Yarl Forum
யாவா (JAVA) கற்போம் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24)
+--- Thread: யாவா (JAVA) கற்போம் (/showthread.php?tid=8321)

Pages: 1 2 3


யாவா (JAVA) கற்போம் - இளைஞன் - 06-30-2003

"கற்கக் கசடறக் கற்றவை கற்றபின் நிற்க அதற்குத் தக" -திருவள்ளுவர்

வணக்கம் நண்பர்களே...

அறிவியல் சார்ந்த அனைத்துவிடயங்களையும் தமிழுக்குள் கொணரும் முயற்சியில் நான்
தவழத் தொடங்குகிறேன். புத்தகங்களில் மற்றும் இணையத்தளங்களில் உள்ளவற்றையும்
நான் கற்றவற்றையும், அனுபவப் பட்டவற்றையும் இணைத்து நீங்கள் விளங்கிக் கொள்ளும்
வகையில் கணணி சார் நுட்பங்களை எழுதத் தொடங்குகிறேன். ஆங்காங்கே தவறுகள்
நேரலாம். அறிந்தவர்கள் சுட்டிக்காட்டுங்கள். உங்களுடன் சேர்ந்து நானும் கற்றிக்கொள்வேன்.
மற்றும் தவிர்க்கமுடியாத சந்தர்ப்பங்களில் ஆங்கிலச் சொற்கள் பயன்படுத்தப்படும்
என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இனி பாடத்துக்குள் நுழைவோம். நாம் இங்கு கற்க இருப்பது "யாவா"(JAVA) என்று கணணித்
துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் பற்றி. இன்னொன்றையும் குறிப்பிட
விரும்புகின்றேன். அதாவது, நாம் கற்க இருப்பது அடிப்படை மட்டுந்தான். நாம் அதனைக்
கற்பதற்கு முன்னர் அதுபற்றி அறிந்திருத்தல் நன்மை பயக்கும் என்பதால் "யாவா" பற்றிய சில
அடிப்படை விளக்கங்களைக் கவனிப்போம்.


யாவா என்றால் என்ன?
யாவா என்பது கணணிதுறையில் உள்ள பல்வேறு கணணிமொழிகளில் (உதாரணம்: Cobol,
Fortran, Pascal, C, C++, Visual Basic, மற்றும் பல) புதியதும், இளையதுமான
மொழியாகும். "சி++"(C++) என்னும் இன்னொரு கணணிமொழியின் வாரிசாகப் பலரால்
கருதப்படுகிறது. காரணம், யாவா மொழி சி++ ஐ ஒத்திருப்பதேயாகும்.

சரி, கணணிமொழி என்றால் என்ன? அதற்கு முதல் மொழி என்றால் என்ன? ஆம், மொழி
என்பது மனிதர்களுக்கிடையிலான தொடர்பூடகம். உணர்வுகளை, கருத்துக்களை மற்றும்
சிந்தனைகளைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தளம். அதன் அடிப்படையில் கணணிக்கும்
மனிதனுக்கும் இடையிலான தொடர்பூடகமே இந்தக் கணணிமொழிகள். மனிதன் தனது
சிந்தனையை இம்மொழிகள் மூலம் கணணிக்குத் தெரிவிக்கிறான். அதனைக் கணணிகள்
உள்வாங்கிப் புரிந்து கொள்கின்றன. அந்தப் புரிதலின் அடிப்படையில் அந்த சிந்தனையை
செயற்படுத்துகிறது. சுருக்கமாகச் சொல்லின் மனிதன் ஏவல் செய்ய, கணணி செயற்படுகிறது.
இந்த இருவருக்குமான கருத்துப் பரிமாற்றத்தை மேற்கொள்வன கணணிமொழிகள் ஆகும்.

