Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 369 online users.
» 0 Member(s) | 366 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,655
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,396
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,735
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,325
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,714
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,617
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,662
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 39,217
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,089
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,300

 
  விஜய் 29 இல்...
Posted by: kuruvikal - 06-23-2003, 01:27 PM - Forum: சினிமா - Replies (37)

<img src='http://www.thatstamil.com/images8/cinema/vijayhelp-250.jpg' border='0' alt='user posted image'>

தற்போதய தென்னிந்திய திரைப்பட நடிகர்களில் முன்னிலை வகிக்கும் நடிகர் விஜய் தனது 29 வது பிறந்ததினத்தை ஆதரவற்ற குழந்தைகள் முதியவர்கள் ரசிகர்களுடன் பரிசில்கள் வழங்கிக் கொண்டாடினார். விளம்பர நோக்கமிருந்தாலும் பல மக்கள் பயன் பெறத்தக்கதாக பிறந்த நாளைக் கொண்டாடிய விஜயை குருவிகளும் வாழ்த்துகின்றன!

Print this item

  தீ சுமந்த மனசு
Posted by: sharish - 06-23-2003, 09:51 AM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

[b]தீ சுமந்த மனசு

என் அன்புத் தாய்மொழியே
என்றும் அழியாத தமிழ்மொழியே
தாயை நினைத்தே தவிக்கிறேன்
தமிழை நினைத்தே துடிக்கிறேன்-நீ
தடக்கி விழுவதை படிக்கிறேன்
இன்று...
நினைவில் தீயைச் சுமக்கிறேன்

உலகம்முழுதும் பேசும் மொழியென
பெருமை கொண்டாய் நேற்று-உன்
உயிரைச் சுமந்து அலைந்து திரிகிறாய்
இதுதான் நிலமை இன்று

சொந்த மண்தன்னை இழந்து வந்தாய்
பாவி சிங்களத்தாலே-உன்
சொந்த மொழியாம் தமிழை மறந்தாய்
கோவில் மந்திரத்தில் கூட

மூட நம்பிக்கை மூடிக்கிடந்தால்
முளைக்காதப்பா விதைப்பு
தூங்கிக் கிடக்கும் புதியதமிழரை
தூயதமிழ் கொண்டெழுப்பு

சொந்தமொழியை மறந்து திரிந்தாய்
அந்தக்காரணம் என்னா...?-நீ
மந்திரம் சொல்வதும் மாற்றான் மொழியில்
அந்தக்காரணம் என்னா..?

மூடநம்பிக்கை சேற்றில் குதித்தாய்
முந்தைய மூடர்களாலே-நீ
மூச்சுத்தினற மூழ்கித்தவித்தாய்
அந்தக்காரணம் என்னா..?

மூடநம்பிக்கை மூடிக்கிடந்தால்
முளைக்காதப்பா விதைப்பு
தூங்கிக் கிடக்கும் புதியதமிழரை
தூயதமிழ் கொண்டெழுப்பு


த.சரீஷ்
பாரீஸ்(13.06.2003)

Print this item

  அவளுக்காக....
Posted by: sharish - 06-23-2003, 09:43 AM - Forum: கவிதை/பாடல் - Replies (1)

<b>அவளுக்காக....</b>

காலைப்பொழுதில்
பொன்விழா ஒன்றில்
தீபங்கள்ஏந்தி நீ
வந்துநின்றாய் வாசலிலே
ஆனால்...
என் இதய வாசலெங்கும் நீ
ஏந்திவந்தது தீபங்கள் அல்லா
தீப்பந்தங்கள்..!

என் மனவானானில் பறப்பதற்கு
இடமில்லையென்றா
புறப்பட்டுச் சென்றாய்..?
என் மலர்தோட்டத்தில்
உனக்கு மலரில்லை என்றா
மறந்து சென்றாய்..?

