிட்டேன். “உண்மை, ஆனால் என் நாவல் மற்ற பத்திரிகையாளர்களை விமர்சிப்பதாகவே இருக்கும். எல்லாரும் வசைபாடுவார்கள்” என்றபின் “நீ படிப்பாயா?” என்றேன். “எனக்கு இளமையிலேயே இலக்கியம் கற்பித்திருக்கிறார்கள்” என்றாள். அவள் மது அருந்துவாளா என்று கேட்டேன். ஒயின் மட்டும் என்றாள். நானும் அதையே விரும்புவதாகச் சொன்னேன். அவளே ஒயினைப் பரிமாறினாள். “ஒயின் பரிமாறுவதில் கெய்ஷா முறை என ஒன்றும் இல்லையா?” என்றேன். “கெய்ஷா சடங்குகள் விரிவானவை. ஆனால் கெய்ஷாமுறை என்பது அச்சடங்குகள் அல்ல” என்றாள். நான் “கெய்ஷாக்களுக்கு காமத்தில் நுட்பமான பல கலைகள் தெரியும் என்கிறார்களே” என்றேன். “ஜப்பானிய தேநீர் விருந்து போல அது ஒரு பெரிய நடிப்பாக இருக்கும். அலங்கார உடைகளும் முறைப்படுத்தப்பட்ட உடல் அசைவுகளும் சடங்குகளும் எல்லாம் இருக்கும் என்று நினைத்தேன்” அவள் சிரித்தபடி, “அத்தனைக்கும் பிறகு நீங்கள் காமத்தில் ஈடுபட்டதாக வெறுமே கற்பனை செய்து கொண்டு வீடு செல்ல வேண்டும் என்று சொன்னால் இவ்வளவு பணத்தை அளிப்பீர்களா?” என்றாள். “பணத்தை அளித்த குறுஞ்செய்தி வந்துவிட்டதா?” என்று நான் கேட்டேன். அவள் முகம் சற்று மாறி “ஆமாம்” என்றாள். அதை மாற்றும்பொருட்டு நான் “காமத்தில் நீ புதிதாக எனக்கு எதைக் கற்றுத்தரப்போகிறாய்?” என்றேன். “உண்மையில் உங்களுக்கு என்ன தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போதெல்லாம் இணையத்தில் இல்லாததே இல்லை. எனது பாட்டி ஒருமுறை இணையத்தில் இந்த படங்களை மட்டும் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார். இப்படியெல்லாமா இப்படியெல்லாமா என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். நாற்பது ஆண்டுகாலம் கெய்ஷாவாக வாழ்ந்த அனுபவம் உடையவள்” என்றாள். நான் சிரித்து “ஆம். மனித உடலில் இனி என்ன செய்வதற்கு உண்டென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றேன். “உனக்குத் தெரியுமா? தூக்கு போட்டுக் கொண்டு உறவு கொள்ளும் முறை ஒன்று உண்டு” அவள் கண்கள் இடுங்கச் சிரித்தபடி ”தூக்குப்போட்டபடியா?” என்றாள். “ஆம். கழுத்தில் சுருக்கை மாட்டிக் கொண்டு பெண்ணுடன் குலாவுவார்கள். உச்சகட்டம் நெருங்கும்போது காலின் கீழ் இருக்கும் முக்காலியை உதைத்துவிடுவார்கள். கழுத்து இறுகி, மூச்சு நின்று மூளைக்கு ரத்தம் போவது குறையும் தருணத்தில் பலவகையான மாயக்காட்சிகள் தோன்றும். அப்போது காமத்தின் உச்சகணம் நிகழவேண்டும். மிகச் சரியான தருணத்தில் கயிறை அழுத்திக் கீழே விழவைத்து சுருக்கை விடுவித்து ஆக்சிஜனை கொடுத்து உயிரை மீட்டுவிடுவார்கள். காலம், இடம் எல்லாம் அழிந்து காமத்தின் உச்சம் மட்டுமே நிறைந்த ஒன்று அந்தக்கணம் என்கிறார்கள்” “பாவம், அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அப்படி தேடிச்செல்லத் தொடங்கினால் சாவுவரை செல்லமுடியும், அவ்வளவுதான்” என்று அவள் சொன்னாள். நான் “இப்படி செய்யப்பட்ட முயற்சியில் ஒருவர் இறந்து அதை போலீசார் புலன் விசாரணை செய்த போது தான் இப்படி ஒரு இணையக் குழுமம் இருப்பதே தெரியவந்தது” என்றேன். ““பலவகையான பைத்தியங்கள் இருக்கிறார்கள். உறவின்போது கேவலமாக வசை பாடிக் கொள்வது, கொடூரமாக வதைத்துக் கொள்வது, பலவகையான மாத்திரைகளை உண்பது, மூளைக்குள் அதிர்வுகளை அளிக்கும் ரசாயனங்களை உடலில் செலுத்திக் கொள்வது. உச்சகட்டம் நிகழும் போது சரியான தருணத்தில் தலையில் உடலிலும் மின்சார அதிர்ச்சி அளிக்கும் ஒரு முறை கூட உள்ளது. என்ன செய்தாலும் அதற்கு அடுத்த கட்டம் ஒன்று தேவைப்படுகிறது” என்றேன். அவள் சொல்லவேண்டியதை எல்லாம் நான் சொல்கிறேன் என்று பட்டது. “நாம் இதை ஏன் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று நான் கேட்டேன். “நீங்கள் தான் இதை பேச விரும்புகிறீர்கள். இதைச் சுற்றி ஒரு மர்மத்தை கட்டமைக்க விரும்புகிறீர்கள்” என்று அவள் சொன்னாள். “இருக்கலாம்… இதுசாதாரணமாக முடியக்கூடாது என ஆசைப்படுகிறேன்” என்றேன். அவள் “இங்கும் அதெல்லாம் இருந்தது. பழைய காலத்தில் ஜப்பனிய அரசர்கள் தங்கள் உறவுகொள்ளும் பெண்ணின் கழுத்தை பட்டு நூலால் இறுக்கியபடியே அதைச் செய்வார்கள். மூச்சு திணறி அவள் இறக்கும் அந்த கடைசித்துடிப்பு அவருடைய உச்ச கணமாக இணையும்போது அது மிகப்பெரிய இன்பத்தை அளிக்கிறது என்பார்கள்” என்றாள். நான் சிரித்தபடி “ஆம் , அடுத்தபடி சாவு அல்லது கொலை என்பதுவரை சென்றுவிட்டார்கள்” என்றேன். “உண்மையில் உடல் சார்ந்த எல்லாமே எனக்கும் சலித்துவிட்டன. விசித்திரம் என்பது எதுவரை என்று தெரிந்துவிட்டது. கற்பனையில் எதாவது புதிதாக நடக்குமா என்று பார்க்கிறேன். இந்த நிகழ்காலத்திலிருந்து முன்னோ, பின்னோ சென்று கொண்டிருக்கிறேன். விண்வெளியில் காமம் கொண்டாடலாம். அல்லது செவ்வாய் கிரகத்தில், அல்லது சோழர் காலத்தில் ஒரு பரத்தையுடன், அல்லது ஒரு கெய்ஷாவுடன்” என்றேன். அவள் சிரித்து, “இதை முன்னரே சொல்லியிருந்தால் என் வீட்டுக்கு வரச்சொல்லியிருப்பேன். அங்கு இருநூறாண்டு பழைமையான அறைகள் இரண்டு உள்ளன. என் பாட்டி அணிந்த பழைய கெய்ஷா உடைகளும் நகைகளும் கூட இருக்கின்றன” என்றாள். “பரவாயில்லை இது ஒரு பாவனை தானே, நீ இப்போது இருநூறாண்டு முன்பிருக்கும் ஒரு கெய்ஷா. நான் இருநூறாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இங்கு வியாபாரம் செய்யவந்த ஒரு கடல்வணிகன்” அவள் ”நீங்கள் அரச குலத்தார் அல்லவா?” என்றாள். “ஆம்” என்றேன். அவள் சிரித்தபடி “சரி அதுவும் ஒரு பாவனை தானே…” என்றாள். நான் உரக்க சிரித்துவிட்டேன். சிரிக்கச் சிரிக்க இருவரும் இயல்பான மனநிலைகொண்டோம். ஒயினும் இணைய ஒரு மெல்லிய மிதப்பு எங்களை ஆட்கொண்டது “இப்போது என்ன செய்ய வேண்டும்? நான் ஒரு கெய்ஷாவாக நடிக்க வேண்டும் அல்லவா?” என்றாள். “ஆம். கெய்ஷாவால் உபரிசிக்கப்படும் வணிகனாக நானும் நடிக்கிறேன்” என்றேன். அவள் எழுந்து பழைய ஜப்பானியய நடனஅசைவுகளுடன் ஜப்பானிய மொழியில் ஏதோ சொன்னாள். நான் சிரித்தபடி மெத்தையில் விழுந்துவிட்டேன். அவள் நிறுத்தி இடையில் கைவைத்து “ஏன்?” என்றாள். “கடந்து போனவை இந்த நிகழ்காலத்தில் அவை எல்லாம் கேலிப்பொருளாகத்தான் இருக்கும். இன்று டோக்கியோவின் தெருவில் ஒரு சாமுராயைப்பார்த்தால் மக்கள் அவருக்கு காசுகளை வீச ஆரம்பிப்பார்கள். அவர் தன் கடானாவால் முதுகைச் சொறிந்துகாட்டினால் அது அதற்கான கருவி என்று நம்புவார்கள்” அவள் சிரித்தபடி பாய்ந்து மெத்தையில் விழுந்து என் தோள்களைக் கட்டிக் கொண்டாள். உதடுகளில் உதடு பதித்து ஆழ்ந்து முத்தமிட்டாள். பின்பு என் மேல் கால் போட்டு ஏறி அமர்ந்து தோள்களைப்பற்றி என் கண்களுக்குள் நோக்கியபடி “எதற்கு பாவனை? எந்த பாவனையும் கிழித்து பார்க்கக்கூடிய புத்திசாலி நீங்கள். ” என்றாள். “ஆம் அதுதான் என்னுடைய பிரச்னை” என்றேன். அவள் “கிழித்து கிழித்து எங்கே செல்கிறோம். கடைசியில் கசப்பும் துயரமும் தான் இருக்கும். ” என்றாள். “யாருக்குமா?” என்று நான் கேட்டேன். “யாராக இருந்தாலும். கிழித்து சென்றால் விஷம்தான் மிஞ்சும்” என்று அவள் சொன்னாள் ஒருவரை ஒருவர் கண்களுக்குள் நோக்கிக் கொண்டோம். நான் அவளை சுழற்றி கீழே படுக்க வைத்து அவள் மேல் படர்ந்து. அவள் உதடுகளை முத்தமிட்டேன். மிகச்சிறிய உதடுகள். “மிகச்சிறியவை. எனக்கு இவை போதாது” என்றேன். “கற்பனையில் வளர்த்துக்கொள்ளுங்கள் அப்படித்தானே காமத்தில் செய்யவேண்டும்” என்றாள் அவள். சிரித்தபடி இருவரும் முத்தமிட்டுக் கொண்டோம். “நான் கெய்ஷா அல்ல, ஒர் எளிய பெண் என்று பாவனைசெய்வோம். நீங்களும் ஒரு எளிய பெண்ணை விரும்பி வந்த ஒருவர். இங்கு இப்படி உடலால் இணைந்திருப்பது நமக்குப் பிடித்திருக்கிறது. இதற்கப்பால் ஒன்றும் தேவையில்லை, என்ன சொல்கிறீர்கள்?” என்று அவள் சொன்னாள். நான் அவள் காதில் “கெய்ஷாவின் காமக்கலை என்கிறார்களே? அது உண்மையில் என்ன?” என்றேன். “இதுதான்” என்று அவள் சொன்னாள். “அன்றைய அரசர்கள் அடுக்கடுக்காக ஏராளமான பட்டு ஆடைகளையும் நகைகளையும் அணிந்திருப்பார்கள். உடைவாளையும் மணிமுடியையும் விலக்கவே மாட்டார்கள். பேசுவது எல்லாமே முறைமை சார்ந்த சொற்களைத்தான். அவர்களைச் சுற்றியிருக்கும் அத்தனை பேருமே அடிமைகளும், ஊழியர்களும், அவர்களுக்குச் சமானமான நிலை கொண்ட பிற அரசர்களும் தான். ஒவ்வொருவரிடமும் எப்படி பேசவேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வகுக்கப்பட்ட நெறிகள் இருந்தன. ” அவள் தொடர்ந்தாள். “அவர்கள் வாழ்வதில்லை, நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய காவியத்திற்குள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் பேசுவதும் செய்வதும் உடனடியாக கவிஞர்களால் பதிவு செய்யப்பட்டு நூல்களாக வெளிவருகின்றன என்பதை அவர்கள் அறிவார்கள். காதலுக்கும் காமத்துக்கும் அவர்கள் செல்வது கூட பலவகையான வசனங்களை மனப்பாடம் செய்து பயின்று, பலவகையான நடிப்புகளைப்பழகிக்கொண்டுதான். மனைவிகளும் காதலிகளும்கூட அவர்களுக்கு அடிமைகள். அடிமைப்பெண்கள் அவர்களுக்கு பழக்கப்பட்ட விலங்குகள். செயற்கையான நாடக நடிப்பில் இருந்து தொடங்குவார்கள். அதன் மறு எல்லைக்குச் சென்று விலங்கு போல அந்தப்பெண்ணை கிழித்து கொன்று காமம் அடைவார்கள். ” “கெய்ஷாக்களிடம் வரும்போதும் அவர்கள் அந்த பாவனைகள் அனைத்தையும் கொண்டுதான் வருவார்கள். கெய்ஷா அவர்களின் அவர்களை அஞ்சாமலும் அவர்களின் ஆணைகளுக்குப் பணியாமலும் அதேசமயம் அவர்களை கோபம்கொள்ளச்செய்யாமலும் இருக்கும் திறமைகொண்டவள். அவர்கள் அணிந்துவரும் பாவனைகள் அனைத்தையும் களைந்து வெறும் மனிதனாக ஆக்கிவிடுவாள். அதன் பின் அவளுடன் உறவு கொள்ளும் போது அவர்கள் எளிய விலங்குகளாக இருப்பார்கள். அந்தச் சுதந்திரத்தை அவர்கள் வேறெங்கும் அனுபவித்திருக்க மாட்டார்கள். அப்படி ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களின் உண்மை உருவத்தை மீட்டு எடுக்கும் கலையைத்தான் கெய்ஷாக்கலை என்கிறார்கள். ” ”எனக்குள்ளிருந்து என் உண்மை உருவத்தை மீட்டெடு பார்ப்போம் என்று” நான் குறும்பாக சிரித்தபடி சொன்னேன். “கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறேன். காலைக்குள் முழுமையாக வெளியே எடுத்து வைத்துவிடுவேன் போதுமா?” என்று அவள் சொல்லி “என்ன கேள்வி” என்று செல்லமாக என்னை அடித்தாள். என் மூக்கைப்பிடித்து இழுத்து “என்னவேண்டும் உங்களுக்கு?” என்றாள் “நான் எங்கும் ஆடையின்றி நிற்கவே விரும்புவேன். ஆனால் ஆடையின்றி நிற்பதே கூட ஒரு பாவனைதான் என்று ஆகிவிடுகிறது” என்று நான் சொன்னேன். “ஆமாம். இங்கே வடக்கு பகுதிகளில் வெந்நீர் ஊற்றுக்கள் உண்டு. ஆன்சென் என்பார்கள் அங்கு ரெய்க்கோன் எனப்படும் நிர்வாணமாக அனைவரும் சேர்ந்து குளிக்கும் குளியல்மையங்கள் இருக்கின்றன. அங்கு சென்று பார்த்தால் தெரியும் நிர்வாணமென்பதே ஒரு ஆடை மாதிரி. நிர்வாணத்தாலேயே நம் நிர்வாணத்தை மறைத்துக்கொள்ளமுடியும்” “ஆடையில்லாமை என்பதுமட்டும்தான் அது. அதற்கு அப்பால் ஏதாவது நிர்வாணம் உண்டா என்ன?” என்று நான் கேட்டேன். ”ஆமாம் அது புத்தர் சொன்ன நிர்வாணம்” என்றாள். “அடப்பாவி அதையா இப்போது எனக்கு அளிக்கப்போகிறாய்? அதற்கா அவ்வளவு பணம் வாங்கிக் கொண்டாய்?” என்று நான் செல்லமாக அலறினேன். “சரியான முட்டாள்” என்றபடி என் தோளை ஓங்கி அறைந்தாள். “அடிக்கிறாய்…” என்று சிணுங்கினேன். ”கெய்ஷாக்கள் அடிப்பதும் உண்டு. வசைபாடுவதும் உண்டு. மன்னர்களுக்கு அது பிடிக்கும். அவர்களை வேறுயார் அடிக்கமுடியும்?” என்றாள். ”இப்போது என்னை என்ன செய்யப்போகிறாய்?” என்றேன். “உங்களை கொஞ்சப்போகிறேன். நீங்கள் ஒரு ஆண். கொஞ்சி கொஞ்சி உங்களை ஒரு கைக்குழந்தையாக்குவேன். என் மடியில் போட்டுக் கொள்வேன். ” என்றாள். நான் அவள் காதில் “பால் கொடுப்பாயா…?” என்றேன். “சீ” என்று அவள் என் தலையில் கொட்டினாள். நுணுக்கமான கொஞ்சல்கள், பாவனைகள், பரிமாறுதல்கள் வழியாக எங்கள் உடல்களை ஒன்றை ஒன்று அறியச் செய்தோம். பின்னர் பேச்சு நின்றது. பின்னர் பார்வைகளும் இல்லாமல் ஆயின. உடல்கள் மட்டும் ஒன்றை ஒன்று அறிந்தன. பிற எந்தக் காமத்தையும் போலத்தான் அது என்று ஒரு தருணமும், அது மிக விசேஷமானது என்று இன்னொரு தருணமும் தோன்றிக்கொண்டிருந்தது. எல்லாக் காம உறவைப்பற்றியும் அப்படித்தானே தோன்றும் என்றும் நினைத்துக் கொண்டேன். அவள் என் உடலுடன் ஒட்டிக் கொண்டு தன் முகத்தை என் தோளில் புதைத்து படுத்துக் கொண்டாள். மஞ்சள் இனத்தவருக்கே உரிய கரிய பளபளப்பு கொண்ட தலைமுடி. சிறிய காது. சற்றே உந்திய கன்ன எலும்புகள். மெலிந்த அவள் தோள்களை கைகளால் வருடிக் கொண்டு படுத்திருந்தேன். