Posts: 931
Threads: 100
Joined: Apr 2003
Reputation:
0
கடல் கடந்து வந்தும் உங்கள் நினைவுகளோடு வாழும் எம் இனிய புலம் பெயர் மக்களின் சார்பாக இந் த வாழ்த்துரையை அனுப்புவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். பல்லாயிரம் ஆண்டு காலமாய் அடிமைப்பட்டுக்கிடந்த எம் இனம் இன்று சுதந்திரத்தேவியின் வருகைக்காய் வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கின்றது.
இவ்வுலகவே எம் இனத்தின் துன்பங்களைவேடிக்கை பார்த்தப்போது அவர்களின் துன்பங்களையும் அவர்களின் அபிலாசைகளையும் எதிரியின் முற்றுகைகுள்ளேயிருந்தும் வெளி உலகிற்கு தெரியப்படுத்தியவர்கள் நீங்கள். இந்தப் பொங்கு தமிழ் நிகழ்வில் நாமும் பங்கேற்க முடியவில்லை என்கின்ற கவலை எமக்கிருந்தாலும், எம் உணர்வும் எம் ஆதரவும் உங்களுக்கு எப்போதும் உண்டு என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக்கொள்கின்றோம்.
எம் இனத்தின் அடையாளத்தையும், எம் மக்களின் பிரதிநிதிகளையும் எம் தேசத்தின் தலைமையையும் இந்த உலகவே திரண்டு நின்று புறக்கணித்தாலும், மாணவ சக்தியான நீங்களும் புலம் பெயர்ந்த நாங்களும் அவர்களுக்காக இருக்கும் வரை எம் இனத்தை யாராலும் அசைக்கமுடியாது என்பதனை இதன் மூலம் உறுதிப்படுத்துகிறோம் . தடைகள்
பல வந்தாலும் உங்கள் பொங்கு தமிழ் இனிதே நடக்கட்டும் அதனை இந்த உலகமே
மீண்டும் ஒருமுறை தன் கண்ணைத் திறந்து பார்க்கட்டும்.
நாம் இங்கே தேசிய நிரோட்டத்தில் கலந்து விட்டோம் என்று நீங்கள் கவலைகொள்ளதேவையில்லை. ஒரு தாயின் பாலைக்குடித்து வளந்தவர்கள் எல்லோரும்
தேசத்தின் மேல் அளவு கடந்து அன்பு வைத்திருக்கின்றார்கள். எங்களின் ஆதரவு
இருக்கும்வரை, யாரும் விலை பேசிட முடியாத தலைமை இருக்கும் வரை, எதையும்
துணிந்து நின்று முன்னே செல்லும் நீங்கள் இருக்கும் வரை யாரும் எம்மை இனிமேலும்
அடக்கிடமுடியாது. இந்தப் பொங்கு தமிழ் ஒழுங்கே அமைந்து பின் அதுவே உலகநாடுகளில்
பரவி எம் இனத்தின் அபிலாசைகளை கட்டியம் கூறிட வாழ்த்துகிறோம்
கனடா தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் பட்டதாரிகள் - தமிழர் தேசிய அமைப்பு - கனடா
Tamil University Graduates and Students coordinating committee-
Tamils Nationalist Association - Canada
தொடர்புகளுக்கு: கனடா 905-201-4964
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
எம் சார்பாக வாழ்த்துரை அனுப்பியதற்கு நன்றி மோகன் அவர்களே. இந்தப் பொங்குதமிழும் வெற்றி பெற்று தமிழரின் வாழ்வு மலர நாம் எல்லோரும் பிரார்த்திப்போம். நிச்சயமாய் வெல்லும். உண்மை தோற்றதாக சரி;த்திரமே இல்லை. தமி;ழ் தோற்காது. கழகச் சமூகம் செய்து காட்டும் வென்று காட்டும்.
தமிழா ஒன்றுபடு
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தமிழ்ச்சோலை வானொலி
கனடா.
ஆனி 24, 2003.
பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வு - 2003
'எங்கள் நிலம் எமக்கு வேண்டும். ஆகவே, நீங்கள் உங்கள் நிலத்திற்குச் செல்லுங்கள்" இதுவே யாழ் பல்கலைக்கழக சமூகத்தினால் முன்வைத்து நடத்தப்படும் பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வின் பிரதான கோரிக்கையாகும். மிகவும் எளிதான, நடைமுறைச் சாத்தியமான, எவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, அன்பான வேண்டுகோளே அது. ஒரு மனிதனின் வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாததாகக் கருதப்படுபவை ஊன், உறையுள், கல்வி, சுகாதாரம். இவை யாவும் கடந்த காலங்களில் எமது மக்களுக்கு மறுக்கப்பட்டு மிருகங்களுக்கும் கேவலமான முறையில் சந்திரிகா அரசாங்கத்தினால் அவலவாழ்க்கைக்கு உட்படுத்தப்பட்டார்கள் எம்மக்கள். பிரதமர் ரணில் அரசு பதவிக்கு வந்ததும் யுத்தம் ஓய்ந்திருப்பது ஏதோ உண்மையெனினும்; எம்மக்களின் அன்றாட வாழ்க்கைப் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை.
பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் விசாரணைக்குட்படுவதும் கடல் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் விசேட அனுமதி பெற்றே கடலுக்குச் செல்லவேண்டி இருப்பதுவும் இன்னும் யாழ்குடாவில் தொடரும அவலங்கள். ஆலயங்களில், பாடசாலைகளில், பட்டினி கிடந்து எம்மக்களால் கட்டப்பட்ட வீடுகளில் இப்போதும் இராணுவப்;படைகள் நிலைகொண்டிருக்கின்றார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இராணும் பொதுஇடங்களை விட்டு அகல வேண்டும் என்று கூறப்பட்டாலும் அவர்கள் அகன்றபாடில்லை. சுருக்கமாகக் கூறின் திறந்த வெளிச் சிறை ஒன்றிற்குள்ளேயே யாழ் குடாநாட்டு மக்கள் வாழ்ந்துவருகின்றார்கள்.
எனவே, இராணுவத்தின் இந்த அடாவடித்தனத்தைச் சர்வதேச சமூகத்திற்கு புடம் போட்டுக் காட்டவும், எமது மக்களின் ஒன்றுதிரண்ட சக்தியின் வெளிப்பாடாக ரணில் அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கவும் யாழ்பல்கலைக்கழக சமூகம் மற்றும் சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை மற்றும் அனைத்து மனிதநேய அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆனி மாதம் 27ந் திகதி யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட இருக்கும் பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வுக்கு, தாய் நிலத்;தை விட்டு அகன்றாலும் புலம் பெயர் நாட்டிலும் தாயக விடுதலையை யாசிக்கும் புலம் பெயர் தமிழ் உறவுகள் சார்பில் தமிழ்ச்சோலை வானொலி தனது முழு ஆதரவையும் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளை, இந்நிகழ்வின் இலட்சியம் வெற்றிபெற வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
அடங்கி இருந்தால் அழிந்து போவோம்.
பொங்கி எழுந்தால் அவர் அடங்கிப் போவார்.
பொங்கு தமிழும் பொங்கி எழட்டும்.
வெற்றி என்றும் எமதாகட்டும்.
தமிழுக்காய் தலைகொடுத்த தமிழ் மறவர் புகழ் பாடி தரணியெங்கும் தவழ்ந்து வரும் தமிழ்ச்சோலை வானொலி.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
<img src='http://www.tamilworldnews.com/nedu/Pongu.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
பொங்குதமிழ்| நிகழ்வின் மூலம் தமிழரின் ஒற்றுமையை உலகறியச் செய்யுங்கள்.
- இவ்வாறு பல்வேறு தரப்பினரும் அறை கூவல் விடுத்துள்ளனர்.
