![]() |
|
எங்கே போகிறது யாழ்ப்பாணம்... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: எங்கே போகிறது யாழ்ப்பாணம்... (/showthread.php?tid=8345) |
எங்கே போகிறது யாழ்ப்ப - kuruvikal - 06-22-2003 செய்திகள்... கீரிமலைப் பகுதியில் 800 ஆட்டுக்காடாக்கள் கோவில் திருவிழாவொன்றில் பலியிடப்பட்டன. கோஷ்டி மோதல்களால் வீடுகள் பாலர் பாடசாலைகள் சனசமூக நிலையங்கள் சேதம் அத்துடன் வீதியில் செல்லும் யுவதிகள் மீது 'சேட்டைகள்' வீதி மோதல்கள் அதனால் வயோதிபர்களும் மற்றும் பொது மக்களூம் பாதிப்பு. செய்திகள் உதயன். இதே செய்திகளோடு சிறிலங்கா இராணுவ பொலிஸ் ஆக்கிரமிப்புக்கு முன்னிருந்த யாழ்ப்பாண நிலைமைகளையும் ஒப்பிட்டால் செல் அடிகளும் பொம்பர் அடிகளும் தூசாகத்தான் தெரிகிறது! இவ்வளவு உயிர் தியாகங்களின் பின்னும் கல்வி அறிவு உயர்ந்த யாழ்ப்பாண சமூகம் இப்படி மூட நம்பிக்கைகளிலும் சமூகப் பொறுப்பற்ற செயல்களிலும்தன்னை இடுபடுத்திக் கொள்வது மன்னிக்க முடியாத குற்றங்கள். இவற்றை முளையிலையே கிள்ளி எறிய வேண்டும்! எமது மக்களிற்கு தென் பகுதி ,மேற்கத்தைய அநாகரிகங்கள் தேவையில்லை! அவை எமது சமூகத்தை சீரழிக்குமே ந்றி சீர்படுத்தாது. எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாகவே காத்திரமான நடவடிக்கைகளை எடுத்து இச் சமூகச் சீரழிவுக்கான காரணிகளை அடியோடு ஒழிக்க வேண்டும்! தேசம் விடுதலைக்காககவும் சமூக உயர்வுக்காகவும் தம்முயிரை துச்சமென மதித்து அளப்பரிய தியாகங்கள் செய்த தியாகிகள் வாழ்ந்த மண்ணில் அந்நியப் பாதுகாப்பில் சமூகச் சீரழிவென்றால் அதற்கு மக்களின் தெளிவற்ற சிந்தனைகளூம்சமூகப் பொறுப்பற்ற நடவடிக்கைகளுமே காராணங்களாகும். குறிப்பாக யாழ் பல்கலைக்கழக சமூகமும் பாடசாலைச் சமூகமும் இது தொடர்பில் மக்களையும் இளைஞர்களையும் விழிபுணர்வுடன் செயற்பட வழிகாட்ட வேண்டும்! இல்லையேல் ஆயிரமாயிரம் உயிர்களின் அளப்பரிய தியாகங்களால் நமது சமூகம் கண்டது பூச்சியமாகவே அமையும்! :evil: :evil:
Re: எங்கே போகிறது யாழ்ப் - GMathivathanan - 06-22-2003 kuruvikal Wrote:செய்திகள்...<!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> [size=12]அட போராட்டமே மூடநம்பிக்கையெண்டு ஆலாப்பறக்கிறாங்கள்.. இருந்ததையும் இல்லமல்ப் பண்ணிப்போட்டு இல்லாத பொல்லாத பொய்யெல்லாம் சொல்லுறாங்கள்.. அதாலைதான் இதாலைதான் எண்டு காரணம் சொல்லிக்கொண்டு திரியுறாங்கள்.. நீங்களும் அதுக்குள்ளை..
- sOliyAn - 06-22-2003 கீரிமலைப் பகுதியெண்டால் கவுணாவத்தையோ? :roll: - sethu - 06-22-2003 சோழியன் ஏன் அங்கை ஆடு வளமையாக வெட்டுற இடமோ? - Kanani - 06-22-2003 முதலில் இந்த மாமிசம் புசிக்கும் பழக்கத்தை மக்கள் கைவிட வேண்டும் அல்லது வெகுவாக குறைக்க வேண்டும் அப்படியென்ன மரக்கறி உணவு வகைகளிலில்லாத சத்து மாமிசத்தில் உண்டு? ஓரிரண்டு சத்துக்கள் வித்தியாசமாக இருக்குத்தான் ஆனால் அவற்றையும் தேடிப்பிடித்து மரக்கறிளில் எடுக்கலாம் அதற்காக இப்படியா உயிர்களைக்கொல்வது மாமிசம் புசித்தல், உயிர்களைக்கொல்தல் என்பன மக்களின் வக்கிர புத்தியை அதிகரிப்பதாகவே இருக்கும் அதன் விளைவுதான் இந்த கோஷ்டி மோதல்கள் - sethu - 06-22-2003 அப்ப சோயா நல்லது - kuruvikal - 06-22-2003 ஆம் சோழியன் அண்ணா அது கவுணாவத்தைதான்...