![]() |
|
கண்டேனடி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: கண்டேனடி (/showthread.php?tid=8335) |
கண்டேனடி - Paranee - 06-25-2003 பேனா நுனிக்குள் புதைந்து நிற்பவளே வார்த்தைகளாக வடிய மறுப்பது ஏனோ ஊரார் முன்னே திட்டித்தீர்த்துவிட்டு என் முன்னே மட்டும் இன்னிசை பாடுவது ஏனோ மனதின் உள்ளே மையல்கொண்டு வெளியே மட்டும் வேசம் காட்டுகின்றாய் உள்ளே நான் ஓசையில்லாமல் ஓய்வெடுக்க முகத்தில் மட்டும் வெறுப்பை உமிழ்கின்றாய் ஏன் உன் குரலோசைக் குயில் கீதத்தில் வார்த்தைகளை மிழுங்கும் அந்த நிமிடத்தில் என் சின்னஞ்சிறிய சீண்டல்களிற்கான உன் சிம்பொனிச்சிரிப்பில் என் கவிதைகளை நிராகரித்த உன் மனதின் பயப்பிராந்தில் நான் கண்டுகொண்டேனடி. . உனக்குள் நான் உறங்கிக்கொள்வதை என்தன் நினைவுகளால் உடையும் உன் பிஞ்சு இதயத்தை நானே அறிந்தேனடி. . புன்னகை சிந்தும் உன் புூவிதழ்களின் மேலே உறக்கம் மறந்த உன் விழிப்பாவையினுள்ளே புூமி கீறும் உன் பிஞ்சு விரல்களினுள்ளே நான் கண்டேனடி . . என்தன் காதல் ஒளிந்திருப்பதை வெறுத்த உன் உள்ளம் என்னை விரும்பி அழைப்பதில் சிறுத்த உன் இடை அடிக்கடி சிலிர்த்துக்கொள்வதில் கருத்த கூந்தல் எப்போதும் சோர்ந்து வீழ்வதில் நான் கண்டேனடி . கசங்கும் என் இதயத்தை. . நன்றி பரணீ வைரமுத்துவின் ஒரு கவிதையின் சாயலில் எனது வார்த்தைகள். - ahimsan - 06-25-2003 அதிகாலை..அது விடியும்முன்னரே விடிவெள்ளி சிரிக்கின்றது.............! கண்ணைக் கசக்கினேன் இன்னும் கசக்கினேன் து}ரத்து வெளிச்சத்தில் மங்கலாய் மஞ்சளாய் கானல் போன்றே தோன்றியது - அது ஓ..மறைத்திருந்த மேகக்கூட்டம் விலகியதும்..சுள்ளென வீசுயது பார் அந்தவொளிப் பிழம்பு...............! அதைக்கூட மறைத்திருந்தாய் - பாவி கனவிலும் என்னை நிலைகுலைத்த செல்லச் சிறுக்கியே.................! கண்டேனடி உன்னை, ஆதவனையும் மறைத்திடும் ஆருயிராய்....! நிலைப்பாயா..............................? - kuruvikal - 06-25-2003 வெள்ளிச் சிறகடித்து ஒலிவ் மரத்து கிளையெடுத்து சிங்காரமாய் சிறகடிக்கும் வெண் புறாவை கண்டேனடி தோழி... கனவு கலைந்து முன்றல் வந்தால் செல்லும் விழுகுது காதைக் கிழித்துமே..! மொத்தத்தில் அமைதியென்பதை காதலியாய் கண்டேனடி தோழி கனவில் மட்டுமே...! நிஜத்தில் அதுவுமென் காதலியாய் ஆனதோ...?! ஏனெனில் இரண்டும் வெகுதொலைவில்! - Mullai - 06-25-2003 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->நிஜத்தில் அதுவுமென் காதலியாய் ஆனதோ...?! ஏனெனில் இரண்டும் வெகுதொலைவில்!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> காதலியைத் தொலைத்ததாலா? இல்லை காதலி மிகத் தொலைவில் எனபதாலா இந்தக் கவிதை. காதலியும் சமாதானமும் நன்றாகப் பொருந்தியிருக்கின்றன. பாராட்டுக்கள் குருவி - kuruvikal - 06-26-2003 காதலிகள்....ஒன்று அமைதி மற்றது கல்வி! அமைதி சமாதானம் தேடவும் கிடைக்குதில்லை....கல்வி முடிவிலித் தொலைவு கொண்டு விரிந்து கிடக்கிறது! - Mullai - 06-26-2003 ஓ.......பல காதலிகளா? பாவம் நீங்கள் - kuruvikal - 06-26-2003 என்ன பல காதலிகள் எண்டது என்னவோ உண்மைதான் ஆனா ஒரு ஒளி வட்டத்தையும் காணல்ல....?! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
