Aggregator
தமிழர்கள் மீதான இன அழிப்பு தற்போது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பாக நீட்சி பெற்றுள்ளது - ரவிகரன்
15 AUG, 2025 | 04:42 PM
தமிழ்த் தேசிய இனத்தின் மீது பேரினவாத இலங்கை அரசு கடந்த காலங்களில் மேற்கொண்ட இன அழிப்பு செயற்பாடுகள் தற்போது, கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகளாக நீட்சி பெற்றுக் காணப்படுவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவு - வள்ளிபுனம் இடைக்கட்டு சந்திப் பகுதியில் நேற்று (14) நடைபெற்ற செஞ்சோலை வளாகப் படுகொலை நினைவேந்தலில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சோகமயமான ஒரு தருணத்திலே நாம் அனைவரும் ஒன்றுகூடியிருக்கிறோம்.
குறிப்பாக, பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள் என அனைவரும் கண்ணீர் சொரிந்து சோகத்தை வெளிப்படுத்தி, கொடூர செஞ்சோலைப் படுகொலை நினைவுகளுடன் இருக்கின்றீர்கள். நாமும் அந்த கொடூர படுகொலையின் கனத்த அந்த நினைவுகளைச் சுமந்தவர்களாக இருக்கின்றோம்.
ஏற்கனவே நாம் குறித்த விமானத் தாக்குதல் இடம்பெற்ற இடத்தில் அஞ்சலிகளைச் செலுத்திவிட்டுத்தான் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளோம்.
உலகில் மிகக் கொடூரமான தாக்குதல்களை, படுகொலைகளை மேற்கொண்ட இராணுவங்களில் இலங்கை இராணுவமும் ஒன்றாகும்.
வெள்ளைச் சீருடையோடு கல்வி கற்கச் சென்ற எமது பிள்ளைகளின் மீது விமானம் குண்டுமழை பொழிந்தது. எமது பிள்ளைகளின் வெள்ளைச் சீருடைகள் குருதியால் நனைந்து சிவப்புச் சீருடையாக மாறியிருந்த கோலம், உடல்கள் சிதறிக் கிடந்த நிலைமை, இத்தகைய கெடூரமான சம்பவத்தை யாரும் மறந்துவிட முடியாது.
இந்தக் கொடூரம் இடம்பெற்றும் 19 ஆண்டுகள் கடந்துவிட்டபோதும் பெற்றோர்கள், சகோதரர்கள், உறவினர்கள் கதறி அழுது தமது சோகத்தை வெளிப்படுத்துகின்றபோது, இந்தக் கொடூர படுகொலை இன்றளவும் எந்த அளவிற்கு மனங்களில் தாக்கத்தைச் செலுத்தியிருக்கின்றது என்பதை நன்கு உணரமுடிகின்றது. இது என்றுமே மறக்கமுடியாத ஆறாத வலியாகும்.
இலங்கை இராணுவம் கடந்த காலத்தில் வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகத்தில் வருடம் முழுவதும் தமிழ் இனப் படுகொலையை மேற்கொண்டது. அவ்வாறு இராணுவத்தால் தமிழினப் படுகொலை மேற்கொள்ளப்பட்டமைக்கான சான்றுகளும் ஆதாரங்களும் தற்போது தாயகப்பரப்பின் பல்வேறு இடங்களிலுமிருந்தும் வெளிப்பட்டுவருகின்றன.
எமக்கான விடிவு கிடைக்கவேண்டுமென்ற நோக்குடனும், தமிழ்த் தேசிய இனமான நாங்கள் எம்மை நாமே ஆட்சி செய்யவேண்டுமென்ற நோக்குடனும் எமது தமிழர் தாயகத்தை வழிநடத்திக்கொண்டிருந்த எம்முடைய தலைவனின் விடுதலைப் போராட்டக் கட்டமைப்பை உலக நாடுகள் இணைந்து அழித்த வரலாறு உங்கள் அனைவருக்கும் தெரியும்.