யாழ். ஆயர்யாழ். ஆயர் வணக்கத்துக்குரிய தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை விடுத்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-ஓர் இனத்தின் ஒற்றுமையிலேயே அதன் வளர்ச்சியும் விடுதலையும் தங்கியுள்ளது. பொங்குதமிழ் நிகழ்வின் மூலம் தமிழ்மக்கள் அனைவரும் தமது ஒற்றுமையையும் விடுதலை உணர்வையும் தெளிவாக வெளிக்கொணர வேண்டும். மிக நீண்டகால கடின முயற்சியின் பின்னர் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழியாகத் தொடங்கப்பட்ட பேச்சு மீளவும் தொடரவேண்டும். பொங்குதமிழின் ஒரே நோக்கம் மீளவும் பேச்சுக்களை ஆரம் பித்து சுதந்திர வாழ்வை என்றும் உறுதி செய்வதாக இருக்கவேண்டும் - என்றுள்ளது.
இந்துமத குருமார் ஒன்றியம்
சர்வதேச இந்துமத குருமார் ஒன்றியம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அதிகாரமுள்ள இடைக்கால நிர்வா கக் கட்டமைப்பொன்றை அரசு வழங்கு வதன் மூலம் இடைநிறுத்தப்பட்ட பேச்சு தொடர்ந்தும் இடம்பெற்றாலே நிரந்தர சமாதானம் என்ற தமிழ்மக்களின் கனவு நிஜமாகும். யாழ். பல்கலைக்கழக மைதானத்தில் நடை பெறவுள்ள பொங்குதமிழ் அஹிம்சைப் போரில் இன, மத பேதமின்றி சகல மக்களும் எமது உள்ள உணர்வு களை சர்வதேசமும் அறிந்துகொள் ளக்கூடியதாக அணிதிரள்வோம் - என்றுள்ளது.
எம்.கே.சிவாஜிலிங்கம் எம்.பி.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்திருப்பதா வது:-
ஒவ்வொரு தேசிய இனமும் தனக்கே உரிய பிறப்புரிமையான சுயநிர்ணய உரிமையை அதாவது தனது தலைவிதியைத் தானே தீர்மானிக் கின்ற உரிமையைக் கொண்டிருப்பது போல அந்த உரிமை தமிழ்த் தேசிய இனத்துக்கும் உண்டு என்பதை திட்ட வட்டமாக இந்தப் பொங்குதமிழ் நிகழ்வில் வெளிப்படுத்துவோம் என்றார் அவர்.
கூட்டுறவுச்சங்கங்களின் சமாசம்
யாழ்.மாவட்ட விவசாய நுகர்ச்சிக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் பொங்கி எழும் மூன்று லட்சம் தமிழர்களின் ஆறு லட்சம் கரங்கள் உயரும்போது எம்நெஞ்சை நிமிர்த்தி நிற்போம். கூட்டுறவாளர்களும் கூட்டுறவுப் பணியாளர்களும் எழுச்சி கொண்டு பொங்கு தமிழில் சங்கமித்து புதிய சரித்திரம் படைப்பதை உலகம் வியந்து பார்க்கட்டும் - என்றுள்ளது.
உயர்தொழில்நுட்பக்கல்வி நிறுவகம்
இலங்கை உயர்தொழில் நுட்பக் கல்வி நிறுவகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-எமது உரிமைகளை உலகுக்கு எடுத்துக்காட்ட எழுந்த பொங்கு தமிழ் நிகழ்வை சிங்கள இராணுவத்தைப் பயன்படுத்தி அரசு அடக்க முயன்றது. நிகழ்வுக்கு வந்த மக்களைத் திருப்பியனுப்ப முனைந்தது. அன்று அடக்குமுறையின் மத்தியில் பொங் கிய பொங்குதமிழ் இன்று மீண்டும் ஒருமுறை பொங்கவுள்ளது. இதில் அனைவரும் பங்கேற்பது அவசியம் என்றுள்ளது.
கனடா தமிழ் மாணவர் அமைப்பு
கனடாவில் செயற்படும் அனைத்துக் கல்லு}ரிகளின் தமிழ் மாணவர் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-நாம் பாரம்பரியமாக வாழ்ந்த மண்ணை ஆக்கிரமித்தது மட்டுமன்றி உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர் வையில் எமது மண்ணை நிரந்தரமாகத் தனது ஆதிக்கத்தில் வைத்தி ருக்க முனையும் ஆதிக்க சக்திகளை சர்வதேச சமூகத்துக்குத் தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தும் பொங்கு தமிழ் நிகழ்வை புலம்பெயர்ந்த தமிழ் மாணவர் சமூகமாகிய நாம் எந்த வொரு எதிர்க்கருத்துமின்றி ஆதரிக்கிறோம் - என்றுள்ளது.
