Aggregator

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 weeks 4 days ago
அது ஒரு நேரான வீதி அல்லைப்பிட்டியைத்தாண்டியிருந்தால் குறுக்குப்பாதைகளுக்குள் விட்டிருக்கலாம். ஆனால்அந்தப்பாதையில் அவர்களைப் பொலிசாருக்குத் சிரமமான வேலை இல்லை.பொலிசார் இந்த இடத்தில்எல்லைமீறி நடந்திருக்கிறார்கள். அவர்களைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதே பொலிசாரின் கடமை. மாறாக துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஒரு சிறுவனைக் கொன்று விட்டார்கள்.

என்ன ஆச்சு இவருக்கு? சீமானின் மர்ம அமைதி.. குழம்பிப்போன தம்பிகள்.. பதற்றத்தில் நாம் தமிழர்?

3 weeks 4 days ago
தெரியாது.சுட்டிக்காட்டியதற்கு நன்றி.நான் லிங்கை அழுத்தும் போது பதிவிட்டவரின் பெயர்தான் எனக்குத் தெரிகிறது.

புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!

3 weeks 4 days ago
கடைசியாக எந்த திகதி இயக்கத்தால் தரநிலை வழங்கப்பட்டது. மாவீரர் பணிமனை எப்போது கடைசியாக செயல்பட்டது போன்ற தகவல்களை அறிய முடியுமா என பாருங்கள். தளபதிகள் ரமேஸ், சொர்ணம், சூசை போன்றோரை கூட நாம் தரநிலை சொல்ல முடியுமா என்பதை இட்டு நான் பலவாறு சிந்திப்பதுண்டு. அவர்கள் அனைவரும் பிரிகேடியர் தரம் என்பதை மக்களும், வரலாறும் அறியும். ஆனால் - இதை அறிவிக்க தகுதியானோர் எவரும் 2009 மே 19 இன் பின் இப்பூவுலகில் இல்லை.

புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!

3 weeks 4 days ago
அது தெரியாது ஐயனே ... இல்லை.... அது சொந்த முடிவுகளை எடுக்குமாறு அறிவிக்கப்பட்ட திகதி ... இதன் திகதி எனக்கு தெரியாது ... ஆனால் 13 ம் திகதி எனக்கு தெரிந்த ஒருவர் வீரச்சாவடைந்தார்... ஒரு பொறுப்பாளர்.அவருக்கு கூட தரநிலை புலிகள் வழங்கவில்லை.

தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்!

3 weeks 4 days ago
நல்லாட்சி (?) அரசாங்கத்தில் காணாமலாக்கப்பட்டோர் நெருக்கடிகளை நீர்த்து போக செய்யும் நோக்கில் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்கள் காணாமல் போனோர் அலுவலகம் (OMP) ஒன்றை உருவாக்கினார் இவ்வாறு உருவாக்கப்பட்ட காணாமலாக்கப்பட்டோர் அலுவலகத்திற்கு (OMP) மேஜர் ஜெனரல் பதவி நிலைக்குரிய இராணுவ அதிகாரி உட்பட ஏழு ஆணையாளர்களை நியமித்தார்கள் அதாவது இராணுவத்தின் Legal Department யின் பணிப்பாளர் நாயகமாக கடைமையாற்றிய மேஜர் ஜெனரல் Mohanti Antonette Peiris என்பவர் குறித்த OMP அலுவலகத்தின் ஆணையாளராக நியமிக்கப்பட்டார் வடக்கு கிழக்கில் பெரும்தொகையாக அப்பாவி பொதுமக்கள் காணாமலாக்கப்பட்ட 2007-2010 காலப்பகுதியில் கோட்டாபய ராஜபக்சே அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராகவிருந்த மேஜர் ஜெனரல் Mohanti Antonette Peiris இராணுவத்தின் பிரதான சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டிருந்தார் இவ்வாறு கோட்டாபய ராஜபக்சவிற்கு விசுவாசமான மேஜர் ஜெனரல் Mohanti Antonette Peiris OMP ற்கு ஆணையாளராக நியமனம் செய்யப்பட்டதை சர்வதேச ரீதியாக International Truth and Justice Project (ITJP) உட்பட பலவேறு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் முழுமையாக நிராகரித்து கண்டனம் தெரிவித்தன ஆனால் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் மிக நெருங்கிய சகாவாகவிருந்த திரு சுமந்திரன் அவர்கள் அரச நிறுவனமான OMP இற்கு இராணுவ அதிகாரி நியமனம் செய்யப்பட்டதை ஆதரித்தார் ஜனாதிபதி சட்டத்தரணியான திரு சுமந்திரன் அவர்கள் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் இராணுவத்தால் விசாரிக்கப்பட்டதா, இல்லையென்றால் ஏன் விசாரிக்கப்படவில்லை, யார் அதை விசாரிக்க வேண்டாம் என்று உத்தரவிட்டார்கள் என்பது தொடர்பாக OMP இற்கு சாட்சியாளராக (Witness) மட்டுமே மேஜர் ஜெனரல் Mohanti Antonette Peiris வை அழைக்க வேண்டும் என வலியுறுத்தி அவரின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்க வேண்டும் ஆனால் மிக தெளிவாக OMP ஐயும் அரச அலுவலகமான OMP யில் இராணுவ அதிகாரி நியமனம் செய்யப்பட்டதையும் ஆதரித்தார் விசேடமாக OMP யால் கண்டுபிடிக்கப்படும் விடயங்கள் குற்றவியல் மற்றும் சிவில் சட்ட மீறல் சம்பந்தமான எவ்வித குற்றத்திற்கும் வழிவகுக்காத வகையில் உருவாக்கப்பட்ட போதிலும் இந்த அலுவலகம் நிறுவுவது தொடர்பான சட்டமூலத்தை பாதிக்கப்பட்டோரின் எந்தவிதமான ஆலோசனைகளுமின்றி திரு சுமந்திரன் ஆதரித்தார் இது போதாதென்று OMP ஐ ஆதரித்து... 'வேண்டும் வேண்டும் OMP வேண்டும்' என போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார் . குறித்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளை கூட சுமந்திரன் ஆட்கள் தாக்கினார்கள் இது மாத்திரமின்றி திரு சுமந்திரன் அவர்கள் திரு ரணில் விக்ரமசிங்கே அவர்களின் செல்லப்பிள்ளையாக அதிகாரத்தோடு இருந்த போது தான் செம்மணி புதைகுழி பிரதான சந்தேகநபர் பிரிகேடியர் லலித் ஹேவா உட்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது நாவற்குழியில் 24 க்கு மேற்பட்டவர்களை கடத்தி காணாமலாக்கிய மேஜர் ஜெனரல் துமிந்த கெப்பிட்டிவலன்ன அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது கொழும்பில் 11 தமிழ் இளைஞர்களை கடத்தி காணாமலாக்கிய முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவிற்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது யாழ்ப்பாண பல்கலை கழக துணைவேந்தர் காலம் சென்ற பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவின் தலையீட்டுடன் பதவி நீக்கம் செய்யப்பட்டார் யாழ்ப்பாண நீதிமன்ற வளாகத்திலேயே காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்த பொதுமக்களும் சட்டத்தரணிகளும் தாக்கப்பட்டார்கள் இது போன்ற எண்ணற்ற சந்தர்ப்பங்களில் அப்போது அதிகாரம்மிக்க நபராகவிருந்த திரு சுமந்திரன் அவர்கள் வாய் மூடி அமைதியாகவே இருந்து அத்தனை அத்துமீறல்களுக்கும் ஒத்துழைத்தார் ஆனால் அதே திரு சுமந்திரன் அவர்கள் தற்போது பதவி இழந்த நிலையில் இராணுவமயமாக்கல் பற்றி பேசுகின்றார் கொந்தளிக்கின்றார் உளறுகின்றார் அச்சுறுத்துகின்றார் இனமொன்றின் குரல்

தமிழரசுத் தீர்மானங்களை விமர்சித்தால் நடவடிக்கை; கட்சி உறுப்பினர்களுக்கு செயலாளர் அறிவுறுத்தல்!

