3 weeks 6 days ago
எழுதினதையே ஏன் திரும்பத் திரும்ப எழுதுகிறீர்கள் என விளங்கவில்லை😂! "அப்படித் தான் எல்லோரும் செய்கிறார்கள், சீமானும் செய்தார்" என்றால் ஏன் அவருக்கு "புனிதர்" பட்டம் கொடுத்து தலையில் காவும் தேவை? அவர் "சின்னக் கருணநிதி" என்று கோசான் உட்பட பலர் சொல்லி விட்டார்கள். ஆனாலும், கருணாநிதியிடம் கூட இரண்டு மனைவியரை பகிரங்கமாக வைத்திருக்கும் வெளிப்படைத்தன்மை இருந்தது. "திரள் நிதி" குறைந்து விடும் என்ற அச்சத்தில் சீமானிடம் அதுவும் இல்லாமல் தானே இருந்தது? இப்ப மூலையில் முடக்கப் பட்ட பின்னர் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதில் பெருமை எதுவும் இல்லை!
3 weeks 6 days ago
வெண்கல கடைக்குள் யானை புகுந்தது போல் ட்ரம் செய்யும் கூத்துகளால் சும்மா கிடந்த தங்க விலை பறக்க தொடங்கி விட்டது எனகென்னவோ வேண்டும் என்றே தங்க விலை கூடுகிறது போல் உள்ளது தங்கத்தின் மதிப்பு உயர உயர அமெரிக்க கடன்கள் குறைவாகும் . ஏனென்றால் அவர்களின் தங்க இருப்பு அப்படி .
3 weeks 6 days ago
இரண்டு வருடங்கள் போராடியும் மீட்க முடியாமல் போன இஸ்ரேலிய பணயக்கைதிகளை, ஹமாஸிடமிருந்து மீட்டுக் கொடுத்து அமைதியை ஏற்படுத்தி கொடுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம்பின் சாதனையை பாராட்டி இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாஹு தங்கத்திலான புறா ஒன்றை வழங்கிய காட்சியே இது! நோபல் கிடைக்காவிட்டாலும் தங்கப்புறாவை பெற்று ரம்ப் மனமகிழ்ந்தார். Almashoora Latest News
3 weeks 6 days ago
இதைத்தானே பலவருட காலமாய் இலங்கையின் வடகிழக்கு போரினால் பாதிக்க பட்ட தமிழ் மீனவர்கள் உங்களிடம் இரந்து கேட்கிறார்கள் . இது புரியாமல் எங்களுகதுகளும் ஆளாளுக்கு விசைபலகையில் விசமிட்டு செல்கிறார்கள் இவ்வளவு காலமும் அரசல் புரசலாய் இருந்த நிலை தற்போது நேரடியாக இந்திய மாநில மீனவர்களிடையே பிரிவினையை உருவாக்கும் அளவுக்கு கடல் வள கொள்ளை தாண்டவம் ஆட தொடங்கி விட்டது ஒரே வழி உலகளவில் தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைகளை ஒரேயடியாக பாரபட்சம் பார்க்காமல் தடை செய்வதே .
3 weeks 6 days ago
தாலாட்டு பாடி தாயாக வேண்டும் படம் பிராப்தம்
3 weeks 6 days ago
ஓம். கண்டு கொண்டேன். 👍 🙂
3 weeks 6 days ago
https://www.ft.com/content/51134511-15a3-4be0-acc3-5c84c10514ba இதில் இருவரின் படமும் உள்ளது. தெரிகிறதா?
