![]() |
|
தாயகத்து அரசியல் கட்டுரைகள் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தாயகத்து அரசியல் கட்டுரைகள் (/showthread.php?tid=8348) |
தாயகத்து அரசியல் கட்ட - sethu - 06-21-2003 தாயகத்து அரசியல் கட்டுரைகள் தவல் எரிமலைசிகரங்களைத் தொட்ட பின்னும் இன்னும் பெண்.... இரு மனங்கள் இணைந்து நடைபெறும் திருமணங்கள் மூலம் அமையப்பெறும் குடும்பங்கள் கணவன், மனைவி இருவராலுமே கொண்டு நடத்தப்பட வேண்டும். அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் அனைத்தும் புரிந்துணர்வின் அடிப்படையில் இருவராலும் மேற்கொள்ளப்படுவதாகவே அமைய வேண்டும். இருவரும் சமமே மதிக்கப்படவேண்டும். ஆணையே தலைவனாகக் கொண்டியங்கும் குடும்ப அமைப்பைக் கொண்டது எமது சமூகம். ஒரு வீட்டில் ஆணே சகலதையும் தீர்மானிப்பவனாகிறான். அவனே சகலதுமாகிறான். சிறு வயதிலிருந்து தனது தந்தையே உணவிலிருந்து எதையும் தீர்மானிப்பவனாக இருப்பதைப் பார்த்து வரும் ஒரு பெண், தன்னியல்பாகவே தீர்மானங்களுக்காக ஆணை எதிர்பார்க்கும் மனநிலைக்கு உள்ளாகிறாள். தந்தையும் பின்னர் தமையனும், பின்னர் கணவனும், பின்னர் தனயனும் கூட அவளுக்கான முடிவுகளை எடுக்க அப்பெண்ணும் அது தொடர்பான எவ வித மறுப்புணர்வுமின்றி அவர்களின் ஆளுகைக்குள் உட்படுகின்றாள். தாமே சிந்தித்து சுயமே முடிவெடுக்கும் ஒரு சில பெண்கள் கூட ஆண் தன்மை கொண்டவர்களாகவே வர்ணிக்கப்படுகின்றனர். ஒரு வீட்டில் ஆணின் ஆதிக்கம் உணவு விடயத்தில் ஆரம்பமாகிறது. "என்னப்பா சமையல் செய்யிறது?" எனும் மனைவியின் அங்கீகாரத்துடன் இது ஆரம்பமாகும். ஒரு சில குடும்பங்களில் பிள்ளைகளின் விருப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்தாலும் கணவனின் விருப்பு புூர்த்தி செய்யப்பட்ட நிலையில் அவை மேலதிகமாகவே அமையும். பிள்ளைகளில் கூட ஆண் பிள்ளைகளின் விருப்பிற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். வீட்டில் கணவனில்லாத சந்தர்ப்பங்களில் "அவரில்லைத்தானே இருக்கிறதைச் சாப்பிடுவோம்" என்ற முடிவு பெண்ணின் மனோபாவத்தைத் துல்லியமாகக் காட்டி நிற்கிறது. மதியம் ஒரு மணிக்கு அரிசியில் நெல் பொறுக்கிக் கொண்டிருந்த பெண்ணொருவரிடம் "என்னன்ரி இப்ப நெல்பொறுக்கி எப்ப சமைச்சுச் சாப்பாடு கொடுக்கப் போகிறீர்கள்" என்று கேட்ட போது "தம்பி இரண்டு மணிக்கு வந்திடுவான். அதுக்கிடையிலே நான் சமைச்சிடுவேன்" என்ற பதிலில் வீட்டிலிருந்த மகள் கருத்திலெடுக்கப்படவில்லை என்பது புரிந்தது. அந்தத் தம்பி எத்தனை வயதுடையவனாக இருந்தபோதும் அவனது பசியே கருத்தில் கொள்ளப்படுவது வேதனையான உண்மை. மாதம் மாதம் இயற்கையான குருதியிழப்பிற்குள்ளாகும் இளம் பெண் எதிர்காலத்தில் தாயாகவும் பொறுப்புக்களைச் சுமப்பதற்கும் பிள்ளைப்பேறு மூலம் ஏற்படும் குருதி இழப்பு, உடற்பல இழப்பு என்பவற்றை ஈடுசெய்யவும் அவள் சிறந்த உடல் நலம் உள்ளவளாகப் போசிக்கப்பட வேண்டும் என்பதைப் பெரும்பாலான தாய்மார் உணரத் தலைப்படவில்லை. தனது தாய், தனது தந்தையினதும், தமையனினதும், தம்பியினதும் உணவு தொடர்பான விருப்பு வெறுப்புகளுக்கு முன்னுரிமை கொடுப்பதையும் வீட்டிலுள்ள ஆண்களே முதலில் உண்ண வேண்டும் எனும் எழுதப்படாத சட்டம் ஒன்று பேணப்படுவதையும் சிறு வயதிலிருந்தே அறிந்து வரும் பெண் அவ வழியிலேயே தானும் செயற்படுவாள். கணவனே முதலில் உண்ண வேண்டும். அவனுக்கே சிறந்தது அனைத்தும் படைக்க வேண்டும் எனும் பெண்ணின் மனப்போக்கும், வீட்டில் என்ன இருக்கிறது இல்லை என அறியாமலேயே தான் உணவருந்திவிட்டுச் செல்லும் கணவனின் மனப்போக்கும் மாற்றப்பட வேண்டும். சேர்ந்திருந்து இருப்பதைப் பகிர்ந்துண்ணும் பழக்கம் பெரும்பாலான நமது குடும்பங்களில் இல்லாதிருப்பதும் இம்மனப்போக்கிற்கு ஒரு காரணமே. உடை என்பதும் பெரும்பாலான பெண்களின் மீது திணிக்கப்பட்ட ஆணின் தீர்மானமாகவே காணப்படுகிறது. தனது உடல்நிலை, மனநிலைக்கேற்ப தான் எவ வாறு