3 weeks 4 days ago
முதலில் சுத்துமாத்து சுமந்திரன் மீதுதான், நடவடிக்கை எடுக்க வேண்டும். 1.சு*மந்திரனும் சம்பந்தனும் சிறீலங்காவின் சுதந்திர தினத்துக்கு போகவில்லையா? 2.சுதந்திர தினத்தை கரிநாளாக அறிவித்த தமிழர்களை பார்த்து மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்றுசொல்லி கேலி கிண்டல் செய்யவில்லையா? 3.தமிழர்களை அழித்த இராணுவத்தின் வெற்றி விழாவிற்கு பொப்பி மலருடன் போகவில்லையா? 4.சம்பந்தனுடன் நின்று சிங்ககொடியை தூக்கி ஆட்டி காட்டவில்லையா? 5.சு*மந்திரன் தமிழ் மக்களை சந்திக்க வரும்போது Stf பாதுகாப்பு புடைசூழ வரவில்லையா? 6.தமிழரசு கட்சி தமிழர் மீது யுத்தம் செய்த பொன்சேகாவை ஆதரித்து வாக்கு கேட்கவில்லையா? 7.சு*மந்திரன் வடமாகாண முதலமைச்சராக இருந்த விக்னேஸ்வரனை செயற்படவிடாமல் செய்ய சீவிகே சயந்தன் போன்றவர்களை பயன்படுத்தி விக்னேஸ்வரனை முடக்கவில்லையா? 8.சு*மந்திரன் யுத்த குற்ற விசாரனையை நீர்த்து போக செய்யவில்லையா? சு*மந்திரன் இங்கு இனப்படுகொலை நடக்கவில்லை என்று சொல்லவில்லையா? 9.சு*மந்திரன் புலிகள் முஸ்லீம்களை இனச்சுத்தீகரிப்பு செய்தார்கள் என்றுசொல்லவில்லையா? 10.சு*மந்திரன் சிங்கள அரச தலைவர்களுடன் தேனீலவு கொண்டாடவில்லையா? 11.சு*மந்திரன் ஏக்கிய ராஜ்ஜியவை வைத்து அது சமஸ்டி தான் என்று சொல்ல வில்லையா? 12.சு*மந்திரன் கடந்த பொது தேர்தலில் தான் வெல்வதற்காக கட்சிக்காக செயல்பட்ட வாக்கு அதிகம் பெறக்கூடிய வேட்பாளர்களை தவிர்த்து தனது அடியாட்களை மட்டும் தேர்தலில் போட்டியிட வைக்கவில்லையா? 13.சு*மந்திரன் தனக்கு புலிகளின் போராட்டத்தில் உடன்பாடு இல்லை என்று சொல்லவில்லையா? 14.சு*மந்திரன் சிறீதரனுடன் சேர்ந்து தனக்கான வாக்குகளை சேகரிக்கவில்லையா? 15.தமிழரசு கட்சியின் தலைவராக உட்கட்சி தேர்தல் மூலம் வென்ற. சிறீதரனை சு*மந்திரன் தனது பினாமிகள் மூலம் சட்ட சாவாலுக்கு உட்படுத்தி முடக்கவில்லையா ? 16.கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற தமிழ் பொது வேட்பாள் அரியநேத்திரனை நிராகரித்து சஜித்திற்கு வாக்கு சேகரிக்கவில்லையா? 17.புலிகள் கூடாது ஆனால் புலிகளால் உருவாக்ப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பில் சு*மந்திரன் தேர்தல் கேட்டு வெல்லவில்லையா? 18.மகிந்தவின் கட்சியில் இருந்த மகிந்தவின் விசுவாசி சாணக்கியனை தமிழரசு கட்சியில் சேர்க்கவில்லையா? 19.வலுவாக இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பை தனது அரசியல் வெற்றிகளுக்காக உடைக்கவில்லையா சு*மந்திரன்? 20.தேர்தல்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு மீண்டும் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படாது என்று கூறிய சு*மந்திரன் கடந்த பாராளுமன்ற தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்காக தனது வெற்றியை உறுதிப்படுத்த தேர்தலில் தோற்றவர்களை தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கவில்லையா? 21.கடந்த பாராளுமன்ற தேர்ரலில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட சு*மந்திரன் தமிழரசு கட்சியின் தலைவர் தெரிவிலே தனது கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்ட சு*மந்திரன் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் ஆக போட்டியிட முயற்சிப்பது சரியானதா? 22.தமிழின விரோதியும் தமிழரை காட்டி கொடுத்து கடத்தி கப்பம் வாங்கி படுகொலை செய்த தீவுப்பகுதியில் வைத்து மாவை சேனாதிராஜா சிவாஜிலிங்கம் போன்றவர்களை அடித்து மண்டை உடைத்து காலை முறித்த ட*க்ளசிடம் மாநகர சபையில் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்கவில்லையா? 23.சு*மந்திரன் போலி முகநூல் கணக்கு வைத்து அவதூறு செய்யவில்லையா? 24.சு*மந்திரன் கம்பி வி*த்தியாதரனுக்கு பணம் கொடுத்து கா*லைக்கதிரில் தனது புகழ் பாடி எழுத சொல்ல வில்லையா? 25.சு*மந்திரன் தான் தனது சிறுவயதில் இருந்தே சிங்களவர்களுடன் வாழ்வதையிட்டு பெருமையாக நினைக்கிறேன் என்று சொல்லவில்லையா? 26.சு*மந்திரன் தனது பிள்ளைகளுக்கு சிங்களவர்களை திருமணம் செய்து வைக்கவில்லையா? 27.சு*மந்திரன் தமிழரசு கட்சியின் பிரதி பொதுச்செயளாளர் ஆக சுத்துமாத்து செய்து பின்கதவால் வந்தாரா இல்லையா? 28. சு*மந்திரன் கிளிநொச்சியில் தமிழரசு கட்சிக்கு எதிராக சிறீதரனுக்கு எதிராக வண்டில் சின்னத்தில் தனது ஆட்களை தேர்தல் கேட்க நிறுத்தவில்லையா. Roy Roy ##################################### எல்லாம் பதவி பறிபோனதால் வந்த சுடலை ஞானமோ அல்லது சந்தர்ப்பவாதமோ? எப்படி ரணில் காலத்தில்... ஸ்ரீலங்கா சுதந்திரதினத்தில் வேட்டி கட்டிக் கொண்டு ஜோடியாக போயிருந்து கொண்டு மக்களால் நிராகரிக்கபட்டவர்கள் கறுப்பு நாளாக அனுஸ்டிக்கிறார்கள் என்று கொச்சை படுத்தி விட்டு, பின்பு தேர்தலில் தோற்ற பின்... கறுப்பு நாளாக நாடகம் ஆடிய சுத்துமாத்து சுமந்திரன். Tharan Kulam ##################################### அதுமட்டுமா... இராணுவ தளபதி சரத்துக்கு வாக்களிக்கும்படி, தமிழ் மக்களிடம் பிரச்சாரம் செய்த ஒருவர் தான் சுமந்திரன். Allai Sri ##################################### மற்றவர்களை முட்டாகள் என, சுமி எண்ணிக் கொள்கின்றார் போலும்.. கடந்த 16 வருடங்களாக சிங்கள பௌத்த பேரினவாத அரச கட்டமைப்பை பாதுகாத்தே வந்துள்ளார். இன்று தான் சிறிதரனின் நடவடிக்கைதான் தான் சிங்கள தேசத்தின் இராணுவமயமாக்கம் என்பதை கண்டு கொண்டார். Tholar Velan

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 4 days ago
சந்திர சேகர் ஆட்சிக்கு, ரஜீவ் காந்தி கொடுத்த ஆதரவு போலவே எமது ஆதரவும். எப்ப கவுப்பம் எண்டு எமக்கே தெரியாது ஆனால் கவுப்பம்😂 Interest rate இருக்கிற நிலைல உவர் வாதாவூரருக்கு ஓசில வீடும் கேக்குதாம் 😂

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 weeks 4 days ago
சுட்டது பிழை. அல்லைப்பிட்டில் வாகனத்தை நள்ளிரவில் பொலிஸ் மறித்தபோது வாகனத்தை நிறுதமாமல் மண்டைதீவுப்பக்கம் வாகனத்தை திருப்பியது முதல் பிழை. மண்டைதீவு பொலிஸாருக்கு தகவல் அனுப்ப அங்கு மண்டை தீவு பொலிசால் வாகனத்தை நிறுத்த முயற்சிக்க, அங்கும் வாகனத்தை நிறுத்தாமல் வாகனத்தை அல்லைப்பிட்டிக்கு திருப்பியது முதலாவது பிழையை விட அடுத்த பெரிய பிழை. அதன் பின்னர் அல்லைப்பிட்டில் இருந்து துரத்திவந்த அல்லைப்பிட்டிப் பொலிசார் சுட்டிருக்கின்றனர். இரண்டு முறை பொலிசாருக்கு டிமிக்கி கொடுக்க டிமிக்கி கொடுக்க முயற்சித்தது பாரிய தவறு, அதுவும் நள்ளிரவு நேரத்தில். கூட இருந்தவர்களாவது சிறுவனுக்கு அறிவுரை கூறியிருக்கலாம்.

தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!

3 weeks 4 days ago
கொழும்பை அண்மித்த அக்குரேகொடவில் துப்பாக்கி சூடு இளம் தம்பதி உயிரழப்பு.. தலங்கம, அகுரேகொடவில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்பாக இன்று (13) பிற்பகல் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குறித்த சட்டத்தரணி கரன்தெனிய சுத்த என்ற குற்றவாளியின் நீதமன்ற வழக்குகளில் முன்னிலையானவர் என்பதும் பிக் பட்டி என்ற குற்றவாளிக்கு தனது வாடிக்கையாளரின் தகவலை வழங்கியதற்காக கரந்தெனிய சுத்தாவே கொலை செய்ததாக பாதுகாப்புத் துறை சந்தேகிக்கிறது. பிடிகலாவைச் சேர்ந்த மல்வாரச்சி என்ற சட்டத்தரணியும் அவரது மனைவியுமே கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது... Rks Arulmolithevan

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 4 days ago
நாளை ஞாயிறு 15 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 25) முதல் சுற்று குழு C:ஞாயிறு 15 பெப்: 5:30 AM, வாங்கெடே, நேபாளம் எதிர் மேற்கிந்தியத் தீவுகள் NEP எதிர் WI ஒரே ஒருவர் மாத்திரம் நேபாளம் அணி வெல்லும் எனவும் மற்றைய 22 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். நேபாளம் வாத்தியார் இப்போட்டியில் போட்டியில் @வாத்தியார் க்கு புள்ளிகள் எடுக்க யோகம் உள்ளதா? 26) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 9:30 AM, சென்னை, நமீபியா எதிர் ஐக்கிய அமெரிக்கா NAM எதிர் USA 13 பேர் நமீபியா அணி வெல்வதாகவும் 10 பேர் ஐக்கிய அமெரிக்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். நமீபியா ஏராளன் வசீ புலவர் ஈழப்பிரியன் நியூ பலன்ஸ் கறுப்பி வாதவூரான் கிருபன் கோஷான் சே அஹஸ்தியன் நியாயம் எப்போதும் தமிழன் நந்தன் ஐக்கிய அமெரிக்கா செம்பாட்டான் சுவைப்பிரியன் அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 சுவி கந்தப்பு ரசோதரன் பிரபா நிலாமதி இப்போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்? 27) முதல் சுற்று குழு A:ஞாயிறு 15 பெப்: 1:30 PM, கொழும்பு (RPS), இந்தியா எதிர் பாகிஸ்தான் IND எதிர் PAK 20 பேர் இந்தியா அணி வெல்வதாகவும் மூன்று பேர் மாத்திரம் பாகிஸ்தான் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். பாகிஸ்தான் புலவர் ஈழப்பிரியன் பிரபா இப்போட்டியில் எவர் புள்ளிகள் எடுப்பார்கள்?

ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்

3 weeks 4 days ago
நடப்பு ரி20 உலகக் கிண்ணத்தில் அதிகூடிய மொத்த எண்ணிக்கை குவித்த அயர்லாந்து இலகுவாக ஓமானை வீழ்த்தியது Published By: Vishnu 14 Feb, 2026 | 11:01 PM (நெவில் அன்தனி) ஓமானுக்கு எதிராக எஸ்.எஸ்.சி. மைதானத்தில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சாதனைமிகு மொத்த எண்ணிக்கையைக் குவித்த அயர்லாந்து 96 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 235 ஓட்டங்களைக் குவித்து நடப்பு உலகக் கிண்ணத்தில் அதிகூடிய மொத்த எண்ணிக்கைக்கான சாதனையை நிலைநாட்டியது. ஓமானுக்கு எதிராக இலங்கை பெற்ற 225 ஓட்டங்கள் என்ற சாதனையை அயர்லாந்து முறியடித்தே புதிய சாதனை நிலைநாட்டியது. அத்துடன் ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் அயர்லாந்து பெற்ற அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகவும் இது பதிவானது. அயர்லாந்து துடுப்பாட்டத்தில் அசத்திய லோக்கன் டக்கர் 51 பந்துகளில் 10 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் அடங்கலாக 94 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். டக்கர், கெரத் டிலேனி ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 101 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். இது ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் 5ஆவது விக்கெட்டுக்கான அதிகூடிய இணைப்பாட்டமாகும். கெரத் டிலேனி 30 பந்துகளை எதிர்கொண்டு 3 பவுண்டறிகள்., 4 சிக்ஸ்களுடன் 56 ஓட்டங்களைக் குவித்தார். ஜோர்ஜ் டொக்ரெல் 9 பந்துகளில் 5 சிக்ஸ்களை வீளாசி 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஷக்கீல் அஹ்மத் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஓமான் 18 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. 11ஆவது ஓவரில் ஓமான் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது. ஆரம்ப வீரர் ஆமிர் கலீம் 50 ஓட்டங்களையும் ஹமாத் மிர்ஸா 46 ஓட்டங்களையும் பெற்றதுடன் இருவரும் 3ஆவது விக்கெட்டில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை நல்ல நிலையில் இட்டனர். ஆனால், கடைசி 8 விக்கெட்கள் 42 ஓட்டங்களுக்கு சரிந்தன. பந்துவீச்சில் ஜொஷ் லிட்ல் 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெறி மெக்காத்தி 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெத்யூ ஹம்ப்றீஸ் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: லோக்கன் டக்கர் https://www.virakesari.lk/article/238665

'நிறுத்தி' பந்து வீசும் பாகிஸ்தான் வீரர் பற்றி விவாதம் - இந்தியாவுக்கு எதிராக துருப்புச் சீட்டாக இருப்பாரா?