இப்போது பார் உனக்காக...
பலரின் பார்வைகளைத்தாண்டியும்
என் தோட்டத்தில்
விண்மீன்களைக்கூட மலர்களாக்கி
மலர்த்தியிருக்கிறேன்

மயங்கிக்கிடந்தேன் மங்கையே
என் மயக்கம் கலைத்ததுன்
மர்மவிழிகள்தான்
பல ராகங்கள்
என்னைச்சுற்றி சங்கீதம் பாடும்போதும்
அந்த சந்தங்கள் கூட
சத்தம்போடும் ஓசையாய்தான்
எனக்குள்...!
சில காதல்மேகங்கள்
என்னைச்சுற்றி காதல் மழைதூவ
கவியும்போதும்...
மோதல்காரர்கள் என்னை
சுற்றிவளைப்பதுபோல்த்தான்
எனக்குள்...!

ஆனால்...
உன்குரல் கேட்டுத்தான்
மயக்கம் தெளிந்தேன்
கண்கள் விழித்து
உறக்கம் கலைத்து
காத்திருந்த எனக்கு
கடைசியிலே மிஞ்சியது
கன்னத்தில் கீறிய
கண்ணீர் ஓவியங்கள்தான்

கண்ணீர் விழுந்து
கரைந்துவிடும் என்றா-உன்
கண்மைதொட்டு கவிதை
வரைந்திருப்பேன்...!?

கன்னத்தைக் கண்ணீர்
நனைக்குமென்றா எண்ணத்தில்
உன்னைவைத்து காவியம்
படைத்திருப்பேன்..!?


த.சரீஷ்
17.06.2003(பாரீஸ்)

Print this item

  இன்றைய செய்தி தாயகத்திலிருந்து
Posted by: Paranee - 06-23-2003, 08:58 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (40)

இன்றைய செய்தி தாயகத்திலிருந்து
வணக்கம்

இன்று கொழும்பு தெஹிவளையில் உள்ள பொலிஸ் காவலரனில் நுழைந்த ஆயுதம் தாங்கிய உறுப்பினர் ஒருவர் பயங்கரவாத தடுப்பு பரிவைச்சேர்ந்த அத்தியட்சகர் ஒருவரை சுட்டுக்கொன்றுவிட்ட சயனைட் அடித்துள்ளார். சயனைட் அடித்தவர் சீரியஸான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புலிகிளன் மீது சந்தேக பார்வை திரும்பியுள்ளதாகவும் அறிய முடிகின்றது.

தகவல்
தாயகத்திலிருந்து நண்பர்கள்

நன்றி
பரணீ

Print this item

  புலிகளுக்கு எதிரான தடை நீக்கம்
Posted by: தமிழன் - 06-22-2003, 10:57 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (27)

கனடாவில் தமிழீழ தேசிய இராணுவத்தின் மீது போடப்பட்ட பயங்கரவாத தடை நீக்கம்

சந்தோசம் தானே

சான்று

http://www.canoe.ca/WinnipegNews/ws.ws-06-23-0019.html

Print this item

  எங்கே போகிறது யாழ்ப்பாணம்...
Posted by: kuruvikal - 06-22-2003, 11:05 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (195)

செய்திகள்...
கீரிமலைப் பகுதியில் 800 ஆட்டுக்காடாக்கள் கோவில் திருவிழாவொன்றில் பலியிடப்பட்டன.

கோஷ்டி மோதல்களால் வீடுகள் பாலர் பாடசாலைகள் சனசமூக நிலையங்கள் சேதம் அத்துடன் வீதியில் செல்லும் யுவதிகள் மீது 'சேட்டைகள்' வீதி மோதல்கள் அதனால் வயோதிபர்களும் மற்றும் பொது மக்களூம் பாதிப்பு.

செய்திகள் உதயன்.

இதே செய்திகளோடு சிறிலங்கா இராணுவ பொலிஸ் ஆக்கிரமிப்புக்கு முன்னிருந்த யாழ்ப்பாண நிலைமைகளையும் ஒப்பிட்டால் செல் அடிகளும் பொம்பர் அடிகளும் தூசாகத்தான் தெரிகிறது!
இவ்வளவு உயிர் தியாகங்களின் பின்னும் கல்வி அறிவு உயர்ந்த யாழ்ப்பாண சமூகம் இப்படி மூட நம்பிக்கைகளிலும் சமூகப் பொறுப்பற்ற செயல்களிலும்தன்னை இடுபடுத்திக் கொள்வது மன்னிக்க முடியாத குற்றங்கள். இவற்றை முளையிலையே கிள்ளி எறிய வேண்டும்! எமது மக்களிற்கு தென் பகுதி ,மேற்கத்தைய அநாகரிகங்கள் தேவையில்லை! அவை எமது சமூகத்தை சீரழிக்குமே ந்றி சீர்படுத்தாது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாகவே காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து இச் சமூகச் சீரழிவுக்கான காரணிகளை அடியோடு ஒழிக்க வேண்டும்!

