![]() |
|
கணணி நீங்களும் செய்யலாம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: கணினி (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=24) +--- Thread: கணணி நீங்களும் செய்யலாம் (/showthread.php?tid=8338) Pages:
1
2
|
கணணி நீங்களும் செய்யல - Kanani - 06-24-2003 கணணி இப்பொழுது பொதுவாக எல்லாருடைய வீட்டிலும் இருக்கும் ஒரு சாதனமாகி விட்டது கணணி ஒன்றை அமைத்தலுக்கும் பிழை வந்தால் பழுதுபார்க்கவும் கணணி நிபுணர்களைத் தேடி அலைவதும், சிறு சிறு பிரச்சினைகளுக்கு அதிக பணம் செலவிடுவதும் பலருக்கு வாடிக்கையாகிவிட்டது கணணி பற்றிய தெளிவான அறிவும் அதில் தோன்றும் பிரச்சனைகளைக் களையும் வழிகளும் தெரிந்திருத்தல் எல்லோருக்கும் நன்மை பயக்கும் என நினைக்கிறேன் இனி கணணி ஒன்றை நீங்களே எவ்வாறு அமைப்பது என்றும் அதனுடைய இயக்கம் பற்றியும் பாரப்போம் கணணியின் மையச் செயலகத்தினுள் CPU (Central Processing Unit) என்ன இருக்கிறது? அதிலிருக்கும் முக்கிய பாகங்கள் தாயப் பலகை - Mother board நுண் செயலி - Processor முதன்மை நினைவகம் - Main memory நிலை வட்டு அல்லது வன் வட்டு - Hard Disk அகற்று சேமிப்பகம் - Removable Storage (Floppy & Zip) ஒலி அட்டை - Sound card ஒளித்தோற்ற அட்டை - Video Card விசைப் பலகை - Key Board எலி - Mouse வடங்கள் - Cables குறுவட்டு அல்லது பல்பயன்வட்டு வாசிப்பான் - CD/DVD ROM ஒலி வடம் - Audio Cable இறுதியாக சக்தி வழங்கியும் கலமும் - Case அவை எல்லாம் தாய்ப்பலகை எனும் ஒரு இல்த்திரனியல் சுற்றில் பொருத்தப்பட்டு இயங்குவதே இந்தக் கணணி எனும் இயந்திரம் இதில் முக்கியமான தாய்ப்பலகை பற்றித் தெரிந்துகொண்டால் மற்றப் பாகங்களை எப்படிப்பொருத்துவது என்பது இலகுவாக இருக்கும் இதில் உங்களுக்குத் தெரிந்தவற்றை கூறுங்கள் மிகுதியை பிறகு எழுதுகிறேன் - Kanani - 06-24-2003 நுண் செயலிகள் - Processors <img src='http://www.intel.com/products/i/photo/pentium4.jpg' border='0' alt='user posted image'> நுண் செயலிகள் பலவகைகளிலும் பல அமைப்புகளிலுமுண்டு. இலத்திரனியல் செயலிகள் நாங்கள் பாவிக்கும் கணிப்பான்கள், டிஜிற்ல் மணிக்கூடுகள், கைத்தொலைபேசிகள் மற்றும் VCR களிலும் பாவிக்கப்படுகின்றன. நுண் செயலிகள் நாம் கொடுக்கும் அறிவுறுத்தலுக்கிணங்க பின்வரும் அடிப்படை செயற்பாடுகளைச் செய்யும் கணித அல்லது தர்க்க அலகு Arithmetic/Logic Unit மூலம் கணிப்பீடுகளைச் செய்தல் (அதாவது கூட்டல் கழித்தல் பெருக்கல் பிரித்தல் போன்ற கணிப்புகளை செய்தல்) தரவுகளை நினைவகத்திடையே இடம் மாற்றல் தர்க்க ரீதியான முடிவுகளை எடுத்தல் நாம் கொடுக்கும் ஒவ்வொரு அறிவுறுத்தலும் நேரத்தின் அடிப்படையிலேயே செயற்படுத்தப் படுகின்றன. உதாரணமாக "பானைக்குள் இருக்கும் சோற்றை கோப்பையில் போடு" எனும் அறிவுறுத்தலை எடுத்துக்கொண்டால் பானைக்கு அருகில் போதல் சோற்றை