Aggregator
கொட்டாஞ்சேனை மாணவி அம்சிகாவின் வழக்கு செப்டெம்பர் மாதம் ஒத்திவைப்பு!
கொட்டாஞ்சேனை மாணவி அம்சிகாவின் வழக்கு செப்டெம்பர் மாதம் ஒத்திவைப்பு!
கொட்டாஞ்சேனை மாணவி அம்சிகாவின் வழக்கு செப்டெம்பர் மாதம் ஒத்திவைப்பு!
2025-05-15
கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் வசித்து வந்த பாடசாலை மாணவி அம்சிகா, கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதியன்று தவறான முடிவெடுத்து உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த மாணவி, ஏற்கனவே பாடசாலை ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டிருந்ததாக கூறி தொடரப்பட்டுள்ள வழக்கின் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மாணவின் மரணம் தொடர்பில் விசாரணையை மேற்கொண்டு வரும் சிறுவர்கள் மற்றும் மகளிர் பணியகத்தின் கொழும்பு வடக்கு பிரிவின் பொறுப்பதிகாரி, இந்த சம்பவம் தொடர்பாகக் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதன்போது சிசிடிவி காட்சிகள் மேலதிக ஆய்வுக்காக மொரட்டுவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன எனவும், விசாரணை அறிக்கைகள் இன்னும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் நேற்று மன்றில் தெரிவித்திருந்தனர்.
இச் சம்பவம் தொடர்பாக பலரது வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணி நடைபெற உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும் ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு, நீதவான் இந்த விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் செப்டம்பர் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் அநுர அரசு - விமல் வீரவன்ச கருத்து!
புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் அநுர அரசு - விமல் வீரவன்ச கருத்து!
புலம்பெயர் தமிழர்களை திருப்திப்படுத்தும் அநுர அரசு - விமல் வீரவன்ச கருத்து!
அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் செயற்படுவதுடன் இவர்களை மகிழ்விப்பதற்காக மாகாண சபைத் தேர்தலுக்கான அறிவிப்பை விடுக்கும் எனவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர கொண்டு வந்த இலங்கை மின்சாரசபை சட்டத்தை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்த்தது.
மக்கள் விடுதலை முன்னணியின் தொழிற்சங்கவாதியான கடுவலை மாநகர சபையின் தற்போதைய மேயர் ரஞ்சன் ஜயலால் சட்டவரைபை தீ வைத்து கொளுத்தினார்.
கஞ்சன விஜேசேகர கொண்டு வந்த சட்டத்தில் போலியான திருத்தங்களை செய்து அண்மையில் இலங்கை மின்சாரசபை சட்டவரைபு நிறைவேற்றப்பட்டது.
அன்று எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இன்று முழுமையான ஆதரவளித்துள்ளார்கள். பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இவ்விடயம் தொடர்பில் ஏதும் பேசுவதில்லை.
அண்மையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை மின்சாரசபை சட்டத்தினால் இலங்கையின் மின்சாரம் மற்றும் வலுசக்தித்துறைக்கு பாரிய பாதிப்பு ஏற்படும்.
வலுசக்தி துறையின் சுயாதீனத்தை பிற நாடுகளுக்கு விட்டுக்கொடுத்து நாட்டின் இறையாண்மையை அரசாங்கம் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
பிரிவினைவாத கொள்கை கொண்ட புலம்பெயர் தமிழ் அமைப்புக்களை திருப்திப்படுத்தும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. இவர்களை மகிழ்விப்பதற்காக எதிர்வரும் ஆண்டு முதல் காலப்பகுதியில் மாகாண சபைத்தேர்தலுக்கான அறிவிப்பை அரசாங்கம் விடுக்கும்.
மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டால் நாட்டில் தேவையில்லா பிரச்சினைகள் ஏற்படும். அண்மையில் நிறைவேற்றப்பட்ட மின்சார திருத்தச் சட்டத்தால் வலுசக்தி துறையின் தனியுரிமை கூறாக்கப்படும் என்றார்.
ஹர்த்தால் வெற்றியே என்கிறார் சுமந்திரன்!
ஹர்த்தால் வெற்றியே என்கிறார் சுமந்திரன்!
ஹர்த்தால் வெற்றியே என்கிறார் சுமந்திரன்!
adminAugust 19, 2025
யாழ்ப்பாணம் தவிர ஏனைய இடங்களில் ஹர்த்தால் வெற்றியளித்துள்ளது என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம் . ஏ சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த சுமந்திரன்,
வடக்கு கிழக்கில் உள்ள இராணுவத்தினரை அகற்றுமாறு கோரிக்கையை முன் வைத்து ஹர்த்தாலுக்கு தமிழரசு கட்சி அழைப்பு விடுத்தது.