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சொல்லவா?” என்று கண்களை மூடியபடி சொன்னாள். “சொல்” என்றேன். “இதுவும் பிற எந்தக் காமத்தையும் போலத்தானே இதற்கா இவ்வளவு பெரிய தொகை…?” என்றாள். “பொய்” என்று நான் அவளை தட்டினேன். “இந்த தருணத்தில் பணத்தை பற்றி நினைக்கும் அளவுக்கு நான் கீழ்மையானவன் அல்ல” என்றேன். “நான் அப்படி சொல்லவில்லை. கெய்ஷா என்ற வார்த்தை அதைப்பற்றிய கதைகள் இதெல்லாம் உங்களுக்கு ஏமாற்றுவேலை என்று தோன்றிவிட்டது. அல்லவா?” என்றாள். “இல்லை இந்த ஒரு தருணத்தை அழகாக்க அவை எப்படியோ உதவியிருக்கின்றன. ” என்றேன். “என்ன சொன்னாலும் இது சாதாரணமானதுதான், அதை மறைக்கமுடியாது” என்றாள் அவள். “இல்லை” என்றபடி நான் அவள் கழுத்தில் முத்தமிட்டேன். அவள் என் காதில் ”நான் ஒன்று சொல்லவா. . ?” என்றாள். “சொல்” என்றேன். “நான் கெய்ஷா இல்லை” என்றாள். “தெரியும்” என்று நான் சொன்னேன். “எப்படி?” என்றாள். “நீ உள்ளே வந்த போதே தெரியும். அல்லது அவன் உன்னை அழைக்க செல்லும்போதே தெரியும்” என்றேன். அவள் பெருமூச்சு விட்டாள். ”நன்றி” என்றாள். “ஏன்?” என்றேன். “நான் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என்ற குற்ற உணர்வில் இருந்தேன். இப்போது அது இல்லை” என்றாள். நான் “என்னை அவ்வளவு எளிதாக யாரும் ஏமாற்ற முடியாது பல ஏமாற்றங்களையும் பார்த்து வருந்தி அழுது பழகியபடித்தான் தொழிலில் வேரூன்றினேன். ஊடகத்தொழில் இன்று அரசுடன் செய்யும்போர் போல” என்றேன். “அப்படியானால் சரி” என்று அவள் சொன்னாள். “நீ என்ன படிக்கிறாய்?” என்று நான் கேட்டேன். “இலக்கியம்” என்றாள். “எந்த மொழி?” என்றேன். “ஜப்பானிய மொழி. ஆங்கில இலக்கியமும் இணைந்து தான் இங்கே பாடத்திட்டம்” என்றாள். நான் “இலக்கியத்தில் எனக்கும் ஈடுபாடு உண்டு. ஒரு இலக்கியப் பேராசிரியனாகத்தான் என்னை சின்ன வயதில் கற்பனை செய்து கொண்டேன். ” என்றேன் ”நீங்கள் இலக்கியம் படித்தீர்களா?” என்றாள். “இல்லை நான் வணிகவியல் தான் படித்தேன். பெரிய இலக்கியவாதி ஆகிவிடவேண்டும் என்ற கனவு இருந்தது. கூடவே புகழ் பெற்ற பேராசிரியராக வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அதன்பின்னர்தான் இதழியல். அது என் குலத்தொழில்” என்றேன். “பேராசிரியராக இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்களா?” என்று அவள் கேட்டாள். ”இப்பொழுது நான் மகிழ்ச்சியாக இல்லை என்று யார் சொன்னது. இதழாளர்கள் இதழாளர்த்தொல்லை இல்லாத பிரமுகர்கள். அவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கமுடியும். ” என்றேன். அவள் சிரித்தபடி ”அது சரிதான்” என்றபடி என்னை மீண்டும் அணைத்துக் கொண்டாள். அவள் மார்புகள் மிகச்சிறிதாக, இல்லையென்றே சொல்லத்தக்கவையாக இருந்தன. இடைக்குக்கீழே கூட சிறுவர்களுக்குரியவை போல வளராமல் இருந்தது. என் எண்ணத்தை புரிந்துகொண்டு அவள் ”உங்கள் ஊர்பெண்கள் கைகளும் இடைகளும் மிகப்பெரியவை அல்லவா?” என்றாள். “ஆம் இடுப்பும் மார்புகளும் கூடப்பெரியவை தான்” என்றேன். “ஆகவே தான் மாறுதலுக்காக கிழக்கு நோக்கி வருகிறார்கள் போல…” என்றாள். “இங்கிருந்து யாரும் அங்கே வருவதில்லையே” என்றேன். “ஆம் பயந்து கொள்கிறார்கள் என நினைக்கிறேன்” என்று சொல்லி அவள் சிரித்தாள். இருவரும் மீண்டும் கொஞ்சம் உடல்குலவினோம். நான் அவளிடம் “யசுநாரி கவபத்தாவின் தூங்கும் அழகிகளின் இல்லம் நினைவுக்கு வந்தது” என்றேன். “நினைத்தேன். கெய்ஷாக்களைப்பற்றி அவருடைய பனிபூமி என்ற நாவலில் படித்திருப்பீர்கள். ” என்றாள். “ஆம் நீ இங்கு வருவதற்கு முன் அந்த நாவலைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ” என்றேன். என் கழுத்தை வளைத்து “இதற்குப் பிறகு ஏன் தூங்கும் அழகியை நினைத்தீர்கள்?” என்றாள். “அதில் வயதான ஒருவர் தன் உடலில் வற்றிக் கொண்டிருக்கும் உயிர்ச் சக்தியை மீட்டெடுத்து ஆயுளைக் கூட்டுவதற்காக இளம்பெண்களுடன் படுத்துக் கொள்ளும் வசதி செய்யும் ஒரு ரகசிய விடுதிக்கு வருகிறார் அல்லவா…?” என்றேன் “ஆம், வயதான எகுச்சி” என்று விழிகளில் சிரிப்பு எஞ்சியிருக்க அவள் சொன்னாள். ”மயக்கமருந்து கொடுக்கப்பட்ட பெண்களை அவருடன் படுக்கவைக்கிறார்கள். இரு நிர்வாணப் பெண்களின் நடுவே எகுச்சி படுத்திருக்கிறார். அவர் உடலில் அவர்களின் உயிர் வந்து சேர்ந்து ஆண்மை அதிகரிக்கும் என்று நம்புகிறார். ஆனால் அதில் ஒரு பெண் மயக்கமருந்து மிகையாகி இறந்துவிட்டிருப்பாள். அன்று இரவு முழுக்க பிணத்துடன் தான் படுத்திருந்தார். ” என்றேன் அவள் முகம் சிறுத்தது. தலை குனிந்து கைவிரல்களால் என் விலாவில் வருடிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கி குனிந்து “என்ன?” என்றேன். “ஒன்றுமில்லை” என்றாள். தலையாட்டியபோது முடிக்கற்றை சரிந்து விழிகளை மறைக்க அள்ளிப்பின்னுக்குப் போட்டுக்கொண்டாள். “இல்லை, உன் மனம் மாறிவிட்டது” என்றேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்” என்றே என் கண்களைப்பார்த்து, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரிகிறது” என்றாள். “நான் சாதாரணமாக நினைவுக்கு வந்த கதையைத்தானே சொன்னேன்” என்றேன். ஏன் அந்தக் கதை நினைவுக்கு வருகிறது?” என்றாள். “ஏன்?” என்று நான் அவளைக் கேட்டேன். அவள் அழுத்தமான குரலில் “பிணத்துடன் தூங்குதல்…” என்றாள். அவள் என்ன உத்தேசிக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு நான் அவளை இறுக அணைத்து “இல்லை, நான் அப்படி எதையும் உத்தேசிக்கவில்லை” என்றேன். “பரவாயில்லை” என்று அவள் சொன்னாள். “இல்லை நான் உண்மையிலேயே அப்படி எதையும் எண்ணவில்லை” என்றேன். “இங்கு ஒரு சொல் உண்டு. விபச்சாரியுடன் உறவு கொள்வது பிணத்துடன் உறவு கொள்வது போல…” என்றாள். “நம்பு நான் அப்படி உத்தேசிக்கவில்லை” என்று அவளை இறுக அணைத்தேன். “சத்தியம்” என முத்தமிட்டேன். “நீங்கள் எண்ணவில்லை. ஆனால் உங்கள் உள்ளம் உணர்ந்தது” என்றாள். “இல்லை உண்மையிலேயே இல்லை” என்று அவள் கைகளைப்பற்றிச் சொன்னேன். “நான் எங்குவேண்டுமானாலும் சத்தியம் செய்கிறேன் உண்மையிலேயே இல்லை. இந்த இரவில் உன்னுடன் மிக நெருக்கமாகத்தான் உணர்ந்தேன். இவ்வளவு நெருக்கமாக எந்தப்பெண்ணிடமும் நான் உணர்ந்ததே இல்லை. ” என்றபோது என்குரல் சற்று உடைந்தது. “இதை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. ஒரு வாடிக்கையாளன் விபச்சாரியை எந்த வகையிலும் சமாதானப்படுத்தவேண்டிய அவசியமில்லை” என்றாள். “நான் உண்மையில் அப்படி எண்ணவில்லை நான் இதற்குமேல் எப்படி சொல்லவேண்டும்…?” என்று என்னை மீறி எழுந்த உணர்ச்சியுடன் சொன்னேன். அவள் “நான் அதைப் பெரிதாக நினைக்கவில்லை மறந்து விடுங்கள்” என்றாள். “இல்லை நீ அப்படி நினைக்கிறாய் என்பது எனக்கு பதட்டத்தை உருவாக்குகிறது. நான் அப்படி நினைக்கவே இல்லை. ” என்றேன் அவள் அதைக்கேளாதவளாக குனிந்தே இருந்தாள். கரிய பளபளக்கும் முடியால் முகம் மூடியிருந்தது. சட்டென்று ஒரு விசும்பல் ஒலி. வேறெங்கோ எவரோ அழுவதுபோல அதைக்கேட்டேன். அவள் என் மார்பில் முகம் புதைத்து விசும்பி அழத்தொடங்கினாள். மேலும் சற்று நேரம் கழிந்து தான் அவள் அழுகிறாள் என்பதே புரிந்தது. அவளை விலக்கி “அழுகிறாயா? ஏன்?” என்றேன். புரண்டு தலையணையில் முகம் புதைத்து உடல்குலுங்க அழத்தொடங்கினாள். நான் அவளை திருப்பி “சொல் ஏன் அழுகிறாய் நான் என்ன தவறாக சொல்லிவிட்டேன் தவறாக சொல்லியிருந்தாலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றேன். “மன்னிப்பா? நீங்களா? நான்தான் மன்னிப்புகோரவேண்டும். நான் சரியாக நடந்து கொள்ளவில்லை” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றேன். கண்ணீர்த்துளிகள் நின்ற இமைகளுடன் “அவ்வளவு பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதிதான் எனக்கு வரும். ஆனாலும் என் கடமை. அவர்கள் என்னிடம் சொன்ன எதையும் நான் செய்யவில்லை” “இல்லை” என்று ஏதோ சொல்லப்போனேன். “நான் கெய்ஷாவாக நடிக்கவில்லை. உங்களை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை” என்றாள். “இல்லை அப்படி அல்ல” என்று நான் அவள் தோளைப்பற்றி உலுக்கி சொன்னேன். அவள் அழுகை சட்டென்று மேலும் வலுத்தது. உடலை நன்றாக குறுக்கிக் கொண்டு சிறுகுழந்தை போல அழுதாள். நான் அவள் தோளைத் திருப்பி முகத்தை பார்த்து ”இதற்கு மேல் நான் என்ன சொல்லவேண்டும். நான் உண்மையில் எதையும் நினைக்கவில்லை” என்றேன். “ஆம் பிணம்தான். அப்படித்தான் நான் எல்லாரிடமும் இருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அப்படி இருக்கவில்லை. மற்ற அனைவரும் பிணமென்று என்னை நினைக்க வேண்டும் என்றே உண்மை நினைப்பேன்.ஆனால் நீங்கள் அப்படி நினைப்பது என்னைப் புண்படுத்துகிறது” முகத்தை துடைத்து கூந்தலை அள்ளி பின்னால் குவித்து கழற்றிவைத்த கிளிப்பை டீபாயிலிருந்து எடுத்து அணிந்துகொண்டாள். மெல்ல அமைதியானாள் “நீங்கள் என்னை பெண் என்று நினைக்கவேண்டும் என்று நினைத்தேன், நீங்கள் என்னை பிணம் என்று நினைக்கிறீர்கள்…” என்றாள். “இல்லை இல்லை…. ” என்று அவள் கன்னங்களிலும் இதழ்களிலும் முத்தமிட்டுச் சொன்னேன். “நான் மிகமிக ஏழை. நாங்கள் ஒன்பது பேர் ஒரே அறையில் வசிக்கிறோம். என் மூன்று இளையவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது படிப்பை முடித்து ஒர் ஆசிரியர் வேலைக்கு சென்றால் இதிலிருந்தெல்லாம் மீள முடியும் என்று நினைத்தேன்” என்று அவள் சொன்னாள் “நாங்கள் கெய்ஷா குடும்பம் அல்ல. எனது மூதாதையர்கள் கிராமத்தில் விவசாயம் செய்தார்கள். அங்கிருந்து பிழைப்பு தேடி டோக்கியோவுக்கு வந்தோம். இங்கே எல்லாமே விலை உயர்ந்தவை. உடலை நன்றகா விரித்து படுத்துக் கொள்வதற்கான ஒர் இடத்திற்காக மாதம் முழுக்க வேர்வை சிந்த வேண்டும்” நான் அவள் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். அழுதபோதிருந்ததை விட இப்போது மேலும் துயர்கொண்டிருந்தது அவள்முகம். சிறிய தந்தச்சிமிழ் போன்ற முகம். “அப்பா இருந்த வரைக்கும் நாங்கள் உழைத்து தான் வாழ்ந்தோம். அப்பா இறந்து அம்மாவுக்கும் குதிகால் வலி வந்து நிற்க முடியாமல் ஆனபோது அக்காவுக்கும் எனக்கும் வேறு வழி தெரியவில்லை. அப்போதுதான் இவர்களின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் எனக்கு கொடுப்பது மிகச்சிறிய தொகைதான். அதற்கு அவ்வளவு அவமானம்…” கண்களைத் துடைத்துக் கொண்டு “இதையெல்லாம் நான் சொல்லக்கூடாது. சொன்னேன் என்று தெரிந்தால் அவர்கள் என்னைத் தண்டிப்பார்கள்” என்றாள். “இல்லை நான் யாரிடமும் சொல்லப்போவதில்லை. ” என்றேன். அவள் பெருமூச்சுடன் “இதை நான் ஏன் சொல்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. யாரிடமும் இதைச் சொன்னதில்லை இந்தக் கெய்ஷாவின் வீட்டுக்கு நீங்கள் வந்தீர்கள் என்றால் ஐந்து நிமிடம் அங்கே இருக்க உங்களால் முடியாது. ஒரே அறையில் எட்டு பேர் வாழும்போது அது பன்றித் தொழுவம் போல் ஆகிவிடுகிறது.” என்றாள். ”என்னை மன்னித்துவிடு” என்று சொல்லி அவள் இடையை வளைத்து “நான் இதெல்லாம் ஓரளவுக்கு இப்படித்தான் என்று ஊகித்திருந்தேன். ஆனால் எங்கோ எனக்கு ஒர் அகங்காரம் இருந்திருக்கிறது. உன் தோரணையைப் பார்த்தபோது உன்னை உடைத்து உன்னை அழவைக்க வேண்டும் என்று அது ஆசைப்பட்டிருக்கிறது. நீ மனமுடைந்து அழுவதைப் பார்த்தபோது எனக்கு எவ்வளவு நிறைவு வருகிறது என்று கவனித்தேன். அப்போதுதான் என்னைப்பற்றி நானே தெரிந்து கொண்டேன். என்னையே நான் வெறுத்தேன்” என்றேன். அவள் என்னை அணைத்துக் கொண்டு ”பரவாயில்லை ஆண்களின் இயல்பு தானே அது? வலிக்க வைக்காத ஆண் என்று உலகத்தில் யாரும் இல்லை என்று என் அம்மா சொல்வார்கள்” என்றாள். பின்பு என் கண்களைப்பார்த்து ”ஒன்று மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்” என்றாள். “சொல்” என்றேன். “நான் பிணமில்லை” என்றாள். ”நான் அப்படி சொல்லவில்லை” என்றபடி நான் அவளை முத்தமிடத்தொடங்கினேன். என் கைகளில் அவள் உருகித் திரவமாக ஆகப்போகிறவள் போல குழைந்தாள். “நான் பெண். . நான் பெண். . ” என்று முனகிக் கொண்டிருந்தாள். அம்முறை முற்றிலும் புதிய ஒரு பெண்ணுடன் இருந்தேன். முதல் பெண்ணிடம் போல. பூமியில் மனிதர்களே இல்லாத போது தனித்து விடப்பட்ட இருவரைப்போல. அடுத்த கணம் இறந்து விடப்போகிறவர்களைப்போல. பின்பு தழுவியபடி படுத்திருக்கும்போது அவள் இமைகளில் கண்ணீர் படிந்திருந்தது. மூடிய இமைகளின் விளிம்பில் மயிர் வெண்ணிறப்பீங்கான்மேல் மயிற்பீலி விளிம்பு போல படிந்திருந்தது. அதை என் கைகளால் தொட்டு வருடியபோது அதிலிருந்த ஈரம் தெரியவந்தது. “மீண்டும் அழுதாயா?” என்றேன். “இல்லை” என்றாள். “கண்ணீர் இருக்கிறது” என்றேன். “அழுதால்தான் கண்ணீர் வருமா…?” என்றாள். இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன. “இல்லை” என்றபின் அவளை மீண்டும் அணைத்துக் கொண்டு அவள் காதில் “நானும் அழுதேன்” என்றேன். ”உண்மையாகவா…?” என்றாள். “ஆம், நான் அழுதே நிறைய வருடங்கள் ஆகிறது” என்றேன். என் காதில் என் உடலுக்குள் இருந்தே பேசுவதுபோல “எத்தனை வருடங்கள். . ?” ஒரு கணம் தாளமுடியாத அழுத்தத்தில் திளைத்து மெல்ல விடுபட்டு “இருபது வருடங்கள்” என்றேன். “உங்கள் மனைவி இருக்கிறார்களா. . ?” என்று கேட்டாள். “பிரிந்து போய்விட்டாள்” என்றேன். “மன்னிக்கவேண்டும் நான் அதைக் கேட்டிருக்ககூடாது” என்றாள். “இல்லை, பரவாயில்லை, நீ அறியவிரும்புவதைக்கேள்” என்று நான் சொன்னேன். “வேண்டாம், உங்களுக்கு அது துயரளிக்கிறது” என்றாள். “இல்லை நான் எவரிடமும் சொன்னதில்லை. உன்னிடம் சொல்லியாக வேண்டும்” என்றேன். “வேண்டாமே. நாம் ஓர் உயரத்தில் இருக்கிறோம். அதிலிருந்து ஏன் கீழிறங்க வேண்டும்?” என்றாள். “இது கீழிறங்கல் அல்ல. இந்தச் சுமைகளை இறக்காவிட்டால் நான் எப்போதும் மண்ணில் தான் நின்று கொண்டிருப்பேன்” என்றேன். “சொல்லுங்கள்” என்று என்னை அணைத்து என் தலைமயிரை வருடத்தொடங்கினாள். நான் என் அப்பாவின் பங்குதாரரின் மகளை இளமையிலேயே மணக்கவேண்டியிருந்தது. ஒரு ஆடம்பரமான அசட்டு நாடகம் போல நடந்த எங்கள் திருமணம். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் வளர்ந்து வந்த மனக்கசப்புகள். சிறுமைசெய்யப்பட்டபோது நான் அடைந்த வன்முறை வெறி. நான் வணிகத்தில் வெற்றி பெறும் தோறும் என் மனைவி அடைந்த ஏமாற்றம். அவள் தன் அடிமையாகவே என்னை வைத்திருக்க வேண்டுமென்று அவள் எடுத்த முயற்சிகள். இறுதியில் ஒரு குழந்தையுடன் அவள் பிரிந்து சென்றது. அதற்குப்பிந்தைய ஆழ்ந்த மனக்கசப்பு “பெண்கள்மீதான கடும் கசப்பாலேயே நான் காமத்தில் திளைத்தேன்” என்றேன். “ஆம், பலர் அப்படித்தான்” என்றாள். “நான் செய்தவை எல்லாம் அவளுக்கு எதிரானவை. எதற்கு எதிராக செயல்பட்டாலும் சரி எதிர்மறைச்செயல்பாடு கடைசியில் ஏமாற்றத்தை மட்டுமே எஞ்சவைக்கிறது” அவள் என்னை மென்மையாக முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள். ஒருவார்த்தை கூட சொல்லக்கூடாது என்று அறிந்திருந்தாள். நான் பெருமூச்சுவிட்டு மெல்ல கண்களை மூடி தளர்ந்தேன். என் இமைகள் நனைந்திருந்ததை அவள் தன் விரல்களால் தொட்டு “ஈரம்” என்றாள். “ஆம்” என்றேன். “தூங்குங்கள்” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்றபடி அவள் தோளில் முகம் புதைத்துக்கொண்டேன் உறக்கம் வந்து என் எண்ணங்களை நனைந்து படியச் செய்வதற்கு முன்பு “நீ என்னுடன் இரு” என்றேன். என் உதடுகள் அவள் தோளில் கசங்கியமையால் குரல் போதையிலென ஒலித்தது. “சரி” என்று அவள் சொன்னாள். “என்னிடம் பணம் இருக்கிறது. உனக்கு வேண்டியதை எல்லாம் நான் தருகிறேன். நீ என்னுடன் இருந்தால் போதும்” அவள் என் கனவுக்குள் என “சரி” என்றாள். என் உள்ளம் உருகிக்கொண்டிருந்தது. கண்ணீர் அவள் தோள்களில் கழுத்தில் விழுந்தது. மூக்கை உறிஞ்சிக்கொண்டேன். அடைத்த தொண்டையைச் செருமி “நீ என்னுடன் இருக்கவேண்டும்…” என்றேன். “ம்” என்றபோது அவள்குரலும் அடைத்திருந்ததை உணர்ந்தேன். முத்தமிட்டபோது அவள் கண்ணீர் என் முகத்தில் படிந்தது “நான் இன்னொரு மனித உயிருடன் இத்தனை நெருக்கமாக ஆவேன் என்று நம்பவே இல்லை. எனக்கு யாருமில்லை. நீ என்னுடன் இருந்தே ஆகவேண்டும்” என்றேன். அவள் மூச்சொலிபோல் “இருப்பேன்” என்றாள். ”இறுதி வரை…?” என்ரேன். ”இறுதி வரை” என்றாள். அவளது அணைப்பில் முத்தங்களுடன் நான் துயின்றேன். காலையில் எழுந்தபோது எனது ஆடைகள் அருகே குறுமேடைமேல் மடித்து வைக்கப்பட்டிருந்தன. கைக்குட்டைகள் குறுந்துவாலைகள் எல்லாமே சீராக அடுக்கப்பட்டிருந்தன. காலைச்செய்தித்தாள் காத்திருந்தது. ஒரு பெண் வந்து போனதற்கு தடயமே இல்லாமல் சீராக இருந்தது அறை. https://www.jeyamohan.in/90446/?fbclid=IwdGRleAOivjtleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEefOHACDTwVR1IGZdDI3iMUUkyBDa8hiTuE9UMQXfxasmb_3FtnaEbMELEwjM_aem_N0Q_r5uLV3bqeex1S7GMiw

