Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
சாதனை
#1
http://www.puthinam.com/?get=200305232223530063
Reply
#2
உலக சாதனையாளர் சுரேஸ் யோக்கிம் அவர்கள் இரண்டாம் நாளாக வெற்றிப் பாதையில்
<span style='font-size:19pt;line-height:100%'>ஜ கீதவாணி வானொலி - கனடா ஸ ஜ புதன்கிழமை, 25 யுூன் 2003, 8:08 ஈழம் ஸ
உலகெங்கும் வாழும் நேயர்களும் நேரடியாக அழைத்து சுரேஸை வாழ்த்தலாம். நேரடியாக இவரை வாழ்த்த விரும்புபவர்கள், 1-416-267-2100 அல்லது 1-416-267-8255 என்ற இலக்கங்களை அழைத்து வாழ்த்தலாம்.

உலக சாதனைகளைத் தகர்த்து, புதிய உலக சாதனைகள் புரிந்து வரும் எங்கள் ஈழத் தமிழ் சாதனையாளர் சுரேஸ் யோக்கிம் அவர்கள், தமது 120 மணிநேர அறிவிப்பு சாதனையில் இன்று தமது இரண்டாவது நாளில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே 30 மணித்தியாலங்களைத் தாண்டி, மிக உற்சாகமாக அனைவருடனும் உரையாடியபடியே, உலகளாவிய பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள், கலைஞர்கள், அறிஞர்கள் அனைவரின் ஆசிகளுடன் தொடர்ந்து வெற்றி நடை போடுகின்றார். கனடா கீதவாணி வானொலியில் இந்நிகழ்ச்சிகளை நடாத்திக் கொண்டிருக்கும் சுரேஸ் யோக்கிம் அவர்களை, கனடிய 24 மணிநேர ஒலிபரப்பு சேவைகளை நடாத்தும், திரு.இளையபாரதி அவர்கள், திரு.கலாதரன் அவர்கள், மற்றும் ரி.வீ.ஐ. தொலைக்காட்சி அமைப்பாளர்கள், ஐரோப்பிய அவுஸ்திரேலிய மற்றும் இந்திய வானொலி நிலையத்தினரும் இன்னும் ஏராளமானவர்களும் தங்கள் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் வானலையில் நேரடியாகத் தெரிவித்தார்கள். இந்த நிகழ்ச்சிகளை நேரடியாக சூரியன் எப்.எம். இலங்கையில் ஒலிபரப்புச் செய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமது திட்டத்திலுள்ள பல எதிர்கால சாதனைகளும் முற்றுமுழுதாக சாத்தியமாகி, உலகில் மிக அதிகமாக உலக சாதனைகளைப் படைத்த மனிதராக ஒரு ஈழத் தமிழ் மகன் வலம் வந்து, ஈழ மண்ணுக்கும் மக்களுக்கும் பெருமை தேடித் தரவிருப்பதாக சுரேஸ் உற்சாகமாக வானலையில் தெரிவித்தார்.

உலகெங்கும் வாழும் நேயர்களும் நேரடியாக அழைத்து சுரேஸை வாழ்த்தலாம். நேரடியாக இவரை வாழ்த்த விரும்புபவர்கள், 1-416-267-2100 அல்லது 1-416-267-8255 என்ற இலக்கங்களை, 23ம் திகதி மாலை 4 மணிக்குப் பின்னர் (ரொறன்ரோ நேரம்) அழைக்கலாம். </span>
Reply
#3
<span style='font-size:25pt;line-height:100%'>இந்த சாதனை வெற்றிபெற்றதா தகவல் தெரிந்தவர்கள் அறியத்தரவும்.</span>
Reply
#4
இது நல்லாயிருக்கு.
விசயத்தை நீங்க எழுதிட்டு விபரத்தை எங்களிட்டை கேக்கிறீங்களா?
பலே
Reply
#5
எழுத்துப்பிழையின்றி செய்தி இருந்தவுடன் தெரிந்தது. சொந்தமானதல்ல சுட்டதுதானென்று..அதை உறுதிப்படுத்தியதற்கு நன்றி..கனடாவைத் தொடர்புகொண்டு மீதியை எழுதுவதுதான் பொருத்தம்...செய்தி உண்மையானால் வாழ்த்துகள் சுரேஸ் கோக்கிம் அவர்களுக்கு..

