| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 656 online users. » 0 Member(s) | 654 Guest(s) Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 2,994
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,021
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,487
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,246
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,517
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,689
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,245
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,847
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,927
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,174
|
|
|
| தமிழ்ச் சங்கம் |
|
Posted by: இளைஞன் - 06-20-2003, 08:40 PM - Forum: தமிழ் /தமிழர்
- Replies (18)
|
 |
வணக்கம் நண்பர்களே...
சங்கம் வளர்த்த தமிழ் என்று தமிழுக்குப் புகழ் உண்டு. அந்தவகையில் சங்கங்கள் பற்றிய விபரங்களை அறிய ஆசைப்படுகிறேன். முதற் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று கூறுகிறார்கள். இதற்கு அடுத்து எந்தச் சங்கங்களும் தோன்றவில்லையா? தமிழ்ச் சங்கம் என்றால் என்ன? அவற்றின் தொழிற்பாடுகள் யாவை? அறிந்தவர்கள் விளக்குவீர்களா?
சங்கங்கள் தவிர்ந்து, வேறு என்ன தமிழ் வரலாற்றில் உண்டு? அதாவது நான் கருதுவது: ஐந்திணைகள் என்கிறார்கள். அவை என்ன? முத்தமிழ் அறிவேன். அதுபோல வேறு என்னென்ன உண்டு? தயவு செய்து அறியத் தாருங்கள்.
ஆவலுடன் காத்திருக்கிறேன்...
|
|
|
| பொங்குதமிழ் |
|
Posted by: yarlmohan - 06-20-2003, 03:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (69)
|
 |
கடல் கடந்து வந்தும் உங்கள் நினைவுகளோடு வாழும் எம் இனிய புலம் பெயர் மக்களின் சார்பாக இந் த வாழ்த்துரையை அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். பல்லாயிரம் ஆண்டு காலமாய் அடிமைப்பட்டுக்கிடந்த எம் இனம் இன்று சுதந்திரத்தேவியின் வருகைக்காய் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கின்றது.
இவ்வுலகவே எம் இனத்தின் துன்பங்களைவேடிக்கை பார்த்தப்போது அவர்களின் துன்பங்களையும் அவர்களின் அபிலாசைகளையும் எதிரியின் முற்றுகைகுள்ளேயிருந்தும் வெளி உலகிற்கு தெரியப்படுத்தியவர்கள் நீங்கள். இந்தப் பொங்கு தமிழ் நிகழ்வில் நாமும் பங்கேற்க முடியவில்லை என்கின்ற கவலை எமக்கிருந்தாலும், எம் உணர்வும் எம் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக்கொள்கின்றோம்.
எம் இனத்தின் அடையாளத்தையும், எம் மக்களின் பிரதிநிதிகளையும் எம் தேசத்தின் தலைமையையும் இந்த உலகவே திரண்டு நின்று புறக்கணித்தாலும், மாணவ சக்தியான நீங்களும் புலம் பெயர்ந்த நாங்களும் அவர்களுக்காக இருக்கும் வரை எம் இனத்தை யாராலும் அசைக்கமுடியாது என்பதனை இதன் மூலம் உறுதிப்படுத்துகிறோம் . தடைகள்
பல வந்தாலும் உங்கள் பொங்கு தமிழ் இனிதே நடக்கட்டும் அதனை இந்த உலகமே
மீண்டும் ஒருமுறை தன் கண்ணைத் திறந்து பார்க்கட்டும்.
நாம் இங்கே தேசிய நிரோட்டத்தில் கலந்து விட்டோம் என்று நீங்கள் கவலைகொள்ளதேவையில்லை. ஒரு தாயின் பாலைக்குடித்து வளந்தவர்கள் எல்லோரும்
தேசத்தின் மேல் அளவு கடந்து அன்பு வைத்திருக்கின்றார்கள். எங்களின் ஆதரவு
இருக்கும்வரை, யாரும் விலை பேசிட முடியாத தலைமை இருக்கும் வரை, எதையும்
துணிந்து நின்று முன்னே செல்லும் நீங்கள் இருக்கும் வரை யாரும் எம்மை இனிமேலும்
அடக்கிடமுடியாது. இந்தப் பொங்கு தமிழ் ஒழுங்கே அமைந்து பின் அதுவே உலகநாடுகளில்
பரவி எம் இனத்தின் அபிலாசைகளை கட்டியம் கூறிட வாழ்த்துகிறோம்
கனடா தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் பட்டதாரிகள் - தமிழர் தேசிய அமைப்பு - கனடா
Tamil University Graduates and Students coordinating committee-
Tamils Nationalist Association - Canada
தொடர்புகளுக்கு: கனடா 905-201-4964
|
|
|
| போராளிகள் படைப்பு |
|
Posted by: sethu - 06-20-2003, 02:55 PM - Forum: தமிழீழம்
- Replies (212)
|
 |
போராளிகள் படைப்பு
அனலின் தகிப்பு
கடுங்கோடை காலம்
உப்பு வெளிக்காற்று வந்து
மேனி உரசிச்செல்லும் நேரம்
கந்தை உடையுடன்
காவலரண் மேட்டினிலே
காலை, மாலையென கண்ணயர
நேரமின்றி - எம்
கடமைதனை உணர்ந்து நின்ற தருணத்தில்
என் பாசமிகு அம்மாவிற்கு
மடல் ஒன்று வரைகின்றேன்.