3 weeks 6 days ago
யாழ்.கள நிருபர்... அவர்களின் படத்தை எடுத்துப் போடவும். 😂
3 weeks 6 days ago
உறவுகளுக்கு நினைவிருக்கும்… மேற்படியாரை புலம்பெயர் சமூகத்துக்கு ஒரு முன்மாதிரி என கள உறவு நாதமுனி முன்னர் பிரஸ்தாபித்து இருந்தார். யாராவது நாதத்துக்கு ஒரு @ போட்டு விடவும் 🤣
3 weeks 6 days ago
பிரித்தானியாவில் ஆரம்பத்தில் கோலிங்கார்ட் வியாபாரம், பின்னர் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடங்கி, நூற்றுக்கணக்கான நிலையங்கள், அதன் அடுத்தபடியாக லிங்கன்ஷேர் பகுதியில் பிரிதானியாவில் இருக்கும் நாலு எண்ணை சுத்தீகரிப்பாலைகளில் ஒன்றை வாங்கி நடத்தியவர் இலங்கை தமிழர்களான வின்சண்ட் சஞ்சீவ்குமார் சூசைபிள்ளை, அவரின் மனைவி ஆரணி சூசைப்பிள்ளை. இப்போ இவர்கள் நிறுவனம் £1.5 பில்லியன் (ஆயிரத்து ஐநூறு மில்லியன் பவுண்டஸ்) கடனில் திவாலாகியுள்ளது. இவர்கள் இருவரும் நிதியை முறையாக கையாளாமை, அதீத கடனில் வியாபாரத்தை விரிவாக்கியது என பலதவறுகளை விட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்களுக்கு பல மில்லியன் சம்பளபாக்கியை வைத்து விட்டு, இவர்கள் இருவரும் மிக அண்மையில் கூட பல மில்லியன்களை கம்பெனியில் இருந்து தமது சொந்த வருமானமாக எடுத்துள்ளனர். பிரித்தானிய திறைசேரி, இன்னும் பல நிறுவனக்களுக்கும் இவர்கள் பல மில்லியன் ஆப்பை செருகி உள்ளனர். நிறுவனதின் சொத்து 150 மில்லியனை கோர்ட் முடக்கி உள்ளது. ஆனால் இது இவர்களின் கடனில் 10% மட்டுமே. இவர்களின் நீச்சல்தடாகம், சோனா, ஸ்பா வசதிகளுடனான, வேபிரிஜ் எனும் அதீத செல்வந்தர் வாழும் இடத்தில் உள்ள 5 மில்லியன் பெறுமதியான வீட்டை விற்கபோட்டுள்ளனராம். இவர்கள் இலங்கைக்கு தப்பி ஓடி இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது. (மூலம் - பிரித்தானிய ஊடகங்கள் + யாழ்கள நிருபர் கோஷான் களத்தில் இருந்து🤣 ) https://www.theguardian.com/business/2025/sep/04/uk-court-freezes-150m-of-assets-of-collapsed-prax-lindsey-oil-refinery-owner https://www.theguardian.com/business/2025/aug/20/loan-irregularities-collapse-prax-lindsey-oil-refinery https://finance.yahoo.com/news/couple-behind-doomed-oil-refinery-070000350.html?guccounter=1&guce_referrer=aHR0cHM6Ly93d3cuZ29vZ2xlLmNvbS8&guce_referrer_sig=AQAAAEZhFmvvT-Q_g2dpoByQb88U5CLGaHOs6eKHVGfyQG1TemU60KuopVeWlK8Pp3WXx84mkZfOJIrh-0HKWxKKfgRoGpVoDqH6WCvCC4ao7KTBMevyKJB03V1x2Cp9ffzD-DfoN8KWJl9XRKg70LBfxjSEJ1YSS131b2y_Xb6pIJLd
3 weeks 6 days ago
பிரித்தானியாவில் ஆரம்பத்தில் கோலிங்கார்ட் வியாபாரம், பின்னர் ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் தொடங்கி, நூற்றுக்கணக்கான நிலையங்கள், அதன் அடுத்தபடியாக லிங்கன்ஷேர் பகுதியில் பிரிதானியாவில் இருக்கும் நாலு எண்ணை சுத்தீகரிப்பாலைகளில் ஒன்றை வாங்கி நடத்தியவர் இலங்கை தமிழர்களான வின்சண்ட் சஞ்சீவ்குமார் சூசைபிள்ளை, அவரின் மனைவி ஆரணி சூசைப்பிள்ளை.
இப்போ இவர்கள் நிறுவனம் £1.5 பில்லியன் (ஆயிரத்து ஐநூறு மில்லியன் பவுண்டஸ்) கடனில் திவாலாகியுள்ளது.
இவர்கள் இருவரும் நிதியை முறையாக கையாளாமை, அதீத கடனில் வியாபாரத்தை விரிவாக்கியது என பலதவறுகளை விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஊழியர்களுக்கு பல மில்லியன் சம்பளபாக்கியை வைத்து விட்டு, இவர்கள் இருவரும் மிக அண்மையில் கூட பல மில்லியன்களை கம்பெனியில் இருந்து தமது சொந்த வருமானமாக எடுத்துள்ளனர்.
பிரித்தானிய திறைசேரி, இன்னும் பல நிறுவனக்களுக்கும் இவர்கள் பல மில்லியன் ஆப்பை செருகி உள்ளனர்.
நிறுவனதின் சொத்து 150 மில்லியனை கோர்ட் முடக்கி உள்ளது. ஆனால் இது இவர்களின் கடனில் 10% மட்டுமே.
இவர்களின் நீச்சல்தடாகம், சோனா, ஸ்பா வசதிகளுடனான, வேபிரிஜ் எனும் அதீத செல்வந்தர் வாழும் இடத்தில் உள்ள 5 மில்லியன் பெறுமதியான வீட்டை விற்கபோட்டுள்ளனராம்.