தற்போது தமிழர்கள் நாங்கள் நலிவடைந்தவர்களாக, அடிமைகளாக இருக்கின்ற நிலை காணப்படுகின்றது.
தற்போது தமிழர் தாயகத்தில் தமிழர்களுக்கு எதுவுமில்லை என்ற நிலையாகிவிட்டது. கடலிலே தொழில் செய்யமுடியாத நிலைமை, ஆறு மற்றும் குளங்களில் தொழில் செய்ய முடியாத நிலை, வயலில் தொழில் செய்யமுடியாத நிலையென எமது தமிழ் மக்கள் தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முடக்கப்பட்டுள்ளனர்.
எமது தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்ட வகையில் அபகரிக்கப்படுகின்ற நிலைமைகள் காணப்படுகின்றன. நிலமில்லையேல் எமக்கு எதுவுமில்லை.
குறிப்பாக வனவளத் திணைக்களத்திடம் மாத்திரம் 4,32,486 ஏக்கர் காணிகள் காணப்படுகின்றன. ஆனால் விடுதலைப்புலிகளின் காலத்தில் 2,22,006 ஏக்கர் நிலங்களே வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டிற்குப் பிறகு 2 இலட்சம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களை வனவளத் திணைக்களம் அபகரித்து வைத்திருக்கிறது.
இவ்வாறு அரச திணைக்களங்களால் எமது தமிழ் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு தொழில் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தமிழர்கள் முடக்கப்படுகின்ற நிலையில் எமது மக்கள் பெருமளவானோர் தாயகப் பரப்பிலிருந்து புலம்பெயர்ந்து செல்கின்ற நிலைமைகளும் காணப்படுகின்றன. இவ்வாறாக தாயகப்பரப்பில் தமிழர்களின் பெருக்கம் குறைவடைந்து செல்கின்ற நிலைமைகளும் ஏற்படுகின்றன.
அந்த வகையில் கடந்த காலத்தில் இலங்கை அரசால் தமிழின அழிப்புக்கள் நடத்தப்பட்டன. தற்போது தாயகப் பரப்பிலுள்ள எமது தமிழ் தேசிய இனத்தின் மீது கட்டமைக்கப்பட்ட இன அழிப்புச் செயற்பாடுகளை இலங்கை அரசு கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது.
கடந்தகால அரசாங்கங்கள் மிக அதிகளவில் ஆக்கிரமிப்புக்களையும், அபகரிப்புச் செயற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டிருந்தன. தற்போதைய அரசும் அந்த நிலையிலிருந்து மாறுபட்ட ஒரு அரசாகத் தெரியவில்லை. எமது மக்களின் அபகரிக்கப்பட்ட நிலங்கள் விடுவிக்கப்படும் எனக் கூறுகிறார்களே தவிர விடுவிப்பதாகத் தெரியவில்லை.
அந்த வகையிலே தற்போது நாம் செஞ்சோலைப் படுகொலையில் உயிரிழந்தவர்களை அஞ்சலிப்பதற்கு கூடியிருக்கின்றோம். இத்தகைய படுகொலைகளைச் செய்தவர்களுக்கு இறைவனால் உரிய தீர்ப்பு கிடைக்கும் என நம்புகின்றோம்.
குறிப்பாக, கோட்டாபய ராஜபக்ஷ பேராதரவுடன் ஆட்சிப் பொறுப்பேற்று அந்த மக்களாலேயே துரத்தியடிக்கப்பட்ட வரலாறுகளை நாம் கண்டிருக்கிறோம்.
எனவே, தமிழ்த் தேசிய இனத்தின் மீது இன அழிப்பு நடத்திய, கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு நடத்தியவர்கள் அதற்கு உரிய பொறுப்புக்கூறலைச் செய்கின்ற காலம் வரும். உரிய தீர்வு கிட்டும். அதற்காக நாம் அனைவரும் காத்திருப்போம்.
படுகொலைகளின் போதும் எமக்கான விடுதலைக்காக போராடி உயிரிழந்தவர்களுக்கும் தொடர்ந்தும் அஞ்சலிகளைச் செலுத்துவோம் என்றும் அவர்களை நினைந்திருப்போம் எனத் தெரிவித்தார்.
