Yarl Forum
அடிப்படை கள விதிகளுக்கப்பால்.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கள வாயில் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=6)
+--- Forum: உங்கள் கருத்துக்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=31)
+--- Thread: அடிப்படை கள விதிகளுக்கப்பால்.... (/showthread.php?tid=8324)



அடிப்படை கள விதிகளுக் - kuruvikal - 06-29-2003

களப்பொறுப்பாளரின் அடிப்படை விதிகளுக்கு அப்பால் செல்லாது நியாய பூர்வமாக கருத்தெழுதும் குருவிகள் மீது களப் பொறுப்பாளருக்கு அப்பால் புதிய விதிகள் திணிக்கப்பாட்டால் அப்படியான புதிய விதிகள் குருவிகளின் சுயத்தை பாதிக்கும் வகையில் அமையுமானால் அப்பகுதிகளில் குருவிகள் எதிர்காலத்தில் கருத்தெழுதுவதை தமது சுயத்தை பாதுகாக்கும் பொருட்டு தவிர்த்துக் கொள்ள தீர்மானித்துள்ளான!

களப் பொறுப்பாளரின் அறிவிப்புக்களுக்கு மேலதிகமாக தனிப்பட்ட பகுதிகளுக்கு வரும் புதிய விதி அறிமுகங்கள் பகிரங்கமாக களத்தில் வெளியிடப்பட வேண்டும் அத்துடன் ஆர்வத்துடன் கருத்தாடும் உறுப்பினர்களுக்கு புதிய விதிகள் தொடர்பில் விளக்கம் கோர அனுமதி அளிப்பதுடன் புதிய விதிகள் களப்பொறுப்பாளரின் அனுமதிக்குட் பட்டவை என்பதும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்!
அப்படி செய்யாது எழுந்தமான அறிவுப்புக்கள் மூலம் களவிதி அறிமுகங்களும் கருத்துக்களை தணிக்கைக்கு அப்பால் அகற்றுவதும் கருத்தாடுபவர்களின் ஆர்வத்தையும் சுயத்தையும் இக் களத்தின் மீதான மதிப்பையும் சிதைக்க விளைகின்றன என்பதை தாழ்மையுடன் சுட்டிக்காட்ட குருவிகள் விரும்புகின்றன!
களப் பொறுப்பாளர் இது தொடர்பில் தகுந்த விளக்கம் தந்தால் கருத்தாடும் அங்கத்தவர்கள் அனவரும் தமது சுயத்தையும் களத்தின் மேன்மையையும் பாதுகாத்து கருத்தெழுத உதவியாக அமையும்!

நன்றி- குருவிகள்!


- sOliyAn - 06-30-2003

ஒரு கருத்து தணிக்கை செய்யப்படும்போதோ அல்லது அகற்றப்படும்போதோ.. அது சம்பந்தமான பதில் கருத்துகளும் நீக்கப்படவேண்டும்.. அல்லாவிடில் அந்த கருத்து பார்வையாளர்களுக்கு தப்பான அர்த்தத்தை தரும் அபாயமுள்ளது.. இதை சம்பந்தப்பட்டவர்கள் அவதானிக்கவேண்டும்.. மேலும்.. குருவிகள் எதைக் கூற வருகிறார் என தெரியவில்லை.. ஆனால் அவரது கோரிக்கையிலும் நியாயம் உள்ளது.. பொது விதிகளுக்கு ஏற்ப வரும் கருத்துகள் அனுமதிக்கப்படத்தானே வேண்டும்.. ஏதாவது பிழை நடந்துள்ளதா? :roll:


- kuruvikal - 06-30-2003

களத்தில் சிலரின் கருத்துக்களுகு பதிலலிக்க முயன்று எமது கருத்துக்களும் இலக்குத் தவறியமைந்தமைக்காக களப் பொறுப்பாளரின் முயற்சிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் குருவிகள் தமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றன!

மேலே முதலாவதாக எழுதிய கருத்து நடமுறை கள நிர்வாக விரிவாக்கத்தால் எழக்கூடிய சிக்கல்களைத் தவிர்த்து அனைத்து அங்கத்தவர்களையும் கருத்தால் ஒன்றுபடுத்தி அழைத்துச் செல்லும் பொருட்டே கருத்து பகரப்பட்டுள்ளது! தனிப்பட்ட யாரினுடைய செயற்பாடுகள் கருதியல்ல!
மேலே கருத்தில் சில தவறுகள் உண்டு திருத்தி வாசித்து ஒத்துழைக்கவும் ...ஒத்துழைபுக்கு நன்றிகள்!


- kuruvikal - 06-30-2003

திருத்தம்...
கருத்துக்களுக்கு
பதிலளிக்க...
தவறுகளுக்கு வருந்துகின்றன குருவிகள்!
:twisted: :twisted:


- sethu - 07-12-2003

இதற்கு பதில் தருவார் ஒருத்தரும் இல்லையோ?