Posts: 35
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
வணக்கம் யாழ் இணையத்திற்கு,
இதயம் என்ற தலைப்பில் கவிதையோடு என் உள் நுழைவை ஆரம்பிக்கிறேன்.
அனைவருக்கும் நன்றிகள்.பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டவும்.
இதயம் ... இது உறங்காத உலகம்.
ஆனால் உலகத்தையே இயக்கும் ஆட்சிபீடம்.
நன்றியுடன்
*****************
ரஜனி
Posts: 1,053
Threads: 78
Joined: Jun 2003
Reputation:
0
வருக.
வளர்க.
வளர்க்க.
கவிதை - கடுகு
கருத்து - கடல்
புதிய ஆக்கங்கள் பல இணைத்து
யாழ் கருத்துக்களத்தை மெருகூட்டுக.
Posts: 53
Threads: 0
Joined: Jun 2003
Reputation:
0
வருக ..!
இதயக்கதவைத்திறந்தே வரவேற்கிறோம்..இளைஞன் சொன்னது போல் வற்றாத கடல் இது..
யாழும் -
யாழ் கொண்ட தமிழும்
தமிழ் கொண்ட உள்ளங்களும்
கரடும் முரடுமாகவிருந்தாலும்
பிரசவங்களுக்காய் எப்போதும்
திறக்கப்பட்டிருக்கும் இதயம் இது!
-வாழ்க வளர்க!
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
வரவேற்றுபுப் பிரமாதம்
இதயம் மட்டும் சின்னனானதேன்
ஓ வரிகள் இதயமானதாலோ...!
களமெங்கும் துடிக்க நினைக்க
துடிப்பு இழந்தே போச்சு!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 35
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
என் செய்வேன் ?
சின்னதாயோர் இதயம்
படைத்தவந்தப் பிரம்மனுக்கும்
புரியாதவொன்றல்லோ!
புரிந்தவர்கள் எழுதட்டும்
புரியலிருப்பவர்கள் - இனி
புரிந்து கொள்ளட்டும்.
all that glitters but not gold
Posts: 35
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
புரியாமலிருப்பவர்கள் என்பது
புரியலிருப்பவர்கள் என்றாகிற்று.
திருத்தங்கள் - வருத்தங்கள்.
all that glitters but not gold
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
இதயம் விட்டு விட்டு
துடிப்பதாக--
எல்லாம் பொய்.
எமது சிரிப்பொலி அல்லவா
கேக்கிறது.
நளாயினிதாமரைச்செல்வன். :wink:
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 598
Threads: 20
Joined: Jun 2003
Reputation:
0
[b]Nalayiny Thamaraichselvan
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.animatedsoftware.com/pics/icons/hartlogo.gif' border='0' alt='user posted image'>
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
உண்மை தாத்தா...மனிதன் நிறத்தால் பிரதேசத்தால் மொழியால் கலாசாரத்தால் பெளதீகத் தோற்றத்தால் வேறுபட்டிருப்பினும் இதயத்தால் ஒன்றுபட்டே இருக்கிறான்..எல்லோருக்கும் இதயம் உண்டு அதன் அமைப்பு ஒன்று தொழிற்பாடு ஒன்று...!
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 53
Threads: 0
Joined: Jun 2003
Reputation:
0
மனிதனவன் இதயத்தின்..
உருவத்தால்,தொழிற்பாட்டால்
வேண்டுமானால் இதயத்தின்
நிறத்தால், ஒலிக்கும் சப்தத்தால்
கூட ஒன்று பட்டிருக்கிறான்.......!
ஆனால் இதயத்தால்..
இதயத்தில் தோன்றும் எண்ணங்களால் ....
விளக்கத்தால்...
ஏற்புடமையால்...
சகிப்புத்தன்மையால்..
இன்னும் ...........? .. ? .. ? .. ?
எப்போதும் ஒன்றுபட மறுக்கிறான்.
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
இதயத்தின் வலியில் நான்
இருந்த நாடகள் அதிகம்
அதிலும் ஒவ்வெரு விமானத்
தாக்குதலிலும் என் இதயம்
ஓய்வின்றி வலிக்கும் அங்கே
எத்தனை உயிர்கள் பலியோ
கிளாலிக்கரைக்கு இப்ப சென்றாலும்
கரையொதுங்கிய எம்மவரின்
நினைவால் இன்றும் வலிக்கிறது
என் இதயம் 95ல் திரண்ட
சனவெள்ளத் தோடு நானும் அங்கே
அங்கு பார்த்தவைகள்
இன்னமும் என்
இதயத்தின் வலியாய்
இப்படி எத்தனை வலிகளை
இதயங்களில் சுமந்தவர்கள் எத்தனை
இதயங்களோ?
. . . . .
Posts: 21
Threads: 7
Joined: Jul 2003
Reputation:
0
இதயத்தின்
இறுக்கம் தான் இந்த
இணையத்தின்
வலிமை...... யாழ்.கொம்
நன்றி
பிறேம் குமார்.ஜெ
HAI FRIENDS
Posts: 21
Threads: 7
Joined: Jul 2003
Reputation:
0
இ-இழக்கம்
ரு-ரூபம்
த-தன்மை
ய-யந்திரம்
ம்-மெளனம்
HAI FRIENDS
Posts: 35
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
வாழ்த்துக்கள் பிறேம் அண்ணா.
நுன் கவியதனால் நெகிழ்வுற்றோம்.
all that glitters but not gold
Posts: 1,859
Threads: 37
Joined: Apr 2003
Reputation:
0
இதயம் எப்போது இங்கே துடித்தது
இன்றுதானே எனக்குத் தெரிந்தது
உதயமாகும் துடிப்பின் ஒலியில்
உணர்வை உணர்ந்தேன்.. வாழ்த்துக்கள்!
.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
பேசாது பேசுவதாகச் சொல்லப்படும்
பேசியது கிடையாது....!
அழாது அழுவதாக சொல்லப்படும்
அழுதது கிடையாது....!
வெடிக்காது வெடிப்பதாகச் சொல்லப்படும்
தானா வெடித்ததாக உண்மையில்லை....!
காதலின் ஊற்று என்று சொல்லப்படும்
காதலுக்கும் அதற்கும் வெகுதூரம்....!
இணைவதாகச் சொல்லப்படும்
இணைந்ததாக வரலாறு கிடையாது...!
இப்படி
இதயத்துக்கு சமந்தமே இல்லாப்
பொய்களால் மனிதன்
இதயத்தை கலங்கப்படுத்தியதுதான்
மெய்...!
இப்படிக்கு தூய இதயம்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 120
Threads: 2
Joined: Jun 2003
Reputation:
0
உணர்வுள்ள இதயங்கள்
நிதானமாய்த் துடிக்கின்றன..
உயர்ந்து நிற்கும் நாள் வருமென்று
ஆசையாய்த் தவிக்கின்றன..
உலகமெங்கும் வலைவிரித்து
நிம்மதியைத் தேடுகின்றன..
உறக்கமற்ற விழிகளுக்காய்
உணர்வோடு உழைக்கின்றன..
இதயங்களுக்கு நன்றிகளுடன்..
-வையாபுரி