உடையணிய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அவளுக்கு மறுக்கப்படுகிறது. பெரும்பாலும் கணவனும் சிலவேளைகளில் சகோதரர்களுமே அதைத் தீர்மானிப்பவர்களாக இருக்கிறார்கள். "அண்ணாவுக்குப் பிடிக்காது, அவருக்குப் பிடிக்காது" என்ற வாசகங்களின் பின் தமது ஆற்றாமையை மறைத்துக் கொண்டு உலாவருகிறார்கள் பல பெண்கள். அவ வாற்றாமை இயலாமையாக, பொறாமையாக, ஏக்கமாகப் பல பெண்களில் உருவெடுப்பதையும் அவதானிக்கலாம். "பொம்பிளை இப்படித்தான் இருக்க வேண்டும்" எனும் பண்பாட்டுக்கோலம் ஒன்றை வரைந்து உடும்புப்பபிடியாக பற்றிக் கொண்டிருக்கும் ஆணின் விருப்பிற்கேற்ப, தனது இயல்பு நிலைக்கு மாறாக, "இவருக்கு நான் இப்பிடி உடுப்புப் போடுவதுதான் விருப்பம். இவருக்கு நான் இப்படி பொட்டு வைக்கிறதுதான் விருப்பம்" என்று பெருமையாக வெளியில் கூறிக் கொள்ளும் பெண்களின் உள்மன ஏக்கங்கள் ஆழங்காணமுடியாதவை. தனது கணவனைத் திருப்திப்படுத்துவதற்கான இவ வியல்பான ஆர்வத்தை ஆண்கள் மேலும் துஸ்பிரயோகம் செய்து மேலும் தமது திணிப்பை மேற்கொள்கின்றனர். தான் ஆசைப்பட்டதை நிறைவேற்ற முடியாத பெண். தன் இயல்பு நிலைக்கேற்ப வாழமுற்படும் இன்னொரு பெண்ணை "பொம்பிளை இப்பிடித்தான் நடக்கிறது" என விமர்சிக்க முற்படுவது அவளின் ஆதங்கத்தின் இயலாமையின், ஏக்கத்தின் வெளிப்பாடு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். தனது உடல்நலக் குறைபாடுகளுக்கான சிகிச்சைக்குக் கூட ஒரு பெண் முடிவெடுக்கத் தயங்கி கணவனது அல்லது மகனது முடிவுக்காகக் காத்திருக்கும் சந்தர்ப்பங்கள் பல உண்டு. "கர்ப்பப்பை இறக்கம்" எனும் உடல்நலக்குறைபாட்டுடன் வந்த இருபெண்கள் கூறிய வார்த்தைகள் என்னை வேதனைப்பட வைத்தன. அப் பெண்கள் இருவருமே நடுத்தர வயதைத் தாண்டியவர்கள். இருவருமே இவ உடல்நலக் குறைபாட்டினால் பல உடல் உபாதைகளை அனுபவிப்பவர்கள். உடன் தீர்க்கப்படவேண்டிய அவ வுபாதைகளுக்காகவே மருத்துவரை நாடிவந்திருந்தார்கள். மேற்கொள்ளப்படக்கூடிய ஒரேயொரு இலகுவான சிகிச்சை முறையை வைத்தியர் கூறியபோது இருவரது தயக்கமும் பதிலும் திகைப்பையே அளித்தது. ஒரு பெண் "இவரைக் கேட்கவேணும். பேசுவாரா" என்றார். அடுத்த பெண் - "மகன் வவுனியா போட்டார். வந்த பிறகு கதைச்சிட்டுத்தான் சொல்லுவன்" என்றார். ஆணின் முடிவுகளுக்காகக் காத்திருப்பதில் ஏற்படும் விளைவுகள் உயர்த்தப்பட்டபோதும் கூட அவர்களின் தயக்கம் ஒன்றையே உணர்த்தியது. இதுவரை காலமும் தங்களுக்கான எந்த முடிவையும் தீர்மானித்து அப்பெண்களுக்குப் பழக்கமில்லையென்பதே. கணவன் மனைவி இருவராலுமே இணைந்து தீர்மானிக்கப்பட வேண்டிய குழந்தைப்பேறு கூட ஏதேச்சதிகாரமாய் ஆணாலேயே தீர்மானிக்கப்படுவதே உண்மை. பல உடல்நலக்குறைபாடுகள் உபாதைகளும், சிரமங்களுமாய் பத்துமாதம் சுமப்பவளும், வலி, வேதனை, கருதியிழப்பு எனப் பிரசவத்தில் நொந்து போபவளும், இரவிரவாய் கண்விழித்து குழந்தையை வளர்ப்பவளும் பெண்ணாய் இருக்க, பிள்ளைகளைத் தீர்மானிப்பது மட்டும் ஆணின் கையில் இருக்கிறது. இதயமும் நுரையீரலும் எப்படி அவளுக்காகச் செயற்படுகின்றனவோ, அதே போன்ற உறுப்பான கர்ப்பப்பைக்கு மட்டும் அவளுக்காகச் செயற்படும் உரிமையில்லை. அவளது கருவறையின் பொறுப்பாளனாகக் கணவனே உள்ளான். பல பிள்ளைகளைப் பெற்றுக் களைத்து, நிரந்தரமாக கருத்தடை செய்ய ஆர்வத்துடன் விபரம் கேட்கும் பெண், "அவருக்கு விருப்பமில்லை" என முகத்தை தொங்கப்போட்டவாறே கூறும் சம்பவங்கள் பல. அவருக்காவவே வாழ்ந்து வெளியிட முடியாப் பல ஏக்கங்களுடனேயே இறந்து போகும் பெண்கள் தங்களுக்காகவும் ச}றிது வாழ முற்பட்டால் என்ன? தனக்காகவும் உண்டு, தனக்காகவும் உயிர் வாழ்ந்து, தனக்காகவும் சிந்தித்து பெண் வாழப்போவது எப்போது? தந்தையும் கணவனும் தமையனும் தனையனும் தனக்காகச் சிந்திப்பதும் தன்னை கீழானவளாக மதிப்பதுமே இயல்பு என்ற நிலையில் வாழும் பெண்ணைத் தட்டியெழுப்பி "விழி! எழு! இதோ பார்! ஒரு ஆணைப்போன்றே நீயும் ஆறறிவு படைத்தவள், சிந்திக்கும் திறன்மிக்கவள், ஆணைவிடவும் பெண்ணே சிந்திக்கும், முடிவெடுக்கும் ஆற்றல்மிக்கவள்" என்று கூறி அவளை அவள் கூட்டிலிருந்து வெளிக்கொணர்தல் ஒரு தலையாய பணியே! கு.