Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
படுகொலைகள்
#1
சத்துருக்கொண்டான் படுகொலை



இலங்கை பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரமடைந்த பின் மாறிமாறி ஆட்சி செய்த சிங்கள பேரினவாத அரசுகள் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி அடிமைப் படுத்தி ஆழ்வதிலேயே அக்கறையாக இருந்தன. இதற்கான பல மறைமுகமான தமிழ் இன அழிப்பு சதித்திட்டங்களைத் தீட்டினர். இலங்கை முழுவதிலும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் திட்டமிட்ட இனக்கலவரங்களை உண்டாக்கி, தமிழ் மக்களையும், அவர்களின் சொந்தப்பிரதேசங்களையும் அழிக்கத் தொடங்கினர். இதனை 05–06–1958 ஆண்டு கொண்டுவரப்பட்ட சிங்களச் சட்டத்தின் மூலம் உருவான இனக்கலவரம் தொடக்கம் 1983ம் ஆண்டு கறுப்பு ஜீலை கலவரத்துடன் நடத்திய வெறியாட்டங்கள் வெளிப்படையாகக் காட்டுகின்றன.



இந்த நாட்டின் தமிழ்பேசும் மக்களுக்கு இளைக்கப்பட்ட கொடுமைகள் பல உண்டு. தமிழ் மக்களுக்கு எதிராக பேரினவாதிகள் திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட அநீதிகளை வரலாறுகள் கூறுகின்றன. தமிழ் மக்கள் நியாயமான கோரிக்கையை முன்வைத்தபோதும் மறுக்கப்பட்ட தம் உரிமைகளை கோரியபோதும் இழைக்கப்பட்ட கொடுமைகளை தட்டிக் கேட்கும் போது தமிழ் மக்கள்மீது சுமத்தப்படும் அநீதிகளுக்கு நீதி கேட்கும் போதெல்லாம் அவர்களின் குரல்கள் கொடூரமான முறைகள் மூலம் அடக்க முற்பட்டது பேரினவாதம்.



தமிழ் மக்களுக்கு எதிராக திட்டமிட்டு கட்டவிழ்த்துவிடப்பட்ட ஒவ்வொரு வன்முறைகள், இனக்கலவரங்களின் பின்னாலும் பேரின அரசாங்கத்தின் கரங்கள் மறைமுகமாக செயற்பட்டதற்கான ஆதாரங்கள் அவ்வப்போதும் வெளியிடப்பட்டன. தமிழ் மக்களை பேரினவாதம் எந்தளவிற்கு கீழ்த்தரமாக நடத்த முற்பட்டது என்பதற்கு 1983 ஜீலை மாதம் நாடு புூராகவும் சிங்கள அரசும் அதன் காடையர் கும்பலும் நடத்திய வெறியாட்டங்கள் வெளிப்படையாக காட்டுகின்றன.



பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். கோடிக்கணக்கான தமிழ் மக்களின் சொத்துக்கள் சுூறையாடப்பட்டன. சுpறையில் அடைக்கப்பட்டவர்கள் சிறையிலே சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். இவ்வாறு தமிழினத்தை அடக்கி ஒடுக்குவதற்கு பேரினவாதம் அன்று ஒரு இரத்த அபிசேகத்தையே நடாத்தி முடித்தது. இதன் மூலம் சிங்கள காடையர்களில் காட்டுமிராண்டித்தன்மையும், கொடூர பயங்கரவாதத்தையும் உலகமே அறிந்து வியந்தது.



இத்துடன் பேரினவாதத்தின் கொடூரங்கள் நின்று விடவில்லை 2ம் கட்ட ஈழப்போரில் ஆரம்ப காலத்தில் அதாவது, 1990ம் ஆண்டு காலப்பகுதியில் திட்டமிட்டு பல படுகொலைகள் தொடர்ந்தும் பல கிராமங்களில் நடந்தது. குறிப்பாக, மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகம், மகிழடித்தீவு, பெரியபுல்லுமலை, சத்துருக்கொண்டான் படுகொலை, மயிலந்தனைப் படுகொலை, அம்பாறை உடும்பன்குளம் இப்படி ஒவ்வொரு தமிழ் கிராமங்களிலும், ஒன்றும் அறியாத அப்பாவித் தமிழ் மக்கள் கண்ட இடமெல்லாம், வெட்டியும், சுட்டும், சித்திரவதை செய்தும் கொடூரமாக கொல்லப்பட்டனர். நு}ற்றுக்கணக்கான தமிழ் பெண்கள் மானவங்கப்படுத்தியும் அநாகரிகமான முறையில் கொல்லப்பட்டனர். கற்பிணித் தாய்மார்கள், சிறுவர்கள், குழந்தைகள் கொடுமைபடுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் கைதுசெய்யப்பட்டும், கடத்திச் செல்லப்பட்டும் அடையாளம் தெரியாத வகையில் சித்திரவதை செய்து கொல்லப்பட்டனர். தமிழ் மக்களின் உயிர்கள் வகை தொகையின்றிப் பறிக்கப்பட்டன. அவர்களின் உடமைகள் அழிக்கப்பட்டன. சொத்துகள் சூறையாடப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து விரட்டப்பட்டு அகதிகளாக்கப்பட்டனர்.



