Yarl Forum
காட்சியும் கமராவும் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51)
+--- Thread: காட்சியும் கமராவும் (/showthread.php?tid=8323)



காட்சியும் கமராவும் - sOliyAn - 06-30-2003

நான் இங்கே ஒரு காட்சியை விபரிக்கப் போகிறேன்.. தயவுசெய்த கமரா கையாளும் அனுபவம் உள்ளவர்கள்மாத்திரம் அறிவுரையோ.. வழிகாட்டலோ.. ஆலோசனையோ தாருங்கள்..

கதாநாயகி கணவனால் அடக்கப்பட்டோ அல்லது ஏதோ ஒரு காரணத்தால் ஐரோப்பிய நாடொன்றில் வெளியுலகம் தெரியாதவளாக இருக்கிறாள்.. அதாவது கடைக்குச் செல்வதற்குக்மகூட தனியாக செல்ல முடியாத நிலையில் இருக்கிறாள்.. விபத்தில் கணவன் இறந்த செய்தி தொலைபேசிமூலம் வருகிறது.. இப்போழுது அவள் முதன்தமுதலான தானாகச் செயற்பட வேண்டிய கட்டாயம்.. இங்கே வசனம் எதுவுமே இல்லை.. தயக்கம்.. பயம்.. விரக்தி.. ஒரு உறுதி.. இந்த உணர்வுகள் முகத்தில் பிரதிபலிக்கிறது.. அடியெடுத்து நடந்து கதவைத் திறக்கிறாள்.. பளீரென வெளி வெளிச்சம் உள்ளே பரவுகிறது.. அவள் அந்த ஒளியுள் கலக்கிறாள்..
இதுதான் காட்சி.. இங்கே கமராவுக்கம் இசைக்கும்தான் வேலை.. அவைதான் இந்த காட்சியின் பொருளைத் துல்லியமாகச் சொல்ல வேண்டும்.. எப்படி எப்படி காட்சிகளை அமைத்து.. எவ்வாறு பொருத்த வேண்டும்.. (என்ன இளங்கோ அவர்களே?!!) விசயம் தெரிந்தவர்கள் விளக்கினால் உதவியாக இருக்கும்.. இந்தக் காட்சியை வேறு எவரும் பாவிக்கமாட்டார்கள்தானே?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


Re: காட்சியும் கமராவும் - AJeevan - 07-04-2003

sOliyAn Wrote:நான் இங்கே ஒரு காட்சியை விபரிக்கப் போகிறேன்.. தயவுசெய்த கமரா கையாளும் அனுபவம் உள்ளவர்கள்மாத்திரம் அறிவுரையோ.. வழிகாட்டலோ.. ஆலோசனையோ தாருங்கள்..

கதாநாயகி கணவனால் அடக்கப்பட்டோ அல்லது ஏதோ ஒரு காரணத்தால் ஐரோப்பிய நாடொன்றில் வெளியுலகம் தெரியாதவளாக இருக்கிறாள்.. அதாவது கடைக்குச் செல்வதற்குக்மகூட தனியாக செல்ல முடியாத நிலையில் இருக்கிறாள்.. விபத்தில் கணவன் இறந்த செய்தி தொலைபேசிமூலம் வருகிறது.. இப்போழுது அவள் முதன்தமுதலான தானாகச் செயற்பட வேண்டிய கட்டாயம்.. இங்கே வசனம் எதுவுமே இல்லை.. தயக்கம்.. பயம்.. விரக்தி.. ஒரு உறுதி.. இந்த உணர்வுகள் முகத்தில் பிரதிபலிக்கிறது.. அடியெடுத்து நடந்து கதவைத் திறக்கிறாள்.. பளீரென வெளி வெளிச்சம் உள்ளே பரவுகிறது.. அவள் அந்த ஒளியுள் கலக்கிறாள்..
இதுதான் காட்சி.. இங்கே கமராவுக்கம் இசைக்கும்தான் வேலை.. அவைதான் இந்த காட்சியின் பொருளைத் துல்லியமாகச் சொல்ல வேண்டும்.. எப்படி எப்படி காட்சிகளை அமைத்து.. எவ்வாறு பொருத்த வேண்டும்.. (என்ன இளங்கோ அவர்களே?!!) விசயம் தெரிந்தவர்கள் விளக்கினால் உதவியாக இருக்கும்.. இந்தக் காட்சியை வேறு எவரும் பாவிக்கமாட்டார்கள்தானே?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
:roll:

உங்கள் தேவையை நீங்கள் எழுதுவதும் கேள்வி கேட்தும் உங்கள் உரிமை.
அதற்காக உங்கள் தேவைக்காக பதில் சொல்வர் மேல் சந்தேகப்படுவது காரணமாக எவரும் பதில் தர முனையமாட்டார்கள்.