தேசம் விடுதலைக்காககவும் சமூக உயர்வுக்காகவும் தம்முயிரை துச்சமென மதித்து அளப்பரிய தியாகங்கள் செய்த தியாகிகள் வாழ்ந்த மண்ணில் அந்நியப் பாதுகாப்பில் சமூகச் சீரழிவென்றால் அதற்கு மக்களின் தெளிவற்ற சிந்தனைகளூம்சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கைகளுமே காராணங்களாகும். குறிப்பாக யாழ் பல்கலைக்கழக சமூகமும் பாடசாலைச் சமூகமும் இது தொடர்பில் மக்களையும் இளைஞர்களையும் விழிபுணர்வுடன் செயற்பட வழிகாட்ட வேண்டும்!

இல்லையேல் ஆயிரமாயிரம் உயிர்களின் அளப்பரிய தியாகங்களால் நமது சமூகம் கண்டது பூச்சியமாகவே அமையும்!

:evil: Idea :evil:

Print this item

  சேதுவும் யாழ் களமும்
Posted by: kuruvikal - 06-22-2003, 10:03 AM - Forum: உங்கள் கருத்துக்கள் - Replies (29)

சேது என்ன நோக்கம் கருதிச் செய்கிறாரோ அது அவருக்கே வெளிச்சம் ஆனால் பெரும்பாலும் இன்றுடன் 1000 கருத்துக்களுக்கு மேல் விட்டு இக்களத்தை நல்ல குப்பைத்தொட்டியாக்கி விடுவார் என்பது நிச்சயம்.
மோகன் அண்ணாவும் களப் பரிசோதகர்களை அதிகரித்த போதும் சேதுவை கட்டுப்படுத்த முடிடவில்லை. சேதுவின் பல செய்திகள் ஏனைய தளங்களில் இருந்து பெறப்பட்டவை. நேரடியாக தளங்களின் முகவரியை கொடுத்தாலே பலரும் அங்கு சென்று பார்ப்பார்கள்.இது கருத்தாடல் களமா அல்லது சேதுவின் தனிப்பட்ட இணையத்தளமா என சந்தேகம் வருகிறது. ஏனெனில் அவரே செய்தியும் விடுகிறார் அவரே பதிலும் எழுதுகிறார். இப்படியே போனால் இக்களத்தின் பெறுமதிதான் என்ன? சேது பழைய களத்திலும் சில நாட்கள் இப்படிச் செய்து பின் சுட்டிக்காட்டிய பின் இப்படியான செயல்களை குறைத்துக் கொண்டார். இது சேது நன்கு தெரிந்து செய்யும் காரியம் நண்றி எழுதுதல் போல.
மோகன் அண்ணா தயவு செய்து இக் களத்தின் பெறுமதி கருதி சேதுவுக்கு காட்டமாம அறிவுறுத்தல் வழங்கி அவரால் சீரழியும் கள ஒழுங்குகளையும் விதிகளையும் பேணா உதவுமாறு குருவிகள் இக் களத்தின் எதிர்கால நிகழ்கால பெறுமதி கருதி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றன!
சேதுவும் குருவிகள் மீது கோபப்படாது தனது செயலின் தவறை உணர்ந்து செயற்பட அவரையும் குருவிகள் தாழ்மையாகக் கோரி நிற்கின்றன!

நன்றிகள்.