எடுத்தல் கோப்பைக்கு அருகில் வரல் கோப்பையில் போடல் என்றவாறு நுண் செயலி அதை இயக்க அதற்கு 4 நேர அலகுகள் தேவைப்படும். இதனால்தான் கணணியின் வேகத்தை அதன் நேர அலகை வைத்து கணிப்பிடுவார்கள் இப்போதய கணணிகள் செக்கனுக்கு பில்லியன் கணக்காக நேரத் துடிப்புகளை உருவாக்க வல்லன. ஒவ்வொரு துடிப்பிலும் அறிவுறுத்தல்கள் செயற்படுத்தப்படும். இந்தக் கணிப்பீடுகள் எல்லாம் எவ்வாறு முடிகிறது? இங்குதான் சிலிக்கனின் விளையாட்டுக்கள் இடம்பெறுகின்றன ஆரம்பத்தில் கணணிச் செயலிகள் மிகப்பெரிய அறையின் அளவுடையதாகவே இருந்தன. இவை மூவாயியின் (Transistor) கண்டுபிடிப்பின் பின் உள்ளங் கைக்குள் சுருங்கிவிட்டன. இன்று பல லட்சக் கணக்கான மூவாயிகளை ஒரு பெருவிரலளவு சிலிக்கள் சில்லில் அடக்கிவிடலாம். கணித மற்றும் தர்க்க ரீதியான செயற்பாடுகளை தக்க முறையில் மூவாயிகளை இணைப்பதால் செய்யலாம். மூவாயிகளின் வலைப்பின்னல் பெரிதாயின் பெரிய கணிப்பீடுகளைச் செய்யலாம். இந்த மூவாயிகளே நுண் செயலி எனும் கட்டடத்தின் செங்கற்கள். மூவாயிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே ஒரு நுண் செயலியின் திறனும் கணிப்பிடப்படும். மூவாயிகளின் பெருக்கமும் pipelining எனும் தொழில்நுட்பமும் நுண் செயலிகளின் திறனை மேலும் அதிகரிக்கின்றன. pipelining என்றால் பல அறிவுறுத்தல்களை மாந்தரமாக செயற்படுத்துவது இதை செயற்படுத்தவும் மூவாயிகள் தேவை. ஆகவே மூவாயிகளின் எண்ணிக்கையே நுண் செயலியின் திறனை தீர்மானிக்கிறது. இனி எவ்வகையான நுண் செயலிகள் தேவை? சாதாரண பயனாளர்களுக்கு சாதாரண நுண் செயலியே போதுமானது - சாதாரண பயனாளர் எனும்பொழுது தட்டச்சு பழகல், அலுவலக வேலைகள் கணக்குகள் பார்த்தல், அல்லது வியாபார கடிதங்கள் கோவைகள் பிரதி செய்தல் என்பனவாகும் இவர்களுக்கு Pentium II, AMD K6, the old Cyrix 6x86 போன்ற நுண்செயலிகள் போதுமானவை. உயர் பயனாளர்களுக்கு ஓரளவு வேகமுள்ள செயலிகள் தேவை - பலவகை மென்பொருட்களை ஒரே நேரத்தில் இயக்குவோர், வீடியோ ஓடியோ செப்பனிடல் பதிதல் போன்றன செய்பவர்கள், CAD போன்றன பாவித்து கணணி மென்பொருள் மற்றும் பொறியியல் அமைப்புகளைச் செய்வோர், கணணி விளையாட்டுக்கள் விளையாடுவோர் போன்றோர். இவர்களுக்கு Intel Pentium 4 அல்லது AMD XP processor போன்றன கிட்டத்தட்ட 1 தொடக்கம் 2 Ghz வேகத்துடன் இருத்தல் நல்லது. நுண் செயலி வாங்கும்போது அதனுடன் வரும் அல்லது வாங்கும் மின்விசிறிகள் பற்றியும் கவனத்தில் எடுக்க வேண்டும் அதிவேக நுண்செயலிகள் விரைவில் வெப்பமடைவதால் கூடிய சுழற்சி வேகமுடைய மின்விசிறிகள் பாவிப்பது இன்றியமையாதது. மின்விசிறிகளுடன் வெப்ப உறிஞ்சி heat sink ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கிறதா எனவும் பாரத்தல் வேண்டும். இதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்த விடயங்களையும் தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ! - kuruvikal - 06-24-2003 கணணி பற்றி கணணி தரும் செய்திகள் மிகப் பயனுள்ளவை.