கெய்ஷா - ஜெயமோகன்

4 weeks 2 days ago

கெய்ஷா - ஜெயமோகன்

geisha-001

அவளை ஒரு கெய்ஷா என்றுதான் கூட்டிவந்தார்கள். நான் அவள் பெயரை கேட்டேன். “கெய்ஷாக்களுக்கு தனியாகப்பெயர் தேவையில்லை. இந்த இரவுக்காக ஒரு பெயர் உங்களுக்குத்தேவை என்றால் சூட்டிக்கொள்ளலாம்” என்றான் வழிகாட்டி. “தேவையில்லை, கெய்ஷா என்ற சொல்லே ஒருபெயர்போலத்தான் இருக்கிறது” என்றேன். “ஒரு கெய்ஷாவின் பெயரைப் பின்தொடர்ந்து சென்று நீங்கள் எதையும் அறிந்துகொள்ளமுடியாது” என்றான். அந்த எண்ணம் எனக்கு இருக்கவுமில்லை

கெய்ஷாக்கள் பழைய ஜப்பானிய அரசாட்சிக் காலத்தில் பிரபுக்களை உபசரிப்பதற்காக உருவாக்கப்பட்ட உயர்குடித் தாசிகள். கெய்ஷா என்றால் கலைபயின்றவள், அளிப்பவள் என்று பொருள். ஆணை மகிழ்விக்கும் கலையை ஆயிரம் வருடங்களாக கற்றுத் தேர்ந்தவர்கள். காமத்தை கலைகளாக விரித்து விரித்துச் செல்லும்போதும் அனைத்து முனைகளிலும் ஆணின் அகங்காரத்தையும் நிறைவு செய்யப்பயின்றவர்கள். நமது குலப்பெண்கள் ஆணின் அகங்காரத்தை அலட்சியம் செய்வதற்கு ஓரிரு வருடங்களிலேயே பழகிவிடுகிறார்கள்.

கெய்ஷாக்களின் காமக்கலைகளைப்பற்றி ஏராளமான புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. கையில் பணத்துடன் ஜப்பானுக்கு செல்லும் ஒவ்வொருவருக்கும் அந்தக் கனவு விதைக்கப்பட்டிருக்கும். அங்கு உயர்மட்டச் சுற்றுலா பயணிகளிடம் உள்ளூர் வழிகாட்டிகள் ஜப்பானியத் தேநீர் பண்பாடு, காகிதப் பொம்மைக் கலை, ஜென் பௌத்தம், ஹைகூ கவிதை, ஷிண்டோ மதம் என்று வழக்கமான சுற்றுலாக்கவர்ச்சிகளைப் பற்றி சொல்லிச்செல்கையில் மிக இயல்பாக வழுக்கி கெய்ஷாக்களுக்குள் செல்வார்கள். கேட்பவன் தன் தனி ஆர்வத்தை கண்களில் காட்டாமல் இருக்க முயன்றாலும் அவர்கள் அதை எப்போதும் அடையாளம் கண்டுகொள்வார்கள்.

பல வழக்கமான சொற்றொடர்களுக்குப் பிறகு “இப்போது இருக்கிறார்களா கெய்ஷாக்கள்?” என்று அவன் கேட்கால் இருக்க மாட்டான். “இருக்கிறார்கள், ஆனால் மிக அபூர்வமாகவே…” என்று வழிகாட்டி பதில் சொல்வான். மீண்டும் பல சொற்றொடர்களில் சுற்றியபின் வேறெங்கோ நோக்கியபடி “ஒரு கெய்ஷாவை சந்திக்க முடியுமா?” என்று பயணி வரலாற்றுப்பண்பாட்டு ஆர்வத்துடன் கேட்பான். “கடினம்” என்பான் வழிகாட்டி. மீண்டும் சொற்றொடர்கள். மீண்டும் விழிச்சந்திப்புகள். அதன் பிறகு “எத்தனை செலவானாலும் பரவாயில்லை” என்று பயணி சொல்லியாக வேண்டும்

கவலையுடன் “சற்று செலவேறியதுதான். என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவனுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன். விசாரித்துப்பார்க்கிறேன். ஒரு நாள் ஆகும். ஆனால் முழுமையாக உறுதி தரமுடியாது, மன்னிக்கவும்” என்று வழிகாட்டி சொல்வான். அவன் திரும்பிவரும்வரை நான் காத்திருந்தேன்

அந்த ஒரு முழுநாளும் அற்புதமானது. இணையத்திலும் வழிகாட்டி நூல்களிலும் சென்று கெய்ஷாக்களைப்பற்றி தேடி தெரிந்து கொள்ளலாம். திரும்பத் திரும்ப ஒரே விதமாக பதிவு செய்யப்பட்டிருக்கும் குறைவான தகவல்களிலிருந்து கற்பனைகளை விரித்தெடுக்கலாம்.

காமக்கலைகள்! காமத்தை எப்படி ஒரு கலையாக்க முடியும்? என்னதான் செய்தாலும் அடிப்படையில் அது அனைத்து விலங்குகளும் செய்யும் ஒரு செயல். சரியாகச் சொல்லப்போனால் மிருகத்தனமானது. அதிலிருக்கும் இன்பமே மிருகத்தனத்தின் களிப்புதான். மனிதர்கள் மனிதத்தன்மை என்று அவர்களுக்கு குழந்தையிலிருந்து கற்பிக்கப்பட்ட அத்தனையும் உதறிவிட்டு வெறும் மிருகங்களாக இருக்கும் அந்த சில நிமிடங்களுக்காகத்தான் அதன்மேல் அத்தனை பற்றுக் கொண்டிருக்கிறார்களா? உண்பதிலும் காமத்திலும்தான் வாய் அத்தனைமுக்கியத்துவம் பெற முடியும். ஏனென்றால் மனிதன் அப்போது விலங்கு

ஆனால் அந்த எளிய மிருகச் செயல்பாட்டின் மீதுதான் உலகத்தின் அத்தனை கவிதைகளையும் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அத்தனை கலைகளையும் அதைச் சார்ந்தேதான் நிகழ்த்துகிறார்கள். நினைத்துத் தீராத அத்தனை மெல்லுணர்வுகளையும் அதன் மீதுதான் ஏற்றி வைத்திருக்கிறார்கள். அனைத்தையும் கடந்து சென்று அந்த சில அப்பட்டமான நிமிடங்களை அடைய வேண்டும். எழுந்தவுடன் கழற்றி வைத்த ஆடைகளை அணியும் பரபரப்புடன் அத்தனை சொற்களையும் எடுத்து மேலே போட்டுக்கொள்ள வேண்டும். கெய்ஷாக்கள் கலை என்பது எதை? அணிவிப்பதையா? கழற்றுவதையா?

ஜப்பானிய தேநீர் கலையை நான் பலமுறை கண்டிருக்கிறேன். உண்மையில் அவர்கள் அப்படித்தான் வழக்கமாகத் தேநீர் அருந்துகிறார்கள் என்றால் அது தேநீரே அல்ல. அல்லது அவர்கள் மனநோயாளிகள். மிக சொகுசான, மிக அரியதான ஒன்றை அருந்துவதான பாவனை மட்டும்தான் அது. பல நூற்றாண்டுகளாக அவர்கள் பழகி வைத்திருக்கும் ஒரு நாடகம், நாட்டியம் என்று சொல்ல வேண்டும். பீங்கான் குடுவையை எடுத்து நீர் நிரப்பி அனலில் வைப்பது தொடங்கி கிண்ணங்களை எடுத்து பரப்புவது, நிமிர்த்து வைப்பது, கால் மடித்து அமர்வது, உடல் வளைத்து வணங்குவது என்று அதன் அத்தனை அசைவுகளும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வகுக்கப்பட்டுவிட்டவை.

ஜப்பானிய தேநீர் விருந்தில் தேநீரே தேவையில்லை. கெய்ஷாக்களின் காமவிருந்தில் கடைசியில் காமமே தேவையில்லை என்று சொல்லிவிடுவார்களோ  என்று நினைத்தபோது என் விடுதி அறையில் படுத்திருந்தபடி சிரித்துக் கொண்டேன். காமம் என்று இருக்கும் வரைக்கும் ஒரு கலையென அது ஆகமுடியாது கலை என்பது ஒரு பொருளின் மேல் ஒரு வார்த்தையின்மேல் அல்லது செயலின்மேல் மேலும் மேலும் அர்த்தங்களை ஏற்றி வைப்பது. படிமங்கள் தான் கலை. ஒரு நாற்காலியை, மேசை விரிப்பை, மலர்க்கிண்ணத்தை எதை வேண்டுமானாலும் முடிவின்றி விரியும் அர்த்தம் கொண்டதாக ஆக்கும் போதுதான் அது கலை. காமத்தை அப்படி ஆக்கிவிட முடியுமா? எத்தனை அர்த்தங்களை ஏற்றினாலும் அது கடைசியில் இயற்கை அளித்த ஒற்றை அர்த்தத்தில்தானே வந்து நிற்கும்?

அதைக் கலையாக்குவதற்காகத்தானே அத்தனை வருடங்களாக கவிதையையும் கதைகளையும் எழுதித் தள்ளியிருக்கிறார்கள். காதல் என்னும் வார்த்தையாக அதை மாற்றியிருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் காலம் தேவை. ஒன்றுடன் ஒன்று இணைந்த நூற்றுக்கணக்கான உணர்வுகளைத் தொடுத்து காமத்தைச் சுற்றி அமைத்து அதை அமரகாதலாக ஆக்குவதற்கு அதுவரைக்கும் மனித இனம் உருவாக்கிய அனைத்து நுண்கலைகளும் தேவை. கூடவே காமம் என்றால் என்னவென்றறியாத இளமை. காமம் சற்றே சலித்துப்போன நாற்பது வயதான பயணிக்கு சிலமணி நேரங்கள் உடன் தங்கிப்போகும் ஒரு பெண் காமத்தை எப்படி கலையாக ஆக்க முடியும்?

அவள் கெய்ஷா உடையில் வருவாளென்று நான் நினைத்திருந்தேன். நூல்களில் கெய்ஷாக்களின் பல்வேறு உடைகள் வரையப்பட்டிருந்தன. இடுப்பில் மெத்தைபோல எதையோ கட்டிக்கொண்டவர்கள். கால்வரைவழியும் பெரிய கிமோனாக்கள். பழைய பாணி ஜப்பானிய ஓவியங்களில் வெளிறிய வண்ணங்களில் வரைந்து மேலும் வெளிற வைப்பதற்காக லேசாக நீர் தெளித்து ஒற்றி எடுக்கப்பட்ட ஓவியங்கள். கண்ணாடியில் ஒளிஊடுருவும் தன்மையுடன் ஆடைகள்.

வந்தவள் சிறுமியோ என்று தோற்றமளிக்கும் சிறிய உடல் கொண்ட இளம்பெண். நவீன மேலை நாட்டுக் குட்டைப்பாவாடை அணிந்திருந்தாள். ஒரு பதின்பருவத்து சிறுவனைப்போல் இருந்தாள். சிறிய கண்கள் இரண்டு நீர்த்துளிகள் போல. சிமிழ் போன்ற மிகச்சிறிய உதடுகள். மாசுமருவற்ற மஞ்சள் நிறம். தோல்நிறத்தில் மஞ்சளுக்கு நிகரானது பிறிதொன்றில்லை. வெள்ளையர் தோல்கள் சுருக்கங்களும் புள்ளிகளும் நிறைந்தவை கரியதோல்கள் ஒளியற்றவை .மாநிறத்தோல் மட்டுமே இந்தியாவில் அழகு கொண்டது. ஆனால் மஞ்சள்நிறத்தோல்  தோலா உலோகமா என்றஅறியாத அளவுக்கு மெருகுகொண்டது

அவள் என்னை உடல் வளைத்து முறைப்படி வணங்கி முகமன் சொன்னாள். நான் அவளை வரவேற்றதும் பணிவுடன் நாற்காலியில் அமர்ந்து தன் கைப்பையை மேஜைமேல் வைத்தாள். வழிகாட்டி என்னிடம் தனியாக வந்து குனிந்து “புகழ்பெற்ற கெய்ஷா குடும்பத்தைச் சேர்ந்தவள். அரசகுலத்தைச் சேர்ந்தவர்களுடன் மட்டுமே உறவு வைத்திருக்கிறாள். இந்தியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் வந்திருக்கிறார் என்றேன். அதை நம்பி வந்திருக்கிறாள். அந்த வார்த்தையை நீங்கள் வாய்தவறாமல் கொண்டு செல்லுங்கள்” என்றான்.