இவர்கள் இலங்கைக்கு தப்பி ஓடி இருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.
(மூலம் - பிரித்தானிய ஊடகங்கள் + யாழ்கள நிருபர் கோஷான் களத்தில் இருந்து🤣 )
https://www.theguardian.com/business/2025/sep/04/uk-court-freezes-150m-of-assets-of-collapsed-prax-lindsey-oil-refinery-owner
https://www.theguardian.com/business/2025/aug/20/loan-irregularities-collapse-prax-lindsey-oil-refinery
https://finance.yahoo.com/news/couple-behind-doomed-oil-refinery-070000350.html?guccounter=1&guce_referrer=aHR0cHM6Ly93d3cuZ29vZ2xlLmNvbS8&guce_referrer_sig=AQAAAEZhFmvvT-Q_g2dpoByQb88U5CLGaHOs6eKHVGfyQG1TemU60KuopVeWlK8Pp3WXx84mkZfOJIrh-0HKWxKKfgRoGpVoDqH6WCvCC4ao7KTBMevyKJB03V1x2Cp9ffzD-DfoN8KWJl9XRKg70LBfxjSEJ1YSS131b2y_Xb6pIJLd
3 weeks 6 days ago
அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்தது ஹமாஸ்! - இஸ்ரேல் இராணுவம் தகவல் 13 Oct, 2025 | 04:35 PM காசா போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினால் சிறைபிடிக்கப்பட்டிருந்த அனைத்து இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் - காசா போர் நிறுத்த ஒப்பந்தம் எகிப்தில் இன்று (13) கைச்சாத்திடப்படவுள்ளது. இந்நிலையில், போர் நிறுத்தத்தின் முதற்கட்ட நடவடிக்கையாக, ஹமாஸினால் இரண்டு ஆண்டுகளாக சிறைபிடிக்கப்பட்ட 20 இஸ்ரேலிய பிணைக் கைதிகளும் இன்று விடுவிக்கப்பட்டுவிட்ட செய்தி, அவர்களது குடும்பத்தினரையும் இஸ்ரேல் மக்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விடுவிக்கப்பட்ட இஸ்ரேலியர்களுக்கு வழிநெடுகிலும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காசா போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டதையடுத்து, இன்று முன்னதாக 7 பிணைக்கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இஸ்ரேலுக்கு சென்றார். அடுத்து, எகிப்து நாட்டுக்குச் சென்று அங்கு, போர்நிறுத்த இறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் நிகழ்வில் கலந்துகொள்வார். அத்துடன் எகிப்தில் நடைபெறவுள்ள காசா அமைதிக்கான உச்சி மாநாட்டிலும் ட்ரம்ப் பங்கேற்கவுள்ளார். இதற்கிடையில் இஸ்ரேலிய பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்ட அறிவிப்பு இஸ்ரேலிய மக்களை பெரும் ஆரவாரப்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/227627
3 weeks 6 days ago
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 04:14 PM 2025 ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுமை சார்ந்த பொருளாதார வளர்ச்சியை விளக்கியதற்காக பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ஜோயல் மோகிர், பிலிப் அகியோன் மற்றும் பீட்டர் ஹோவிட் ஆகியோருக்கு கூட்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முன்னேற்றத்தின் மூலம் நீடித்த வளர்ச்சிக்கான முன்நிபந்தனைகளை அடையாளம் கண்டதற்காக ஜோயல் மோகிருக்கும், படைப்பு அழிவின் மூலம் நீடித்த வளர்ச்சியின் கோட்பாட்டிற்காக (The theory of sustained growth through creative destruction) அகியோன் மற்றும் ஹோவிட்டுக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/227624
3 weeks 6 days ago
பெண்களின் உரிமைகள், சமத்துவத்திற்கான எமது கூட்டு உறுதிப்பாட்டை நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம் - பிரதமர் Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 12:28 PM பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம் மற்றும் கௌரவம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளைச் செயல்பாட்டு ரீதியாகக் கடைப்பிடிப்பதற்குமான தனது உறுதிப்பாட்டை இலங்கை மீண்டும் வலியுறுத்துவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அமைந்துள்ள சீன தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) இன்று திங்கட்கிழமை (13) நடைபெற்ற உலகத் தலைவர்களின் பெண்கள் பற்றிய மாநாடு 2025 இன் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டபோதே பிரதமர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். தேசிய மாநாட்டு மையத்திற்கு வருகை தந்த பிரதமரை, சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் (Xi Jinping) மற்றும் ஜனாதிபதியின் பாரியார் திருமதி. பெங் லியுவான் (Peng Liyuan) ஆகியோர் வரவேற்றனர். ஜனாதிபதி ஷீ ஜின்பிங் அவர்களின் வரவேற்புரையை அடுத்து, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் உரை உட்பட, அரச மற்றும் அரசாங்கத் தலைவர்கள் தமது உரைகளை