யாவா - சுருக்கமான வரலாறு
யாவாவின் வரலாறு எழுபதுகளிலேயே மெதுவாகத் தொடங்கிவிட்டதால், அதுபற்றி நிறையவே
எழுதலாம். இருந்தாலும் அவற்றை எழுதுவதன் மூலம் மேலதிகமாக பல தகவல்களையும்
விளக்கங்களையும் தரவேண்டியிருக்கும். எமது குறிக்கோள் "யாவா அடிப்படைக் கல்வி"
என்பதால் அவற்றையெல்லாம் தவிர்த்துக் கொள்கின்றேன்.

23 ஆம் திகதி மே மாதம் 1995 ஆம் ஆண்டு அன்று யாவா மொழி "SUN" நிறுவனத்தினரால்
கணணி உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. யாவா என்னும் பெயர் இந்தோனேசியத்
தீவுகளில் ஒன்றான "யாவாத் தீவின்" பெயரை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததல்ல.
இந்தப் பெயர் அமெரிக்க மென்பொருள் வல்லுனர்களால் கோப்பிக்கு வழங்கிவந்த பெயர்களில்
மிகவும் விரும்பப்பட்ட பெயரில் இருந்து பெறப்பெற்றது.

சரி... அடுத்த பகுதியில் யாவாவின் இயல்பு மற்றும் யாவாவில் பயன்படுத்தப்படும் சில
முக்கிய சொற்பிரயோகங்கள் பற்றியும் சுருக்கமாகப் பார்த்துவிட்டு, அதன்பின்பு பாடத்திற்குள்
நுழைவோம்.


- TMR - 07-01-2003

தொடருங்கள் நண்பரே


- tamilchellam - 07-01-2003

வணக்கம்
யாவா பற்றி அறிந்திருந்தாலும், அதன் பயன்பாடு பற்றி ஒன்றும் அறிந்திருக்கவில்லை. அதன் விளக்கங்களை அறிய மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நட்புடன்,
தமிழ்செல்லம்.


யாவா - இயல்பு - இளைஞன் - 07-01-2003

யாவா - இயல்பு

இலகுவானது(easy): சி++ என்னும் கணணி மொழிபோன்று யாவாவும் இலகுவானது. அதனைப்
போன்று என்பதைவிட, அதனைவிட இலகுவானது என்பது மிகப் பொருந்தும். சி++ மொழி
கற்றவர்களுக்கு யாவா மொழி பயன்படுத்துவது எளிது. அதேபோல் யாவா மொழியினைப்
பயன்படுத்துவதன் மூலம் சி++ மொழியின் அந்தரங்கங்களை அறிந்துகொள்ளக்கூடிய வசதியுண்டு.

எளிமையானது(simple): சாதாரணமாகவே அனைத்தையும் விளங்கிக் கொண்டு பயன்படுத்தக்கூடிய
வசதியுண்டு. அதுதவிர IBM, Symantec போன்ற நிறுவனங்கள் சில செயலிகளை
உருவாக்கியுள்ளன. அவற்றின் மூலம் தேவைளான சில உருவங்களை எளிதாக இணைத்துக்
கொள்ளலாம். இதனால் மற்றைய கணணிமொழிகளின் பலவீனங்களை திருத்தி தனக்குப் பலம்
சேர்த்துள்ளது. நம் நாட்டில் முற்றத்தில் சாதாரணமாக சேலை உடுத்துக் கொண்டு குந்தியிருக்கும்
பாட்டி போன்று எளிமையானதாய் இருக்கும். ஆனால், அதன் எளிமைக்குள்ளே அனைத்து
இயக்கங்களும் சாதனைகளும் அடங்கிக் கிடக்கும்.

பொருளை மையப்படுத்தியது(object-oriented): பொருளை மையப்படுத்திய செய்நிரலாக்கத்தின்
(programming) போது பொருள் உருவாக்கத்திலேயே முழுக்கவனமும் செலுத்தப்படுகிறது.
இன்னமும் குறிப்பாகவும் விளக்கமாகவும் சொல்லப்போனால் ஒரு பொருளானது தரவுகளையும்(Data)
செயற்பாடுகளையும்(function) அடிப்படையாகக் கொண்ட செயல்முறையால்(Methode) ஆனது.