உடலில்லா பேனாவால்
உணவு வந்ததாளின்
ஒரு பகுதி வெற்றிடத்தில் - என்
உறவிற்கு எழுதும் முதற் கடிதம்
அது தான்.
'பகையுடன் விளையாடும்
உன் பிள்ளை நான் அம்மா' - என்று
பத்துவரி எழுதி முடித்திருப்பேன்.
திடுமென வேட்டொலிகள்
கேட்டதிசை பார்க்குமுன்னே
என்னோடு களமாடும்
இன்னுயிர்த்தோழன்
மடிந்து விட்டான்.
மீண்டும் காவலரண் சண்டை
தொடர்கிறது.
சற்றுச் சில நாளில் மீண்டும்
எழுதுகிறேன்!
வார்த்தைகளில் வருவது தான்
வரிவடிவமாகிறது - என்
தோழனின் நினைவும் கூட....
-நா. கானகன
|
|
|
| சங்கரியார் விலக்கல்...! |
|
Posted by: kuruvikal - 06-20-2003, 01:00 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (202)
|
 |
தமிழர் விடுதலைக் கூட்டணி எனப்படும் சிறிலங்காவின் தலை நகரில் தலைமையகத்தை கொண்டு தமிழ் மக்களூக்காக சேவை செய்வதாகக் கூறி இயங்கும் மிதவாத அரசியல் செய்வதாகக் கூறும் கட்சியின் தற்போதைய தலைவர் ஆனந்த சங்கரி எனப்படுவர் தமிழ் மக்களுக்காக சிறிலங்கா பாராளுமன்றத்தில் குரல் தர உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டங்களில் ஒழுங்கான முறையில் பிரசன்னமாவதை தவிர்த்து வந்ததன் காரணமாக அக் கூட்டமைப்பின் செயற்குழுவில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.இவருடைய இடத்திற்கு தனது சொந்த மண்ணிலேயே வாழ்ந்து காலத்துக்கு காலம் மக்களின் துயரங்களை உலகுக்கு கூறி வந்த அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் நியமிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட சிறிலங்காப் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்!
தகவல் தமிழ் நெற். தொடுப்பு.....
http://news.tamilnet.com/art.html?catid=13&artid=9252
|
|
|
| பூவிற்கும் பெண்ணிற்கும் காதல்!! |
|
Posted by: sOliyAn - 06-20-2003, 12:53 AM - Forum: கவிதை/பாடல்
- Replies (6)
|
 |
பூவிற்கும் பெண்ணிற்கும் காதல்
ஓரு பெண்ணைப்பார்த்து
பூ ஒன்று
கேட்கிறதாம்
பெண்ணே பூவிற்கும்
ஒரு பெண்ணின் மீது
காதல் என்றால் நீ நம்புவாயா -யார்
மீது காதல் உனக்கு
பெண்ணே பூவே
உன் மீது தான்...பெண்ணே நீயும்
ஒரு பூத்தானே
அதனால் உன்னை நான்
காதலிக்கவா - உடனே
பெண் சிரிக்கிறாள் - அதைப்பார்த்ததும்
பூமகன் நானுகிறான்........!
ஏன் நானுகிறாய் ?- உன்
பூ இதழ்களால் நீ
சிரிக்க வெள்ளி மகரந்த
மணிகள் என்னையே கூச
வைக்கிறது - அதனால்
என் வம்சத்தின் மீதே
ஏனக்கு வெறுப்பு - அதனால்த்தான்
உன்னை நான் காதலிக்கிறேன் பூவே......நானோ
பெண் நீயோ பூ
அதெப்படி உனக்கு என் மீது காதல்........?
பாவையே பூங்குவளையே
இன்னுமா உனக்கு புரியவில்லை....? நான்
முடியாது என்றால்
என்ன செய்வாய்.......? - பெண்ணே நீ
தான் தினமும்
என்னைக்கதலிக்கிறாயே .. பின்பு எப்படி
முடியாது என்பாய் - புூமகன்
தன்னுள் சிரித்தபடி
மடைப்பெண்ணே நான் என்ன செய்வது
ஓர் நாளில் நான் இறக்கத்தானே வேண்டும்
இதுவுமா உனக்குப்புரியவில்லை.......? - பூ
தன்னுள் சிரிக்க அவளோ இன்னொரு
ஆடவனுடன் செல்ல - போ போ
மீண்டும் நாளை என்னைத்தானே நீ
உன் கேசத்தில் அணிந்து கொள்ள வேண்டும்......!
இது தானடி
என் மீது நீ கொண்ட காதல் - உன்
மீது நான் கொண்ட காதல்......!
இன்னுமா உனக்குப்புரியவில்லை
மடைப்பெண்ணே......................!
ஜெ.பிறேம்குமார்
18.06.2003
(பழைய தளத்தில் புதிதாக முளைத்ததை.. பொறுக்கிக்கொண்டு வந்திருக்கிறேன்.)
|
|
|
|