அதனை ஏற்று வடக்கு கிழக்கில் பெரும்பாலான இடங்களில் ஹர்த்தலுக்கு ஆதரவு கிடைத்திருந்தது.
யாழ்ப்பாணத்தில் குறிப்பாக யாழ், நகர் பகுதியில் மாத்திரமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தது. அவர்கள் ஆதரவு வழங்காதது மன வருத்தமே …
வடக்கு கிழக்கு முழுவதும் மக்களை ஒன்றிணைந்து போராட்டம் நடாத்த கூடிய கட்சியாக தமிழரசு கட்சியே உள்ளது. அந்த வகையில் நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம். அது வெற்றியை தந்துள்ளது.
எமது ஹர்த்தால் அறிவிப்பு வந்தவுடனையே ஜனாதிபதி , அமைச்சர் பிமல் உள்ளிட்டவர்கள் எம்மை தொடர்பு கொண்டு பேசி இருந்தனர். முத்துஐயன்கட்டு இராணுவ முகாமை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம் என கூறினார்கள். இதுவே வெற்றி.
வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்து இராணுவத்தினர் முற்றாக வெளியேற்றப்பட வேண்டும் அவர்கள் மக்களுடன் மக்களாக இருக்க முடியாது.
தெற்கில் இராணுவ முகாம்கள் உள்ளன. அங்கு அவர்கள் இராணுவ முகாம்களுக்குள் முடங்கி காணப்படுவார்கள். ஆனால் வடக்கு கிழக்கில் அந்த நிலைமை இல்லை. அவர்கள் மக்களோடு மக்களாக , மக்களின் இயல்வு வாழ்வில் தலையீடு செய்கின்றனர்.
பாடசாலைகள் , தனியார் காணிகள் , ஏன் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றுக்கு சொந்தமான காணியை கூட கையகப்படுத்தி அதில் நிலைகொண்டுள்ளனர். அதனால் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டும்.
இந்த ஹர்த்தால் ஒரு அடையாள போராட்டமே. இனிவரும் காலங்களில் இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ந்து முன்னெடுப்போம்.
வடக்கு – கிழக்கில் உள்ள பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் தமிழரசு கட்சியின் கட்டுப்பாட்டிலையே உள்ளன. அதனால் , அந்த அந்த பிரதேசங்களில் மக்களை ஒன்றிணைந்து , அந்த பிரதேசங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற கோரி போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளோம்.
பருத்தித்துறை நீதிமன்றுக்கு சொந்தமான காணியில் இருந்து இராணுவத்தினரை வெளியேற்ற கோரி, பருத்தித்துறை நகர சபை நகர பிதாவின் அழைப்பில் போராட்டம் நடைபெறவுள்ளது. அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றாலும் அந்த போராட்டத்திற்கு தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும்.
வடக்கு கிழக்கில் இராணுவ மயமாக்கலுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் .சி.வி.கே. சிவஞானம் கருத்து தெரிவிக்கையில்,
முத்துஐயன்கட்டு இளைஞன் கொலையானதும், இளைஞன் தொடர்பாகவும் சில விமர்சனங்கள் உள்ளன அவை எமக்கும் தெரியும். ஆனால் இதனை இராணுவ மயமாக்கலுக்கு எதிரான சுட்டியாக கொண்டே நாம் ஹர்த்தலுக்கு அழைப்பு விடுத்தோம்.
இங்கு நோக்கம் இராணுவ மயமாக்கலை எதிர்ப்பது. எனவே நோக்கம் சரியாக இருப்பின் ஹர்த்தலுக்கு ஆதரவு வழங்க வேண்டும். அதற்கு யார் அழைப்பு விடுத்தார்கள். யார் செய்கிறார்கள் என ஆராயாமல் ஆதரவு வழங்க வேண்டும்.
இங்கே ஒற்றுமை ஒற்றுமை என கூறி திரிபவர்கள் இந்த விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும். நாம் நோக்கம் சரியாக இருந்தால் அதற்காக ஆதரவு கொடுப்பவர்கள். அவ்வாறு ஆதரவு கொடுத்து சென்றாலும் எங்களை துரத்துவதில் குறியாகவே உள்ளனர். அது தெரிந்தும் நோக்கம் சரியாக உள்ள போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்துள்ளோம். போராட்டங்களிலும் கலந்து கொண்டுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.