Print this item

  பாட்டும் வேட்டும்!
Posted by: sOliyAn - 06-22-2003, 03:33 AM - Forum: நகைச்சுவை - Replies (24)

இங்கே அசலை கேட்டுவிட்டு. கீழே நகலை பார்க்கலாமே! அன்பே அன்பே.. என்ற பாடல்

காசே காசே கொல்லாதே
கடனே என்னை தின்னாதே - புண்ணாய்
எனதினி இதயத்தை நசுக்காதே! - நிதமும்
எந்தனின் சுகங்களைத் தொலைக்காதே!
- காசே காசே
காசே உனது பெறுமதி பார்த்தேன் - அடடா
கனவின் உச்சமடி
சற்றே உழைத்தேன் என்னுடன் வைத்தேன் - ஏனோ
சென்றாய் உடனையடி
உழைப்பிலை பிடித்து உடனையே மறைந்து
தினந்தோறும் வதைக்கும் பேப்பரடி
அச்சினில் விளைந்தே ஆளையே முழுங்கும்
மனிதர்கள் வடித்த கோரமடி
இதுவரை மண்ணில் பார்த்ததில் எல்லாம்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தமும் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி

பெண்குரல்:
வாங்கில் வைத்த காசே காசே அவன்
உள்ளக் கிடக்கை அறிவாயா
தேங்கி நிற்கும் காசே காசே அவன்
மனமும் குணமும் அறிவாயா
கனவு கண்ட காசே காசே
அருகே போக நினைப்பாயா
அருகே போனால் காசே காசே
அவனை மாற்ற நினைப்பாயா?

அழகிய உன்னில் சீட்டுகள் கட்டி
இங்கே எனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் சிறக்க எங்களுள் பார்த்து
வட்டிக்கும் கொடுத்து படுத்திருப்பேன்
வட்டியை எடுத்து இனசனம் பெருக்கி
என்னையே பெரிசாய் காட்டி நிற்பேன்
துாக்கத்தில் கனவில் நீவரும் போது
சீட்டை வட்டியை நான் நினைப்பேன்
பளபள நோட்டாய் நீ வரும்போது
நடுநிசி இரவில் குடை பிடிப்பேன்
உற்தன் அருமை அறிவேன் அறிவேன்
கனவில் கூட நான் நினைப்பேன்
- காசே காசே..

Print this item

  தாயகத்து அரசியல் கட்டுரைகள்
Posted by: sethu - 06-21-2003, 08:59 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (113)

தாயகத்து அரசியல் கட்டுரைகள் தவல் எரிமலைசிகரங்களைத் தொட்ட பின்னும் இன்னும் பெண்....

இரு மனங்கள் இணைந்து நடைபெறும் திருமணங்கள் மூலம் அமையப்பெறும் குடும்பங்கள் கணவன், மனைவி இருவராலுமே கொண்டு நடத்தப்பட வேண்டும். அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் புரிந்துணர்வின் அடிப்படையில் இருவராலும் மேற்கொள்ளப்படுவதாகவே அமைய வேண்டும். இருவரும் சமமே மதிக்கப்படவேண்டும்.


ஆணையே தலைவனாகக் கொண்டியங்கும் குடும்ப அமைப்பைக் கொண்டது எமது சமூகம். ஒரு வீட்டில் ஆணே சகலதையும் தீர்மானிப்பவனாகிறான். அவனே சகலதுமாகிறான். சிறு வயதிலிருந்து தனது தந்தையே உணவிலிருந்து எதையும் தீர்மானிப்பவனாக இருப்பதைப் பார்த்து வரும் ஒரு பெண், தன்னியல்பாகவே தீர்மானங்களுக்காக ஆணை எதிர்பார்க்கும் மனநிலைக்கு உள்ளாகிறாள். தந்தையும் பின்னர் தமையனும், பின்னர் கணவனும், பின்னர் தனயனும் கூட அவளுக்கான முடிவுகளை எடுக்க அப்பெண்ணும் அது தொடர்பான எவ வித மறுப்புணர்வுமின்றி அவர்களின் ஆளுகைக்குள் உட்படுகின்றாள். தாமே சிந்தித்து சுயமே முடிவெடுக்கும் ஒரு சில பெண்கள் கூட ஆண் தன்மை கொண்டவர்களாகவே வர்ணிக்கப்படுகின்றனர்.
ஒரு வீட்டில் ஆணின் ஆதிக்கம் உணவு விடயத்தில் ஆரம்பமாகிறது. "என்னப்பா சமையல் செய்யிறது?" எனும் மனைவியின் அங்கீகாரத்துடன் இது ஆரம்பமாகும். ஒரு சில குடும்பங்களில் பிள்ளைகளின் விருப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்தாலும் கணவனின் விருப்பு புூர்த்தி செய்யப்பட்ட நிலையில் அவை மேலதிகமாகவே அமையும். பிள்ளைகளில் கூட ஆண் பிள்ளைகளின் விருப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். வீட்டில் கணவனில்லாத சந்தர்ப்பங்களில் "அவரில்லைத்தானே இருக்கிறதைச் சாப்பிடுவோம்" என்ற முடிவு பெண்ணின் மனோபாவத்தைத் துல்லியமாகக் காட்டி நிற்கிறது.