பகிர்ந்தளிக்கப்பட்டது(Distributed): யாவாவின் செயற்பாடுகள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்து
இயங்கத்தேவையில்லை. அதாவது தூரத்தில் இருக்கின்ற ஒரு பொருளை (இங்கு நான் பொருள்
என்று குறிப்பிடுவது தரவுகளையும், செயற்பாடுகளையும் அடிப்படையாகக் கொண்ட
செயல்முறையைத்தான்) இணையத்தின் ஊடாகவே இயக்கமுடியும். இணைய உலாவிகளில்
(Browser) அதற்கான சேவைகள் இணைக்கப்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.

விளக்கமுடையது (மொழிபெயர்ப்பு): மனிதனுக்கு விளங்கக்கூடிய யாவா மொழியானது
JAVAC-Compiler(தொகுப்பி) மூலம் கணணி இயந்திரங்கள் விளங்கிக்கொள்ளக்கூடிய Bytecode
(I O I O I O) முறையில் மாற்றப்பட்டு வழங்கப்படுகிறது. இதனை உணர்ந்துகொணடு கணணி
இயந்திரங்கள் தமது சேவையை வழங்குகின்றன. இன்னொன்று குறிப்பிடவேண்டும்
என்னவென்றால், இது Bytecode முறையில் அமைந்திருப்பதால் எந்தவித மாற்றங்களும் இன்றி
யாவா மொழியை அங்கீகரித்த அனைத்து கணணி இயந்திரங்களிலும் செயலாற்றும்.

பலமானது(robust)& பாதுகாப்பானது: யாவா தனது தொகுப்பி(compiler) மூலமும், ஓடுநேர சூழல்
மூலமும் தன்னை மேலும் பலப்படுத்துகிறது. அதாவது ஆரம்பத்தில் தொகுப்பி மூலம் பிழைகள்
கண்டறியப்படுகின்றன. அதன்பின்னர் அது இயங்கும்போது "யாவா-ஓடுநேர-சூழல்"
(Java-Runtime-Environment) பிழைகள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒரே நேரத்தில் பல்வித செய்பாடுடையது (Multithread): அதாவது ஒரே நேரத்தில் பலவித
செயற்பாடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயலாற்ற்றுவதன் மூலம் தனக்குரிய வேலையில்
முழுக்கவனமும் செலுத்தப்படுகிறது.

நண்பர்களே,
மேலே நாம் யாவாவின் இயல்புகள் "சிலவற்றைப்" பார்த்தோம். யாவா ஒரு தீவல்ல அது தீவைச்
சுற்றியுள்ள கடல். கற்பதற்கு நிறைய இருக்கிறது. நான் உங்களிற்கு யாவாக் கடலில் நீந்தக் கற்றுத்
தருகிறேன் (கற்றுக்கொள்கின்றேன்). முத்துக்கள் சேகரிக்கவேண்டியது உங்கள் பொறுப்பு. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- இளைஞன் - 07-01-2003

யாவாவால் என்ன முடியும்?
சுருக்கமாகச் சொல்லின் எல்லாம் முடியும்.
உதாரணம்: அசைவூட்டம், இணையப்பக்கங்களில் இயங்கும் நாற்சந்திகள்(Chatroom),
கணிப்பி(Calculator), இணையப்பக்கம், இசை, எழுதிகள், சிறிய மிதக்கும் செய்நிரல்(Applet),
இணையப்பக்க நேரங்காட்டி, விளையாட்டு மென்பொருட்கள், மொழிபெயர்ப்புச் செயலிகள்,
கல்வி சார் செயலிகள், இன்னும் பலப்பல..