செய்தியில் குறிப்பிட்டிருந்தார்கள் குருவிகள் அப்பகுதி மக்களின் மரியாதைக்கு பங்கம் விளைவிக்காத வகையில் தகவலைத் தந்தன! - sOliyAn - 06-22-2003 அப்படி அதில் மரியாதைக் குறைவு எதுவுமில்லை.. எனக்கு விருத்தெரிந்த காலத்தில்.. கவுணாவத்தை வேள்விக்கு சுழிபுரத்தில் இருந்துகூட 'ட்ராக்ரர்"களில் கிடாய் வாங்க அதிகாலையிலேயே செல்வார்கள்.. அத்துடன் வருடத்தில் வரும் கவுணாவத்தை வேள்விக்காக.. போட்டிபோட்டுக்கொண்டு கிடாய் வளர்ப்பதையும்.. வேள்வியன்று அதை மாலை அலங்காரங்களுடன் மேள தாளங்கள் சூழ ஊர்வலமாக அழைத்துச் செல்வதையும்.. இதில் ஆட்டு வளர்ப்பாளர்களிடையே யார் சிறப்பாக அமர்க்களப்படுத்துவது என்ற போட்டியுணர்வு சில இடங்களில் புலப்படுவதையும் கேள்விப்பட்டிருக்கிறேன்..பின்பு இந்நிகழ்வு தடைசெய்யப்பட்டது.. - sethu - 06-22-2003 ஆ பார்க்கும் தகுதியை நாம் இழந்துவிட்டோம் - S.Malaravan - 06-22-2003 அட இஞ்சையும் பக்கத்து விட்டு எசமான விசுவாங்கள குலைக்க வெளிக்கிட்டுதுகளா? என்ன விளங்கி கத்துதுகளோ நிலவைப்பாத்தும் கத்துவினம் தானே மனித மாமிச எச்சங்கள் சாப்பிடுபவர்கள் மனிதம் பற்றி கதைக்கிறவையள் பணம் வாங்கி பறை தட்டிற ஆட்கள். பணம் பெற்ரு விசரிலை கத்துதுகள் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Guest - 06-22-2003 ஓ யாழ் சமுதாயமே... தலைப்புடன் சம்பந்தப்பட்டதாகவும் தேவை கருதியும் இந்த கட்டுரையை உரு மாற்றி இங்கு இடுகிறேன் வீரகேசரியிலிருந்து யாழ்.குடாநாட்டில் அதிகரித்து வரும் சட்டவிரோதச் செயல்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் சமீபகாலமாக இடம்பெற்றுவரும் சம்பவங்களை அவதானிக்கின்ற போது இங்கு வலுவான நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றின் அவசியம் பெரிதும் உணரப்பட்டிருக்கிறது. முன்னெப்போதும் இல்லாதளவுக்கு மோசமடைந்துவரும் சட்டம், ஒழுங்குப் பிரச்சினைகள் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் பீதியையும் தோற்றுவித்திருக்கின்றது. குறுகிய காலத்திற்குள் குடாநாட்டில் இடம் பெற்ற படுகொலைச் சம்பவங்கள், ஆட்கடத்தல் சம்பவங்கள் பாலியல் ரீதியிலான துஷ்பிரயோகங்கள், உள்ளிட்ட பல சட்டவிரோத சம்பவங்கள் பொதுமக்களைப் பெரிதும் கிலேசமுறச் செய்திருக்கின்றன. திடீரென அதிகரித்திருக்கும் இத்தகைய சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டம்,ஒழுங்குக்குப் பொறுப்பான பொலிஸார் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்கள்? இவை போதிய நடவடிக்கைகள் தானா என்றெல்லாம் விவாதிப்பதை விட இத்தகைய சம்பவங்கள் அதிகரிப்பதற்கான தூண்டுதலும் துணிச்சலும் திடீரென எவ்வாறு உருவானது என்று ஆராயப்படல்வேண்டும். இத்தகைய சம்பவங்கள் தனியே சட்டத்துடன் சம்பந்தப்பட்டவை அல்ல. சட்டரீதியான அணுகுமுறைகளும் அதனூடான தண்டனை வழங்கல்களும் இத்தகைய