Aggregator

எம்.பி.க்களின் ஓய்வூதியத்திற்கு ஆப்பு! இன்று அனல் பறக்கும் விவாதம்

3 weeks 2 days ago

எம்.பி.க்களின் ஓய்வூதியத்திற்கு ஆப்பு! இன்று அனல் பறக்கும் விவாதம்

Feb 17, 2026 - 07:35 AM

எம்.பி.க்களின் ஓய்வூதியத்திற்கு ஆப்பு! இன்று அனல் பறக்கும் விவாதம்

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று (17) பாராளுமன்றில் நடைபெறவுள்ளது.


இன்று முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை இதற்கான விவாதம் நடைபெறும் எனப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்துள்ளது.


பெப்ரவரி மாதத்தின் இரண்டாவது பாராளுமன்ற வாரம் இன்று முதல் எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.


சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில், முற்பகல் 11.30 மணி வரை பாராளுமன்ற அலுவல்கள் மற்றும் கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.


இன்றைய முக்கிய அலுவல்கள்:


பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதம்.


தேர்தல் சட்டங்களை மறுஆய்வு செய்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், அது தொடர்பான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்குமான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை அங்கீகாரத்திற்காகச் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmlpy6b7e0015356nrfo0o5bq

தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

3 weeks 2 days ago
அக்குரேகொட இரட்டைக் கொலையின் பின்னணி அம்பலம்! Feb 16, 2026 - 09:58 PM தலங்கம, அக்குரேகொடவில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவி படுகொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை எடுத்துச் சென்ற மற்றும் துப்பாக்கிதாரிகளுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த நவகமுவவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் இன்று (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டத்தரணியின் வாகனம் இருக்கும் இடம் குறித்த தகவல்களை வழங்கியதும் இந்தச் சகோதரர்களே எனப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் இன்று பிற்பகல் கொட்டாவையில் வைத்து காரில் பயணித்துக் கொண்டிருந்த போது இவர்களைக் கைது செய்தனர். நவகமுவவைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய நதுன் கவிஷ மற்றும் சனோஜ் கோகில ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கொலை சம்பவம் தொடர்பில் பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகளான தரிந்து மதுசங்க என்ற "டுடூ" மற்றும் "மோதர நிபுண" ஆகியோரின் ஐஸ் போதைப்பொருள் கடத்தலை இலங்கையில் முன்னெடுத்து வருபவர்கள் இவர்களே எனத் தெரியவந்துள்ளது. "சுத்தா ஐயாவின் வேலை ஒன்று உள்ளது, அதைச் செய்ய வேண்டும், 7 நாட்களுக்கு ஒரு வாகனத்தை வாடகைக்கு எடுங்கள்" என வெளிநாட்டில் உள்ள குற்றவாளிகள் இவர்களிடம் கூறியுள்ளனர். அதன்படி சகோதரர்கள் கொட்டாவையில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர். கொட்டிகாவத்தையில் முச்சக்கரவண்டியில் வந்த ஒருவரிடமிருந்து துப்பாக்கி அடங்கிய பொதியைப் பெற்று, சம்பவத்தன்று அக்குரேகொட சுப்பர் மார்க்கெட் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காருக்கு மாற்றியுள்ளனர். இக்கொலைத் திட்டம் குறித்து ஒரு வாரமாக இவர்கள் அறிந்திருந்தனர். சட்டத்தரணி தனது மனைவியை அலுவலகத்திலிருந்து அழைத்துக் கொண்டு தினமும் மாலை 4.30 - 5.00 மணியளவில் செல்வதை கண்காணித்துள்ளனர். சம்பவத்தன்று சுப்பர் மார்க்கெட் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணியின் கார் நிறுத்தப்பட்டுள்ள தகவலைத் துப்பாக்கிதாரிகளுக்கு வழங்கியதும் இவர்களே. இக்கொலைக்கு உதவியமைக்காகச் சகோதரர்களுக்குப் பணம் வழங்கப்படவில்லை, மாறாக ஐஸ் போதைப்பொருள் வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கிதாரிகளில் ஒருவர் சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு முன்பே பன்னிப்பிட்டிய ஹோட்டலுக்கு வந்துள்ளார். அவருக்குத் தேவையான ஐஸ் மற்றும் வசதிகளைச் சகோதரர்கள் செய்து கொடுத்துள்ளனர். மற்றையவர் சம்பவத்தன்று வந்துள்ளார். வாடகைக்கு எடுத்த காரை 7 நாட்களின் பின் மீண்டும் ஒப்படைக்கச் சென்ற போதே பொலிஸார் இவர்களைப் பின்தொடர்ந்து சென்று கைது செய்துள்ளனர். இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி (44) மற்றும் அவரது மனைவி டபிள்யூ.ஏ. நிசன்சலா (42) ஆகியோரின் இறுதிக்கிரியைகள் இன்று பிற்பகல் பிடிகல, கொடமுன குடும்ப மயானத்தில் சட்டத்தரணிகள் மற்றும் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. https://adaderanatamil.lk/news/cmlpdxq310010356nmaiy04yq