யாவாவால் முடியாதது என்ன?
யாழ் இணையக் கருத்துக்களத்தில் தமிழீழப் பகுதிக்குள் நின்று வாக்குவாதப்படுவது <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

ஆம் உண்மைதான்! உதாரணத்திற்கு உங்களிடம் "லேகோ"(சிறுபிள்ளைகள் வீடு கட்டி
விளையாடும் கட்டைகள்) கட்டைகளைத் தந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்களால்
என்னவெல்லாம் செய்யமுடியும்? எத்தனைவிதமான உருவமைப்புக்களை உங்களால்
ஆக்கமுடியும்? அதுபோலத்தான் யாவாவும். இதனைக் கொண்டு உங்களால் நிறையவே படைக்க
முடியும்.

யாவாவைச் சுற்றி:
<b>யாவா மிதக்கும் செய்நிரல் (Java Applet): </b>இது இணையத்தின் மூலம் இன்னொரு
கணணியிலிருந்து (இணைய வழங்கி)உலாவி (Browser) மூலம் தரவிறக்கப்பட்டு உங்கள்
கணணியில் இயங்கும் ஒரு செயலி.

<b>யாவா பயனுறுத்தம் (Java Application): </b>இது உங்கள் கணணியிலிருந்தே இயங்கும்
செயலி வகை.

<b>யாவா எழுத்துரு (Java Script): </b>இதற்கும் யாவாவிற்கும் நேரடியாக எந்த சம்பந்தமும்
இல்லை. எனவே நீங்கள் யாவாவையும், யாவா எழுத்துருவையும் ஒன்றென எண்ணிக் குழம்பி
விடாதீர்கள். இரண்டுக்கும் ஒரே ஒரு ஒற்றுமை இருக்கின்றது. அது யாவா என்னும் பெயர்தான்.
மற்றும்படி யாவா எழுத்துரு இணையமொழியான HTML உடன் இணைத்து எழுதப்படும் எழுத்துரு
மட்டுமே. இது இணைய உலாவியான NETSCAPE இன் தயாரிப்பு. இது ஒரு செயலி என்று கூடச்
சொல்லமுடியாது. பெரிய செயலிகள் உருவாக்கத்திற்கும் இது பயன்படுத்தப்படுவதில்லை.
இது யாவா போன்று Bytecode வடிவில் தொகுக்கப்பட்டு (compile) தரப்படுவதில்லை. நேரடியாகவே
இயங்குவது. இன்னொன்று என்னவென்றால் யாவா மிதக்கும் செய்நிரலைவிட வேகம் குறைந்தது.

நல்லது நண்பர்களே...
இத்துடன் யாவா பற்றிய அறிமுகத்தை முடித்துக் கொள்வோம். இனி யாவா பயில்வதற்குத்
தொடங்குவோம். மற்றும் மேலே தந்த தகவல்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் எழுதுங்கள்.
தீர்த்துக் கொள்வோம். கேள்விகளையும் சந்தேகங்களையும் உடனுக்குடன் தாருங்கள். அதுபோல
பிழைகளையும் உடனுக்குடன் சுட்டிக்காட்டுங்கள். நான் யாவா பற்றி விளக்கும் முறை உங்களிற்குப்
புரியாமல் இருந்தாலும் அறியத் தாருங்கள். உங்களிற்கு விளங்கக் கூடிய முறையில் எனது
எழுத்துநடையை மாற்றிக் கொள்கிறேன்.

மற்றும் மேலே தந்த தகவல்கள் சில (பல?) இணையத்தில் பெற்றது. அவற்றின் முகவரிகளைப்
பின்னர் ஒன்றாகத் தொகுத்துத் தருகிறேன். சரி... என்ன? எல்லோரும் படிப்பதற்குத் தயாரா? <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- Guest - 07-01-2003

நிறைய நேரம் தேவைப்படும்..இடையே கருத்து எழுதாவிட்டாலும் பார்த்துக்கொண்டுதானிருக்கிறோம். தொடர்ந்து எழுதுங்கள்...களத்தில் மட்டுமல்ல பின்னர் ebook ஆகக் கூட வெளியிடலாம்.
நன்றி