முன்வைத்தனர். மன்றத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய பிரதமர், 1995 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற பெண்கள் பற்றிய உலக மாநாட்டினதும், பாலின சமத்துவத்திற்கான ஒரு விரிவான கட்டமைப்பாகிய பீஜிங் செயல்பாட்டுத் தளத்தினதும் மரபை நினைவுகூர்ந்ததோடு, கடந்த மூன்று தசாப்தங்களில் அடையப்பட்ட முன்னேற்றங்கள் பற்றியும் குறிப்பிட்டார். குறிப்பாக, பெண் எழுத்தறிவு அதிகரிப்பு, தாய்மாரின் இறப்பு வீதம் கிட்டத்தட்டப் பாதியாகக் குறைந்திருப்பது, மற்றும் ஆயுட்கால அதிகரிப்பு (1995 இல் 69 வயதாக இருந்த ஆயுட்காலம் 2023 இல் 76 வயது வரை அதிகரித்திருக்கின்றது) ஆகியவற்றை சுட்டிக்காட்டினார்.அதே நேரத்தில், தொடர்ந்தும் காணப்படுகின்ற இடைவெளிகள் குறித்தும் அவர் கவனத்தைச் செலுத்தினார். ஆண்களுடன் ஒப்பிடுகையில் குறைவான தொழிலாளர் பங்கேற்பு (48.7% - 73%). அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் குறைந்த பிரதிநிதித்துவம் (பட்டதாரிகளில் சுமார் 35%). பெண்களை விகிதாசார ரீதியில் அதிகமாகப் பாதிக்கும் தொடர்ச்சியான உணவுப் பாதுகாப்பின்மை (ஆண்களை விட 47.8 மில்லியன் அதிகமான பெண்கள் மிதமான அல்லது கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொள்கின்றனர்). மற்றும் அரசியல் சமத்துவத்தை நோக்கிய மெதுவான முன்னேற்றம் ஆகிய குறைபாடுகளை அவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு, பெண்களின் ஒட்டுமொத்த அபிவிருத்தி என்பது கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், அரசியல், சமூகம் மற்றும் கலாசாரம் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான செயல்முறையாகும், ஆகையினால் இதற்கு நமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவைப்படுகிறது எனப் பிரதமர் தெரிவித்தார். தலைமைத்துவம் மற்றும் தீர்மானங்களை இயற்றுதலில் பெண்களின் பங்கேற்பை அதிகரித்தல், ஒவ்வொரு மட்டத்திலும் அர்த்தமுள்ள பிரதிநிதித்துவத்தை உறுதி செய்தல், CEDAW (பெண்களுக்கு எதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் நீக்குவதற்கான மாநாடு) மற்றும் UNSCR 1325 (ஐ.நா. பாதுகாப்புச் சபைத் தீர்மானம் 1325) இணங்க பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளித்தல் குறித்த தேசியக் கொள்கை மற்றும் பெண்கள், அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்த தேசியச் செயல் திட்டத்தை (2023–2027) செயல்படுத்துதல் உள்ளிட்ட இலங்கையின் தேசிய உறுதிப்பாடுகளைப் பிரதமர் வலியுறுத்தினார். மேலும், உழைக்கும் வர்க்கம் மற்றும் விளிம்புநிலைச் சமூகங்கள் உட்பட, பல்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட பெண்கள் அனைத்துத் துறைகளிலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதில் இலங்கையின் உறுதிப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார். ஆரம்ப விழாவை அடுத்து, ஜனாதிபதி ஷி ஜின்பிங் (Xi Jinping) மற்றும் முதல் பெண்மணி பெங் லியுவான் (Peng Liyuan) ஆகியோர் தேசிய மாநாட்டு மையத்தில் (CNCC) ஏற்பாடு செய்திருந்த உத்தியோகபூர்வ விருந்துபசரிப்பில் பிரதமர் கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/227598
3 weeks 6 days ago
13 Oct, 2025 | 11:57 AM இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது. நிதி மோசடிகள் குறித்து கிடைக்கபெறும் பெரும்பாலான முறைப்பாடுகள் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் அதிக இலாபம் கிடைக்கும் எனக் கூறி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் என கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்தார். இந்த நிதி மோசடிகள் மூலம் 10 இலட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரையில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த முறைப்பாடுகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும், இவ்வகையான இணைய நிதி மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேசிய அடையாள அட்டை விபரங்கள், வங்கி விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227594
3 weeks 6 days ago
13 Oct, 2025 | 11:57 AM

இணையத்தில் வேகமாக அதிகரித்து வரும் நிதி மோசடி நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிதி மோசடிகள் குறித்து கிடைக்கபெறும் பெரும்பாலான முறைப்பாடுகள் வெளிநாட்டு பங்குச் சந்தைகளில் அதிக இலாபம் கிடைக்கும் எனக் கூறி மக்களை ஏமாற்றும் நிதி மோசடிகள் என கணினி அவசர தயார்நிலை குழுவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியாளர் சாருக்க தமுனுபொல தெரிவித்தார்.