கணணி பற்றிய பொது அறிவுக்கும் சரி கணணி ஒன்றை உருவாக்கிக் கொள்ளவும் பாகங்கள் பழுதடைந்தால் தேவையற்ற செலவுகளைத்தவிர்த்து செப்பனிட்டுக் கொள்ளவும் உதவுவதோடு எதிர் காலத்தில் உங்கள் சிரார்களின் கணணி தொடர்பான பல கேள்விகளுக்கும் விடை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும்! - sOliyAn - 06-24-2003 வெப்ப உறிஞ்சி உள்ளதா என்பதை எவ்வாறு அறிவது? வழிகாட்டல் புத்தகத்தில் அதைப்பற்றி எதுவும் இல்லையே?! மற்றும்.. கணனியில் பாகங்கள்.. அதன் செயலாக்கம்பற்றி கதைத்தல்.. ஒருநிலையில் நின்று வாசிக்க உதவும். - GMathivathanan - 06-24-2003 சோழி.. படிச்ச டாக்குத்தர் ..டாக்குத்தர் தான்.. எல்லாரும் .. டாக்குத்தரானால்.. வயித்துவலிதான் அதிகமாகும்.. அதைலை.. படிச்ச டாக்குத்தர்..பார்த்துப் போறது.. கணணி செய்யிறது சுகம்.. எல்லாம் பிளக்.. அன் பிளே.. இப்ப.. அதாலை கஸ்டமில்லை.. இப்பத்தைய கீற்சிங்.. பானோடை வரும்.. புறோசசருக்குத் தக்கமாதிரி.. எதுக்கு எது எண்டு றெக்கமென்ட். பண்ணியிருக்கும்.. நீங்கள் வாங்கியது சரியான இடத்திலிருந்ததாயிருந்தால்.. சரியான கீற்சிங்.. போட்டிருப்பார்கள்.. ஆகவே கவலையை விடுங்கள்.. இப்பத்தய கணணிகளில்.. ஹாட்டிஸ்க்..கூலர்.. மெமறிக் கூலர்.. ஐஓக் கூலர்.. வீடியோககாட்; கூலர்.. பில்ற்ரர்.. சிஸ்ரம்கூலர்.. பவர்வப்பிளைக் கூலர்.. எண்டு பலதும் இருக்கும்.. இப்படிப் பலதுமிருக்கிறதாலை.. பழுதுபடுறது.. கூட.. சரியாவேலைசெய்யிறதை.. கழற்றிப் பழுதாக்கிறேல்லை.. என்னத்துக்கும்.. கவரைக் கழற்றி பார்த்துப்போட்டு திரும்ப ஸ்குறு மிஞ்சாமல்.. புூட்டடுங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Kanani - 06-25-2003 வெப்ப உறிஞ்சியும் மின்விசிறியும் நுண்செயலிகள் பற்றிய இப்பகுதி விளங்கிக்கொள்ள சிறிது சிக்கலானது....புரியாவிட்டால் பரவாயில்லை...... AMD நுண்செயலியின் புதிய தொழில்நுட்பங்கள் QuantiSpeed architecture - இது தரவுகளை விரைவாக இடமாற்றும் தொழில்நுட்பம். இது office போன்ற கணக்கீடு மற்றும் தகவல்தள மென்பொருளின் பயன்பாட்டின்போது விரைவான தகவல் பரிமாற்றத்தையும், துரித விடை காணலையும் காட்டும். இது பல அறிவுறுத்தலை ஒரே நேரத்தில் திறம்பட செயற்படுத்துவதால் பல்பணியாக்கம் Multitasking இலகுவாக அமைகிறது. Multitasking என்றால் ஒரே நேரத்தில் பல் பணிகளை ஆற்றல். இதனை நீங்கள் ஒரு சாளரத்திலிருந்து இன்னொரு சாளரத்திற்கு தாவும்போது சாளரங்களின் மென்மையான நகர்வுகளை விகாரமின்றிக் காணலாம். DDR Memory - அதாவது இரட்டைவேக நினைவகங்களை இது ஆதரிக்கும். இரட்டைவேக நினைவகங்களை முதன்மை நினைவகம் பற்றிப் பார்க்கும்போது பார்ப்போம். AMD PowerNow - இது கணணியின் மின்கல (தாய்ப்பலகையிலுள்ள) ஆயுட்காலத்தை கூட்டும். அதாவது குறைந்த இயக்க நிலையில் குறைந்த மின்னும் கூடிய