தீபா - sethu - 06-21-2003 அனுபவத்தின் உயிர் -து}யவன்- ஒன்றும் செய்யாமல் விடுவதிலும் ஏதாவது செய்வது நல்லது என்பதால் சிகிச்சையை ஆரம்பிக்க வேகமாகச் செயற்பட்டனர். தேவையான மாற்றுக் குருதி தயார் செய்து உபகரணங்களை ஒழுங்கு செய்து, மின் ஒளியைத்தயார் செய்து காயக்காரனை மேசையில் கிடத்தி சிகிச்சையை ஆரம்பிக்கையில் எல்லாமே பிந்திவிட்டது என்பது புரிந்தது. விழுப்புண்ணடைந்தவன் தனது இறுதி மூச்சுக்காக அவஸ்தைப்படத் தொடங்கிவிட்டான். மெல்ல மெல்ல ஆவி பிரிய அவன் துடிப்புக்கள் அடங்கிப் போகின்றன. வீரச்சாவு என்பது உறுதி செய்யப்படுகின்றது நீரைக் கிழித்து விரைகிறது நீருந்து விசைப்படகு. கடூர இருளும் கருங்கடலும் கைகோர்த்துள்ளன. விசைப் படகில் மோதும் பேரலைகள் உள்ளிருப்பவர்களைத் து}க்கியடிக்கின்றது. அப்படகில் '50 கலிபர்' துப்பாக்கியொன்று பொருத்தப்பட்டுள்ளது. அதனைத் தயார் நிலையில் வைத்தபடி வலத்திசையை உற்று நோக்குகின்றாள் ஒரு பெண் கடற்புலி. அவளின் கால்களுக்கு அருகில் வலது கால் முழுவதும் P.ழு.P கட்டுடன் கிடத்தப்பட்டுள்ள போராளியொருவன். அங்கு காணப்படும் போராளி மருத்துவனும் ஏனைய சகலரும் வலத்திசையாலே வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள். சுமார் ஒரு மைல் து}ரமளவில் நடைபெறும் கடற்சமர் இடையிடையே கடலில் தீப்பிளம்புகளைத் தோற்றுவிக்கின்றது. இருளைக் கிடையாகக் கிழிக்கும் ரவை மழையும், வானைப் பிரகாசமாக்கி நட்சத்திரங்களைக் கரைய வைக்கும் பரா வெளிச்சங்களும், படகில் இரைந்தபடியே கட்டளைகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கும் தொலைத் தொடர்புக்கருவியும், வலியில் முனகும் காயக்காரனும், கடல் நீரில் நனைந்து கடற்காற்றினால் சில்லிடும் உடல்களுமென கடற்சமர் சூடுபிடித்துள்ளது. இக் காயக்காரனை வன்னிப்பெருநிலம் கொண்டு செல்லவும். படைக்கல பரிமாற்றங்கள் செய்யவுமென, பாதுகாப்புக் கொடுத்து நிற்கும் கடற்புலி கலங்களிற்கும் கடற்படைக் கலங்களிற்கும் இடையேயான கடற்சமர் ஆரம்பித்துவிட்டது. இதோ! இவர்களின் கடல் வியுூகத்தைஉடைத்து, பகைக் கலமொன்று நெருப்புத் துண்டங்களை வேகமாக உமிழ்ந்து வரும் இராட்சத முதலையென, அலைகளில் பாய்ந்து பாய்ந்து பக்கவாட்டமாக இவர்களை நோக்கி வருகின்றது. தனது ஆளுகையில் இருக்கும் இயந்திரத் துப்பாக்கியை அவள் அதனை நோக்கித் திருப்புகின்றாள். இவர்களின் சூட்டு வலுவோ பலமடங்கு குறைவானது. எனினும், சில கணங்களில் நேரடி வலுச்சண்டையொன்று மூழப்போகின்றது. முண்ணாணைச் சில்லிட வைக்கும் அச்சிலகண இடைவெளியில், இவ விரு கலங்களிடையே சீறிப்பாய்ந்து வந த கடற்புலிச சமர்க்கலமொன்று பகைக் கலத்தைப் போரிற்கு இழுக்கின்றது. அது தன் திசை மாற்றிச் செல்கின்றது. ஒரு காயக்காரனைக் காப்பாற்றவென சிலர் வீரச்சாவடையும், பலர் காயமடையும் உடற்சமர் தொடர்கின்றது. அச் சூழலிலும் அம்மருத்துவனின் மனவோட்டம் சில நாட்கள் பின் நோக்கி கடக்கின்றது. 1999 யுூலை 31, அதிகாலை அந்தத் திருமலை காட்டு முகாமில் பரபரப்புக் குறைந்து காணப்படுகின்றது. பெரும்பாலானவர்கள் பதுங்கித் தாக்குதல் ஒன்றைச் செய்வதற்காக இரவோடிரவாக நகர்ந்து விட்டிருந்தனர். திட்டமிட்டபடி சூரியக்கத}ர்கள் தெறிக்கும் நேரம் வீதிச் சோதனைக்கு வரும் பகைவர் மீது உயிர் பறிக்கும் தாக்குதல் தொடங்கப்படும். இவர்கள் தரப்பில் எவ வித இழப்புக்களும் ஏற்படாத வண்ணமே திட்டமிடல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஏனெனில் அம்முகாமின் மூன்று திசைகளிலும், சில மைல் தொலைவில் தொடர் இராணுவ முகாம்கள் உள்ளன. நான்காம் திசையை கடல்வரையறுத்துள்ளது. இச்சூழ்நிலையில் காயமடைபவர்களைக் காப்பாற்றி