இந்த இன அழிப்புப் படுகொலையில் 09-09-1990ல் நடாத்தப்பட்ட மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை மிகக்கொடூரமானது. இப்படுகொலை சத்துருக்கொண்டான், கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த அப்பாவித் தமிழ் மக்கள் 186 பேரை ஒன்றாகக் குவித்து அடையாளம் தெரியாமல் கொடூரமாகக் கொல்லப்பட்ட மிக மோசமான படுகொலையாகும். 1990ம் ஆண்டு ஒவ்வொரு கிராமத்திலும் “வெட்டுப்பாட்டி என்ற வெறியாட்டப் படையினர்” நடத்திய கொடூரமான கொலைகளுக்கு அஞ்சி தமது இருப்பிடங்களை விட்டு சிதறியோடி பாதுகாப்புத்தேடி, பாடசாலைகள், ஆலயங்கள், பொதுக்கட்டடங்கள் என்பனவற்றில் கூட்டம், கூட்டமாக இருந்தனர். இது தான் அந்த வெறியாட்டக்காரர்களுக்கு வசதியாக இருந்தது. இப்படி கூட்டம், கூட்டமாக இருந்தவர்களை சேர்த்து ஒரே இடத்தில் கொன்ற படுகொலைதான் சத்துருக்கொண்டான் படுகொலையாகும்.



இப்படுகொலையின் போது கிராமத்தில் இராணுவ சுற்றிவளைப்பில் அகப்படாமல் தப்பியவர்களும் பிடிபட்டு இப்படுகொலையை நேரில் கண்டு வெட்டுக் காயங்களுடன் தெய்வாதீனமாக உயிர் தப்பி வந்த ஒருவரின் தகவல்களின்படி இப்படுகொலைச் சம்பவத்தைப் பார்க்கும் போது 17-08-1990 அன்று வெட்டுப்பாட்டி என்ற அரச படையினர் சத்துருக்கொண்டான் என்ற கிராமத்திலுள்ள “போய்ஸ்டவுன்” என்ற முகாமிற்கு கெப்டன் திஸ்ஸவர்ணகுலசூரிய என்ற அதிகாரியின் தலைமையில் வந்திருந்தனர். இவர்கள் வந்த அன்றே கொக்குவில் கிராமத்துக்குள் புகுந்து 24 பேரை பிடித்து மாரியம்மன் கோவில் சந்திக்கு கொண்டுவந்து அடித்து சித்திரவதை செய்தனர். இதில் மரியநேசம், சுப்பிரமணியன் தவராசா, குமாரசாமி ஆகிய நால்வரையும் அந்த இடத்திலே அடித்துக்கொன்றனர். பின் டயர் போட்டு எரித்தனர். இதனையடுத்து 08-09-1990 அன்று சத்துருக்கொண்டான் கொளனிக்குள் சீருடையுடன் சென்ற படையினர் அங்கே தென்னந் தோட்டத்தில் ஓலைமட்டை எடுத்துக்கொண்டிருந்த த.கணபதிப்பிள்ளை, இளையான் ஆகிய இருவரையும் அவர்கள் கொண்டு வந்த மட்டையே போட்டு உயிருடன் எரித்துக் கொன்றனர். இதனால் இக்கிராமத்திலுள்ள மக்கள் சிதறி ஓடினர். அநேகமானவர்கள் இடம் பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றனர். எஞ்சியவர்கள் பெரிய வீடுகளில் பயத்துடன் ஒன்றாகச் சேர்ந்து இருந்தனர். இதை பயன்படுத்திய அரசபடையினர் ஒட்டுமொத்தமாக இக்கிராம மக்களையே கொன்றொழிக்கத் திட்டம் தீட்டினர்.