3 weeks 4 days ago
பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்கை சமாளிக்க இந்தியா செய்ய வேண்டிய 'ஒரு விஷயம்' என்ன? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் வித்யுத் சிவராமகிருஷ்ணன் முன்னாள் கிரிக்கெட் வீரர் 14 பிப்ரவரி 2026, 12:17 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்த 2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடக்கப்போகிறது. இரண்டு அணிகளும் தங்களது முதல் இரு போட்டிகளையும் வென்று நம்பிக்கையோடு களமிறங்குவதால் நிச்சயம் ஒரு பரபரப்பான போட்டியை இவ்விரு அணிகளும் அரங்கேற்றலாம். எந்தவொரு இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலும் இரு அணிகளுக்குமே நிச்சயம் மிகப் பெரிய நெருக்கடி இருக்கும். உலகக் கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது. இம்முறையும் இந்திய அணியின் கையே ஓங்கியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்திய அணிக்கு அனைத்து ஏரியாவுமே முழுமையாக இருக்கிறது. அதேசமயம் 'இழப்பதற்கு ஒன்றும் இல்லை' என்ற மனநிலையில் பாகிஸ்தான் அணி ஆடும்பட்சத்தில் அவர்களுக்கும் ஒரு நல்ல வாய்ப்பு அமையக்கூடும். அந்த அணியிலும் இளமையான, பயமற்ற வீரர்கள் இருக்கிறார்கள். பொதுவாக இலங்கை ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். இதுவுமே இந்தப் போட்டியின் முடிவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்தியா கவனம் செலுத்தவேண்டிய இடங்கள் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி இரண்டு போட்டிகளையும் வென்று இந்தத் தொடரைத் தொடங்கியிருக்கிறது. இருந்தாலும், ஒருசில விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தவேண்டும். இந்திய அணி மிகவும் அதிரடியாக ஆட நினைக்கிறது. அது அவர்களுக்கு சற்று பிரச்னைக்குரிய விஷயமாக மாறலாம். கடந்த இரண்டு போட்டிகளிலும் சில தருணங்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இந்திய அணி இழந்திருந்தது. அதனால், அவர்கள் சற்று கவனமாக இந்தப் போட்டியைக் கையாளவேண்டும். அதேபோல், ஃபினிஷிங்கில் அவர்கள் சற்று கவனம் செலுத்தவேண்டும். அங்கு பிரச்னை இருப்பதாகச் சொல்லமாட்டேன். அதேசமயம், அவர்கள் முழுமையன ஒரு செயல்பாட்டைக் கொடுக்கவில்லை. ஷிவம் துபே, அக்‌ஷர் பட்டேல், ரிங்கு சிங் ஆகியோர் கடைசி கட்டத்தில் என்ன செய்வார்கள் என்பது தெரியும். ஆனால், இந்த இரு போட்டிகளில் அவர்கள் அதை இன்னும் செய்யவில்லை. ஒருவகையில் இது நல்லது தான் என்று நினைக்கிறேன். ஏனெனில், போகப் போக தொடரின் முக்கியமான தருணத்தில் அவர்கள் தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடும். கடைசி 5-6 ஓவர்களில் நெருக்கடியை சமாளித்து விளையாடுவது என்பது ஒரு கலை. அதை கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணி சிறப்பாகச் செய்திருக்கிறது. இந்த உலகக் கோப்பையிலும் அதை அவர்கள் செய்யத் தொடங்கவேண்டும். பொதுவாக இந்திய வீரர்கள் பந்தின் வேகத்தை நன்கு பயன்படுத்திக்கொண்டு ஆடும் திறன் பெற்றவர்கள். ஆனால், நமீபிய வேகப் பந்துவீச்சாளர்கள் மெதுவாகப் பந்துவீசி சவால் கொடுத்திருந்தனர். இந்திய பேட்டர்கள் அதற்குத் தகவமைத்துக்கொள்ளத் தவறவிட்டார்கள். பாகிஸ்தானுக்கு எதிராக இது நிகழாமல் பார்த்துக்கொள்வது அவசியம். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,ரிங்கு சிங் அபிஷேக் இல்லாவிட்டால்.. இந்திய அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் ஷர்மா உடல்நிலை பாதிப்பு காரணமாக நமீபியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அவர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடுவாரா என்பது இன்னும் சந்தேகமாகவே உள்ளது. ஒருவேளை இந்தப் போட்டியிலும் அபிஷேக் ஷர்மா ஆடவில்லை என்றால் இந்திய அணிக்கு அது மிகப் பெரிய இழப்பாக இருக்கும். ஆரம்பம் முதலே எதிரணி பந்துவீச்சாளர்கள் மீதும், எதிரணி மீதும் அவர் நெருக்கடியை ஏற்படுத்துவார். அந்த அதிரடியைப் பவர்பிளேவுக்குப் பின்பும் தொடர்கிறார். மிகவும் எளிதாக சிக்ஸர்கள் அடிக்கிறார். அவர் ஆடாமல் போனால் அது நிச்சயம் இந்திய அணிக்குப் பின்னடைவாக அமையும். மேலும், அது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கும் சற்று நம்பிக்கையைக் கொடுக்கும். ஏனெனில் அவர் ஓப்பன்னிங்கில் ஆடும்போது 6 ஓவர்களில் 70-80 ரன்கள் வரை வந்துவிடும். அதனால், அவர் இல்லையெனில் அது பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். ஆசிய கோப்பை போட்டிகளில் அபிஷேக்கின் அதிரடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. அதேசமயம் நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 8 பந்துகளில் 22 ரன்கள் அடித்தார் சஞ்சு சாம்சன். அவர், அபிஷேக் இடத்தை அவர் ஓரளவு நிரப்புவார் என்றாலும், இடது கை வீரர் அபிஷேக் ஏற்படுத்தக்கூடிய உளவியல் தாக்கத்தை இந்தியா தவறவிடும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,நமீபியாவுக்கு எதிரான போட்டியில் அபிஷேக் ஷர்மா விளையாடவில்லை பாகிஸ்தான் ஆச்சர்யம் ஏற்படுத்தலாம் பாகிஸ்தான் ஒரு நல்ல அணி. அவர்களைக் குறைத்து மதிப்பிடவே முடியாது. முதல் போட்டியில் சேஸிங்கின்போது சற்று தடுமாறியிருந்தாலும், அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அவர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். கடந்த 10 ஆண்டுகளில் அவர்கள் கணிக்க முடியாத ஒரு அணியாக இருந்திருக்கிறார்கள். எப்போது சிறப்பாக ஆடுவார்கள், எப்போது சொதப்புவார்கள் என்று சொல்ல முடியாது. அதனால் அந்த ஆச்சரியமளிக்கும் தன்மை ('surprise element') அந்த அணியிடம் எப்போதுமே இருக்கும். சாஹிப்சாதா ஃபரான் மிகச் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். பவர்பிளேவில் அதிரடியாக ரன் குவிக்கிறார். ஆரம்பத்தில் எதிரணி பந்துவீச்சாளர்கள் மீது அவர் நெருக்கடியை ஏற்படுத்துகிறார். அதை ஆசிய கோப்பையின்போதும் பார்த்தோம். அது அந்த அணிக்கு மிகவும் சாதகமான விஷயம். அதேசமயம் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக ரன்கள் எடுத்துவிட்டால், சேஸ் செய்வது பாகிஸ்தானுக்கு எளிதாக இருப்பதில்லை. இந்த இடத்தில் தான் பாபர் ஆசம் முக்கியத்துவம் பெறுவார். அவர் சமீபத்தில் அவ்வளவு சிறப்பான ஃபார்மில் இல்லை. அவர் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதுவும் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் உஸ்மான் தாரிக் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார் உஸ்மான் தாரிக் இந்தியாவுக்கு சவாலா? இந்த உலகக் கோப்பை தொடங்கப்பட்டதில் இருந்தே பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் தாரிக் பெரும் பேசுபொருளாக இருந்து வருகிறார். அவரது 'பௌலிங் ஆக்‌ஷன்' பற்றி நிறைய கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கின்றன. நிறைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரை உஸ்மான் தாரிக்கின் 'பௌலிங் ஆக்‌ஷன்' சரியாகத்தான் இருக்கிறது. அவர் 'த்ரோ' செய்யவில்லை. அது 'சக்கிங்' கிடையாது. இதுபோன்ற பந்துவீச்சாளர்களை, குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் அடிப்பது சற்று கடினமாக இருக்கும். 'அண்டர் தி பால் எலிவேஷன்' கிடைப்பது பேட்டர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். பொதுவாக இந்த ஃபார்மட்டில் பேட்டர்கள் பந்துக்கு கீழே சென்று ஆடவிரும்புவார்கள். ஆனால், இவர் பந்துவீச்சில் அது மிகவும் கடினம். அதிலும் பௌன்ஸ் குறைவான ஆடுகளம் என்றால் அவர் பெரும் தாக்கம் ஏற்படுத்தக்கூடும். ஆனால், இந்திய அணி இவருக்கு ஏற்ற திட்டங்கள் வகுத்துக் களமிறங்குவார்கள் என்று நம்புகிறேன். அவருக்கு எதிராக முற்றிலும் 'டிஃபன்ஸிவாக' ஆடுவார்கள் என்று எண்ணவில்லை. அவர் பந்துவீச்சில் எப்படி ஸ்கோர் செய்யலாம் என்று நன்கு திட்டமிட வேண்டும். உஸ்மான் தாரிக் மீது நெருக்கடியை ஏற்படுத்த நல்ல பவர்பிளே தேவை. பவர்பிளேவில் இந்திய அணி 2 அல்லது 3 விக்கெட்டுகளை இழந்துவிட்டால், அதன்பிறகு தாரிக் போன்ற ஒரு பந்துவீச்சாளர் வந்து ஆதிக்கம் செலுத்தக்கூடும். அப்படியில்லாமல் பவர்பிளேவில் 55/0, 60/0 என்பதுபோன்ற ஸ்கோர் எடுத்தால், உஸ்மான் தாரிக் பந்துவீச வரும்போதே அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுவிடும். இதனால்தான், அபிஷேக் ஷர்மா இல்லாதது பின்னடைவு என்று நான் கருதுகிறேன். இருந்தாலும், நிச்சயம் இந்திய வீரர்கள் தாரிக்கின் வீடியோக்களைப் பார்த்திருப்பார்கள். அதனால் நல்ல திட்டத்தோடு வருவார்கள். சாதகம் யாருக்கு? பெரிய போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட வரலாறு இந்திய அணியிடம் இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில், மிகமுக்கியமான போட்டிகளில் அவர்கள் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதைச் சீராகச் செய்திருக்கிறார்கள். ஆசிய கோப்பையில் துபை போன்ற மெதுவான ஆடுகளத்திலும் கூட இந்த இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஒருவேளை அபிஷேக் ஷர்மா ஆடாவிட்டால், ஃபரான் போன்ற பேட்டரும், உஸ்மான் தாரிக் போன்ற பந்துவீச்சாளரும் தங்களின் ஆகச்சிறந்த செயல்பாட்டைக் கொடுத்தால் இந்தப் போட்டியில் பாகிஸ்தான் பலம் கூடும். இலங்கையில் ஆடுவது ஒருவேளை சற்று சவால் கொடுக்கலாம். ஆஸ்திரேலியா - ஜிம்பாப்வே ஆட்டத்தில் ஆடுகளம் மெதுவாக இருந்தது. அதனால், இந்திய அணி ஆடுகளத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்ப எவ்வாறு தங்களைத் தகவமைத்துக்கொள்கிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும். (இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல் அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1w5q2gw9n1o