மோட்டார் ஊர்திச் சேவைச்சங்கம்
வடபிராந்திய முச்சக்கர மோட்டார் ஊர்திச் சங்கம் தெரிவித்துள்ள தாவது:-இனப்பிரச்சினைக்கான தீர்வினை நாம் விரைந்து கண்டிடவும் உலக சமுதாயம் எமது உணர்வலையை உணர்ந்து கொள்ளவும் உந்து சக்தியாக உள்ள பொங்குதமிழ் நிகழ்வில் நாம் அனைவரும் உணர்வுபுூர்வ மாகக் கலந்துகொள்வோம் - என்றுள்ளது.
பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கம்
பனை தென்னை வள அபிவிருத் திக் கூட்டுறவுச் சங்கம் வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது:-
தமிழினத்தின் ஆதங்கத்தை வெளியுலகிற்கு உணர்த்த பொங்கு தமிழ் எனும் அஹிம்சைப் போரில் அனைவரும் பங்கேற்பது அவசியம். நிரந்தர சமாதானம் ஏற்படவேண்டு மென்பதே தமிழ்மக்களின் பெருவிருப் பாகும் - என்றுள்ளது.
சனசமூக நிலையங்களின் சமாசம் தென்மராட்சி சனசமூக நிலையங்களின் சமாசம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
வலிகாமத்தின் பணப்பயிர் உற்பத்தியையும், வடமராட்சியின் கடல் வளத்தையும், தென்மராட்சியின் நெற்களஞ்சியத்தையும் திட்டமிட்டு பறித்து, தமிழரை அகதிகளாக்கியுள்ளது இலங்கை அரசு. இந்நிலை இனியும் வேண்டாம். ஒன்றுபட்டு அணி திரண்டு எமது நிலத்தை மீட்போம்.
சிகை ஒப்பனையாளர் சங்கம்
யாழ்.மாவட்ட சிகை ஒப்பனையாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி ஒருவருடத்துக்கு மேலாகி விட்டது. வெளிநாடுகளில் மாறிமாறி இருதரப்புகளும் பேச்சுக்களை நடத்தின. ஆனால், பேச்சுகளில் புலிகள் வலியுறுத்திய இயல்பு வாழ்க்கை இன்னும் ஏற்படுத்தப்படவில்லை என்பதை பொங்குதமிழ் நிகழ்வில் ஒன்று திரண்டு வெளிக்காட்டுவோம் - என்றுள்ளது.
Posts: 10,547
Threads: 525
Joined: Apr 2003
Reputation:
0
அன்னை மண்ணே- எம்மை
தமிழனாய் பெற்றேடுத்தவள் நீயம்மா
கல்வியும் வீரமும் தந்து
பண்பாடு சொல்லி
மானத்தமிழ்னாய் வாழ வைத்தவள் நீயம்மா
முத்தமிழும் மூவேந்தரும்
கண்ட மொழி வேரூன்ற
களமாய் நின்றவள் நீயம்மா
அரசியல் சதுரங்கம் சூதாட்டமாக்கி
அன்னியர் வலையில் சிக்கி
உன் மானம் விற்றார் கோழைகள்
உன் மானமே பெரிதென்று
மேன்மையாம் தம் உயிர் தந்தார்
உன் வீரப் புதல்வர்கள்
அன்னை மண்ணின் மானத்திற்காய்
வாழும் உறவுகள்,
ஆனித்திங்கள் இருபத்து ஏழாம் நாள்
நடத்துமந்த பொங்கி நின்று
'சாத்வீகமும் ஆயுதமும் எமக்குப் புதிதல்ல
அன்னியனே ஒடு உன் வீடு நோக்கி' என
வீரமுழக்கம் இட்டு
அன்னை தன் அடிமை விலங்கொடிக்கும்
பொங்குதமிழ் நிகழ்வுக்காய்
நாமும் தோள்கொடுத்து
சர்வதேசமெங்கும் அவர்தம்
குரல் உரைத்தே ஒலிக்க
அன்னை விலங்கொடிய கைகோர்கின்றோம்!