09-09-1990 அன்று பி.ப 5.00 மணியளவில் கெப்டன் திஸ்ஸ வர்ணகுலசூரியாவின் தலைமையில் சீருடையுடன் சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய கிராமங்களை சுற்றிவளைத்தனர். ஒரு பகுதியினர் மெயின்வீதி வழியாக பிள்ளையாரடிக் கிராமத்தை சுற்றிவளைத்தார்கள். மற்றையவர்கள் போய்ஸ்டவுள் முகாமிற்கு பின்புறமாக வந்து சத்துருக்கொண்டான் கொளனிப் பக்கமாகச் சென்று அங்கு ஒரு வீட்டிலிருந்த ராசா என்பவரையும் அவரின் மனைவி நேசம்மா, நான்கு பிள்ளைகளையும் கூட்டிக்கொண்டு வந்து பக்கத்து வீடுகளிலிருந்த கணபதிப்பிள்ளை குடும்பத்தினர்கள், அழகையா குடும்பத்தினர்கள், கதிர்காமத்தம்பி, கண்மணி குடும்பத்தினர்கள், நற்குணசிங்கம், மனைவி, சித்தி இவர்களின் மூன்று மாதக்குழந்தை அனைவரையும் அழைத்து “நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கத்தான் வந்துள்ளோம் உங்களுக்கான எல்லா உதவிகளையும் செய்வோம். ஏங்களுடன் வாருங்கள்” எனக் அழைத்து வந்து பனிச்சையடிச் சந்தியில் இருக்க வைத்தனர். அதன் பின் பக்கத்து வீட்டிலிருந்த கிருபைரெட்ணம் குடும்பம், பேரின்பம் குடும்பம் இவர்களின் வீட்டிலிருந்த மற்றைய குடும்பங்கள் அனைவரையும் சந்திக்கு கூட்டிவந்தனர் இதில் பேரின்பன் மனைவி பரஞ்சோதியுடன் நந்தினி என்ற பிள்ளையும் இவர்களுடன் நடக்க முடியாத, முடமான, பேசமுடியாத ஊமைப்பிள்ளைகள் நால்வரும் இருந்தனர். இவர்களை து}க்கி வர முடியாது எனக்கூற இவர்களை நாங்கள் முகாமிற்கு கொண்டுபோய் பாதுகாப்பு வழங்குவதுடன் சுகமாக்கியும் தருவோம் எனக்கூறி மற்றவர்களைத் து}க்கிவரும்படி கூறினர். இவர்களின் நயவஞ்சகத்தினை அறியாத அப்பாவி மக்கள் அந்த வலது குறைந்த பிள்ளைகளையும் து}க்கிக் கொண்டு வந்து சந்தியில் வைத்தனர். அதன் பின் பரமக்குட்டி என்பவரின் வீட்டில் ஒன்றாக இருந்த 20 குடும்பங்களைச் சேர்ந்த அத்தனை பேர்களையும் பனிச்சையடிச் சந்திக்கு கொண்டு வந்து அனைவரையும் ஒன்றாகச் சேர்த்தனர். இப்படிப் பனிச்சையடிச் சந்தியில் சேர்க்கப்பட்டவாகள் கொக்குவில், பிள்ளையாரடியில் பிடிக்கப்பட்டவர்கள் எல்லோரையும் கொத்துக்குளத்து மாரியம்மன் கோவில் சந்திக்கு கொண்டு வந்த பின் 7.00 மணியளவில் போய்ஸ்டவுள் முகாமிலுள்ள ஒரு பெரிய கட்டிடத்தில் (முன்னர் அரிசி ஆலை இருந்த கட்டிடத்தில்) 63 குடும்பத்தைச் சேர்ந்த 177 பேரையும் ஒன்றாக அடைத்தனர்.



இப்படி ஒன்றாக இருட்டுக் கட்டடத்துக்குள் அடைத்த பின்னர் அனைவரும் பயமும் பீதியும், நடுக்கமும் ஏற்பட்டது எல்லோரும் அழத்தொடங்கினர். ஓவ்வொரு குடும்பத்தினர்களும், அவர்களின் சொந்த உறவுகளை கட்டிப்பிடித்து முனுமுனுத்தவாறு அழுதனர். எல்லோரும் கடவுளே எங்களைக் காப்பாத்து என கடவுளை வேண்டினர். இவர்களை அடைத்த படையினர் தமது சீருடைகளைக் கழட்டி வைத்துவிட்டு மது அருந்தத் தொடங்கினர். எல்லோரும் குடித்துவிட்டு வாள், கத்தி என்பவற்றை எடுத்து புூட்டிய கதவைத் திறந்தனர். இவர்களை இருட்டில் அரைகுறையாகக் கண்ட மக்கள் அழத்தொடங்கினர். இவர்களில் மூவரை வெளியே எடுத்தனர். இவர்களை நாங்கள் விசாரிக்க வேண்டும், இது மற்றவர்களுக்குத் தெரியக்கூடாது, இப்படி விசாரிக்கும் போது நாங்கள் அடித்தால் மற்றவர்கள் சத்தம் போடக்கூடாது என அனைவரின் கண்களையும் கட்டினர். குமார் வயது 27, ஜீவானந்தம் வயது 33, கிருஸ்ணகுமார் வயது 22 ஆகிய மூவரையும் முகாமின் பின்பக்கமாக கொண்டு சென்று, சித்திரவதை செய்தனர், கத்தியால் குத்திக் கொன்றனர். இதில் காயங்களுடன் ஒருவரின் உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. அவரின் இரு கண்களுமே இந்த வெறியாட்ட விழாவை பார்த்துக் கொண்டிருந்தன.