- jasmin - 07-05-2003

நல்லது நண்பா, மிகவும் பயனுள்ள தகவல், தொடருங்கள்

ஜாஸ்மின்


- GMathivathanan - 07-05-2003

jasmin Wrote:நல்லது நண்பா, மிகவும் பயனுள்ள தகவல், தொடருங்கள்

ஜாஸ்மின்

அட.. காட்டு.. மல்லிகை.. அதனால்தானோ என்னவோ.. நறுமணம்.. கமழ்கின்றது..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->


- TMR - 07-08-2003

தாத்தா நறுமணம் இருக்கட்டும் இப்ப யாவா படிப்பம் சரியா????? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

இளைஞன் மிகவும் நல்ல முயற்ச்சி இடை நிறுத்தாமல் தொடருங்கள்

யாராவது flash தொடரலாம் ??????


யாவா நிறுவல் - வழிமுறை - இளைஞன் - 07-09-2003

<b>யாவா நிறுவல் - வழிமுறை</b>

நாம் யாவா மொழி கற்பதற்கும், பயிற்சிகளை மேற்கொள்வதற்கும் எமக்கு ஒரு தளம் தேவை.
உதாரணம்-1: அதாவது நாம் தமிழ் மொழி கற்க வேண்டுமென்றால் வாசித்தல், எழுதல்,
உரையாடல் போன்றவற்றைச் செய்யவேண்டும். அவற்றில் வாசிப்பதற்குப் புத்தகம் தேவை.
எழுதுவதற்குத் தாள்கள் தேவை.
உதாரணம்-2: கணணியிலும், இணையத்திலும் நன்கு பரீட்சயம் உள்ளவர்களுக்குத் தெரியும்
இணையப்பக்கங்களைச் செய்வதற்கு எமக்கு HTML-Editor (Microsoft Frontpage) தேவை.
அதுபோலவே யாவா மொழியில் செயலிகளை செய்வதற்கு எமக்கு ஒரு Java-Editor தேவை.
இன்று வேகமா வளர்ந்துவரும் கணணித்துறையில் நிறையவே மென்பொருட்கள் உள்ளன.
அவற்றில் இலவசமானவை, விலைக்குரியவை என்று பல இருக்கின்றன. ஆனாலும் நாம் இங்கு
யாவா மொழி கற்பதற்குத் தேர்ந்தெடுத்துள்ள மென்பொருள் இலவசமானதும், ஆரம்பநிலைப்
பயிற்சியாளர்கள் இலகுவாகப் பயன்படுத்ததிக் கொள்வதற்கும் ஏதுவானதாகும்.

சரி நாம் Java-Editor ஐ மட்டும் எமது கணணியில் நிறுவப் போவதில்லை. நாம் Java-Editor
இல் செய்கின்ற செயலிகளைத் தொகுப்பதற்கும், இயக்கிப் பார்ப்பதற்கும் தேவையான யாவா
மென்பொருட்கள் சிலவற்றையும் அத்துடன் யாவா மொழி பற்றிய உதவிகள் வழங்கக்கூடிய
புத்தகங்களையும் தரவிறக்கம் செய்து Java-Editor உடன் இணைக்கப் போகின்றோம்.
இதோ அதற்கான செயல்முறை:

