1 month ago
18 AUG, 2025 | 04:50 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்குவது சட்டவிரோதமானதுடன், ஜனநாயகத்துக்கும் விரோதமானது. மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இந்நாள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பொறுப்புக்கூற வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் பற்றி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாதாள குழுக்களின் எழுச்சிக்கு கடந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கருத்து அவதானத்துக்குரியது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் பாதாள குழு தலைவர்கள் நாட்டை விட்டு ஓடி தலைமறைவானார்கள். பாதாள குழுக்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். பாதாள குழுக்களுக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை கடந்த அரசாங்கங்கள் எடுக்கும் போது மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு பாதாள குழுக்களை பாதுகாத்தது. அதன் விளைவை இன்று நாடு எதிர்கொள்கிறது. பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளன.பொலிஸாரின் முன்பாக துப்பாக்கிதாரிகள் தமது இலக்கினை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பு அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிருக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாதாளக்குழுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும். இலங்கையின் அரச நிர்வாக கட்டமைப்பில் பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் பிரதானவையாக காணப்படுகிறது. மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இதற்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும். மாகாணசபைத் தேர்தல்முறைமையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நெருக்கடிக்குள்ளாக்கினார். இதற்கு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார். மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சூழல் காணப்படுகிறது. ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்குவது சட்டவிரோதமானதுடன், ஜனநாயகத்துக்கும் விரோதமானது. ஆகவே தேர்தலை நடத்த அரசாங்கம் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/222807
1 month ago
18 AUG, 2025 | 04:50 PM

(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்குவது சட்டவிரோதமானதுடன், ஜனநாயகத்துக்கும் விரோதமானது. மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், இந்நாள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் பொறுப்புக்கூற வேண்டும். மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் பற்றி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாதாள குழுக்களின் எழுச்சிக்கு கடந்த அரசாங்கங்கள் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள கருத்து அவதானத்துக்குரியது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் தான் பாதாள குழு தலைவர்கள் நாட்டை விட்டு ஓடி தலைமறைவானார்கள். பாதாள குழுக்களுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
பாதாள குழுக்களுக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை கடந்த அரசாங்கங்கள் எடுக்கும் போது மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு பாதாள குழுக்களை பாதுகாத்தது. அதன் விளைவை இன்று நாடு எதிர்கொள்கிறது.
பாதாளக் குழுக்களின் செயற்பாடுகள் நாளுக்கு நாள் தீவிரமடைந்துள்ளன.பொலிஸாரின் முன்பாக துப்பாக்கிதாரிகள் தமது இலக்கினை நிறைவேற்றிக்கொள்கிறார்கள்.
பொதுமக்களின் பாதுகாப்பு அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கங்களை விமர்சித்துக் கொண்டிருக்காமல் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி பாதாளக்குழுக்களை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.
இலங்கையின் அரச நிர்வாக கட்டமைப்பில் பாராளுமன்றம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்றங்கள் பிரதானவையாக காணப்படுகிறது.
மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளது. இதற்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும்.
மாகாணசபைத் தேர்தல்முறைமையை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நெருக்கடிக்குள்ளாக்கினார். இதற்கு தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான சூழல் காணப்படுகிறது. ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியான ஆளுநர்களின் நிர்வாகத்தின் கீழ் மாகாண சபைகள் இயங்குவது சட்டவிரோதமானதுடன், ஜனநாயகத்துக்கும் விரோதமானது. ஆகவே தேர்தலை நடத்த அரசாங்கம் உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
https://www.virakesari.lk/article/222807
1 month ago
Robots from 16 countries compete in World Humanoid Robot games in Beijing
1 month ago
இயந்திர மனிதர்களின் முதலாவது சர்வதேச விளையாட்டு - குறுங்காணொளி
1 month ago
சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போராளிகள் இன்னும் அறிக்கை ஒண்டும் வெளியிடேல்லையா?!😁
1 month ago
யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது; சுமந்திரன் 18 AUG, 2025 | 05:30 PM யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (18) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர். குறித்த ஊடக சந்திப்பில் சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது. அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு ஆதரவு கிடைத்திருந்தது. யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ், நகர் பகுதியில் மாத்திரமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தது. அவர்கள் ஆதரவு வழங்காதது மன வருத்தமே . வடக்கு கிழக்கு முழுவதும் மக்களை ஒன்றிணைந்து போராட்டம் நடாத்த கூடிய கட்சியாக தமிழரசு கட்சியே உள்ளது. அந்த வகையில் நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம். அது வெற்றியை தந்துள்ளது. எமது ஹர்த்தால் அறிவிப்பு வந்தவுடனையே ஜனாதிபதி, அமைச்சர் பிமல் உள்ளிட்டவர்கள் எம்மை தொடர்பு கொண்டு பேசி இருந்தனர். முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினார்கள். இதுவே வெற்றி. வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் அவர்கள் மக்களுடன் மக்களாக இருக்க முடியாது. தெற்கில் இராணுவ முகாம்கள் உள்ளன. அங்கு அவர்கள் இராணுவ முகாம்களுக்குள் முடங்கி காணப்படுவார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் அந்த நிலைமை இல்லை. அவர்கள் மக்களோடு மக்களாக , மக்களின் இயல்வு வாழ்வில் தலையீடு செய்கின்றனர். பாடசாலைகள் , தனியார் காணிகள் , ஏன் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றுக்கு சொந்தமான காணியை கூட கையகப்படுத்தி அதில் நிலைகொண்டுள்ளனர். அதனால் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும். இந்த ஹர்த்தால் ஒரு அடையாள போராட்டமே. இனிவரும் காலங்களில் இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம். வடக்கு - கிழக்கில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் தமிழரசு கட்சியின் கட்டுப்பாட்டிலையே உள்ளன. அதனால் , அந்த அந்த பிரதேசங்களில் மக்களை ஒன்றிணைந்து , அந்த பிரதேசங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம். பருத்தித்துறை நீதிமன்றுக்கு சொந்தமான காணியில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற கோரி, பருத்தித்துறை நகர சபை நகர பிதாவின் அழைப்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றாலும் அந்த போராட்டத்திற்கு தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும். வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார். அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் .சி.வி.கே. சிவஞானம் கருத்து தெரிவிக்கையில், முத்துஐயன்கட்டு இளைஞன் கொலையானதும், இளைஞன் தொடர்பாகவும் சில விமர்சனங்கள் உள்ளன அவை எமக்கும் தெரியும். ஆனால் இதனை இராணுவ மயமாக்கலுக்கு எதிரான சுட்டியாக கொண்டே நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம். இங்கு நோக்கம் இராணுவ மயமாக்கலை எதிர்ப்பது. எனவே நோக்கம் சரியாக இருப்பின் ஹர்த்தலுக்கு ஆதரவு வழங்க வேண்டும். அதற்கு யார் அழைப்பு விடுத்தார்கள். யார் செய்கிறார்கள் என ஆராயாமல் ஆதரவு வழங்க வேண்டும். இங்கே ஒற்றுமை ஒற்றுமை என கூறி திரிபவர்கள் இந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நாம் நோக்கம் சரியாக இருந்தால் அதற்காக ஆதரவு கொடுப்பவர்கள். அவ்வாறு ஆதரவு கொடுத்து சென்றாலும் எங்களை துரத்துவதில் குறியாகவே உள்ளனர். அது தெரிந்தும் நோக்கம் சரியாக உள்ள போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம். போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/222819
1 month ago
18 AUG, 2025 | 04:02 PM (எம்.மனோசித்ரா) தபால் மற்றும் தொலைதொடர்பாடல் நிலைய அதிகாரிகள் சங்கமும், ஒன்றிணைந்த தபால் சேவையாளர்கள் சங்கமும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (17) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான தபால் சேவையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர். இதனால் திங்கட்கிழமை (18)மத்திய தபால் பரிமாற்றம் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. தபால் சேவைகள் இடம்பெறாமையால் சேவை பெறுநர்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர். எவ்வாறிருப்பினும் பேச்சுவார்த்தைகளில் இணக்கம் தெரிவிக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என தபால்மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த வாரமும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. ஆனால் இணக்கப்பாடுகளை மீறியே தற்போது வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எனவே வேலை நிறுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். பேச்சுவார்த்தைகள் மூலம் இதனை நிறைவுக்கு கொண்டு வர தொழிற்சங்கங்கள் விரும்பினால் அதற்கு நாமும் தயாராகவே இருக்கின்றோம். தபால் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெறும் வருமானத்தை விட சம்பளம் மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவுகளுக்கான செலவுகள் அதிகமாகவுள்ளன. தற்போது 4 பில்லியனாகக் காணப்படும் நஷ்டம், சம்பள அதிகரிப்புடன் 10 – 12 பில்லியன் வரை அதிகரிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது. வேலை நிறுத்தங்களால் ஒரு நாள் மாத்திரம் இழப்புக்கள் ஏற்படப் போவதில்லை. அதன் விளைவுகள் நீண்ட காலத்துக்கு தொடரும். எனவே அவற்றை சரி செய்வது கடினமாகும். தபால் சேவை என்பது போட்டித்தன்மை மிக்கதாகும். தனியார் துறையினரும் இந்த சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறிருக்கையில் இவ்வாறு அடிக்கடி வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டால், எமக்கான வாய்ப்புக்கள் இயல்பாகவே தனியார் துறையை நோக்கி நகரக் கூடும். இயலாத பட்சத்திலேயே வேலை நிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். முன்வைக்கப்பட்டுள்ள 19 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எம்மால் சவால் விடுக்க முடியாது என்றார். அம்பாறை மாவட்ட தபால் அலுவலக சேவைகளும் முடக்கம் தபால் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் காரணமாக இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன. இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழங்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உப தபால் நிலைய அஞ்சல் அதிபர்கள், ஊழியர்கள் ஆதரவளித்தமையினால் தபால் அலுவலக சேவைகள் யாவும் முடங்கியுள்ளன. அதன்படி அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதான தபாற்கந்தோர் தவிர 12 தபால் நிலையங்கள் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மூடப்பட்டிருந்ததுடன் இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக கல்முனை பிரதேச பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அத்துடன் பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் காண முடிகிறது. அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தேசமான்ய யூ.