- Guest - 06-26-2003 ஒளிவட்டம் கரெண்ட் அடிக்கும்போது தெரியும்! - nalayiny - 06-26-2003 மாறி வந்திட்டனோ ....நகைச்சுவைப்பகுதியா இது? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:
- nalayiny - 06-26-2003 எல்லோரது கவிதையும் நன்று. அகிம்சனின் கவிதை அற்புதமான புதிய வடிவிலான கற்பனை பாராட்டுக்கள். - kuruvikal - 06-26-2003 நகை நகையாய் நுகரப் பட்டால் கவியும் சொல்லும் நகை! கரண்டா என்ன கரண்ட்....? பற்றியா அணுவா...?! குருவிகள் என்ன செய்ததுகள் ஒரேயடியா முடிக்கப்பாக்கிறியள்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :twisted:
- nalayiny - 06-26-2003 ஒளிவட்டம் ......!! பற்றியும் இல்லை அணுவும் இல்லை இது வேறேதோ. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> :wink:
- kuruvikal - 06-26-2003 அப்படி என்ன ஒளி வட்டம் ஓஓ சந்திரனைச் சுற்றிய பரிவட்டமோ....?! ஒன்னுமாப் புரியல்ல....விஞ்ஞானியளே குழம்பிடுவாங்கள்....?! - kuruvikal - 06-26-2003 அது சரி உங்கட கையெழுத்தென்ன தலைகால் புரியாம நிக்குது......! மோகன் அண்னாவிடம் கேட்டுத்திருத்துங்கோவன்.....! நல்ல தத்துவத்தை இப்படியா எழுதுறது....பாவம் யாரவரோ....! - sOliyAn - 06-27-2003 வில்லையை அசையாமல் பிடித்தால்தான்.. ஒளிவட்டம் ஓரிடத்திலை குவிந்து வெப்பமாகும்.. அதுக்கெல்லாம் குருவிகளுக்கு நேரமிருந்தால்தானே.. ?! - kuruvikal - 06-27-2003 சரியாச் சொன்னியாள் ஆனால் ஒரு குழப்பம் கண் வில்லையா கை வில்லை..எது....?! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- sOliyAn - 06-27-2003 கண்ணிலையும் குவி வில்லைதானே? அசைக்காமல் பாருங்கோ.. வெப்பமாகும்தானே?! :mrgreen: - kuruvikal - 06-27-2003 கண் கெட்டுப் போகாதே.....?! பிறகு நாளைக்கு கெட்ட பயல் எண்டு...கண்..கெட்டபயல் எண்டு வராதே.....?! - nalayiny - 06-27-2003 ஒளிவட்டம் ..! கரெண்ட் அடிக்கும் போது தெரியும் என்பது காதலி மனைவியாகி பின் கடிபடுகிறபோது அழகான ஒளிவட்டம் தோன்றும் என்பதை சொல்லாமல் சொல்லி இருப்பாரோ யாழ்.(கரெண்ட் அடிக்கும் போது ஒளிவட்டம் தோன்றும்.) அது தான் ஒரு பாடல் கூட இருக்கே சம்சாரம் ஒரு மின்சாரம் என. எத்தனை வோட்சிலை ஒளிவட்டம் தோன்றும் என்பதை வைரமுத்துவும் சொல்லாமல் விட்டிட்டார். நளாயினி தாமரைச்செல்வன். :wink: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- kuruvikal - 06-27-2003 அதெல்லாம் பழைய விடையங்கள்....எத்தனை வோல்டேஜ் என்றாலும் சம அளவு வோல்டேஜ் பதிலாகிச்செண்டா மொத்தக் கரண்ட் பூச்சியமாகும்!...இப்ப எல்லாத்துறையும் நல்ல முன்னேற்றம்.....அதால மின்சாரம் அடிக்கிறதில இருந்து பாதுகாப்பு முன் கூட்டியே எடுக்குறாங்கள்....எல்லாம் ஒரு அலேட் தான். :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
|