காரியங்களைத் தடுத்து நிறுத்திவிடப்போவதில்லை. தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மர்மமான கொலைச்சம்பவங்கள் சமூகத்தில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கின்றதுடன் இந்தளவுக்கு மோசமான நிலைக்கு சமூக வன்முறைகள் வளர்ந்துவிட்டதா என விசனத்தை ஏற்படுத்தி நிற்கிறது. அண்மையில் நல்லூரில் அண்ணனை அலவாங்கால் அடித்துக் கொன்ற தம்பி என்ற செய்தி மேலும் இந்த நிலையை வலுப்படுத்தியிருக்கிறது. இதைவிட கைதடி சைவச் சிறார் இல்லத்திலும், உரும்பிராயில் இயங்கிய இன்னொரு சிறுவர் பராமரிப்பு நிலையத்திலும் பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள தான வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. கைதடி சைவச் சிறார் இல்லத்தில் இருந்த மாணவிகள் சிலர் அங்குள்ள காவலாளியால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் , நிர்வாகிகளால் சிறுவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் வழக்கு விசாரணைகள் சாவகச்சேரி நீதிமன்றத்தில் இடம்பெற்றுவருகின்றன. இந்த வழக்கு சமூகத்தின் பிரமுகர்களாக உலவும் பலரையும் நீதிமன்றத்திற்கு இழுத்திருக்கின்றது. இந்தச் சம்பவம் தொடர்பான அதிர்ச்சி மக்கள் மத்தியில் இருந்து அகன்று போவதற்கு முன்னரே உரும்பிராயில் இயங்கிய இன்னொரு சிறுவர் விடுதியில் இரு சிறுமிகள் காவலாளியால் பாலியல் துஷ்பிரயோகத்துக் குட்படுத்தப்பட்டதாக வழக்கு பதிவாகியிருக்கின்றது. இத்தகைய சம்பவங்களும், வழக்குகள் மீண்டும் குடாநாட்டில் தலைதூக்கத் தொடங்கியிருக்கின்றன. இதைப்போன்றே ஏனைய பல சமூகவிரோத சம்பவங்களும் அதிகரித்துவருகின்றன. அதிகாரபலத்தை வைத்துக்கொண்டு சாதாரண மக்களை ஆட்டிப்படைக்கும் சிலர் ஊழல், மோசடி போன்றவற்றை மிகத் தாராளமாகவே மேற்கொண்டிருக்கிறார்கள். யாழ்.நகரில் உள்ள மிகவும் பிரபலம் பெற்ற முன்னணிப் பாடசாலை ஒன்றின் பழைய மாணவர் சங்கத்தில் பெருமளவு மோசடிகள் இடம்பெற்றுள்ளதான குற்றச்சாட்டுக்களும் மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களால் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் கூட்டம் 1999ஆம் ஆண்டுக்குப்பின்னர் கூட்டப்படவில்லை என்றும் இச்சங்க நிர்வாகிகளால் கேள்விப்பத்திரம் கோராமல் கட்டடம் ஒன்று சுமார் ஒன்றரை கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டதில் பெரும் முறைகேடுகள் இடம் பெற்று பணிகள் இடைநடுவில் நிற்பதாகவும் பழைய மாணவர்களும், மாணவர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். யாப்பு விதிகளுக்கு அமைவாக சங்கத்தின் கூட்டத்தை நடத்துமாறு இம்மாத முற்பகுதியில் 75 பழைய மாணவர்கள் கையெழுத்திட்டு கடிதம் சமர்ப்பித்தபோதும் சங்க நிர்வாகிகள் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர். கூட்டத்தைக் கூட்டினால் கணக்குகளை சமர்ப்பிக்கவேண்டும் என்பதால் தான் இவ்வாறு கூட்டம் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாகவும் இதில் முக்கிய ஊடகப் புள்ளி ஒருவரே சூத்திரதாரியாக இருப்பதாகவும் மாணவர்கள், பழைய