இயக்க நிலைகளில் கூடிய ஓட்டத்தையும் எடுக்கக்கூடியவாறு மாறும் மின்னோட்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. AMD 3DNow - பொதுவாக படங்களைக் காட்டவும் அசைக்கவுமே அதிகளவு தரவுகளையும் கணிப்பீடுகளையும் நுண் செயலி செய்யவேண்டியிருக்கிறது. இவ்வாறாக உயிர்ப்பான முப்பரிமான படங்களை அமைக்கவும் இயக்கவும் இந்த புதிய தொழில்நுட்பம் பயன்படுகிறது. எமது மேசைக் கணணிகளுக்கான AMD நுண்செயலிகள் இரு வகைகளில் கிடைக்கும் ஒன்று Athlon மற்றயது Duron. இவற்றில் அத்லோன் 37 மில்லியன் மூவாயிகளாலும் டியுரோன் 25 மில்லியன் மூவாயிகளாலும் ஆனவை. அத்லோன்கள் 256 கிலோ பைட்டுக்களாலான இரண்டாம் தர இடைமாற்று (level 2 cache) நினைவகத்தைக் கொண்டவை. ஆனால் டியுரோன் கொண்டிருப்பது 64 கிலோ பைட்டுக்கள் மட்டுமே! ஆனால் இரண்டிலுமே முதலாம் தர இடைமாற்று நினைவகம் (level 1 cache) 128 கிலோ பைட்டுகளுக்கு உண்டு! cache memory - இதுவும் ஒருவகை நினைவகமே இதுவே எல்லாவற்றிலும் அதி வேகமானது ஏனெனில் இது நுண்செயலியினுள்ளே பொருத்தப்பட்டிருக்கும். இங்கே முதல்தர இடைமாற்று நினைவகம் அடிக்கடி நுண்செயலியினால் பாவிக்கப்படும் தரவுகளைக்கொண்டிருக்கும் (அதாவது இது இல்லாவிடில் தரவுகளை அவை சேமிக்கப்பட்டிருக்கும் முதன்மை நினைவகத்திற்கு சென்று எடுத்து வர வேண்டும் .....இவை நுண்செயலிக்கருகில் இருந்தால் அதற்கு எடுக்கும் நேரத்தை மிச்சப்படுத்தலாம்...இந்த நேரத்தில வேறு பல அறிவுறுத்தல்களைச் செய்யலாம் அல்லவா?) இரண்டாம் தர இடைமாற்று நினைவகம் நுண்செயலியினால் பாவிக்கப்படக்கூடும் என ஊகிக்கப்படும் தரவுகளை வைத்திருக்கும் இடம் ( நுண்செயலி ஒரு தரவை பாவிக்கும் முறைகளின் எண்ணிக்கையை வைத்து அது மீண்டும் பாவிக்கப்படலாம் என்ற ஊக அடிப்படையில் இங்கு சேமிக்கப்படும்) - vaiyapuri - 06-25-2003 கணணிப்பித்தன் தொடருங்கள்......! - Kanani - 06-25-2003 தாத்ஸ் உங்கள் அறிவுரையையும் இடைக்கிடை தாருங்கள் மீண்டும் நன்றி - Kanani - 06-25-2003 இன்ரெல்லின் தொழில்நுட்பம் அடுத்து பிரபலமான நுண்செயலிகள் இன்ரெல்லின் பென்ரியமும், செலரேனும். புதிய பென்ரியம் நுண்செயலியும், புதிய செலரோன் நுண்செயலியும் தொழிற்பாட்டு அடிப்படையில் பெரிதாக வித்தியாசம் காட்டா. இங்கும் வித்தியாசப் படுத்துவது முன்னர் குறிப்பிட்டவாறு இரண்டாம்தர இடைமாற்று நினைவகமே! செலரோனில் 128 கிலோ பைட்டுக்களாளவும் பென்ரியத்தில் 512 கிலோ பைட்டுக்களாளவும் உள்ளன. அத்துடன் இவ்நுண்செயலிகளால் செயற்படுத்தக்கூடிய பாட்டை வேகமும் மாறுபடுகிறது. பென்ரியம் நுண்செயலியானது செலரோனைவிட வேகமான பாட்டை வேகத்தைக் காட்டுகிறது. பாட்டை - Bus பாட்டை என்பது பாதை போன்ற ஒரு அமைப்பு. அதாவது தாய்ப்பலகையில் இணைக்கப்படும் பாகங்கள் தங்களுக்கிடையும் நுண்செயலியுடனும் தொடர்புகொள்ள (தரவுகளை அனுப்ப பெற ) உபயோகிக்கும் இணைப்புகள் (அதுதான் நாம் இன்னொருவர் வீட்டுக்குச் செல்லப் பாவிக்கும் வீதிகள் மாதிரி) இந்தப் நுண்செயலிப் பாட்டைகள் இரண்டுவகையுண்டு முன்பக்க பாட்டை (frontside bus) மற்றயது பின்பக்க பாட்டை (backside bus). இதில் பின்பக்க பாட்டை நுண்செயலி இரண்டாம்தர இடைமாற்று நினைவகத்துடன் (L2 cache) வேகமாகத் தொடர்பு கொள்ளப் பயன்படும்(அதுதான் ஊரில் எங்கள் வீட்டுக்கும் அக்கம் பக்க வீடுகளுக்கும் இருக்கும் வேலியிடைப் பாதை மாதிரி :wink: ). முன்பக்க பாட்டை நுண்செயலியானது, முதன்மை நினைவகம்(Main memory-RAM) உடன் தெடர்புகொள்ளவும் அத்துடன் பிரதான பகிர் பாட்டையுடன் தொர்புகொள்ளவும் பயன்படும். பகிர் பாட்டை என்பது ஒலி அட்டை (Sound card), ஒளித்தோற்ற அட்டை( Video Card), வன்வட்டு, மற்றும் மட்டிசை மட்டறுப்பான் (Modem) போன்றவற்றுடன் தொடர்புகொள்ள பயன்படும் இணைப்பு.(அதுதான் பிரதான வீதி மாதிரி கடைகள் அலுவலகங்களுக்கு அப்பிடித்தானே போறது) அடுத்தது சைரிக்ஸ் நுண்செயலிகள் இவை பொதுவாக மிவும் மலிவான நுண்செயலிகள். இதுவும் இப்பொழுது புதிய தொழில்நுட்பங்களுக்கேற்ப புதிய பரிமாணங்களுடன் வெளிவருகிறது ஆனால் இன்று நுண்செயலிகளின் விலை முன்னய காலங்களுடன் ஒப்பிடும்பொழுது வெகுவாகக் குறைந்து விட்டன. ஆகவே பெரும்பாலானோர் இன்ரெல்லின் அல்லது ஏஎம்டியின் நுண்செயலிகளையே விரும்புகின்றனர். - sOliyAn - 06-25-2003 athlon, duron, pentium, செலரேன்.. உதாரணமாக வீட்டு பாவனையில் எழுத, விளையாட, வீடியோ உபகரணங்கள் யாவற்றையும் ஒரே கணணியில் பாவிப்பதாயின் எந்த செயலி சிறந்தது.. மற்றும் SDR.. DDR இரண்டுக்கும் என்னையா வித்தியாசம்.. :roll: - Kanani - 06-26-2003 நீங்கள் கூறிய நான்குமே பாவிக்கலாம் கணணி விளையாட்டுக்களும் வீடியோ உபகரணங்களும் பாவிக்கப்போகிறீர்கள் என்று பார்த்தால் உயர் திறனைப் பெறுவதற்கு அத்லோன் அல்லது பென்ரியம் நல்லது தாத்ஸ் உங்கள் அனுபவத்தில் என்ன சொல்லுறியள் ? SDR மற்றும் DDR பற்றி முதன்மை நினைவகம் பற்றிச் சொல்லும்போது சொல்லுறன்.....அதையே அடுத்ததாகச் சொல்லுறன். - GMathivathanan - 06-26-2003 <!--QuoteBegin-கணணிப்பித்தன்/Kanani+-->QUOTE(கணணிப்பித்தன்/Kanani)<!--QuoteEBegin-->நீங்கள் கூறிய நான்குமே பாவிக்கலாம் கணணி விளையாட்டுக்களும் வீடியோ உபகரணங்களும் பாவிக்கப்போகிறீர்கள் என்று பார்த்தால் உயர் திறனைப் பெறுவதற்கு அத்லோன் அல்லது பென்ரியம் நல்லது தாத்ஸ் உங்கள் அனுபவத்தில் என்ன சொல்லுறியள் ? SDR மற்றும் DDR பற்றி முதன்மை நினைவகம் பற்றிச் சொல்லும்போது சொல்லுறன்.....அதையே அடுத்ததாகச் சொல்லுறன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நான் ஏதோ கேம் விளையாடிக்கொண்டும்.. படம் பார்த்துக்கொண்டும்.. திரயிறமாதிரி.. என்னைக் கேக்கிறியள்.. ஏதொ வலையத்திலை படிச்ச அளவிலை Hi Graphics இரண்டுக்கும் தேவை.. அதைவிட அதைக் கையாளக்கூடிய Motherboard.. Processor.. RAM.. தேவை..