3 weeks 3 days ago
சுவாரசியமான போட்டியை ஒருங்கிணைத்து நடாத்துவதற்கு உங்கள் நேரத்திற்கும், சக்திக்கும் நன்றி ஜி. நான் ஆரம்பத்தில் எனது நிலையை மேலே ஆரம்பித்து கீழே தேடினேன். இப்போது கீழே தொடங்கி மேலே பார்க்க ஆரம்பித்துள்ளேன். அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் தர வரிசையில் மேல்நிலை அணிகளை கீழ்நிலை அணிகள் வெற்றியடைவது நல்லதொரு விடயம்.
3 weeks 3 days ago
நானும்தான் அவுட் ஒப் சிலபசாக தெரிவு செய்யிறனான் ஆனால் அப்போது மட்டும் வழமை போல நிகழ்கிறதே! இன்று நடக்கவுள்ள விளையாட்டில் அயர்லாந்தினை சிம்பாவேக்கு எதிராக தெரிவு செய்துள்ளேன் என்பது தெரிகிறது முடிவு தெரிந்த ஒன்றுதான்.🤣 இந்த முறை என்னுடன் நீங்களும் மாட்டிக்கொண்டுவிட்டீர்கள்.🤣 அயர்லாந்தினை ரசோதரன் தெரிவு செய்துள்ளார்.🤣
3 weeks 3 days ago
அப்பாடா இப்பதான் நிம்மதியாய் இருக்கு . .....அங்கன இங்கன அலையத் தேவையில்லை . .......! 😂
3 weeks 3 days ago
சாகடித்துவிட்டு, சாகும்வரை சாகப்போகிறானுகள் சாத்தானின் சிந்தையாளர்.
3 weeks 3 days ago
3 weeks 3 days ago
ஸிம்பாப்வே நாளை வெல்வதன் மூலம் அடுத்த எட்டுக்குப் போய்விடும். அவுஸ்ரேலியா வீட்டை போய்விடும்.
3 weeks 3 days ago
நாளை செவ்வாய் 17 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 31) முதல் சுற்று குழு D:செவ்வாய் 17 பெப்: 5:30 AM, சென்னை, கனடா எதிர் நியூஸிலாந்து CAN எதிர் NZ அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் கனடா எல்லோருக்கும் முட்டைகள் பரிமாற வாய்ப்புள்ளதா? 32) முதல் சுற்று குழு B:செவ்வாய் 17 பெப்: 9:30 AM, பல்லேகல, அயர்லாந்து எதிர் ஸிம்பாப்வே IRE எதிர் ZIM 10 பேர் அயர்லாந்து அணி வெல்வதாகவும் 13 பேர் ஸிம்பாப்வே அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். அயர்லாந்து வசீ புலவர் நியூ பலன்ஸ் சுவி கோஷான் சே நியாயம் எப்போதும் தமிழன் ரசோதரன் பிரபா நந்தன் ஸிம்பாப்வே செம்பாட்டான் ஏராளன் சுவைப்பிரியன் அல்வாயன் ஈழப்பிரியன் வாத்தியார் கறுப்பி வாதவூரான் வீரப் பையன்26 கிருபன் அஹஸ்தியன் கந்தப்பு நிலாமதி இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 33) முதல் சுற்று குழு C:செவ்வாய் 17 பெப்: 1:30 PM, வாங்கெடே, ஸ்கொட்லாந்து எதிர் நேபாளம் SCOT எதிர் NEP 17 பேர் ஸ்கொட்லாந்து அணி வெல்வதாகவும் ஆறு பேர் மாத்திரம் நேபாளம் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நேபாளம் சுவைப்பிரியன் அல்வாயன் கறுப்பி கிருபன் கோஷான் சே கந்தப்பு இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்?
3 weeks 3 days ago
நான் வாதாவூரனுக்கு பயந்து நாயை அவிழ்த்து விட, சுவி அண்ணாஃ நாய்க்கு பிஸ்கெட்டை போட்டுட்டு, வீட்டுக்குள்ள பூந்திட்டார்😂 அதே 😂
3 weeks 3 days ago
உங்களின் பிளட் குரூப் A+ போல தெரியுதே.....................🤣.
3 weeks 3 days ago
அட..அவுசு தோற்றாலும் நான்..தான் இப்ப முதல்வராம் ...நன்றி கிருபன் ஜீ
3 weeks 3 days ago
🤣............ கேள்விகள் அவுட் ஆஃப் சிலபஸ் ஆக வந்த நேரங்களில், எனக்கு முடிவுகள் நல்லாவே வந்திருக்கின்றன. சிலபஸ்ஸுக்குள்ள கேள்விகள் வந்த போது மற்றவர்கள் பிய்ச்சு உதறியிருக்கின்றார்கள்...................... இன்றைக்கு இலங்கை விளையாடியது அவுட் ஆஃப் சிலபஸ் தானே................🤣.
3 weeks 3 days ago
கடைசி 77 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளையும் இழந்தார்கள். சுழளர்கள் நிகழ்த்திய ஜாலம் அது. பதுமும் குசாலும் எல்லாவற்றியும் இலகுவாக்கி விட்டார்கள்.