பராமரித்து வன்னிக்கு அனுப்புவதென்பது கற்பனை கடந்த கடிதங்களை உள்ளடக்கியதாகும். வேகமான நகர்த்திறனைக் கொண்டிருப்பதுடன், தற்காலிகமாக தங்க இடங்களை அமைத்து தங்குவதே இவர்கள் வழமையாகும். எதிரிக்குத் தொல்லை கொடுக்கும் தாக்குதல்களை அடிக்கடி மேற்கொள்ள வேண்டும். இதனால் பகைவனுடைய படைபலம் இம்மாவட்டத்தில் முடக்கப்படும். வன்னியை ஊடறுக்க முனையும் 'ஜெயசிக்குறுப்' படையினருக்கு வலுவுூட்டும் படைகள் இங்கிருந்து செல்வது தவிர்க்கப்படும். மேலும் இத்தாக்குதல் நடக்கும் இடத்தில்தான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு போராளியை எதிரி கொன்று அவன் தலையை வெட்டிச் சென்றிருந்தான். அதற்கான பதிலடியாகவும் இது அமைய வேண்டும். திடீரென இவர்களின் தொலைத் தொடர்புக் கருவிகள் உயிர் பெறுகின்றன. சண்டையின் விபரத்தைக் களமுனைத் தளபதி அறிவிக்கின்றார். இரண்டு இராணுவத்தினர் கொல்லப்பட மற்றவர்கள் தப்பியோடிவிட்டார்கள் என இவர்கள் கைப்பற்றிய ஆயுதங்களுடன் எவ வித இழப்புக்களுமின்றி பின் வாங்குகின்றனர். களமருத்துவன் ஆசுவாசப் பெருமூச்சு விடுகின்றான். எதிரியின் இராணுவ மூளை இவர்கள் பின்வாங்கும் திசையைச் சரியாகக் கணித்திருக்க வேண்டும். பல முனைகளில் இருந்தும் ஒருங்கினைந்த எறிகணை வீச்சை செறிவாக மேற்கொள்கின்றான். முகாம் மீண்ட போராளிகள் கையசைப்பினு}டாகவும், புன்சிரிப்பினு}டாகவும் வெற்றியைப் பகிர்ந்தபடியே பதுங்கு குழிகளினுள் புகுந்து கொள்கிறார்கள். அப்பொழுது வந்து விழுந்து வெடித்த எறிகணையொன்று இருவரைக் காயப்படுத்தி விட்டது. கணமும் தாமதிக்காது அவர்களை காப்பரண்களினுள் இழுத்துச் சென்றவர்கள் இரத்தப் பொருக்கைக் கட்டுப்படுத்துகின்றனர். மேலதிக சிகிச்சையினை இப்பொழுது செய்யமுடியாது. எறிகணை வீச்சு சற்றேனும் ஓய வேண்டும். கால்மணி நேரத்தின் பின்னர் காயங்களைக் களமருத்துவன் கவனமாகப் பரிசோதிக்கிறான். உடனடியாக இருவருக்கும் பெரிய சத்திர சிகிச்சைகள் செய்ய வேண்டும். ஒருவனுக்கு வலதுகால் முழங்காலிற்கு கீழாகச் சிதைந்து விட்து. மற்றவனுக்கு முதுகினைத் துளையிட்டுச் சென்றுள்ள எறிகணைச் சிதறல் வயிற்றறை உள்ளுறுப்புகளைத் தாக்கிவிட்டது. தளபதிக்கு மருத்துவர் நிலைமையை விளக்குகின்றனர். அவர் அணிகளை மீள ஒழுங்கமைக்கின்றார். இரண்டாமவனின் வயிற்றறையினைத் திறந்துதான் மேலதிக சிகிச்சையினை மேற்கொள் வேண்டும். அதற்குத் தேவையான மருந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில், ஆதரவாளர் வீடொன்றின் குளிர்சாதனப் பெட்டியினுள் வைக்கப்பட்டுள்ளது. அதனை எடுத்த வருவதற்காக அணிகளை அனுப்ப வேண்டும். ஒரு பகல் நடந்து, இரவு இராணுவக் காவல் அரண்கள் கடந்து, ஊர்மனையினுள் புகுந்து, குறித்த மருந்தினை எடுத்து, மறுநாள் பகல் மீள வேண்டும். ஏதோவொரு வழியில் நிச்சயம் இராணுவத்தினரின் பதுங்கித் தாக்குதல்களை எதிர்பார்க்கலாம். அவ வாறு நடைபெறின் சிலர் இறக்கவோ, காயமடையவோ வேண்டி வரலாம். அவ வாறு நடந்தால்லு}லு}.. நினைக்கவே பயமாக இருக்கிறது. காயமடைதல் மருத்துவத் தேவைக்காகச் செல்லுதல், மீண்டும் காயமடைதல், மருத்துத்தேவைக்காகச் செல்லுதல், மீண்டும் காயமடைதல், மீண்டும்லு}லு}லு}லு} எனவொரு நச்சுவட்டமே தொடர் கதையாகிவிடும். எனினும் ஆள் எண்ணிக்கை மீதான இலாப நட்டக் கணக்கைவிட போராளிகளின் உளவியல் பலம் பேணப்பட வேண்டும். ஆதலால் துணைத்தளபதி தலைமையில் அணிகள் புறப்பட்டுவிட்டன. இங்கு போராளி மருத்துவன் உதவியாளர்களுடன் தனது மணியை வேகப்படுத்துகின்றான். காட்டு மரம் ஒன்றின் கீழ் காட்டு மரங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட மாதிரிக் கட்டில் ஒன்றில் கால்க் காயக்காரனுக்கு சிகிச்சையை ஆரம்பிக்கின்றான். எவ வித அடிப்படை உயிர்காப்பு வசதியும் இல்லாமல் மயக்க மருந்து கொடுத்து சத்திர சிகிச்சை செய்யப்படுகின்றது. சாதாரண சூழலில் இவ வாறு செய்வது மருத்துவ விதிகளுக்கு