“நான் உண்மையிலேயே அரசகுடும்பத்தைச் சார்ந்தவன் தான்” என்றேன். அவன் கண்கள் ஐயத்துடன் சற்று மாற ”அப்படியானால் நன்று” என்றான். “இவள் கெய்ஷாவா? உண்மையிலேயே?” என்றேன். “ஆம், கெய்ஷாக்கள் என்பவர்கள் சில குடும்பங்களில் தொன்மையான மரபாக வருபவர்கள். காதற்கலையை அவர்கள் தங்கள் பாட்டிகளிடமிருந்து முறையாகக் கற்றுக் கொள்கிறார்கள். அந்தக் கலைதான் அவளைக் கெய்ஷாவாக்குகிறது. மற்றபடி அவளும் பிறரைப்போல இந்தக் காலத்தில் வாழ்பவள் தான். இந்தப்பெண் இங்கே டோக்கியோவில் ஒரு கல்லூரியில் படிக்கிறாள். படித்து முடித்தபின் எதாவது நிறுவனத்தில் வேலைக்குச் செல்வாள். குழந்தைகளை பெற்றுக் கொள்வாள். பிறரைப் போல் தான் அவள் வாழ்வு இருக்கும். ”

நான் “அதுவும் நன்று தான்” என்றேன். அவன் புன்னகையுடன் “அவர்கள் இரவில் மட்டும் தான் கெய்ஷாக்கள்” என்றான். நான் “நன்று” என்று சொல்லி அவன் தோளில் தட்டினேன். “இதற்கான பணத்தை நீங்கள் எனது வங்கிக் கணக்கில் செலுத்தலாம். அதை நான் உங்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பியிருக்கிறேன். பத்து நிமிடத்தில் நீங்கள் அதை செலுத்த முடியும்” என்றான். “சரி” என்றேன்.

“அவளிடம் பேசிக் கொண்டிருக்கும்போதே செலுத்திவிடலாம். நீங்கள் செலுத்தின தகவலை அவளுக்கு நான் அனுப்பின பிறகுதான் அவள் கெய்ஷாவாக மாறுவாள்” என்றான். அவன் சொல்வதை நான் புரிந்து கொண்டு மீண்டும் “சரி” என்றேன். “சற்றுப்பெரிய தொகை” என்று அவன் சொன்னான். “சரி நண்பா…” என்று அவன் தோளில் மீண்டும் தட்டினேன்

அவன் மும்முறை வணங்கி வெளியே சென்று கதவை மூடினான். நான் திரும்பி வரும்போது அவள் கண்ணாடித் திரையிடப்பட்ட பெரிய சாளரத்தின் அருகே நாற்காலியில் பள்ளிக்கூடப்பெண் போல கால்களை மடித்துக் கொண்டு கைகளைக் கட்டி அமர்ந்திருந்தாள் நான் வந்த போது இயல்பான பணிவுடன் எழுந்து நின்று புன்னகை செய்தாள். நான் அவள் அருகே அமர்ந்தேன். முதலில் என்ன பேசுவதென்று தெரியவில்லை. பின்னர் சொற்களை தெரிவுசெய்தேன்

“நான் கெய்ஷா என்றால் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்பினேன். ஆகவே தான் உன்னை வரச்சொன்னேன்” என்றேன். “கெய்ஷா என்றால் இரவில் வாழ்பவள் என்று பொருள்” என்றாள். “அப்படியா? விக்கிப்பீடியாவில் அப்படி இல்லையே” என்றேன். “ஜப்பானிய சொற்களை எழுதும் முறையால் அர்த்தம் கொள்ளச்செய்யமுடியும். நாங்கள் கெய்கோ என்போம்” என்றாள். ”ஆம், அதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றேன்.

“இரவுகளில் மட்டும் ஒரு ஆளுமையை அணிந்து கொண்டு காலையில் கழற்றிவிடுபவர்கள் கெய்ஷாக்கள். உண்மையில் பகலில் சூரியன் எழுவதற்கு முன்பே அவர்கள் இறந்து விடுகிறார்கள்” என்றாள். நான் அவளைப்பார்த்துக் கொண்டிருந்தேன்.  கெய்ஷாப் பண்பாடு பற்றி ஒரு பேருரை ஆற்றப்போகிறாளா என்று சலிப்பு ஏற்பட்டது. “ஆகவே இரவில்பார்த்த கெய்கோவை பகலில்தேடக்கூடாது”  என்றாள். அதைச் சொல்லத்தானா என நினைத்துக்கொண்டு “நான் நாளை மாலை இங்கிருந்து இந்தியா கிளம்புகிறேன்” என்றேன்.

“கெய்ஷாக்கள் இரவில் அணியும் அனைத்தையும் பகலில் துறந்துவிடுவதனால் இரவில் செய்யும் எந்த பாவமும் அவர்களைத் தொடர்ந்து வருவதில்லை. தொல்பழங்காலத்தில் அரசர்களுக்காக கெய்ஷாக்கள் கொலைகளையும் செய்திருக்கிறார்கள்” என்றாள். நான் சிரித்தபடி, “எனது தொழில் போட்டியாளர்களால் நீ இங்கு அனுப்பப்படவில்லை அல்லவா?” என்றேன். அவளும் சிரித்துக் கொண்டு, “பெரும்பாலும் இல்லை” என்றாள். “ அய்யோ! பயமாக இருக்கிறதே. . ” என்று நான் நடித்தேன். இருவரும் சிரித்த போது சற்று அணுகினோம். இருவர் அணுகிவருவதற்கு நடிப்பு சிறந்த வழிமுறை

பின்னர் எளிய அறிமுகச்சொற்களை பேசிக்கொண்டோம். என்னைப்பற்றிச் சொன்னேன். நான் ஒரு நாளிதழின் ஆசிரியன், எட்டுநூல்களை எழுதியிருக்கிறேன் என்றதும் மெல்லிய புருவங்கள் வளைய வியப்புடன் “அப்படியா?” என்றாள். “என் சொந்தப் பத்திரிகை. என் தாத்தா தொடங்கியது” என்றேன். பத்திரிகையின் பெயரை அவள் கேட்டிருக்கவில்லை. “இந்தியாவின் சுதந்திரப் போராட்டகாலத்து நாளிதழ்” என்றேன். அவள் என் நூல்களைப்பற்றிக் கேட்டாள். ஆறுநூல்கள் அரசியல். இரண்டுநூல்கள் பயணம். “நாவல் எழுதும் எண்ணம் உண்டு” என்றேன்.

அவள் சிரித்தபடி “இதழாளர்கள் நாவல் எழுதுவதுதான் இப்போது பொதுப்போக்கு. பதிப்பாளர் விரும்புவார்கள்” என்றாள். நான் புருவத்தைச் சுருக்கி “ஏன்?” என்றேன். “மற்ற இதழாளர்கள் பாராட்டி மதிப்புரை எழுதுவார்கள்” என்றாள். சுரீலென்று கோபம்வந்தாலும் உடனே அதைக்கடந்து சிரித்துவிட்டேன். “உண்மை, ஆனால் என் நாவல் மற்ற பத்திரிகையாளர்களை விமர்சிப்பதாகவே இருக்கும். எல்லாரும் வசைபாடுவார்கள்” என்றபின் “நீ படிப்பாயா?” என்றேன். “எனக்கு இளமையிலேயே இலக்கியம் கற்பித்திருக்கிறார்கள்” என்றாள்.

அவள் மது அருந்துவாளா என்று கேட்டேன். ஒயின் மட்டும் என்றாள். நானும் அதையே விரும்புவதாகச் சொன்னேன். அவளே ஒயினைப் பரிமாறினாள். “ஒயின் பரிமாறுவதில் கெய்ஷா முறை என ஒன்றும் இல்லையா?” என்றேன். “கெய்ஷா சடங்குகள் விரிவானவை. ஆனால் கெய்ஷாமுறை என்பது அச்சடங்குகள் அல்ல” என்றாள்.

நான் “கெய்ஷாக்களுக்கு காமத்தில் நுட்பமான பல கலைகள் தெரியும் என்கிறார்களே” என்றேன். “ஜப்பானிய தேநீர் விருந்து போல அது ஒரு பெரிய நடிப்பாக இருக்கும். அலங்கார உடைகளும் முறைப்படுத்தப்பட்ட உடல் அசைவுகளும் சடங்குகளும் எல்லாம் இருக்கும் என்று நினைத்தேன்”

அவள் சிரித்தபடி, “அத்தனைக்கும் பிறகு நீங்கள் காமத்தில் ஈடுபட்டதாக வெறுமே கற்பனை செய்து கொண்டு வீடு செல்ல வேண்டும் என்று சொன்னால் இவ்வளவு பணத்தை அளிப்பீர்களா?” என்றாள். “பணத்தை அளித்த குறுஞ்செய்தி வந்துவிட்டதா?” என்று நான் கேட்டேன். அவள் முகம் சற்று மாறி “ஆமாம்” என்றாள். அதை மாற்றும்பொருட்டு நான் “காமத்தில் நீ புதிதாக எனக்கு எதைக் கற்றுத்தரப்போகிறாய்?” என்றேன்.

“உண்மையில் உங்களுக்கு என்ன தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை. இப்போதெல்லாம் இணையத்தில் இல்லாததே இல்லை. எனது பாட்டி ஒருமுறை இணையத்தில் இந்த படங்களை மட்டும் பார்த்துவிட்டு அதிர்ச்சி அடைந்துவிட்டார். இப்படியெல்லாமா இப்படியெல்லாமா என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். நாற்பது ஆண்டுகாலம் கெய்ஷாவாக வாழ்ந்த அனுபவம் உடையவள்” என்றாள்.

நான் சிரித்து “ஆம். மனித உடலில் இனி என்ன செய்வதற்கு உண்டென்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றேன். “உனக்குத் தெரியுமா? தூக்கு போட்டுக் கொண்டு உறவு கொள்ளும் முறை ஒன்று உண்டு”

அவள் கண்கள் இடுங்கச் சிரித்தபடி ”தூக்குப்போட்டபடியா?” என்றாள். “ஆம். கழுத்தில் சுருக்கை மாட்டிக் கொண்டு பெண்ணுடன் குலாவுவார்கள். உச்சகட்டம் நெருங்கும்போது காலின் கீழ் இருக்கும் முக்காலியை உதைத்துவிடுவார்கள். கழுத்து இறுகி, மூச்சு நின்று மூளைக்கு ரத்தம் போவது குறையும் தருணத்தில் பலவகையான மாயக்காட்சிகள் தோன்றும். அப்போது காமத்தின் உச்சகணம் நிகழவேண்டும். மிகச் சரியான தருணத்தில் கயிறை அழுத்திக் கீழே விழவைத்து சுருக்கை விடுவித்து ஆக்சிஜனை கொடுத்து உயிரை மீட்டுவிடுவார்கள். காலம், இடம் எல்லாம் அழிந்து காமத்தின் உச்சம் மட்டுமே நிறைந்த ஒன்று அந்தக்கணம் என்கிறார்கள்”

“பாவம், அவர்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை. அப்படி தேடிச்செல்லத் தொடங்கினால் சாவுவரை செல்லமுடியும், அவ்வளவுதான்” என்று அவள் சொன்னாள். நான் “இப்படி செய்யப்பட்ட முயற்சியில் ஒருவர் இறந்து அதை போலீசார் புலன் விசாரணை செய்த போது தான் இப்படி ஒரு இணையக் குழுமம் இருப்பதே தெரியவந்தது” என்றேன். ““பலவகையான பைத்தியங்கள் இருக்கிறார்கள். உறவின்போது கேவலமாக வசை பாடிக் கொள்வது, கொடூரமாக வதைத்துக் கொள்வது, பலவகையான மாத்திரைகளை உண்பது, மூளைக்குள் அதிர்வுகளை அளிக்கும் ரசாயனங்களை உடலில் செலுத்திக் கொள்வது. உச்சகட்டம் நிகழும் போது சரியான தருணத்தில் தலையில் உடலிலும் மின்சார அதிர்ச்சி அளிக்கும் ஒரு முறை கூட உள்ளது. என்ன செய்தாலும் அதற்கு அடுத்த கட்டம் ஒன்று தேவைப்படுகிறது” என்றேன்.

அவள் சொல்லவேண்டியதை எல்லாம் நான் சொல்கிறேன் என்று பட்டது. “நாம் இதை ஏன் பேசிக் கொண்டிருக்கிறோம்” என்று நான் கேட்டேன். “நீங்கள் தான் இதை பேச விரும்புகிறீர்கள். இதைச் சுற்றி ஒரு மர்மத்தை கட்டமைக்க விரும்புகிறீர்கள்” என்று அவள் சொன்னாள். “இருக்கலாம்… இதுசாதாரணமாக முடியக்கூடாது என ஆசைப்படுகிறேன்” என்றேன்.

அவள் “இங்கும் அதெல்லாம் இருந்தது. பழைய காலத்தில் ஜப்பனிய அரசர்கள் தங்கள் உறவுகொள்ளும் பெண்ணின் கழுத்தை பட்டு நூலால் இறுக்கியபடியே அதைச் செய்வார்கள். மூச்சு திணறி அவள் இறக்கும் அந்த கடைசித்துடிப்பு அவருடைய உச்ச கணமாக இணையும்போது அது மிகப்பெரிய இன்பத்தை அளிக்கிறது என்பார்கள்” என்றாள்.

நான் சிரித்தபடி “ஆம் , அடுத்தபடி சாவு அல்லது கொலை என்பதுவரை சென்றுவிட்டார்கள்” என்றேன். “உண்மையில் உடல் சார்ந்த எல்லாமே எனக்கும் சலித்துவிட்டன. விசித்திரம் என்பது எதுவரை என்று தெரிந்துவிட்டது. கற்பனையில் எதாவது புதிதாக நடக்குமா என்று பார்க்கிறேன். இந்த நிகழ்காலத்திலிருந்து முன்னோ, பின்னோ சென்று கொண்டிருக்கிறேன். விண்வெளியில் காமம் கொண்டாடலாம். அல்லது செவ்வாய் கிரகத்தில், அல்லது சோழர் காலத்தில் ஒரு பரத்தையுடன், அல்லது ஒரு கெய்ஷாவுடன்” என்றேன்.

அவள் சிரித்து, “இதை முன்னரே சொல்லியிருந்தால் என் வீட்டுக்கு வரச்சொல்லியிருப்பேன். அங்கு இருநூறாண்டு பழைமையான அறைகள் இரண்டு உள்ளன. என் பாட்டி அணிந்த பழைய கெய்ஷா உடைகளும் நகைகளும் கூட இருக்கின்றன” என்றாள்.

“பரவாயில்லை இது ஒரு பாவனை தானே, நீ இப்போது இருநூறாண்டு முன்பிருக்கும் ஒரு கெய்ஷா. நான் இருநூறாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து இங்கு வியாபாரம் செய்யவந்த ஒரு கடல்வணிகன்”

அவள் ”நீங்கள் அரச குலத்தார் அல்லவா?” என்றாள். “ஆம்” என்றேன். அவள் சிரித்தபடி “சரி அதுவும் ஒரு பாவனை தானே…” என்றாள். நான் உரக்க சிரித்துவிட்டேன். சிரிக்கச் சிரிக்க இருவரும் இயல்பான மனநிலைகொண்டோம். ஒயினும் இணைய ஒரு மெல்லிய மிதப்பு எங்களை ஆட்கொண்டது

“இப்போது என்ன செய்ய வேண்டும்? நான் ஒரு கெய்ஷாவாக நடிக்க வேண்டும் அல்லவா?” என்றாள். “ஆம். கெய்ஷாவால் உபரிசிக்கப்படும் வணிகனாக நானும் நடிக்கிறேன்” என்றேன்.

அவள் எழுந்து பழைய ஜப்பானியய நடனஅசைவுகளுடன் ஜப்பானிய மொழியில் ஏதோ சொன்னாள். நான் சிரித்தபடி மெத்தையில் விழுந்துவிட்டேன். அவள் நிறுத்தி இடையில் கைவைத்து “ஏன்?” என்றாள்.

“கடந்து போனவை இந்த நிகழ்காலத்தில் அவை எல்லாம் கேலிப்பொருளாகத்தான் இருக்கும். இன்று டோக்கியோவின் தெருவில் ஒரு சாமுராயைப்பார்த்தால் மக்கள் அவருக்கு காசுகளை வீச ஆரம்பிப்பார்கள். அவர் தன் கடானாவால் முதுகைச் சொறிந்துகாட்டினால் அது அதற்கான கருவி என்று நம்புவார்கள்”

அவள் சிரித்தபடி பாய்ந்து மெத்தையில் விழுந்து என் தோள்களைக் கட்டிக் கொண்டாள். உதடுகளில் உதடு பதித்து ஆழ்ந்து முத்தமிட்டாள். பின்பு என் மேல் கால் போட்டு ஏறி அமர்ந்து தோள்களைப்பற்றி என் கண்களுக்குள் நோக்கியபடி “எதற்கு பாவனை? எந்த பாவனையும் கிழித்து பார்க்கக்கூடிய புத்திசாலி நீங்கள். ” என்றாள்.

“ஆம் அதுதான் என்னுடைய பிரச்னை” என்றேன். அவள் “கிழித்து கிழித்து எங்கே செல்கிறோம். கடைசியில் கசப்பும் துயரமும் தான் இருக்கும். ” என்றாள். “யாருக்குமா?” என்று நான் கேட்டேன். “யாராக இருந்தாலும். கிழித்து சென்றால் விஷம்தான் மிஞ்சும்” என்று அவள் சொன்னாள்

ஒருவரை ஒருவர் கண்களுக்குள் நோக்கிக் கொண்டோம். நான் அவளை சுழற்றி கீழே படுக்க வைத்து அவள் மேல் படர்ந்து. அவள் உதடுகளை முத்தமிட்டேன். மிகச்சிறிய உதடுகள். “மிகச்சிறியவை. எனக்கு இவை போதாது” என்றேன். “கற்பனையில் வளர்த்துக்கொள்ளுங்கள் அப்படித்தானே காமத்தில் செய்யவேண்டும்” என்றாள் அவள். சிரித்தபடி இருவரும் முத்தமிட்டுக் கொண்டோம்.

“நான் கெய்ஷா அல்ல, ஒர் எளிய பெண் என்று பாவனைசெய்வோம். நீங்களும் ஒரு எளிய பெண்ணை விரும்பி வந்த ஒருவர். இங்கு இப்படி உடலால் இணைந்திருப்பது நமக்குப் பிடித்திருக்கிறது. இதற்கப்பால் ஒன்றும் தேவையில்லை, என்ன சொல்கிறீர்கள்?” என்று அவள் சொன்னாள்.