பின்னர் வயது முதிர்ந்த ஆண்களை எடுத்து ஒவ்வொருவராக இரும்புக்கம்பியால் அடித்துக் கொன்றனர். கால்களையும், தலைகளையும் வெட்டி அங்கே ஏற்கனவே தோண்டப்பட்டிருந்த பெரிய குழியில் போட்டனர்.இதன்பின் வயது போன பெண்களைக் கொண்டுவந்து கம்பியாலும், பொல்லாலும் அடித்துக் கொண்டு குழியிலே போட்டனர். அடுத்து திருமணம் முடித்த அனைத்து ஆண்களையும் கண்களைக் கட்டிக் கொண்டு வந்து கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றனர். இவ்வாறே திருமணமான பெண்களையும் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். பின் இளைஞர்களைக் கண்களைக்கட்டிக் கொண்டு வந்து கையையும், கால்களையும் வெட்டி அவர்கள் துடிக்கும் காட்சியைப் பார்த்து மகிழ்ந்தனர். அவர்களை பல துண்டுகளாக துண்டாடி கொன்று குழியிலே போட்டனர். பின் சிறுவர்களையும், குழந்தைகளையும் கொண்டு வந்து சாய்ந்து கிடந்த முந்திரிகை மரத்தில் ஒவ்வொருவராக படுக்க வைத்து இரண்டு துண்டுகளாக வெட்டி குழியிலே போட்டனர்.



குழந்தைகயைக் கால்களால் மிதித்தும், கழுத்தைத் திருகியும் கொன்றனர். இந்தக் கொடுமைக்காரர்கள் பேசமுடியாத ஊமையாக இருந்த, நடக்கமுடியாது முடமாக இருந்த அந்த வலது குறைந்த 4 பிள்ளைகளையும் விட்டுவைக்கவில்லை. அவர்களை முந்திரிகை மரத்தில் போட்டு துண்டு துண்டாக வெட்டிக் கொன்றனர். பின் சிறிது நேரம் ஓய்வெடுத்து பின் எஞ்சியிருந்த இளம் யுவதிகளை வெளியே எடுத்து அவர்களை நிர்வாணமாக்கி காட்டு மிராண்டித்தனமாக அவர்களின் காமப் பசியைத்தீர்த்தனர். அவர்களை அலங்கோலப்படுத்தி மனித நேயமுள்ளவர்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அநாகரீகமான முறையில் அவர்களை சின்னாபின்னப்படுத்தி அவர்களின் அங்கங்களை வெட்டி சித்திரவதை செய்து கொன்றனர். இவர்கள் சத்தமாக கூக்குரலிட அவர்களின் வாய்களில் கறுப்புச் சீலையை திணித்தனர். இவர்களை அரைகுறை உயிருடன் குழியிலே கொண்டுபோய் போட்டனர். இப்படி அனைவரும் ஒரே குழியில் ஒன்றாகக் குவித்தனர். அந்த மடுநிறைந்தது.



இதன்பின் பெற்றோல் மண்ணெண்ணை என்பவற்றை இதன்மேல் ஊற்றினர். எரிபொருள் போதாமையால் இன்னும் எடுப்பதற்காக வெளியில் சிலர் சென்றனர். மற்றவர்கள் களைப்பிலும் மதுபோதை மயக்கத்தடன் படுத்தனர். இந்த சந்தர்ப்பத்தைப் பார்த்து அந்த இருகண்களும் மெதுவாக அந்த இடத்தைவிட்டு வெளியேறி பத்தையில் மறைந்திருந்தன. எரிபொருளுடன் வந்தவர்கள் இரத்தம் வடிய வெளியே வந்தவரின் இரத்த அடையாளத்தை கண்டு வந்த வழியேதேடினர். அவர்கள் மதுபோதையில் இருந்ததால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இவர் ஒழித்திருந்து மேலும் நடக்கும் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார். கொண்டுவந்த பெற்றோலையும் திரும்ப ஊத்தி அனைவரையும் ஒன்றாக பற்றவைத்தார்கள். எங்கும் ஒரே புகைமண்டலமாக காட்சியளித்தது. உடல்களும் மண்டையோடுகளும் வெடிக்கும் சத்தந்தான் கேட்டன. இதன் பின் இரவு 2.00 மணியளவில் தப்பியவர் தவண்டு வந்து ஒருவீட்டிற்கு வந்து பின் வைத்தியசாலைக்குச் சேர்ந்தார்.