<b>தயார்ப்படுத்தல்:</b>

உங்கள் இணைய இணைப்பின் வேகம் 56 kbit/s ஆக அல்லது அதிகமானதாக இருத்தல் வேண்டும்.
கணணியின் வேகம் 200 khz ஆக இருப்பின் நல்லது. தேவையான மென்பொருட்களைத் தரவிறக்கம்
செய்வதற்கு முன்னர், அவற்றைத் தற்காலிகமாகக் கணணியில் பதிந்து வைப்பதற்கான இடத்தை
ஒதுக்கவேண்டும். உங்களிற்கென உங்கள் கணணியில் உள்ள உறையுள் (Folder) புதியதொரு உறையினை
உருவாக்குங்கள். உதாரணம்: c:/your_name/Java. நீங்கள் தரவிறக்கம் செய்கின்ற மென்பொருட்களை
இதற்குள் சேகரித்து வையுங்கள். தரவிறக்கம் செய்வதற்கு அந்தந்த மென்பொருட்களின் பெயர்களில்
"எலியின்" இடது பக்கத்தினால் சொடுக்கவும். தரவிறக்கம் செய்யும் மென்பொருள் தானாகவே திறக்கும்.
அல்லது உங்கள் "எலியின்" வலது பக்கத்தினால் சொடுக்கிப் பின்னர் "Save as" என்பதைத் தெரிவு
செய்யுங்கள்.
Java Developement Kit, JDK-Dokumentation, Java Runtime Enviroment ஆகியவற்றை மட்டும் அதன்
பெயர்களில் "எலியின்" இடது பக்கத்தினால் சொடுக்குங்கள். நீங்கள் தரவிறக்கம் செய்யப்போகும்
மென்பொருள் உள்ள இணையப் பக்கம் திறக்கும். அந்தப் பக்கத்தில் எழுதியுள்ளதின் படி தொடர்ந்து,
தேவையான மென்பொருளைத் தரவிறக்ககம் செய்து கொள்ளுங்கள்.

<b>தரவிறக்கம்:</b>

1. யாவா மொழியில் எழுதி செயலிகளை உருவாக்குவதற்கான எழுதி.
தளம்: http://www.bildung.hessen.de

2. யாவாவின் சுற்றி இயங்கக்கூடிய அனைத்து இயக்கங்களையும்
உள்ளடக்கியது. தொகுப்பி (எழுதுவதை Bytecodeஇல் மாற்றுவது), மொழிபெயர்ப்பி(Bytecodeஇல்
இருப்பதை மொழிபெயர்ப்பது), மிதக்கும் செய்நிரல்களை காட்டுவது, உதவி வழங்கும் புத்தகங்களை
இயக்குவது போன்று பல தொழிற்பாடுகளைக் கொண்டுள்ளது.
JDK-Documentation:இது JDK தொடர்பான விரிவான விளக்கங்களைக்கொண்ட நூல்.
தளம்: http://java.sun.com

3. Bytecode முறையில் இருக்கும் செயலி இயங்குவதற்கான தளம்.
(சூழல்)
தளம்: http://java.sun.com

4. யாவா மொழியில் எழுதுபவற்றை Bytecode முறையில் மாற்றும்
தொகுப்பி.
தளம்: http://www.ibm.com/

5. யாவா பற்றிய விளக்கங்களும் உதவிகளும் உள்ள குறிப்பேடு.
தளம்: http://java.sun.com

தரவிறக்கம் செய்து விட்டீர்களா? தரவிறக்கம் செய்வதில் ஏதேனும் பிரச்சினையிருந்தால் அறியத்
தாருங்கள். உங்களுக்கு சரியான விளக்கங்கள் அளிக்கப்படும். மற்றும் ஒரு குறிப்பு யாதெனில், இங்கு
தரப்பட்டிருக்கும் மென்பொருட்களில் புதிய Versionகள் வெளியாகியுள்ளன. அதேபோல் பழைய Version
களும் உள்ளன. ஆனால் இங்கு ஒன்றோடு ஒன்று பொருந்தக்கூடிய வகையில் மிகவும் அவதானத்துடன்
சரியான மென்பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. எனவே இதனைப் பின்பற்றுவது பயன்தரும்.


- இளைஞன் - 07-09-2003

வணக்கம் ரஜி,

உங்கள் விருப்பப்படி விரைவில் Macromedia Flash பற்றிய ஆரம்பப்பாடம் யாழ் கருத்துக்களத்தில் தரப்படும்.