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

3 weeks 2 days ago
ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றில் இங்கிலாந்து Published By: Vishnu 16 Feb, 2026 | 10:41 PM (நெவில் அன்தனி) இத்தாலிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (16) நடைபெற்ற இத்தாலிக்கு எதிரான ஐசிசி ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் சிரமத்திற்கு மத்தியில் இங்கிலாந்து 3 விக்கெட்களால் வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் இக் குழுவிலிருந்து இரண்டாவது அணியாக சுப்பர் 8 சுற்றில் விளையாட இங்கிலாந்து தகுதிபெற்றது. மேற்கிந்தியத் தீவுகள் ஏற்கனவே சுப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியிருந்தது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 202 ஓட்டங்களைப் பெற்றது. 13 ஆவது ஓவரில் இங்கிலாந்தை 5 விக்கெட் இழப்புக்கு 105 ஓட்டங்களுக்கு இத்தாலி பந்துவீச்சாளர்கள் கட்டுப்படுத்தி இருந்தனர். ஆனால், வில் ஜெக்ஸ் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இங்கிலாந்துக்கு 200 ஓட்டங்களைக் கடக்க உதவினார். இதனிடையே சாம் கரனுடன் 6ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களை வில் ஜெக்ஸ் பகிர்ந்தார். வில் ஜெக்ஸ் 22 பந்துகளில் 3 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். அவரைவிட டொம் பென்டன் (30), பில் சோல்ட் (28), சாம் கரன் (25), ஜேக்கப் பெத்தெல் (23) ஆகியோர் 20க்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றனர். பந்துவீச்சில் க்ரிஷான் கலுகமகே 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்ரான்ட் ஸ்டுவர்ட் 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 203 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி 20 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இங்கிலாந்து சவால் விடுத்த இத்தாலி, 15ஆவது ஓவரில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின்னர் இத்தாலி 43 ஓட்டங்களுக்கு கடைசி 6 விக்கெட்களை இழந்தது. ஆரம்பத்தில் 4 ஓவர்கள் நிறைவில் இத்தாலி 3 விக்கெட்களை இழந்து 22 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது. ஆனால், ஜஸ்டின் மொஸ்கா (43), பென் மெனெட்டி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்துக்கு சவால் விடுத்தனர். ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிந்தன. பென் மெனெட்டி 25 பந்துகளில் 4 பவுண்டறிகள், 6 சிக்ஸ்களுடன் 60 ஓட்டங்களைக் குவித்தார். மத்திய வரிசையில் க்ரான்ட் ஸ்டுவர்ட் 23 பந்துகளில் 2 பவுண்டறிகள், 5 சிக்ஸ்களுடன் 43 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் ஜெமி ஓவர்ட்டன் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சாம் கரன் 22 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொவ்ரா ஆச்சர் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: வில் ஜெக்ஸ் https://www.virakesari.lk/article/238835

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 2 days ago
இன்று நடைபெறும் போட்டிகளில் நான் சிம்பாவே, நேபாளம் அணியை தெரிவு செய்திருந்தேன். ஆனால் தற்போதைய நிலையில் இது சரியான பதில்களா என்று ஒரு கேள்வி ஏற்படுகிறது. சிம்பாவேயின் இரண்டு வெற்றிகளுக்கும் முக்கிய காரணங்கள் சிம்பாவேயின் வேகப்பந்து விச்சாளர்கள் மூவர் . முசாரபாணி, இவான்ஸ் தலா 7, 6 விக்கெட்டுகளை இரு போட்டிகளில் பெற்று இருக்கிறார்கள். ஓமானுக்கு எதிராக 3 விக்கெட் எடுத்த Ngarava காயம் காரணமாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இவர் விளையாடவில்லை. சிம்பாவே விளையாடிய 2 போட்டிகளும் SSC, பிரேமதாசா மைதானங்களில் நடைபெற்றது. இன்று போட்டி நடைபெறும் pallekele மைதானம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்குமா?

தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்

3 weeks 2 days ago
EPRLF மெய்யில் செய்த கடற்கண்ணிவெடித் தாக்குதல்: 15/03/1986 கடற்கோட்டைக்கும் காரைநகர் கடற்படை முகாமிற்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதில் சிங்களக் கடற்படையின் வள்ளம் ஒன்று சிக்கி சிதறியதோடு 6 படையினரும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலின் பின்னர் சிங்களப் படைமுகாமிலிருந்து மேற்கொள்ளப்பட்ட எறிகணை வீச்சில் 5 வீடுகளும் பல தென்னை மற்றும் பனை மரங்களும் முறிந்து விழுந்தன. மேலும் ஊர்காவற்றுறை பழைய காவல்துறை நிலையத்திற்கு பின்னாலிருந்த தேவாலயம் உட்பட மொத்தம் 3 தேவாலயங்களும் சேதமாகின. இதே கடற்பரப்பில் தான் தமிழீழ வரலாற்றில் முதலாவது கடற்கண்ணிவெடித் தாக்குதலை புலிகள் பெப்ரவரி 7, 1986 அன்று மேற்கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதாரம்: உதயன்- 16/03/1986 TELO செய்த கடற்கண்ணிவெடித் தாக்குதல்: 07/04/1986 காரைநகர் கடற்கோட்டைக்கு அருகில் 5/4/86 அன்று இரவு பரீட்சாத்த முயற்சியாக மேற்கொள்ளப்பட்ட கடற்கண்ணிவெடித்தாக்குதலில் 40 படையினர் பயணம் செய்துகொண்டிருந்த பீரங்கிப் படகு ஒன்று சேதமானதாக ரெலோ அறிக்கையிட்டது. இதன் பின்னர் கடற்படை முகாமிலிருந்து மேற்கொள்ளப்பட்ட எறிகணைவீச்சில் பல கூரைகள் சேதமாகின. ஆதாரம்: உதயன்- 07/04/1986 அம்புட்டும்தான். முடிந்தது

தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்

3 weeks 2 days ago
இது ஒரு சிறிய இயக்கம்.ஆனால் திட்டத்தை செவ்வனே செய்யக் கூடியவர்கள் இருந்தார்கள். புலிகளுடன் பிரச்சினை இல்லை என்றபடியால் அந்த இயக்கத்தில் இருந்த பலரை புலிகள் உள்வாங்கினார்கள்.

தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்

3 weeks 2 days ago
காத்தடிக்குது, புயலடிக்குது, காரைநகரில ஈ .பி . யடிக்குது! போற வழியில புலியடிக்குது! வாற வழியில டெலோ அடிக்குது! கொழும்பு நகரில ஈரோஸ் அடிக்குது! சோத்துப் பார்சலை புளொட் அடிக்குது! த.ஈ.இ. எனக்கு பிடித்த விடையம் முதன்முதல் சக்கைலொறி தாக்குதலை வெற்றிகரமாக மேற்கொண்டதும் இவர்கள் தான். மொத்தம் இரண்டு தடவை மேற்கொண்டனராம். அதில் முதலாவது கிளிநொச்சியில் அது வெடித்துச் சிதறியது. இரண்டாவது கிளி. எரிபொருள் நிரப்பு நிலையம் மீது. எனினும் அது வெடிக்கவில்லையாம். இதன் பிறகு தான் புலிகள் முதன் முதல் 1986ம் ஆண்டு மேற்கொண்டனர். திலீப் என்ற போராளி த.ஈ.இ. போன்றே சக்கைலொறியை ஓட்டிச் சென்று விட்டு இறங்கி ஓடிவர அது போய் மோதி வெடித்தது. :

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 2 days ago
இந்த போட்டியினாடிப்படையில், இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் நாணய சுழற்சி முக்கியத்துவம் பெறும் என நீங்கள் கூறுவதனையே இந்த காணொளியிலும் கூறுகிறார்கள்.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 2 days ago
அதுதான் சுமந்திரன் கையில போய்டே 😂 (சுவி அண்ணாவை சொல்லவில்லை). நாய்க்கு பங்லாலாதேஷ் டி சேர்ட், பூனைக்கு ஆப்கானிஸ்தான் டி சேர்ட், நேபாளத்துக்கு? 😂

தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்

3 weeks 2 days ago
எனது நினைவில் இருப்பதன்படி. அப்போது எல்லா இயக்கக்ங்களும் ஏதோ ஒரு வகையில் இலங்கை படைகளை அடித்தன. டெலோ வன்னியில் புகையிரதத்தில் வந்த ஆமி மீது, டீ - இந்த படகுகள் மீது, புலிகள் - கொக்கிளாய் முகாம் உட்பட பல, ஈபி கூட காரைநகர் தளத்தை ஒரு பெளர்ணமி நிலவில், ஊருக்கே சொல்லி (நேவிக்கும் தகவல் போயிருக்கும்) அடித்து அது தோல்வியானது( இதில்தான் முதல் தமிழ் பெண் போராளி பலியானார்). ஆனால் புளொட் மட்டும் எந்த தாக்குதலும் செய்யவில்லை (கோட்டையை சுற்றிய காவலரணில் ஒரு பகுதியை பாதுகாத்தது, ஆமி வெளி வந்தால் சங்கு ஊதுவது என சிலதை புளொட் செய்தது). மாறாக தவறாமல் மக்களிடம் சோத்து பார்சல் வாங்கியது புளொட். அதனால்தான்… காத்தடிக்குது… புயலடிக்குது…. காரைநகரில ஈபி அடிக்குது… டி அடிக்குது,…. டைகர் அடிக்குது… டெலோ அடிக்குது…. சோத்து பார்சலை புளொட் அடிக்குது😂

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 3 days ago
நான் அவுஸ் கப்பைத் தூக்கும் என்று கணிச்சன் இப்படிப் பெரிய ஈப்பா சொருகிட்டாங்களே.இனி என்க்கும் சுவியருக்கும்தான் போட்டி .

தமிழ் ஈழ இராணுவம் (TEA) ஆல் மூழ்கடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினரின் கடற்கலங்கள்

3 weeks 3 days ago
ஒரு கருத்து: "காத்தடிக்குது, புயலடிக்குது காரைநகரில ஈ.பி. அடிக்குது"🤣 என்ற சிறுவர் பாடலிற்கு பொருத்தமாக 19/07/86 அன்று யாழ் கடலில் (விதப்பாக எவ்விடத்தில் என்று கூறவில்லை🥱, பெரும்பாலும் காரைநகரென ஊகிக்கின்றேன்) வைத்து சிங்களவரின் இரு சுற்றுக்காவல் படகுகளை அழித்தாகவும் அத்தாக்குதலில் 17 கடற்படையினர் கொல்லப்பட்டதாகவும் EPRLFன் சென்னையிலுள்ள அலுவலகத்திலிருந்து பி.பிசிக்கு செய்தி அறிக்கை அனுப்பப்பட்டது, 21/07/1986 அன்று. செய்தி வெளியானதும் இது தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது. என்றாலும் வழமையாக தம்தரப்பிற்கு இழப்புகள் ஏற்படும் போது மக்கள் மீது நடத்தும் தாக்குதல் போன்றவையெதுவும் அப்பரப்பில் 19/07 அன்று சிங்களப்படையால் நடைபெறவில்லை. மேலும் ஈ.பியும் விளக்கமாக தாக்குதல் தொடர்பான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. இத்தாக்குதல் நடைபெறுவதற்கு ஒருநாள் முன்னர் (18/07 அன்று) இதே போன்றே காரைநகர் கடற்பரப்பில் சுற்றுக்காவலில் வந்த சிங்களப் படையினர் மீது தாம் மேற்கொண்ட கணையெக்கி (Mortar) எறிகணைவீச்சில் "ஒரு படகு சேதமானதாகவும், பல கடற்படையினர் கொல்லப்பட்டிருக்கலாம்" என்றும் ஊகமான கருத்தில் உதயன் நாளேட்டிற்கு செய்தி அறிக்கையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஒரு பம்பலான தகவல் யாதெனில், இவ்வாறான அடுத்தடுத்த அறிக்கைகள் யாவும் காரைநகர் கடற்படைத்தளத்தின் இறங்குதுறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தெறுவேயம் (Cannon) பொருத்தப்பட்ட சிறிலங்கா கடற்படையின் அதிநவீன விசைப்படகொன்று அப்போதைய கடற்புலிகளின் கடற்கண்ணிவெடி தாக்குதலில் சிதறியது. இது நடந்தது சூலை 15ம் திகதி விடிசாமம் 3 மணி. தாக்குதலைத் தொடர்ந்து கடற்படையினர் சுற்றுப்புறமெங்கும் கணையெக்கி கொண்டு எறிகணைவீச்சு மேற்கொண்டனர். புலிகளின் இத்தாக்குதலின் பின்னர் தான் ஈ.பி. அடுத்தடுத்து (சூலை 18 மற்றும் 21இல்) இதுபோன்ற காத்தடித்த செய்திகளை காற்றில் விட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே இது போன்ற EPRLF இன் செய்தி அறிக்கைகள் காத்தடிப்பது போன்று உள்ளதால் - நம்ப கடினமாக இருப்பதால் - நான் இணைக்கவில்லை! இருப்பினும் எதிர்கால தலைமுறைகள் பிழையான வரலாற்றை அறியக்கூடாதென்பதால் இதனையும் பதிந்து உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளக்கிச் செல்கிறேன்.