இவர் தப்பிவந்து வைத்தியசாலையில் இருப்பதை அறிந்த இராணுவத்தினர் வைத்தியசாலையை முற்றுகையிட்டு தேடினர். அங்கே எம் இரத்த உறவுகள் மறைத்து வைத்து காப்பாற்றினார். முகாமில் எரிக்கப்பட்ட அப்பாவி மக்களின் உடல்கள் இரண்டு நாட்களாக எரிக்கப்பட்ட பின் அடையாளம் தெரியாமல் மறைக்கப்பட்டனர். இதில்…



50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் - 23பேர்

50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் - 18பேர்

50 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமான ஆண்கள் - 13பேர்

50 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமான பெண்கள் - 33பேர்

25 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமாகாத ஆண்கள் - 16பேர்

25 வயதிற்கு கீழ்ப்பட்ட திருமணமாகாத பெண்கள் - 23பேர்

10 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுவர்கள் - 20பேர்

10 வயதிற்கு கீழ்ப்பட்ட சிறுமிகள் - 21பேர்

ஊமைகள்,முடமான குழந்தைகள் - 04பேர்

கர்ப்பிணித் தாய்மார்கள் - 02பேர்



63 குடும்பத்தைச் சேர்ந்த மொத்தம் - 177பேர்

17-08-1990 கொல்லப்பட்டவர்கள் - 04பேர்

08-09-1990 கொல்லப்பட்டவர்கள் - 02பேர்

02-04-1991 - 03பேர்



மொத்தமாக விபரம் கிடைத்தவர்கள் - 186பேர்



இப்படி அநியாயமாகக் கொல்லப்பட்ட அப்பாவிகளின் கொடூரத்தை நேரில் கண்ட சாட்சியுடன் கிராமத்தவர்கள் பொது நிறுவனங்களின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசுக்கும், சர்வதேச நாடுகளுக்கும் எடுத்துக்கூறியும் இதுவரை அதற்கான எந்த முடிவும் கிடைக்கவில்லை. இனவெறி அரசும், அதன்படைகளும் அனைத்;தையும் மறுத்து மறைத்தனர்.



ஆனால் தமிழ் மக்கள் இந்த கொடூரத்தை என்றும் மறக்கமாட்டார்கள். தம் இரத்த உறவுகளுக்கு ஏற்பட்ட அந்த கதியை என்றும் இதயத்தில் பதியவைத்திருக்கிறார்கள். அவர்களின் நெஞ்சங்களில் அந்த வடுக்கள் பதிந்துதான் இருக்கின்றன. இந்த அழிக்க முடியாத தழுப்புகள் என்றும் ஆறாது. இன்று எங்களை விட்டுப் பிரிந்த அந்த 186 ஜீவன்களின் நினைவாக பனிச்சையடிச் சந்தியிலே நினைவு து}பி எழுப்பி நினைவு கூறுகின்றனர். இந்த கொடூரத்தின் கோரவிதையை விதைத்தவர்கள் என்றோ அறுவடை செய்யத்தான் வேண்டும். ஆனால் குருதி தோய்ந்த இந்ந இரத்த உறவுகளின் நினைவுகள் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்திலும் என்றும் பசுமையாகவே பதிந்திருக்கும்.
Reply
#2
மட்டக்களப்பு - அம்பாறை

06.11.85 மட்டக்களப்பு பார் வீதியில் கொல்லப்பட்டோர் 9 பேர்

27.11.85 மட்டக்களப்பில் மீனவர்கள் கொல்லப்பட்டோர் 24 பேர்

19.01.86 இருதயபுரத்தில் கொல்லப்பட்டோர் 24 பேர்

19.02.86 அம்பாறை உடும்பன் குளத்தில் கொல்லப்பட்டோர் 60 பேர்

19.09.86 மட்டக்களப்பு நகரில் கொல்லப்பட்டோர் 11 பேர்

11.11.86 மட்ஃ பெரியபுல்லுமலையில் கொல்லப்பட்டோர் 23 பேர்

பெப்ரவரி, 87 கொக்கட்டிச்சேலையில் 13 விசேட அதிரடிப் படையினர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து கொல்லப்பட்ட பொதுமக்கள் 150 பேர்