மதியம் ஒரு மணிக்கு அரிசியில் நெல் பொறுக்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரிடம் "என்னன்ரி இப்ப நெல்பொறுக்கி எப்ப சமைச்சுச் சாப்பாடு கொடுக்கப் போகிறீர்கள்" என்று கேட்ட போது "தம்பி இரண்டு மணிக்கு வந்திடுவான். அதுக்கிடையிலே நான் சமைச்சிடுவேன்" என்ற பதிலில் வீட்டிலிருந்த மகள் கருத்திலெடுக்கப்படவில்லை என்பது புரிந்தது. அந்தத் தம்பி எத்தனை வயதுடையவனாக இருந்தபோதும் அவனது பசியே கருத்தில் கொள்ளப்படுவது வேதனையான உண்மை.


மாதம் மாதம் இயற்கையான குருதியிழப்பிற்குள்ளாகும் இளம் பெண் எதிர்காலத்தில் தாயாகவும் பொறுப்புக்களைச் சுமப்பதற்கும் பிள்ளைப்பேறு மூலம் ஏற்படும் குருதி இழப்பு, உடற்பல இழப்பு என்பவற்றை ஈடுசெய்யவும் அவள் சிறந்த உடல் நலம் உள்ளவளாகப் போசிக்கப்பட வேண்டும் என்பதைப் பெரும்பாலான தாய்மார் உணரத் தலைப்படவில்லை. தனது தாய், தனது தந்தையினதும், தமையனினதும், தம்பியினதும் உணவு தொடர்பான விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்பதையும் வீட்டிலுள்ள ஆண்களே முதலில் உண்ண வேண்டும் எனும் எழுதப்படாத சட்டம் ஒன்று பேணப்படுவதையும் சிறு வயதிலிருந்தே அறிந்து வரும் பெண் அவ வழியிலேயே தானும் செயற்படுவாள்.


கணவனே முதலில் உண்ண வேண்டும். அவனுக்கே சிறந்தது அனைத்தும் படைக்க வேண்டும் எனும் பெண்ணின் மனப்போக்கும், வீட்டில் என்ன இருக்கிறது இல்லை என அறியாமலேயே தான் உணவருந்திவிட்டுச் செல்லும் கணவனின் மனப்போக்கும் மாற்றப்பட வேண்டும். சேர்ந்திருந்து இருப்பதைப் பகிர்ந்துண்ணும் பழக்கம் பெரும்பாலான நமது குடும்பங்களில் இல்லாதிருப்பதும் இம்மனப்போக்கிற்கு ஒரு காரணமே.