நான் அவள் காதில் “கெய்ஷாவின் காமக்கலை என்கிறார்களே? அது உண்மையில் என்ன?” என்றேன். “இதுதான்” என்று அவள் சொன்னாள். “அன்றைய அரசர்கள் அடுக்கடுக்காக ஏராளமான பட்டு ஆடைகளையும் நகைகளையும் அணிந்திருப்பார்கள். உடைவாளையும் மணிமுடியையும் விலக்கவே மாட்டார்கள். பேசுவது எல்லாமே முறைமை சார்ந்த சொற்களைத்தான். அவர்களைச் சுற்றியிருக்கும் அத்தனை பேருமே அடிமைகளும், ஊழியர்களும், அவர்களுக்குச் சமானமான நிலை கொண்ட பிற அரசர்களும் தான். ஒவ்வொருவரிடமும் எப்படி பேசவேண்டும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வகுக்கப்பட்ட நெறிகள் இருந்தன. ”

அவள் தொடர்ந்தாள். “அவர்கள் வாழ்வதில்லை, நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு பெரிய காவியத்திற்குள் நடித்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் பேசுவதும் செய்வதும் உடனடியாக கவிஞர்களால் பதிவு செய்யப்பட்டு நூல்களாக வெளிவருகின்றன என்பதை அவர்கள் அறிவார்கள். காதலுக்கும் காமத்துக்கும் அவர்கள் செல்வது கூட பலவகையான வசனங்களை மனப்பாடம் செய்து பயின்று, பலவகையான நடிப்புகளைப்பழகிக்கொண்டுதான். மனைவிகளும் காதலிகளும்கூட அவர்களுக்கு அடிமைகள். அடிமைப்பெண்கள் அவர்களுக்கு பழக்கப்பட்ட விலங்குகள். செயற்கையான நாடக நடிப்பில் இருந்து தொடங்குவார்கள். அதன் மறு எல்லைக்குச் சென்று விலங்கு போல அந்தப்பெண்ணை கிழித்து கொன்று  காமம் அடைவார்கள். ”

“கெய்ஷாக்களிடம் வரும்போதும் அவர்கள் அந்த பாவனைகள் அனைத்தையும் கொண்டுதான் வருவார்கள். கெய்ஷா அவர்களின் அவர்களை அஞ்சாமலும் அவர்களின் ஆணைகளுக்குப் பணியாமலும் அதேசமயம் அவர்களை கோபம்கொள்ளச்செய்யாமலும் இருக்கும் திறமைகொண்டவள். அவர்கள் அணிந்துவரும் பாவனைகள் அனைத்தையும் களைந்து வெறும் மனிதனாக ஆக்கிவிடுவாள். அதன் பின் அவளுடன் உறவு கொள்ளும் போது அவர்கள் எளிய விலங்குகளாக இருப்பார்கள். அந்தச் சுதந்திரத்தை அவர்கள் வேறெங்கும் அனுபவித்திருக்க மாட்டார்கள். அப்படி ஒவ்வொருவரிடமிருந்தும் அவர்களின் உண்மை உருவத்தை மீட்டு எடுக்கும் கலையைத்தான் கெய்ஷாக்கலை என்கிறார்கள். ”

”எனக்குள்ளிருந்து என் உண்மை உருவத்தை மீட்டெடு பார்ப்போம் என்று” நான் குறும்பாக சிரித்தபடி சொன்னேன். “கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறேன். காலைக்குள் முழுமையாக வெளியே எடுத்து வைத்துவிடுவேன் போதுமா?” என்று அவள் சொல்லி “என்ன கேள்வி” என்று செல்லமாக என்னை அடித்தாள். என் மூக்கைப்பிடித்து இழுத்து “என்னவேண்டும் உங்களுக்கு?” என்றாள்

“நான் எங்கும் ஆடையின்றி நிற்கவே விரும்புவேன். ஆனால் ஆடையின்றி நிற்பதே கூட ஒரு பாவனைதான் என்று ஆகிவிடுகிறது” என்று நான் சொன்னேன். “ஆமாம். இங்கே வடக்கு பகுதிகளில் வெந்நீர் ஊற்றுக்கள் உண்டு. ஆன்சென் என்பார்கள் அங்கு ரெய்க்கோன் எனப்படும் நிர்வாணமாக அனைவரும் சேர்ந்து குளிக்கும் குளியல்மையங்கள் இருக்கின்றன. அங்கு சென்று பார்த்தால் தெரியும் நிர்வாணமென்பதே ஒரு ஆடை மாதிரி. நிர்வாணத்தாலேயே நம் நிர்வாணத்தை மறைத்துக்கொள்ளமுடியும்”

“ஆடையில்லாமை என்பதுமட்டும்தான் அது. அதற்கு அப்பால் ஏதாவது நிர்வாணம் உண்டா என்ன?” என்று நான் கேட்டேன். ”ஆமாம் அது புத்தர் சொன்ன நிர்வாணம்” என்றாள். “அடப்பாவி அதையா இப்போது எனக்கு அளிக்கப்போகிறாய்? அதற்கா அவ்வளவு பணம் வாங்கிக் கொண்டாய்?” என்று நான் செல்லமாக அலறினேன். “சரியான முட்டாள்” என்றபடி என் தோளை ஓங்கி அறைந்தாள். “அடிக்கிறாய்…” என்று சிணுங்கினேன்.

”கெய்ஷாக்கள் அடிப்பதும் உண்டு. வசைபாடுவதும் உண்டு. மன்னர்களுக்கு அது பிடிக்கும். அவர்களை வேறுயார் அடிக்கமுடியும்?” என்றாள். ”இப்போது என்னை என்ன செய்யப்போகிறாய்?” என்றேன். “உங்களை கொஞ்சப்போகிறேன். நீங்கள் ஒரு ஆண். கொஞ்சி கொஞ்சி உங்களை ஒரு கைக்குழந்தையாக்குவேன். என் மடியில் போட்டுக் கொள்வேன். ” என்றாள். நான் அவள் காதில் “பால் கொடுப்பாயா…?” என்றேன். “சீ” என்று அவள் என் தலையில் கொட்டினாள்.

நுணுக்கமான கொஞ்சல்கள், பாவனைகள், பரிமாறுதல்கள் வழியாக எங்கள் உடல்களை ஒன்றை ஒன்று அறியச் செய்தோம். பின்னர் பேச்சு நின்றது. பின்னர் பார்வைகளும் இல்லாமல் ஆயின. உடல்கள் மட்டும் ஒன்றை ஒன்று அறிந்தன.

பிற எந்தக் காமத்தையும் போலத்தான் அது என்று ஒரு தருணமும், அது மிக விசேஷமானது என்று இன்னொரு தருணமும் தோன்றிக்கொண்டிருந்தது. எல்லாக் காம உறவைப்பற்றியும் அப்படித்தானே தோன்றும் என்றும் நினைத்துக் கொண்டேன். அவள் என் உடலுடன் ஒட்டிக் கொண்டு தன் முகத்தை என் தோளில் புதைத்து படுத்துக் கொண்டாள். மஞ்சள் இனத்தவருக்கே உரிய கரிய பளபளப்பு கொண்ட தலைமுடி. சிறிய காது. சற்றே உந்திய கன்ன எலும்புகள். மெலிந்த அவள் தோள்களை கைகளால் வருடிக் கொண்டு படுத்திருந்தேன்.

“நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் சொல்லவா?” என்று கண்களை மூடியபடி சொன்னாள். “சொல்” என்றேன். “இதுவும் பிற எந்தக் காமத்தையும் போலத்தானே இதற்கா இவ்வளவு பெரிய தொகை…?” என்றாள். “பொய்” என்று நான் அவளை தட்டினேன். “இந்த தருணத்தில் பணத்தை பற்றி நினைக்கும் அளவுக்கு நான் கீழ்மையானவன் அல்ல” என்றேன்.

“நான் அப்படி சொல்லவில்லை. கெய்ஷா என்ற வார்த்தை அதைப்பற்றிய கதைகள் இதெல்லாம் உங்களுக்கு ஏமாற்றுவேலை என்று தோன்றிவிட்டது. அல்லவா?” என்றாள். “இல்லை இந்த ஒரு தருணத்தை அழகாக்க அவை எப்படியோ உதவியிருக்கின்றன. ” என்றேன். “என்ன சொன்னாலும் இது சாதாரணமானதுதான், அதை மறைக்கமுடியாது” என்றாள் அவள். “இல்லை” என்றபடி நான் அவள் கழுத்தில் முத்தமிட்டேன்.

அவள் என் காதில் ”நான் ஒன்று சொல்லவா. . ?” என்றாள். “சொல்” என்றேன். “நான் கெய்ஷா இல்லை” என்றாள். “தெரியும்” என்று நான் சொன்னேன். “எப்படி?” என்றாள். “நீ உள்ளே வந்த போதே தெரியும். அல்லது அவன் உன்னை அழைக்க செல்லும்போதே தெரியும்” என்றேன்.

அவள் பெருமூச்சு விட்டாள். ”நன்றி” என்றாள். “ஏன்?” என்றேன். “நான் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறேன் என்ற குற்ற உணர்வில் இருந்தேன். இப்போது அது இல்லை” என்றாள். நான் “என்னை அவ்வளவு எளிதாக யாரும் ஏமாற்ற முடியாது பல ஏமாற்றங்களையும் பார்த்து வருந்தி அழுது பழகியபடித்தான் தொழிலில் வேரூன்றினேன். ஊடகத்தொழில் இன்று அரசுடன் செய்யும்போர் போல” என்றேன். “அப்படியானால் சரி” என்று அவள் சொன்னாள்.

“நீ என்ன படிக்கிறாய்?” என்று நான் கேட்டேன். “இலக்கியம்” என்றாள். “எந்த மொழி?” என்றேன். “ஜப்பானிய மொழி. ஆங்கில இலக்கியமும் இணைந்து தான் இங்கே பாடத்திட்டம்” என்றாள். நான் “இலக்கியத்தில் எனக்கும் ஈடுபாடு உண்டு. ஒரு இலக்கியப் பேராசிரியனாகத்தான் என்னை சின்ன வயதில் கற்பனை செய்து கொண்டேன். ” என்றேன்

”நீங்கள் இலக்கியம் படித்தீர்களா?” என்றாள். “இல்லை நான் வணிகவியல் தான் படித்தேன். பெரிய இலக்கியவாதி ஆகிவிடவேண்டும் என்ற கனவு இருந்தது. கூடவே புகழ் பெற்ற பேராசிரியராக வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். அதன்பின்னர்தான் இதழியல். அது என் குலத்தொழில்” என்றேன்.

“பேராசிரியராக இருந்திருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருப்பீர்களா?” என்று அவள் கேட்டாள். ”இப்பொழுது நான் மகிழ்ச்சியாக இல்லை என்று யார் சொன்னது. இதழாளர்கள் இதழாளர்த்தொல்லை இல்லாத பிரமுகர்கள். அவர்கள் மகிழ்ச்சியாகவே இருக்கமுடியும். ”  என்றேன்.  அவள் சிரித்தபடி ”அது சரிதான்” என்றபடி என்னை மீண்டும் அணைத்துக் கொண்டாள்.

அவள் மார்புகள் மிகச்சிறிதாக, இல்லையென்றே சொல்லத்தக்கவையாக இருந்தன. இடைக்குக்கீழே கூட சிறுவர்களுக்குரியவை போல வளராமல் இருந்தது. என் எண்ணத்தை புரிந்துகொண்டு அவள் ”உங்கள் ஊர்பெண்கள் கைகளும் இடைகளும் மிகப்பெரியவை அல்லவா?” என்றாள். “ஆம் இடுப்பும் மார்புகளும் கூடப்பெரியவை தான்” என்றேன்.

“ஆகவே தான் மாறுதலுக்காக கிழக்கு நோக்கி வருகிறார்கள் போல…” என்றாள். “இங்கிருந்து யாரும் அங்கே வருவதில்லையே” என்றேன். “ஆம் பயந்து கொள்கிறார்கள் என நினைக்கிறேன்” என்று சொல்லி அவள் சிரித்தாள்.

இருவரும் மீண்டும் கொஞ்சம் உடல்குலவினோம். நான் அவளிடம் “யசுநாரி கவபத்தாவின் தூங்கும் அழகிகளின் இல்லம் நினைவுக்கு வந்தது” என்றேன். “நினைத்தேன். கெய்ஷாக்களைப்பற்றி அவருடைய பனிபூமி என்ற நாவலில் படித்திருப்பீர்கள். ” என்றாள். “ஆம் நீ இங்கு வருவதற்கு முன் அந்த நாவலைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன். ” என்றேன்.

என் கழுத்தை வளைத்து “இதற்குப் பிறகு ஏன் தூங்கும் அழகியை நினைத்தீர்கள்?” என்றாள். “அதில் வயதான ஒருவர் தன் உடலில் வற்றிக் கொண்டிருக்கும் உயிர்ச் சக்தியை மீட்டெடுத்து ஆயுளைக் கூட்டுவதற்காக இளம்பெண்களுடன் படுத்துக் கொள்ளும் வசதி செய்யும் ஒரு ரகசிய விடுதிக்கு வருகிறார் அல்லவா…?” என்றேன் “ஆம், வயதான எகுச்சி” என்று விழிகளில் சிரிப்பு எஞ்சியிருக்க அவள் சொன்னாள்.

”மயக்கமருந்து கொடுக்கப்பட்ட பெண்களை அவருடன் படுக்கவைக்கிறார்கள். இரு நிர்வாணப் பெண்களின் நடுவே எகுச்சி படுத்திருக்கிறார். அவர் உடலில் அவர்களின் உயிர் வந்து சேர்ந்து ஆண்மை அதிகரிக்கும் என்று நம்புகிறார். ஆனால் அதில் ஒரு பெண் மயக்கமருந்து மிகையாகி இறந்துவிட்டிருப்பாள். அன்று இரவு முழுக்க பிணத்துடன் தான் படுத்திருந்தார். ” என்றேன்

அவள் முகம் சிறுத்தது. தலை குனிந்து கைவிரல்களால் என் விலாவில் வருடிக் கொண்டிருந்தாள். அவளை நோக்கி குனிந்து “என்ன?” என்றேன். “ஒன்றுமில்லை” என்றாள். தலையாட்டியபோது முடிக்கற்றை சரிந்து விழிகளை மறைக்க அள்ளிப்பின்னுக்குப் போட்டுக்கொண்டாள். “இல்லை, உன் மனம் மாறிவிட்டது” என்றேன். அவள் ஒன்றும் சொல்லவில்லை. “சொல்” என்றே

என் கண்களைப்பார்த்து, “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று புரிகிறது” என்றாள். “நான் சாதாரணமாக நினைவுக்கு வந்த கதையைத்தானே சொன்னேன்” என்றேன். ஏன் அந்தக் கதை நினைவுக்கு வருகிறது?” என்றாள். “ஏன்?” என்று நான் அவளைக் கேட்டேன். அவள் அழுத்தமான குரலில் “பிணத்துடன் தூங்குதல்…” என்றாள்.

அவள் என்ன உத்தேசிக்கிறாள் என்பதை புரிந்து கொண்டு நான் அவளை இறுக அணைத்து “இல்லை, நான் அப்படி எதையும் உத்தேசிக்கவில்லை” என்றேன். “பரவாயில்லை” என்று அவள் சொன்னாள். “இல்லை நான் உண்மையிலேயே அப்படி எதையும் எண்ணவில்லை” என்றேன். “இங்கு ஒரு சொல் உண்டு. விபச்சாரியுடன் உறவு கொள்வது பிணத்துடன் உறவு கொள்வது போல…” என்றாள். “நம்பு நான் அப்படி உத்தேசிக்கவில்லை” என்று அவளை இறுக அணைத்தேன். “சத்தியம்” என முத்தமிட்டேன்.

“நீங்கள் எண்ணவில்லை. ஆனால் உங்கள் உள்ளம் உணர்ந்தது” என்றாள். “இல்லை உண்மையிலேயே இல்லை” என்று அவள் கைகளைப்பற்றிச் சொன்னேன். “நான் எங்குவேண்டுமானாலும் சத்தியம் செய்கிறேன் உண்மையிலேயே இல்லை. இந்த இரவில் உன்னுடன் மிக நெருக்கமாகத்தான் உணர்ந்தேன். இவ்வளவு நெருக்கமாக எந்தப்பெண்ணிடமும் நான் உணர்ந்ததே இல்லை. ” என்றபோது என்குரல் சற்று உடைந்தது.

“இதை நீங்கள் சொல்ல வேண்டியதில்லை. ஒரு வாடிக்கையாளன் விபச்சாரியை எந்த வகையிலும் சமாதானப்படுத்தவேண்டிய அவசியமில்லை” என்றாள். “நான் உண்மையில் அப்படி எண்ணவில்லை நான் இதற்குமேல் எப்படி சொல்லவேண்டும்…?” என்று என்னை மீறி எழுந்த உணர்ச்சியுடன் சொன்னேன்.

அவள் “நான் அதைப் பெரிதாக நினைக்கவில்லை மறந்து விடுங்கள்” என்றாள். “இல்லை நீ அப்படி நினைக்கிறாய் என்பது எனக்கு பதட்டத்தை உருவாக்குகிறது. நான் அப்படி நினைக்கவே இல்லை. ” என்றேன்

அவள் அதைக்கேளாதவளாக குனிந்தே இருந்தாள். கரிய பளபளக்கும் முடியால் முகம் மூடியிருந்தது. சட்டென்று ஒரு விசும்பல் ஒலி. வேறெங்கோ எவரோ அழுவதுபோல அதைக்கேட்டேன். அவள் என்  மார்பில் முகம் புதைத்து விசும்பி அழத்தொடங்கினாள்.

மேலும் சற்று நேரம் கழிந்து தான் அவள் அழுகிறாள் என்பதே புரிந்தது. அவளை விலக்கி “அழுகிறாயா? ஏன்?” என்றேன். புரண்டு தலையணையில் முகம் புதைத்து உடல்குலுங்க அழத்தொடங்கினாள். நான் அவளை திருப்பி “சொல் ஏன் அழுகிறாய் நான் என்ன தவறாக சொல்லிவிட்டேன் தவறாக சொல்லியிருந்தாலும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றேன்.

“மன்னிப்பா? நீங்களா? நான்தான் மன்னிப்புகோரவேண்டும். நான் சரியாக நடந்து கொள்ளவில்லை” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றேன். கண்ணீர்த்துளிகள் நின்ற இமைகளுடன் “அவ்வளவு பணம் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு சிறு பகுதிதான் எனக்கு வரும். ஆனாலும் என் கடமை. அவர்கள் என்னிடம் சொன்ன எதையும் நான் செய்யவில்லை”

“இல்லை” என்று ஏதோ சொல்லப்போனேன். “நான் கெய்ஷாவாக நடிக்கவில்லை. உங்களை என்னால் நிறைவு செய்ய முடியவில்லை” என்றாள். “இல்லை அப்படி அல்ல” என்று நான் அவள் தோளைப்பற்றி உலுக்கி சொன்னேன். அவள் அழுகை சட்டென்று மேலும் வலுத்தது. உடலை நன்றாக குறுக்கிக் கொண்டு சிறுகுழந்தை போல அழுதாள்.