சிறுநீரகப் பாதிப்பு : ஆரம்பத்திலேயே கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்தும் சுகாதாரத் துறை

3 weeks 4 days ago
சிறுநீரகப் பாதிப்பு : ஆரம்பத்திலேயே கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்தும் சுகாதாரத் துறை 14 Feb, 2026 | 03:36 PM இலங்கையில் உள்ள சிறுநீரக நோயாளர்களில் சுமார் 10 சதவீதமானோர் தமக்கு அந்த நோய் இருப்பதனை அறியாமலேயே இருப்பதாக நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிறுநீரகவியல், டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய நிறுவனத்தின் (National Institute for Nephrology, Dialysis and Transplantation) விசேட நிபுணர் வைத்தியர் அர்ஜுன மாரசிங்க இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயை முறையாகக் கட்டுப்படுத்தாத நபர்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளது. பல நோயாளர்கள் தமக்கு நோய் இருப்பதை அறியாமல் இருப்பதாலும், நோய் முற்றிய பின்னரே அதனைத் கண்டறிவதாலும், அவர்களுக்கான சிகிச்சைகள் மிகவும் சிக்கலானதாக மாறுகின்றன. அதிக கொலஸ்ட்ரால் அல்லது இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு உள்ளவர்கள் வழக்கமான சிறுநீரகப் பரிசோதனைகளை (Kidney Screenings) மேற்கொள்ள வேண்டும். https://www.virakesari.lk/article/238642

சிறுநீரகப் பாதிப்பு : ஆரம்பத்திலேயே கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்தும் சுகாதாரத் துறை

3 weeks 4 days ago

சிறுநீரகப் பாதிப்பு : ஆரம்பத்திலேயே கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்தும் சுகாதாரத் துறை

14 Feb, 2026 | 03:36 PM

image

இலங்கையில் உள்ள சிறுநீரக நோயாளர்களில் சுமார் 10 சதவீதமானோர் தமக்கு அந்த நோய் இருப்பதனை அறியாமலேயே இருப்பதாக நாட்டின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிறுநீரகவியல், டயாலிசிஸ் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கான தேசிய நிறுவனத்தின் (National Institute for Nephrology, Dialysis and Transplantation) விசேட நிபுணர் வைத்தியர் அர்ஜுன மாரசிங்க இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உயர் இரத்த அழுத்தம் அல்லது நீரிழிவு நோயை முறையாகக் கட்டுப்படுத்தாத நபர்களுக்கு சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் மிக அதிகமாக உள்ளது.

பல நோயாளர்கள் தமக்கு நோய் இருப்பதை அறியாமல் இருப்பதாலும், நோய் முற்றிய பின்னரே அதனைத் கண்டறிவதாலும், அவர்களுக்கான சிகிச்சைகள் மிகவும் சிக்கலானதாக மாறுகின்றன.

அதிக கொலஸ்ட்ரால் அல்லது இரத்தத்தில் அதிக சர்க்கரை அளவு உள்ளவர்கள் வழக்கமான சிறுநீரகப் பரிசோதனைகளை (Kidney Screenings) மேற்கொள்ள வேண்டும்.