உங்களால் இக்காட்சியை ஏனையவர்களின் ஒத்துழைப்பின்றி ஒளிப்பதிவு செய்ய முடிந்தால் உங்கள் கருத்தை வெளியிடுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

திரைப்பட மீடியா என்பது ஒரு குடும்ப படைப்பு போன்றது.தனியொரு மனிதனால் நிச்சயம் வெற்றி பெற முடியாது.அப்படி எங்கும் நடந்ததாக யாரும் சொல்ல முடியாது.

உங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டு எழுதினால் எம்மால் முடிந்த ஒரு பதிலை தர முடியும்.


- sOliyAn - 07-04-2003

இங்கு ஆலோசனை கேட்கப்பட்டதே ஒழிய சந்தேகமல்ல.. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!???????????????


- sOliyAn - 07-04-2003

அதேநேரம் மறைமுகமான வேண்டுகோள்தான் சந்தேக வடிவில்.. அது உண்மையில்லாத சந்தேகம்.. உண்மையான சந்தேகமெனில் களத்திற்கு வந்திருக்காது. 8)


Re: காட்சியும் கமராவும் - AJeevan - 07-05-2003

sOliyAn Wrote:நான் இங்கே ஒரு காட்சியை விபரிக்கப் போகிறேன்.. தயவுசெய்த கமரா கையாளும் அனுபவம் உள்ளவர்கள்மாத்திரம் அறிவுரையோ.. வழிகாட்டலோ.. ஆலோசனையோ தாருங்கள்..

கதாநாயகி கணவனால் அடக்கப்பட்டோ அல்லது ஏதோ ஒரு காரணத்தால் ஐரோப்பிய நாடொன்றில் வெளியுலகம் தெரியாதவளாக இருக்கிறாள்.. அதாவது கடைக்குச் செல்வதற்குக்மகூட தனியாக செல்ல முடியாத நிலையில் இருக்கிறாள்.. விபத்தில் கணவன் இறந்த செய்தி தொலைபேசிமூலம் வருகிறது.. இப்போழுது அவள் முதன்தமுதலான தானாகச் செயற்பட வேண்டிய கட்டாயம்.. இங்கே வசனம் எதுவுமே இல்லை.. தயக்கம்.. பயம்.. விரக்தி.. ஒரு உறுதி.. இந்த உணர்வுகள் முகத்தில் பிரதிபலிக்கிறது.. அடியெடுத்து நடந்து கதவைத் திறக்கிறாள்.. பளீரென வெளி வெளிச்சம் உள்ளே பரவுகிறது.. அவள் அந்த ஒளியுள் கலக்கிறாள்..
இதுதான் காட்சி.. இங்கே கமராவுக்கம் இசைக்கும்தான் வேலை.. அவைதான் இந்த காட்சியின் பொருளைத் துல்லியமாகச் சொல்ல வேண்டும்.. எப்படி எப்படி காட்சிகளை அமைத்து.. எவ்வாறு பொருத்த வேண்டும்.. (என்ன இளங்கோ அவர்களே?!!) விசயம் தெரிந்தவர்கள் விளக்கினால் உதவியாக இருக்கும்.. இந்தக் காட்சியை வேறு எவரும் பாவிக்கமாட்டார்கள்தானே?! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

நீங்கள் தெரிவித்த காட்சியை உருவாக்க : கமராவுக்கும் இசையுக்கும்தான் வேலை என்று எழுதியிருக்கிறீர்கள்.

ஆனால் என்னைப் பொறுத்த வரை இக்காட்சிக்கு இயக்கம்- ஒளிப்பதிவு-ஒளியமைப்பு- இசை- தொகுப்பு -கலை இயக்கம் மற்றும் பிரதானமாக அக் கதாபாத்திரத்தின் நடிப்பிலும்தான் அக் காட்சி உயிர்பெறும்என நினைக்கிறேன்.