எல்.எம். பைஸர் ஜே.பி இப்போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், தமது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் எமது போராட்டம் காலவரையறையின்றி தொடரும் என்றார். மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று தபால் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பிரதான தபால் நிலையம் உட்பட மாவட்டத்தின் அனைத்து தபாலகங்களும் உப தபாலகங்களும் ஊழியர்களின் பணி நிறுத்தம் காரணமாக மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. ஊழியர்களின் பணி நிறுத்தத்தை அறியாத பொதுமக்கள் பலர் தபாலகங்களுக்கு வந்து திரும்பிச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது. நீர்கொழும்பு நீர்கொழும்பு பிரதான தபாலகமும் இன்று மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், பல்வேறு தேவைகளுக்காக தபால் நிலையத்துக்கு வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை காணக்கூடியதாக இருந்தது. https://www.virakesari.lk/article/222801
1 month ago
18 AUG, 2025 | 04:02 PM

(எம்.மனோசித்ரா)
தபால் மற்றும் தொலைதொடர்பாடல் நிலைய அதிகாரிகள் சங்கமும், ஒன்றிணைந்த தபால் சேவையாளர்கள் சங்கமும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (17) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
தபால் திணைக்கள ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ள போதிலும், பெரும்பாலான தபால் சேவையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர்.
இதனால் திங்கட்கிழமை (18)மத்திய தபால் பரிமாற்றம் முற்றாக ஸ்தம்பிதமடைந்திருந்தது. தபால் சேவைகள் இடம்பெறாமையால் சேவை பெறுநர்களும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
எவ்வாறிருப்பினும் பேச்சுவார்த்தைகளில் இணக்கம் தெரிவிக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கி வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது நியாயமற்றது என தபால்மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வாரமும் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டன. ஆனால் இணக்கப்பாடுகளை மீறியே தற்போது வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
எனவே வேலை நிறுத்தத்தை நிறுத்தி பேச்சுவார்த்தைக்கு வருமாறு தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். பேச்சுவார்த்தைகள் மூலம் இதனை நிறைவுக்கு கொண்டு வர தொழிற்சங்கங்கள் விரும்பினால் அதற்கு நாமும் தயாராகவே இருக்கின்றோம்.
தபால் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெறும் வருமானத்தை விட சம்பளம் மற்றும் மேலதிக வேலை நேர கொடுப்பனவுகளுக்கான செலவுகள் அதிகமாகவுள்ளன.
தற்போது 4 பில்லியனாகக் காணப்படும் நஷ்டம், சம்பள அதிகரிப்புடன் 10 – 12 பில்லியன் வரை அதிகரிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது. வேலை நிறுத்தங்களால் ஒரு நாள் மாத்திரம் இழப்புக்கள் ஏற்படப் போவதில்லை. அதன் விளைவுகள் நீண்ட காலத்துக்கு தொடரும். எனவே அவற்றை சரி செய்வது கடினமாகும்.
தபால் சேவை என்பது போட்டித்தன்மை மிக்கதாகும். தனியார் துறையினரும் இந்த சேவையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறிருக்கையில் இவ்வாறு அடிக்கடி வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டால், எமக்கான வாய்ப்புக்கள் இயல்பாகவே தனியார் துறையை நோக்கி நகரக் கூடும்.
இயலாத பட்சத்திலேயே வேலை நிறுத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். முன்வைக்கப்பட்டுள்ள 19 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எம்மால் சவால் விடுக்க முடியாது என்றார்.
அம்பாறை மாவட்ட தபால் அலுவலக சேவைகளும் முடக்கம்
தபால் தொழிற்சங்கங்களின் நடவடிக்கைகள் காரணமாக இன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல தபால் நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு வழங்கும் வகையில் கிழங்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உப தபால் நிலைய அஞ்சல் அதிபர்கள், ஊழியர்கள் ஆதரவளித்தமையினால் தபால் அலுவலக சேவைகள் யாவும் முடங்கியுள்ளன.
அதன்படி அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதான தபாற்கந்தோர் தவிர 12 தபால் நிலையங்கள் குறித்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக மூடப்பட்டிருந்ததுடன் இந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக கல்முனை பிரதேச பொதுமக்கள் மற்றும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட நிலையை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
அத்துடன் பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதையும் காண முடிகிறது.
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர் தேசமான்ய யூ.எல்.எம். பைஸர் ஜே.பி இப்போராட்டம் குறித்து ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், தமது பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண சம்பந்தப்பட்ட அமைச்சர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் எமது போராட்டம் காலவரையறையின்றி தொடரும் என்றார்.






மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று தபால் சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு பிரதான தபால் நிலையம் உட்பட மாவட்டத்தின் அனைத்து தபாலகங்களும் உப தபாலகங்களும் ஊழியர்களின் பணி நிறுத்தம் காரணமாக மூடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
ஊழியர்களின் பணி நிறுத்தத்தை அறியாத பொதுமக்கள் பலர் தபாலகங்களுக்கு வந்து திரும்பிச் சென்றதையும் காணக்கூடியதாக இருந்தது.


நீர்கொழும்பு
நீர்கொழும்பு பிரதான தபாலகமும் இன்று மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பல்வேறு தேவைகளுக்காக தபால் நிலையத்துக்கு வருகை தந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதை காணக்கூடியதாக இருந்தது.

https://www.virakesari.lk/article/222801
1 month ago
1 month ago
1 month ago
18 AUG, 2025 | 03:38 PM நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட, குறிப்பாக, வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டு அகழப்பட்டு வரும் மனித புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் மனித குலத்திற்கு எதிராக, இந்த பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில், யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு நீதி கோரி தமிழ் மக்கள் இன்றும் போராடி வருகின்றனர். குறிப்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் வருடக்கணக்கில் போராட்டம் நடாத்தி வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்த அரசும் இதுவரை எந்த பதிலும் வழங்கவில்லை. இதேவேளை புதிது புதிதாக மனித புதைகுழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு அதற்குள் இருந்து சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த மனித புதைகுழிகள் தொடர்பில் உள்நாட்டில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும், குற்றம் இழைத்தவர்களுக்கான தண்டனையும் கிடைக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகவேதான் தமிழ் மக்கள் இந்த விடயங்களில் சர்வதேச விசாரணை ஒன்றை கோருகின்றனர். மனித புதைகுழிகள் தொடர்பான நவீன தொழில்நுட்ப உதவிகள் உட்பட சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் இக்கோரிக்கையினை வலியுறுத்தி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியானது வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டத்தை அடுத்த வாரம் முன்னெடுக்கவுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/222805
1 month ago
18 AUG, 2025 | 03:38 PM

நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட, குறிப்பாக, வடக்கு - கிழக்கு பிரதேசங்களில் கண்டுபிடிக்கப்பட்டு அகழப்பட்டு வரும் மனித புதைகுழிகள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் எனவும் மனித குலத்திற்கு எதிராக, இந்த பாரிய குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றான சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைக்கு நீதி கோரி தமிழ் மக்கள் இன்றும் போராடி வருகின்றனர். குறிப்பாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் வருடக்கணக்கில் போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்த அரசும் இதுவரை எந்த பதிலும் வழங்கவில்லை. இதேவேளை புதிது புதிதாக மனித புதைகுழிகளும் கண்டுபிடிக்கப்பட்டு அதற்குள் இருந்து சிறுவர்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களின் எலும்புக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
ஆனாலும் இந்த மனித புதைகுழிகள் தொடர்பில் உள்நாட்டில் நீதியான விசாரணைகள் நடத்தப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியும், குற்றம் இழைத்தவர்களுக்கான தண்டனையும் கிடைக்கும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கவில்லை. ஆகவேதான் தமிழ் மக்கள் இந்த விடயங்களில் சர்வதேச விசாரணை ஒன்றை கோருகின்றனர்.