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
பொங்குதமிழ் சிறப்புற எனது வாழ்த்துக்கள்.
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
பொங்கு தமிழே வீறுடன் பொங்கு
புது வசந்தம் வீசப் புயலெனவே பொங்கு
இனிவரும் காலம் எமதென்றெ பொங்கு
எமது நிலம் எமக்கு வேண்டும் எனறே அலையெனவே பொங்கு
அவல வாழ்வு போதும் இனி
அந்தரித்த நாட்கள் கனவாய் மாறி
ஈழத்துத் தமிழர் வாழ்வு மேவ
சுதந்திரமாய் வாழ வழிகாட்ட
பொங்கு தமிழழே உணர்வுடனே பொங்கு
தரணி வாழ் தமிழரேல்லாம் வாழ்த்துக் கூறி நிற்க
ஈழத்துத் தமிழரேல்லாம் தோள் கொடுத்தே தாங்கி நிற்க
இனிதாகப் பொங்கு இன்பத் தமிழே
எம் உள்ளத்து உணர்வுகளை
தரணியெங்கும் எடுத்தியம்ப ஆர்ப்பரித்தே பொங்கு
உலகோரே! உம்மத்தரே!!
இனியேனும் உம் விழி திறவீரோ!!!
எம் மண்ணின் அவலம் கண்டு
இனியேனும் வழி விடுவீரோ!!
ஆணவம் பிடித்தாடும்
வல்லரசுக்களின் உளக் கதவு
இனியேனும் எமக்காய் திறக்க
உரத்துப் பறையறைந்து கூறு தமிழே
சிங்களத்துச் சகோதரனனே இனியாயினும்
"உன் மண்ணில் நீயும் என் மண்ணில் நானும்"
நிம்மதியாய் வாழ
நீ உன் வீட்டிற்குச் செல்
நாம் எம் வீட்டிற்குச் செல்ல
விரைந்தே முடிவெடுவென
முரசறைந்தே கூறு தமிழே
இனியெம் மண் உம் புதைகுழியாய்
மாறாதிருக்க வழியிதுதானேன
உறுதியுடன் ஆர்ப்பரித்தே கூறு தமிழே!
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 26
Threads: 4
Joined: Jun 2003
Reputation:
0
பொங்கு தமிழ் பிரகடனம்.
புரிந்துணHவு ஒப்பந்தம் கைச்சாத்தாகி பதினாறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. காலம் கடந்து போய் உள்ளது. நமது இயல்பு வாழ்வு இழுத்தடிக்கப்பட்டு;, பேச்சுவாHத்தை இடைநி;ன்று போய் உள்ளது. யுத்த மேகம் எம்மில் திணிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலமையை நாங்கள் மாற்ற விரும்புகின்றோம். இந்த நோக்கத்தோடு குடாநாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் பொங்கு தமிழராய் கிளHந்து வந்து இங்கு அணிதிரண்டுள்ளோம். நாம் இந்த உலகிற்கு ஒரு செய்தியை பிரகடனம் செய்கின்றோம்.
இனியும் எம்மால் இழுபட முடியாது.
'எங்கள் வீடுகளுக்கு நாங்கள் போக வேண்டும்,
உங்கள் வீடுகளுக்கு நீங்கள் போங்கள்"
நமது இயல்பு வாழ்க்கையை நாம் கட்டியெழுப்ப வேண்டும் அதற்கு வசதியாக தமிழHகளின் ஏகப்பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளிடம் அதிகார பலம்பொருந்திய இடைக்கால அரசு ஒன்று கையளி;க்கப்படவேண்டும். அந்த இடைக்கால அரசை சHவதேச சமூகம் அங்கிகரிக்க வேண்டும்.
வடக்கும் கிழக்கும் தமிழHகளின் பாரம்பரிய தாயகம். தமிழர்களின் தாயகத்திலிருந்து சிறிலங்கா இராணுவம் வெளியேறி தமது சொந்த ஊர்களுக்குத் திரும்ப வேண்டும்.
