Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 649 online users.
» 0 Member(s) | 646 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,000
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,023
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,494
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,246
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,521
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,714
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,247
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,863
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,928
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,182

 
  பழைய குருடி கதவை திறவடி....
Posted by: kuruvikal - 06-26-2003, 07:18 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (60)

சிறிலங்காத் தலைநகரில் தெகிவளைப் பகுதியில் சுற்றிவளைப்புத் தேடுதல் 28 தமிழ் இளைஞர்கள் கைது.கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வன்னியை சேர்ந்தவர்களாம்.ஒருவர் புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் வைத்திருந்ததற்காகவிம் கைது செய்யப்பட்டுள்ளாராம். சிறிலங்கா பொலிஸ் CID தெகிவளைப் பொறுப்பாளர் அவருக்கு செய்திவழங்கும் தமிழ் ஒற்றன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறிலங்கா அறிவித்து அடுத்ததினமே இச் சுற்றிவளைப்பு நடந்துள்ளது! சூட்டுச் சம்பவத்தின் பின் கைது செய்யப்பட்ட அவ் ஒற்றன் கொடுத்த தகவலின் அடிப்படையில் புலிகள் தொடர்பான புதிய சொத்துவிபரங்கள் செயற்பாடுகள் கிடைத்துள்ளதை அடுத்து சிறிலங்காவின் பாதுகாப்புக் கருதி கொழுப்ம்பில் பொலிஸ் இராணூவக் காவலரன்கள் அமைத்துச் சோதித்தல் வீடு வீடாக இராச் சோதனை இடுதல் வீதிகளின் ரோந்து சென்று சோதனை செய்தல் இப்படி இன்னோர் என்ன சோதனைகள் பழைய படி சந்திரிக்கா அம்மாவின் சொற்படி பொலிஸ்மா அதிபர் ஆனந்தராஜாவின் பணிபுரைகளுக்கு ஏற்ப நடந்தேறவுள்ளதாம்! அத்துடன் சோதனை நடவடிக்கைகள் தெகிவளை கல்கிசை மொறட்டுவ வத்தளை வெள்ளவத்தை கொட்டகேன பகுதிகளை மையம் கொண்டே செயற்படுத்தப்படுமாம்.ஏனெனில் அங்குதானாம் புலிகள் குவிந்து கிடக்கிறார்கள்....இப்ப விளங்குதே ஆர் புலிகள் எண்டது..அங்க இருக்கிற தமிழர்தான்....என்னமா அம்மா கேம் காட்டுறா.....?!

தகவல்கள்..தினக்குரல்,உதயன்,வீர கேசரி!

Print this item

  மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?
Posted by: Paranee - 06-26-2003, 06:48 AM - Forum: கவிதை/பாடல் - Replies (5)

மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?


வார்த்தைகள் விழுங்கி
பார்வைகள் புதைக்கும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

இதயத்தினுள்ளே ஒரு
புூ விழும் உணர்வுகள் தோன்றும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

இதழ்கள் மூடி புன்னகைத்து
செவிமடல் சிவக்க நாணி நிற்கும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

மண்ணின் மார்பில் கோலம்போட்டு
பாதம் தேய மண்ணை நோக்கி
கவிழ்ந்து நிற்கும் பெண்மையின்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

கண்கள் செருக
கரங்கள் பிணைய
இதழ்கள் இணையும்
முத்தத்தின் போது தோன்றும்
மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

வானின் மஞ்சத்தில் பள்ளிகொள்ளும்
பளிங்கு நிலாவை பார்வை வெறிக்க
தலையை வருடி உறங்க மறுக்கும்
விடலையின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

விசையின் மீது கரம்வைத்து
இருளை வெறித்திருக்கும்
போராளியின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

கடலின் மீது து}ண்டில் வீசி
அலையை ரசித்துக்கொண்டே
து}ண்டில் அசையும்வரை காத்திருக்கும்
மீனவனின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

மண்ணின் மார்பில் முக்குளித்து
மூச்சுத்திணற வெளிவரத்துடிக்கும்
விதையின் மௌனத்திற்கு அர்த்தம் என்ன ?

மலர்களுடன் பேசிப்பார்த்தேன்
அர்த்தம் கிடைக்கவில்லை
நிலவிடம் இரந்து கேட்டேன்
விடை பகரவில்லை
உன்னிடம் கேட்கின்றேன்
மௌனத்தின் அர்த்தம் என்ன ?