9-14.7.90 மட்டக்களப்பில் கொல்லப்பட்டோர் 19 பேர்

ஜூலை, 90 அம்பாறை குடியேற்றவாசிகள் கொல்லப்பட்டோர் 38 பேர்

ஜூலை, 90 வள்ளத்தில் அகதிகள் கொல்லப்பட்டோர் 28 பேர்

22.07.90 கல்முனையிலும் கல்லாற்றிலும் அகதி முகாம்களில் கொல்லப்பட்டோர் 30 பேர்

12.08.90 துறைநீலாவணையில் கொல்லப்பட்டோர் 60 பேர்

17.08.90 வீரமுனையில் கொல்லப்பட்டோர் 83 பேர்

30.10.90 கொக்கட்டிச்சோலையில் கொல்லப்பட்டோர் 182 பேர்

1991 மகிழடித்த்Pவு முதலைக்குடாவில் கொல்லப்பட்டோர் 67 பேர்

09.08.92 மயிலந்தனையில் கொல்லப்பட்டோர் 32 பேர்

ஏப்ரல், 92 மண்டூரில் ஒரே குடும்பத்தில் 7 பேர் உட்பட கொல்லப்பட்டோர் 08 பேர்

ஆகஸ்ட்,92 மயிலந்தனையில் புனானை இராணுவ முகாம் படையினரால் கொல்லப்பட்டோர் 39 பேர்

ஏப்ரல்,92 பொலனறுவை அளஞ்சிப் பொத்தானையில் முஸ்லீம் ஊர்காவல் படையால் கொல்லப்பட்டோர் 80 பேர்

கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து காணாமல்ப் போனோர் 173 பேர்

சத்துருக்கொண்டானில் கொல்லப்பட்டோர்

(68 குழந்தைகள் உட்பட) 184 பேர்

வாழைச்சேனையில் கொல்லப்பட்டோர் 150 பேர்

கல்லாற்றில் கொல்லப்பட்டோர் 80 பேர்

மட்டக்களப்பில் சமாதனக் குழுவின் தகவலின்படி காணாமற் போனோர் தொகை 5000 பேர்
Reply
#3
அம்பாறை மாவட்டம் அக்கரைப் பற்றுப் பகுதியில் இராணுவப் புலனாய் வுப் பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறப் படும் குடும்பஸ்தர் வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.அக்கரைப்பற்றைச் சேர்ந்த சம்பு நாதபிள்ளை விவேகானந்தராஜா (வயது34) என்பவரே சுட்டுக்கொல்லப் பட்டவராவார்.
ஆரம்பத்தில் ரெலோ அமைப்பில் இயங்கிவந்த இவர், பின்னர் ஈ.பி. ஆர்.எல்.எவ். வரதர் அணியில் சேர்ந்து இயங்கினார் என்று தெரிவிக்கப்படு கின்றது.
கொழும்பில் தங்கியிருந்த இவர்,இரு வாரங்களுக்கு முன்பே சொந்த ஊருக்குத் திரும்பி இருந்தார்.தனது சைக்கிளில் கடைக்கு சென்றிருந்த சமயம் மோட்டார் சைக் கிளில் வந்த நபர்களால் வீதியில் வைத்து இவர் சுடப்பட்டதாகப் பொலீ ஸார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தை யான இவரது உடலில் 5 துப்பாக் கிச் சூட்டுக்காயங்கள் காணப்பட்டன
Reply
#4
சேது பாதுகாத்து வைக்க வேண்டிய தகவல்கள். உங்கள் பணி தொடரட்டும்.