மனித புதைகுழிகள் தொடர்பான நவீன தொழில்நுட்ப உதவிகள் உட்பட சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற தமிழ் மக்களின் இக்கோரிக்கையினை வலியுறுத்தி ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியானது வடக்கு - கிழக்கு தழுவிய ரீதியில் கையெழுத்துப் போராட்டத்தை அடுத்த வாரம் முன்னெடுக்கவுள்ளது என்றார்.
https://www.virakesari.lk/article/222805
1 month ago
இலங்கையின் இளைஞர்கள் மத்தியிலான 'நீல நிற' வேலைகள் மீதான தயக்கம் ஒரு பெரிய சமூக-பொருளாதார சவாலாகும், இது உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது. வேலையின்மை, வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை போன்ற சமூகப் பிரச்சனைகளுக்கு இந்த மனநிலை நேரடியாகக் காரணமாக அமைகிறது. கல்வி முறை சீர்திருத்தம், தொழிற்கல்விக்கு முக்கியத்துவம், சமூக மதிப்பீடுகளில் மாற்றம் மற்றும் அரசாங்கக் கொள்கைகள் மூலம் இந்த மனநிலையை மாற்றியமைக்கலாம். மேம்பட்ட நாடுகள் உடல் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் அதே வேளையில், இலங்கை இளைஞர்கள் தங்களின் மனநிலையை மாற்றிக்கொண்டு நாட்டின் உற்பத்தித்திறனை அதிகரிக்க பங்களிக்க வேண்டும். இந்த மாற்றங்கள் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதுடன், இளைஞர்களின் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையை மேம்படுத்தும். இலங்கையின் வளர்ச்சிப் பாதையில், 'நீல நிற' வேலைகள் எனப்படும் உடலுழைப்பு சார்ந்த தொழில்கள் மீது நமது இளைஞர்கள் கொண்டுள்ள மனநிலை ஒரு பெரும் சமூகப் பொருளாதார சவாலாக எழுந்துள்ளது. மற்ற வளர்ந்த நாடுகளில், வேலை செய்யும் தொழிலைப் பொருட்படுத்தாமல், தனிநபர்கள் தங்கள் பங்களிப்பை மதித்து, அதற்காகப் பெருமைப்படும் ஒரு கலாச்சாரம் நிலவுகிறது. ஆனால், இலங்கையில், குறிப்பாக படித்த இளைஞர்கள் மத்தியில், அலுவலக வேலைகள் அல்லது 'வெள்ளை நிற' வேலைகள் மீதான அதீத நாட்டம் காணப்படுகிறது. இந்த மனநிலை, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனைப் பாதிக்கின்ற ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளது. இலங்கையின் மனிதவளத்தின் பெரும்பான்மையைக் கொண்டுள்ள இளைஞர்கள், சவாலான ஆனால் அத்தியாவசியமான கட்டுமானத் துறை, விவசாயம், உற்பத்தி மற்றும் தொழிற்பிரிவு சேவைகளில் ஈடுபடத் தயங்குவது, நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதில் பெரும் தடையாக உள்ளது. ஒருபுறம் வேலையின்மை அதிகரித்துக் கொண்டே இருக்க, மறுபுறம் பல திறன் சார்ந்த வேலைகளுக்குப் போதிய ஆட்கள் கிடைப்பதில்லை என்ற முரண்பாடு இலங்கையின் இன்றைய யதார்த்தமாக உள்ளது. இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த மனநிலை ஏற்படுத்தும் தாக்கங்கள் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளன. முதலாவதாக, தொழிற்துறை சார்ந்த துறைகளில் திறன்மிக்க தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதால், பல கட்டுமான மற்றும் உற்பத்தித் திட்டங்கள் தாமதமாகின்றன அல்லது வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது நாட்டுக்குள் இருக்கும் அந்நியச் செலாவணியை வெளியே கொண்டு செல்வதுடன், உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் பறிக்கிறது. இரண்டாவதாக, 'கவுரவம்' என்று கருதப்படும் வேலைகளைத் தேடி இளைஞர்கள் காத்திருப்பதால், அவர்களின் இளம் பருவத்தில் பல உற்பத்திமிக்க ஆண்டுகள் வீணடிக்கப்படுகின்றன. இது தனிநபர்களின் பொருளாதாரச் சுமையைப் பெருக்குவதுடன், குடும்பங்களின் நிதி நிலையையும் பாதிக்கிறது. மூன்றாவதாக, இந்த வேலையின்மை இளைஞர்கள் மத்தியில் விரக்தியையும், மனச்சோர்வையும் உருவாக்குகிறது. சமூகத்தில் வேலையின்மையால் ஏற்படும் விரக்தி, போதைப்பொருள் பாவனை மற்றும் வாள்வெட்டுக் குழுக்கள் போன்ற குற்றச் செயல்களின் அதிகரிப்புக்கு வழிவகுப்பதாக அண்மைய செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. "கம்பஸ் நியூஸ்" (Campus News) போன்ற உள்நாட்டு அறிக்கைகள், பட்டதாரிகள் மத்தியிலும் வேலையின்மை ஒரு முக்கிய பிரச்சினையாக இருப்பதையும், இது அவர்களின் மனநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் அவ்வப்போது எடுத்துரைக்கின்றன. மேலும், இந்த மனநிலை நாட்டின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிரச்சினைக்கு மக்களின் எதிர்வினைகள் பல்வேறுபட்டதாக உள்ளன. பொதுவாக, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அலுவலக வேலைகளில் ஈடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர். இது சமூக அந்தஸ்துடனும், பாதுகாப்பான எதிர்காலத்துடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் கூட, தங்கள் பிள்ளைகள் நகரங்களுக்குச் சென்று 'வெள்ளை நிற' வேலைகளில் ஈடுபடுவதையே விரும்புகின்றனர். சில சமயங்களில், இளைஞர்கள் வேலையின்மையில் வாடினாலும், அவர்களுக்குப் பொருந்தாத உடலுழைப்பு சார்ந்த வேலைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். இந்த மனநிலை சமூக ஊடகங்களிலும் பிரதிபலிக்கிறது, அங்கு இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்மையை விமர்சிக்கும் அதே வேளையில், கிடைக்கக்கூடிய வேலைகள் குறித்த எதிர்மறையான கருத்துகளையும் பகிர்கின்றனர். ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சமூக ஊடகப் பிரச்சாரங்கள் மூலம் வேலையின்மைக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்கிறார்கள், ஆனால் இந்த வேலைவாய்ப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் எந்த வகையான வேலைகளைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பது குறித்த ஆழமான விவாதம் குறைவாகவே உள்ளது. இது ஒரு சிக்கலான சமூகப் பிரச்சினையாக, தனிநபர்களின் அபிலாஷைகளுக்கும் சமூக யதார்த்தங்களுக்கும் இடையிலான மோதலைப் பிரதிபலிக்கிறது. இந்த சவாலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்வினைகளும் குறிப்பிடத்தக்கவை. பல அரசியல் தலைவர்கள், இளைஞர்களின் வேலையின்மை குறித்து கவலை தெரிவித்துள்ளனர், மேலும் அதற்கான தீர்வுகளையும் முன்மொழிந்துள்ளனர். "இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் முன்னுரிமை" என்று பல அரசியல்வாதிகள் தேர்தல் மேடைகளிலும், பொது நிகழ்வுகளிலும் அறிவிக்கின்றனர். அரசாங்கத்தின் கொள்கைகளில், தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்துவது, சுயதொழில் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குவது மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஊக்குவிப்பது போன்ற அம்சங்கள் அடங்கும். உதாரணமாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஒழுங்குபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், இந்த முயற்சிகள் அனைத்தும், 'நீல நிற' வேலைகள் மீதான மனநிலையை மாற்றுவதில் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. சில