கொலுசினால் பேசுகின்றாய்
கைவளையல்களால் மொழிகின்றாய்
மௌனத்தின் அர்த்தம் கேட்டேன்
மௌனத்தினால் கொல்கின்றாயே !

கரவை பரணீ
26-06-2003

Print this item

  படுகொலைகள்
Posted by: sethu - 06-25-2003, 07:14 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (13)

சத்துருக்கொண்டான் படுகொலை



இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரமடைந்த பின் மாறிமாறி ஆட்சி செய்த சிங்கள பேரினவாத அரசுகள் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அடிமைப் படுத்தி ஆழ்வதிலேயே அக்கறையாக இருந்தன. இதற்கான பல மறைமுகமான தமிழ் இன அழிப்பு சதித்திட்டங்களைத் தீட்டினர். இலங்கை முழுவதிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் திட்டமிட்ட இனக்கலவரங்களை உண்டாக்கி, தமிழ் மக்களையும், அவர்களின் சொந்தப்பிரதேசங்களையும் அழிக்கத் தொடங்கினர். இதனை 05–06–1958 ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்களச் சட்டத்தின் மூலம் உருவான இனக்கலவரம் தொடக்கம் 1983ம் ஆண்டு கறுப்பு ஜீலை கலவரத்துடன் நடத்திய வெறியாட்டங்கள் வெளிப்படையாகக் காட்டுகின்றன.



இந்த நாட்டின் தமிழ்பேசும் மக்களுக்கு இளைக்கப்பட்ட கொடுமைகள் பல உண்டு. தமிழ் மக்களுக்கு எதிராக பேரினவாதிகள் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அநீதிகளை வரலாறுகள் கூறுகின்றன. தமிழ் மக்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்தபோதும் மறுக்கப்பட்ட தம் உரிமைகளை கோரியபோதும் இழைக்கப்பட்ட கொடுமைகளை தட்டிக் கேட்கும் போது தமிழ் மக்கள்மீது சுமத்தப்படும் அநீதிகளுக்கு நீதி கேட்கும் போதெல்லாம் அவர்களின் குரல்கள் கொடூரமான முறைகள் மூலம் அடக்க முற்பட்டது பேரினவாதம்.



தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒவ்வொரு வன்முறைகள், இனக்கலவரங்களின் பின்னாலும் பேரின அரசாங்கத்தின் கரங்கள் மறைமுகமாக செயற்பட்டதற்கான ஆதாரங்கள் அவ்வப்போதும் வெளியிடப்பட்டன. தமிழ் மக்களை பேரினவாதம் எந்தளவிற்கு கீழ்த்தரமாக நடத்த முற்பட்டது என்பதற்கு 1983 ஜீலை மாதம் நாடு புூராகவும் சிங்கள அரசும் அதன் காடையர் கும்பலும் நடத்திய வெறியாட்டங்கள் வெளிப்படையாக காட்டுகின்றன.



பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். கோடிக்கணக்கான தமிழ் மக்களின் சொத்துக்கள் சுூறையாடப்பட்டன. சுpறையில் அடைக்கப்பட்டவர்கள் சிறையிலே சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். இவ்வாறு தமிழினத்தை அடக்கி ஒடுக்குவதற்கு பேரினவாதம் அன்று ஒரு இரத்த அபிசேகத்தையே நடாத்தி முடித்தது. இதன் மூலம் சிங்கள காடையர்களில் காட்டுமிராண்டித்தன்மையும், கொடூர பயங்கரவாதத்தையும் உலகமே அறிந்து வியந்தது.



இத்துடன் பேரினவாதத்தின் கொடூரங்கள் நின்று விடவில்லை 2ம் கட்ட ஈழப்போரில் ஆரம்ப காலத்தில் அதாவது, 1990ம் ஆண்டு காலப்பகுதியில் திட்டமிட்டு பல படுகொலைகள் தொடர்ந்தும் பல கிராமங்களில் நடந்தது. குறிப்பாக, மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகம், மகிழடித்தீவு, பெரியபுல்லுமலை, சத்துருக்கொண்டான் படுகொலை, மயிலந்தனைப் படுகொலை, அம்பாறை உடும்பன்குளம் இப்படி ஒவ்வொரு தமிழ் கிராமங்களிலும், ஒன்றும் அறியாத அப்பாவித் தமிழ் மக்கள் கண்ட இடமெல்லாம், வெட்டியும், சுட்டும், சித்திரவதை செய்தும் கொடூரமாக கொல்லப்பட்டனர். நு}ற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் மானவங்கப்படுத்தியும் அநாகரிகமான முறையில் கொல்லப்பட்டனர். கற்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், குழந்தைகள் கொடுமைபடுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் கைதுசெய்யப்பட்டும், கடத்திச் செல்லப்பட்டும் அடையாளம் தெரியாத வகையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். தமிழ் மக்களின் உயிர்கள் வகை தொகையின்றிப் பறிக்கப்பட்டன. அவர்களின் உடமைகள் அழிக்கப்பட்டன. சொத்துகள் சூறையாடப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர்.