இந்த நிதி மோசடிகள் மூலம் 10 இலட்சம் முதல் 3 கோடி ரூபாய் வரையில் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த முறைப்பாடுகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும், இவ்வகையான இணைய நிதி மோசடிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேசிய அடையாள அட்டை விபரங்கள், வங்கி விவரங்கள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை இணையத்தில் பகிர்வதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://www.virakesari.lk/article/227594
3 weeks 6 days ago
'நாங்கள் ஓடவில்லை': ஆதவ் அர்ஜூனா பேச்சும் உச்ச நீதிமன்ற உத்தரவு பற்றிய திமுக எம்.பி. விளக்கமும் பட மூலாதாரம், X/aadhavarjuna & P.Wilson படக்குறிப்பு, ஆதவ் அர்ஜூனா மற்றும் வில்சன் (வலது) 13 அக்டோபர் 2025, 08:24 GMT புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்களுக்கு முன்னர் கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான மூவர் குழு சிபிஐ விசாரணையை மேற்பார்வையிடும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தவெகவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், "வலி மிகுந்த நாட்களை கடந்து வருகிறோம், எங்களுக்கு நெருக்கடியான காலகட்டம் இது. எங்கள் உறவுகள், எங்கள் குடும்பம் துக்கத்தில் உள்ளது. தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்த போது, ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் எழுச்சி இருந்தது. கரூரில் நடைபெற்றது முதல் கூட்டம் கிடையாது. திருச்சி, நாகப்பட்டினம், அரியலூர் என பல மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். எனவே கரூரில் அன்று என்ன நடந்தது என்ற உண்மையை பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். நாங்கள் பிரசாரங்களுக்கு செல்லும் போது காவல்துறை பெரிதாக உதவி செய்வதில்லை. அரியலூரில் உதவி செய்தனர், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சில தகவல்களை கொடுத்து உதவினார். அதனால் அந்தக் கூட்டத்தை ரத்து செய்தோம். ஆனால் அன்றைய தினம் நாமக்கல்லில் கூட்டத்தை முடித்து விட்டு, கரூரில் உள்ளே நுழையும் போது கரூர் காவல்துறை எங்களை வரவேற்றார்கள், திட்டமிட்ட இடத்தில் கொண்டு போய் நின்று பேசுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் நிறுத்திய இடத்தில் தான் பேசினோம்." என்றார். "விஜய் தாமதமாக வரவில்லை" மேலும் பேசிய ஆதவ் அர்ஜூனா, "எங்கள் தலைவர் (விஜய்) தாமதமாக வந்தார் என்று வதந்திகள் பரப்பப்பட்டன. கரூரில் காவல்துறை வழங்கிய நேரம் மதியம் 3 மணி முதல் இரவு -10மணி வரை. அந்த நேரத்துக்குள் அங்கு வந்துவிட்டோம். தவறுகள் இருந்தால் கரூர் காவல்துறை ஏன் மாவட்ட எல்லையில் வரவேற்றது? கூட்டத்தில் தண்ணீர் கேட்ட போது விஜய் தண்ணீர் கொடுத்தார். ஆம்புலன்ஸ் வழி விட வேண்டும் என்ற போது அதற்கும் வழிவிட்டார். இந்த இடத்தை எந்த அளவுக்கு கட்டாயப்படுத்தி கொடுத்தார்கள் என்ற ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்போம்." என்று கூறினார். " நாங்கள் ஓடவில்லை" தமிழக அரசின் விசாரணை மீதும் நம்பிக்கை இல்லை என்று கூறிய ஆதவ் அர்ஜூனா, " சம்பவம் நடந்த உடன் நாங்கள் ஓடி விட்டோம் என்று கூறுவது உண்மையல்ல. கரூர் எல்லையில், நான், நிர்மல் குமார், அருண் ராஜ், ஆனந்த் ஆகியோர் காத்திருந்தோம். எங்கள் மொபைல் நெட்வொர்க் – தரவுகளை சரி பார்த்து அதை தெரிந்துக் கொள்ளலாம். காவல்துறையினர் எங்களை வரவேண்டாம், வந்தால் கலவரம் ஏற்படும், பிரச்னை உருவாகும் என்று கூறினார்கள். அதையும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்போம். திட்டமிட்டு, தவெக வரக்கூடாது என்று ஒட்டுமொத்த மாவட்டச் செயலாளர்கள் மீது தீவிரவாதிகள் போல தடியடி நடத்தினார்கள். இறப்பு ஏற்பட்ட மூன்று -நான்கு நாட்கள் என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்கள் முதலில் மனிதர்கள். பிறகு தான் அரசியல்வாதிகள். எங்கள் வீட்டில் யாராவது இறந்து போனால் உடனே ஊடகங்களுக்கு வந்து பேட்டி அளிக்க முடியுமா? கடந்த மாதம் 27-ம் தேதி முதல் அடுத்த ஞாயிறு வரை விடுமுறை, எனவே நீதிமன்றம் செல்ல முடியவில்லை. சமூக