நான் அவள் தோளைத் திருப்பி முகத்தை பார்த்து ”இதற்கு மேல் நான் என்ன சொல்லவேண்டும். நான் உண்மையில் எதையும் நினைக்கவில்லை” என்றேன். “ஆம் பிணம்தான். அப்படித்தான் நான் எல்லாரிடமும் இருக்கிறேன். ஆனால் இன்றைக்கு அப்படி இருக்கவில்லை. மற்ற அனைவரும் பிணமென்று என்னை நினைக்க வேண்டும் என்றே உண்மை நினைப்பேன்.ஆனால் நீங்கள் அப்படி நினைப்பது என்னைப் புண்படுத்துகிறது”

முகத்தை துடைத்து கூந்தலை அள்ளி பின்னால் குவித்து கழற்றிவைத்த கிளிப்பை டீபாயிலிருந்து எடுத்து அணிந்துகொண்டாள். மெல்ல அமைதியானாள் “நீங்கள் என்னை பெண் என்று நினைக்கவேண்டும் என்று நினைத்தேன், நீங்கள் என்னை பிணம் என்று நினைக்கிறீர்கள்…” என்றாள். “இல்லை இல்லை…. ” என்று அவள் கன்னங்களிலும் இதழ்களிலும் முத்தமிட்டுச் சொன்னேன்.

“நான் மிகமிக ஏழை. நாங்கள் ஒன்பது பேர் ஒரே அறையில் வசிக்கிறோம். என் மூன்று இளையவர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது படிப்பை முடித்து ஒர் ஆசிரியர் வேலைக்கு சென்றால் இதிலிருந்தெல்லாம் மீள முடியும் என்று நினைத்தேன்” என்று அவள் சொன்னாள் “நாங்கள் கெய்ஷா குடும்பம் அல்ல. எனது மூதாதையர்கள் கிராமத்தில் விவசாயம் செய்தார்கள். அங்கிருந்து பிழைப்பு தேடி டோக்கியோவுக்கு வந்தோம். இங்கே எல்லாமே விலை உயர்ந்தவை. உடலை நன்றகா விரித்து படுத்துக் கொள்வதற்கான ஒர் இடத்திற்காக மாதம் முழுக்க வேர்வை சிந்த வேண்டும்”

நான் அவள் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தேன். அழுதபோதிருந்ததை விட இப்போது மேலும் துயர்கொண்டிருந்தது அவள்முகம். சிறிய தந்தச்சிமிழ் போன்ற முகம். “அப்பா இருந்த வரைக்கும் நாங்கள் உழைத்து தான் வாழ்ந்தோம். அப்பா இறந்து அம்மாவுக்கும் குதிகால் வலி வந்து நிற்க முடியாமல் ஆனபோது அக்காவுக்கும் எனக்கும் வேறு வழி தெரியவில்லை. அப்போதுதான் இவர்களின் தொடர்பு கிடைத்தது. இவர்கள் எனக்கு கொடுப்பது மிகச்சிறிய தொகைதான். அதற்கு அவ்வளவு அவமானம்…” கண்களைத் துடைத்துக் கொண்டு “இதையெல்லாம் நான் சொல்லக்கூடாது. சொன்னேன் என்று தெரிந்தால் அவர்கள் என்னைத் தண்டிப்பார்கள்” என்றாள்.

“இல்லை நான் யாரிடமும் சொல்லப்போவதில்லை. ” என்றேன். அவள் பெருமூச்சுடன் “இதை நான் ஏன் சொல்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. யாரிடமும் இதைச் சொன்னதில்லை இந்தக் கெய்ஷாவின் வீட்டுக்கு நீங்கள் வந்தீர்கள் என்றால் ஐந்து நிமிடம் அங்கே இருக்க உங்களால் முடியாது. ஒரே அறையில் எட்டு பேர் வாழும்போது அது பன்றித் தொழுவம் போல் ஆகிவிடுகிறது.” என்றாள்.

”என்னை மன்னித்துவிடு” என்று சொல்லி அவள் இடையை வளைத்து “நான் இதெல்லாம் ஓரளவுக்கு இப்படித்தான் என்று ஊகித்திருந்தேன். ஆனால் எங்கோ எனக்கு ஒர் அகங்காரம் இருந்திருக்கிறது. உன் தோரணையைப் பார்த்தபோது உன்னை உடைத்து உன்னை அழவைக்க வேண்டும் என்று அது ஆசைப்பட்டிருக்கிறது. நீ மனமுடைந்து அழுவதைப் பார்த்தபோது எனக்கு எவ்வளவு நிறைவு வருகிறது என்று கவனித்தேன். அப்போதுதான் என்னைப்பற்றி நானே தெரிந்து கொண்டேன். என்னையே நான் வெறுத்தேன்” என்றேன்.

அவள் என்னை அணைத்துக் கொண்டு ”பரவாயில்லை ஆண்களின் இயல்பு தானே அது? வலிக்க வைக்காத ஆண் என்று உலகத்தில் யாரும் இல்லை என்று என் அம்மா சொல்வார்கள்” என்றாள். பின்பு என் கண்களைப்பார்த்து ”ஒன்று மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன்” என்றாள். “சொல்” என்றேன். “நான் பிணமில்லை” என்றாள். ”நான் அப்படி சொல்லவில்லை” என்றபடி நான் அவளை முத்தமிடத்தொடங்கினேன்.

என் கைகளில் அவள் உருகித் திரவமாக ஆகப்போகிறவள் போல குழைந்தாள். “நான் பெண். . நான் பெண். . ” என்று முனகிக் கொண்டிருந்தாள். அம்முறை முற்றிலும் புதிய ஒரு பெண்ணுடன் இருந்தேன். முதல் பெண்ணிடம் போல. பூமியில் மனிதர்களே இல்லாத போது தனித்து விடப்பட்ட இருவரைப்போல. அடுத்த கணம் இறந்து விடப்போகிறவர்களைப்போல.

பின்பு தழுவியபடி படுத்திருக்கும்போது அவள் இமைகளில் கண்ணீர் படிந்திருந்தது. மூடிய இமைகளின் விளிம்பில் மயிர் வெண்ணிறப்பீங்கான்மேல் மயிற்பீலி விளிம்பு போல படிந்திருந்தது. அதை என் கைகளால் தொட்டு வருடியபோது அதிலிருந்த ஈரம் தெரியவந்தது. “மீண்டும் அழுதாயா?” என்றேன். “இல்லை” என்றாள். “கண்ணீர் இருக்கிறது” என்றேன். “அழுதால்தான் கண்ணீர் வருமா…?” என்றாள். இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டன.

“இல்லை” என்றபின் அவளை மீண்டும் அணைத்துக் கொண்டு அவள் காதில் “நானும் அழுதேன்” என்றேன். ”உண்மையாகவா…?” என்றாள். “ஆம், நான் அழுதே நிறைய வருடங்கள் ஆகிறது” என்றேன். என் காதில் என் உடலுக்குள் இருந்தே பேசுவதுபோல “எத்தனை வருடங்கள். . ?” ஒரு கணம் தாளமுடியாத அழுத்தத்தில் திளைத்து மெல்ல விடுபட்டு “இருபது வருடங்கள்” என்றேன்.

“உங்கள் மனைவி இருக்கிறார்களா. . ?” என்று கேட்டாள். “பிரிந்து போய்விட்டாள்” என்றேன். “மன்னிக்கவேண்டும் நான் அதைக் கேட்டிருக்ககூடாது” என்றாள். “இல்லை, பரவாயில்லை, நீ அறியவிரும்புவதைக்கேள்” என்று நான் சொன்னேன். “வேண்டாம், உங்களுக்கு அது துயரளிக்கிறது” என்றாள். “இல்லை நான் எவரிடமும் சொன்னதில்லை. உன்னிடம் சொல்லியாக வேண்டும்” என்றேன்.

“வேண்டாமே. நாம் ஓர் உயரத்தில் இருக்கிறோம். அதிலிருந்து ஏன் கீழிறங்க வேண்டும்?” என்றாள். “இது கீழிறங்கல் அல்ல. இந்தச் சுமைகளை இறக்காவிட்டால் நான் எப்போதும் மண்ணில் தான் நின்று கொண்டிருப்பேன்” என்றேன். “சொல்லுங்கள்” என்று என்னை அணைத்து என் தலைமயிரை வருடத்தொடங்கினாள்.

நான் என் அப்பாவின் பங்குதாரரின் மகளை இளமையிலேயே மணக்கவேண்டியிருந்தது. ஒரு ஆடம்பரமான அசட்டு நாடகம் போல நடந்த எங்கள் திருமணம். அதன் பிறகு ஒவ்வொரு நாளும் வளர்ந்து வந்த மனக்கசப்புகள். சிறுமைசெய்யப்பட்டபோது நான் அடைந்த வன்முறை வெறி. நான் வணிகத்தில் வெற்றி பெறும் தோறும் என் மனைவி அடைந்த ஏமாற்றம். அவள் தன் அடிமையாகவே என்னை வைத்திருக்க வேண்டுமென்று அவள் எடுத்த முயற்சிகள். இறுதியில் ஒரு குழந்தையுடன் அவள் பிரிந்து சென்றது. அதற்குப்பிந்தைய ஆழ்ந்த மனக்கசப்பு

“பெண்கள்மீதான கடும் கசப்பாலேயே நான் காமத்தில் திளைத்தேன்” என்றேன். “ஆம், பலர் அப்படித்தான்” என்றாள். “நான் செய்தவை எல்லாம் அவளுக்கு எதிரானவை. எதற்கு எதிராக செயல்பட்டாலும் சரி எதிர்மறைச்செயல்பாடு கடைசியில் ஏமாற்றத்தை மட்டுமே எஞ்சவைக்கிறது” அவள் என்னை மென்மையாக முத்தமிட்டுக் கொண்டே இருந்தாள். ஒருவார்த்தை கூட சொல்லக்கூடாது என்று அறிந்திருந்தாள்.

நான் பெருமூச்சுவிட்டு மெல்ல கண்களை மூடி தளர்ந்தேன். என் இமைகள் நனைந்திருந்ததை அவள் தன் விரல்களால் தொட்டு “ஈரம்” என்றாள். “ஆம்” என்றேன். “தூங்குங்கள்” என்று அவள் சொன்னாள். “ஆம்” என்றபடி அவள் தோளில் முகம் புதைத்துக்கொண்டேன்

உறக்கம் வந்து என் எண்ணங்களை நனைந்து படியச் செய்வதற்கு முன்பு “நீ என்னுடன் இரு” என்றேன். என் உதடுகள் அவள் தோளில் கசங்கியமையால் குரல் போதையிலென ஒலித்தது. “சரி” என்று அவள் சொன்னாள். “என்னிடம் பணம் இருக்கிறது. உனக்கு வேண்டியதை எல்லாம் நான் தருகிறேன். நீ என்னுடன் இருந்தால் போதும்” அவள் என் கனவுக்குள் என “சரி” என்றாள்.

என் உள்ளம் உருகிக்கொண்டிருந்தது. கண்ணீர் அவள் தோள்களில் கழுத்தில் விழுந்தது. மூக்கை உறிஞ்சிக்கொண்டேன். அடைத்த தொண்டையைச் செருமி “நீ என்னுடன் இருக்கவேண்டும்…” என்றேன். “ம்” என்றபோது அவள்குரலும் அடைத்திருந்ததை உணர்ந்தேன். முத்தமிட்டபோது அவள் கண்ணீர் என் முகத்தில் படிந்தது

“நான் இன்னொரு மனித உயிருடன் இத்தனை நெருக்கமாக ஆவேன் என்று நம்பவே இல்லை. எனக்கு யாருமில்லை. நீ என்னுடன் இருந்தே ஆகவேண்டும்” என்றேன். அவள் மூச்சொலிபோல் “இருப்பேன்” என்றாள். ”இறுதி வரை…?” என்ரேன். ”இறுதி வரை” என்றாள்.

அவளது அணைப்பில் முத்தங்களுடன் நான் துயின்றேன். காலையில் எழுந்தபோது எனது ஆடைகள் அருகே குறுமேடைமேல் மடித்து வைக்கப்பட்டிருந்தன. கைக்குட்டைகள் குறுந்துவாலைகள் எல்லாமே சீராக அடுக்கப்பட்டிருந்தன. காலைச்செய்தித்தாள் காத்திருந்தது.  ஒரு பெண் வந்து போனதற்கு தடயமே இல்லாமல் சீராக இருந்தது அறை.

https://www.jeyamohan.in/90446/?fbclid=IwdGRleAOivjtleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEefOHACDTwVR1IGZdDI3iMUUkyBDa8hiTuE9UMQXfxasmb_3FtnaEbMELEwjM_aem_N0Q_r5uLV3bqeex1S7GMiw

பூரணநாயகி

4 weeks 2 days ago
அகதிகளாக வருவதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. உயிர் தப்பிப் பிழைக்கவேண்டும் என்பதுதான் முக்கியமானது. மத்திய தரைக் கடலிலும், ஆங்கிலக் கால்வாயிலும் பலர் கடலில் மூழ்கி இறக்கும்போது அம்மரணங்கள் வெறும் இலக்கங்களாகவே செய்திகளில் வருகின்றன. அவர்களின் கதைகள் அறியப்படாமலேயே போகும். தமிழர்கள் அதிகளவு புலம்பெயர்ந்த காலத்தில் ஆபத்தான வழிகள் கிழக்கு ஐரோப்பாவில் இருந்து மேற்கு ஐரோப்பாவுக்குள் நுழைவதுதான். சிலர் உறைபனிக்குள் சிக்கி உயிர்துறந்தனர். அண்மைக் காலங்களில் ரஷ்யா ஊடாக வரமுயன்றவர்களை உக்கிரேன் யுத்தமுனைக்கு அனுப்பியதும் செய்திகளாக வந்தது. ஆனாலும் தமது இலக்கை அடையவேண்டும் என்று வரும் அகதிகள் எவ்வகை ஆபத்தையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள். மனிதக் கடத்தல்காரர்கள், முகவர்களுக்கு அவர்கள் பணம் சம்பாதிக்கும் முதலீடு. நானும் பதின்ம வயதில் அகதியாக வந்தேன். ஆனால் ஒப்பீட்டளவில் ஆபத்துக்கள் இல்லாத வழி. பல அனுபவங்களைத் தந்து என்னை நானே கண்டுகொள்ள உதவியது!

இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்

4 weeks 2 days ago
குவின்டன் துடுப்பாட்டத்திலும் பார்ட்மன் பந்துவீச்சிலும் அசத்தல்; இந்தியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது தென் ஆபிரிக்கா 12 Dec, 2025 | 12:42 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு எதிராக நியூ சண்டிகார் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா 51 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை தென் ஆபிரிக்கா 1 - 1 என சமப்படுத்தியுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 101 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. இரண்டாவது போட்டியில் குவின்டன் டி கொக் அதிரடியாக குவித்த அரைச் சதம், ஒட்நீல் பார்ட்மன் பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன தென் ஆபிரிக்காவின் வெற்றியில் பிரதான பங்காற்றின. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட தென் ஆபிரிக்கா குவின்டன் டி கொக்கின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 214 ஓட்டங்களைக் குவித்தது. குவின்டன் டி கொக் 46 பந்துகளில் 5 பவுண்டறிகள், 7 சிக்ஸ்கள் உட்பட 90 ஓட்டங்களைப் பெற்றார். அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராமுடன் 2ஆவது விக்கெட்டில் 83 ஓட்டங்களை குவின்டன் டி கொக் பகிர்ந்தார். இதேவேளை, டொனவன் பெரெய்ரா, டேவிட் மில்லர் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்து தென் ஆபிரிக்காவுக்கு மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைக் கடக்க உதவினர். டொனவன் பெரெய்ரா 30 ஓட்டங்களுடனும் டேவிட் மில்லர் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். ஏய்டன் மார்க்ராம் 29 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். தென் ஆபிரிக்காவினால் நிர்ணயிக்கப்பட்ட 214 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 162 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இந்தியாவின் எதிர்கால ரி20 நட்சத்திரங்கள் என வருணிக்கப்படும் ஷுப்மன் கில் (0), அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் (5) ஆகிய இருவரும் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். துடுப்பாட்ட வரிசையில் 3ஆம் இலக்கத்துக்கு உயர்த்தப்பட்ட அக்சார் பட்டெல் 21 ஓட்டங்களைப் பெற்றார். மத்திய வரிசையில் திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். திலக் வர்மா 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 62 ஓட்டங்களையம் ஹார்திக் பாண்டியா 20 ஓட்டங்களையும் ஜிட்டேஷ் ஷர்மா 27 ஓட்டங்களையும் கைப்பற்றினர். பந்துவீச்சில் ஒட்நீல் பார்ட்மன் 24 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் லுங்கி நிகிடி, மார்க்கோ ஜென்சன், லூத்தோ சிப்பல்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: குவின்டன் டி கொக். https://www.virakesari.lk/article/233172