இந்த இன அழிப்புப் படுகொலையில் 09-09-1990ல் நடாத்தப்பட்ட மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை மிகக்கொடூரமானது. இப்படுகொலை சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் 186 பேரை ஒன்றாகக் குவித்து அடையாளம் தெரியாமல் கொடூரமாகக் கொல்லப்பட்ட மிக மோசமான படுகொலையாகும். 1990ம் ஆண்டு ஒவ்வொரு கிராமத்திலும் “வெட்டுப்பாட்டி என்ற வெறியாட்டப் படையினர்” நடத்திய கொடூரமான கொலைகளுக்கு அஞ்சி தமது இருப்பிடங்களை விட்டு சிதறியோடி பாதுகாப்புத்தேடி, பாடசாலைகள், ஆலயங்கள், பொதுக்கட்டடங்கள் என்பனவற்றில் கூட்டம், கூட்டமாக இருந்தனர். இது தான் அந்த வெறியாட்டக்காரர்களுக்கு வசதியாக இருந்தது. இப்படி கூட்டம், கூட்டமாக இருந்தவர்களை சேர்த்து ஒரே இடத்தில் கொன்ற படுகொலைதான் சத்துருக்கொண்டான் படுகொலையாகும்.



இப்படுகொலையின் போது கிராமத்தில் இராணுவ சுற்றிவளைப்பில் அகப்படாமல் தப்பியவர்களும் பிடிபட்டு இப்படுகொலையை நேரில் கண்டு வெட்டுக் காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பி வந்த ஒருவரின் தகவல்களின்படி இப்படுகொலைச் சம்பவத்தைப் பார்க்கும் போது 17-08-1990 அன்று வெட்டுப்பாட்டி என்ற அரச படையினர் சத்துருக்கொண்டான் என்ற கிராமத்திலுள்ள “போய்ஸ்டவுன்” என்ற முகாமிற்கு கெப்டன் திஸ்ஸவர்ணகுலசூரிய என்ற அதிகாரியின் தலைமையில் வந்திருந்தனர். இவர்கள் வந்த அன்றே கொக்குவில் கிராமத்துக்குள் புகுந்து 24 பேரை பிடித்து மாரியம்மன் கோவில் சந்திக்கு கொண்டுவந்து அடித்து சித்திரவதை செய்தனர். இதில் மரியநேசம், சுப்பிரமணியன் தவராசா, குமாரசாமி ஆகிய நால்வரையும் அந்த இடத்திலே அடித்துக்கொன்றனர். பின் டயர் போட்டு எரித்தனர். இதனையடுத்து 08-09-1990 அன்று சத்துருக்கொண்டான் கொளனிக்குள் சீருடையுடன் சென்ற படையினர் அங்கே தென்னந் தோட்டத்தில் ஓலைமட்டை எடுத்துக்கொண்டிருந்த த.கணபதிப்பிள்ளை, இளையான் ஆகிய இருவரையும் அவர்கள் கொண்டு வந்த மட்டையே போட்டு உயிருடன் எரித்துக் கொன்றனர். இதனால் இக்கிராமத்திலுள்ள மக்கள் சிதறி ஓடினர். அநேகமானவர்கள் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றனர். எஞ்சியவர்கள் பெரிய வீடுகளில் பயத்துடன் ஒன்றாகச் சேர்ந்து இருந்தனர். இதை பயன்படுத்திய அரசபடையினர் ஒட்டுமொத்தமாக இக்கிராம மக்களையே கொன்றொழிக்கத் திட்டம் தீட்டினர்.