----------------------------------------------------------------------
தொலைபேசி வருவதிலிருந்து காட்சியை எப்படி நகர்த்துவதென்று யோசித்தால்:-

- தொலைபேசி ஒலிக்க்கிறது.
- கதாநாயகி மகிழ்ச்சியுடன் வந்து தொலைபேசியில் பேச முயல்கிறாள்.
-ஆனால் அவள் காதில் விழும் செய்தி அவளது கணவன் விபத்தில் இறந்துவிட்டான் என்பது.

(இங்கே இச் செய்தியைத் தெரிவிப்பவர் கதாநாயகிக்குத் தெரிந்தவராக இருந்தால் அவளது மாற்றங்கள் மெதுவாகவும் ஆச்சரிமாகவும் தொடங்கி சோகத்தை எட்டலாம்.
அப்படியின்றி செய்தியைத் தெரிவிப்பவர் பொதுவான ஒருவராக இருப்பின் அது நேரடியான தாக்கத்தைக் கொடுக்கலாம்.

இவற்றை நிர்ணயிக்கும் பொறுப்பு கதாசிரியர்-இயக்குனர்- மற்றும் கதையின் ஓட்டத்தைப் பொறுத்தது)

கணவனது மரணச் செய்தியினால் கதாபாத்திரத்தின் மனதில் ஏற்படும் அதிர்ச்சி-அதனால் ஏற்படும் சோர்வு-சோர்வினூடாக அவள் மனதில் ஏற்படும் அனாதரவான நிலை - இதுவரை உலகம் புரியாத பாவியாக இருந்து தனிமரமாகிவிட்ட வேதனை- அந்த வேதனையை பகிர்ந்து கொள்ள எவருமில்லாத பாவியெனக் கலங்குவதால் அவள் மேல் அவளுக்குள் ஏற்படும் கோபம்-அந்தக் கோபத்துக்குள்ளாக வெளிப்படும் தளர்ச்சி.
தளர்வுற்ற நடையுடன் அவள் வந்துகதவைத் திறக்கிறாள்.
அவளது அறைக்குள் வெளிச்சம் பரவுகிறது.

இங்கே அக் கதாபாத்திரம் தனது பகுதியை உணர்ந்து நடிக்க வேண்டும்.

இதை விபரித்து செயல்படுத்தும் பொறுப்பு இயக்குனருடயது.

இங்கே அவள் வெளிச்சத்துள் கலக்கிறாள் என்பதில் நீங்கள் சொல்ல முனைவது என்ன?

1.முடக்கப்பட்டிருந்த ஒரு ஆத்மா வெளியுலகை தரிசிக்கிறது என்றா?

அல்லது

2.வெளியுலகினரால் பழிச் சொற்களுக்கு ஆளாகி எரிக்கப்படுகிறாள் என்று அர்த்தப்படுத்த விரும்புகிறீர்களா?

தெளிவு படுத்தினால் விளக்கம் தர இலகுவாக இருக்கும்.
---------------------------------------------------------------------

இதே போன்றதொரு காட்சி எச்சில் போர்வை (1997) குறும்படத்தில் இடம் பெற்றிருக்கிறது.

அதாவது ஈழத்திலிருந்து அரசியல் தஞ்சம் கோரி சுவிசுக்கு வந்த ஒரு இளைஞன் தனது தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் மன உழைவுகளால் பாதிக்கப்பட்டு அந்நாட்டை விட்டு காடுகளினூடாக நடந்து செல்லும் போது எதிரே மறையும் ஆதவனின் ஒளியினுள் சங்கமிப்பது போன்ற காட்சி இறுதிக் காட்சியாக வருகிறது.இக் குறும்படக் காட்சி வாயிலாக கதை நகர்த்தப் பட்டிருக்கும் விதத்திலிருந்து :-

1.அவன் வேறோர் நாட்டுக்குள் பிரவேசிப்பது போலவும்
2.அவன் தன்னை மாய்த்துக் கொள்வது போலவும்

இரு விதமான பிரமைகளை ஏற்படுத்துகிறது.

அதற்கான மற்றுமொரு காரணம் தாலாட்டொன்றுக்குள் அழுகுரல்கள் கேட்பது போன்ற பின்னணி இசை பாவிக்கப் பட்டிருப்பதால் இப்படியான இரு உணர்வுகளையும் உரவாக்குகிறது.