உடை என்பதும் பெரும்பாலான பெண்களின் மீது திணிக்கப்பட்ட ஆணின் தீர்மானமாகவே காணப்படுகிறது. தனது உடல்நிலை, மனநிலைக்கேற்ப தான் எவ வாறு உடையணிய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவளுக்கு மறுக்கப்படுகிறது. பெரும்பாலும் கணவனும் சிலவேளைகளில் சகோதரர்களுமே அதைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். "அண்ணாவுக்குப் பிடிக்காது, அவருக்குப் பிடிக்காது" என்ற வாசகங்களின் பின் தமது ஆற்றாமையை மறைத்துக் கொண்டு உலாவருகிறார்கள் பல பெண்கள். அவ வாற்றாமை இயலாமையாக, பொறாமையாக, ஏக்கமாகப் பல பெண்களில் உருவெடுப்பதையும் அவதானிக்கலாம். "பொம்பிளை இப்படித்தான் இருக்க வேண்டும்" எனும் பண்பாட்டுக்கோலம் ஒன்றை வரைந்து உடும்புப்பபிடியாக பற்றிக் கொண்டிருக்கும் ஆணின் விருப்பிற்கேற்ப, தனது இயல்பு நிலைக்கு மாறாக, "இவருக்கு நான் இப்பிடி உடுப்புப் போடுவதுதான் விருப்பம். இவருக்கு நான் இப்படி பொட்டு வைக்கிறதுதான் விருப்பம்" என்று பெருமையாக வெளியில் கூறிக் கொள்ளும் பெண்களின் உள்மன ஏக்கங்கள் ஆழங்காணமுடியாதவை. தனது கணவனைத் திருப்திப்படுத்துவதற்கான இவ வியல்பான ஆர்வத்தை ஆண்கள் மேலும் துஸ்பிரயோகம் செய்து மேலும் தமது திணிப்பை மேற்கொள்கின்றனர். தான் ஆசைப்பட்டதை நிறைவேற்ற முடியாத பெண். தன் இயல்பு நிலைக்கேற்ப வாழமுற்படும் இன்னொரு பெண்ணை "பொம்பிளை இப்பிடித்தான் நடக்கிறது" என விமர்சிக்க முற்படுவது அவளின் ஆதங்கத்தின் இயலாமையின், ஏக்கத்தின் வெளிப்பாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


தனது உடல்நலக் குறைபாடுகளுக்கான சிகிச்சைக்குக் கூட ஒரு பெண் முடிவெடுக்கத் தயங்கி கணவனது அல்லது மகனது முடிவுக்காகக் காத்திருக்கும் சந்தர்ப்பங்கள் பல உண்டு.


"கர்ப்பப்பை இறக்கம்" எனும் உடல்நலக்குறைபாட்டுடன் வந்த இருபெண்கள் கூறிய வார்த்தைகள் என்னை வேதனைப்பட வைத்தன. அப் பெண்கள் இருவருமே நடுத்தர வயதைத் தாண்டியவர்கள். இருவருமே இவ உடல்நலக் குறைபாட்டினால் பல உடல் உபாதைகளை அனுபவிப்பவர்கள். உடன் தீர்க்கப்படவேண்டிய அவ வுபாதைகளுக்காகவே மருத்துவரை நாடிவந்திருந்தார்கள். மேற்கொள்ளப்படக்கூடிய ஒரேயொரு இலகுவான சிகிச்சை முறையை வைத்தியர் கூறியபோது இருவரது தயக்கமும் பதிலும் திகைப்பையே அளித்தது. ஒரு பெண் "இவரைக் கேட்கவேணும். பேசுவாரா" என்றார். அடுத்த பெண் - "மகன் வவுனியா போட்டார். வந்த பிறகு கதைச்சிட்டுத்தான் சொல்லுவன்" என்றார். ஆணின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதில் ஏற்படும் விளைவுகள் உயர்த்தப்பட்டபோதும் கூட அவர்களின் தயக்கம் ஒன்றையே உணர்த்தியது. இதுவரை காலமும் தங்களுக்கான எந்த முடிவையும் தீர்மானித்து அப்பெண்களுக்குப் பழக்கமில்லையென்பதே.


கணவன் மனைவி இருவராலுமே இணைந்து தீர்மானிக்கப்பட வேண்டிய குழந்தைப்பேறு கூட ஏதேச்சதிகாரமாய் ஆணாலேயே தீர்மானிக்கப்படுவதே உண்மை. பல உடல்நலக்குறைபாடுகள் உபாதைகளும், சிரமங்களுமாய் பத்துமாதம் சுமப்பவளும், வலி, வேதனை, கருதியிழப்பு எனப் பிரசவத்தில் நொந்து போபவளும், இரவிரவாய் கண்விழித்து குழந்தையை வளர்ப்பவளும் பெண்ணாய் இருக்க, பிள்ளைகளைத் தீர்மானிப்பது மட்டும் ஆணின் கையில் இருக்கிறது. இதயமும் நுரையீரலும் எப்படி அவளுக்காகச் செயற்படுகின்றனவோ, அதே போன்ற உறுப்பான கர்ப்பப்பைக்கு மட்டும் அவளுக்காகச் செயற்படும் உரிமையில்லை. அவளது கருவறையின் பொறுப்பாளனாகக் கணவனே உள்ளான். பல பிள்ளைகளைப் பெற்றுக் களைத்து, நிரந்தரமாக கருத்தடை செய்ய ஆர்வத்துடன் விபரம் கேட்கும் பெண், "அவருக்கு விருப்பமில்லை" என முகத்தை தொங்கப்போட்டவாறே கூறும் சம்பவங்கள் பல.