தலைவர்கள், இளைஞர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நேரடியாகவே அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், இந்த அறிவுரைகள் பெரும்பாலும் தனிப்பட்ட பொறுப்பாகப் பார்க்கப்படுகின்றன, அன்றி ஒரு பரந்த சமூக மாற்றத்திற்கான இயக்கமாக உருவெடுக்கவில்லை. என் பார்வையில், இந்த 'நீல நிற' வேலைகள் மீதான மனநிலை மாற்றம் என்பது வெறும் தனிப்பட்ட இளைஞர்களின் பிரச்சினை அல்ல; இது ஒரு ஆழமான சமூக மற்றும் கட்டமைப்புரீதியான சிக்கலாகும். நமது கல்வி முறை, சமூக மதிப்பீடுகள், மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் இந்த மனநிலையைப் பறைசாற்றுகின்றன. நாம் ஒரு முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். வெறும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் நிற்காமல், உடலுழைப்பு சார்ந்த தொழில்களின் மதிப்பையும், அவசியத்தையும் சமூகத்தில் உயர்த்துவது அவசியம். நமது கல்வி முறை இன்னும் ஒரு குறிப்பிட்ட வகையான 'வெள்ளை நிற' வேலைகளுக்கு மட்டுமே மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இது உடனடியாக மாற்றப்பட வேண்டும். பாடசாலைக் கல்வியின் ஆரம்பப் படிகளிலேயே தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு தொழில்களின் மதிப்பை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். சமூகத்தில் 'நீல நிற' வேலைகள் மீதான எதிர்மறையான பார்வையை மாற்ற ஊடகங்கள், சமூகத் தலைவர்கள், மற்றும் பெற்றோர் ஒருமித்துச் செயல்பட வேண்டும். இந்த மனநிலையை மாற்றியமைத்து, உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு பல நடைமுறைத் தீர்வுகள் உள்ளன. முதலாவதாக, கல்வி முறையில் பெரும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாடசாலைகளில் தொழிற்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் திட்டங்களை வலுப்படுத்துவதுடன், பல்வேறு தொழில்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் சந்தைத் தேவைகளுக்கு ஏற்றவாறு பயிற்சிகளை வழங்க வேண்டும். உதாரணமாக, கட்டுமானத் துறை, விருந்தோம்பல், விவசாயம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளுக்குத் தேவையான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். இரண்டாவதாக, சமூகத்தில் 'நீல நிற' வேலைகளின் மதிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். ஊடகங்கள், பொதுப் பிரச்சாரங்கள் மற்றும் வெற்றிகரமான 'நீல நிற' தொழில்முனைவோரின் கதைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதன் மூலம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம். மூன்றாவதாக, அரசாங்கம், 'நீல நிற' வேலைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்குக் கவர்ச்சிகரமான ஊதியங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் (எ.கா., ஓய்வூதியம், சுகாதார காப்பீடு) மற்றும் பணிச் சூழல் மேம்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலக்காகக் கொண்ட இளைஞர்களுக்கு உயர்தர திறன் பயிற்சிகளை வழங்குவதன் மூலம், அவர்கள் அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைகளைப் பெற ஊக்குவிக்கலாம் (உதாரணமாக, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் செவிலியர்கள் அல்லது தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கான வாய்ப்புகள்). இறுதியாக, இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் நிலவும் 'நீல நிற' வேலைகள் மீதான தயக்கம் ஒரு சிக்கலான சமூக-பொருளாதாரப் பிரச்சினையாகும். இது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனையும், சமூக நலனையும் பாதிக்கிறது. இந்த மனநிலையை மாற்றியமைப்பது ஒரு இரவில் நடக்கும் மந்திரமல்ல; அதற்கு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலிருந்தும் ஒரு கூட்டு முயற்சி தேவை. கல்வி முறை சீர்திருத்தம், சமூக மதிப்பீடுகளில் மாற்றம், அரசாங்கக் கொள்கைகள் மற்றும் தனிநபர்களின் சிந்தனை மாற்றம் ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த சவாலை ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொண்டு, நமது இளைஞர்கள் தங்கள் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தவும், நாட்டின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாகப் பங்களிக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நமது இளைஞர்கள் தங்கள் உழைப்பைப் பற்றிப் பெருமை கொள்ளும் ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும், ஏனெனில் ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பும் ஒரு தேசத்தின் எதிர்காலத்திற்கு அத்தியாவசியமானது. Posted by S.T.Seelan (S.Thanigaseelan) https://vellisaram.blogspot.com/2025/08/blog-post_14.html
1 month ago
.png)
இலங்கையின் இளைஞர்கள் மத்தியிலான 'நீல நிற' வேலைகள் மீதான தயக்கம் ஒரு பெரிய சமூக-பொருளாதார சவாலாகும், இது உற்பத்தித்திறன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது.
வேலையின்மை, வருமான ஏற்றத்தாழ்வு மற்றும் போதைப்பொருள் பாவனை போன்ற சமூகப் பிரச்சனைகளுக்கு இந்த மனநிலை நேரடியாகக் காரணமாக அமைகிறது.
கல்வி முறை சீர்திருத்தம், தொழிற்கல்விக்கு முக்கியத்துவம், சமூக மதிப்பீடுகளில் மாற்றம் மற்றும் அரசாங்கக் கொள்கைகள் மூலம் இந்த மனநிலையை மாற்றியமைக்கலாம்.
மேம்பட்ட நாடுகள் உடல் உழைப்பிற்கு மதிப்பளிக்கும் அதே வேளையில், இலங்கை இளைஞர்கள் தங்களின் மனநிலையை மாற்றிக்கொண்டு நாட்டின் உற்பத்தித்திறனை அதிகரிக்க பங்களிக்க வேண்டும்.
இந்த மாற்றங்கள் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுப்பதுடன், இளைஞர்களின் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையை மேம்படுத்தும்.
இலங்கையின் வளர்ச்சிப் பாதையில், 'நீல நிற' வேலைகள் எனப்படும் உடலுழைப்பு சார்ந்த தொழில்கள் மீது நமது இளைஞர்கள் கொண்டுள்ள மனநிலை ஒரு பெரும் சமூகப் பொருளாதார சவாலாக எழுந்துள்ளது. மற்ற வளர்ந்த நாடுகளில், வேலை செய்யும் தொழிலைப் பொருட்படுத்தாமல், தனிநபர்கள் தங்கள் பங்களிப்பை மதித்து, அதற்காகப் பெருமைப்படும் ஒரு கலாச்சாரம் நிலவுகிறது. ஆனால், இலங்கையில், குறிப்பாக படித்த இளைஞர்கள் மத்தியில், அலுவலக வேலைகள் அல்லது 'வெள்ளை நிற' வேலைகள் மீதான அதீத நாட்டம் காணப்படுகிறது. இந்த மனநிலை, நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனைப் பாதிக்கின்ற ஒரு முக்கிய காரணியாக மாறியுள்ளது. இலங்கையின் மனிதவளத்தின் பெரும்பான்மையைக் கொண்டுள்ள இளைஞர்கள், சவாலான ஆனால் அத்தியாவசியமான கட்டுமானத் துறை, விவசாயம், உற்பத்தி மற்றும் தொழிற்பிரிவு சேவைகளில் ஈடுபடத் தயங்குவது, நாட்டின் வளர்ச்சி இலக்குகளை அடைவதில் பெரும் தடையாக உள்ளது. ஒருபுறம் வேலையின்மை அதிகரித்துக் கொண்டே இருக்க, மறுபுறம் பல திறன் சார்ந்த வேலைகளுக்குப் போதிய ஆட்கள் கிடைப்பதில்லை என்ற முரண்பாடு இலங்கையின் இன்றைய யதார்த்தமாக உள்ளது.
இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த மனநிலை ஏற்படுத்தும் தாக்கங்கள் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளன. முதலாவதாக, தொழிற்துறை சார்ந்த துறைகளில் திறன்மிக்க தொழிலாளர் பற்றாக்குறை நிலவுவதால், பல கட்டுமான மற்றும் உற்பத்தித் திட்டங்கள் தாமதமாகின்றன அல்லது வெளிநாட்டுத் தொழிலாளர்களை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது நாட்டுக்குள் இருக்கும் அந்நியச் செலாவணியை வெளியே கொண்டு செல்வதுடன், உள்ளூர் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் பறிக்கிறது. இரண்டாவதாக, 'கவுரவம்' என்று கருதப்படும் வேலைகளைத் தேடி இளைஞர்கள் காத்திருப்பதால், அவர்களின் இளம் பருவத்தில் பல உற்பத்திமிக்க ஆண்டுகள் வீணடிக்கப்படுகின்றன. இது தனிநபர்களின் பொருளாதாரச் சுமையைப் பெருக்குவதுடன், குடும்பங்களின் நிதி நிலையையும் பாதிக்கிறது. மூன்றாவதாக, இந்த வேலையின்மை இளைஞர்கள் மத்தியில் விரக்தியையும், மனச்சோர்வையும் உருவாக்குகிறது. சமூகத்தில் வேலையின்மையால் ஏற்படும் விரக்தி, போதைப்பொருள் பாவனை மற்றும் வாள்வெட்டுக் குழுக்கள் போன்ற குற்றச் செயல்களின் அதிகரிப்புக்கு வழிவகுப்பதாக அண்மைய செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. "கம்பஸ் நியூஸ்" (Campus News) போன்ற உள்நாட்டு அறிக்கைகள், பட்டதாரிகள் மத்தியிலும் வேலையின்மை ஒரு முக்கிய பிரச்சினையாக இருப்பதையும், இது அவர்களின் மனநிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் அவ்வப்போது எடுத்துரைக்கின்றன. மேலும், இந்த மனநிலை நாட்டின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதாரக் கட்டமைப்புக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இந்த பிரச்சினைக்கு மக்களின் எதிர்வினைகள் பல்வேறுபட்டதாக உள்ளன. பொதுவாக, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அலுவலக வேலைகளில் ஈடுபட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு கொண்டுள்ளனர். இது சமூக அந்தஸ்துடனும், பாதுகாப்பான எதிர்காலத்துடனும் தொடர்புபடுத்தப்படுகிறது. கிராமப்புறங்களில் உள்ள பெற்றோர்கள் கூட, தங்கள் பிள்ளைகள் நகரங்களுக்குச் சென்று 'வெள்ளை நிற' வேலைகளில் ஈடுபடுவதையே விரும்புகின்றனர். சில சமயங்களில், இளைஞர்கள் வேலையின்மையில் வாடினாலும், அவர்களுக்குப் பொருந்தாத உடலுழைப்பு சார்ந்த வேலைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்குகின்றனர். இந்த மனநிலை சமூக ஊடகங்களிலும் பிரதிபலிக்கிறது, அங்கு இளைஞர்கள் வேலைவாய்ப்பு இன்மையை விமர்சிக்கும் அதே வேளையில், கிடைக்கக்கூடிய வேலைகள் குறித்த எதிர்மறையான கருத்துகளையும் பகிர்கின்றனர். ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சமூக ஊடகப் பிரச்சாரங்கள் மூலம் வேலையின்மைக்கு எதிராக இளைஞர்கள் குரல் கொடுக்கிறார்கள், ஆனால் இந்த வேலைவாய்ப்புகள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் எந்த வகையான வேலைகளைச் செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பது குறித்த ஆழமான விவாதம் குறைவாகவே உள்ளது. இது ஒரு சிக்கலான சமூகப் பிரச்சினையாக, தனிநபர்களின் அபிலாஷைகளுக்கும் சமூக யதார்த்தங்களுக்கும் இடையிலான மோதலைப் பிரதிபலிக்கிறது.
இந்த சவாலுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் அரசாங்கத்தின் எதிர்வினைகளும் குறிப்பிடத்தக்கவை. பல அரசியல் தலைவர்கள், இளைஞர்களின் வேலையின்மை குறித்து கவலை தெரிவித்துள்ளனர், மேலும் அதற்கான தீர்வுகளையும் முன்மொழிந்துள்ளனர். "இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவதே எமது அரசாங்கத்தின் முன்னுரிமை" என்று பல அரசியல்வாதிகள் தேர்தல் மேடைகளிலும், பொது நிகழ்வுகளிலும் அறிவிக்கின்றனர். அரசாங்கத்தின் கொள்கைகளில், தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்துவது, சுயதொழில் திட்டங்களுக்கு நிதி உதவி வழங்குவது மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஊக்குவிப்பது போன்ற அம்சங்கள் அடங்கும். உதாரணமாக, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஒழுங்குபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனினும், இந்த முயற்சிகள் அனைத்தும், 'நீல நிற' வேலைகள் மீதான மனநிலையை மாற்றுவதில் எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. சில தலைவர்கள், இளைஞர்கள் தங்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நேரடியாகவே அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், இந்த அறிவுரைகள் பெரும்பாலும் தனிப்பட்ட பொறுப்பாகப் பார்க்கப்படுகின்றன, அன்றி ஒரு பரந்த சமூக மாற்றத்திற்கான இயக்கமாக உருவெடுக்கவில்லை.
என் பார்வையில், இந்த 'நீல நிற' வேலைகள் மீதான மனநிலை மாற்றம் என்பது வெறும் தனிப்பட்ட இளைஞர்களின் பிரச்சினை அல்ல; இது ஒரு ஆழமான சமூக மற்றும் கட்டமைப்புரீதியான சிக்கலாகும். நமது கல்வி முறை, சமூக மதிப்பீடுகள், மற்றும் பொருளாதாரக் கொள்கைகள் அனைத்தும் இந்த மனநிலையைப் பறைசாற்றுகின்றன. நாம் ஒரு முழுமையான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். வெறும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன் நிற்காமல், உடலுழைப்பு சார்ந்த தொழில்களின் மதிப்பையும், அவசியத்தையும் சமூகத்தில் உயர்த்துவது அவசியம். நமது கல்வி முறை இன்னும் ஒரு குறிப்பிட்ட வகையான 'வெள்ளை நிற' வேலைகளுக்கு மட்டுமே மாணவர்களைத் தயார்படுத்துகிறது. இது உடனடியாக மாற்றப்பட வேண்டும். பாடசாலைக் கல்வியின் ஆரம்பப் படிகளிலேயே தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு தொழில்களின் மதிப்பை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும். சமூகத்தில் 'நீல நிற' வேலைகள் மீதான எதிர்மறையான பார்வையை மாற்ற ஊடகங்கள், சமூகத் தலைவர்கள், மற்றும் பெற்றோர் ஒருமித்துச் செயல்பட வேண்டும்.
இந்த மனநிலையை மாற்றியமைத்து, உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு பல நடைமுறைத் தீர்வுகள் உள்ளன. முதலாவதாக, கல்வி முறையில் பெரும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். பாடசாலைகளில் தொழிற்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் திட்டங்களை வலுப்படுத்துவதுடன், பல்வேறு தொழில்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் சந்தைத் தேவைகளுக்கு ஏற்றவாறு பயிற்சிகளை வழங்க வேண்டும். உதாரணமாக, கட்டுமானத் துறை, விருந்தோம்பல், விவசாயம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளுக்குத் தேவையான சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும். இரண்டாவதாக, சமூகத்தில் 'நீல நிற' வேலைகளின் மதிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். ஊடகங்கள், பொதுப் பிரச்சாரங்கள் மற்றும் வெற்றிகரமான 'நீல நிற' தொழில்முனைவோரின் கதைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதன் மூலம் இந்த மாற்றத்தை ஏற்படுத்தலாம். மூன்றாவதாக, அரசாங்கம், 'நீல நிற' வேலைகளில் ஈடுபடும் இளைஞர்களுக்குக் கவர்ச்சிகரமான ஊதியங்கள், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் (எ.கா., ஓய்வூதியம், சுகாதார காப்பீடு) மற்றும் பணிச் சூழல் மேம்பாடு ஆகியவற்றை உறுதிப்படுத்த வேண்டும். மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இலக்காகக் கொண்ட இளைஞர்களுக்கு உயர்தர திறன் பயிற்சிகளை வழங்குவதன் மூலம், அவர்கள் அதிக வருமானம் ஈட்டக்கூடிய வேலைகளைப் பெற ஊக்குவிக்கலாம் (உதாரணமாக, ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் செவிலியர்கள் அல்லது தொழில்நுட்பத் தொழிலாளர்களுக்கான வாய்ப்புகள்).
இறுதியாக, இலங்கையின் இளைஞர்கள் மத்தியில் நிலவும் 'நீல நிற' வேலைகள் மீதான தயக்கம் ஒரு சிக்கலான சமூக-பொருளாதாரப் பிரச்சினையாகும். இது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தித்திறனையும், சமூக நலனையும் பாதிக்கிறது. இந்த மனநிலையை மாற்றியமைப்பது ஒரு இரவில் நடக்கும் மந்திரமல்ல; அதற்கு சமூகத்தின் அனைத்து மட்டங்களிலிருந்தும் ஒரு கூட்டு முயற்சி தேவை. கல்வி முறை சீர்திருத்தம், சமூக மதிப்பீடுகளில் மாற்றம், அரசாங்கக் கொள்கைகள் மற்றும் தனிநபர்களின் சிந்தனை மாற்றம் ஆகியவை ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். இந்த சவாலை ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொண்டு, நமது இளைஞர்கள் தங்கள் திறமைகளை முழுமையாகப் பயன்படுத்தவும், நாட்டின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமாகப் பங்களிக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நமது இளைஞர்கள் தங்கள் உழைப்பைப் பற்றிப் பெருமை கொள்ளும் ஒரு சமூகத்தை உருவாக்க வேண்டும், ஏனெனில் ஒவ்வொரு தொழிலாளியின் உழைப்பும் ஒரு தேசத்தின் எதிர்காலத்திற்கு அத்தியாவசியமானது.