எனவே உங்கள் படைப்பில் உங்கள் முடிவு என்னவாக இருக்க விரும்புகிறீர்கள் என்று எழுதினால் விளக்க இலகுவாக இருக்கும்.

இருப்பினும்
உங்கள் முயற்சியும்
உங்கள் படைப்பும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


- sOliyAn - 07-05-2003

நன்றி அஜீவன்.. யாழ் முகப்பில் உள்ள "<i>மறுவிசாரணை</i>" எனும் கதையை.. அதில் வரும் பெண் பாத்திரத்துக்கு முதன்மை கொடுத்து சிறு மாற்றங்களுடன் குறும்படமாக்கினால் என்ன என யோசித்தேன்.. அதன் விளைவுதான் அந்தக் காட்சி.. தங்களுக்கு நேரம் இருந்தால்.. யாழ்முகப்பில் சிறுகதைப் புகுதியில் இக் கதையை கவனியுங்கள்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->


- AJeevan - 07-06-2003

உங்கள் திறந்த மனதுக்காக நன்றி.

கதையை வாசித்தேன்.மிக அருமையாக இருக்கிறது.இதை படமாக்குவதில் ஒரு சில பிரச்சனைகள் உள்ளன.இருந்தாலும் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை.

முடிந்தால் எனது தொலை பேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளுங்கள்:-
0041 62 212 96 23
0041 79 209 12 49

என்னால் முடிந்த கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடியும்.

முதலில் கதைக்கு உரியவரிடம் எழுத்து மூலம் உரிமையை வாங்கிக் கொண்டு உங்கள் பணியைத் தொடருங்கள்.

கதாசியரிடம் குறும் படத்துக்காக அவரது கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டி வரும் அதற்கான ஆட்சேபனையில்லையென்றால் மட்டும் மேலதிக வேலையில் இறங்குங்கள்.நேர்மையாக நடக்க முயலும் போது பிரச்சனைகள் எழலாம்.எனினும் உங்கள் விருப்பம் நிறைவேறுமெனத் தெரிந்தால் குறும்படம் வெளிவரும் வரை உங்கள் குழுவையும் ஆலோசகரையும் தவிர எவருடனும் கதை பற்றி விவாதிக்காதிருங்கள்.

முயற்சி திருவினையாகும்.


- sOliyAn - 07-07-2003

நன்றி அஜீவன்.. இராஜன் முருகவேலும் சோழியானும் ஒன்றுதான்.. <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> பழைய களத்தில் இரண்டு பெயர்களையும் இணைத்திருந்தேன்.. தங்களுடன் விரைவில் தொடர்பு கொள்ளுகிறேன்.


- AJeevan - 07-07-2003

நன்றி சோழியான்.
உங்களைப் போல் பலர் உருவாக வேண்டுமென்ற அவாவில் Europe Movie Club மூலம் திரைப்பட பயிற்சி பட்டறை ஒன்றை லண்டனில் நடத்தினேன்.ஏனோ பயிற்சி பட்டறையோடு அனைவரும் மெனமாகிவிட்டார்கள்.

சுவிசில் நடத்திய குறும்பட விழாவுக்கும் எவரும் எந்த படைப்பையும் அனுப்பவில்லை.புலம் பெயர்ந்து வாழ்பவர்களிடமிருந்து 4 குறும்படங்கள் மட்டுமே வந்தன.ஒரு சில குறும்படங்கள் தேர்வுகள் முடிந்த பின்னர் கடைசி நேரத்தில் எமக்கு கிடைத்தன.அவை போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட முடியாதது வருத்தத்தைத் தந்தாலும் நியதிகளை மீற எம்மால் முடியவில்லை.

ஜஉழடழசசிறீசூ4800ககஸபுலம் பெயர்ந்து வாழும் மக்கள் மூலம் இங்குள்ள பல பிரச்சனைகளை முன்வைக்கும் குறும்படங்கள் உருவானால் பலர் மகிழ்வார்கள்.ஜஃஉழடழசஸ

முன்னர் புலம் பெயர் குறும்படங்கள் பற்றி எழுதி வந்த யமுனா போன்றோர் தமது மௌனங்களைக் கழைத்து இப் பகுதிக்குள் புகுந்தால் சுவாரசியமாக இருக்கும்.