ஈழத்து நாட்டார் தெய்வங்கள் - தி. செல்வமனோகரன்

4 weeks 2 days ago
பூசைக்கிழவி என்னும் தெய்வம் தி. செல்வமனோகரன் அறிமுகம் மனித குல வரலாற்றோடு பின்னிப்பிணைந்த இயற்கை – இயற்கை வழிபாட்டின் வழி உருவான தெய்வங்களுள் பெண் தெய்வங்களுக்குத் தனியிடம் உண்டு. தமிழர் சமயவியலின் தொடக்கத்தில் கொற்றவை எனும் பாலை நிலத் தெய்வம் அடையாளப்படுத்தப்படுகின்றாள். தமிழர் வாழ்வியல் புலத்தில், ஏன் மனிதரின் வரலாற்றில், வேட்டையாடலுக்குத் தலைமை தாங்கி இனக்குழுவை வழிநடத்தியது தொடக்கம் நிலையான குடியிருப்பு, உற்பத்திச் செயற்பாடுகள் என்பவற்றில் பெண்ணின் பங்கு பிரதானமானது என்பதை அறிய முடிகிறது. அவளது பிள்ளைப்பேறு கால ஓய்வு – மருத்துவத் தேவையை முன்னிட்டு, குடும்பப் பொறுப்பு ஆணின் கையிற்கு முதலில் தற்காலிகமாகவும், பின்பு நிரந்தரமாகவும் அதிகார மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்பு ஆணால் சமூகப் பொறுப்பும் அதிகாரமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. தமிழர் வரலாற்றில் விளைச்சலற்ற, கொடிய வெயில், மழை, காற்று நிறைந்த பாலை நிலத் தெய்வமாக, கொடூரமானவளாக, சீற்றம் நிறைந்தவளாக கொற்றவை என்னும் ஒரேயொரு பெண் தெய்வம் சித்திரிக்கப்படுகிறது. பெண்ணின் சீற்றம்தான் அவளின் தெய்வ அடையாளமோ எனத் தமிழர் சமய வரலாற்றைக் கற்குந் தோறும் தோன்றுகின்றது. கொற்றவை, கண்ணகி, காரைக்கால் அம்மை, மாரி, காளி என இப்பட்டியல் நீளும். பிற்காலத் தாய்மை பற்றிய உரையாடலில்தான் சாந்த சொரூபியாக, காருண்யமாக, தத்துவத் தளத்தில் பரம்பொருளின் ஆற்றலாக (இயக்க சக்தி) அவள் சித்திரிக்கப்படுகின்றாள். காலம் தோறும் ஆணின் பார்வையிலான பெண்ணாகவே மனிதர், விலங்கு மட்டுமல்ல தெய்வப் பெண்ணும் கட்டமைக்கப்பட்டிருப்பதை நாம் அவதானிக்க முடிகின்றது. இந்தப் பின்னணியில் இருந்து கொண்டுதான் ஈழத்துத் தமிழ்ச் சூழலில் நின்று நிலவும் பெண் தெய்வங்களை, அவை பற்றிய ஆராய்ச்சிகளை நிகழ்த்தக் கூடியதாக உள்ளது. அதிலும் நாட்டாரியல் சார்ந்த பெண் தெய்வங்கள் நோய் நொடிகள், பஞ்சம், பட்டினி தருகின்றனவாகவே அதிகம் அடையாளப்படுத்தப்படுகின்றன. அவற்றின் நின்றும் மாறுபட்ட பெண் தெய்வமாக, குலதெய்வமாக பூசைக்கிழவி என்னும் தெய்வம் காணப்படுகின்றாள். கொரோனாக் காலத்தில் மலேசியப் பல்கலைக்கழகம் நடாத்திய சர்வதேச விவாதப் போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை பயிற்றுவித்து போட்டிக்கு அனுப்பும் பொறுப்பில் நான் இருந்த காலத்தில் மாணவர்களுடனான உரையாடல் நாட்டார் தெய்வங்கள் பற்றித் திரும்பியது. அப்போது ஆழியவளையைச் சேர்ந்த செல்வி. டிலோஜினி மோசேஸ் இந்தத் தெய்வம் பற்றிய அறிமுகத்தை எனக்குத் தந்தார். அவருடன் தொலைபேசி வழி உரையாடி தெய்வம் இருக்கும் இடங்களை ஓரளவு அறிந்து கொண்டு சமூகவியல் ஆய்வாளரும் படைப்பாளியுமான திரு. நா. மயூரரூபன் மற்றும் நாட்டாரியல் ஆய்வு ஆர்வலர் திரு. கோ. விஜிகரன் ஆகியோருடன் வடமராட்சி கிழக்குப் பகுதிக்குச் சென்று இந்த ஆய்வை நடத்தினோம். பூசைக்கிழவி ஐரோப்பிய காலனிய கால வழிபாடாகவே பூசைக்கிழவி வழிபாடு சொல்லப்படுகின்றது. இது பொதுக்கோயில் அற்ற தெய்வம். வீடுகளில் மட்டுமே வைத்து வணங்கப்பட்டு வருகின்ற இத்தெய்வம் பூசைக்கிழவி, பூசையம்மன் எனவும் இதன் இருப்பிடம் பூசைக்கிழவி கோயில், ஆச்சி கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஆரம்பகாலங்களில் பூசைக்கிழவி என்று அழைக்கப்பட்டு வந்தாலும் தற்போது பூசையம்மன் என்பதே பெருவழக்காக இருப்பதாக உடுத்துறையைச் சேர்ந்த பொன்னுத்துரை சதீஸ் (வயது 41) தெரிவித்தார். அதேவேளை ஆழியவளைப் பிரதேசத்தில் இன்றும் பூசைக்கிழவி என்னும் பெயரே பெருவழக்காக உள்ளது. தமிழர் மரபில் தெய்வீகம் பெற்ற பெண்களை, சமூக முன்னேற்றத்திற்கு உழைக்கும் பெண்களை கிழவி – ஆச்சி ஆக்கிவிடுகிற பண்பாட்டுக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு என்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது. ஒளவையாரை கிழவி, ஆச்சி ஆக்கிக் குறிப்பிடுவதும், புனிதவதியை என்புருவாக்கி காரைக்கால் அம்மை – காரைக்கால் பேய் ஆக்கியதுமான கதைகள் மனங்கொள்ளத்தக்கன. அத்தோடு மாரி, காளி முதலான பெண் தெய்வங்களை மாரியம்மா, காளியாச்சி, அம்மாச்சி என வழங்கும் வரலாறுகள் காணப்படுவதும் சுட்டிக்காட்டத்தக்கது. வீடுகளில் வைத்தே இத்தெய்வங்கள் ஆதரிக்கப்படுகின்றமையினால் இது முன்னோர் வழிபாடாகவோ, குலதெய்வ வழிபாடாகவோ தான் அமைந்திருக்க வேண்டும். அது பற்றிய சரியான தகவல்களை அறிதல் மிகச் சிரமமானதாகவே இருந்தது. இவ்வழிபாடு காலனியகால சமய ஒடுக்குமுறைக் காலத்தில் வெளியில் மற்றவர்களுக்குத் தெரியாமல் வீட்டு வளவினுள் மரத்தின் கீழ் வைத்து வழிபட்ட வழிபாட்டு முறையாகவுமே இருந்து வந்துள்ளது. குறைந்தது, நூறு வருட – அம்மாவின் அம்மம்மா காலத்திற்குரிய வழிபாடு என்பதே பொதுக்கூற்றாக உள்ளது. இவ்வழிபாடு நின்று நிலவும் பிரதேசங்கள் கடலும் கடல் சார்ந்த இடமும், வயலும் வயல் சார்ந்த நிலமும் ஒருங்கிணைந்து இருக்கின்ற, இரு மரபும் துய்ய அமைந்திருக்கின்ற வடமராட்சி கிழக்கின் உடுத்துறை, தாழையடி, வத்திராயன், மருதங்கேணி, ஆழியவளை போன்ற பிரதேசங்களில் இத்தெய்வ வழிபாடு உயிர்ப்புடன் இருந்து வருகின்றது. இப்பிரதேசங்களில் உள்ள, பெரும்பாலும் சைவசமயம் சார்ந்தவர்களின் வீடுகளில் இவ்வழிபாடு காணப்படுகின்றது. தத்தம் வளவுகளில் கிழக்குத்திசை நோக்கி சிறு கோயில், மண் – ஓலைக் கொட்டில்களாக இருந்த கோயில்கள், இன்று பெரும்பாலும் சீமெந்துக்கற்களால் கட்டப்பட்ட சிறு கோயில்களாக மாற்றமுற்றுள்ளன. சில கிறிஸ்தவர்கள் வீடுகளிலும் தெய்வ வழிபாடு நிலவுவதாக அறிய முடிகிறது. காலங்காலமாக தம் மூதாதையர் வணங்கி வந்த தெய்வத்தை, நம்பிக்கையைக் கைவிட முடியாமல் அல்லது இத்தெய்வத்தின் மீது உள்ள நம்பிக்கையிலோ பிடிப்பினாலோ இவ்வழிபாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருக்கலாம். தெய்வவுரு ஆரம்பகாலத்தில் கல் வைத்து இத்தெய்வத்தை உருவநிலைப்படுத்தி உள்ளனர். பிற்காலத்தில் சூலம் இணைக்கப்பட்டுள்ளது. இன்று இரும்புச் சூலத்தைக் கைவிட்டு, பித்தளைச் சூலம் பெரும்பான்மை வழிபடு பொருளாக மாறியுள்ளது. இவ்வழிபாட்டின் தனித்துவ அம்சம் பானையை வைத்து தெய்வ உருநிலைப்படுத்தி வழிபடுதலாகும். இரண்டு கொத்துக்கு மேல் (2 ½ kg) நெல்லைக் கொள்ளக்கூடிய (உள்ளடக்கக் கூடிய) அளவுடைய பானை வைக்கப்பட்டு அதனுள் நெல் முழுமையாக இடப்படுகின்றது. அதனுள் சில்லறைக் காசினை இட்டு வைக்கும் வழக்கமும் இன்று காணப்படுகின்றது. முன்பு பொன், வெள்ளி முதலியனவும் இட்டிருக்கலாம். அந்தப் பானையின் மேல் சட்டியைக் ‘கவிட்டு’ மூடிக் கட்டிவைக்கின்றனர். பானைக்கு திருநீறும் பொட்டும் இடப்படுகிறது. சில இடங்களில் தத்தம் வசதிக்கேற்ப பட்டுக் கட்டும் வழக்கமும் காணப்படுகிறது. இப்பானைக்கருகில் சூலமும் வைக்கப்படுகிறது. இரண்டுக்கும் இணைந்தே வழிபாடு இயற்றப்படுகிறது. அதேநேரம், நேரிலும் கனவிலும் இத்தெய்வத்தைக் கண்டவர்களாகத் தம்மை அடையாளப்படுத்தியவர்கள் அதனை வெள்ளைச் சேலை கட்டிய ‘குடுகுடு’ கிழவி என்றனர். சிலர் நிழலைக் கண்டதாகவும், அது பெரிய தோற்றம் உடைய முதிர் பெண்ணின் வடிவம் என்கின்றனர். பூசைக்கிழவி பற்றிய கதைகள் பூசைக்கிழவியின் தொன்மம் பற்றிய தேடலின் வழி ஒரு கதையை மட்டும் அறிய முடிந்தது. இந்தியாவின் தமிழகப் பகுதியில் குறிப்பிட்ட காலத்திற்கு முன் வயது போனவர்கள் பலர் இணைந்து கோவில் ஒன்றில் வாழ்ந்து வந்தனர். அந்தக் கோயிலில் சிறப்பாக பூசைகள் நடைபெற்று வந்ததனால் கோயிற் பிரசாதம் இவர்களுக்கு உணவாக வழங்கப்பட்டு வந்தது. ஒரு குறையும் இன்றி வாழ்ந்து வரும் காலத்தில் திடீரென்று ஒரு நாள் புயலோடு கூடிய பெருமழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுக்கத் தொடங்கியது. அந்தக் கோயிலில் இருந்தவர்களெல்லாம் திசை கெட்டு ஓடினர். இவர்களுள் கிழவிகள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு கோயிலில் தஞ்சம் அடைந்தனர். ஒரு கட்டத்தில் அக்கோயிலிலிருந்து வேறிடம் செல்லத் தலைப்பட்டனர். இவர்களுள் ஒருவரான ‘நயினாதீவு அம்மன்’ முதலில் புறப்படத் தயாரான போது அந்தக் கடற்கரையை அண்டி ஒரு கப்பல் தோன்றியது. அந்தக் கப்பலில் ஏறிய அம்மன் “நான் மட்டும்தான் இதில் ஏறுவன். வேற ஒருத்தரும் ஏற வேண்டாம்” என்று கூறினார். கப்பல் புறப்பட்டுச் சென்றது. தலைக்கு மேல் கழுகு பறந்து வந்து கொண்டிருந்தது. கப்பல் கரைக்கு அண்மையில் வந்தபோது கப்பல் கடலில் தாழத் தொடங்கியது. கழுகு, நாகபூசணி அம்மனைச் சுமந்து வந்து கரையிலிருந்த பற்றைக்கருகில் இறக்கிவிட்டது. பின்னர் அவர் அதற்கருகில் இருந்த கொட்டிலில் வாழ்ந்திருந்தார். கப்பலாக வந்து கடலில் தாழ்ந்த நாகமும், சுமந்து வந்த கழுகும் இப்போதும் நயினாதீவு திருவிழாக் காலத்தில், இதனால்தான் இன்றுவரை தோன்றுகின்றன. மற்றையக் கிழவிகள் மறுபுறமாக ஓடி வந்தனர். அதில் ஒருவர் திரியா அம்மன். அவர் மருதங்கேணி காட்டுக்குள் சென்று தெய்வமானார். ஏனைய கிழவிகள் ஓடியோடி வந்தனர். கோயிலுக்கு வளுந்து வைத்துப் பொங்குவர். வீட்டில் பானை வைத்துப் பொங்குவர். முன்பு வீடு, இணைப்பற்ற பகுதிகளை உடையதாக இருந்தது. வடக்குப் பகுதி படுக்கையறையாகவும், தெற்குப்பகுதி விருந்தினர் தங்குமிடமாகவும், கிழக்குப் பகுதி சமையலறையாகவும், மேற்குப் பகுதியில் உள்ள அறை தூய்மைப்படுத்தப்பட்ட பாத்திர பண்டங்கள் வைக்குமிடமாகவும் காணப்பட்டன. வடக்கு அறை அறுக்கையாக (மூடிக்கட்டி வாயில் உடையதாய்) இருக்கும். குசினி ஓரளவு அறுக்கையாகவும், தெற்குத் திசையில் இருப்பது கொட்டிலாகவும் இருக்கும். மேற்குக் கொட்டில் தூய்மையான, மட்சம் புழங்காத ஒன்று. எல்லாக் கூரையும் பனையோலையால் வேயப்பட்டிருக்கும். அதில் மேற்கு திசையில் உள்ள பண்டக அறையில் (தாயறை?) கடற்கரை ஓரமாக ஓடி வந்த கிழவிகள் அவ்வூர்களில் இருந்த மேற்குப் பக்க அறைகளுள் (ஓலைக் கொட்டில்கள்) புகுந்து பானைக்குள் ஒளிந்துகொண்டு சட்டியால் மூடிக்கொண்டனர். ஒவ்வொரு வீட்டாரும் தத்தம் தேவைக் காலத்தில் அறைக்குச் சென்று மூடியைத் திறந்து பானையைப் பார்க்கும்போது வெள்ளைச்சீலை கட்டி, முக்காடு போட்டபடி கிழவிகள் வெளியே வந்தனர். தம்மை ஆதரிக்குமாறு கோரினர். புனித அறையில் இருந்து வந்ததால் இவர்கள் பூசைக்கிழவி, பூசையம்மன் என்று கூறப்பட்டனர். செல்லையதீவு, கரவெட்டி தெற்கு வழி சென்று, கடைசியாக வற்றாப்பளையில் போயிருந்ததாகக் கூறப்படுகின்றது (தகவல்: செல்லத்துரை சத்தியகீர்த்தி (வயது 76), உடுத்துறை). இத்தகைய கதை, கண்ணகி இலங்கை வந்து பயணித்து வற்றப்பாளை சென்றடைந்த கதையை ஒத்திருப்பினும் சம்பவங்கள், இடங்கள் வேறுபடுகின்றன. வற்றாப்பளை மட்டுமே ஒன்றாக அமைகின்றது. பானைக்குள் சட்டியால் மூடிய நிலையில் கிழவிகள் இருந்ததனால் பூசைக்கிழவிகள் வழிபாட்டில், மூடிய நிலையில் உள்ள பானை இன்றியமையாத குறியீடாயிற்று. அற்புதங்கள் • யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்து சென்றபோதும், தான் குறுக்குப்பாதைகளால் வந்து பூசை செய்ததாகவும், தனக்கேதும் நிகழவில்லை என்றும், கோயிலும் எந்தச் சேதமுமின்றி இருந்ததாகவும் திரு. செ. சத்தியகீர்த்தி குறிப்பிடுகின்றார். பேய் பீடித்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் நோய்களுக்கும் கலையாடி சத்தியகீர்த்தி பூசாரி இக்கோயிலில் தீர்வு (திருநீறு போடல், குறி சொல்லல்) வழங்குவதாக இக்கோயிலின் அருகில் வசிக்கும் திரு. வே. சதீஷ் குறிப்பிடுகின்றார். • வீட்டில் உரிய வகையில் வழிபாடு செய்ய மறந்தால், குற்றங்கள் ஏதும் நிகழ்ந்தால், கிழவி வடிவிலான நிழலுருத் தோன்றி வீட்டாரை உட்செல்ல விடாமல் வழிமறைத்து நிற்கும் என செல்வி. மோ. டிலோஜினி குறிப்பிடுகின்றார். • இளைஞர் சிலரிணைந்து முயல் பிடிப்பதற்காகக் காட்டிற்குச் சென்றனர். வழியில் வீரபத்திரர் கோயில் உண்டு. சென்ற இளைஞர்களில் ஒருவர் திடீரென வீழ்ந்து குழறத் தொடங்கினார். கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனையவர்கள் தூக்கிக்கொண்டு சத்தியமூர்த்தி பூசாரியின் வீட்டுக் கோயிலுக்குக் கொண்டு வந்தனர். அவர் கலையாடி நீறு போட்டவுடன் இளைஞர் எழுந்து சாதாரணமாக வீட்டுக்குச் சென்றார். கோயிலமைப்பு வீட்டு வளவினுள் துடக்கு (தீட்டு) உள்ளவர்கள் புழங்காத இடத்தில், குறிப்பாக வேப்பமரத்தின் கீழ் இத்தெய்வம் கல்ரூபத்தில் வழிபடப்பட்டது. பின்பு ஓலைக் கொட்டில்களில் மூடிய பானையும் (அதனுள் நெல், அருகம்புல், காசு போன்றன இடப்பட்டன) திரிசூலமும் வைத்து வழிபடப்பட்டது. வசதிக்கேற்ப தற்காலத்தில் தத்தம் வளவுகளில், வழிபாட்டிடங்களை கிழக்குத்திசை நோக்கிய சிமெந்துக் கற்களாலான சிறு கோயில்களாக மாற்றி வருகின்றனர். அத்தோடு சில வீடுகளில் முனி, ஆஞ்சநேயர், சத்தியம்மன் போன்ற துணைத் தெய்வங்களும் வைத்து வணங்கப்படுகின்றன. பெருங்கோயில் பண்பாடு, கட்டட அமைப்பு எதுவும் இந்தத் தெய்வத்துக்கு இல்லை. வழிபாட்டு முறை பெண்கள் வழி பேணப்பட்டு வரும் வழிபாடாக இருந்தாலும் (தாய் – மகள் – மகள்) ஆண்வழிச் சமூகத்தினரே பூசாரிகளாக விளக்கு வைக்கும் ‘பாக்கியம்’ பெற்றவர்களாகக் காணப்படுகின்றனர். பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் வாரந்தோறும் விளக்கு வைக்கும் பாரம்பரியமே காணப்படுகிறது. காலைப்பொழுதில் விளக்கு வைத்து பழம், வெற்றிலை, பாக்கு வைத்து, தேங்காய் அடித்து, கற்பூரம் ஏற்றி வழிபடுகின்றனர். சிலர் தத்தம் வசதிக்கேற்ப மாலைப் பொழுதுகளில் வழிபடுகின்றனர். திரியா அம்மன் கோயிலில் வைகாசி மாதம் பொங்கல் தொடங்கும். அதன் பின் ஒவ்வொரு கோயிலாக ஆனி மாதம் வரைக்கும் மடை பரவுதல் நடைபெறும் வழக்கம் காணப்படுகின்றது. ஆடி மாதம் மடை பரவுதல் நடைபெறுவதில்லை. இவற்றை விட நேர்த்திக்கடன், தைப்பொங்கல் வருஷம், தீபாவளி, நவராத்திரி காலங்களில் மடை வைக்கும் வழக்கமும் காணப்படுகின்றது. வைகாசி, ஆனி மாத வருடாந்த மடை பரவுதலில் உறவுகளுக்குப் பங்குண்டு. யாவருக்கும் அறிவித்தே மடை பரவுதல் நடைபெறும். இந்தத் தெய்வத்துக்கு மட்சம், மாமிசம் படைப்பதில்லை. மடையில் பொங்கல் செய்யாதது குறிப்பிடத்தக்க விடயமாகும். அவல் கடலை, கௌப்பி, மோதகம், வடை என வசதிக்கேற்ப பலகாரங்களும் மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு பழவகைகளும் வெற்றிலை, பாக்கு, தேசிக்காய் உள்ளிட்டவையும் வைத்து வழிபடும் மரபே காணப்படுகின்றது. இன்னும் சிலர் பொங்கலும் பொங்குவதாக அறியமுடிகின்றது. இதைத்தவிர தமது வீட்டில் விளையும் முதற்பொருள்களையும் (காய், பழம், புதிர் நெல்) இத்தெய்வத்திற்குக் காணிக்கையாக்குவர். வடை மாலைகள் கட்டி சூலத்திற்குப் போடும் வழக்கம் காணப்படுகின்றது. இது வைரவ வழிபாட்டு மரபின் வழி வந்த வழக்கமாக இருக்கலாம். இவ்வூரில், பெறுவதற்கு அரிதான பலாப்பழத்தை வாங்கி தெய்வத்திற்கு படைத்ததன் பின்பே சாப்பிடும் வழக்கம் உள்ளது. படைக்காது விட்டால் துன்ப – துயரம் ஏற்படும் என்பது நம்பிக்கை. சமூக அடுக்கமைவு மருதங்கேணி, உடுத்துறை, ஆழியவளை, வத்திராயன் பகுதிகளில் மீன்பிடித் தொழில் செய்கின்ற கரையோர மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சாதிக்குள் சாதிப் பிரிவுகள் இன்றி ஒரே சமூகத்தவரே வாழ்ந்து வருகின்றனர். ஏறத்தாழ அறுபது வீடுகளுக்கு மேல் பூசைக்கிழவியை – அம்மனை வழிபட்டு வருகின்றனர். ஒரே சமூகத்தினராய் இப்பூசை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை இதில் குறிப்பிடத்தக்கதாகும். இத்தெய்வத்தை பூசைப் பேர்த்தி என்பாரும் உண்டு. இப்பகுதியில் அண்ணமார் வழிபாடும் காணப்பட்டுள்ளது. உடுத்துறையைச் சேர்ந்த இந்த நெய்தல் நில மக்கள், கரைவலை இழுத்துவிட்டு கள், மீன், கருவாடு படைத்து அண்ணமாரை வழிபட்டனர். பெரிய நாவல் மரமொன்றின் கீழ் பொல்லு வைத்து அண்ணமார் வழிபடப்பட்டுள்ளார். இன்று இத்தெய்வ வழிபாடுமில்லை, கோவிலும் இல்லை. சில அவதானிப்புகள் • ஐரோப்பியக் காலனிய காலத்தில் உருவான வழிபாடாகவே பொதுவில் சொல்லப்பட்டாலும், பூசாரி சத்தியகீர்த்தி இந்தியாவில் இருந்து வந்த கிழவிகளின் கதையாக பூசைக்கிழவியின் கதையைக் கூறுகின்றார். • இயற்கை வழிபாட்டில் – வாழ்வில், விதை என்பது போற்றுதற்கும் பாதுகாப்பதற்கும் உரிய புனிதப் பொருள் என்று கருதும் பண்பாடு காணப்பட்டுள்ளது. நெய்தலுடன் மருதம் இணைந்த இந்த நிலப்பரப்பில் விதை நெல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நெல் ஈரப்பதன் இல்லாமலும் வெப்பத்தாக்கத்திற்கு உள்ளாகாமலும் பாதுகாக்கப்பட வேண்டியது. ஆதலால் பெரிய மண்பானைகளில் அதனை இட்டு சட்டி போன்ற மண்மூடிகளால் பாதுகாத்து வரும் வழக்கம் இருந்து வந்திருக்கின்றது. • குறிப்பாக இலங்கையின் வடக்கு மாகாண பருவப் பெயர்ச்சி மழை, காற்று என்பன வடக்கு, தெற்கு திசைகளைச் சார்ந்தவை. ஆதலால் மேற்குக் கொட்டிலில் வைத்து மண் பானைகளில் நெல்மணி பாதுகாக்கப்பட்டிருக்கலாம். நெல்மணியைச் செல்வமாகக் கருதிவந்த காலமானது கடந்துவந்த வழித்தடத்தில் பணப் பெறுமானம் உருவானபோது, அதனையும் பானையில் இட்டிருக்கலாம். அதேபோல சாணியால் மெழுகப்பட்ட கொட்டிலில், வைக்கப்பட்ட நெல் மணியுடன் அறுகம்புல்லையும் இட்டு பூச்சிகளின் தாக்கத்திற்கு உள்ளாகாதவாறு மூடி இருக்கலாம். • கடற்றாய் வழங்கும் மட்சம் வாழ்வாதாரத்திற்கு உரியதெனினும் மருத நிலம் தரும் நெல்மணியும் சமாந்தரமானதும் முதன்மையானதுமாகும். உலகெங்கும் பூதங்கள் புதையல் காத்த கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனை ஒத்து, மண் பானைகளை கிழவிகள் காத்த கதையாக இக்கதையைப் புரிந்துகொள்ளலாம். • கறுக்காய்த் தீவில் உள்ள நெய்தல், மருதம் இணைந்த நிலப்பரப்பில் வாழும் நெய்தல் நில மக்கள், மாரி காலத்தில் மண் பானையில் வளந்துக்கான நெல்மணிகளை இட்டு, நீர் புகாதவாறு வாயை இறுகக்கட்டி, அதனைத் தமது குல தெய்வமாகக் குடி கொண்டிருக்கும் பெரும்படைக் கோயிலுக்கருகிலுள்ள பூவரச மரத்தின் உச்சியில் கட்டிவிடுவர். பின்பு பங்குனி மாதம் அதனை இறக்கி (வெயிற் காலம்) வளந்து வைத்துப் பொங்கி படைப்பர். மாரிகால வெள்ளப்பெருக்கிலிருந்து விதை நெல்லைப் பாதுகாக்கும் திட்டம் இதுவெனலாம். இதுவே பின் ஆகமக் கோவில்களில் கோபுரங்களின் கலசங்களில் தானியம் இடும் செயல்நிலையானது. • இதையொத்தே கடல் நீர் உட்புகும் அபாயமும், மழை வெள்ளப்பெருக்கு அபாயமும் உள்ள இந்த ஊர்களில் நெல்மணியைப் பாதுகாக்கும் எண்ணத்தோடு ஒவ்வொரு வீடுகளிலும் உயர்வான பீடத்தில் மூடிய பானை வைக்கப்பட்டு, அருகில் காவலுக்குத் திரிசூலமும் வைக்கப்பட்ட பூசைக்கிழவி வழிபாடு நடைபெற்று வந்திருக்கிறது என்றே ஊகிக்க முடிகிறது. விவசாயத்தைக் கண்டுபிடித்தவள் பெண் என்பதை இவ்வழிபாடு நிரூபணம் செய்கின்றது. • இப்பானைகளில் அறுவடைக் காலத்தில் (தை மாதம்) புது நெல் இடப்படுகிறது. ஆண்டுதோறும் நடாத்தப்படும் மடைக்கு முன் நெல் மாற்றப்படுதல், ‘விதை நெல்’ எனும் கருத்தை உறுதிப்படுத்துகின்றது. வருடந்தோறும் முதலில் பானையில் நெல்லை இட்டவாறே அடுத்த முறை நெல்லை மாற்றி வைக்க வேண்டும். அவர் பெரும்பாலும் பூசாரியாக அல்லது குடும்பத் தலைவராக இருப்பார். அவர் இல்லாதுபோகும் சந்தர்ப்பத்திலேயே அடுத்தவர் இப்பணியில் ஈடுபட வேண்டும் என்பது எழுதாத விதியாக உள்ளது. • பானைக்குள் நெல்லினை இட்டு வழிபடுவதாலோ என்னவோ இந்தத் தெய்வத்துக்கு பொங்கல் இடும் வழக்கம் இல்லை. • வளமை உடையவள் பெண்; கர்ப்பம் தரிப்பவள்; பல பேறுகளைக் கண்ட முதிர் பெண் (கிழவி, பேர்த்தி) கருவளத்தைக் காக்கும் திறனறிந்தவள்; பிள்ளைப்பேறு பார்க்கும் மருத்துவிச்சி; அனுபவமே அவளின் அடையாளம் என்றாகிறது. ஆகவே வளப்பம் நிறைந்த விதை நெல்லைக் காக்கும் தெய்வம் பெண்ணாக, கிழவியாக, அம்மனாக சித்திரிக்கப்படுகின்றாள். • அண்ணமார் வழிபாடு பொதுவில் சிறுகுடி வேளாளரின் வழிபாடாகவே காணப்பட்ட போதும் இங்கு கரைவலை இழுப்பவர்களின் வழிபடுநிலை தெய்வமாக இருந்துள்ளமையை ‘நம்பிக்கை’ எனும் கருத்தாக்கம் சார்ந்த ஒன்றாகவே பார்க்க முடிகின்றது. முடிவுரை வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட கரையோரக் கிராமங்களில் மரபு மனம் மாறாத நாட்டார் தெய்வமாகப் பூசைக்கிழவி விளங்குகிறார். கிழவி, பேர்த்தி எனவும்; அம்மன் எனவும் சுட்டப்படும் இத்தெய்வம் வீட்டு வளவினுள் வைத்து வழிபடப்படும் ஒரு குலதெய்வமாகும். ஆயினும் இப்பிரதேசத்துக்கு அப்பால் உள்ள கரையோரக் கிராமங்களில் இத்தெய்வ வழிபாடு இல்லை. ஆகவே இப்பிராந்தியத்திற்குரிய தனித்துவமான பெண் தெய்வ வழிபாடாக இது அமைந்துள்ளது. வயலும் கடலும் இணைந்த வாழ்வில் நெல்மணியை – விதையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுந்துதலின் வழி வளப்பமுடைய – அதனைப் பாதுகாக்கும் திறனறிந்த முதிர்பெண்ணைக் காவல் தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். கடலுடன் இணைந்த நிலமாதலால் வெள்ளப் பேரிடரில் இருந்து காக்க, நெல்மணியை மண் பானையினுள் இட்டு அதன் வாயை சட்டியால் மூடி, இறுகக்கட்டிப் பூசித்து வந்துள்ளனர். வருடத்துக்கு ஒருமுறை நெல்லை மாற்றி வந்துள்ளனர். பண்டைய காலத்தில் போக்குவரத்து ஏற்பாடுகளற்ற காடு மண்டிக்கிடந்த இப்பிரதேசத்தில் தமக்கான விதையையும், உணவையும், பாதுகாக்கும் ஏற்பாடு இது எனலாம். நோய் தீர்த்தல், பேய் – பிசாசிடமிருந்து பாதுகாத்தல், சுகம் அளித்தல், வேண்டும் பேறுகளை அளித்தல் என இத்தெய்வம் மக்களுக்கு நன்மை செய்யும் தெய்வமாகவே வணங்கப்படுகின்றது. மருதங்கேணி திரியாயம்மன் முதலியவை மேனிலையாக்கம் பெற்ற போதும் இவ்வழிபாடு ஓலைக்கொட்டிலிலிருந்து சிமெந்துக் கட்டடத்துக்கு மாறியதே தவிர, வழிபாட்டுமுறை மாறவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கருக்காய்த் தீவு போல நெய்தலும் மருதமும் இணைந்த இப்பிராந்தியத்திலும், பானையில் நெல்லைப் பாதுகாக்கும் சுதேச பாதுகாப்பு முறையை முன்னிறுத்துகின்ற கரையோர மக்களின் இயற்கை வழிபாடு நிலவி வருகின்றது. காவல் தெய்வமான பூசைக்கிழவி இப்பிராந்தியத்துக்கே உரிய தனித்துவமான நாட்டார் தெய்வமாக, நிலவியல் பண்பாட்டின் நீட்சியாக, வழிபாடாக அமைந்துள்ளது. https://www.ezhunaonline.com/the-goddess-puzaikzhavi/