09-09-1990 அன்று பி.ப 5.00 மணியளவில் கெப்டன் திஸ்ஸ வர்ணகுலசூரியாவின் தலைமையில் சீருடையுடன் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய கிராமங்களை சுற்றிவளைத்தனர். ஒரு பகுதியினர் மெயின்வீதி வழியாக பிள்ளையாரடிக் கிராமத்தை சுற்றிவளைத்தார்கள். மற்றையவர்கள் போய்ஸ்டவுள் முகாமிற்கு பின்புறமாக வந்து சத்துருக்கொண்டான் கொளனிப் பக்கமாகச் சென்று அங்கு ஒரு வீட்டிலிருந்த ராசா என்பவரையும் அவரின் மனைவி நேசம்மா, நான்கு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்து பக்கத்து வீடுகளிலிருந்த கணபதிப்பிள்ளை குடும்பத்தினர்கள், அழகையா குடும்பத்தினர்கள், கதிர்காமத்தம்பி, கண்மணி குடும்பத்தினர்கள், நற்குணசிங்கம், மனைவி, சித்தி இவர்களின் மூன்று மாதக்குழந்தை அனைவரையும் அழைத்து “நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கத்தான் வந்துள்ளோம் உங்களுக்கான எல்லா உதவிகளையும் செய்வோம். ஏங்களுடன் வாருங்கள்” எனக் அழைத்து வந்து பனிச்சையடிச் சந்தியில் இருக்க வைத்தனர். அதன் பின் பக்கத்து வீட்டிலிருந்த கிருபைரெட்ணம் குடும்பம், பேரின்பம் குடும்பம் இவர்களின் வீட்டிலிருந்த மற்றைய குடும்பங்கள் அனைவரையும் சந்திக்கு கூட்டிவந்தனர் இதில் பேரின்பன் மனைவி பரஞ்சோதியுடன் நந்தினி என்ற பிள்ளையும் இவர்களுடன் நடக்க முடியாத, முடமான, பேசமுடியாத ஊமைப்பிள்ளைகள் நால்வரும் இருந்தனர். இவர்களை து}க்கி வர முடியாது எனக்கூற இவர்களை நாங்கள் முகாமிற்கு கொண்டுபோய் பாதுகாப்பு வழங்குவதுடன் சுகமாக்கியும் தருவோம் எனக்கூறி மற்றவர்களைத் து}க்கிவரும்படி கூறினர். இவர்களின் நயவஞ்சகத்தினை அறியாத அப்பாவி மக்கள் அந்த வலது குறைந்த பிள்ளைகளையும் து}க்கிக் கொண்டு வந்து சந்தியில் வைத்தனர். அதன் பின் பரமக்குட்டி என்பவரின் வீட்டில் ஒன்றாக இருந்த 20 குடும்பங்களைச் சேர்ந்த அத்தனை பேர்களையும் பனிச்சையடிச் சந்திக்கு கொண்டு வந்து அனைவரையும் ஒன்றாகச் சேர்த்தனர். இப்படிப் பனிச்சையடிச் சந்தியில் சேர்க்கப்பட்டவாகள் கொக்குவில், பிள்ளையாரடியில் பிடிக்கப்பட்டவர்கள் எல்லோரையும் கொத்துக்குளத்து மாரியம்மன் கோவில் சந்திக்கு கொண்டு வந்த பின் 7.00 மணியளவில் போய்ஸ்டவுள் முகாமிலுள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் (முன்னர் அரிசி ஆலை இருந்த கட்டிடத்தில்) 63 குடும்பத்தைச் சேர்ந்த 177 பேரையும் ஒன்றாக அடைத்தனர்.



இப்படி ஒன்றாக இருட்டுக் கட்டடத்துக்குள் அடைத்த பின்னர் அனைவரும் பயமும் பீதியும், நடுக்கமும் ஏற்பட்டது எல்லோரும் அழத்தொடங்கினர். ஓவ்வொரு குடும்பத்தினர்களும், அவர்களின் சொந்த உறவுகளை கட்டிப்பிடித்து முனுமுனுத்தவாறு அழுதனர். எல்லோரும் கடவுளே எங்களைக் காப்பாத்து என கடவுளை வேண்டினர். இவர்களை அடைத்த படையினர் தமது சீருடைகளைக் கழட்டி வைத்துவிட்டு மது அருந்தத் தொடங்கினர். எல்லோரும் குடித்துவிட்டு வாள், கத்தி என்பவற்றை எடுத்து புூட்டிய கதவைத் திறந்தனர். இவர்களை இருட்டில் அரைகுறையாகக் கண்ட மக்கள் அழத்தொடங்கினர். இவர்களில் மூவரை வெளியே எடுத்தனர். இவர்களை நாங்கள் விசாரிக்க வேண்டும், இது மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது, இப்படி விசாரிக்கும் போது நாங்கள் அடித்தால் மற்றவர்கள் சத்தம் போடக்கூடாது என அனைவரின் கண்களையும் கட்டினர். குமார் வயது 27, ஜீவானந்தம் வயது 33, கிருஸ்ணகுமார் வயது 22 ஆகிய மூவரையும் முகாமின் பின்பக்கமாக கொண்டு சென்று, சித்திரவதை செய்தனர், கத்தியால் குத்திக் கொன்றனர். இதில் காயங்களுடன் ஒருவரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. அவரின் இரு கண்களுமே இந்த வெறியாட்ட விழாவை பார்த்துக் கொண்டிருந்தன.