www.ajeevan.com
ajeevan@mailcity.com


- sethu - 07-12-2003

சோளியனின் முயற்ச்சிக்கு வாள்த்து


- AJeevan - 11-12-2003

ஒரு திரைக் கலைஞனாவதற்கு பல் வேறு தரப்பட்ட தொழில் நுட்ப வல்லுனர்களின் பேட்டிகளை வாசிப்பது,அவாகளது கண்ணோட்டத்தில் ஒரு திரைப்படத்தை பார்ப்பது ஆகியவை ஒரு கலைஞன் வளர்வதற்கு மிக அத்தியாவசியமானது. ஒளிப்பதிவாளர் ரவிவர்மாவின் பேட்டி பலருக்கு நிச்சயம் உதவும்.
AJeevan

[b]<span style='font-size:25pt;line-height:100%'>''ஒளியை நான் காதலிக்கிறேன்!''</span>
<span style='font-size:21pt;line-height:100%'>ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பேட்டி</span>
<img src='http://www.vikatan.com/av/2003/nov/16112003/p40a.jpg' border='0' alt='user posted image'>

'' 'இருள் என்பது மிகக் குறைந்த ஒளி' என்று சொன்ன பாரதியாரின் கண்கள்தான் தமிழின் மிகச் சிறந்த காமிரா'' என்கிற ரவிவர்மன், இளைய தலைமுறை காமிராமேன்களில் கவனத்துக்குரியவர். தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் என்று பறந்து பறந்து பணிபுரிகிறார். தனது காமிராவுக்காக உலக விருது பெற்ற முதல் ஆசியர் இவர்தான்...


''முதன் முதலாக ஆசியா கண்டத்திலிருந்து ஒரு காமிராமேன் வாங்கின உலக விருது உங்களோடது. எப்படி சாத்தியம் ஆச்சு?''

'' 'சாந்தம்' படத்துக்காகத்தான் 23-வது EME DES third continent உலக விருது கிடைச்சது. அடிப்படையில் அந்தப் படத்தோட கதை எனக்குப் பிடிச்சிருந்தது. இரண்டு நண்பர்கள். பக்கத்துப் பக்கத்து வீடு. இவனோட சாப்பாட்டை அவன் சாப்பிடுவான். அவனோடதை இவன் சாப்பிடுவான். இவங்க ரெண்டு பேருக்கும் இடையில ஒரு அரசியல்வாதியால பிரச்னை வந்து பெரிய சண்டையா மாறுது. இந்த அடிப்படைக் கதைக்கும் எனக்கும் பெரிய ஒற்றுமை உண்டு. என் அப்பா ஒரு அரசியல் கட்சியில் இருந்தார். அவர் தேர்தல்ல நின்னா யாரும் எதிர்த்து நிக்கமாட்டாங்க.. ஆனா சிலர் சதி பண்ணி அப்பாவுக்கு எதிரா அவரோட நண்பரையே நிக்க வெச்சாங்க... பிரச்னை வந்து சண்டை ஒரு கொலை வரைக்கும் போச்சு. இந்த நிகழ்ச்சிக்கும் 'சாந்தம்' படத்துக்கும் பெரிய ஒற்றுமை... அந்தப் படத்தை ஷ$ட் பண்ணும்போது, ஏதோ என்னோட வாழ்க்கையையே நான் திரும்பப் பார்ப்பதுபோல இருந்தது...

படம் எடுக்கும்போதே 'ரவி... டெல்லிக்கு டிக்கெட் எடுக்கலாமா?'ன்னு.. யூனிட்ல எல்லோரும் கிண்டல் பண்ணுவாங்க... விருது கிடைக்கும்னு அசாத்திய நம்பிக்கை. ஆனா படத்துக்கு ஸ்டேட் அவார்டு கிடைக்கலை. சென்ட்ரல் அவார்டு கிடைக்கலை. ஆனா இன்ப அதிர்ச்சியா இன்டர்நேஷனல் அவார்டே கிடைச்சது... நியூஸ் கேள்விப்பட்டதும் ஒரு மணி நேரம் வீட்டுக்குள்ளே தன்னந்தனியா டான்ஸ் ஆடினேன். என்னோட ஆன்மா நிறைஞ்ச நிமிஷம் அது..''

''ஒரு காமிரா மேனாக அடிப் படையில் உங்கள் காதல் எதன் மீது?''