இராணுவ ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கும் அச்சம் நிறைந்த இத்தகைய சூழலில் தமிழ் மக்கள் சமாதானம் பற்றிச் சிந்திக்க முடியாது.
தமிழ் மக்கள் அச்சமற்ற சூழலில் சமாதான நடைமுறையில் செயல் முனைப்புடன் பங்கு பற்றும் நிலைமை தோற்றுவிக்கப்பட வேண்டும்.
அத்தகைய ஓH சூழ்நிலையில் தமிழHகளின் அபிலாசைகளான:-
தத தனித் தேசிய இனம்.
· மரபு வழித்தாயகம்.
· சுயநிHணய உரிமை.
என்பவற்றின் அடிப்படையில் பேச்சு நடத்தப்பட்டு இனப்பிரச்சனைக்கு நீதியானதும், கௌரவமானதுமான ஓH தீHவு காணப்பட வேண்டும். அதனூடாகவே ஓH நிரந்தர சமாதானம் சாத்தியம் என்பதை நாம் பிரகடனம் செய்கிறோம்.
உயர்ந்தவHகள் நாமெல்லோரும்
உலகத்தாய் வயிற்று மைந்தH
நசிந்து இனிக்கிடக்க மாட்டோம்
நாமெல்லாம் நிமிHந்து நிற்போம்.
உங்கள் கருத்துக்களுக்கு: கநநனடியஉம@வயஅடையெயவாயஅ.உழஅ
Posts: 26
Threads: 4
Joined: Jun 2003
Reputation:
0
News & Events
Media Releases
Picture Galleries
Home
Pongu Thamil Uprising in Jaffna
The Tamil populace of the Jaffna peninsula rose today to express overwhelming Tamil opinion and emotion to the rest of the world in the form of Pongu Thamil uprising. Jaffna University precinct in particular and the whole town in general exhibited an outpouring of pride and resolute determination of the Tamil people which culminated in the declaration,"we want our land".
More than 200,000 people from all parts of the Jaffna peninsula gathered at the grounds of the Faculty of Medicine, Jaffna University earlier today (27/06/2003) to mark the Pongu Thamil event.
Masses of people carrying larger than life portraits of the LTTE leader, Mr. V. Pirapaharan, organized themselves in processions and arrived at the venue chanting the Pongu Thamil slogans. Floats decorated in red and yellow flags gave expressions to the feelings of a people subjected to untold oppression by the Sri Lanka security forces.
Jaffna University Student Council president chaired the formal part of the meeting, which commenced around 3 p.m. and read out the official declaration of the meeting. Numerous members from local and international media organizations attended the event.
--------------------------------------------------------------------------------
Translation of the declaration is reproduced below;
We are all gathered here from every corner of the Jaffna peninsula, with the purpose of expressing to the wider the world, our position at this juncture, where in spite of the passing of eighteen months since the 'Memorandum of Understanding (MoU) coming into effect, we have not seen a return of normalcy to our lives, peace talks have stalled and the threat of war is ever increasing.
Today, at this 'Pongu Thamil' celebrations, we the 'Rising Tamils' hereby declare;
We cannot tolerate this situation any longer. "We want to get back to our homes; hence, we ask you to go back to your homes".
North and East are the traditional homeland of the Tamils. Sri Lankan security forces should vacate our homeland and return to their homes. In an environment of military occupation of our homes and land, Tamil people cannot be expected to contemplate peace negotiations.
We want to return to our normal lives and re-build our communities. LTTE, our sole representatives, should be given control of an interim administration with adequate powers to ensure the restoration of our communities. Such an interim administration should be recognized by the international community.
A climate of peace and normalcy should be restored to the North and East so that our energy can be directed at participating in a peace initiative that recognizes the fundamental tenets of Tamil aspirations;
Tamils constitute a distinct nation
There exists a traditional Tamil homeland
Tamils have a right to self-determination.
We declare that this is the only way to achieve a lasting, peaceful solution to the ethnic problem.
pdf Version of Resolution ...