பின்னர் வயது முதிர்ந்த ஆண்களை எடுத்து ஒவ்வொருவராக இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்றனர். கால்களையும், தலைகளையும் வெட்டி அங்கே ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த பெரிய குழியில் போட்டனர்.இதன்பின் வயது போன பெண்களைக் கொண்டுவந்து கம்பியாலும், பொல்லாலும் அடித்துக் கொண்டு குழியிலே போட்டனர். அடுத்து திருமணம் முடித்த அனைத்து ஆண்களையும் கண்களைக் கட்டிக் கொண்டு வந்து கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றனர். இவ்வாறே திருமணமான பெண்களையும் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். பின் இளைஞர்களைக் கண்களைக்கட்டிக் கொண்டு வந்து கையையும், கால்களையும் வெட்டி அவர்கள் துடிக்கும் காட்சியைப் பார்த்து மகிழ்ந்தனர். அவர்களை பல துண்டுகளாக துண்டாடி கொன்று குழியிலே போட்டனர். பின் சிறுவர்களையும், குழந்தைகளையும் கொண்டு வந்து சாய்ந்து கிடந்த முந்திரிகை மரத்தில் ஒவ்வொருவராக படுக்க வைத்து இரண்டு துண்டுகளாக வெட்டி குழியிலே போட்டனர்.



குழந்தைகயைக் கால்களால் மிதித்தும், கழுத்தைத் திருகியும் கொன்றனர். இந்தக் கொடுமைக்காரர்கள் பேசமுடியாத ஊமையாக இருந்த, நடக்கமுடியாது முடமாக இருந்த அந்த வலது குறைந்த 4 பிள்ளைகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களை முந்திரிகை மரத்தில் போட்டு துண்டு துண்டாக வெட்டிக் கொன்றனர். பின் சிறிது நேரம் ஓய்வெடுத்து பின் எஞ்சியிருந்த இளம் யுவதிகளை வெளியே எடுத்து அவர்களை நிர்வாணமாக்கி காட்டு மிராண்டித்தனமாக அவர்களின் காமப் பசியைத்தீர்த்தனர். அவர்களை அலங்கோலப்படுத்தி மனித நேயமுள்ளவர்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநாகரீகமான முறையில் அவர்களை சின்னாபின்னப்படுத்தி அவர்களின் அங்கங்களை வெட்டி சித்திரவதை செய்து கொன்றனர். இவர்கள் சத்தமாக கூக்குரலிட அவர்களின் வாய்களில் கறுப்புச் சீலையை திணித்தனர். இவர்களை அரைகுறை உயிருடன் குழியிலே கொண்டுபோய் போட்டனர். இப்படி அனைவரும் ஒரே குழியில் ஒன்றாகக் குவித்தனர். அந்த மடுநிறைந்தது.



இதன்பின் பெற்றோல் மண்ணெண்ணை என்பவற்றை இதன்மேல் ஊற்றினர். எரிபொருள் போதாமையால் இன்னும் எடுப்பதற்காக வெளியில் சிலர் சென்றனர். மற்றவர்கள் களைப்பிலும் மதுபோதை மயக்கத்தடன் படுத்தனர். இந்த சந்தர்ப்பத்தைப் பார்த்து அந்த இருகண்களும் மெதுவாக அந்த இடத்தைவிட்டு வெளியேறி பத்தையில் மறைந்திருந்தன. எரிபொருளுடன் வந்தவர்கள் இரத்தம் வடிய வெளியே வந்தவரின் இரத்த அடையாளத்தை கண்டு வந்த வழியேதேடினர். அவர்கள் மதுபோதையில் இருந்ததால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் ஒழித்திருந்து மேலும் நடக்கும் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். கொண்டுவந்த பெற்றோலையும் திரும்ப ஊத்தி அனைவரையும் ஒன்றாக பற்றவைத்தார்கள். எங்கும் ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. உடல்களும் மண்டையோடுகளும் வெடிக்கும் சத்தந்தான் கேட்டன. இதன் பின் இரவு 2.00 மணியளவில் தப்பியவர் தவண்டு வந்து ஒருவீட்டிற்கு வந்து பின் வைத்தியசாலைக்குச் சேர்ந்தார்.