இப்ப 266 ..333.. 400.. 533 speed உள்ள Moyherboard.. DDRAM இருக்கு.. 266 இலை SDRAM மிருக்கு.. புதுக் கணணியளுக்கு இப்ப 533Mhz வரை Speed உள்ள DDR இருக்கு.. மதபோட் அந்த speed எடுக்குமோ எண்டு check பண்ணி DDR SDR வேண்டலாம்.. DDR SDR . மாற்றிப்போடமுடியாது.. ஆகையால் பார்த்து எதற்கு எது தேவையோ அதை வேண்ணவேண்டும்..மதபோட்.. FSB எவ்வளவோ அவ்வளவு speed RAM இருந்தால்.. தகவல் மாற்றும்போது Delay இருக்காது.. அதாலை Speed கூடும்.. மற்றது.. SDRAM . 266 Motherboard . அதெ FSB . உள்ள Processor RAM பாவித்தாலே.. நன்றாக வேலைசெய்யும்.. மேலும் Graphics.. AGP8 வரை தற்போது வந்துள்ளது.. அத்துடன் கூடிய Motherboard மிகவும் நல்லது.. 66 * 8 = 533 என்பபுதான் கணக்கு.. இவைபற்றி தேடி அறியலாம்.. Harddisk . அதிகம் எவ்வளவு வைத்திருக்கமுடியுமொ அவ்வளவுக்கு நல்லது.. 20 % பாவனையும் 80 %.மிகுதியாக C Drive இருந்தால்.. Speed பாதிப்பு இருக்காது.. Music & Video வுக்கு பிறம்பான ஒரு Harddisk பாவிப்பது சிறந்தது.. மிகுதி நாளை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sOliyAn - 06-26-2003 நன்றி தாத்ஸ்.. தொடருங்கள். - vaiyapuri - 06-27-2003 தாத்தா வெளுத்துக்கட்டறார் ! தொடருங்கோ தொடருங்கோ. - GMathivathanan - 06-28-2003 கணணிப்பித்தன்/Kanani Wrote:SDR மற்றும் DDR பற்றி முதன்மை நினைவகம் பற்றிச் சொல்லும்போது சொல்லுறன்.....அதையே அடுத்ததாகச் சொல்லுறன்.SRAM.. DRAM.. SIP.. SIMM.. DIMM.. மெண்டு.. எங்கையப்பா கானேல்லை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> சரி நீங்கள்.. சொல்லுறநேரம் சொல்லுங்கோ.. நான் வசுவிலை ஏறிப் போறதுபற்றிக் கதைக்கிறன்..உந்த வசுக்களிலையும் பலவகையிருக்கு.. ISA..EISA.. ISAPCI.. PCI.. MVP.. AGP.. ATA.. ATA33.. 66.. UDMA.. 66/100/133இப்பிடிப் பலதும்..இருக்கு.. அதிலை வேகம் கூடினது.. AGP.. 8MHz.. 16MHz.. 16/33MHz.. 33MHz.. 50MHz.. 66MHz.. இப்பிடிப் பலதும்.. பழசெல்லாம்.. வயது போக லொட லெட.. பஸ்சாப்போச்சுது.. இருந்தாலும் இப்பவும்.. உந்த ISA..பஸ் 16.. MHz இலை.. ஓடுது.. சத்தம் போட்டுக்கொண்ட ஓடுறதுக்கு.. ஒரு பஸ்.. எண்டாலும் தேவைதானே.. எண்டு (Sound Bus).. இப்பவும்.. வச்சிருக்கிறாங்கள்.. சிலபேர்.. Posh.. சாப் போய்.. இறங்கிறதுக்கு.. PCI.. பஸ்சும்.. எடுக்கினை.. ஆனால்.. அது.. தேவையில்லை.. அடுத்த பஸ்.. என்ன கொண்டுவாறாங்களோ.. தெரியேல்லை.. இப்ப.. எல்லா பஸ்களையும்.. பெருக்கிப் பெருக்கித்தான்.. பாவிக்கிறானுகள்.. சிலவேளை.. புதுசு செய்யாமல்.. பழைய பஸ்களையே.. பெருக்கிப் பாவிச்சாலும்.. ஆச்சரியப்படுறதுக்கில்லை.. உந்த.. 66/100/133/266/333/400/533.. எல்லாமே.. பெருக்கல் விளையாட்டுத்தான்.. ஏன் உந்த.. 3/4 Gig.. எண்டு போகுதே.. அதுகளும்.. பெருக்கலும்.. பிரித்தரும்தான்.. உதென்ன இடையிலை பிரித்தலைச் செருவிறார்.. தாத்தா.. எண்டு நினைக்காதீங்கோ.. சிலது பிரிக்கத்தான்வேணும்.. அந்தப் பழைய லொட லெட பஸ்; அதுதான்.. அந்தச் சத்தம் போட்டுக்கொண்டோடுற.. ISA.. ISAPCI.. பஸ்; அதுக்குப் பிரிச்சாத்தான் அது ஓடும்.. அதாலைதான் அதுக்குப் பிரிக்கிறது.. விளங்கிச்சுதோ..