Aggregator
76 வருடகால சாபத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் : மார்ச் 01 இல் வர்க்க அதிகாரத்தை நிலைநாட்டும் முன்னிலை சோசலிசக் கட்சியின் 4வது தேசிய மாநாடு கொழும்பில்
76 வருடகால சாபத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம் : மார்ச் 01 இல் வர்க்க அதிகாரத்தை நிலைநாட்டும் முன்னிலை சோசலிசக் கட்சியின் 4வது தேசிய மாநாடு கொழும்பில்
16 Feb, 2026 | 06:35 PM
![]()
(க.சிவலிங்கமூர்த்தி)
நாட்டின் 76 வருடகால சாபத்தை முடிவுக்குக் கொண்டுவந்து உழைக்கும் வர்க்கத்தின் கரங்களில் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கான தீர்க்கமான அரசியல் வேலைத்திட்டத்தை முன்வைத்து முன்னிலை சோசலிசக் கட்சியின் 4ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ளது.
இது தொடர்பான விசேட ஊடகவியலாளர் சந்திப்பு திங்கட்கிழமை (16) நுகேகொடையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரத்தினம் தற்போதைய அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் நாட்டின் அரசியல் நிலைவரம் குறித்து காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார்.
அவர் அங்கு மேலும் கூறுகையில்,
76 வருடங்களாக நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த இரு பிரதான அரசியல் கும்பல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே 2024 ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் மக்கள் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வந்தனர்.
2022 மக்களின் அரகலய போராட்டத்தின் நேரடி விளைவே இந்த மாற்றமாகும். எனினும் ஆட்சியில் அமர்ந்த புதிய அரசாங்கம் பழைய ஆட்சியாளர்களின் அதே 'நவதாராளவாத' பொருளாதாரப் பாதையிலேயே பயணிக்கிறது. மக்கள் மீது வரிச் சுமைகளை ஏற்றிவிட்டு பெரும் முதலாளிகளுக்கு வரிச் சலுகைகளை வழங்கி வருகின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்துள்ள அரசாங்கம் இலவசக் கல்வியையும் சுகாதாரத்தையும் இல்லாதொழிக்க முற்படுகிறது.
3000 கிராமப்புற பாடசாலைகளை மூடும் திட்டம் மற்றும் மருந்துத் தட்டுப்பாடு என்பன மக்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்துகின்றன. மறுபுறம் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப திருகோணமலை மற்றும் மன்னார் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை விற்பனை செய்ய அரசாங்கம் இரகசிய ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இது நாட்டின் இறையாண்மைக்கும் சக்திவள பாதுகாப்புக்கும் விடப்பட்ட சவாலாகும்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் தற்போது அதைவிடக் கொடிய அடக்குமுறைச் சட்டங்களை கொண்டு வர முயற்சிக்கின்றனர். மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை முடக்குவதே இவர்களின் நோக்கம். கல்வி சுகாதார உரிமைகள் பறிக்கப்படும் போது தொழிலாளர்களின் ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிஊழியர் சேமலாப நிதி ஆகிய நிதியங்கள் சூறையாடப்படும் போது மக்களுக்குப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.
எதிர்வரும் மார்ச் மாதம் 1ஆம் திகதி 'வர்க்கத்திற்கு அதிகாரம் - அதிகாரத்திற்கு கட்சி' எனும் தொனிப்பொருளில் எமது 4வது தேசிய மாநாடு நடைபெறவுள்ளது.
வெறும் ஆட்சி மாற்றங்கள் எமது மக்களுக்கு விடிவைத் தரவில்லை. இனிவரும் அரசியல் சூழல் என்பது உழைக்கும் வர்க்கத்திடம் அதிகாரம் கைம்மாறும் ஒரு தருணமாக அமைய வேண்டும்.
மலையக மக்கள், வடக்கு தமிழ் மக்கள் மற்றும் கிழக்கு முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்த அரசாங்கம் தவறிவிட்டது. மீண்டும் இனவாதம் தலைதூக்க இடமளிக்காது ஒரு பலமான இடதுசாரி மாற்றீட்டை எமது மாநாட்டின் மூலம் முன்வைப்போம்.
உலகளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் உக்ரைன் மற்றும் காசாவில் முன்னெடுக்கப்படும் மனிதாபிமானமற்ற போர்களுக்கு எதிராக ஒரு சர்வதேச இடதுசாரி இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும். எமது மாநாட்டில் சர்வதேச இடதுசாரிப் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.
எனவே இந்த மாற்றத்தை விரும்பும் தொழிலாளர்கள் மாணவர்கள் விவசாயிகள் மற்றும் அனைத்து இடதுசாரி சக்திகளையும் மார்ச் 1ஆம் திகதி சுகததாச உள்ளரங்கில் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கிறோம் என்றார்.
வடக்கு மாகாண பொதுச் சேவை வெற்றிடப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்
வடக்கு மாகாண பொதுச் சேவை வெற்றிடப் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் கோரல்
16 Feb, 2026 | 05:36 PM
![]()
வடக்கு மாகாண பொதுச் சேவையில் நிலவும் தொழில்நுட்பவியல் சார்ந்த பதவிகளுக்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைகளுக்காக விண்ணப்பங்கள் கோரப்படுவதாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஆ.சிறி தெரிவித்துள்ளார்.