இவர் தப்பிவந்து வைத்தியசாலையில் இருப்பதை அறிந்த இராணுவத்தினர் வைத்தியசாலையை முற்றுகையிட்டு தேடினர். அங்கே எம் இரத்த உறவுகள் மறைத்து வைத்து காப்பாற்றினார். முகாமில் எரிக்கப்பட்ட அப்பாவி மக்களின் உடல்கள் இரண்டு நாட்களாக எரிக்கப்பட்ட பின் அடையாளம் தெரியாமல் மறைக்கப்பட்டனர். இதில்…



50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் - 23பேர்

50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் - 18பேர்

50 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமான ஆண்கள் - 13பேர்

50 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமான பெண்கள் - 33பேர்

25 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமாகாத ஆண்கள் - 16பேர்

25 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமாகாத பெண்கள் - 23பேர்

10 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் - 20பேர்

10 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுமிகள் - 21பேர்

ஊமைகள்,முடமான குழந்தைகள் - 04பேர்

கர்ப்பிணித் தாய்மார்கள் - 02பேர்



63 குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் - 177பேர்

17-08-1990 கொல்லப்பட்டவர்கள் - 04பேர்

08-09-1990 கொல்லப்பட்டவர்கள் - 02பேர்

02-04-1991 - 03பேர்



மொத்தமாக விபரம் கிடைத்தவர்கள் - 186பேர்



இப்படி அநியாயமாகக் கொல்லப்பட்ட அப்பாவிகளின் கொடூரத்தை நேரில் கண்ட சாட்சியுடன் கிராமத்தவர்கள் பொது நிறுவனங்களின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துக்கூறியும் இதுவரை அதற்கான எந்த முடிவும் கிடைக்கவில்லை. இனவெறி அரசும், அதன்படைகளும் அனைத்;தையும் மறுத்து மறைத்தனர்.



ஆனால் தமிழ் மக்கள் இந்த கொடூரத்தை என்றும் மறக்கமாட்டார்கள். தம் இரத்த உறவுகளுக்கு ஏற்பட்ட அந்த கதியை என்றும் இதயத்தில் பதியவைத்திருக்கிறார்கள். அவர்களின் நெஞ்சங்களில் அந்த வடுக்கள் பதிந்துதான் இருக்கின்றன. இந்த அழிக்க முடியாத தழுப்புகள் என்றும் ஆறாது. இன்று எங்களை விட்டுப் பிரிந்த அந்த 186 ஜீவன்களின் நினைவாக பனிச்சையடிச் சந்தியிலே நினைவு து}பி எழுப்பி நினைவு கூறுகின்றனர். இந்த கொடூரத்தின் கோரவிதையை விதைத்தவர்கள் என்றோ அறுவடை செய்யத்தான் வேண்டும். ஆனால் குருதி தோய்ந்த இந்ந இரத்த உறவுகளின் நினைவுகள் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்திலும் என்றும் பசுமையாகவே பதிந்திருக்கும்.

Print this item

  Halpe me
Posted by: P.S.Seelan - 06-25-2003, 12:23 PM - Forum: வீடியோ தொழில்நுட்பம் - Replies (6)

கணணிப் பகுதிக்கு வணக்கம்
டீவிடீ ஒளித் தட்டிலிருந்து வீசீடீ ஒளித் தட்டுக்கு பிரதி பண்ணும் மென் பொருளின் பெயரை தயவு செய்து அறியத் தாருங்கள். அப்படி ஏதும் மென் பொருளிருப்பின் எங்கிருந்து தரவிரக்கம் செய்யலாம் என்பதனையும் பணிவன்புன் தெரிவியுங்கள்.