3 weeks 3 days ago
தமன்னா, சாரா அர்ஜூன் போகிறார்கள் என்பதால் அல்ல, வேலுமணி, பிரேமலதா போகிறார்கள் என்பதால்தான் பார்த்தேன்😂
3 weeks 3 days ago
இலங்கை பந்து வீச்சாளர்கள் சூழ்நிலையினை (Condition) சாதகமாக்கி சிறப்பாக பந்து வீசினார்கள், ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களும் சிறப்பாக எடுத்து சென்றார்கள், அவுஸ்ரேலியா 1-6 ஓவர்களில் சிறப்பாக செயற்பட்டார்கள் 7-14 இல் 5 விக்கெட்டினை கொடுத்திருந்தார்கள் ஆனாலும் 1-6 ஓவர்கள் போலவே இலங்கை அணியினை விட அதிக ஓட்டங்களில் இருந்தார்கள் 15 ஓவர்களுக்கு பின்னர் போட்டியினை இலகுவாக முடிக்க கூடியதாக இருப்பதற்கு காரணம் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த நிசங்க முக்கிய காரணம். இலங்கை அணி சுப்பர் 8 போவதற்கு தமது ஆடுகள சாதகம் ஒரு பங்களிப்பாக இருக்கும் ஆனால் அதன் பின்னர் இந்தியாவில் போட்டிகள் நடக்கின்றது. இலங்கை அணி சுப்பர் 8 உடன் வீடு திரும்பும் எனவே கருதுகிறேன்.
3 weeks 3 days ago
இலங்கை கொச் சனத் ஜயசூரியா ஒரு வருடத்துக்கு முதல் சொன்னவர் 2026 உலக கோப்பை வெல்வதே தங்கட லச்சியம் என்று அது நடக்குமா😍🙏.....................
3 weeks 3 days ago
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஐக்கிய அமீரகம் அணி, சொஹைப் கானின் அதிரடியான 68 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், அலிஷான் ஷரஃபுவின் நிதானமான 40 (31 பந்துகள்) ஓட்டங்களுடனும் 9 விக்கெட்டுகளை இழந்து 160 ஓட்டங்களைப் பெற்றது. அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஸட்ரானின் வேகமான 53 (41 பந்துகளில்) ஓட்டங்களுடனும், அஸ்மதுல்லா ஓமர்ஸாயின் ஆட்டமிழக்காத மின்னல் வேகத்தில் எடுத்த 40 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும், டர்விஷ் ரசூலியின் விரைவான 33 (23 பந்துகள்) ஓட்டங்களோடும் 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 162 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஐக்கிய அமீரகம் அணி வெல்லும் எனக் கணித்த @நிலாமதி அக்காவுக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுபெடுத்தாடிய இங்கிலாந்து அணி, வில் ஜக்ஸின் ஆட்டமிழக்காமல் மின்னல் வேகத்தில் எடுத்த 53 (22 பந்துகள்) ஓட்டங்களுடனும், டொம் பன்டனின் விரைவான 30 (21 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, பென் மனென்டியின் புயல்வேக 60 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும், கிரான்ட் ஸ்டூவர்ட்டின் வேகமான 45 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜஸ்டின் மொஸ்காவின் விரைவான 43 (34 பந்துகள்) ஓட்டங்களோடும் போராடியபோதும் இறுதி ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தமையால் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 178 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது. முடிவு: இங்கிலாந்து அணி 24 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி வெல்லும் எனக் கணித்த 21 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த இருவருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா அணி, ட்ரெவிஸ் ஹெட்டின் மின்னல்வேக 56 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் மிற்செல் மாஷின் புயல்வேக 54 (27 பந்துகள்) ஓட்டங்களுடனும் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றபோதும் சிறிலங்கா அணியின் பந்துவீச்சாளர்களின் இறுக்கமான பந்துவீச்சால் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 181 ஓட்டங்களையே பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி பதும் நிஸங்கவின் ஆட்டமிழக்காமல் மரண அடியுடன் எடுத்த 100 (52 பந்துகள்) ஓட்டங்களுடனும், குசல் மென்டிஸின் புயல்வேக 51 (38 பந்துகள்) ஓட்டங்களுடனும் 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 184 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: சிறிலங்கா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த ஐந்து பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: முதல்வர் @alvayan நாற்காலியைப் பலப்படுத்தி உட்கார்ந்திருக்கின்றார். சுமைதாங்கியாக @suvy ஐயா அமைந்துள்ளார்!
3 weeks 3 days ago
இவர்கள் கடற்றொழிலாளர்கள் இல்லை கடற்கொள்ளையர்கள். இவர்கள் செய்வது கடற்றொழில் அல்ல கடற்கொள்ளை. ஒர் இந்திய சார்பு பத்திரிகை இந்தியக் கடற்கொள்ளையை கடற்றொழிலாக எழுதுவதில் வியப்படைவதற்கு எதுவுமில்லை. ஏனென்றால் அவர்கள் அப்படித்தான்!
3 weeks 3 days ago
செய்திட்டாப் போச்சு. கூகிள் சீற்றில் எனக்குப் பரிச்சயம் இருக்கு. தனி மடலில் கதைக்கலாம்.
3 weeks 3 days ago
இல்லை அவர் ஒரு படித்த பல்கலை பட்டதாரி என நினைக்கிறேன், நிங்கள் கூறும் படிக்காத ஆள் அது நான் தான். 🤣
3 weeks 3 days ago
படிக்கல படிக்கல என்று சித்தி செய்கிற ஆள் எல்லோ. 🤣