P2P போராட்டத்தின் நாயகர்கள் நாமே .. யாழில்.சுமந்திரன் தெரிவிப்பு.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தின் நாயகர்களே நாங்கள் தான் என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, கடந்த காலங்களில் சுமந்திரன் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டுகள் உள்ளதாக கேள்வியெழுப்பிய போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்,
பலருக்கு ஞாபக மறதிகள் இருக்கலாம், அல்லது தமது அரசியலுக்காக ஞாபகம் இருந்தும் மறந்து போனது போல குற்றச்சாட்டுக்களை கூறலாம்
நாம் கடந்த காலங்களிலும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடாத்தி இருந்தோம். வலி . வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிக்க கோரி போராட்டங்களை முன்னெடுத்தோம். காணி சுவீகரிப்பு எதிராக சட்ட போராட்டங்களையும் முன்னெடுத்தோம். தற்போதும் அந்த வழக்குகள் விசாரணையில் உள்ளன.
பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரி கொழும்பில் இருந்து ஹம்பாந்தோட்டையில் உள்ள மஹிந்த ராஜபக்சேயின் சொந்த ஊரான தங்காலை வரையில் பேரணி சென்றோம். பேரணிக்காக ஒழுங்கு செய்யப்பட்ட வாகனத்தை காலி முகத்திடலில் வைத்து பொலிஸார் கடத்தி சென்றனர். அதனை போராடி மீட்டே எமது பேரணியை முன்னெடுத்தோம்.
P2P என அழைக்கப்பட்ட பொதுவில் முதல் பொலிகண்டி வரையிலான போராட்டத்தை முன்னின்று பொலிகண்டி வரையில் கொண்டுவந்து சேர்ந்தது நாமே.
அன்றைக்கு சுமந்திரனும் , சாணக்கியனும் இல்லை என்றால் போராட்டம் பொத்துவிலுடன் முடிக்கப்பட்டு இருக்கும் என அன்றே பலர் ஊடக சந்திப்புக்களில் கூட கூறியிருந்தார்கள்.
நாங்கள் தான் பொலிஸ் தடைகளை உடைத்து பொலிகண்டி வரை பேரெழுச்சியாக பேரணி சென்றடைய முன்நின்றோம். அதற்காக பொலிஸ் விசாரணைகளை கூட எதிர்கொண்டோம்.
இந்த ஹர்த்தால் கூட ஒரு அடையாள போராட்டமே. வடக்கு கிழக்கில் இருந்து இராணுவ முகாம்கள் முற்றாக அகற்றப்படும் வரையில் நாம் தொடர் போராட்டங்களை எதிர்காலத்தில் முன்னெடுப்போம் என மேலும் தெரிவித்தார்.
வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம்
பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்
பாஜக கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம் – ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அறிவிப்பு
வவுனியா ஓமந்தையில் கோரவிபத்து! பெண் உட்பட இருவர் பலி பலரது நிலை கவலைக்கிடம்
மாத்தளன் மருத்துவமனை விடுபட்டது குறித்து மருத்துவர் வரதராசா!
கொத்துக் குண்டு பொதுமக்கள் மீது வீசப்பட்டது; ஒரு செய்தியாளரின் நேரடிச் சாட்சி!
ஒரு சோறு
ஒரு சோறு
ஒரு சோறு
ஒரு சோறு
கரும்புலி மாவீரர் லெப்ரினன்ட் கேணல் தேனிசை!
உலகெங்கும் தமிழர்களால் உணர்வுபூர்வமாக இன்றைய "யூலை-5 கரும்புலிகள் நாள்" நினைவுகூரப்படுகின்றது.
இந்த வேளை, இதுவரை வெளிவராத ஒரு கரும்புலி மாவீரரைப் பற்றிய சிறு குறிப்பை இங்கே பதிவுசெய்கிறேன்.
சமராய்வுப் பிரிவில் கடமையாற்றிக்கொண்டிருந்த போது 2009 ஆம் ஆண்டு தை மாதமளவில் கரும்புலியாகத் தன்னை இணைத்துக்கொண்டு, ஏறக்குறைய ஒரு மாதத்துக்குள்ளேயே ஒரு வெற்றிகரமான கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு "லெப்ரினன்ட் கேணல் தேனிசை" ஆகத் தன்னை வெடித்து, 23 எதிரிப் படைகளைக் கொன்றொழித்து, தரைக் கரும்புலி மாவீரராக எங்கள் இனத்துக்காகத் தன்னைக் கொடையாக்கிய ஒரு அற்புதமான போராளி தேனிசை.
