| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 343 online users. » 0 Member(s) | 340 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,005
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,029
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,495
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,250
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,527
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,732
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,258
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,877
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,931
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,188
|
|
|
| யாவா (JAVA) கற்போம் |
|
Posted by: இளைஞன் - 06-30-2003, 10:55 PM - Forum: கணினி
- Replies (52)
|
 |
"கற்கக் கசடறக் கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக" -திருவள்ளுவர்
வணக்கம் நண்பர்களே...
அறிவியல் சார்ந்த அனைத்துவிடயங்களையும் தமிழுக்குள் கொணரும் முயற்சியில் நான்
தவழத் தொடங்குகிறேன். புத்தகங்களில் மற்றும் இணையத்தளங்களில் உள்ளவற்றையும்
நான் கற்றவற்றையும், அனுபவப் பட்டவற்றையும் இணைத்து நீங்கள் விளங்கிக் கொள்ளும்
வகையில் கணணி சார் நுட்பங்களை எழுதத் தொடங்குகிறேன். ஆங்காங்கே தவறுகள்
நேரலாம். அறிந்தவர்கள் சுட்டிக்காட்டுங்கள். உங்களுடன் சேர்ந்து நானும் கற்றிக்கொள்வேன்.
மற்றும் தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப்படும்
என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இனி பாடத்துக்குள் நுழைவோம். நாம் இங்கு கற்க இருப்பது "யாவா"(JAVA) என்று கணணித்
துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் பற்றி. இன்னொன்றையும் குறிப்பிட
விரும்புகின்றேன். அதாவது, நாம் கற்க இருப்பது அடிப்படை மட்டுந்தான். நாம் அதனைக்
கற்பதற்கு முன்னர் அதுபற்றி அறிந்திருத்தல் நன்மை பயக்கும் என்பதால் "யாவா" பற்றிய சில
அடிப்படை விளக்கங்களைக் கவனிப்போம்.
யாவா என்றால் என்ன?
யாவா என்பது கணணிதுறையில் உள்ள பல்வேறு கணணிமொழிகளில் (உதாரணம்: Cobol,
Fortran, Pascal, C, C++, Visual Basic, மற்றும் பல) புதியதும், இளையதுமான
மொழியாகும். "சி++"(C++) என்னும் இன்னொரு கணணிமொழியின் வாரிசாகப் பலரால்
கருதப்படுகிறது. காரணம், யாவா மொழி சி++ ஐ ஒத்திருப்பதேயாகும்.
சரி, கணணிமொழி என்றால் என்ன? அதற்கு முதல் மொழி என்றால் என்ன? ஆம், மொழி
என்பது மனிதர்களுக்கிடையிலான தொடர்பூடகம். உணர்வுகளை, கருத்துக்களை மற்றும்
சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தளம். அதன் அடிப்படையில் கணணிக்கும்
மனிதனுக்கும் இடையிலான தொடர்பூடகமே இந்தக் கணணிமொழிகள். மனிதன் தனது
சிந்தனையை இம்மொழிகள் மூலம் கணணிக்குத் தெரிவிக்கிறான். அதனைக் கணணிகள்
உள்வாங்கிப் புரிந்து கொள்கின்றன. அந்தப் புரிதலின் அடிப்படையில் அந்த சிந்தனையை
செயற்படுத்துகிறது. சுருக்கமாகச் சொல்லின் மனிதன் ஏவல் செய்ய, கணணி செயற்படுகிறது.
இந்த இருவருக்குமான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்வன கணணிமொழிகள் ஆகும்.
யாவா - சுருக்கமான வரலாறு
யாவாவின் வரலாறு எழுபதுகளிலேயே மெதுவாகத் தொடங்கிவிட்டதால், அதுபற்றி நிறையவே
எழுதலாம். இருந்தாலும் அவற்றை எழுதுவதன் மூலம் மேலதிகமாக பல தகவல்களையும்
விளக்கங்களையும் தரவேண்டியிருக்கும். எமது குறிக்கோள் "யாவா அடிப்படைக் கல்வி"
என்பதால் அவற்றையெல்லாம் தவிர்த்துக் கொள்கின்றேன்.