தமிழர்கள் மீதான இன அழிப்பு தற்போது கட்டமைக்கப்பட்ட இன அழிப்பாக நீட்சி பெற்றுள்ளது - ரவிகரன்
ஊடகவியலாளர் குமணனை மீண்டும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணை அழைத்துள்ளனர்
கொழும்பில் கொண்டாடப்பட்ட இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம்
கொழும்பில் கொண்டாடப்பட்ட இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம்
Published By: PRIYATHARSHAN
15 AUG, 2025 | 01:36 PM
இந்தியாவின் 79 ஆவது சுதந்திர தினம் இன்று 15ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கையின் பல பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், கொழும்பில் நடைபெற்ற முக்கிய நிகழ்வு இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான ‘இந்திய இல்லம்’ இல் நடைபெற்றது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய தேசியக் கொடியை ஏற்றி வணக்கத்தை செலுத்தினார். அணிவகுப்பு மரியாதையில் கலந்துகொண்டதுடன் 79 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய குடியரசுத் தலைவரின் உரையின் சில பகுதிகளைவும் வாசித்தார்.
சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் - நள்ளிரவில் கைது
பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
படகு பழுதாகி கடலில் அந்தரித்த யாழ். மீனவர்கள் இருவர் தமிழக மீனவர்களால் மீட்பு!
படகு பழுதாகி கடலில் அந்தரித்த யாழ். மீனவர்கள் இருவர் தமிழக மீனவர்களால் மீட்பு!
படகு பழுதாகி கடலில் அந்தரித்த யாழ். மீனவர்கள் இருவர் தமிழக மீனவர்களால் மீட்பு!
ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து!
ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து!
ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து!
சென்னை: சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு ரஜினிகாந்தின் புகழ் வாழ்வும், பெற்ற பெருவெற்றிகளும் என்றும் வழிகாட்டும் வாழ்வியல் பாடங்களாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்த் திரையுலகின் தன்னிகரில்லா உச்ச நட்சத்திரமாக, தனிப்பெரும் ஆளுமையாகத் திகழும் ரஜினிகாந்த் தம்முடைய திரைவாழ்வின் பொன்விழா ஆண்டினை காண்பது மிகுந்த மனமகிழ்வை தருகின்றது.நீண்ட நெடிய தம் கலைப்பயணத்தில் இரண்டு தலைமுறை இளையோர், பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் திரைக்கலைஞராக திகழ்ந்து, தொடர்ந்து 50 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக ஒளிர்வது இந்தியப் பெருநாட்டில் இதுவரை எவரும் நிகழ்த்திடாத ஈடு இணையற்ற தனிமனித பெருஞ்சாதனையாகும்.
இந்தியப் பெருநாட்டைக் கடந்து, உலகம் முழுக்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களால் ரசித்து கொண்டாடப்படும் அவருடைய நடிப்புத்திறன் வியந்து போற்றத்தக்கதாகும்.
1975 ஆம் ஆண்டு நடிகராக தனது கலைப்பயணத்தை தொடங்கியபோது இருந்த ஆர்வமும், வேகமும், தேடலும் கொண்டு துடிப்புடன் நடித்து, ஏற்ற கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தாரோ, இன்றளவும் சற்றும் குறைவின்றி உழைப்பினைச் செலுத்தும் அவருடைய அர்ப்பணிப்புதான், அவரின் திரைப்படங்கள் ஒவ்வொன்றையும் இமாலய வெற்றிகள் பெறச் செய்தன. சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு அவருடைய புகழ் வாழ்வும், பெற்ற பெருவெற்றிகளும் என்றும் வழிகாட்டும் வாழ்வியல் பாடங்களாகும்.