ஒன்றுபடு தமிழா

அன்புன்

சீலன்

Print this item

  குட்டிக் கவிதைகள்.
Posted by: nalayiny - 06-25-2003, 09:35 AM - Forum: கவிதை/பாடல் - Replies (1)

1)
இரகசியம் சொல்வதாய்
முத்தமொன்றை
வைத்து தொலைத்தேன்.
என்ன நீ....
ஒரு முத்தம் தானே.
அதற்கு இப்படியா
யாரும் முறைப்பார்கள்.
2)
ஐயோ பாவம் அந்த நகங்கள்.
அருகிருக்கும் செடிகள்.
என் வருகைக்காக
அவற்றை எவ்வளவு நேரம் தான்
பிய்த்து எறிவாய்..!
அட தூர நின்று
இதைக் கூட
ரசிக்காது விட்டால்
நான் உன் காதலியா என்ன.
3)
அதெப்படி உன் நெற்றியில்
தடவிப்போகும் ஒற்றைத்தலைமுடி.
அதை நீ ஒதுக்கி ஒதுக்கி
கதைக்கும் போது
எத்தனை அழகு தெரியுமா.
4)
உன்னை நான் கடக்கும் போது
அதெப்படி எனக்காக
இவ்வளவு அழகான பார்வையையும்
புன்னகையையும்
பரிசளிக்கிறாய்..!
5)
உனது நண்பர்களோடு
இருக்கும் போது
என்னைக்கண்டதும்
ஒரு செருமல்.
அதெப்படி நண்பர்களுக்கே
தெரியாமல்
என் செவி தடவிப்போகும்
உந்தன் செருமல்.
6)
உந்தன் கைவிரல்களோடு
எந்தன் கைவிரல்களை
பிணைத்துக் கொள்வதில் தான்
எனக்கு எத்தனை ஆனந்தம்.
அவை கூட உந்தன் மனசைப்போல்
அத்தனை மென்மை.
7)
உன்பெயர் சொல்லி
அழைக்கும் போதெல்லாம்
என் விழிகள் தான்
உன் பெயர் சொல்வதாய் நீ..!
அட என் விழிகள்
எப்போது போச
கற்றுக் கொண்டன.

உன் நாக்கு உச்சரிக்கும்
வார்த்தைப்புூக்களை
எவ்வளவு அழகாக
விழாது பாதகாத்து
என் செவி சேற்கிறது
உந்தன் உதடுகள்.
9)
உதடுகள் நோகாமல்
எப்படி உன்னால்
பேச முடிகிறது.
ஆராய்ச்சி செய்து
என் விழிகள்
சோர்ந்து விட்டன.
மின்னலாய் சில
கதிர் கற்றைகள்.
அட உந்தன்
பற்களில் இருந்து
என் கண் சேர்ந்த
ஒளிக் கீற்றுகள்.
10)
உன் வருகைக்காக
காத்திருந்தேன்
இருள் எனைச்சுூழ.
தூர உன் வருகையை
உடனமே உணர்ந்து விடுவேன்.
என்னைச்சுhழ அழகிய பல ஒளிவண்ணம்.

யெடயலiலெ வாயஅயசயளைநடஎயn

Print this item

  கண்டேனடி
Posted by: Paranee - 06-25-2003, 08:40 AM - Forum: கவிதை/பாடல் - Replies (43)

பேனா நுனிக்குள் புதைந்து நிற்பவளே
வார்த்தைகளாக வடிய மறுப்பது ஏனோ

ஊரார் முன்னே திட்டித்தீர்த்துவிட்டு
என் முன்னே மட்டும் இன்னிசை பாடுவது ஏனோ

மனதின் உள்ளே மையல்கொண்டு
வெளியே மட்டும் வேசம் காட்டுகின்றாய்

உள்ளே நான் ஓசையில்லாமல் ஓய்வெடுக்க
முகத்தில் மட்டும் வெறுப்பை உமிழ்கின்றாய் ஏன்

உன் குரலோசைக் குயில் கீதத்தில்
வார்த்தைகளை மிழுங்கும்
அந்த நிமிடத்தில்

என் சின்னஞ்சிறிய சீண்டல்களிற்கான
உன் சிம்பொனிச்சிரிப்பில்

என் கவிதைகளை நிராகரித்த உன்
மனதின் பயப்பிராந்தில்

நான் கண்டுகொண்டேனடி. .
உனக்குள் நான் உறங்கிக்கொள்வதை

என்தன் நினைவுகளால்
உடையும் உன் பிஞ்சு இதயத்தை
நானே அறிந்தேனடி. .