23 ஆம் திகதி மே மாதம் 1995 ஆம் ஆண்டு அன்று யாவா மொழி "SUN" நிறுவனத்தினரால்
கணணி உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. யாவா என்னும் பெயர் இந்தோனேசியத்
தீவுகளில் ஒன்றான "யாவாத் தீவின்" பெயரை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததல்ல.
இந்தப் பெயர் அமெரிக்க மென்பொருள் வல்லுனர்களால் கோப்பிக்கு வழங்கிவந்த பெயர்களில்
மிகவும் விரும்பப்பட்ட பெயரில் இருந்து பெறப்பெற்றது.
சரி... அடுத்த பகுதியில் யாவாவின் இயல்பு மற்றும் யாவாவில் பயன்படுத்தப்படும் சில
முக்கிய சொற்பிரயோகங்கள் பற்றியும் சுருக்கமாகப் பார்த்துவிட்டு, அதன்பின்பு பாடத்திற்குள்
நுழைவோம்.
|
|
|
| இதயம் |
|
Posted by: rajani - 06-30-2003, 07:22 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (33)
|
 |
வணக்கம் யாழ் இணையத்திற்கு,
இதயம் என்ற தலைப்பில் கவிதையோடு என் உள் நுழைவை ஆரம்பிக்கிறேன்.
அனைவருக்கும் நன்றிகள்.பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.
இதயம் ... இது உறங்காத உலகம்.
ஆனால் உலகத்தையே இயக்கும் ஆட்சிபீடம்.
நன்றியுடன்
*****************
ரஜனி
|
|
|
| காட்சியும் கமராவும் |
|
Posted by: sOliyAn - 06-30-2003, 05:45 AM - Forum: குறும்படங்கள்
- Replies (10)
|
 |
நான் இங்கே ஒரு காட்சியை விபரிக்கப் போகிறேன்.. தயவுசெய்த கமரா கையாளும் அனுபவம் உள்ளவர்கள்மாத்திரம் அறிவுரையோ.. வழிகாட்டலோ.. ஆலோசனையோ தாருங்கள்..
கதாநாயகி கணவனால் அடக்கப்பட்டோ அல்லது ஏதோ ஒரு காரணத்தால் ஐரோப்பிய நாடொன்றில் வெளியுலகம் தெரியாதவளாக இருக்கிறாள்.. அதாவது கடைக்குச் செல்வதற்குக்மகூட தனியாக செல்ல முடியாத நிலையில் இருக்கிறாள்.. விபத்தில் கணவன் இறந்த செய்தி தொலைபேசிமூலம் வருகிறது.. இப்போழுது அவள் முதன்தமுதலான தானாகச் செயற்பட வேண்டிய கட்டாயம்.. இங்கே வசனம் எதுவுமே இல்லை.. தயக்கம்.. பயம்.. விரக்தி.. ஒரு உறுதி.. இந்த உணர்வுகள் முகத்தில் பிரதிபலிக்கிறது.. அடியெடுத்து நடந்து கதவைத் திறக்கிறாள்.. பளீரென வெளி வெளிச்சம் உள்ளே பரவுகிறது.. அவள் அந்த ஒளியுள் கலக்கிறாள்..
இதுதான் காட்சி.. இங்கே கமராவுக்கம் இசைக்கும்தான் வேலை.. அவைதான் இந்த காட்சியின் பொருளைத் துல்லியமாகச் சொல்ல வேண்டும்.. எப்படி எப்படி காட்சிகளை அமைத்து.. எவ்வாறு பொருத்த வேண்டும்.. (என்ன இளங்கோ அவர்களே?!!) விசயம் தெரிந்தவர்கள் விளக்கினால் உதவியாக இருக்கும்.. இந்தக் காட்சியை வேறு எவரும் பாவிக்கமாட்டார்கள்தானே?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|
|
|
| அடிப்படை கள விதிகளுக்கப்பால்.... |
|
Posted by: kuruvikal - 06-29-2003, 07:42 PM - Forum: உங்கள் கருத்துக்கள்
- Replies (4)
|
 |
களப்பொறுப்பாளரின் அடிப்படை விதிகளுக்கு அப்பால் செல்லாது நியாய பூர்வமாக கருத்தெழுதும் குருவிகள் மீது களப் பொறுப்பாளருக்கு அப்பால் புதிய விதிகள் திணிக்கப்பாட்டால் அப்படியான புதிய விதிகள் குருவிகளின் சுயத்தை பாதிக்கும் வகையில் அமையுமானால் அப்பகுதிகளில் குருவிகள் எதிர்காலத்தில் கருத்தெழுதுவதை தமது சுயத்தை பாதுகாக்கும் பொருட்டு தவிர்த்துக் கொள்ள தீர்மானித்துள்ளான!