ஆண்டு 2002 அளவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் தன்னை இணைத்துக்கொண்டவர். விடுதலைப் புலிகளின் "#படைய_அறிவியற்_கல்லூரி" என்னும் பிரிவால் மேற்கொள்ளப்பட்ட பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று, அந்த அணியின் மகளிர் பிரிவில் கடமையாற்றினார்.
படைய அறிவியற் கல்லூரியால் தயாரிக்கப்பட்ட அனைத்து வகையான படைத்துறை சார் நூல்களையும் கட்டுவதற்கென்றே (binding) ஒரு பகுதி இருந்தது. அது ஆண்கள், பெண்கள் ஆகிய இரு பிரிவிலும் இருந்தது. இரகசிய ஆவணங்களை வெளியில் கொடுத்து கட்டுவிக்க முடியாது என்பதற்காகவே இந்தப் பகுதி உருவானது.
குறித்த இந்த நூல்களைக் கட்டும் பகுதியில் ஆரம்பத்தில் பணியாற்றிவந்தார் தேனிசை.
பின்னர், விடுதலைப் புலிகளின் சமராய்வுப் பிரிவு உருவாக்கப்பட்டு, அது விரிவாக்கம் பெற்றுக்கொண்டிருந்த போது அதற்கான துறைசார் ஆளணி தேவைப்பட்டது. அதனால், படைய அறிவியற் கல்லூரியில் இருந்து சமராய்வுப் பிரிவிற்கு போராளி தேனிசை பிரிவு மாற்றம் செய்யப்பட்டார். அந்த ஆண்டு 2007 இன் தொடக்கத்தில் என நினைக்கிறேன்.
சமராய்வுப் பிரிவின் நூலகத்திற்குப் பொறுப்பாக போராளி தேனிசை கடமையாற்றினார். அதேவேளை, அங்கே பல்வேறு பணிகளை அவர் ஏனைய போராளிகளோடு இணைந்து செய்தார். நூல்கள் தயாரித்தல், கட்டுதல், அறிக்கை தயாரித்தல், வடிவமைத்தல், தட்டச்சு செய்தல் போன்ற கடமைகளையும் அவர் ஆற்றிவந்தார்.
இவ்வாறு பணிகள் பல முனைகளில் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தபோது, தமிழீழம் எங்கும் போர் மிகவும் தீவிரமாகிக்கொண்டு இருந்தது. படிப்படியாக நிலங்கள் விடுபட்டுக்கொண்டிருந்தன.
இறுதியாக புதுக்குடியிருப்பு வரை எதிரி முன்னேறியதால், அந்தப் பகுதியில் பாரிய மறிப்பு வரிசை அமைத்து, எதிரியின் முன்னகர்வுகள் முறியடிக்கப் பட்டுக்கொண்டு இருந்தது.
அந்த வேளை, பரவலாக கரும்புலியாக இணைய விரும்புவோர்களது பெயர் விபரங்கள் எடுக்கப்பட்டு வந்தது. அப்போது, சமராய்வுப் பிரிவிலும் எடுக்கப்பட்டது. இதன்போது, போராளி தேனிசையிடம், "கரும்புலியாக இணைந்துகொள்ள விருப்பமா?" என்று அறிக்கை எடுத்த போராளி கேட்டார்.
அதற்கு தேனிசை தனது வழக்கமான புன்னகையுடன் மிகச் சாதாரணமாக, "ஆம்" என்று கூறித் தலையசைத்தார். அறிக்கை எடுத்தவரும் அதனைப் பார்த்தவர்களும் தேனிசை ஏதோ பகிடியாகக் கதைக்கிறார் என்று நினைத்து, மறுபடியும் கேட்டு, "என்ன உண்மையாகவா ஆம் என்கிறீர்கள்," என்று கேட்டு உறுதிப்படுத்தினார்கள்.
கறுத்த உருவம். என்றும் இழையோடும் அழகிய புன்முறுவல். கடமைகளை நேர்த்தியாக முடிக்கும் பக்குவம். சக போராளிகளோடு அன்பாய் பழகும் மனம். அதேவேளை, அதிகம் பேசாத தனித்துவம். இதுதான் போராளி தேனிசை.
அவ்வாறு அவர் சம்மதம் தெரிவித்து சிலநாட்கள் கழிய, விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைப் பொறுப்பாளர் திரு.பொட்டு அம்மான் அவர்கள் சமராய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் திரு.யோகி அவர்களுடன் பேசிவிட்டு போராளி தேனிசையை கரும்புலிகள் அணியில் இணைத்தார்.