https://www.virakesari.lk/article/238642

"கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள்

3 weeks 4 days ago
"கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள் கட்டுரை தகவல் பிபிசி சிங்கள மொழி சேவை‎ 14 பிப்ரவரி 2026, 02:56 GMT வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் "நாங்கள் இங்கே வந்தபோது 5 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருந்தோம். ஆனால் நிரந்தர குடியிருப்பு உரிமை பெற 10 முதல் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றால் குழந்தை பெற வேண்டும் என்கிற எங்கள் கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விடும்," என்கிறார் தற்போது பிரிட்டனில் வசித்து வரும் மகேஷ் கெலும். பிரிட்டனின் விசா விதிகளில் புதிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு இதனால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி பிபிசி சிங்கள மொழி சேவையிடம் அவர் விளக்கினார். தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதி (ILR) பெறுவதற்கான குறைந்தபட்ச கால அளவை 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தலாம் என பிரிட்டன் உள்துறை செயலர் முன்மொழிந்துள்ளார். இந்த முடிவு பிரிட்டனில் உள்ள வெளிநாட்டினரை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துள்ள சுமார் 26 லட்சம் பேர் இந்தப் புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர். ஆனால் இந்த விதிகள் ஏற்கெனவே நிரந்தர வேலைவாய்ப்பு உரிமம் பெற்றவர்களுக்குப் பொருந்தாது. காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதியின் (ஐ.எல்.ஆர்) கீழ் ஒருவர் பிரிட்டனில் நிரந்தரமாக வசிக்கலாம், கட்டுப்பாடுகளின்றி வேலை செய்யலாம், பொது சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். பிரிட்டன் குடியுரிமை பெறுவதற்கும் இது முக்கியமான படி. தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, இந்த வசதியை 5 ஆண்டுகளில் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின்படி, இந்த காலவரம்பு 10 ஆண்டுகளாக உயர்த்தப்படலாம். பட மூலாதாரம்,Mahesh Kelum படக்குறிப்பு,மகேஷ் கெலும் கடந்த 2 ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். 'ஐ.எல்.ஆர் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது' பிரிட்டன் அரசின் இந்தப் புதிய விதிகளால் பாதிக்கப்படுபவர்களில் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு குடிபெயர்ந்த இலங்கை குடிமக்களும் அடங்குவர். புதிய மாற்றங்கள் குறித்து கவலை தெரிவிக்கும் மக்களிடம் பிபிசி சிங்கள மொழி சேவை பேசியது. மகேஷ் கெலும் கடந்த 2 ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். இங்கு குடிபெயர்ந்த பிறகு ஐ.எல்.ஆர் பெற்றவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிற முடிவில் இருவரும் இருந்தனர். ஆனால் இந்தப் புதிய சட்டம் அதற்குத் தடையாக அமையலாம் என அஞ்சுகின்றனர். "இங்கு வந்த பிறகு, நிரந்தர குடியுரிமை பெறாமல் குழந்தை பெற்றுக்கொள்வது கடினம் என்பதை உணர்ந்தோம். என் மனைவியின் பணிச் சூழலும் அதற்கு ஒரு காரணம், அவர் வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறார், காலை 7 மணி தொடங்கி இரவு 8.45 வரை வேலை செல்லும்" என்று அவர் தெரிவித்தார். இத்தகைய பணிச் சூழலில் குழந்தையை வளர்ப்பது மிகவும் கடினம் என்பதால் 5 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என நினைத்திருந்தோம் எனக் குறிப்பிடுகிறார் மகேஷ். இந்த மாற்றங்களால் தனது எதிர்காலம் நிலையற்றதாக இருப்பதாகக் கூறும் மகேஷ், "இங்கே ஸ்பான்சர்ஷிப் கிடைப்பது மிகவும் கடினம். நீண்ட காலம் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் இருப்பது நடைமுறையில் கடினமானது" எனத் தெரிவிக்கிறார். பட மூலாதாரம்,Kushani Suraweera படக்குறிப்பு,கடந்த 2023ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த குஷானி சுரவீரா 'நான் அனைத்தையும் தனியாக எதிர்கொள்ள வேண்டும்' கடந்த 2023ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த குஷானி சுரவீரா, விருந்தோம்பல் துறையில் மூத்த அலுவலராக வேலை செய்து வருகிறார். தனது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த அவர் நிரந்தர குடியிருப்பு உரிமை பெறும் காலம் நீட்டிக்கப்பட்டால் குழந்தைகளின் கல்விக்கான செலவுகளைச் சமாளிப்பது கடினமாகிவிடும் என்கிறார். "ஐந்து ஆண்டுகள் என்பதை 10 ஆண்டுகளாக மாற்றினால் பொருளாதார ரீதியாகவும் சரி மனநல ரீதியாகவும் சரி நான் நிறைய பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். எங்கள் திட்டப்படி 5 ஆண்டுகளின் ஐ.எல்.ஆர் கிடைத்துவிடும் என்பதால் எனது கணவர் இலங்கையிலே இருந்தாலும் நாங்கள் இங்கு வந்தோம். நாங்கள் பேசி குழந்தைகளுக்கு சிறப்பானதைத் திட்டமிட்டோம். ஆனால் இறுதியில் அந்த வாய்ப்பு போய்விட்டது, இந்த 5 ஆண்டுகள் பத்தாக மாறினால் இவை அனைத்தையும் நான் தனியாகவே எதிர்கொள்ள வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார். பிரிட்டனில் 5 ஆண்டுகள் இருந்த பிறகு இந்த வசதி தனக்குக் கிடைத்தால் தனது குழந்தைகள் பிரிட்டன் குழந்தைகள் செலுத்தும் அதே கட்டணத்தில் கல்வி பெற முடியும் என்கிறார் குஷானி சுரவீரா. அவ்வாறு நடக்கவில்லை என்றால் தனக்கு மிகப்பெரிய பொருளாதார பிரச்னை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,Kushani Suraweera படக்குறிப்பு,குஷானி சுரவீரா இலங்கையை விட்டுக் கிளம்பும் முன்பு விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம் 'கணவரின் இறுதிச் சடங்கிற்கு கூட செல்ல முடியவில்லை' குஷானி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் பிரிட்டனில் வசித்தபோது இலங்கையில் தொழில் செய்து வந்த அவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் விசாவில் பிரச்னை ஏற்பட்டதால் தனது கணவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில்கூட தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்று கவலையுடன் தெரிவிக்கிறார். "நாங்கள் அவரின் இறுதிச் சடங்கிற்குச் செல்ல முடியவில்லை. அப்போது எங்களின் விசாவை புதுப்பிக்க வேண்டிய நேரமாக இருந்ததுதான் அதற்குக் காரணம். விசா புதுப்பிக்கும் காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறினால் விசா ரத்து செய்யப்படும். அதற்குப் பிறகு புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். புதிய சட்டத்தின்படி நாங்கள் உடன் யாரையும் அழைத்து வர முடியாது. அதனால்தான் நாங்கள் யாரும் எனது கணவரின் இறுதிச் சடங்கிற்குக்கூட செல்ல முடியவில்லை," என்று தெரிவித்தார் குஷானி. இந்தச் சூழலில் தற்போது பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டினரை பாதிக்காதவாறு புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் குஷானி கோரிக்கை வைக்கிறார். 'வேறு நாடுகளைத் தேடும் குழந்தைகள்' "இந்தச் சட்டம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட இரவு என் குடும்பத்தில் யாருக்குமே தூக்கம் வரவில்லை. அதிகாலை 4 மணி வரை விழித்திருந்த குழந்தைகள், நாம் திரும்பிச் செல்ல வேண்டுமா என்று கேட்டனர்," என பிபிசி சிங்கள மொழி சேவையிடம் தெரிவித்தார் காஞ்சனா ரனசிங்கே. இவர் கடந்த 4 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார். தனது மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் பிரிட்டனில் வசித்து வரும் காஞ்சனா, இந்தச் சட்டம் தொடர்பாக கேள்விப்பட்டதில் இருந்தே இதுவொரு உளவியல் சுமையாக இருந்து வருவதாகக் கூறுகிறார். தற்போது சுகாதாரத் துறையில் வேலை செய்து வரும் காஞ்சனா, இந்தப் புதிய சட்டத்தின் கீழ் ஐ.எல்.ஆர் வசதி செயல்பாட்டுக்கு வரும் காலம் 15 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும் என கருதுகிறார். பட மூலாதாரம்,Kanchana Ranasinghe படக்குறிப்பு,காஞ்சனா ரனசிங்கே கடந்த 4 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார். "எனது மூத்த மகள் பல்கலைக் கழகத்திற்குச் சென்றால் 2029இல் நாங்கள் மிகப்பெரிய பிரச்னையைச் சந்திப்போம். ஏனெனில் அவரின் விருப்பப்படி மருத்துவராக வேண்டுமென்றால் ஐ.எல்.ஆர் வசதி இல்லாமல் நாங்கள் மிகப்பெரிய தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்," என்றும் அவர் தெரிவித்தார். இந்த அறிவிப்பு தங்களின் குழந்தைகளை கடுமையாகப் பாதித்துள்ளது எனக் குறிப்பிடும் அவர், "இந்த அறிவிப்பு வந்த அன்று இரவே எனது குழந்தைகள் என்னிடம் வந்து, 'அம்மா, எங்களுக்கு இலங்கை பிடிக்கும். எங்களுக்குச் சென்று திரும்ப வேண்டும். ஆனால் நாம் இலங்கையில் குடியேற முடியாது என அவர்கள் கூறுகிறார்கள்' எனத் தெரிவித்தனர். நாம் வேறு ஏதேனும் நாட்டுக்குச் செல்ல முடியுமா என்றும் குழந்தைகள் இணையத்தில் தேடி வருகின்றனர்" என்றும் கூறினார். பிரிட்டன் அரசிடம் எதிர்பார்க்கப்படும் நிவாரணம் என்ன? இந்தச் சூழலில் தற்போது பிரிட்டனில் வசிக்கும் இலங்கை குடிமக்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் சட்ட நிவாரணம் பெற ஒருங்கிணைந்து முயன்று வருகின்றனர். அதன் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சசிந்தா ஹெட்டிதாந்திரி பிபிசி சிங்கள சேவையிடம் பேசுகையில், "நாங்கள் பிரிட்டனில் உள்ள வெளிநாட்டினரைத் தவிர்த்துவிட்டு, இந்தச் சட்டம் அமலுக்கு வருகின்ற தேதியிலிருந்து செயல்படுத்துமாறு பிரிட்டன் அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்" எனத் தெரிவித்தார். இந்தச் சட்டம் மக்களைப் பாதிக்கக்கூடாது எனத் தெரிவித்த அவர், "இந்தச் சட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டால் அதற்கு முன்னர் நாட்டுக்குள் வந்தவர்களுக்குப் பழைய விதிகள் பொருந்த வேண்டும். இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நாட்டுக்குள் வருபவர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை" எனக் குறிப்பிட்டார். எனினும், குறிப்பிட்ட மாற்றங்கள் இல்லாமல் புதிய சட்டம் அமலானால் சட்ட நிவாரணம் பெறுவதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிய சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்ன? தற்போது முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின்படி, ஐ.எல்.ஆர் பெறுவதற்கான காத்திருப்பு காலம் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். எனினும் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் இந்தக் காலம் நீட்டிக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம். குறைந்தபட்சம் 12 ஆண்டுகளாக அரசின் பலன்களைப் பெற்று வரும் சட்டபூர்வ குடியேறிகள் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவெடுத்ததைத் தொடர்ந்து, சுகாதார விசா மற்றும் சோஷியல் கேர் விசா மூலம் பிரிட்டன் வந்தவர்கள் ஐ.எல்.ஆர் பெற விண்ணப்பிப்பதற்கு 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது முன்னர் 5 ஆண்டுகளாக இருந்தது. பன்னிரண்டு மாதங்களுக்கும் மேலாக அரசின் பலன்களைப் பெற்று வரும் புலம்பெயர்ந்தோர், குடியிருப்பு உரிமை பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது தற்போது நடைமுறையில் இருப்பதைவிட 4 மடங்கு அதிகம். ஐரோப்பாவிலேயே அதிகமான காத்திருப்பு காலமாக இது உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gq5v92nvqo

"கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள்

3 weeks 4 days ago

"கணவரின் இறுதிச்சடங்குக்கு கூட செல்லவில்லை" - பிரிட்டனின் புதிய சட்டத்தால் இலங்கை மக்கள் சந்திக்கும் சவால்கள்

இலங்கை, பிரிட்டன், புதிய விசா விதிகள்

கட்டுரை தகவல்

  • பிபிசி சிங்கள மொழி சேவை

  • 14 பிப்ரவரி 2026, 02:56 GMT

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

"நாங்கள் இங்கே வந்தபோது 5 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்து இருந்தோம். ஆனால் நிரந்தர குடியிருப்பு உரிமை பெற 10 முதல் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்றால் குழந்தை பெற வேண்டும் என்கிற எங்கள் கனவை நிறைவேற்ற முடியாமல் போய்விடும்," என்கிறார் தற்போது பிரிட்டனில் வசித்து வரும் மகேஷ் கெலும்.

பிரிட்டனின் விசா விதிகளில் புதிய மாற்றங்கள் முன்மொழியப்பட்டுள்ள நிலையில் அங்கு தங்கியிருக்கும் வெளிநாட்டினருக்கு இதனால் ஏற்படும் தாக்கங்கள் பற்றி பிபிசி சிங்கள மொழி சேவையிடம் அவர் விளக்கினார்.

தற்போது வெளிநாட்டினருக்கு வழங்கப்பட்டு வரும் காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதி (ILR) பெறுவதற்கான குறைந்தபட்ச கால அளவை 5 ஆண்டிலிருந்து 10 ஆண்டுகளாக உயர்த்தலாம் என பிரிட்டன் உள்துறை செயலர் முன்மொழிந்துள்ளார். இந்த முடிவு பிரிட்டனில் உள்ள வெளிநாட்டினரை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துள்ள சுமார் 26 லட்சம் பேர் இந்தப் புதிய சட்டத்தால் பாதிக்கப்படும் நிலையில் உள்ளனர். ஆனால் இந்த விதிகள் ஏற்கெனவே நிரந்தர வேலைவாய்ப்பு உரிமம் பெற்றவர்களுக்குப் பொருந்தாது.

காலவரையற்ற குடியிருப்புக்கான அனுமதியின் (ஐ.எல்.ஆர்) கீழ் ஒருவர் பிரிட்டனில் நிரந்தரமாக வசிக்கலாம், கட்டுப்பாடுகளின்றி வேலை செய்யலாம், பொது சேவைகளைப் பெற்றுக் கொள்ளலாம். பிரிட்டன் குடியுரிமை பெறுவதற்கும் இது முக்கியமான படி.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, இந்த வசதியை 5 ஆண்டுகளில் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின்படி, இந்த காலவரம்பு 10 ஆண்டுகளாக உயர்த்தப்படலாம்.

மகேஷ் கெலும் கடந்த 2 ஆண்டுகளாக தனது மனைவியுடன் பிரிட்டனில் வசித்து வருகிறார்.

பட மூலாதாரம்,Mahesh Kelum

படக்குறிப்பு,மகேஷ் கெலும் கடந்த 2 ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் பிரிட்டனில் வசித்து வருகிறார்.

'ஐ.எல்.ஆர் இல்லாமல் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது'

பிரிட்டன் அரசின் இந்தப் புதிய விதிகளால் பாதிக்கப்படுபவர்களில் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு அங்கு குடிபெயர்ந்த இலங்கை குடிமக்களும் அடங்குவர். புதிய மாற்றங்கள் குறித்து கவலை தெரிவிக்கும் மக்களிடம் பிபிசி சிங்கள மொழி சேவை பேசியது.

மகேஷ் கெலும் கடந்த 2 ஆண்டுகளாகத் தனது மனைவியுடன் பிரிட்டனில் வசித்து வருகிறார். இங்கு குடிபெயர்ந்த பிறகு ஐ.எல்.ஆர் பெற்றவுடன் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்கிற முடிவில் இருவரும் இருந்தனர்.

ஆனால் இந்தப் புதிய சட்டம் அதற்குத் தடையாக அமையலாம் என அஞ்சுகின்றனர்.

"இங்கு வந்த பிறகு, நிரந்தர குடியுரிமை பெறாமல் குழந்தை பெற்றுக்கொள்வது கடினம் என்பதை உணர்ந்தோம். என் மனைவியின் பணிச் சூழலும் அதற்கு ஒரு காரணம், அவர் வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்கிறார், காலை 7 மணி தொடங்கி இரவு 8.45 வரை வேலை செல்லும்" என்று அவர் தெரிவித்தார்.

இத்தகைய பணிச் சூழலில் குழந்தையை வளர்ப்பது மிகவும் கடினம் என்பதால் 5 ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என நினைத்திருந்தோம் எனக் குறிப்பிடுகிறார் மகேஷ்.

இந்த மாற்றங்களால் தனது எதிர்காலம் நிலையற்றதாக இருப்பதாகக் கூறும் மகேஷ், "இங்கே ஸ்பான்சர்ஷிப் கிடைப்பது மிகவும் கடினம். நீண்ட காலம் ஸ்பான்சர்ஷிப்பின் கீழ் இருப்பது நடைமுறையில் கடினமானது" எனத் தெரிவிக்கிறார்.

2023-ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த குஷானி சுரவீரா

பட மூலாதாரம்,Kushani Suraweera

படக்குறிப்பு,கடந்த 2023ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த குஷானி சுரவீரா

'நான் அனைத்தையும் தனியாக எதிர்கொள்ள வேண்டும்'

கடந்த 2023ஆம் ஆண்டு தனது மூன்று குழந்தைகளுடன் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த குஷானி சுரவீரா, விருந்தோம்பல் துறையில் மூத்த அலுவலராக வேலை செய்து வருகிறார்.

தனது குழந்தைகளுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்த அவர் நிரந்தர குடியிருப்பு உரிமை பெறும் காலம் நீட்டிக்கப்பட்டால் குழந்தைகளின் கல்விக்கான செலவுகளைச் சமாளிப்பது கடினமாகிவிடும் என்கிறார்.