Posted by S.T.Seelan (S.Thanigaseelan)
https://vellisaram.blogspot.com/2025/08/blog-post_14.html
1 month ago
18 AUG, 2025 | 03:36 PM உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புட்டின் நிறுத்தும் வரை, ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம். அவை ரஷ்ய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன் எப்போதையும் விட நம்மை நெருக்கமாக ஒன்று சேர்த்துள்ளன. கொலைகள் நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவரது தேடலை நாம் பாராட்ட வேண்டும். அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை இணைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அவர் இல்லாமல் உக்ரைன் பிரச்சனைக்கான அமைதி தீர்வை முடிவு செய்ய முடியாது. உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் அமெரிக்காவின் வெளிப்படைத் தன்மையை ஐரோப்பாவுடன் இணைந்து வரவேற்கிறேன். ரஷ்ய ஜனாதிபதி புட்டினை தடுப்பது முக்கியம், உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புட்டின் நிறுத்தும் வரை, ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம். அவை ரஷ்ய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளன என மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை, உக்ரைன் - ரஷ்யா இடையே 3 ஆண்டுக்கு மேலாக யுத்தம் இடம்பெற்றுவரும் நிலையில், யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தினர். குறித்த பேச்சுவார்த்தையில் எவ்வி முடிவும் எட்டப்படாத நிலையில், டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி செல்கிறார். இந்நிலையில், 'விருப்ப கூட்டணி' என்ற பெயரில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனும் ஜேர்மன் ஜனாதிபதி பிரைட்ரிச் மெர்சும் காணொளி மூலம் பேசினர். அதில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கலந்துகொண்டார். இதன்போதே இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222806
1 month ago
18 AUG, 2025 | 03:36 PM

உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புட்டின் நிறுத்தும் வரை, ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம். அவை ரஷ்ய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன் எப்போதையும் விட நம்மை நெருக்கமாக ஒன்று சேர்த்துள்ளன.
கொலைகள் நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவரது தேடலை நாம் பாராட்ட வேண்டும். அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை இணைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அவர் இல்லாமல் உக்ரைன் பிரச்சனைக்கான அமைதி தீர்வை முடிவு செய்ய முடியாது.
உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் அமெரிக்காவின் வெளிப்படைத் தன்மையை ஐரோப்பாவுடன் இணைந்து வரவேற்கிறேன். ரஷ்ய ஜனாதிபதி புட்டினை தடுப்பது முக்கியம், உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புட்டின் நிறுத்தும் வரை, ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம். அவை ரஷ்ய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளன என மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உக்ரைன் - ரஷ்யா இடையே 3 ஆண்டுக்கு மேலாக யுத்தம் இடம்பெற்றுவரும் நிலையில், யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தினர். குறித்த பேச்சுவார்த்தையில் எவ்வி முடிவும் எட்டப்படாத நிலையில், டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி செல்கிறார்.
இந்நிலையில், 'விருப்ப கூட்டணி' என்ற பெயரில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனும் ஜேர்மன் ஜனாதிபதி பிரைட்ரிச் மெர்சும் காணொளி மூலம் பேசினர். அதில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கலந்துகொண்டார். இதன்போதே இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
https://www.virakesari.lk/article/222806
1 month ago
'வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல் திருத்தம்': தேர்தல் ஆணையம் இந்த 4 கேள்விகளுக்கு பதில் தந்ததா? பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று செய்தியாளர் சந்திப்பை நடத்திய ராகுல் காந்தி, வாக்குகளை திருடுவதாக தேர்தல் ஆணையத்தையும் பாஜக அரசாங்கத்தையும் குற்றம் சாட்டினார் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17), காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர்கள் இணைந்து பிகாரில் உள்ள சசாரமில் இருந்து 'வாக்காளர் உரிமை யாத்திரை'யைத் தொடங்கினார்கள். பிகாரின் பேரணியில், தேர்தல் ஆணையம் 'வாக்கு திருட்டு' செய்ததாக அவர்கள் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தனர். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக, சசாரமில் இருந்து சுமார் 900 கிலோமீட்டர் தொலைவில் தேசியத் தலைநகர் டெல்லியில் தேர்தல் ஆணையம் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தது. பாஜகவும் தேர்தல் ஆணையமும் இணைந்து 'வாக்குகளைத் திருட' செயல்படுவதாகவும், 'பிகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என்பது வாக்குகளைத் திருடுவதற்கான முயற்சி' என்ற ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையம் பதில் சொன்னது. "சட்டத்தின் கீழ், அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதிலிருந்து உருவாகின்றன, எனவே அந்த அரசியல் கட்சிகளுக்கு இடையே தேர்தல் ஆணையம் எவ்வாறு பாகுபாடு காட்ட முடியும்?" என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கேள்வி எழுப்பினார். தேர்தல் ஆணையத்தின் தோளில் துப்பாக்கியை வைத்து அரசியல் செய்வதாக என்று கூறிய அவர், "ஆளும் கட்சியோ அல்லது எதிர்க்கட்சியோ தேர்தல் ஆணையத்திற்கு அனைவரும் சமம்" என்றும் அவர் கூறினார். வாக்குத் திருட்டு என குற்றம் சுமத்தும் ராகுல் காந்தி, பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறுகிறார். தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு பேசிய காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பில் நேரடியாக பதிலளிக்கப்படவில்லை என்று கூறியது. பட மூலாதாரம், ANI 1. பீகார் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஏன்? ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஞாயிற்றுக்கிழமை சசாரத்தில் நடைபெற்ற பேரணியில் பேசியபோது, பிகார் தேர்தலுக்கு சற்று முன்பு, தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குரிமையைப் பறிக்கிறது என்று குற்றம் சாட்டினார். "பிகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதன் மூலம், புதிய வாக்காளர்களைச் சேர்த்தும், பிற வாக்காளர்களைக் குறைத்தும், பிகார் தேர்தல் முடிவைத் திருட வேண்டும் என்பது அவர்கள் (பாஜக-ஆர்எஸ்எஸ்) செய்யும் சதியின் இறுதி குறிக்கோள். ஆனால், அவர்கள் இந்தத் தேர்தலைத் திருட நாங்கள் விடமாட்டோம்" என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி சூளுரைத்தார். பிகாரில் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை, திருடப்பட்டதாகவோ அல்லது அவசரமான முறையில் செய்யப்பட்டதாகவோ கூறி எதிர்க்கட்சியினர் குழப்பத்தை உண்டாக்குவதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், "வாக்காளர் பட்டியலை எப்போது திருத்த வேண்டும்? தேர்தலுக்கு முன்பா அல்லது பின்பா? தேர்தலுக்கு முன் என்பதே வெளிப்படையான பதில். இதைச் சொல்வது தேர்தல் ஆணையம் இல்லை, ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பும் வாக்காளர் பட்டியலைத் திருத்த வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கூறுகிறது. இது, தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ பொறுப்பு" என்று தெரிவித்தார். வெள்ளத்தால் பிகார் பாதிக்கப்பட்டுள்ள நேரத்தில் வாக்காளர் பட்டியலைத் திருத்தும் செயல்முறை ஏன் செய்யப்படுகிறது என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் கேள்வி எழுப்பியது. இது தவிர, தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பிலும் பத்திரிகையாளர்கள் இதே கேள்வியை எழுப்பினார்கள். இந்தக் கேள்விக்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், "பிகாரில் 2003ஆம் ஆண்டில் ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 14 வரை வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் நடத்தப்பட்டது. அப்போது அது வெற்றிகரமாக நடத்தப்பட்டது, இந்த முறையும் அது வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது" என்று கூறியது. பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஒரே வாக்காளரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார். 