முற்றிலும் முரணானது. ஆனால் அதுவே இங்கே விதியானது. சிகிச்சை நடைபெற்றுக்க கொண்டிருக்கும் போதே தேவையான மருந்துகள் பல்வேறு பகுதிகளில் உருமறைந்திருந்த மரப் பரண்களில் இருந்து எடுத்துவரப் படுகின்றன. போராளியொருவனில் இருந்து பெறப்பட்ட இரத்தமானது நேரடிப் பரிசோதனை மூலம் ணருங்கொட்டாமை உறுதி செய்யப்பட்டு இவனுக்கு ஏற்றப்படுகின்றது. புதிய சூழல் என்பதால் நுண்ணுயிர் கொல்லி மருந்துகளுக்கு தாக்குப்பிடிக்க வல்லமை பெற்ற கிருமிகளின் தொற்று தவிர்க்கப்படும். இது சாதகமான ஒன்று. வெட்டித் திறக்கப்பட்ட கால்க் காயத்திலிருந்து இரத்தப் பெருக்கை ஏற்படுத்தும் நாடி நாளங்கள் பிடித்துக்கட்டப்படுகின்றன. சிதைந்த தசை நார்கள் வெட்டி அகற்றப்படுகின்றது. என்பு சீராக்கப்பட்டு P.ழு.P போடப்பட்டு சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு செய்யப்படுகின்றது. மறுபகுதியில் ஒரு தற்காலிகமாக சத்திர சிகிச்சைக்கூடம் 'பிளாஸ்டிக் ரெண்டினால்' அமைக்கப்படுகின்றது. அவ வேலை முடிவடைய சில மணித்தியாலங்கள் தேவைப்படும். சிறு மின் பிறப்பாக்கி மூலம் மின்சாரம் வழங்கப்படுகின்றது. தளபதி உட்பட அனைவரும் பம்பரமாகச் செயற்படுகின்றனர். இதனுள்தான் வயிற்றறையைத் திறக்கும் சிகிச்சையைச் செய்யலாம். வயிற்றறைக் காயத்திற்குட்பட்டவனின் நிலையோ மோசமடைந்து கொண்டு செல்கின்றது. நிமிடங்கள் ஒவ வொன்றும் நாட்களாகக் கழிகின்றது. "டொக்டர் நான் தப்புவனா" ஏன் எனக்கு இன்னும் ஒப்பிரேசன் செய்வில்லை?? போன்ற அவனின் கேள்விகள் இவனைக் குடைந்து எடுக்கின்றது. மருத்துவனோ அவன் தலையைத் தடவிய வண்ணம் "இன்னும் கொஞ்ச நேரத்தில தொடங்கிடுவம். மருந்துக்குப் போனவையள் வந்து கொண்டிருக்கினம்" எனத் தன்னாலான பொய்களைச் சொல்கின்றான். அவனுக்கு வாயினால் எதுவும் அருந்தக் கொடுக்கவில்லை. திரவ ஊடகத்தின் மூலம் உடலின் அனுசேபத் தேவையானது புூர்த்தி செய்யப்படுகின்றது. நாடித்துடிப்பு வீதம், குருதியமுக்கம், உடல் வெப்பநிலை என்பன அளக்கப்பட்டு அட்டவணைப் படுத்தப்படுகின்றது. மருத்துவரோ காயக்காரனுக்கும் அருகிலேயே அமர்ந்திருக்கிறார். சென்றவர்கள் ஊரினுள் நுழையும் நேரம் நெருங்கிவிட்டது. நேரம் மென்னிருள் கடந்து ஆழமான பகுதிக்குள் செல்கின்றது. திடீரென சத்தங்களுடன் தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. ஒருவரினது முகத்திலும் ஈயாடவில்லை. அவர்களுக்கு அடி விழுந்துவிட்டது. இவர்கள் கலைந்து சென்றிருப்பார்கள். சிலர் எதிர்பாராத நிகழ்வுகளே வழமையாகி விட்ட வாழ்க்கைக்குப் பழகியவர்கள். ஆழ்ந்த யோசனையுடன் காத்திருக்கின்றனர். நள்ளிரவு தாண்டிவிட்டது மீண்டும் தொடர்பு சாதனத்தில் தொடர்பெடுத்த உபதளபதி நிலமையை அறிவிக்கின்றார். தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தாங்கள் காயமோ உயிரிழப்போ இன்றித் தப்பிவிட்டதாகவும், எதிரி உசார் அடைந்துவிட்டதால் தாங்கள் மீண்டும் மீண்டும் முயற்சித்தும் முடியவில்லை எனவும், மறுநாள் இரவு மீண்டும் முயற்சிப்பதாகவும் கூறுகின்றார். தளபதி மருத்துவரிடம் என்ன சொல்வது எனக் கேட்கிறார். நிலைமை கையை மீறிவிட்டது. ஏற்கனவே தாமதமாகிவிட்டது. இன்னுமொரு நாள் அவனால் தாக்குப் பிடிக்க முடியாது. இதனை அவனுக்கு தெரிவிக்கவும் இயலாது சாதாரண மயக்கமருந்தைக் கொடுத்து சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டியதுதான். அவ வாறுவயிற்றறையை வெட்டித் திறந்தால் காற்றடித்த பலு}னாக குடல்கள் வெளித்தள்ளிக் கொண்டு வரும். அவற்றை மீண்டும் உள்ளே செலுத்தி சிகிச்சையை முடிப்பது என்பது மிகவும் கடினமானது. எனினும் அதனைத்தான் செய்ய முடியும். அவ வாறு செய்வதை சத்திர சிகிச்சைக்குரிய மருத்தியல் புத்தகங்கள் அனுமதிக்கின்றனவா எனத் தேடித் தேடிப் பார்க்கின்றான். புத்தகங்களைப் பார்த்தும் காயத்துக்குள்ளானவனின் உடல் நிலையைப் பரிசோதிப்பது தளபதியிடம் நிலைமையைக் கேட்பது என மாறி மாறி