அவ்வாறு அவர் இணைக்கப்பட்டு, அடுத்த சில நாட்களிலேயே அவர் கரும்புலிக்கான அறிவுறுத்தல்கள் மற்றும் பயிற்சிகளை மிகக் குறுகிய நாட்களுக்குள் பெற்றார். அத்துடன் தனது இலக்கையும் பார்வையிட்டார்.
தான் இலக்கில் சென்று வெடிப்பதற்கு ஒரிரு நாளிற்கு முன்னர் தான் பணியாற்றிய சமராய்வுப் பிரிவுக்கு வந்து, தனது சகோதரர்களாகவும் ஒரு கூட்டுக் குடும்பமாகவும் இருந்த சக போராளிகளிடம் இறுதி விடைபெற்றுச் சென்றார்.
மற்ற எல்லோருக்கும் அது மிக உணர்வுபூர்வமான விடயமாக இருக்க, தேனிசைக்கு மட்டும் அது ஒரு விடுமுறைக்கான விடுப்பு எடுத்துச் செல்வதுபோன்ற உணர்வு. அப்போதும் தேனிசை புன்னகையும் கலகலப்பான முகபாவனையுடன் தான் விடைபெற்றுச் சென்றார். விடைகொடுத்த போராளிகளுக்கு தேனிசையைக் கடைசி முறையாகப் பார்க்கின்ற தருணம் அது. அந்தக் கணத்தை எழுத்தில் உணர்த்திவிட முடியாது.
"சாகும்போதும் தமிழ்படித்து சாகவேண்டும், என் சாம்பலும் தமிழ் மணந்து வேகணே்டும்," என்ற கூற்றைப் போன்று, அன்று தேனிசை தனது இறப்புக்கான இறுதி விடைபெறும்போதும் புன்னகையோடுதான் இருந்தாள். அவள் வெடித்த கணத்தில் சாம்பலாகும் போதும் புன்னகையுடன் தான் இருந்திருப்பாள்! தனது இறப்பால் தமிழினம் விடிவுபெறட்டும் என்பதற்காக.
தேனிசை விடைபெற்றுச் சென்று ஓரிரு நாட்கள் கழித்து, பொட்டு அம்மான் அவர்கள் யோகி அண்ணையைச் சந்தித்து தேனிசை புதுக்குடியிருப்புப் பகுதியில் கரும்புலியாக வெடித்து 23 எதிரிப் படைகளைக் கொன்றொழித்தார் என்ற செய்தியைத் தெரிவித்தார். "கரும்புலி தேனிசை மிகவும் சிறந்த போராளி. மிகக் குறுகிய நாட்களுக்குள் தனது கடமையைச் சரியாகச் செய்துமுடித்தார்," என்று யோகி அண்ணையிடம் பாராட்டினார் பொட்டு அம்மான் அவர்கள்.
தேனிசைக்கு லெப்ரினன்ட் கேணல் என்ற நிலை வழங்கப்பட்டது.
இன்று, கரும்புலி மாவீரர் லெப்.கேணல் தேனிசை அவர்களின் படம் எங்களிடம் இல்லை! அவர் குறித்த முழுமையான தரவு எங்களிடம் இல்லை! ஆனால், அவரோடு பணியாற்றிய எஞ்சிய ஓரிரு போராளிகளிடம் மட்டுமே அவரது இந்த நினைவுக் குறிப்பு உள்ளது.
இப்படி எத்தனையோ ஆயிரம் மாவீரர்களின் வரலாறுகள் பதியப்படாமல் எமது இனம் வாழத் தங்களது உயிர்களைக் கொடையாக்கினார்கள்.
வாழ்ந்துகொண்டிருக்கின்ற எங்கள் இனம் அவர்களின் தியாகத்தையும் வரலாற்றையும் கற்றுணர்ந்து அவர்களின் நினைவுகளுடன் வாழவேண்டும்; அவர்கள் எந்த உயரிய நோக்கத்துக்காகத் தங்களைக் கொடையாக்கினார்களோ, அந்த உயரிய நோக்கம் நிறைவேற ஒவ்வொரு தமிழரும் தங்களது பங்களிப்பை சரியான கட்டங்களில் செய்யவேண்டும்.
இதுதான் நாம் ஒவ்வொருவரும் அவர்களுக்குச் செய்யும் உயரிய மாரியாதையாக இருக்கும்.
---
த.ஞா.கதிர்ச்செல்வன்.
****