அன்புடன்
சீலன்
seelan
Reply
#5
sethu Wrote:mk;ghiw khtl;lk; mf;fiug; gw;Wg; gFjpapy; ,uhZtg; Gydha; Tg; gphpitr; Nrh;e;jth; vdf; $wg; gLk; FLk;g];jh; tPjpapy; itj;J ,de;njhpahj egh;fshy; Rl;Lf; nfhy;yg;gl;lhh;.mf;fiug;gw;iwr; Nrh;e;j rk;G ehjgps;is tpNtfhde;juh[h (taJ34) vd;gtNu Rl;Lf;nfhy;yg; gl;ltuhthh;.
Muk;gj;jpy; nuNyh mikg;gpy; ,aq;fpte;j ,th;> gpd;dh; <.gp. Mh;.vy;.vt;. tujh; mzpapy; Nrh;e;J ,aq;fpdhh; vd;W njhptpf;fg;gL fpd;wJ.
nfhOk;gpy; jq;fpapUe;j ,th;>,U thuq;fSf;F Kd;Ng nrhe;j CUf;Fj; jpUk;gp ,Ue;jhh;.jdJ irf;fpspy; filf;F nrd;wpUe;j rkak; Nkhl;lhh; irf; fpspy; te;j egh;fshy; tPjpapy; itj;J ,th; Rlg;gl;ljhfg; nghyP ]hh; njhptpj;jdh;.
,uz;L gps;isfspd; je;ij ahd ,tuJ clypy; 5 Jg;ghf; fpr; #l;Lf;fhaq;fs; fhzg;gl;ldஅம்பாறை மாவட்டம் அக்கரைப் பற்றுப் பகுதியில் இராணுவப் புலனாய் வுப் பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறப் படும் குடும்பஸ்தர் வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.அக்கரைப்பற்றைச் சேர்ந்த சம்பு நாதபிள்ளை விவேகானந்தராஜா (வயது34) என்பவரே சுட்டுக்கொல்லப் பட்டவராவார்.
ஆரம்பத்தில் ரெலோ அமைப்பில் இயங்கிவந்த இவர், பின்னர் ஈ.பி. ஆர்.எல்.எவ். வரதர் அணியில் சேர்ந்து இயங்கினார் என்று தெரிவிக்கப்படு கின்றது.
கொழும்பில் தங்கியிருந்த இவர்,இரு வாரங்களுக்கு முன்பே சொந்த ஊருக்குத் திரும்பி இருந்தார்.தனது சைக்கிளில் கடைக்கு சென்றிருந்த சமயம் மோட்டார் சைக் கிளில் வந்த நபர்களால் வீதியில் வைத்து இவர் சுடப்பட்டதாகப் பொலீ ஸார் தெரிவித்தனர்.
இரண்டு பிள்ளைகளின் தந்தை யான இவரது உடலில் 5 துப்பாக் கிச் சூட்டுக்காயங்கள் காணப்பட்டன
P.S.Seelan Wrote:சேது பாதுகாத்து வைக்க வேண்டிய தகவல்கள். உங்கள் பணி தொடரட்டும்.
ஏன்னராப்பா.. பயம்.. வெளிப்படையா.. சொல்லப்.. பயமான.. கேஸ்..போலை.. வீரப்பேச்சுக்குமட்டும்.. குறைவில்லை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply
#6
P.S.Seelan Wrote:சேது பாதுகாத்து வைக்க வேண்டிய தகவல்கள். உங்கள் பணி தொடரட்டும்.

அன்புடன்
சீலன்
Reply
#7
அலட்டுரதுகளை விட்டு விட்டு தொடருங்கள். தெரிந்து வைத்திருக்க வேண்டியவை. அரையும் குறையுமா எழுதி மண்டை காயப்பண்ணுதுகள்.

ஒன்றுபடுதமிழா
அன்புடன்
சீலன்
seelan
Reply
#8
Tamil youth killed by Muslim

A Tamil youth in the Sammanthurai area of Ampara district was killed close to a paddy field Wednesday, sources in Sammanthurai said. The youth has been identified as Mr. Kunchipodiyan, a postal services worker at the Malwathai post office, and it appears he was on his way back home from work when he was killed, the sources said.

The youth’s dead body was found at the same spot where two Muslim farmers were found dead last week, the sources said. Ethnic tensions between Tamil and Muslim communities ran high in the Ampara district in the past few weeks following killings of both Tamil and Muslim youths by unidentified persons.
Reply
#9
sethu Wrote:Tamil youth killed by Muslim

A Tamil youth in the Sammanthurai area of Ampara district was killed close to a paddy field Wednesday, sources in Sammanthurai said. The youth has been identified as Mr. Kunchipodiyan, a postal services worker at the Malwathai post office, and it appears he was on his way back home from work when he was killed, the sources said.

The youth’s dead body was found at the same spot where two Muslim farmers were found dead last week, the sources said. Ethnic tensions between Tamil and Muslim communities ran high in the Ampara district in the past few weeks following killings of both Tamil and Muslim youths by unidentified persons.
Thanks

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=9785
Truth 'll prevail
Reply
#10
மோட்டார் சைக்கிள் விபத்தில் மல்வத்தை அஞ்சல் அலுவலக ஊழியர் மரணம்.