செயற்பட்டுக் கொண்டிருந்தவன். அவரின் கேள்விக்கு நாங்கள் இருக்கிறதைக் கொண்டு தொடங்குவோம். அவர்களை வரச்சொல்லுங்கள் என்கிறான். ஒன்றும் செய்யாமல் விடுவதிலும் ஏதாவது செய்வது நல்லது என்பதால் சிகிச்சையை ஆரம்பிக்க வேகமாகச் செயற்பட்டனர். தேவையான மாற்றுக் குருதி தயார் செய்து உபகரணங்களை ஒழுங்கு செய்து, மின் ஒளியைத்தயார் செய்து காயக்காரனை மேசையில் கிடத்தி சிகிச்சையை ஆரம்பிக்கையில் எல்லாமே பிந்திவிட்டது என்பது புரிந்தது. விழுப்புண்ணடைந்தவன் தனது இறுதி மூச்சுக்காக அவஸ்தைப்படத் தொடங்கிவிட்டான். மெல்ல மெல்ல ஆவி பிரிய அவன் துடிப்புக்கள் அடங்கிப் போகின்றன. வீரச்சாவு என்பது உறுதி செய்யப்படுகின்றது. களமருத்துவ வாழ்வில் அவன் சந்தித்த தோல்வியின் பட்டியல் நீள்வதாக உணர்கின்றான். தன்னுணர்வுகளை முகத்தில் வெளிக்காட்டாமல் தளபதிக்கு விடயத்தைச் சொல்கின்றான். மறுநாள் வீரமரண நிகழ்வு நடந்தது. இவர்கள் இருக்கும் பகுதியிலேயே அவ வித்துடல் விதைக்கப்படுகின்றது. தப்பியிருப்பவனைத் தொடர்ந்து அங்கு வைத்துப் பராமரிக்க முடியாது. வன்னிக்கு அனுப்ப வேண்டும். அதற்கு இரண்டு நாள் நடந்து கடற்கரை செல்ல வேண்டும். இன்றிரவு நித்திரை செய்தால்தான் நாளை காலை நடக்கத் தொடங்கலாம். இவனை ஏதோவொரு குற்றவுணர்வு கொல்கின்றது. "இப்படியான இடங்களில் பயன்படுத்தக் கூடியவாறு, குளிர்சாதனப் பெட்டி தேவைப்படாத வகையில் மருந்து தயாரித்து இருக்கமாட்டார்களா?" மீண்டும் இரவு புத்தகங்களைப் புரட்டுகின்றான். அவன் தேடியதைக் கண்டுகொள்கின்றான். குறித்த மருந்து இருந்திருந்தால் இம்மரணத்தைத் தவிர்த்திருக்கலாம். மேற்படி மருந்தைக் குறிப்பெடுத்தவன் துறைசார் பொறுப்பாளரிடம் அறிவித்து வெளியிலிருந்து இதனை எடுப்பிக்க வேண்டும், என எண்ணுகின்றான். அப்பொழுது "டொக்டர்" எனக் கூப்பிட்டபடியே வரும் தளபதி சொல்கிறார். "களைத்துப்போயிருப்பீர்கள், இரண்டு நாள் தொடர்ந்து நடக்க வேணும், நித்திரை செய்யலாம்தானே!" என, இவனிடமிருந்த வெறுமை கலந்த சிரிப்பொன்று வெளிவர முயற்சிக்கின்றது. - sethu - 06-21-2003 மறுபடியும் நிகழும் ஒரு வருகை பாணனுக்குப் பரிசாகப் போன சிறு நிலமே, யாழ்ப்பாணமே. விடுதலை - உணர்வின் வேரையும் வீரியத்தையும் அக்கினிக்குஞ்சாக எப்போதும் தன் மடி சுமக்கும் பனங்காமத்து வன்னிமையே, பெரு நிலமே. ஒரு வயிற்றில் பிறந்த இரு சகோதரிகள் போலவே உங்களில் எத்தனை வேறுபாடு. நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும் என்ற அடமும், எவரோடும் சட்டென ஒட்டுவதும், அதே வேகத்திலேயே வெட்டுவதுமான துடுக்குத்தனமும் கொண்ட இளையவள் போன்றவள் யாழ்ப்பாணம். நினைத்ததைச் செய்வதற்கான காலம் வரும்வரை காத்திருக்கும் பொறுமையும், மனிதர்களை மிகச்சரியாக எடைபோட்டு அவரவர் இயல்புக்கேற்ப அவர்களைக் கையாழும் நிதானமும் திறமையும் பொறுப்புணர்வும் கொண்ட மூத்தவள் போன்றவள் வன்னிமை. அவள் அழகானவள். இவள் அமைதியானவள். பார்ப்பவரை ஈர்ப்பவளாக இளையவளே இருந்தாலும், எல்லோருடைய மதிப்புக்கும் உரியவளாக எப்போதும் மூத்தவளே இருப்பதுண்டு. எங்களுக்கும் இடையிடையில் சின்னவளோடு முறுகல் வரும். புறப்பட்டு மூத்தவளிடம் வந்து விடுவோம். அட! நாங்கள்தான் என்று இல்லை. சங்கிலியன் காலத்திலேயே அப்படித்தானாம். அவரும் ஒருமுறை தன் படையை அழைத்துக்கொண்டு மூத்தவளின் வீட்டுக்கு வந்துவிட்டார். சின்னவளுக்கு மனிதர்களை எடை போடும் நுட்பம் தெரியாது. சிரித்தபடி யார் வந தாலும், நல்லவர்கள்தான் அவளுக்கு. வீட்டிலுள்ளவர்களிடம்தான் அவளுக்குவாய். வெளியாட்களிடம் தேன்தான். வருபவர்களுக்கும் அவளை விட்டுப்போக மனம் வராது. அவளின் முகமறியாதவர்களும் அவள் பற்றித் தாமறிந்த கதைகளால் ஈர்க்கப்படுவர். கப்பலைக் கட்டிக் கொண்டாவது புறப்பட்டுவிடுவர். போர்த்துகேய காலத்திலிருந்தே இதே சிக்கல்தான். அதற்கு முந்தைய கதைகள் எனக்குத் தெரியவில்லை. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர், ஆரியர்கள் என்று எல்லோருமே வந்த சில நாட்களிலேயே தம் சொந்த முகங்களைக் காட்டி அவளைப் புண்ணாக்க, கோபத்தில் கொதித்தெழும்பிச் சிலிர்க்கும் தன் மக்களை மூத்தவளிடம் அனுப்பிவிடுவாள். அவளுக்குத் தெரியும் அவர்களுக்கு அதுவே பொருத்தமான இடம் என்று. அவளுக்குத் தெரியும் அவர்களே தனது மீட்பர்கள் என்று. அவளுக்குத் தெரியும் தன்னுடனான அவர்களின் ஊடல் நிலையானதல்ல என்று. அவளுக்குத் தெரியும் தன்னிடம் வராமல் அவர்களால் இருக்க முடியாது என்று. சின்னவளின் பிள்ளைகளிடம் மூத்தவளுக்கு பற்று அதிகம். தன்னிடம் இருப்பவற்றையெல்லாம் வாரிக் கொடுப்பாள். தனக்குத் தெரிந்தவற்றையெல்லாம் சொல்லிக் கொடுப்பாள். வாரிக்கொடுத்தாள். சொல்லிக் கொடுத்தாள். விளையாட்டுப் பிள்ளைகளாய் வருபவர்களையும் வீரத்தின் பிள்ளைகளாய் மாற்றும் வலிமை பெரியவளிடம் உண்டு. வீரர்களாக வருபவர்களையும் உரசி உரசி மேலும் கூர்மையானவர்களாய் ஆக்கும் வலிமை பெரியவளிடம் உண்டு. மாற்றினாள். ஆக்கினாள். நாம் உரம் பெற்றோம்.1987 இல் வந்தபோது நாம் உரம் பெற்றோம் 1996 இல் வந்தபோது ஒரு தடவை போல இன்னொரு தடவை இருப்பதில்லை. கடைசியாகச் சின்னவளை நாம் 1996 இல் விட்டு வந்தோம். அடங்காச் சினத்தோடு வந்த எமக்கு கிளிநொச்சியிலும் முல்லைத்தீவிலும் நகர்ப்புறப் போர் முறையைப் பழக்கினாள் பெரியவள். தன்னிடமிருந்த இரகசியங்களை எல்லாம் எமக்குச் சொன்னாள். மணலாற்றிலிருந்து பனங்காமத் தொங்கல்வரை காட்டுச் சண்டை பழக்கினாள். காட்டின் மர்மங்களை காட்டித்தந்தாள். நுளம்புகளை எதிர்க்கும் வலிமையை, மலேரியாவை வெல்லும் மனோபலத்தை, பசியை, பனியை, பகலவனை வெல்லும் பெரும் பலத்தைத் தந்தாள். எதுவுமே இல்லாமல் வாழும் வாழ்வை, கிடைப்பவற்றை மிகச் சரியாகப் பயன்படுத்தும் வாழ்வை எங்களுக்குப் பழக்கினாள். புறப்படும் போதெல்லாம் புூரிப்போடு வழியனுப்பினாள். பொன்னேரியில் விரையும் படகுகளில் அமர்ந்தபடி அவளுக்குக் கையசைத்தோம். பகைவனின் பிடியில் சிக்கி வேலிகளுள்ளும் மதில்களின் பின்னாலும் பதுங்கிக் கிடந்த இளையவளுக்கு சிறகுகளைச் சுமந்து சென்றோம். வழியனுப்பினாள். கைதடிப் பகுதிச் சண்டையெல்லாம் கடுமையானதுதான். வெளியான பகுதியில் பகைவர்களின் கடுமையான எதிர்ப்பின் நடுவே முன்னோக்கி ஓடினோம். விழ விழ ஓடினோம். எவரும் நிற்கவில்லை. வீழ்ந்தவர்கள் எல்லோருமே ஒரே விடயத்தைத்தான் சொன்னார்கள். "என்னை ஒருதரும் பாக்க வேண்டாம். விடாதை பிடி" காயங்களோடும் பாரங்களோடும் முன்னோக்கி ஓடிக் கொண்டிருந்தவர்களின் காதுகள் ஒரே ஒரு கட்டளையையே உள்வாங்கிக் கொண்டன. "விடாதை பிடி" வீழ்ந்தவர்களின் கட்டளை அது. வீழும்போது தாம் வழங்க வேண்டிய கட்டளையும் அதுவே. "விடாதை பிடி" லெப்h}னன்ட் அன்பினி, 2ம் லெப்ரினன்ட் தாயகி, 2ம் லெப்ரினன்ட் சிவமதி. எல்லோரது கட்டளைகளும் கைதடி நாவற்குழி வெளியில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கைதடிச் சந்தியில், நாவற்குழிப் பாலத்தின் தொடக்கத்தில் முடிவில் அமைக்கப்பட்டிருக்கும் பகைவர்களின் காப்பரண் சுவர்களோடு மோதி மோதி ஒலிக்கின்றன அவர்களின் குரல்கள். "விடாதை பிடி" காற்று ஊவென்றிரைந்தது. அவர்களுக்குப் பயமாயிருக்கவில்லை. பரிதாபமாக இருந்தது. எத்தனை உயிர்கள் இந்த வெளியில் போயின. இவர்கள் இருக்கின்றார்களா, இல்லையா என்று அறிய வழியின்றி எத்தனை உயிர்கள் நித்தமும் வேகுகின்றன. எங்கே புதைத்திருப்பார்கள்? தலை வாசல் பிள்ளையாருக்குப் பின்னாலா? முன்னாலுள்ள வயல் வெளியிலா? அல்லது எம் காலடியிலேயா? கால்கள் கூசின. மண்வெட்டியை ஓங்கி நிலத்தைக் கொத்தக் கைகள் கூசின. அவலத்தோடு கொலையுண்டவர்களினது சாவின் பின்னரான அமைதியை நாம் கலைத்துவிடப் போகின்றோமா? "உறவுகளே, எங்களை மன்னியுங்கள்" ஓங்கிய மண்வெட்டியோடு ஒவ வொரு முறையும் அள்ளுண்ட மண்ணில் எவரது எச்சங்களுமே இல்லை என்று உறுதி செய்தவாறே செம்மணி வெளியில் நிலையமைத்து