ஊடகங்களில் உண்மை பேசிய நபர்களை கைது செய்தார்கள். நீதிமன்றம் செல்ல முடியாத ஒரு வாரத்தில் திமுக தவெக மீது எப்படி குற்றம் சுமத்தி, பொய் பரப்பினார்கள் என்று எல்லாருக்கும் தெரியும்" என்றார். பட மூலாதாரம், Getty Images "அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை நடைபெறும் போதே அரசு விளக்கம் ஏன்? " ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு, அரசு உயர் அதிகாரிகள், அரசு செயலர்கள் அரசு தவறு செய்யவில்லை என்று எப்படி சொல்வார்கள் என கேள்வி எழுப்பினார் ஆதவ் அர்ஜுனா. "ஒரு விசாரணை நடைபெறும் போது எப்படி அரசு இதை செய்ய முடியும்." என்றார். மேலும், "சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கூட்ட நெறிமுறைகள் குறித்து வழக்கு நடக்கும் போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சிறப்பு விசாரணை குழுவை அமைக்கிறார். அந்த விசாரணை வெளிப்படையாக நடைபெறுமா என்று தெரியாது. ஏனென்றால் உயர்நீதிமன்ற நீதிபதி, கடுமையாக கருத்துகளை, தவெக தான் தவறு செய்தது மாதிரி கருத்துகளை பதிவு செய்தார். தவெகவுக்கு எதிராக கடுமையான வார்த்தைகள், தலைவரின் தலைமை பண்பு, அரசியல் வருகை குறித்து எல்லாம் பேசப்பட்டது. என்ன கோபம் உங்களுக்கு?" என்று அவர் தெரிவித்தார். "சிபிஐ விசாரணைக்கு ஏன் கொண்டாடுகிறார்கள்? " - திமுக படக்குறிப்பு, திமுக வழக்கறிஞர் வில்சன். இந்த வழக்கு தொடர்பாக மூத்த வழக்கறிஞரும் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். "தவெக சிபிஐ விசாரணை கேட்கவேயில்லை, பிறகு ஏன் நீதிமன்ற உத்தரவு தங்களுக்கு கிடைத்த வெற்றியை போல் பேசுகிறார்கள்" என்று அவர் கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில், " இது இடைக்காலத் தீர்ப்பு. இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தவெக என்ன செய்தது என்றால் ஒன்றும் இல்லை. வாய்க்கு வந்த படி பேசுகிறார் ஆதவ் அர்ஜுனா. அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை தொடரும். சிறப்பு புலனாய்வு குழு இதுவரை நடத்திய விசாரணை அறிக்கையை ஒப்படைக்க சொல்லியிருக்கிறார்கள். அப்படி என்றால் இதுவரை நடந்தது சரியே. " என்றார். சிபிஐ விசாரணை கோரிய இரண்டு மனுதாரர்கள் தங்களுக்கு தெரியாமல் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தது குறித்து கேட்ட போது, " தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட இரண்டு பேர் வீடியோ கால் மூலம் நீதிமன்றத்தில் பேசினார்கள். அவர்களை மனு அளிக்க சொல்லியிருக்கிறது நீதிமன்றம். மோசடியாக ஒரு தீர்ப்பைப் பெற்றால், நீதிமன்றம் அந்த தீர்ப்பை ரத்து செய்யும். இன்று கொண்டாடுகிறார்கள், அவர்களுக்கு தெரியட்டும், புரியட்டும் இதுபோன்ற பிரச்னை உள்ளது என்று. இது இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது. " என்றார். வீடியோ கால் மூலம் வழக்கில் ஷர்மிளா, செல்வராஜ் ஆஜர் கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக் கோரி, உச்சநீதிமன்றத்தில் தங்கள் பெயரில் தங்களுக்கு தெரியாமல் மனு கொடுக்கப்பட்டதாக ஷர்மிளா மற்றும் செல்வராஜ் ஆகியோர் இன்று கூறியிருந்தனர். அவர்கள் இந்த விவகாரம் குறித்து கரூர் சட்ட உதவி மையத்தை நாடியதாகவும், எனவே சட்ட உதவி மையத்தின் மூலம் வழக்கறிஞரின் அலுவலகத்தில் இருந்து இன்று இந்த வழக்கில் வீடியோ கால் மூலம் உச்சநீதிமன்றத்தில் தங்கள் கருத்துகளை அவர்கள் தெரிவித்தனர் என்று சட்ட உதவி மையத்தைச் சேர்ந்த தமிழ்முரசு செய்தியாளர்களிடம் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgyw59nxzro
3 weeks 6 days ago