"ஐந்து ஆண்டுகள் என்பதை 10 ஆண்டுகளாக மாற்றினால் பொருளாதார ரீதியாகவும் சரி மனநல ரீதியாகவும் சரி நான் நிறைய பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். எங்கள் திட்டப்படி 5 ஆண்டுகளின் ஐ.எல்.ஆர் கிடைத்துவிடும் என்பதால் எனது கணவர் இலங்கையிலே இருந்தாலும் நாங்கள் இங்கு வந்தோம். நாங்கள் பேசி குழந்தைகளுக்கு சிறப்பானதைத் திட்டமிட்டோம். ஆனால் இறுதியில் அந்த வாய்ப்பு போய்விட்டது, இந்த 5 ஆண்டுகள் பத்தாக மாறினால் இவை அனைத்தையும் நான் தனியாகவே எதிர்கொள்ள வேண்டும்," என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிரிட்டனில் 5 ஆண்டுகள் இருந்த பிறகு இந்த வசதி தனக்குக் கிடைத்தால் தனது குழந்தைகள் பிரிட்டன் குழந்தைகள் செலுத்தும் அதே கட்டணத்தில் கல்வி பெற முடியும் என்கிறார் குஷானி சுரவீரா. அவ்வாறு நடக்கவில்லை என்றால் தனக்கு மிகப்பெரிய பொருளாதார பிரச்னை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

குஷானி சுரவீரா இலங்கையை விட்டு கிளம்பும் முன்பு விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம்

பட மூலாதாரம்,Kushani Suraweera

படக்குறிப்பு,குஷானி சுரவீரா இலங்கையை விட்டுக் கிளம்பும் முன்பு விமான நிலையத்தில் எடுத்த புகைப்படம்

'கணவரின் இறுதிச் சடங்கிற்கு கூட செல்ல முடியவில்லை'

குஷானி மற்றும் அவரது மூன்று குழந்தைகள் பிரிட்டனில் வசித்தபோது இலங்கையில் தொழில் செய்து வந்த அவரின் கணவர் மாரடைப்பால் உயிரிழந்தார். ஆனால் விசாவில் பிரச்னை ஏற்பட்டதால் தனது கணவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில்கூட தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்று கவலையுடன் தெரிவிக்கிறார்.

"நாங்கள் அவரின் இறுதிச் சடங்கிற்குச் செல்ல முடியவில்லை. அப்போது எங்களின் விசாவை புதுப்பிக்க வேண்டிய நேரமாக இருந்ததுதான் அதற்குக் காரணம். விசா புதுப்பிக்கும் காலத்தில் நாட்டைவிட்டு வெளியேறினால் விசா ரத்து செய்யப்படும்.

அதற்குப் பிறகு புதிய விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும். புதிய சட்டத்தின்படி நாங்கள் உடன் யாரையும் அழைத்து வர முடியாது. அதனால்தான் நாங்கள் யாரும் எனது கணவரின் இறுதிச் சடங்கிற்குக்கூட செல்ல முடியவில்லை," என்று தெரிவித்தார் குஷானி.

இந்தச் சூழலில் தற்போது பிரிட்டனில் வசிக்கும் வெளிநாட்டினரை பாதிக்காதவாறு புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் குஷானி கோரிக்கை வைக்கிறார்.

'வேறு நாடுகளைத் தேடும் குழந்தைகள்'

"இந்தச் சட்டம் தொடர்பான வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட இரவு என் குடும்பத்தில் யாருக்குமே தூக்கம் வரவில்லை. அதிகாலை 4 மணி வரை விழித்திருந்த குழந்தைகள், நாம் திரும்பிச் செல்ல வேண்டுமா என்று கேட்டனர்," என பிபிசி சிங்கள மொழி சேவையிடம் தெரிவித்தார் காஞ்சனா ரனசிங்கே. இவர் கடந்த 4 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார்.

தனது மூன்று குழந்தைகள் மற்றும் கணவருடன் பிரிட்டனில் வசித்து வரும் காஞ்சனா, இந்தச் சட்டம் தொடர்பாக கேள்விப்பட்டதில் இருந்தே இதுவொரு உளவியல் சுமையாக இருந்து வருவதாகக் கூறுகிறார்.

தற்போது சுகாதாரத் துறையில் வேலை செய்து வரும் காஞ்சனா, இந்தப் புதிய சட்டத்தின் கீழ் ஐ.எல்.ஆர் வசதி செயல்பாட்டுக்கு வரும் காலம் 15 ஆண்டுகளாக நீட்டிக்கப்படும் என கருதுகிறார்.

காஞ்சனா ரனசிங்கே கடந்த 4 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார்.

பட மூலாதாரம்,Kanchana Ranasinghe

படக்குறிப்பு,காஞ்சனா ரனசிங்கே கடந்த 4 ஆண்டுகளாக பிரிட்டனில் வசித்து வருகிறார்.

"எனது மூத்த மகள் பல்கலைக் கழகத்திற்குச் சென்றால் 2029இல் நாங்கள் மிகப்பெரிய பிரச்னையைச் சந்திப்போம். ஏனெனில் அவரின் விருப்பப்படி மருத்துவராக வேண்டுமென்றால் ஐ.எல்.ஆர் வசதி இல்லாமல் நாங்கள் மிகப்பெரிய தொகையைச் செலுத்த வேண்டியிருக்கும்," என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த அறிவிப்பு தங்களின் குழந்தைகளை கடுமையாகப் பாதித்துள்ளது எனக் குறிப்பிடும் அவர், "இந்த அறிவிப்பு வந்த அன்று இரவே எனது குழந்தைகள் என்னிடம் வந்து, 'அம்மா, எங்களுக்கு இலங்கை பிடிக்கும். எங்களுக்குச் சென்று திரும்ப வேண்டும். ஆனால் நாம் இலங்கையில் குடியேற முடியாது என அவர்கள் கூறுகிறார்கள்' எனத் தெரிவித்தனர். நாம் வேறு ஏதேனும் நாட்டுக்குச் செல்ல முடியுமா என்றும் குழந்தைகள் இணையத்தில் தேடி வருகின்றனர்" என்றும் கூறினார்.

பிரிட்டன் அரசிடம் எதிர்பார்க்கப்படும் நிவாரணம் என்ன?

இந்தச் சூழலில் தற்போது பிரிட்டனில் வசிக்கும் இலங்கை குடிமக்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் சட்ட நிவாரணம் பெற ஒருங்கிணைந்து முயன்று வருகின்றனர்.

அதன் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சசிந்தா ஹெட்டிதாந்திரி பிபிசி சிங்கள சேவையிடம் பேசுகையில், "நாங்கள் பிரிட்டனில் உள்ள வெளிநாட்டினரைத் தவிர்த்துவிட்டு, இந்தச் சட்டம் அமலுக்கு வருகின்ற தேதியிலிருந்து செயல்படுத்துமாறு பிரிட்டன் அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.

இந்தச் சட்டம் மக்களைப் பாதிக்கக்கூடாது எனத் தெரிவித்த அவர், "இந்தச் சட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டால் அதற்கு முன்னர் நாட்டுக்குள் வந்தவர்களுக்குப் பழைய விதிகள் பொருந்த வேண்டும். இந்தப் புதிய சட்டம் அமலுக்கு வந்த பின்னர் நாட்டுக்குள் வருபவர்களுக்கு இந்தச் சட்டம் பொருந்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லை" எனக் குறிப்பிட்டார்.

எனினும், குறிப்பிட்ட மாற்றங்கள் இல்லாமல் புதிய சட்டம் அமலானால் சட்ட நிவாரணம் பெறுவதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

புதிய சட்டத்தில் முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்ன?

தற்போது முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்களின்படி, ஐ.எல்.ஆர் பெறுவதற்கான காத்திருப்பு காலம் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். எனினும் பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் இந்தக் காலம் நீட்டிக்கப்படலாம் அல்லது குறைக்கப்படலாம்.

  • குறைந்தபட்சம் 12 ஆண்டுகளாக அரசின் பலன்களைப் பெற்று வரும் சட்டபூர்வ குடியேறிகள் 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்

  • ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவெடுத்ததைத் தொடர்ந்து, சுகாதார விசா மற்றும் சோஷியல் கேர் விசா மூலம் பிரிட்டன் வந்தவர்கள் ஐ.எல்.ஆர் பெற விண்ணப்பிப்பதற்கு 15 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது முன்னர் 5 ஆண்டுகளாக இருந்தது.

  • பன்னிரண்டு மாதங்களுக்கும் மேலாக அரசின் பலன்களைப் பெற்று வரும் புலம்பெயர்ந்தோர், குடியிருப்பு உரிமை பெற 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இது தற்போது நடைமுறையில் இருப்பதைவிட 4 மடங்கு அதிகம். ஐரோப்பாவிலேயே அதிகமான காத்திருப்பு காலமாக இது உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gq5v92nvqo