மாணவர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இத்தகைய மோசடி முறைகேடு குற்றச்சாட்டுக்கள் பல்வேறு பொது நிறுவனங்கள் பாடசாலைகளில் சமீபகாலத்தில் அதிகரித்திருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் காரணம் இத்தகைய குற்றச் செயல்கள் குறித்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அச்சமின்றி இருப்பதே ஆகும். குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு வலுவிழந்து பல வருடங்களாகிவிட்டன. நீதித்துறை தனது இறுக்கமான பிடியைப் பேண முற்பட்டாலும் அதற்கேற்றவாறு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய பொலிஸார் நடந்து கொள்கின்றனரா என்ற கேள்வி எழுகின்றது. பொலிஸாரின் பாரபட்சமான செயற்பாடுகள் குறித்து பரவலான புகார்களும் கிளம்பியிருக்கின்றன. இதைவிட சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய பொலிஸார் அதை மீறும் சம்பவங்கள் சிலவற்றிலும் தொடர்புபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. சட்டத்தின் ஆட்சியை நிறுவ முற்படும்போது அதைப் பொதுமக்களுக்கு சிரமம் இல்லாத வகையில் ஏற்படுத்துவதுதான் அவசியமானதாகும். இந்த விடயம் இதுவரை கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. சாதாரணமாக, போக்குவரத்து விதிகளை மீறியதான குற்றச்சாட்டுக்குள்ளான ஒருவர் அதற்கான குற்றப்பணத்தைச் செலுத்துவதற்கு பல நாட்களாக அலைய வைக்கப்படுகின்றார். அந்த இடத்தில் குற்றத்துக்காக பொலிஸார் ஒரு துண்டு வழங்குகின்றனர். அதைப் பொலிஸ் நிலையத்தில் சமர்ப்பித்து பற்றுச்சீட்டு பெற்றே குற்றப்பணத்தை தபாலகத்தில் செலுத்தவேண்டும். ஆனால் பொலிஸ் நிலையத்தில் பற்றுச்சீட்டுப் புத்தகம் இல்லை எனக்கூறப்பட்டு பெருமளவு பொதுமக்கள் யாழ்.பொலிஸாரால் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. சட்டதத்தைப் பேணும் பொலிஸார் அதை நடைமுறைப்படுத்துவதற்கான ஒழுங்குமுறைகளைப் பேணவேண்டியவர்கள் இல்லையா? இவ்வாறு பல குற்றச்சாட்டுக்கள் கிளம்பியுள்ளன. முறையான நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படாமையே இன்றைய இந்த நிலைமைக்குக்காரணம் என்பதுபலராலும் உணரப்பட்டிருக்கிறது. தமிழ் மக்களின் தனித்துனத்துவத்தைப் பேணக்கூடிய வகையில் நீதி, நிர்வாகக் கட்டமைப்பு ஒன்று தோற்றுவிக்கப்படுவதன் மூலமே இத்தகைய சமூக வன்முறைகளை கட்டுப்படுத்த முடியும் புலிகளின் நிர்வாகத்தின் போது இத்தகைய சம்பவங்கள் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. இப்போதும் புலிகள் குடாநாட்டில் இருக்கின்ற போதும் சட்டம், ஒழுங்கில் தலையீடு செய்வதற்கான அதிகாரம் அவர்களுக்கு இல்லாதிருப்பது தான் குற்றவாளிகளுக்கு பெரும் வாய்ப்பாகியிருக்கிறது. இங்கு தான் விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாகக் கோரிக்கையின் தேவைப்பாடும் வலுப்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தகைய நிர்வாக அமைப்புத்தான் சமூக குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தும். முகிலன் http://www.virakesari.lk/20030622/mukilan.HTM - Manithaasan - 06-22-2003 வேள்வி நிறுத்தப்பட்ட மண்ணில் மீண்டும் வேள்வி... ஐயா மகாகவி நீங்கள் கண்ட கனவைப் பொய்யாக்கி மீண்டும் பலிஅதுவும் உங்கள் அயலூரில் ... - S.Malaravan - 06-23-2003 உண்மையை சொன்னால் இன்னும் எத்தனையோ நடந்தேறி விட்டது அவைகள் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்பட்டும் விட்டது. இப்போ புலிகள் வந்ததும்பல வெளிவருகின்றது. ஏன் இக்களத்திலேய எம்தமிழ் சமூகம் சிரழிகிறது என்றில்லாமல் வன்மம் சாதித்து கொன்டிருக்கிறர்கள் இப்டியானவர்கள் மத்தியில் எம்தாயக சொந்தஙகளை எப்படி திருத்த முயல்வது இப்படியான கால்நக்கிகள்தான் அங்கும் இழிவுச் செயல்களை தூண்டிக் கொன்டிருக்கிறார்கள் அயல் நாட்டாரும் எம்மினத்தின் அடிமைகளும் இலங்கை இரானுவமும் பணம் கொடுத்து இவற்ரை எல்லாம் விதைக்கிறார்கள் விதைப்பின் எண்ணம் புலிகளை ஓரம்கட்வென ஆனால் அது எம்மகளின் பாரம்பரியம் கலைபண்பாடு போன்றவற்ரை சீர்; குலைக்கிறது புலிகள் இருந்த காலத்தில் கவரிச்சி சினிமாகூட திரையிடப்பயந்தவர்கள் இன்று பாலியல் படங்களையே திரையிடுகிறார்கள் இதுகள் இங்கே பொது சனம் என்று சொல்லி வாறவைக்கு தெரியாது ஏன் எனறால் அவைய அமீர் காலத்து அரசியல் அடிமைகள். எமக்கு எதுவும்வேண்டாம் எம்மக்களின் சுயநிர்ணயம் சுயாட்சி :twisted: :twisted: :twisted: :twisted: - S.Malaravan - 06-23-2003 மன்னிக்கவும் முதலின் தொடர்ச்சிசுயாட்சி ஒன்றே போதும் எம்மினம் எம் தாயகத்து சந்ததி சுயமாக சுதந்திரத்துடன் வாழ வேண்டும் இதுதான் புலத்தில் உள்ள தன்மாத்தானின் ஆவலும்கூட :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: - sethu - 06-23-2003 சரயா சொன்னியல்போலகிடக்கு மலரவன் - Mullai - 07-10-2003 காட்டுமிராண்டித்தனமான கொலைகள் அதிகரிப்பு சிறையிலிருந்து வீடு திரும்பிய தந்தை மகனின் தலையை சீவிக்கொன்றார்!!! ஆனைக்கோட்டையில் பயங்கரம் சிறையிலிருந்து பிணையில் விடுதலையாகி வீடு திரும்பிய தந்தை ஒருவர் தனது பிள்ளைகளைக் கொன்றொழிக்க முயன்றுள்ளார். வெறிபிடித்த அந்தத் தந்தையின் கையில் சிக்கிய 15 வயது மகன் கோரமாகத் தலை வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டான். ஆனைக் கோட்டை உயரப்புலம் பகுதியில் நேற்றுப் பிற்பகல் நடந்த இந்தப் படுபயங்கரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.நீண்ட நாள்கள் யாழ்.சிறையில் தடுத்துவைக்கப்பட்டபின் நேற்று நீதி மன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்ட பஞ்சாட்சரம் சிறீகாந்தன் (காந் தன், வயது 34) என்ற தந்தையே பெற்ற மகனைக் கோரமாக வெட்டிக் கொன்றிருக்கிறார். 15 வயதுடைய சிறீகாந்தன் தயாளன் என்ற சிறுவனே தந்தையின் கோரத் தாண்டவத்தில் பலியாகியுள்ளான்.இந்தச் சம்பவம் பற்றித்தெரிய வருவதாவது:- நீண்டகாலமாகக் கோப்பாயில் வசித்துவந்த பஞ்சாட்சரம் சிறீகாந்தன் (காந்தன், வயது 34) என்ற இந்தப் பிள்ளைகளின் தந்தை கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் ஆனைக் கோட்டை உயரப்புலம் பகுதியில் குடும்பத்துடன் குடியமர்ந்திருந்தார். குற்றச்செயல் ஒன்றுக்காக கடந்த சில நாள்களுக்கு முன்னர் பொலீஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறீகாந்தன் நேற்று யாழ்.நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். அவரை அவரது மனைவி நேற்று நீதிமன்றிலிருந்து பிணையில் வெளியே எடுத்திருந்தார். நண்பகல் 12 மணியளவில் பிணையில் விடுவிக்கப்பட்ட சிறீகாந்தன் வீட்டுக்குத் திரும்பியபோது நிறைபோதையில் இருந்தார் என்று கூறப்படுகிறது. வெறிபிடித்துக் காணப்பட்ட அவர், கையில் கத்தி ஒன்றை எடுத்துக் கொண்டு பிள்ளைகளைத் தேடியிருக் கின்றார். முதலில் தனது மூத்த மகனைப் பிடித்து இழுத்து ~~ஏனடா என்னைப் பார்க்க சிறைக்கு வரவில்லை|| என்று கேட்டு அதட்டியவாறு சிறுவனது கையில் கத்தியால் வெட்டினார் என்றும் - அப்போது வலிதாங்கமுடியாத சிறுவன் உரத்த்து கதறியவாறு தந்தையின் பிடியிலிருந்து தப்பியோட முற்பட்டவேளை கத்தியால் வேகமாக வீசி அவனது கழுத்தில் வெட்டினார் என்றும் -கூறப்படுகிறது. சிறுவன் அந்த இடத்திலேயே துடிதுடித்து வீழ்ந்தான். இந்தக் கோரச்சம்பவத்தை நேரில் கண்ட சிறுவனின் தாயும் சகோதரர்களும் அலறியடித்துக்கொண்டு அயலவர்களின் உதவியைக் கோரியவாறு ஓடியிருக்கின்றனர். தனது மூத்த மகனின் கழுத்தைச் சீவிய பாதகத் தந்தை தனது கொலை வெறி தணியாது ஏனைய பச்சிளம் பாலகர்களையும் கொல்வதற்காக விரட்டிச் சென்றார். அலறல் சத்தம் கேட்டு அயலவர் கள் ஓடிவந்து பார்த்தபொழுது அங்கு பிரஸ்தாப சிறுவன் கழுத்து அறுபட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தான். அவனை வெட்டிக் கொன்ற தந்தை தனது ஏனைய பிள்ளைகளையும் வெட்டுவதற்காக துரத்திக்கொண்டிருந்ததை அயலவர்கள் கண்டனர். நிலைமையைப் புரிந்துகொண்ட அயலவர்கள், கொலைஞ்ஞனைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்துமர மொன்றில் கட்டி நையப்புடைத்து விட்டு மானிப்பாய் பொலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். சற்று நேரத்தில் அங்கு வந்த பொலீஸார். கொலைக்காரத்தந்தையைக் கைது செய்தனர். அவருடன் அவரது மனைவியையும் பொலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.பாய் ஒன்றினால் மூடப்பட்ட நிலையில் சிறுவனின் சடலம் நேற்று மாலைவரை அந்த இடத்திலேயேகிடந்தது. ஏராளமான பொது மக்கள் அங்கு வந்து சிறுவனின் சடலத்தைப் பார்வையிட்டனர்.மாலை 5.30 மணியளவில் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று சிறுவ னின் சடலத்தைப் பார்வையிட்ட யாழ். நீதிமன்ன மேலதிக நீதிவான் திரு மதி சரோஜினிதேவி இளங்கோவன் சடலத்தை யாழ்.போத னாவைத்தி யசாலையில் ஒப்படைக்கு மாறு பொலீஸாருக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து மாலை 6 மணி யளவில் சிறுனின் சடலம் மானிப் பாய் பொலீஸாரால் யாழ்.ஆஸ்பத் திரியில் ஒப்படைக்கப்பட்டது. மரணவிசாரனை பிரேத பரிசோதனை என்பன இன்று நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.இதேவேளை- மானிப்பாய் பொலீஸ் நிலையத் தில் தடுத்துவைக்கப் பட்டிருக்கும் சிறுவனின் தந்தையை இன்று யாழ்.