நிறுவுதல் - இளைஞன் - 07-09-2003

<b>நிறுவுதல்</b>

தரவிறக்கம் செய்த மென்பொருட்களை உரிய இடத்தில் உரிய முறையில் நிறுவிக் கொள்வோம். தரவிறக்கம்
செய்தவற்றை எங்கே பதிந்து/சேகரித்து வைத்துள்ளீர்கள் என்பது ஞாபகம் இருக்கிறது தானே? சரி... இனி...

முதலாவது: JDK (jdk-1_1_8_010-windows-i586.exe) மென்பொருளை நிறுவுவோம்.ஒரு செயலியை,
கோப்பினை, அல்லது உறையினைத் திறப்பதற்கு "வின்டோசைப்" பொறுத்த மட்டில் அந்த செயலியில்,
கோப்பில், அல்லது உறையில் இரண்டுமுறை எலியின் (Mouse) இடது புறத்தினால் சொடுக்கவேண்டும்.
சரி நாம் JDK செயலியை பின்வரும் முகவரியில் நிறுவுவோம்: C:/jdk1.1.8

இரண்டாவது: JRE (jre-1_1_8_010-windows-i586.exe) மென்பொருளினை C:/jdk1.1.8/jre என்னும்
உறையினுள் நிறுவுவோம்.

மூன்றாவது: JDK - Documentation ஐ அவிழ்த்து C:/jdk1.1.8/docs என்னும் உறையினுள் சேர்ப்போம்.

நான்காவது: Windows Help (tut-winhelp) என்பதை அவிழ்த்து C:/jdk1.1.8/tutorial என்னும் உறையினுள்
சேர்பபோம்.

ஐந்தாவது: Jikes-Compiler (jikes-1.18-windows) இனை அவிழ்த்து அதற்குள் உள்ள jikes.exe என்னும்
கோப்பினை மட்டும் தனியே எடுத்து C:/jdk1.1.8/bin என்னும் உறையினுள் சேர்க்கவும்.

ஆறாவது: இறுதியாக Java Editor ஐ எங்காவது ஓர் இடத்தில் வைத்து அவிழ்த்து, அதனுள் உள்ள setup.exe
என்பதை அழுத்துவதன் மூலம் C:/jdk1.1.8/javaeditor என்னும் உறையினுள் நிறுவவும்.


- jasmin - 07-19-2003

நீங்கள் கூறிய அனைத்து யாவா (ஜாவா) மென்பொருளும் வின்டோஸ் XP யில் வேலை செய்யுமா? (எனது கணனி வின்டோஸ் XP)
ஜாஸ்மின்


- jasmin - 07-20-2003

2, Java Development Kit
3, Java Runtime Enviroment
ஆகியவை தரவிறக்கம் செய்ய முடியவில்லை, நண்பர் கவனிக்கவும். நன்றி

ஜாஸ்மின்


- இளைஞன் - 07-20-2003

வணக்கம் ஜாஸ்மின்...
மேற்குறிப்பிடப்பட்டுள்ள யாவா மென்பொருட்களை windows XP இலும் நிறுவலாம். எந்தவிதப்
பிரச்சினையும் இல்லை.
மற்றும் பிழைகளைச் சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி. தரவிறக்கம் செய்யவேண்டிய மென்
பொருட்களிற்கு நிரந்தரமான முகவரியை தரப்படாமையால், நானும் தற்காலிகமானதையே இங்கு
இணைத்துவிட்டேன். இப்பொழுது அவற்றை சரிசெய்துவிட்டேன். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

Java Developement Kit, JDK-Dokumentation, Java Runtime Enviroment ஆகியவற்றை மட்டும் அதன்
பெயர்களில் "எலியின்" இடது பக்கத்தினால் சொடுக்குங்கள். நீங்கள் தரவிறக்கம் செய்யப்போகும்
மென்பொருள் உள்ள இணையப் பக்கம் திறக்கும். அந்தப் பக்கத்தில் எழுதியுள்ளதின் படி தொடர்ந்து,
தேவையான மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

அல்லது கீழே அந்த செயலிகளின் பெயர்களைத் தருகின்றேன் - Google (www.google.com) கொடுத்துத்
தேடியும் தரவிறக்கம் செய்யலாம்.