--------------------------------------------------------------------------------
27 June 2003
Home | News & Events | Media Releases | Picture Galleries
Copyright © 2003 Peace Secretariat - LTTE. All rights Reserved
More Pictures from the Pongu Thamil Event
--------------------------------------------------------------------------------
Jaffna - High Security Zones
High Security Zones Coloured Dark Green
Map of Jaffna / HSZ (800 x 600 - 51kb)
Map of Jaffna / HSZ (1024 x 768 - 85kb)
Map of Jaffna / HSZ (Full Size - 2Mb)
--------------------------------------------------------------------------------
Non implementation of
ceasefire agreement.
Many of the obligations of the Ceasefire Agreement between the Sri Lankan Government and the Liberation Tigers of Tamil Eelam signed on 23 February 2002, have not been implemented by the Sri Lankan Government.
The people had justifiable expectations that the current peace process will focus its attention to the urgent and immediate needs of the people of North East, particularly that of the thousands of people languishing in the welfare centers and refugees’ camps. Hence, a provision was included in the ceasefire agreement that in order to restore the normalcy the forces should vacate the houses of the Tamil people, schools, places of worship and public buildings.
Jaffna District
Vavuniya District
Mannar District
Posts: 26
Threads: 4
Joined: Jun 2003
Reputation:
0
பொங்கு தமிழில் வரலாறு காணாத சனத்திரள்
ஜ இலங்கையிலிருந்து சுரேஷ் ஸ ஜ வெள்ளிக்கிழமை, 27 யூன் 2003, 20:13 ஈழம் ஸ
இன்று யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் இடம்பெற்ற பொங்குதமிழ் 2003 நிகழ்வில் 75,000க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டுள்ளதாக தமிழ்நெற் இணையத்தளம் செய்தி தெரிவித்துள்ளது. 1987ம் ஆண்டு இடம்பெற்ற தேசியத் தலைவரின் சுதுமலைக்கூட்டத்தின் பிற்பாடு இவ்வாறானதொரு சனத்திரள் திரண்டுள்ளது இதுவே முதற்தடவையாகும்.
நாங்கள் எங்கள் வீடுகளிற்குத் திரும்ப, நீங்கள் உங்கள் வீடுகளிற்குச் செல்லுங்கள் என சிறீலங்காப் படைகளைக் கோரும் பாரிய பதாதைகளைத் தாங்கிய வண்ணமும், அதுசாHந்த கோசங்களை எழுப்பிய வண்ணமும் யாழ்குடாநாட்டின் சகல பகுதிகளிலிருந்தும் மக்கள் யாழ் பல்கலைக்கழக மைதானத்தை வந்தடைந்தனH. வுடமராட்சி, தென்மராட்சி, யாழ் நகH மற்றும் சுற்றுப்புறம், தீவகம் என நான்கு முனைகளாக பிற்பகல் 4.30 மணிக்கு யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் ஆரம்பமாகிய பொங்குதமிழ் நிகழ்விற்கான எழுச்சிச் சுடரை பல்கலைக்கழகத் துனைவேந்தH பேராசிரியH மோகனதாஸ் ஏற்றி வைக்க, தமிழீழத் தேசியக் கொடியை விடுதலைப்புலிகளின் மகளீH பிரிவின் பொறுப்பாளH ஏற்றி வைத்தாH. ஏராளமான பௌத்த பிக்குக்கள், பிக்குனிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில், சிறீலங்காவின் பிரதமH அலுவலகத்தின் சாHபிலும் இரு பிரதிநிதிகள் கலந்து கொண்டனH என்பது இங்கு குறிப்பிட்டத்தக்கது.