களப் பொறுப்பாளரின் அறிவிப்புக்களுக்கு மேலதிகமாக தனிப்பட்ட பகுதிகளுக்கு வரும் புதிய விதி அறிமுகங்கள் பகிரங்கமாக களத்தில் வெளியிடப்பட வேண்டும் அத்துடன் ஆர்வத்துடன் கருத்தாடும் உறுப்பினர்களுக்கு புதிய விதிகள் தொடர்பில் விளக்கம் கோர அனுமதி அளிப்பதுடன் புதிய விதிகள் களப்பொறுப்பாளரின் அனுமதிக்குட் பட்டவை என்பதும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்!
அப்படி செய்யாது எழுந்தமான அறிவுப்புக்கள் மூலம் களவிதி அறிமுகங்களும் கருத்துக்களை தணிக்கைக்கு அப்பால் அகற்றுவதும் கருத்தாடுபவர்களின் ஆர்வத்தையும் சுயத்தையும் இக் களத்தின் மீதான மதிப்பையும் சிதைக்க விளைகின்றன என்பதை தாழ்மையுடன் சுட்டிக்காட்ட குருவிகள் விரும்புகின்றன!
களப் பொறுப்பாளர் இது தொடர்பில் தகுந்த விளக்கம் தந்தால் கருத்தாடும் அங்கத்தவர்கள் அனவரும் தமது சுயத்தையும் களத்தின் மேன்மையையும் பாதுகாத்து கருத்தெழுத உதவியாக அமையும்!
நன்றி- குருவிகள்!
|
|
|
| [b]எமது விடுதலைப் போராட்டத்தில் - மாற்றுக்கருத்துக்கள் ????? |
|
Posted by: mathe - 06-26-2003, 07:06 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (71)
|
 |
ஈழ விடுதலைப் போராட்டமானது இறுதியானதும், மிகப்பெரியதும், சிக்கல் நிறைந்ததுமான தடையை யுத்தமில்லாமல் தந்திரமாக தாண்டவேண்டிய காலகட்டத்தில் இருக்கிறது. இதில் உள்னாட்டு, வெளினாட்டு நாசகாரிகள் சிறிய, பெரிய தடைகளை ஏற்படுத்துவதற்காக பல வேடங்களில் தோன்ற முற்படுவார்கள்.
இதில் மாற்றுக் கருத்துள்ள கட்சிகள், ஊடகங்கள், ..... எனும் சில பசப்புப் பெயர்களில் தங்கள் முகங்களுக்கும், உடம்புகளுக்கும் காலத்திற்கு காலம் சாயங்களை பூசிக்கொண்டும், முகமூடிகளை அணிந்து கொண்டும் எஜமானர்களின் ஏவலின் பேரில் உலாவருவார்கள். காலத்திற்கு காலம் மக்களைக் கவரும் விதத்தில் சில சுலோகங்களை ....
* ஒண்று பட்டு போராடுவோம் ?,
* சகோதரப் படுகொலைகளை நிறுத்தப் போராடுவோம் ?
* மாற்றுகருத்துக்கள் அனுமதிப்போம் ?
* நாமும் விடுதலையையே நேசிக்கிறோம் ?
* ...................................................
........ வைத்து வரமுற்படுவார்கள். இதில் எம்மில் சிலர், இவர்களின் உள் முகம்மறியாது கவரப்பட்டும் விடுகிறோம்.
இவர்கள் யார்?, என்ன செய்தார்கள்?, என்ன செய்கிறார்கள்?, என்ன செய்யப் போகிறார்கள்?, ஏன் செய்கிறார்கள்?,எங்கிருந்தார்கள்?,எங்கிருக்கிறார்கள்?, ... என்பனவற்றிற்கான பதில்கள் எமக்கு தெரிந்தனவையே.
ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தில் இந்த மாற்றுக்கருத்துக்கள் கொண்ட கட்சிகள், ஊடகங்கள் சொல்லும் கருத்துக்கள் என்ன?
[color=red]
* தமிழீழ விடுதலைக்கு எதிரான கருத்துக்களா?
* சிங்கள ஏகாதிபத்தியத்தின் இனப்படுகொலைகள், திட்டமிட்ட குடியேற்றங்கள், கலாச்சார பண்பாட்டளிப்புக்கெதிரான, எமது மக்களின் எழுச்சி யுத்ததிற்கெதிரான கருத்துகளா?
* எதிரியுடன் கை கோர்த்து எம்மினத்தை காட்டிக்கொடுத்தும், கொலை, கொள்ளைகள் புரியும் காக்கை வன்னியர்களை களை எடுப்பதற்கெதிரான கருத்துக்களா?
* ...................................
இல்லை தங்கள் மாற்றுக்கருத்துக்கள் என்னறால் என்ன! என்பதை மக்கள் முன் என்றாவது கூறியிருக்கிறார்களா?, இல்லை கூறமுற்படுவார்களா?
ஆமாம், மா.க.கள் சொல்லலாம் "விடுதலைப் புலிகள் சிறீ லங்கா அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கவில்லையா" - ஆம் என்பதே பதில் ஆனால் ஏன், எப்போது என்றால், இந்திய வல்லரசு எமது போராட்டமானது தனது நாட்டு நலன்களுக்கு ஏற்புடையதல்ல என்பதால், எமது போராட்டத்தை நசுக்குவதற்காக எம்பூமியில் காலடி வைத்து மனித வேட்டையாடிய போது, இவர்கள் தொடர்ந்திருந்தால் போராட்டமே அழித்தொழிக்கப்பட்டு விடும் என்ற காரணத்தினாலேயே மதி நுட்பமான இராஜதந்திர நகர்வே பிரேமதாசாவின் அரசுடன் பேச்சு வார்த்தை என்ற நகர்வு. ஆனால் அக்காலகட்டத்தில் இலங்கைப் படைகள் எமது மக்களை கொண்றொளிக்க புலிகள் அனுமதித்தார்களா?, இல்லை போராட்டத்தை கைவிட்டுவிட்டு மக்களிடமிருந்து அன்னியப்பட்டிருந்தார்களா? - இல்லை, புலிகள் எக்காலத்திலும் மக்களுடன் தானிருந்தார்கள்.
ஆனால், இந்த மா.க.கள் யாரார் எம்மை கொண்றொளிக்க வருகிறார்களோ, அவர்களுடன் கூட்டுச் சேருகிறார்கள்!, கொலை, கொள்ளை, கற்பளிப்பு, காட்டிக்கொடுப்பு, .. எல்லாமே சேர்ந்து செய்கிறார்கள். அவர்களுடைய முகாங்களுக்குள்ளேயே இருந்தார்கள், இருக்கிறார்கள். ..... வேறென்ன வேண்டும் உங்கள் மாற்றுக்கருத்துக்களை அறிவதற்கு! மா.க.க்கள் உள்ள கும்பல்களுக்குள் அண்மைக் காலங்களிலேயே நடக்காத கொலைகளா? ஒரு கும்பலின் பகுதிக்குள் மற்ற கும்பல்களை போக அனுமதித்தார்களா? ......
எங்கே போனது உங்கள் ஜனனாயக மற்றுக்கருத்துக்கள். உங்கள் இரத்தக் கறைபடிந்த உடம்புகள் அழிக்கப் பட வேண்டியவையே.
<b>" நாங்கள் புத்தருமில்லை!, காந்தியுமில்லை!, இயேசுவுமில்லை!. ஏன் பிரபாகரனுமில்லை! திருந்திவருபவர்களை மன்னிப்பதற்கு. "</b>
|
|
|
| தமிழ் மாணவர் கழகம் |
|
Posted by: தமிழன் - 06-26-2003, 03:29 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (4)
|
 |
வணக்கம்
உலகிலுள்ல அனைத்து ஈழத்து மாணவர் கழகங்களையும் அறிய விரும்தபுகிறேன். தெரிந்தவர்கள் தகவல் அறிந்தர்கள் அதனை இக்களத்தில் சேர்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
|
|
|
|