நீதி மன்றத்தில் ஆஜர் செய்யுமாறு நீதிவான் பொலீஸாருக்குப் பணித்தார். [size=9]நன்றி உதயன் - kuruvikal - 07-10-2003 இதெல்லாம் தென்பகுதியில சர்வ சாதாரணம்...அதை எப்படியோ வடக்குக்கை மதுபானத்தோட கொண்டு வந்திட்டினம்...அதுதான் ஒற்றையாட்சியல இருப்பம் என்று ஒற்றக்காலில நிக்கினம்....தான் கெட்டாலும் பறுவாயில்லை தமிழன் நிமிரக் கூடாது எண்டதில கவனமா இருக்கினம்...! 1986 இல இருந்து 1995 வரைக்கும் கப்சிப் என்றிருந்த யாழ்ப்பாணம் இப்ப எல்லா உபத்திரகங்களும் நிறை பூமியா போச்சு.....! என்ன தம்பிமார் கொஞ்சம் தொலைவில நிக்கிறதுதான் காரணம்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- GMathivathanan - 07-10-2003 kuruvikal Wrote:இதெல்லாம் தென்பகுதியில சர்வ சாதாரணம்...அதை எப்படியோ வடக்குக்கை மதுபானத்தோட கொண்டு வந்திட்டினம்...அதுதான் ஒற்றையாட்சியல இருப்பம் என்று ஒற்றக்காலில நிக்கினம்....தான் கெட்டாலும் பறுவாயில்லை தமிழன் நிமிரக் கூடாது எண்டதில கவனமா இருக்கினம்...! 1986 இல இருந்து 1995 வரைக்கும் கப்சிப் என்றிருந்த யாழ்ப்பாணம் இப்ப எல்லா உபத்திரகங்களும் நிறை பூமியா போச்சு.....! என்ன தம்பிமார் கொஞ்சம் தொலைவில நிக்கிறதுதான் காரணம்...!ஏன்ராப்பா.. கொண்டாட்டம்.. பெரிசாயிருக்கு.. சந்தேஷம்.. பொங்கி..வழியுது.. கிண்டியெடுத்ததுகளைப்பற்றி..வந்த கதையை..மறைக்க.. ஒண்டு..கிடைச்சிட்டுது.. போலைகிடக்கு.. அவன்..கிடாயடிக்க.. ரத்தம் குடிக்கிறது.. நீங்கள்தானே.. முந்திமுந்தி.. இப்பிடி..கிடாயடிச்சுக்.. கேள்விப்படவுமில்லை.. ரத்தம்..குடிச்சும்.. நான் கானேல்லை.. :oops: :oops: :oops: - sethu - 07-10-2003 <b>மட்டக்களப்பு நகரில் கமரா மூலம் ஆபாசப்படம் பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வேக்கரி (வெதுப்பகம்) ஒன்றினை விடுதலைப்புலிகளின் அரசியல்துறையினர் வியாழக்கிழமை சீல் வைத்து மூடியுள்ளதுடன் அங்கு வைத்துப்பிடிக்கப்பட்ட படங்களையும் விடுதலைப்புலிகள் கைப்பற்றியுள்ளனர் படம் பிடிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட கமராவும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் படப்பிடிப்பாளரையும் விடுதலைப்புலிகள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர். மட்டக்களப்பு பாடசாலை ஒன்றில் கா.பொ.த சாதாரண கல்வி பயிலும் மாணவி ஒருத்தியும் பிறிதொரு பாடசாலையில் கா.பொ.த உயர்தரம் பயிலும் மாணவனும் சேர்ந்து இப்படங்களை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. </b> இப்படங்கள் எடுக்கப்பட்டதன் நோக்கம் இதுவரை தெரியவரவில்லை. பாடசாலை மாணவியையும் மாணவனையும் குறிப்பிட்ட பாடசாலைகளின் அதிபர்கள் ஊடாக விசாரணை செய்தவற்கான ஒழுங்குகளை விடுதலைப்புலிகள் மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. - S.Malaravan - 07-10-2003 பொய் சொல்லியே பதில் போடவெண்டு திரியிறாங்கள் என்னவெண்றால் தான் அதுவரை அப்படி வேள்வி நடந்ததை கேள்விப்படவில்லையாம். உது உன்மையில் விளங்காது. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll: :roll: :roll: |