சம்மாந்துறைக்கும் மல்வத்தைக்கும் இடையில் வீதியால் சென்று கொண்டிருந்த போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மல்வத்தை அஞ்சல் அலுவலகத்தைச் சேர்ந்த குஞ்சுப்பொடியன் என்றழைக்கப்படும் ஊழியரே மரணமடைந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் நேற்று (03.09.2003) பி.ப 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரு முஸ்லிம் இளைஞர்கள் கொலைசெய்யப்பட்ட இடத்திலே ஏற்பட்டுள்ளது. இறந்தவரின் தலையில் பாரிய காயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இது உண்மையில் விபத்தா அல்லது திட்டமிட்டு செய்யப்பட்டதா எனச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
Reply
#11
1990 ஆம் ஆண்டு செப்ரெம்பர் படுகொலைகள் நினைவாக
மட்டு. மாவட்டத்தில் 5 ஆம் திகதியை துக்க தினமாக
அனுஷ்டிக்கக் கோரிக்கை.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 1990 ஜூன் மாதத்திற்குப் பின்னர் பாதுகாப்புப் படைகளாலும், ஊர்காவற் படையினராலும், தேசவிரோதக் கும்பல்களாலும் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூர்ந்து நாளை 5ஆம் திகதி துக்க தினம் அனுஷ்டிக்குமாறு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பெருமன்றமும், மட்டக்களப்பு, அம்பாறை இந்து ஆலயங்களின் தலைமை ஒன்றியமும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அன்றைய தினம் காலை 6.30 மணிக்கு சகல இந்து, கிறிஸ்தவ ஆலயங்களிலும் மணிகள் ஒலிக்கப்பட்டு 7 மணிக்கு விசேட புூஜைகள் நடத்தப்படவேண்டும் எனவும், களியாட்ட நிகழ்வுகளைத் தவிர்த்து சோக இசை எழுப்பப்படுவதோடு, பொதுக் கட்டடங்கள், வீடுகள், வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் அனைத்திலும் கறுப்புக் கொடியேற்றப்பட வேண்டும் எனவும் கோரப்பட்டிருக்கிறது.

ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் உட்பட அனைத்து பொது மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து செல்வதோடு பாடசாலைகள் அனைத்திலும் காலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெறவேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்குப் பல்கலைக்கழக அகதி முகாமில் 1990ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 5ஆம் திகதி 158 பொது மக்களும், 9ஆம் திகதி சத்துருகொண்டான் பிள்ளையாரடி, கொக்குவில் பனிச்சையடி கிராமங்களைச் சேர்ந்த 187 பொதுமக்களும், 23 ஆம் திகதி மீண்டும் பல்கலைக்கழக அகதிமுகாமில் 16 பொது மக்களும் கொல்லப்பட்டனர்.

அன்றைய தினம் வந்தாறுமூலையில் உள்ள கிழக்குப் பல்கலைக்கழக மைதானத்தில் காலை 10 மணிக்கு படுகொலையுண்டோரை நினைவுகூரும் பொதுக்கூட்டமும், படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக து}பி அமைப்பதற்கு அடிக்கல்லும் வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் :பாடும்மீன்
Reply
#12
<img src='http://www.paadumeen.com/News/10.10.2003-p2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.paadumeen.com/News/10.10.2003-p3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.paadumeen.com/News/10.10.2003-p7.jpg' border='0' alt='user posted image'>
நேற்று இடம்பெற்ற நிகழ்வில்; கலந்து கொண்ட மக்கள் நினைவுத்து}பிக்கு மலர்வளையம் சாத்துவதற்கு கொண்டுசெல்வதையும், நினைவுத்து}பிக்கு மலர் வளையம் சாத்துவதையும், பிரதம அதிதிகளாகக் கலந்து கொண்ட மட்டு-அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், திருமதி ஜோசப் பரராஜசிங்கம் துணை அரசியல்பொறுப்பாளர் கிருஷன், ஆகியோர் அமர்ந்திருப்பதையும் படத்தில் காணலாம்
Reply
#13
<img src='http://www.paadumeen.com/News/10.10.2003-p5.jpg' border='0' alt='user posted image'>
Reply
#14
<img src='http://www.paadumeen.com/News/10.10.2003-p6.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.paadumeen.com/News/10.10.2003-p4.jpg' border='0' alt='user posted image'>
நேற்று இடம்பெற்ற நிகழ்வில்; போர்நிறுத்த கண்காணிப்புகுழு பிரதிநிதி, மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோர் மங்கள விளக்கேற்றுவதையும், தமிழீழத் தேசியக்கொடியை மட்டு-அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன் ஏற்றிவைப்பதையும் படத்தில் காணலாம்.
நண்றி பாடுமீன்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)