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
Posts: 182
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
வெற்றி வெற்றி வெற்றி வென்று வந்த தமிழன் இன்றும் வெற்றி கண்டான். விடுதலைக்கான விலை என்னவெனிலும் தர இன்னும் தமிழன் தயாராக இருக்கிறான் என்பதை உணர்த்தியுள்ளனர். பல்கலைக்கழக மானவ சமுகமே வெற்றி உங்களுக்கே உரித்தானது
சாவுக்கு பயந்தவர் யாம் அல்லர் பதியப்போன உலங்கு வானூர்தியே Nணுமென்றால் சுடு எதற்க்கும் தயார் நாம் என்று மாணவர்களின் பின்னே சென்ற எம்மினிய மக்களே ஓங்கி ஒலித்த உங்கள் குரலால் உலகுக்கு உணர்த்தியுள்ளது தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். சாவுக்கு மத்தியிலும் சா மிரட்டலுக்கு மத்தியிலும் தம் உயிரையும் மதிக்காது உறுதியுடன் பணியாற்றிய மாணவமணிகளுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள். புலத்தில்?ரந்தாலும் நிலம் வந்து வாழத்துடிக்கும் சு.மலரவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->  :twisted: :twisted: :evil: :evil:
. . . . .
Posts: 836
Threads: 1
Joined: Jun 2003
Reputation:
0
S.Malaravan Wrote:வெற்றி வெற்றி வெற்றி வென்று வந்த தமிழன் இன்றும் வெற்றி கண்டான். விடுதலைக்கான விலை என்னவெனிலும் தர இன்னும் தமிழன் தயாராக இருக்கிறான் என்பதை உணர்த்தியுள்ளனர். பல்கலைக்கழக மானவ சமுகமே வெற்றி உங்களுக்கே உரித்தானது
சாவுக்கு பயந்தவர் யாம் அல்லர் பதியப்போன உலங்கு வானூர்தியே Nணுமென்றால் சுடு எதற்க்கும் தயார் நாம் என்று மாணவர்களின் பின்னே சென்ற எம்மினிய மக்களே ஓங்கி ஒலித்த உங்கள் குரலால் உலகுக்கு உணர்த்தியுள்ளது தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம். சாவுக்கு மத்தியிலும் சா மிரட்டலுக்கு மத்தியிலும் தம் உயிரையும் மதிக்காது உறுதியுடன் பணியாற்றிய மாணவமணிகளுக்கு நன்றிகள் வாழ்த்துக்கள். புலத்தில்?ரந்தாலும் நிலம் வந்து வாழத்துடிக்கும் பிக்குமாரும் வந்திருக்கிறினம்.. அரசதரப்பும்.. பிரதிநிதிகளை.. அனுப்பியிருக்கு.. சந்திரிக்கா சரியில்லை.. ரணில்.. நல்லவர்.. எண்டு திரும்பவும்.. சொல்லியாச்சு.. இனியென்ன..? வெற்றிதானே..!!
<!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&  --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
பொங்கு தமிழ் புூரண வெற்றி. வல்லரசுகள் இனியாயினும் எம் மண்ணின் துயரறிந்து ஒதுங்கி நிற்றகட்டும். வாழ்த்துக்ள் பல்கலைக்கழக மாணவர் சமூதாயமே. நன்றி ஈழத்தமிழரே,நன்றி. ஆறு இலட்சம் கைகளின் கரவோலியும், முன்று இலட்சம் மக்களின் குரலோலியும்; ஆக்கிரமிப்பு இராணுவத்தையும், பேரினவாதிகளையும் தடடி எழுப்பியிருக்கும்.ஆட்டம் காணவைத்திருக்கும் ஈழத்து உறவுகளே இன்றைய ஒற்றுமையும் ஒன்றுகூடலும் இனி எப்போதும் தொடரட்டும். ஆக்கிரமிப்பு இராணுவத்தை யுத்தத்தினால் அல்ல எமது ஒற்றுமையினால் எம் மண்ணிலிருந்து அகல வைக்கலாம்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 510
Threads: 5
Joined: Jun 2003
Reputation:
0
ரணில் நல்லவராக இருக்கட்டும். பிக்குமாரை அனுப்பி எம்மை உலகை இனியும் ஏமாற்ற முடியாது. அப்படி ஏமாற்ற நினைத்தால் விரைவில் பிக்குமார் என்ன ரணில் கூட தமிழீழம் வர வீசா எடுக்கவேண்டிய நிலை வரும்.
ஒன்றுபடு தமிழா
அன்புடன்
சீலன்
seelan
Posts: 3,171
Threads: 77
Joined: Apr 2003
Reputation:
0
தரமான கருத்துகளை பரிமாறும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நண்றிகள்.
|