-
Reply
#6
திருத்தம்
வாழ்த்துகள் சுரேஸ் யோக்கிம்

-
Reply
#7
செய்தியை தொடர்ந்து கேட்க முடியாமல் போய்விட்டது என்ன நடந்தது என்று யாராவது அறியத்தரவும்.
Reply
#8
ஆனானப்பட்ட முருகனே ஔவையிடம் சுட்ட பழம் வேணுமா என கேட்கும்போது சேது சுடுவதில் என்ன தவறு??<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Reply
#9
சுரதா புதுவை கொப்பிறைட்டெல்லாம் றெஜிஸ்டர் பண்ணியாச்சோ?
Reply
#10
தலைப்பு வட்டுக்கைபோட்டுது.
மீண்டும் தலைப்புக்கைவாங்கோ.
சாதனை நிறைவேறினதோ அல்லது இடையிலை எழும்பி ஓடியாச்சோ????
Reply
#11
எழும்பி ஓட இது என்ன ஓட்டப்போட்டீயே...சுரேஸ் மீண்டும் எமது தாயக மண்ணின் பெருமையை உலகத்திற்கு வெளிக்காட்டியுள்ளார்

இது ஒரு வீடியோ லிங்
http://www.swasam.com/swasam_online_radio.htm
Reply
#12
சுரதா தாங்கள் சொன்ன கருத்தில் தவறு இருப்பதாக நான் இண்று கேள்விப்பட்டேன்.

சுரேஸ் சாதனை செய்யும் போது ஏதோ சுத்துமாத்து செய்து அது பிடிபட்டுவிட்டதாம் அவர் மணித்தியாலத்தை கூட எடுத்து ஓய்வு எடுத்ததாம் இப்படி பல வதந்தி ஆனால் அவர் உலக சானையை முறியடிக்கவில்லை இதுதான் உண்மை.

தற்போது சாவகச்சேரிப் பெண்மணி ஜரோப்பிய தமிழ் எண்ற வானொலியின் உதவியுடன் இந்த உலகசாதனையை செய்ய உள்ளா. பெண்ணுக்கு வாழ்த்துக்கள்.
சாதனை செய்ய உள்ள பெண்னின் பெயர் சிவாந்தினி அதற்கு வானொலியை வளங்கியுள்ள நிறுவனம் ஜரோப்பிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் பரீட்சார்த்த காலம் 2 மாதம். ஒரு கிழமை தொடர்ந்து அறிவிப்புச் செய்து சாதனை படைக்க உள்ளா.
தற்போது பயிற்ச்சியில் ஈடுபட்டு வருகிறா வெற்றி பெற வாழத்துக்கள் ஆணால் முடியாததை பெண் செய்தால் ஈழத் தமிழ்ப் பெண்குலத்திற்கு மிகப் பெரும் சவலாக இருக்கப்போகும் இந்த செயலுக்கு ஜரோப்பிய தமிழ் எண்ற வானொலி அனுமதி வளங்கியுள்ளது.
Reply
#13
சிவாந்தினி ஐபிசி ரிபிசியில் முன்னர் இருந்தவதானே.நேயர்களுக்கு நன்கு பரீட்சயமான ஒரு அறிவிப்பாளினி.
வெற்றிக்கு வாழ்த்துவோம்.

எல்லாவற்றையும விட உங்கள் சுட சுட தகவலுககு முதலில் நன்றிகள் சேது.
Reply
#14
சிவாந்தி வெற்றிப்பெண்ணாக திகழ மனப்புூர்வமான வாழ்த்துக்கள்.
[b]Nalayiny Thamaraichselvan
Reply
#15
<b>சேதுவின் தகவல்</b>
Quote:சுரேஸ் சாதனை செய்யும் போது ஏதோ சுத்துமாத்து செய்து அது பிடிபட்டுவிட்டதாம் அவர் மணித்தியாலத்தை கூட எடுத்து ஓய்வு எடுத்ததாம் இப்படி பல வதந்தி ஆனால் அவர் உலக சானையை முறியடிக்கவில்லை இதுதான் உண்மை.
வதந்திகள் உண்மையெனக் கொள்ளத் தகுந்ததோ? உண்மையெனில் அதற்கான ஆதாரங்களை எங்கே காணக்கூடியதாகவுள்ளது

சிவாந்தினி நல்ல குரல் வளமுடைய ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர். அவர் சாதனை புரிய வாழ்த்துகள்

-
Reply
#16
சாதனையை நிறைவேற்ற எனது மனப்புூர்வமான வாழ்த்துக்கள்.