Java Development Kit: jdk-1_1_8_010-windows-i586.exe
JDK-Documentation: jdk118-doc.zip
Java Runtime Enviroment: jre-1_1_8_010-windows-i586-i.exe

விரைவில் தொடரும்...


அமைவடிவம் - இளைஞன் - 07-23-2003

நல்லது நண்பர்களே...

மேற்கூறியவாறு அனைத்தையும் சீராக நான் கூறியது போல் செய்து முடித்தீர்களா? அப்படியாயின் இனி
Java Editor ஐ அமை வடிவப்படுத்துவோம்(Configuration). சாதாரணமாக மேலே குறிப்பிட்டதுபோன்று
அனைத்தையும் செய்து முடித்தபின் Java Editor ஐயும் நிறுவி முடித்தவுடன் தானாகவே அமை வடிவச்
செயற்பாடு இயங்கியிருக்கும். இல்லாவிடில் பின்வருமாறு அதனைச் செய்யுங்கள்:

1. உங்கள் Java Editor ஐத் திறவுங்கள்.

<img src='http://www.yarl.com/Javai/Icon.jpg' border='0' alt='user posted image'>

2. அங்கு Fenster என்பதைத் திறந்து, Konfiguration என்பதை அழுத்தவும்.

<img src='http://www.yarl.com/Javai/Konfig.jpg' border='0' alt='user posted image'>

3. திறக்கப்பட்ட சாளரத்தில்(window) நீங்கள் நிறுவிய கோப்புக்களின் இருப்பிடங்கள் சரியாகக் குறிப்பிடப்-
பட்டுள்ளதா என்று பார்க்கவும். நான் மேலே எழுதியதைப் பின்பற்றியவர்களாக இருப்பின், பின்வரும்
படங்களில் காணப்படுவது போன்று நிரப்பவும்.

<img src='http://www.yarl.com/Javai/Konfig1.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/Javai/Konfig2.jpg' border='0' alt='user posted image'>

<img src='http://www.yarl.com/Javai/Konfig3.jpg' border='0' alt='user posted image'>

4. உதவி வழங்கும் நூல்களையும் இணைக்க விரும்பின் அதனையும் இணைக்கவும்.

<img src='http://www.yarl.com/Javai/Konfig4.jpg' border='0' alt='user posted image'>

மேற்கண்டது போல் அல்லாமல், உங்கள் கோப்புக்கள் வேறு முகவரியில் இருப்பின், "Wählen" ( 1 ) என்பதை
அழுத்தி சரியான முகவரியைத் தெரிவு செய்து கொள்ளுங்கள்.

5. இறுதியில் "Speichern" ( 2 ) என்பதை அழுத்துவதன் மூலம் நீங்கள் செய்த மாற்றங்களைப் உறுதிப்
படுத்துங்கள்.

<img src='http://www.yarl.com/Javai/Konfig5.jpg' border='0' alt='user posted image'>


- vasisutha - 02-08-2005

<!--QuoteBegin-இளைஞன்+-->QUOTE(இளைஞன்)<!--QuoteEBegin-->
உங்கள் விருப்பப்படி விரைவில் Macromedia Flash பற்றிய ஆரம்பப்பாடம் யாழ் கருத்துக்களத்தில் தரப்படும்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

இது எப்பொழுது ஆரம்பிக்கப் போகிறீர்கள்.. நானும் உங்கள்
வகுப்பில் இணையத் தயார். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- seelan - 02-08-2005

நன்றி நன்றி
ஜாவா தொடரை தந்து கொண்டிருக்கும் இளைஞன்
அவர்களுக்கு எனது நன்றிகள்.


- thamizh.nila - 02-08-2005

அருமையான முயற்சி. இவற்றில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. தொடருங்கள் அண்ணா...பாரட்டுக்கள்..


- Niththila - 02-08-2005

நல்ல பிரயோசனமான முயற்சி அண்ணா