கீழ்க்காணும் பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கே விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன:
மண் பரிசோதகர் – மாகாண தொழில்நுட்பவியல் சேவை தரம் III அல்லது பயிற்சித் தரம் (அறிவித்தல் இல: R/2026/04)
ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் – வடக்கு மாகாண தொழில்நுட்பவியல் சேவை தரம் III (அறிவித்தல் இல: R/2026/05)
வேலை மேற்பார்வையாளர் – வடக்கு மாகாண கட்டடங்கள் திணைக்களம் தரம் III (அறிவித்தல் இல: R/2026/06)
மேற்படி பதவிகளுக்கான போட்டிப் பரீட்சை மற்றும் விண்ணப்ப விபரங்கள் அடங்கிய முழுமையான தகவல்களை வடக்கு மாகாண சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.np.gov.lk இல் "Exam and Recruitment Advertisement" எனும் பகுதியில் பார்வையிட முடியும்.
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைவாகத் தமது விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து 2026.03.03க்கு முன்னர் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
நெடுந்தீவு மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துத் துயரம் நீங்கியது: கடற்படைப் படகு மூலம் கொண்டு செல்லப்பட்ட புதிய பஸ்!
நெடுந்தீவு மக்களின் நீண்டகாலப் போக்குவரத்துத் துயரம் நீங்கியது: கடற்படைப் படகு மூலம் கொண்டு செல்லப்பட்ட புதிய பஸ்!
Published By: Digital Desk 1
16 Feb, 2026 | 10:33 AM
![]()
நெடுந்தீவில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்பட, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, கடற்படையின் விசேட படகு மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நெடுந்தீவில் இதுவரை காலமும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஒரு பஸ் மாத்திரம் சேவையில் ஈடுபட்டிருந்ததாகவும், நீண்ட நாட்களாக குறித்த பஸ், பழுதடைந்த நிலையில், கடும் சிரமத்திற்கு மத்தியில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, கடந்த செப்டெம்பர் 18ஆம் திகதி போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு விசேட கூட்டத்தில், இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்;ளது.
இந்த விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் கூறியிருந்த நிலையில், சுமார் 05 மாதங்களின் பின்னர் புதிய பஸ், சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, இதுவரை காலமும் நெடுந்தீவில் சேவையில் ஈடுபடுத்தப்பட்ட பஸ், திருத்த வேலைகளுக்காக யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சியின் நீர் விநியோகத் திட்டத்தை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு - நீர் வழங்கல் அமைச்சர்
கிளிநொச்சியின் நீர் விநியோகத் திட்டத்தை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு - நீர் வழங்கல் அமைச்சர்
16 Feb, 2026 | 09:43 AM
![]()
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி, பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகளின் அடிப்படையில் குழாய் வழி நீர் விநியோக நடவடிக்கைகளை விரிவுப்படுத்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக வைத்திய கலாநிதி சுசில் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் நீர் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில் மாவட்டச் செயலகத்தில் நடத்திய கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தின் எதிர்கால பொருளாதார நலன்கருதி குறிப்பாக பரந்தன் பகுதியில் அமைக்கப்படவுள்ள முதலீட்டு ஊக்குவிப்பு வயத்தின் தேவை கருதியும், பொது மக்களுக்கான குடி நீர் தேவை அதிகரித்துச் செல்லும் நிலைமையினையும் ஆதாவது முக்கியமாக கண்டாவளை பிரதேச செயலக பிரிவிவில் அதிகரித்து வரும் சிறுநீரக பாதிப்புக்களை கருத்தில் எடுத்தும் கிளிநொச்சி மாவட்ட நீர் விநியோகத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனத் தெரிவித்தார்.