சரி மிச்சம்.. கணணி.. எழுதினாப்பிறகு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- GMathivathanan - 06-28-2003 ஒண்டைச் சொல்ல மறந்துபோனன்.. உந்தக்.. குளொக்.. (clock)..எண்ட.. எஞ்சின்.. சரியில்லாட்டில்.. எல்லம்.. அவுட்.. எப்பிடித்தான் தள்ளினாலும்.. ஸ்ராட் ஆகாது.. பெருக்கிறதும்.. பிரக்கிறதும் சரியாச் செய்தால்.. தெடர்பு வேகம்.. சரியாயிருந்தால்.. எல்லம்.. கொண்கோட்டிலை.. அனுப்பின மெயில் மாதிரி.. கெதியாப் பொய்ச் சேர்ந்திடும்.. அதுதான்.. இடைக்கிடை.. கொன்கோட்.. மாதிரி.. அக்சிடென்டிலையும்.. மாட்டுப்படச்.. சான்ஸ்; இருக்கு.. ஏனெண்டால்.. ஸ்பீட் கூடிப்போச்சு.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- ahimsan - 06-28-2003 தொடர்ந்து எழுதுங்கள் தாத்ஸ்,மற்றும் கணணிப்பித்தன்..! பயனுள்ள தகவல்கள். தாத்தாவின் நகைச்சுவைப்பாணியில் இன்னும் சுவாரஸ்யமாகவிருக்கின்றது. -வாழ்க வளர்க! - sethu - 06-28-2003 தாத்தாவின் கரத்துக்களுக்க நண்றிகள் - Kanani - 06-30-2003 நினைவகங்கள் நாம் பாவிக்கும் கணணிகளில் வன்வட்டு (Hard disk) முதன்மை நினைவகம் (Random Access Memory), இடைமாற்று நினைவகம் (Cache),படிப்பு நினைவகம் (Read Only Memory) போன்றன பொதுவாகக் காணப்படும். இதில் இடைமாற்று நினைவகம் பற்றி ஏற்கனவே கூறியுள்ளேன் ஆகவே இங்கு முதன்மை நினைவகத்திலிருந்து தொடர்வோம்........... கணணி பற்றி............. கணணிக்கு தெரிந்த இரு எழுத்துக்கள் 1 ம் 0 ம். 1 களையும் 0 களையும் வித்தியாசமாக ஒழுங்கு படுத்துவதன் மூலம் 0001, 0010, 0101, 1111.......என பல சேர்க்கைகள் மூலம் கணணியின் சொற்கள் அமைக்கப் படுகின்றன( எமது தமிழில் நாம் 247 எழுத்துக்களை இலக்கண விதிப்படி சேர்த்து வித்தியாசமான பொருள்தரும் பல சொற்களை உருவாக்குகிறோம் தானே...அது போல்தான் இதுவும் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ) மேலே குறிப்பிட்டுள்ளது 4பிட் கணணி....அதாவது இந்தக் கணணிக்கு 4 எழுத்துக்கள் மூலம் உருவாக்கப்பட்ட சொற்களே விளங்கும். இப்பொழுது 32 பிட் 64 பிட் கணணிகள் உண்டு...அதன் ஒரு சொல் இப்படி இருக்கும் 00110000001111110101001101000011 :? ஆகவே கணணியில் எல்லாம் இந்த 1ம் 0ம் தான்...