அவருக்காவவே வாழ்ந்து வெளியிட முடியாப் பல ஏக்கங்களுடனேயே இறந்து போகும் பெண்கள் தங்களுக்காகவும் ச}றிது வாழ முற்பட்டால் என்ன? தனக்காகவும் உண்டு, தனக்காகவும் உயிர் வாழ்ந்து, தனக்காகவும் சிந்தித்து பெண் வாழப்போவது எப்போது?


தந்தையும் கணவனும் தமையனும் தனையனும் தனக்காகச் சிந்திப்பதும் தன்னை கீழானவளாக மதிப்பதுமே இயல்பு என்ற நிலையில் வாழும் பெண்ணைத் தட்டியெழுப்பி "விழி! எழு! இதோ பார்! ஒரு ஆணைப்போன்றே நீயும் ஆறறிவு படைத்தவள், சிந்திக்கும் திறன்மிக்கவள், ஆணைவிடவும் பெண்ணே சிந்திக்கும், முடிவெடுக்கும் ஆற்றல்மிக்கவள்" என்று கூறி அவளை அவள் கூட்டிலிருந்து வெளிக்கொணர்தல் ஒரு தலையாய பணியே!
கு.தீபா

Print this item

  வன்னி ரெக்....
Posted by: kuruvikal - 06-21-2003, 12:17 PM - Forum: தமிழீழம் - Replies (7)

வன்னி ரெக் என அழைக்கப்படவுள்ள உயர் தொழில் நுட்ப நிறுவனம் வரும் திங்கட்கிழமை கிளிநொச்சியில் திறக்கப்படவுள்ளமை...வடபுலத்தில் அமையவுள்ள முதல் வெளி நாட்டு கல்வித்தரத்துக்கு இணையான உயர் தொழில் நுட்ப நிறுவனமாகும்! வடபுலமும் சரி கிழக்கும் சரி இது வரை ஒரு பொறியல் பீடத்தை அங்கு இயங்கும் இரு வேறு பல்கலைக்கழகங்களிலும் அமைக்க சிறிலங்கா அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை வெறும் நில ஒதுக் கோடு பல காலம் ஓடிவிட்டது!
இவ் உயர் கல்வி நிறுவன திறப்பு ஈழத்து மாணவ மணிகள் அமெரிக்க கல்வித்தரத்துக்கு ஒப்பான கல்வியைப் பெற வழிவகுக்கும்!
இவ்வளப்பரிய கல்விச் சேவையை செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் மாணவர்களாகிய எமது பாராட்டுக்கள்....பேராசிரியரும் யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச புகழ் பெற்றவருமான பேராசிரியர் துரைராஜாவின் கனவுகளில் ஒன்று நிறை வேறுவதை இட்டு மக்கள் மகிழ்வு கொள்ளவேண்டும்!
ஈழத்து மாணவமணிகளே இது உங்களூக்கு கிடைத்த ஒரு வரமெனக் கருதி உங்கள் கல்வியை தொடர வாழ்த்துக்கள்! கடந்த காலங்களில் சரியான கல்வி வாய்ப்பின்றி பல மாணவர்கள் தமது கல்வியை பாதியில் நிறுத்திக் கொண்ட துன்ப நிலை களையும் காலம் ஈழத்துக்கு வரும் காலம் நெருங்கிவிட்டது எனவே மாணாவர்களே சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறோம்!

தகவல் தமிழ் நெற்...தொடுப்பு...
http://news.tamilnet.com/art.html?catid=13&artid=9258

Print this item