காசா போர் நிறுத்தம் : 7 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ் - இஸ்ரேல் மக்கள் மகிழ்ச்சி! Published By: Digital Desk 3 13 Oct, 2025 | 12:29 PM காசா மீது கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேல் மேற்கொண்டுவந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இலட்சக்கணக்கானோர் காயமடைந்துள்ளதுடன், மக்கள் பஞ்சம் மற்றும் பட்டினியிலும் சிக்கித் தவிக்கின்றனர். இந்தச் சூழலில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த முயற்சியின் பலனாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, அமைதிக்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக ஜனாதிபதி டிரம்ப் இஸ்ரேலுக்குப் புறப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்பிடம் சுமார் 20 பிணைக் கைதிகள் உயிருடன் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்களில், 7 பிணைக் கைதிகளை போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஹமாஸ் அமைப்பு திங்கட்கிழமை (13) விடுவித்துள்ளது. இந்தப் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்ட தகவல் இஸ்ரேல் தொலைக்காட்சிகளில் வெளியானதும், அவர்களின் குடும்பத்தினரும் நண்பர்களும் மிகுந்த மகிழ்ச்சியில் கூச்சலிட்டனர். இந்தக் பிணைக்கைதிகள் பரிமாற்ற நிகழ்வு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் ஒரு பெரிய நிகழ்ச்சியாக நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்வை பொதுவெளியில் அமைக்கப்பட்ட திரைகளில் ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/227597
3 weeks 6 days ago
'கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணை' - உச்ச நீதிமன்ற உத்தரவு முழு விவரம் பட மூலாதாரம், Getty Images 13 அக்டோபர் 2025, 05:29 GMT புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) உத்தரவிட்டுள்ளது. "இந்தப் பிரச்னைகள் குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கின்றன. தேசத்தின் மனசாட்சியை உலுக்கிய இந்த சம்பவம் நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணைக்கு தகுதியானது. எனவே, இடைக்கால நடவடிக்கையாக விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டியது அவசியம்." என்று நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி மற்றும் நீதிபதி என்.வி.அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்தது. 3 பேர் அடங்கிய குழு கண்காணிக்கும் சிபிஐ விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் அமைத்துள்ளது ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஸ்தோகி, மற்றும் காவல்துறையில் ஐ.ஜி. பதவிக்குக் குறையாத, தமிழகப் பிரிவைச் சேர்ந்த, ஆனால் தமிழ்நாட்டைச் பூர்வீகமாகக் கொண்டிராத இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். சிபிஐ விசாரணையை இந்தக் குழு கண்காணிக்கும். சிபிஐக்கு முறையான வழிகாட்டுதல்களை வழங்கவும், சிபிஐ சேகரித்த ஆதாரங்களை மறுபரிசீலனை செய்யவும் அதற்கு சுதந்திரம் உள்ளது. விசாரணையின் முன்னேற்றம் குறித்து சிபிஐ அதிகாரிகள் மாதாந்திர அறிக்கைகளை இந்த மேற்பார்வைக் குழுவிடம் சமர்ப்பிப்பார்கள். பட மூலாதாரம், Getty Images சென்னை உயர் நீதிமன்ற செயல்பாட்டில் உச்ச நீதிமன்றம் அதிருப்தி அரசியல் பேரணிகளுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை மட்டுமே கோரும் மனுவில், தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளின் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து உத்தரவு பிறப்பித்ததற்காக சென்னை உயர் நீதிமன்றத்தை உச்ச நீதிமன்றம் விமர்சித்துள்ளது. பேரணிகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க கோரும் ரிட் மனு, குற்றவியல் ரிட் மனுவாக எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் உச்ச நீதிமன்றம் அறிக்கை கோரியுள்ளது. வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க கோரும் மேற்படி மனுவை வேறு அமர்வுக்கு மாற்றுமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வின் அதிகார வரம்பிற்குள் வரும் கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதியின் எந்த குறிப்பிட்ட அங்கீகாரமும் இல்லாமல், சென்னை உயர் நீதிமன்றம் (சென்னை அமர்வு) ஏற்றுக்கொண்டிருக்க முடியாது என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. சென்னை அமர்வு அந்த ரிட் மனுவை தள்ளுபடி செய்திருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. தமிழக அரசுக்கு 8 வாரம் அவகாசம் தவெக மற்றும் பிற தரப்பினர் தாக்கல் செய்த மனுவில் நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி மற்றும் நீதிபதி என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு, சிபிஐ விசாரணை கோரும் இரண்டு மனுக்களிலும் மனுதாரர்கள் தங்களுக்குத் தெரியாமல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக அரசு சார்பில் வாதாடிய ஏ.