எந்நிலை உயர்ந்தாலும் தன்னிலை மாறாது இனிமையாகவும், எளிமையாகவும் பழகும் ஆகச்சிறந்த மானுடப் பண்பினை இயல்பிலேயே கொண்ட தமிழ்த்திரையின் உச்சநட்சத்திரம் ரஜினிகாந்த், என்னுடைய நெஞ்சம் நிறைந்த பொன்விழா ஆண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
ரஜினிகாந்த், இன்னும் பற்பல ஆண்டுகள் தம் இனிய கலைப்பயணத்தைத் தொடர வேண்டுமென்ற எம் பெருவிருப்பத்தைத் தெரிவிப்பதோடு, 'கூலி' திரைப்படம் மாபெரும் வெற்றிப்படைப்பாக அமைய என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்' எனத் தெரிவித்துள்ளார்
ரஜினியின் உழைப்பு இளைஞர்களுக்கான வாழ்வியல் பாடம் - ‘கூலி’க்கு சீமான் வாழ்த்து! | Rajinikanth hard work is a life lesson for the youth Seeman congratulates to coolie - hindutamil.in
படகு பழுதாகி கடலில் அந்தரித்த யாழ். மீனவர்கள் இருவர் தமிழக மீனவர்களால் மீட்பு!
படகு பழுதாகி கடலில் அந்தரித்த யாழ். மீனவர்கள் இருவர் தமிழக மீனவர்களால் மீட்பு!
படகு பழுதாகி கடலில் அந்தரித்த யாழ். மீனவர்கள் இருவர் தமிழக மீனவர்களால் மீட்பு!
யாழ்ப்பாணம் காங்கேசந்துறையைச் சேர்ந்த இரு மீனவர்கள், படகு பழுதடைந்து நடுக்கடலில் அந்தரித்த நிலையில், தமிழக மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறைப் பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காகச் சென்ற வினோத்குமார், சிந்துஜன் ஆகிய இரண்டு மீனவர்களுமே, நடுக்கடலில் அந்தரித்த நிலையில், தமிழக மீனவர்களால் மீட்கப்பட்டு கடலோரக் காவற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
படகு பழுதாகி கடலில் அந்தரித்த யாழ். மீனவர்கள் இருவர் தமிழக மீனவர்களால் மீட்பு!
யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்!
யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்!
யாழ். காங்கேசன்துறையை வந்தடைந்த அதிசொகுசு கப்பல்!
இந்தியாவிலிருந்து MV Express அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல் ஒன்று யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.
இன்று (15) மாலை வரை குறித்த கப்பல், காங்கேசன் துறையில் தரித்து நிற்கும் என துறைமுக அத்தியட்சகர் த.பகீரதன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து புறப்பட்ட குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை, திருகோணமலை ஊடாக காங்கேசன்துறையை வந்தடைந்துள்ளது.
10 தளங்களை கொண்ட மிகவும் பிரமாண்டமான இந்த கப்பலானது இந்தியாவில் இருந்து சுமார் 1,391 சுற்றுலாப்பயணிகளுடன் புறப்பட்ட நிலையில் சுமார் 584 ஊழியர்கள் பணி புரிகின்றனர்.
குறித்த கப்பலானது கடந்த 2023 ஆம் ஆண்டு 9 தடவைகளும், 2024ஆம் ஆண்டு 6 தடவைகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நபருக்கு நீதி வேண்டி புங்குடுதீவில் போராட்டம்!
வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நபருக்கு நீதி வேண்டி புங்குடுதீவில் போராட்டம்!
15 Aug, 2025 | 06:03 PM
புங்குடுதீவு தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுத்த கொடியை பறக்கவிட்டு, பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 ஆம் திகதி அன்று தனது வீட்டில் இருந்தவேளை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை அற்புதராசா (அகிலன்) அவர்களின் கொலைக்கு நீதிவேண்டியும் கொலையாளிகளை விரைந்து கைதுசெய்யக்கோரியும் இந்த போராட்டம் சுமார் இரண்டு மணிநேரம் இடம்பெற்றது.
இதனால் புங்குடுதீவு - யாழ்பாணம் இடையேயான போக்குவரத்து சேவைகள் இன்றையதினம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட நபருக்கு நீதி வேண்டி புங்குடுதீவில் போராட்டம்! | Virakesari.lk