புன்னகை சிந்தும் உன்
புூவிதழ்களின் மேலே

உறக்கம் மறந்த உன்
விழிப்பாவையினுள்ளே

புூமி கீறும் உன்
பிஞ்சு விரல்களினுள்ளே

நான் கண்டேனடி . .
என்தன் காதல் ஒளிந்திருப்பதை

வெறுத்த உன் உள்ளம்
என்னை விரும்பி அழைப்பதில்

சிறுத்த உன் இடை அடிக்கடி
சிலிர்த்துக்கொள்வதில்

கருத்த கூந்தல் எப்போதும்
சோர்ந்து வீழ்வதில்

நான் கண்டேனடி .
கசங்கும் என் இதயத்தை. .





நன்றி பரணீ

வைரமுத்துவின் ஒரு கவிதையின் சாயலில் எனது வார்த்தைகள்.

Print this item

  சூரியன்
Posted by: sethu - 06-25-2003, 08:23 AM - Forum: குறும்படங்கள் - Replies (7)

சூரியன் என்னும் விடியொ சஞ்சிகை வெளிவந்துள்ளது அதனை; அரங்கம் விசன் நீக்கேஸ் தாபனம் வெளியிட்டுள்ளது அதுதொடர்பாக சீவகன் கருத்தெளுதினால் நண்றாக இருக்கும் அல்லவா?

Print this item

  சாதனை
Posted by: Kanani - 06-24-2003, 06:15 PM - Forum: புலம் - Replies (247)

http://www.puthinam.com/?get=200305232223530063

Print this item

  கணணி நீங்களும் செய்யலாம்
Posted by: Kanani - 06-24-2003, 01:35 PM - Forum: கணினி - Replies (32)

கணணி இப்பொழுது பொதுவாக எல்லாருடைய வீட்டிலும் இருக்கும் ஒரு சாதனமாகி விட்டது
கணணி ஒன்றை அமைத்தலுக்கும் பிழை வந்தால் பழுதுபார்க்கவும் கணணி நிபுணர்களைத் தேடி அலைவதும், சிறு சிறு பிரச்சினைகளுக்கு அதிக பணம் செலவிடுவதும் பலருக்கு வாடிக்கையாகிவிட்டது

கணணி பற்றிய தெளிவான அறிவும் அதில் தோன்றும் பிரச்சனைகளைக் களையும் வழிகளும் தெரிந்திருத்தல் எல்லோருக்கும் நன்மை பயக்கும் என நினைக்கிறேன்

இனி கணணி ஒன்றை நீங்களே எவ்வாறு அமைப்பது என்றும் அதனுடைய இயக்கம் பற்றியும் பாரப்போம்

கணணியின் மையச் செயலகத்தினுள் CPU (Central Processing Unit) என்ன இருக்கிறது?

அதிலிருக்கும் முக்கிய பாகங்கள்

தாயப் பலகை - Mother board
நுண் செயலி - Processor
முதன்மை நினைவகம் - Main memory
நிலை வட்டு அல்லது வன் வட்டு - Hard Disk
அகற்று சேமிப்பகம் - Removable Storage (Floppy & Zip)
ஒலி அட்டை - Sound card
ஒளித்தோற்ற அட்டை - Video Card
விசைப் பலகை - Key Board
எலி - Mouse
வடங்கள் - Cables
குறுவட்டு அல்லது பல்பயன்வட்டு வாசிப்பான் - CD/DVD ROM
ஒலி வடம் - Audio Cable
இறுதியாக சக்தி வழங்கியும் கலமும் - Case

அவை எல்லாம் தாய்ப்பலகை எனும் ஒரு இல்த்திரனியல் சுற்றில் பொருத்தப்பட்டு இயங்குவதே இந்தக் கணணி எனும் இயந்திரம்

இதில் முக்கியமான தாய்ப்பலகை பற்றித் தெரிந்துகொண்டால் மற்றப் பாகங்களை எப்படிப்பொருத்துவது என்பது இலகுவாக இருக்கும்

இதில் உங்களுக்குத் தெரிந்தவற்றை கூறுங்கள் மிகுதியை பிறகு எழுதுகிறேன்

Print this item

  தணிக்கை படம்
Posted by: sethu - 06-24-2003, 08:00 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (16)

இங்கு இனம் தெரியாதவர்களால் தணிக்கை

Print this item