Yarl Forum
பூவிற்கும் பெண்ணிற்கும் காதல்!! - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: பூவிற்கும் பெண்ணிற்கும் காதல்!! (/showthread.php?tid=8359)



பூவிற்கும் பெண்ணிற்க - sOliyAn - 06-20-2003

பூவிற்கும் பெண்ணிற்கும் காதல்

ஓரு பெண்ணைப்பார்த்து
பூ ஒன்று
கேட்கிறதாம்
பெண்ணே பூவிற்கும்
ஒரு பெண்ணின் மீது
காதல் என்றால் நீ நம்புவாயா -யார்
மீது காதல் உனக்கு
பெண்ணே பூவே
உன் மீது தான்...பெண்ணே நீயும்
ஒரு பூத்தானே
அதனால் உன்னை நான்
காதலிக்கவா - உடனே
பெண் சிரிக்கிறாள் - அதைப்பார்த்ததும்
பூமகன் நானுகிறான்........!
ஏன் நானுகிறாய் ?- உன்
பூ இதழ்களால் நீ
சிரிக்க வெள்ளி மகரந்த
மணிகள் என்னையே கூச
வைக்கிறது - அதனால்
என் வம்சத்தின் மீதே
ஏனக்கு வெறுப்பு - அதனால்த்தான்
உன்னை நான் காதலிக்கிறேன் பூவே......நானோ
பெண் நீயோ பூ
அதெப்படி உனக்கு என் மீது காதல்........?
பாவையே பூங்குவளையே
இன்னுமா உனக்கு புரியவில்லை....? நான்
முடியாது என்றால்
என்ன செய்வாய்.......? - பெண்ணே நீ
தான் தினமும்
என்னைக்கதலிக்கிறாயே .. பின்பு எப்படி
முடியாது என்பாய் - புூமகன்
தன்னுள் சிரித்தபடி
மடைப்பெண்ணே நான் என்ன செய்வது
ஓர் நாளில் நான் இறக்கத்தானே வேண்டும்
இதுவுமா உனக்குப்புரியவில்லை.......? - பூ
தன்னுள் சிரிக்க அவளோ இன்னொரு
ஆடவனுடன் செல்ல - போ போ
மீண்டும் நாளை என்னைத்தானே நீ
உன் கேசத்தில் அணிந்து கொள்ள வேண்டும்......!
இது தானடி
என் மீது நீ கொண்ட காதல் - உன்
மீது நான் கொண்ட காதல்......!
இன்னுமா உனக்குப்புரியவில்லை
மடைப்பெண்ணே......................!

ஜெ.பிறேம்குமார்
18.06.2003

(பழைய தளத்தில் புதிதாக முளைத்ததை.. பொறுக்கிக்கொண்டு வந்திருக்கிறேன்.)


- kuruvikal - 06-20-2003

நல்ல கற்பனை
தந்ததொரு புது வடிவம்
பூவுமங்கு ஆணாகி
பூவிலும் ஆண்மை உண்டு- என்ற
உண்மை கண்டு
பூக்கள் என்று தம்மைப் புகழ
மகிழ்ந்திருந்தோர் தம்
போலி முகம் வெளிக்காட்டி
வந்ததந்தக் கவிதை!
வரைந்தவருக்கும்
வரைந்ததை சபையறிந்து தந்த
அண்ணனுக்கும் நன்றிகள்!


- vaiyapuri - 06-20-2003

திறமைகளை தேடியறிந்து அவற்றை வளர்ப்பதற்கு துணை நிற்போம்.

வாழத்துக்கள் பிறேம் குமார்.
நன்றிகள் சோழியான்.
you've proven that we learnt of books and men


- sethu - 06-20-2003

சோழியனின் கவிதை வரி அருமை


- sOliyAn - 06-20-2003

செய்தியாளரே! என்ன குசும்பா? நுனிப்புல் மேயாமல் முடிவுவரை வாசியுங்கள்.. :mrgreen:


- sethu - 06-20-2003

உண்மையை சுட்டிகாட்டுவத தவறா?


- vaiyapuri - 06-20-2003

உண்மையை எழுதுவதில் தப்பில்லையப்பு.முழுசா வாசிச்சியளோ ?