இதன் மூலம் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், கிராமங்களுக்கான குழாய்கள் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளப்பட்டு மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் அத்தோடு முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கும் நீர் விநியோகம் வழங்கப்பட்டு மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி சமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லண்டனில் தீவிரமாக பரவி வரும் தட்டம்மை ; 34 சிறுவர்கள் பாதிப்பு
லண்டனில் தீவிரமாக பரவி வரும் தட்டம்மை ; 34 சிறுவர்கள் பாதிப்பு
16 Feb, 2026 | 07:08 PM
![]()
வடக்கு லண்டனில் பல பாடசாலைகளில் தட்டம்மை நோய் வேகமாக பரவி வருவதாகவும் குறைந்தது 34 சிறுவர்கள் தட்டம்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நோய் காரணமாக ஐந்து சிறுவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி செலுத்தவில்லை என்றும் அங்குள்ள பொது மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடும் உடல் நல பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய இந்த தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் தங்கள் பிள்ளைகளுக்கு செலுத்தப்பட்டதை உறுதி செய்துகொள்ளுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
என்ஃபீல்ட் மற்றும் ஹாரிங்கியில் குறைந்தது 7 பாடசாலைகளில் தட்டம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் (2026) முதல் மாதத்தில் இங்கிலாந்து முழுவதும் 96 பேர் தட்டம்மையால் பாதிக்கப்பட்டதாகவும் இதில் மூன்றில் ஒரு பங்காக, என்ஃபீல்ட்டில் 34 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தட்டம்மையில் பாரிய தாக்கம் கொண்ட தொற்றானது பெரும்பாலும் பாடசாலைகள் மற்றும் பாலர் பாடசாலைகளில் கற்கும் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களையே அதிகமாக பாதிக்கிறது என இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 பேர் சிறையில்
மரண தண்டனை விதிக்கப்பட்ட 817 பேர் சிறையில்
Feb 16, 2026 - 05:12 PM
மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகள் 817 பேர் சிறைச்சாலையில் உள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டுக்கான முன்னேற்ற அறிக்கையின்படி, அந்த ஆண்டின் செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி வரை மரண தண்டனை விதிக்கப்பட்ட உள்நாட்டுக் கைதிகளின் எண்ணிக்கை 811 ஆகும். இதில் 792 ஆண்களும் 19 பெண்களும் அடங்குகின்றனர்.
மேலும், ஐந்து வெளிநாட்டுப் பிரஜைகளும், பயங்கரவாதக் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரும் சிறையிலிருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுள் தண்டனை விபரங்கள்:
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 311 பேர் தற்போது சிறையிலுள்ளனர்.
இவர்களில் 70 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவர்.
பயங்கரவாதக் குற்றங்கள் தொடர்பில் மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் காணித் தகராறு: ஒருவர் அடித்துக் கொலை
யாழ்ப்பாணத்தில் காணித் தகராறு: ஒருவர் அடித்துக் கொலை
யாழ்ப்பாணத்தில் காணித் தகராறு: ஒருவர் அடித்துக் கொலை
Feb 16, 2026 - 08:03 PM
யாழ்ப்பாணம், கோப்பாய் பகுதியில் நிலவிய நீண்டகால காணித் தகராறு காரணமாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களைக் கைது செய்யக் கோப்பாய் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
கோப்பாய் கல்வியியற் கல்லூரிக்கு அருகில் இன்று (16) இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், அப்பகுதியைச் சேர்ந்த செல்லத்துரை செல்வரஞ்சன் (59 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபருக்கும் மற்றுமொரு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணிப் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இன்று திங்கட்கிழமை இது தொடர்பாக ஏற்பட்ட தர்க்கம் முற்றி கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது மூவர் இணைந்து நடத்திய தாக்குதலில் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்துக் கோப்பாய் பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தாக்குதலை நடத்திய மூவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களைத் தேடி விசேட சுற்றிவளைப்புகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
"கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள்
இலங்கையர்களுக்கு இந்தி கற்பதற்கு இந்தியா உதவி!
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
"மூன்று கவிதைகள் / 24"
"மூன்று கவிதைகள் / 24"
"மூன்று கவிதைகள் / 24"
'ஏறு தழுவல்'
ஏறு தழுவல் தமிழன் விளையாட்டு
வீரம் கொண்ட காளை அடக்கி
அடங்கா எதிரிக்கும் அச்சம் கொடுப்பான்!
வியர்வையில் வீரம் ஒளிரும் போது
மண்ணின் மணம் மார்பில் உறையும்
தாயின் மரபு இரத்தத்தில் பேசும்!
கோபமல்ல—கட்டுப்பாடே அவன் பலம்
அடக்கமல்ல—அறிவே அவன் ஆயுதம்!
உயிரை மதித்து காளையை அணைப்பவன்
தமிழன்—வீரத்தின் மனித முகம்!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
................................................................
'கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா'
கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா
கலந்து பேசி முடிவு எடுக்கலாமா?
மனங்கள் இணைந்தால் அதுவே பொருத்தம்
மறந்து என்றும் விண்மீனைக் கேட்காதே?
நேரம் தீர்மானிக்குமா ஒருவரின் வாழ்வை
இதயம் சொன்னால் அதுவே போதும்!
அன்பு நிலைத்தால் நாள் இனிது
புரிதல் இருந்தால் தடைகள் இல்லை!
கண்கள் சந்தித்து உள்ளங்கள் இணைந்து
காதல் மலர்ந்தால் அதுவே திருமணம் !
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
..........................................................................
“ஆடல் காணீரோ”
சிந்துவெளி நாகரிகம் கண்ட இவன்
குந்து வைத்து மாடி எழுப்பினான்!
வெந்த மண்ணில் வடித்த பாவை
விந்தை விளைக்கும் ஆடல் காணீரோ!
அணங்கின் கைவழி நயனம் செல்க
அழகுக் கண்வழி மனமும் போக
அவள் மனம்வழி பாவம் சேர
அம்மண சிலையின் கூத்து அறிவீரோ!
கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்
துளி/DROP: 2039 ["மூன்று கவிதைகள் / 24"
https://www.facebook.com/groups/978753388866632/posts/33843158675332679/?