எம். சிங்வி மற்றும் பி. வில்சன் ஆகியோர் அமர்விடம் தெரிவித்தனர். இந்த விஷயத்தை பரிசீலிப்பதாக நீதிபதிகள் கூறினர். தமிழ்நாடு அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய எட்டு வார கால அவகாசத்தையும் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. மனுக்கள் விவரம் கரூர் கூட்ட நெரிசலை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் அக்டோபர் 3 ஆம் தேதி உத்தரவை எதிர்த்து தவெக சார்பில் அதன் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகளை மட்டுமே கொண்டு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை இந்த மனு எதிர்த்தது. தவெக மற்றும் விஜய் மீது உயர் நீதிமன்றம் தெரிவித்த பாதகமான கருத்துகளுக்கும் அந்த மனுவில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் ஒரு சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அக்கட்சி கோரியது. விசாரணையை சிபிஐக்கு மாற்ற மறுத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அக்டோபர் 3 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு மற்ற மனுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. பட மூலாதாரம், TVK IT Wing Official/X உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் விசாரணையின் போது, உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்த விதம் குறித்து வாய்மொழியாக உச்சநீதிமன்ற அமர்வு கேள்வி எழுப்பியது. அரசியல் பேரணிகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்க கோரிய மனுவில் சிறப்பு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதை உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. கரூர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையின் அதிகார வரம்பிற்குள் வரும்போது சென்னையில் உள்ள முதன்மை அமர்வு எவ்வாறு உத்தரவுகளை பிறப்பிக்க முடியும் என்றும் உச்ச நீதிமன்றம் கேட்டது. அதே இடத்தில் பாதை மிகவும் குறுகலானது என்று கூறி மற்றொரு கட்சியான அதிமுகவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தவெகவுக்கு பேரணி நடத்த அனுமதி வழங்கியது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 30-40 உடல்களின் பிரேத பரிசோதனை நள்ளிரவில் எப்படி செய்யப்பட்டது? அதிகாலை 4 மணிக்கு உடல்கள் தகனம் செய்யப்பட்டது ஏன்? என்பது குறித்தும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. கரூரில் நடந்தது என்ன? தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஒவ்வொரு வாரம் சனிக்கிழமையும் மாவட்ட வாரியாக பரப்புரை மேற்கொண்டு வந்தார். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி சனிக்கிழமை கரூர் வேலுசாமிபுரத்தில் இரவு சுமார் 7 மணியளவில் விஜய் பரப்புரை மேற்கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 11 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையம் விசாரித்து வருகிறது. மேலும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவும் விசாரித்து வந்தது. ('லைவ் லா' இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல்கள் இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ளன) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg43yk4ve0xo
3 weeks 6 days ago
இதில் எடப்பாடி மிஸ்ஸின். உண்மை. இது எமக்கு புரிவது போல் மக்களுக்கும் புரியும். திமுகவை இந்த விடயத்தில் விமர்சிக்காமல், விஜையை போட்டு தாக்கோ தாக்குவது எதிர்மறை விளைவையே நாதகவுக்கு கொடுக்கும். அதுவும் விகடன் சீமான் சபரீசனிடம் பெட்டி வாங்கி விட்டார் என விகடன் எழுதிய பின், இப்படி நடப்பது கிட்டதட்ட பெட்டி வாங்கியே உள்ளார் என்பதை சாதாரண மக்கள் மனதில் ஆழப்பதிக்கும். ஒரு ஈழதமிழனின் நியாயமான மனநிலை. ஆனால் இதன் பிரதியீடு பாஜக அமைசர்கள் உள்ள தமிழ் நாடு அரசு எனில் - அதை விட தமிழக மக்கள் நலனுக்கு திமுக ஆட்சி தொடர்வதே உசிதமானது.