''நிச்சயமாக காமிரா மீது இல்லை. அது வெறும் இயந்திரம் அவ்வளவுதான். என்னுடைய காதல் எல்லாம் 'ஒளி' மீது தான். வெளிச்சம்தான் இந்த உலகத்தின் மிகப்பெரிய அற்புதம். அதிகாலை விடிய லின்போது வருகிற வெயிலைப் பாருங்க... என்ன ஒரு பிரமாதமான மூட் அது. காலை வெயிலும் மாலை வெயிலும் ஒரே மாதிரிதான். ஆனால் அவை இரண்டுக்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம்? இந்த உலகத்தில் எல்லாவற்றுக்குமே ஒளிதான் உயிர்... நான் ஒளியை தீவிரமாகக் காதலிக்கிறேன்.''

''நீங்க பிரமிச்ச காமிராமேன் யார்?''

''பி.சி. ஸ்ரீராம்... அவர் இந்த ரூம்ல இப்படித்தான் லைட் போடுவாருன்னு நினைச்சா அப்படி படத்தில இருக்காது. மரபுகளை உடைப்பதே அவர் ஸ்டைல். ஒரு ஷாட்ல வெவ்வேறு இடத்தில இருந்து வெளிச்சம் நதி மாதிரி உருகி வழியும். அப்புறம் இன்டலிஜென்ட் திங்க்கிங்... 'அலைபாயுதே' படத்தில ஒரு ஸீன்... மாதவனும், ஷாலினியும் ரிஜிஸ்தர் ஆபீஸ்ல திருட்டுக் கல்யாணம் செஞ்சுக்குவாங்க... கையெழுத்துப் போடறபோது அந்த ஷாட்டை பி.சி. சார் இருட்டுல சில்-அவுட்ல காமிப்பார். கல்யாணம்னா வெளிச்சம் வெள்ளமா பாயும்தானே? ஆனா பி.சி. சார் அதை இருட்டுல காமிப்பார். ஏன்னா அது திருட்டுக் கல்யாணம்...''

''இதுவரைக்கும் எத்தனை படங்கள் முடிச்சிருக்கீங்க?''

''பன்னிரண்டு படங்கள். ஒரு மலையாளப் படம். மூணு இந்தி, ஒரு ஆங்கிலம், ஒரு தமிழ். 'ஃபைவ் ஸ்டார்'தான் தமிழ்ல செஞ்சது. என்னோட மலையாளப் படங்களைப் பார்த்துட்டு மணிரத்னம்தான் தமிழ்ல வாய்ப்பு கொடுத்தார். நான் வொர்க் பண்ண டைரக்டர்கள் எல்லாம் நல்ல டைரக்டர்ஸ். ப்ரியதர்ஷன், ராஜீவ்குமார், ஜெயராஜ், ஷாஜி கைலாஷ், இந்தியில ஜாவேத் அக்தரோட மனைவி ஹனி ராணி... இப்ப ரேவதியோட இந்திப் படம் செஞ்சுட்டிருக்கேன்...

அமிதாப்பச்சன் 'செட்'டுக்கு வரும்போதெல்லாம் நான் பெரும்பாலும் 'க்ரேனில்' இருப்பேன். 'என்னைவிட உயரமா நீ' என்று கிண்டல் பண்ணுவார். தோள் மீது கை போட்டு ஒரு நண்பன் மாதிரி பழகுவார். முதல்நாள் ஷாட் முடிந்ததும், காத்திருந்து அடுத்த நாள் எப்படிப்பட்ட காட்சியமைப்பு என்று வீட்டுப் பாடம் கேட்கிற மாணவன் மாதிரி கேட்டுக்குவார். பெரிய ஹீரோ, மாபெரும் நடிகர்ங்கிற பந்தாவெல்லாம் அவர் தலைக்குள்ளே உட்காரலை..''

''ஒரு காமிராமேன் பங்குக்கு இங்கே சரியா கவனிப்பு இருக்கா?''

''ஒரு படம் முதல் ஷாட்ல இருந்து, 'பேக் அப்' சொல்ற கடைசி ஷாட் வரைக்கும் அந்தப் படத்தோட காமிராமேன்தான் ஹீரோ. பேக் அப் சொன்ன அடுத்த நிமிஷத்தில இருந்து காமிராமேன் ஜீரோ. இதுதான் இப்போதைய நிலைமை.''

- நா. கதிர்வேலன்


--------------------------------------------------------------------------------------------------------

http://www.yarl.com/cgi-bin/frame/smartfra...dhavikatan.com/
நன்றி:விகடன்