Aggregator

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 weeks 5 days ago
சாவச்சேரி டெலோ காம்பை அடித்து முடித்து விட்டு வந்த புலிகளுக்கு சோடா உடைத்து கொடுத்தேன் என சொன்ன காலம் தொட்டு, அதற்கு முன் சண்டியர்களை ஹீரோ போல் நடத்திய காலம் தொட்டு இந்த மனநிலை உள்ளது. அன்றைய நிலையில் டெலோவின் கை ஓங்கி, புலிகளை அடித்திருந்தாலும் - டெலோவுக்கும் இன்னும் ஒரு குரூப் சோடா உடைத்து கொடுத்திருக்கும். இதே மனநிலையை நீங்கள் ஆப்கானிகளிடமும் காணலாம். சங்கிகளிடமும், தென் தமிழ்நாட்டு சாதி சங்க அடிப்பொடிகளிலும் காணலாம். இலண்டனில் பெரியார் வாசக வட்டத்தில் போய் ஒரு பெண்ணோடு வம்பிழுத்த கூட்டத்திடமும் காணலாம். வன்முறையை வீரம் என்றும், பிற்போக்குத்தனத்தை மானம் என்றும் தலைகீழாக விளங்கி கொள்ளும் சகல மொக்கு கூட்டங்களிலும் இது உண்டு. ஆனால் சிங்கள காடையர்கள் திரண்டு வருகிறார்கள் என்றால் எதிர்த்து ஒரு குருவி நிற்காது. இவர்கள் பலசாலிகளை மட்டும் போற்றும் பச்சோந்திகள். புலிகள் பலமாய் இருந்தால் புலிகள்… அனுர பலமாய் இருந்தால் அனுர… இவர்கள் தமது அடிப்படைவாத உந்தலில் முகநூலில் வந்து எழுதும் குப்பைகெல்லாம், புலிகளை பொறுப்பாக முடியாது என்பது என் கருத்து. அதே போல் அவர்கள் செய்யாத விடயங்களையும் பொத்தாம் பொதுவில் (கோழி கள்ளன், மாட்டு கள்ளன்) அவர்கள் தலையில் போடக்கூடாது. இதை ஒரு figure of speech ஆக நீங்கள் சொல்லி இருக்கலாம். ஆனால் கோழி பிடித்தவன், மாட்டு கள்ளன், பிற்பொக்கற் அடித்தவனை எல்லாம் புலிகள் மரண தண்டனைக்கு உள்ளாக்கினர் என்பதை - போராட்ட காலத்தில் வாழ்ந்த, வாசித்த என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 weeks 5 days ago
இங்கு எந்த எந்தக் குறூப் யாரை கொலை செய்தது என்பதற்கோ ஏன் கொலை செய்தார்கள் என்பதற்கோ எவராலும் விடை காண முடியாது. ஆனால் எனது கேள்வி என்ன வென்றால் ஒரு குடும்பத்தில் நடந்த கொடூரக் கொலையை எமது மக்களில் பெரும்பாலோனோர் கொண்டாடும் , ஆதரவாகக் கருத்திடும் மனநிலையை எங்கிருந்து பெற்றார்கள் என்பதை தான். இது நடந்தது ஏதோ நீண்ட காலத்துக்கு முன்பு அல்ல. சமீபத்தில் தான் என்பதால் தான் இந்தக் கேள்வி எழுந்தது.

புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00

3 weeks 5 days ago
உக்ரேனுக்கு எரிவலு உதவியை செய்ய ஒத்து கொண்ட சீனா! உக்ரேன், சீனா வெளிநாட்டமைச்சர்கள் முனிச் மாநாட்டில் பேச்சுவார்த்தை. # நீ கொஞ்சம் அங்க பாரு கண்ணா # கோமாளி #ராஜதந்திரி

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

3 weeks 5 days ago
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : உருகி உருகி போனதடி என் உள்ளம் யான் நீயே குறுகி குறுகி போனதடி என் எண்ணம் யான் நீயே ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம் நீதானே காதலே என்னாளும் ஆண் : யாழோ மூரலோ தேனோ பேசும் நேரமோ பாலோ… பாதமோ… ஆடை காலின் நிகலோ ஆண் : கரைகளில் கரையும் வெண்ணுறை கடைத்திடும் மொழிகளா விழிகளின் வளையல் வானவில் நிறங்களே காதலே ஆண் : நீ இன்றி மூடுமே என் வானம் நீதானே காதலே என்னாளும் .........! --- உருகி உருகி போனதடி ---

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 weeks 5 days ago
87-90 இல் பின்னாளில் கருணா பிரிவின் போது நடந்ததை போல பல சம்பவங்கள் யாழில் அரங்கேறின. மாற்று இயக்க, புலி உறுப்பினர்கள் ஆளை ஆள் சுட்டதை விட, தத்தம் ஆதரவாளர்களை போட்டு தள்ளினர். ஒருநாள் புலி ஆதரவாளர் ஒருவரை ஈபி கொலை செய்தால், ஒரு கிழமைக்குள் புலிகள் ஒரு ஈபி ஆதரவாளரை கொலை செய்தார்கள். இது மறுவளமாகவும் நடந்தது. என்ன கருமம் செய்தேனோ தெரியாது - அப்போ எனக்கு பதின்ம வயது கூட இல்லை, இப்படி 3 கொலைகளை என் கண்ணால் கண்டேன். நாலாவதாக ஒருவரை (புலி ஆதரவாளர்) தேடி வந்த சமயம் அவர் வீட்டில் இல்லை, அவரின் மனைவி என்னை அனுப்பி அவர் நிண்ட வீட்டில் இருந்து அப்படியே கொழும்புக்கு படி தகவல் அனுப்பினார். இதை எல்லாம் இப்போ சொன்னால் எனக்கு PTSD எண்டு சொல்லி போடுவாங்கள். 83 க்கு பின் ஊரில் வளர்ந்த பலருக்கு PTSD இருக்கு - நாம் அதை காட்டி கொள்வதில்லை என்பது என் கருத்து.

யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026

3 weeks 5 days ago
முதலமைச்சர் அல்வாயனுக்கு வாழ்த்துக்கள். பின்வாங்கு கோஸ்டியோடு சேர வேண்டாமென @வீரப் பையன்26 க்கு சொல்ல சொல்ல கேட்காமல் சேர்ந்த பலனை நாளை அனுபவிப்பார். @ரசோதரன் கெட்டிக்காரன் மெதுவா விலகிவிட்டார்.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு

3 weeks 5 days ago
இதில் குறிப்பிட்டுள்ள விடயம், உங்களூர் சமாச்சாரம்.. அப்படி போட்டி போட்டு கொன்றவர்கள் என்பது மாற்று இயக்க போராளிகளுடன் நடந்த சம்பவங்களா ? இல்லை பொதுமக்கள் சார்ந்த சம்பவங்களா? எங்கள் ஊரில் (நாவற்குழி) + கைத்தடி + தச்சன்தோப்பு + பகுதியில் புலிகளால் நடந்தது ஒரே ஒரு சம்பவம் அதுவே நான் சொன்ன என்னுடைய தோழி குறித்தது. நாவற்குழியில் மட்டும் 9 + கொலைகள் நான் இருந்த காலத்தில் (1984 - 1990) ஒரே வீட்டில் வசித்த மருத்துவர் குடும்பம் கணவன் மனைவி இன்னும் இருவர் என பேர் கொல்லப்பட்டார்கள் அவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தார்கள் (அவர்களை பற்றி இன்றுவரையும் எதையும் அறிய முடியவில்லை - இதை செய்தது தனியே இந்திய ராணுவமா இல்லை அவர்களோடு சேர்ந்து இயங்கிய ஒட்டுண்ணிகளா தெரியவில்லை)