கணணிக்குத் தெரிந்ததும் 1ம் 0ம் தான். நாம் கொடுக்கும் தரவுகள் கூட இப்படியான ஒரு கோலத்திலேயே சேமிக்கப்படும் - Kanani - 06-30-2003 முதன்மை நினைவகங்கள் (Random Access Memory or Main Memory) இதை எழுமாற்று நினைவகம் (Random Access Memory) எனக் குறிப்பிடக்காரணம் இங்கு சேமிக்கப்படும் தகவல்கள் தொடர்ச்சியாகவோ அல்லது ஒழுங்காகவோ சேமிக்கப்படுவதில்லை மாறாக ஒரு தரவு வாசிக்கப் படும்போதோ அல்லது சேமிக்கப் படும்போதோ எழுந்தமானமாக ஒரு குறிப்பிட்ட முகவரியில் சேமிக்கப்படும் அதேபோல் அந்த முகவரியை வைத்தே வாசிக்கப்படும். Static Random Access Memory (SRAM) இது Flip Flop களால் ஆன கலங்கள் பலவற்றைக்கொண்ட ஒரு அமைப்பு. Flip Flop என்பது மூவாயிகளின் மூலம் உருவாக்கப்பட்ட இலத்திரனியல் சுற்று. இது நாம் கொடுக்கும் மின்னழுத்தத்தை சேமித்து வைத்திருக்கும். மின்னழுத்தம் கொடுக்கப்பட்ட நிலையில் அதில் 1 ம், மின்னழுத்தம் பிரயோகிக்கப்படாத நிலையில் 0 ம் இருக்கும். இவ்வாறு தரவுகள் சேமிக்கப்படும். Cache எனப்படும் இடைமாற்று நினைவகங்கள் SRAM வகையைச் சார்ந்தன காரணம் SRAM தரவுப் பரிமாற்றத்திற்கு வேகமானது (DRAM இல் தரவுகளை அடிக்கடி மீளப்பதித்துக் கொள்ள நேரம் தேவைப்படும்...SRAM இல் அந்தத் தேவை இல்லை..நேரம் மிச்சம் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> ...DRAM பற்றி அடுத்த பந்தியில்...) Dynamic Random Access Memory (DRAM) இது மூவாயி மற்றும் கொள்ளளவியினாலான கலங்கள் பலவற்றைக் கொண்ட அமைப்பு. கொள்ளளவியானது நாம் கொடுக்கும் மின்னேற்றத்தை சேமித்து வைத்திருக்கும்...இருந்தாலும் அதனால் அந்த ஏற்றத்தை நீண்ட நேரம் சேமித்து வைக்க முடியாது....ஏற்றக் கசிவு மூலம் நேரத்துடன் ஏற்றத்தை இழந்துகொண்டிருக்கும். ஆகவே இதிலுள்ள ஏற்றத்தை மீண்டும் மீண்டும் நிரப்பிக்கொள்வது இன்றியமையாதது! ஆகவே இந்த வகை நினைவகத்தில் தரவுகளை அடிக்கடி மீளப்பதித்துக் கொள்ளவேண்டும்......இந்த தெழிற்பாட்டுக்கும் வேறு சில இயக்க நிலைத் தொழிற்பாடுகளுக்கும் மூவாயிகள் பயன்படுகின்றன. எமது கணணிகளுக்கு இந்த வகை(DRAM) முதன்மை நினைவகத்தையே பாவிக்கிறோம் ஏனெனில் இது SRAM ஐ விடக் குறைந்த செலவில் செய்யக்கூடியது, அத்துடன் சிறிய இடம் பிடிக்கும். DRAM ற்கு மீளப்பதித்தல் செய்முறை இல்லாவிட்டால் தரவுகள் அழிந்துபோகுமல்லவா...இதனால்தான் கணணியின் முதன்மை நினைவகத்தில் சேமிக்கப்படும் தகவல்கள் நாம் கணணியை நிறுத்தியவுடன் அழிந்து போகின்றன. ஆனால் எமது கணணிகளில் பாவிக்கப்படுவது SDRAM அல்லவா? Synchronous Dynamic Random Access Memory (SDRAM) இங்கு நான் முன் குறிப்பிட்ட எழுந்தமானமான நினைவகம் எனும் கொள்கை சிறிதளவு விலக்கப்பட்டு வேகமான தகவல் பரிமாற்றத்திற்காக தரவுகளில் பெரும்பாலானவை தொடர்ச்சியாக சேமிக்கப்படும். ஆகவே இதை புதிய பெயர்கொண்டு அழைக்கிறோம். DDR SDRAM Double data rate Synchronous Dynamic Random Access Memory இதுதான் இப்போதய புதிய தொழில்நுட்பம். இதுவும் SDRAM வகையே ஆனால் இங்கு தரவுகள் இரட்டை வேகத்தில் பரிமாறப்படும்...இது எவ்வாறு எய்தப்படுகிறது என விளக்க கணணியின் Clock ம் அதன் செயற்பாடுகள் பற்றிச் சொல்ல வேண்டும்...அவை சிறிது இலத்திரனியல் சிக்கலானவையாதலால் தவிர்ப்போம். |