2. வாக்காளர் எண் (EPIC) பிரச்னை ஏன்? வாக்காளர் எண் தொடர்பாக இரண்டு வகையான 'பிரச்னைகளை' தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது- ஒருவாக்காளர் எண் - பல நபர்கள் ஒரே நபர் - பல வாக்காளர் எண்கள் நாட்டில் சுமார் மூன்று லட்சம் பேரின் வாக்காளர் எண்கள் ஒரே மாதிரியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியது. இதன் பிறகு, வாக்காளர் எண் ஒரே மாதிரியாக இல்லாதபடி அவர்களின் எண்கள் மாற்றப்பட்டன. "ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களின் வாக்காளர் பட்டியலில் இருக்கும்போதும், அவரது வாக்காளர் எண் வேறுபட்டிருக்கும் போதும் இரண்டாவது வகை நகல் ஏற்படுகிறது. அதாவது, ஒரு நபர், பல வாக்காளர் எண்" என்று ஞானேஷ் குமார் கூறினார். ஒரு நபர் தனது இருப்பிடத்தை மாற்றிக்கொண்டாலும், பழைய வாக்காளர் பட்டியலிலிருந்து தனது பெயரை நீக்காததால் இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது. தனது செய்தியாளர் சந்திப்பில் இது தொடர்பான சில உதாரணங்களை அளித்த ராகுல் காந்தி, இதுபோன்ற வாக்காளர்களின் பெயர்களை பிற இடங்களிலிருந்து தேர்தல் ஆணையம் நீக்காதது ஏன் என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த தலைமைத் தேர்தல் ஆணையர், "ஒரே பெயரில் பலர் இருப்பதால், ஒருவரின் வேண்டுகோளின் பேரில் தேர்தல் ஆணையத்தால் யாருடைய பெயரையும் நீக்க முடியாது. அதை அவசரமாகச் செய்ய முடியாது. ஒரு நபர் விரும்பினால், அவரே பெயரை நீக்கலாம் அல்லது சிறப்பு தீவிர திருத்த செயல்முறை (SIR) மூலம் அதை சரிசெய்யலாம்" என்று தெரிவித்தார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து தேர்தல் ஆணையத்திற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார் 3.'போலி வாக்காளர்கள் மற்றும் வீட்டு எண் பூஜ்ஜியம்' குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன? 2024 மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் மோசடி நடந்ததாகவும், இது பாரதிய ஜனதா கட்சிக்கு பயனளித்ததாகவும் ராகுல் காந்தி கூறியிருந்தார். அதிலும் குறிப்பாக, பெங்களூருவில் உள்ள மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் இருப்பதாகவும், பல வாக்காளர் அடையாள அட்டைகளில் முகவரி போலியாக இருப்பதாகவும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார். போலி வாக்காளர்கள் (உதாரணமாக பல மாநிலங்களில் வாக்காளராகப் பதிவுசெய்யப்பட்ட ஒரே நபர்) மற்றும் தவறான முகவரிகள் (உதாரணமாக ஒரு சிறிய அறையில் நூற்றுக்கணக்கான வாக்காளர்கள்) ஆகியவற்றிகான உதாரணங்களைக் கொடுத்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை 'ஆதாரமற்றது' மற்றும் 'பொறுப்பற்றது' என்று கூறி தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. 'வாக்கு திருட்டு' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவது கோடிக்கணக்கான வாக்காளர்கள் மற்றும் லட்சக்கணக்கான தேர்தல் பணியாளர்களின் நேர்மையின் மீதான தாக்குதல் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. மகாராஷ்டிராவில் வரைவுப் பட்டியல் சரியான நேரத்தில் கொடுக்கப்பட்ட போது, ஏன் ஆட்சேபனைகள் தெரிவிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பிய தேர்தல் ஆணையம், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகுதான் தவறுகள் தங்கள் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் கூறுகிறது. வீட்டு எண்ணை பூஜ்ஜியம் என்று குறிப்பிட்டிருப்பது தொடர்பான காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டைப் பற்றி கூறிய தேர்தல் ஆணையம், "வீடு இல்லாதவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தால், அவர்கள் இரவில் தூங்க வரும் இடமே (சில நேரங்களில் சாலையோரங்களில் அல்லது சில நேரங்களில் பாலத்தின் கீழ்) அவர்களின் முகவரியாக பதிவு செய்யப்படும். அவர்களை போலி வாக்காளர்கள் என்று குறிப்பிட்டால், அது அந்த ஏழை சகோதர சகோதரிகள் மற்றும் வயதான வாக்காளர்களை கேலி செய்வதாக இருக்கும்" என்று பதிலளித்தது. "கோடிக்கணக்கான மக்களின் வீடுகளின் எண்கள் பூஜ்ஜியமாக உள்ளன, ஏனெனில் பஞ்சாயத்து, நகராட்சி அவர்களுக்கு வீட்டு எண்ணை ஒதுக்கவில்லை. நகரங்களில் அங்கீகரிக்கப்படாத காலனிகள் உள்ளன, அங்கு அவர்களுக்கு வீட்டு எண் கிடைக்கவில்லை. அவர்கள் தங்கள் படிவத்தில் எந்த முகவரியை நிரப்புவார்கள்? தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி, அத்தகைய வாக்காளர் யாராவது இருந்தால், தேர்தல் ஆணையம் அவர்களுக்கு உதவுவதற்காக ஒரு கற்பனை எண்ணை வழங்கவேண்டும். வீட்டு எண் இல்லாமல் கணினியில் ஒருவரின் முகவரியை நிரப்பும்போது, அது பூஜ்ஜியமாகத் தோன்றும்." ஒருவர் வாக்காளராக வேண்டுமானால், 18 வயது பூர்த்தியடைய வேண்டும், முகவரி மற்றும் குடியுரிமை தேவை என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது. பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்துள்ளார். 4. தேர்தல் ஆணையம், ராகுல் காந்தியிடம் மட்டுமே பிரமாணப் பத்திரம் கேட்பது ஏன்? தேர்தல் ஆணையம் தன்னிடம் மட்டும் பிரமாணப் பத்திரத்தை கேட்பதாக ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். பிகார் பேரணியிலும் ராகுல் காந்தி இந்தப் பிரச்னையை எழுப்பினார். "தேர்தல் ஆணையம் என்னிடம் மட்டுமே பிரமாணப் பத்திரம் கேட்டுள்ளது, வேறு யாரிடமும் கேட்கவில்லை. சில தினங்களுக்கு முன்பு, பாஜகவினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியபோது, அவர்களிடமிருந்து பிரமாணப் பத்திரம் எதையும் கேட்கவில்லை. ஆனால் இப்போது என்னிடம் மட்டும், நான் வைத்திருக்கும் தரவு சரியானது என்று பிரமாணப் பத்திரம் கொடுக்கச் சொல்கிறார்கள். நான் கொடுக்கும் தரவு தேர்தல் ஆணையத்துடையது என்னும்போது, அவர்கள் ஏன் என்னிடமிருந்து பிரமாணப் பத்திரம் கேட்கிறார்கள்?" என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்புகிறார். இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி குற்றம் சாட்டும் பகுதியின் வாக்காளராக இல்லாததால், அவர் பிரமாணப் பத்திரத்தை அளிக்க வேண்டும் என்று கூறுகிறது. "முறைகேடுகள் பற்றிப் பேசும் ஒருவர், அந்த சட்டமன்றத் தொகுதியின் வாக்காளராக இல்லை என்றால், சட்டப்படி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு சாட்சியாக உங்கள் புகாரை தாக்கல் செய்யலாம், வாக்காளர் பதிவு அதிகாரியிடம் ஒரு உறுதிமொழியையும் அளிக்க வேண்டும். அந்த உறுதிமொழி, நீங்கள் புகார் அளித்த நபரின் முன் பதிவு செய்யப்பட வேண்டும். இந்தச் சட்டம் பல ஆண்டுகள் பழமையானது, அனைவருக்கும் பொருந்தக்கூடியது" என்று ஞானேஷ் குமார் கூறினார். "பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இந்த இரண்டைத் தவிர மூன்றாவது வழியே கிடையாது. ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படாவிட்டால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அர்த்தம்" என்று தலைமைத் தேர்தல் ஆணையர் கூறுகிறார். பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியுள்ளார் 'வாக்குத் திருட்டு' என்ற குற்றச்சாட்டு முடிவுக்கு வருமா? எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் நேரடியாக பதில் அளிக்கவில்லை என்று காங்கிரஸ் தலைவர் பவன் கெரா கூறியுள்ளார். "மகாதேவ்புராவில் நாங்கள் அம்பலப்படுத்திய ஒரு லட்சம் வாக்காளர்கள் குறித்து ஞானேஷ் குப்தா (தலைமை தேர்தல் ஆணையர்) பதில் ஏதேனும் அளித்தாரா? இல்லை" என்று பவன் கெரா கூறினார். "ஞானேஷ் குமார் எங்கள் கேள்விகளுக்கு இன்று (17-08-2025) பதிலளிப்பார் என்று நம்பினோம்... அவர் பேசியது (பத்திரிகையாளர் சந்திப்பில்) பாஜக தலைவர் ஒருவர் பேசுவது போல் இருந்தது" என்று அவர் கூறினார். தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பில் மூத்த பத்திரிகையாளர் பரஞ்சோய் குஹா டாகுர்தாவும் கலந்து கொண்டார். அவரின் கருத்துப்படி, தேர்தல் ஆணையம் அளித்துள்ள விளக்கத்தால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வரும் என்று தோன்றவில்லை. பிபிசியிடம் பேசிய பரஞ்சோய் குஹா டாகுர்தா, "பத்திரிகையாளர் சந்திப்பில் சில கேள்விகளுக்கு தெளிவாக பதிலளிக்கப்படவில்லை. உதாரணமாக, மகாராஷ்டிராவில் 40 லட்சம் புதியவர்களை சேர்த்தது உண்மையா என்ற என்னுடைய கேள்விக்கு, அப்போது யாரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை என்று ஆணையம் கூறியது. மாநிலத்தின் மக்கள் தொகையைக் காட்டிலும் வாக்காளர் பட்டியலில் அதிகமான பெயர்கள் ஏன் இருந்தது எப்படி என்று நான் கேட்ட மற்றொரு கேள்விக்கு எனக்கு பதில் கிடைக்கவில்லை" என்றார். "இதுபோன்ற இன்னும் பல கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இல்லை, எனவே எதிர்க்கட்சிகள் 'வாக்குத் திருட்டு' குற்றச்சாட்டில் இருந்து இப்போதைக்கு பின்வாங்கப் போவதில்லை." குறைந்தபட்சம் பிகார் தேர்தல் வரை எதிர்க்கட்சிகள் இந்தப் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர மாட்டார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ஸ்மிதா குப்தா நம்புகிறார். "பிகார் வரைவுப் பட்டியலில் இருந்து சுமார் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இது மிகப்பெரிய எண்ணிக்கை, எதிர்க்கட்சிகள் இதை தொடர்ந்து ஒரு பிரச்னையாக மாற்றுகின்றன. இன்று (ஆகஸ்ட் 17) பிகாரில் நடைபெற்ற இந்தியா கூட்டணி பேரணி இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. மகாராஷ்டிரா குறித்து ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகள் இன்னும் அப்படியே உள்ளன. எனவே, தேர்தல் ஆணையம் என்ன சொன்னாலும், எதிர்க்கட்சிகள் பிகார் தேர்தலில் அதை நிச்சயமாக ஒரு பிரச்னையாக மாற்றும்" என்று ஸ்மிதா குப்தா கூறுகிறார். மூத்த பத்திரிகையாளர் பிரமோத் ஜோஷி, ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை ஒரு அமைப்பு ரீதியான மற்றும் அரசியல் ரீதியான கேள்வியாகக் கருதுகிறார், எனவே இந்தப் பிரச்னை அவ்வளவு எளிதில் முடிவுக்கு வராது என்று கூறுகிறார். பிபிசியிடம் பேசிய பிரமோத் ஜோஷி, "ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் தேர்தல் ஆணையம் மற்றும் அரசாங்கம் இரண்டிற்கும் எதிரானவை. தேர்தல் ஆணையம் மட்டுமே பதில்களை வழங்கியுள்ளது. ராகுல் காந்தி ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆணையம் கூறுகிறது, ஆனால் ராகுல் காந்தி அவ்வாறு செய்ய மாட்டார் என்றே நினைக்கிறேன். இந்த விஷயமும் அரசியல் அடிப்படையிலேயே போராடப்படும், மேலும் இந்தியா கூட்டணி அவ்வளவு எளிதில் உடன்படாது" என்றார். பட மூலாதாரம், GETTY IMAGES இந்திய தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பின் நேரம் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது ஏன்? மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை (2025 ஆகஸ்ட் 7) செய்தியாளர்களை சந்தித்தபோது, தேர்தல் ஆணையம் மீது கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மக்களவைத் தேர்தல்களிலும், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல்களிலும் 'வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான மோசடி' நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். அதன்பின் கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து, வரைவுப் பட்டியலில் சேர்க்கப்படாத 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளுக்கு கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்குப் பிறகு தேர்தல் ஆணையம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது. 'வாக்குத் திருட்டுக்கு' எதிராக இந்தியா கூட்டணி பிகாரில் பேரணி நடத்திக் கொண்டிருந்த நேரத்தில் இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. "தேர்தல் ஆணையம் இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த முன்வந்ததில்லை. இன்று, பிகாரில் இந்தியா கூட்டணி ஒரு பேரணியை நடத்திய சமயத்தில் இந்த செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் நடைபெற்றது. இன்னும் முக்கியமானது என்னவென்றால், இந்த மாதம் 14ஆம் தேதி, தேர்தல் ஆணையத்தை கடிந்துகொண்ட உச்ச நீதிமன்றம், ஆகஸ்ட் 19 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்குள் இந்தப் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இயந்திரம் படிக்கக்கூடிய தேடலை மக்கள் செய்யக்கூடிய வகையில் அதைக் கொடுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளது" என்று பரஞ்சோய் குஹா டாகுர்தா கூறுகிறார். இதற்கிடையில், தேர்தல் ஆணையத்தின் பதிலை அரசியல் சூழலில் பார்க்க வேண்டும் என்று பிரமோத் ஜோஷி நம்புகிறார். "நாம் நேரத்தைப் பற்றிப் பேசினால், தேர்தல் ஆணையத்தின் பதிலும் நிச்சயமாக அரசியல் சார்ந்ததுதான். ராகுல் காந்தி அல்லது அவரது கட்சி பிகாரில் இதை அரசியலாக்குவது போல, அதே தேதியில், தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் சார்பாக தனது நிலைப்பாட்டை முன்வைத்துள்ளது" என்று பிரமோத் ஜோஷி விளக்குகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg4jz5g1n0o
1 month ago
உலகில் முதன் முதலில் நடைபெற்ற மனித உருவ ரோபோ ஒலிம்பிக் போட்டி! உலகில் முதன்முறையாக நடத்தப்படும் மனித உருவ ரோபோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவின் பீஜிங்கில் இடம்பெற்றது. 15 ஆம் திகதி முதல் இடம்பெறும் இந்த போட்டிகள் நேற்று வரை நடைபெற்றது. சீனா, அமெரிக்கா, ஜேர்மனி, பிரேசில், ஜப்பான் உள்ளிட்ட 16 நாடுகளைச் சேர்ந்த 280 அணிகள் பங்கேற்ற இந்த நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட ரோபோக்கள் பங்கேற்றுள்ளன. உலகில் மனித உருவ ரோபோக்கள் மட்டுமே பங்கேற்று நடைபெற்ற முதல் ஒலிம்பிக் போட்டி இதுவாகும் . இந்த போட்டியில், கால்பந்து, குத்துச்சண்டை , ஜிம்னாஸ்டிக்ஸ், உள்ளிட்ட 26 விளையாட்டுக்கள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443489
1 month ago
உலகை சுற்றிவரும் பயணத்திலுள்ள அவுஸ்திரேலிய 15 வயதான இளம் விமானி கொழும்பில் தரையிறங்கினார்! உலகைச் சுற்றி வந்த இளைய துணை விமானியாக மாறுவதற்கான வரலாற்று முயற்சியில் இறங்கியுள்ள 15 வயதான பிரிஸ்பேனைச் சேர்ந்த பைரன் வாலர் (Byron Waller) கொழும்பில் பாதுகாப்பாக தரையிறங்கினார். கொழும்பு, இரத்மலானை விமான நிலையத்தை (CIAR) வந்தடைந்த அவரை விமான நிலைய அதிகாரிகள் ஊக்கத்துடன் வரவேற்றனர். இந்தியப் பெருங்கடலில் 11 மணி நேர விமானப் பயணத்திற்குப் பின்னர் ஞாயிற்றுக்கிழமை (17) பைரன் வாலர் விமான நிலையத்தை வந்தடைந்ததாக CIAR ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. பைரன் 45,000 கிலோ மீட்டர்கள், ஏழு கண்டங்களிலும் 30 நாடுகளை சுற்றிவர சுமார் இரண்டு மாதங்கள் எடுக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்கிறார். https://athavannews.com/2025/1443495
1 month ago
பொலிஸ் மா அதிபரால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு குவியும் முறைப்பாடுகள்! 18 AUG, 2025 | 02:10 PM நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிடுவதற்காக பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் அறிமுகப்படுத்தப்பட்ட வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு கடந்த ஐந்து நாட்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, 071- 8598888 என்ற வட்ஸ்அப் தொலைபேசி இலக்கம் ஊடாக நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறையிட முடியும் என ஆகஸ்ட் 13 ஆம் திகதி பொதுமக்களுக்கு அறிவித்திருந்தார். அதன்படி, ஆகஸ்ட் 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் குறித்த வட்ஸ்அப் தொலைபேசி இலக்கத்திற்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/222790