ஆனால்........தமிழினத்தின் பெருமையை உலகிற்குப் பல சாதனைகளைப்புரிந்து காட்டி உயர்த்திப்பிடித்த சாதனைத்தமிழனை .......?

Quote:ஏதோ <span style='font-size:25pt;line-height:100%'>சுத்துமாத்து</span>

என்று குறை கூறுவது முறையோ?

அவரது சாதனை முயற்சியில் அவர் தோல்வி கண்டுவிட்டார் என்று கூறலாம்.
அவர் சாதனை முயற்சியின் போது நிபந்தனைகளை மீறிவிட்டார் என்று எழுதலாம்.

ஆனால் <b>சுத்துமாத்து.......? </b>தேவையான மகுடம்தான்.

சாதனை செய்யும் பெண்ணே நாளை நீயும் தவறிழைத்தால் இன்று உன்னைப் போற்றுவார் நாளை இப்படித்தான் எழுதுவர்.இதுதான் சமூகம்....!

கலங்காதே,தயங்காதே வெற்றிநடை போடம்மா!
தமிழ்ப்பெண் குலத்தின் பெருமையினை உயர்த்தம்மா!
:!: :!:
:: <b>give respect and take respect </b>::
[i]with love.................It's
<b>.</b>:: <b>VEERA</b>
Reply
#17
Manithaasan Wrote:<b>சேதுவின் தகவல்</b>
Quote:சுரேஸ் சாதனை செய்யும் போது ஏதோ சுத்துமாத்து செய்து அது பிடிபட்டுவிட்டதாம் அவர் மணித்தியாலத்தை கூட எடுத்து ஓய்வு எடுத்ததாம் இப்படி பல வதந்தி ஆனால் அவர் உலக சானையை முறியடிக்கவில்லை இதுதான் உண்மை.
வதந்திகள் உண்மையெனக் கொள்ளத் தகுந்ததோ? உண்மையெனில் அதற்கான ஆதாரங்களை எங்கே காணக்கூடியதாகவுள்ளது

சிவாந்தினி நல்ல குரல் வளமுடைய ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர். அவர் சாதனை புரிய வாழ்த்துகள்


காரணங்களாவன.

கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யப்படவில்லை.

கின்னஸ் சாதனையாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

பளைய சுவீடன் நாட்டவரின் சாதனைக்காகவே சுரேஸ் போட்டி போட்டார். அதற்காகவே இந்தப் பெண்னும் போட்டி போடுகிறா.

நடுவர்களால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கனடாவில் நண்பன் ஒருவருடன் கதைத்தபோதுதான் எனக்கு சொன்னார்.

புதிதாக சந்தர்ப்பம் வளங்கியுள்ள வானொலி அறிவிப்பாளரும் சொன்னார்.

போட்டிபோட உள்ள அந்த பெண் அறிவிப்பாளர் மேல் நான் கூறிய காரணங்களை கூறி அந்த வானொலியில் பயிற்சியில் ஈடு படுகிண்றா

இரண்டாம் நாளாக இண்றும் பயிற்ச்சி நடக்கிண்றது.

முறியடிக்கப்பட்ட சாதனைக்கு அவ போராட வரவில்லை.

கின்னஸ் பதிவாளர்களுடன் தொடர்பு கொண்டே அவர்களின் அனுமதியுடன் தான் அதற்கான பயிற்சிகளை செய்கிறா.

கின்னஸ் பதிவாளர்கள் பொய் சொல்லுகிறார்களா?

மணிதாசன் சற்று சிந்திக்கவும்.
Reply
#18
Reception : 001 416-267-1100
இந்த தொலைபேசியில் தொடர்பு கொண்டு இப்ப கேட்டேன் அந்த கனடா வனொலி செல்லுகிறது அவர் வெற்றியாக செய்து முடித்ததாகவும் அவருடைய பெயர் அடுத்த வருட புத்தகத்தில் வரும் எண்று ஆனால் அதே உலக சாதனையை உடைப்பதற்கு ஏன் தமிழ் பெண்மனி போராடுகிறா? யாராவது இந்த முரண்பட்ட தகவலை சரியாக்க உதவுங்கள்.
Reply
#19
http://geethavani.homestead.com/basic.html
Reply
#20
ஆனால் மேற்கூறிய காரணங்களுக்காகவே அந்த பெண் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறா? ஒண்டுமா புரியேல்ல இந்த உலகத்திலை?
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)