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு

4 weeks 2 days ago
கீசக வதம் மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் பன்னிரண்டு வருட வனவாசத்திற்கு பிறகு ஒரு வருடம் மறைந்து வாழ வேண்டிய சூழலில், பாண்டவர்கள் தங்களது திரைமறைவு வாழ்விற்கு தேர்ந்தெடுத்த நாடு விராட நாடு. யுதிஷ்டிரன் அரசவையில் மன்னருக்கு ஆலோசனை கூறுபவனாகவும், பீமன் வல்லபன் என்ற பெயரில் மல்யுத்த வீரனாகவும் சமையல் கலைஞனாகவும், அர்ஜுனன் அவன் பெற்ற சாபத்தை உபயோகப்படுத்தி இளவரசியின் நடன குருவாகவும், நகுலன் குதிரைகளை பார்த்துக் கொள்பவனாகும், சகாதேவன் ஆடு மாடுகளை மேய்ப்பவனாகவும் தங்களை மாற்றிக் கொண்டு விராட நாட்டில் வசித்து வந்தனர். திரவுபதி இராணியின் தோழியாக தன்னை மாற்றிக் கொண்டாள். இராணியின் சகோதரனான கீசகன் அந்நாட்டின் படைத் தளபதியாக இருந்தான். உண்மையில் அவனே விராட நாட்டை ஆண்டான். அரசன் பெயரளவிலேயே இருந்தான். இந்நிலையில் கீசகன், திரவுபதியின் மேல் மையல் கொண்டு அவளை அடைய முயன்று வந்தான். முதலில், அவனை பற்றி மற்றவரிடம் சொல்ல தயங்கி கொண்டு தன் கணவர்கள் கந்தர்வர்கள் என்றும், அவள் அவர்கள் அவனைக் கொன்று விடுவார்கள் என்றும் பயமுறுத்தினாள். ஆனால் கீசகனோ அதற்கு பயப்படவில்லை. தன் சகோதரியை வற்புறுத்தி இரவில் தன் மாளிகைக்கு அனுப்ப வைத்தான். முதலில், பல காரணங்களை சொல்லி தவிர்த்தாலும், மகாராணியின் ஆணைக்கு கட்டுப்பட்டு அவளும் சென்றாள். அங்கே , கீசகன் அவளை பலவந்தப்படுத்த முயல, அவனிடம் இருந்து தப்பி அரசவைக்கு சென்று அரசனிடம் முறையிட்டாள். அவனோ தன் இயலாமையை காரணம் காட்டி தன்னால் எதுவும் செய்ய இயலாது என கை விரித்து விட்டான். அன்று இரவு எப்படியோ கீசகனிடம் இருந்து தப்பிய திரவுபதி சமையல் அறையில் இருந்த பீமனிடம் சென்று முறையிட்டாள். இருவரும் சேர்ந்து கீசகனை பழி வாங்க திட்டம் தீட்டினர். அதன்படி, மறுநாள் காலையில் கீசகனை சந்தித்த திரௌபதி முதல் நாள் இரவு நடந்தவைக்கு மன்னிப்பு கேட்டாள். பின் , கீசகனை இப்பொழுது புரிந்து கொண்டதாகவும் அன்று இரவு இளவரசிகளின் நடன அவை யாரும் இல்லாமல் இருக்கும் என்றும் அங்கே வருமாறும் கூறினாள். அவள் மேல் மோகம் கொண்ட கீசகனும் இரவு தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு அங்கே சென்றான். அவனுக்கு முதுகை காட்டிக் கொண்டு இருட்டில் பீமன் சேலை அணிந்து பெண் போல் இருந்தான். இதை அறியா கீசகன் அருகே சென்று தோளில் கை வைக்க திடமான உடல் வாகைக் கண்டு திடுக்கிட்டான். பீமனும் தன் வேடத்தைக் கலைக்க துவந்த யுத்தம் துவங்கியது. இருவரும் சம பலம் கொண்டவர்கள். மேலும் மிக சிறந்த மல்யுத்த வீரர்கள். அவர்களுக்கு இணையாக பலராமனை மட்டுமே சொல்ல இயலும். ஆதலால், வெகுநேரம் சண்டை நீடித்தது. இறுதியில், கீசகனை கொன்ற பீமன், அவன் உடலை சதைப்பிண்டமாக மாற்றி அங்கேயே விட்டுவிட்டு சென்றான். பின், குளித்து அலங்கரித்து நிம்மதியாக உறங்கினான். மறுநாள் காலை, கீசகனின் மரண செய்திப் பரவியதும், தன்னை தவறாக அவன் அணுகியதால் தன் கந்தர்வ கணவர்கள் அவனை கொன்றுவிட்டதாகக் கூறினாள். அதன்பின் அவள் விராட நாட்டில் இருந்தவரை அவளை யாரும் துன்புறுத்தவில்லை. https://solvanam.com/2025/07/27/கீசக-வதம்/