முடிப்பதற்குள் மனதால் களைத்து விட்டோம். இன்னும் எத்தனை பேரை இப்படி இழக்கப் போகின்றாய் யாழ்ப்பாணமே? அன்றைய சண்டை பெருஞ்சண்டை. விழுதெறிந்த ஆலமரக் கூடலுள் அமைக்கப்பட்டிருந்த தன் காப்பரணில் நின்றவாறு நிலைமையை நிதானமாகக் கணிப்பிட்டாள் மேஜர் சீத்தா. வலமும் இடமுமாக வயல்வெளிக்குள் அமைக்கப்படிருந்த ஏனைய காவல் நிலைகள், ஏற்கனவே மழைநீரில் ஊறிக்கிடந்த காவல் நிலைகள் பகைவரின் கடும் எறிகணை வீச்சால் பொத பொதத்து விழ, காயமடைந்தவர்கள் உடன் நின்றவர்களின் வித்துடல்களைச் சுமந்தவாறு விலகுவதைத் தவிர, வேறு வழியே இருக்கவில்லை. எல்லோரையும் வெளியேறும்படி பணித்தாள் சீத்தா. எல்லோரையும் அனுப்பிவிட்டு, தன் காப்பரணில் தனித்து நின்றாள் சீத்தா. கூட நின்றவள் காயப்பட, அவளையும் போகுமாறு கண்டிப்பாகப் பணித்து விட்டு தனித்து நின்றாள் சீத்தா. "தனியாக நிற்கவேண்டாம். உடனேயே பின்னுக்கு வா" என்ற கட்டளைப் பீடத்திற்குப் பணிய மறுத்து, தனித்து நின்றாள் சீத்தா. "நிறைய ஆமி வாறான். என்னை அவங்களுக்குத் தெரியேல்ல. எனக்கு அவங்களைத் தெரியுது. என்னட்டை 40மி.மீ ஸெல்லும் இருக்குது. ரைபிளும் இருக்குது. இப்ப இவங்களை விட்டா பிறகு அடிக்கிறது கஸ்ரம். நான் அடிபடப் போறன்" புதையுண்டு போயிருந்த நானு}று பேருமாக சீத்தா பேரிட்டாள். கடைசி நிமிடத்தில் உயிர்த்துளிக்காக பகைவரிடம் இறைஞ்சிய அவலக் குரல்களையே இதுவரை சுமந்த காற்று, "நான் வரமாட்டன். அடிபடப் போறன்" என்ற சீத்தாவின் குரலைச் சுமந்து வீசத் தொடங்கிற்று. தலைவாயிற் பிள்ளையாரின் உடைந்த கோயிற் சுவருடன், அரைப்பனை உயரத்தில் நிமிர்ந்து நிற்கும் விளம்பரப் பலகையுடன் மோதி மோதி வீசும் காற்றில் அந்தக் கம்பீரமான குரல் எதிரொலிக்கின்றது. "இப்ப இவங்களை விட்டா, பிறகு அடிக்கிறது கஸ்ரம்" அது எமது கடைசிச் சண்டை. பலத்தைப் பெருக்குவதற்காய் பெருநிலத்திடம் மறுபடி வந்தோம். எங்கள் பெரும் பலத்தை தீச்சுவாலை எதிர் நடவடிக்கையில் காட்டியதால், அதற்கு முன் வந்த வெற்றி நிச்சயம் படையினரைத் தடுத்து வல்லமை காட்டியதால், கூண்டோடு கலைத்துக் கொடியேற்றியதால் திறந்த நெடும் பாதை வழியே உன்னிடம் வந்தோம் யாழ்ப்பாணமே. திறந்த நெடும் பாதை வழியே உன்னிடம் வந்தோம் தலை நகரமே. திறந்த நெடும் பாதை வழியே உன்னிடம் வந்தோம் வாவி நகரே. பாணனுக்குப் பரிசாகப் போன சிறு நிலமே. தாயக நீள் நிலத்தின் சிறு துளியே, வருவோம். மறுபடி வருவோம். அடையாள அட்டைகளைக் காட்டியதாய் அல்லாமல், இனத்தின் அடையாளத்தை, வீரத்தின் அடையாளத்தை, தாயகத்தின் தனித்துவ அடையாளங்களைச் சுமந்ததாய் நிகழும் அந்த வருகை. எமது கடல் எமது வயல் எமது வெளி எமது குளம் எமது நிலம் எமது வனம் எமது நதி எமது சனம் எமதெனவே எமதெனவே எமதெனவே எமதெனவே (நன்றி நிலாந்தன்) என்ற பாடலை இசைத்தபடி, கொடியைச் சுமந்தபடி, தாயகத்தின் தனித்துவ அடையாளங்களைச் சுமந்தபடி மறுபடி வருவோம் தலைநகரமே மறுபடி வருவோம் வாவிநகரே மறுபடி வருவோம் யாழ்நிலமே. - sethu - 06-21-2003 சாம்பலும் குருதியுமாகிய நிலம் இன்னும்...... அன்ரன் அன்பழகன் சிதையுண்ட காலத்தின் ரணங்களை மௌனத்துள் அரைத்து புன்னகைக்கிறது நிலம் (அநாமிகன்) மின்னும் கருமையில் நீண்டு நெடுத்து நிலங்களை இணைக்கிறது. ஏ-9 நெடுஞ்சாலை. மெல்லென நகரும் இப்போதைய பேச்சுவார்த்தையின் இமாலயச் சாதனைகளில் ஒன்றென இச்சாலை இணைப்பும் ஊடகங்களினூடே பேசப்பட்டது. இனிவரும் மழைகாலத்தில் இவ வீதியின் மினுமினுப்பு எப்படியாகுமோ என்பது ஒரு புறமிருக்க இவ வீதிக்கு இருமருங்குமுள்ள வன்னிப் பெருநிலப் பரப்பில் எப்பக்க வீதிகளில் திரும்பினாலும் உள்வ்திகளில் எழுகின்ற தூசுப்படலம் ஒருவேளை கார்காலத்தில்இல்லாமல் போகலாம். ஆனால் வீதிகளில் உருவாகி இருக்கிற பள்ளங்கள் இன்னும் ஆழமாகிப்போய் விடும் என்பதே உண்மையாகும். இப்போதே இவ வீதிப் பள்ளங்களில் விபத்துக்குள்ளானவர்களின் பட்டியல் நீளமானது. விபத்தினால் காயமடைந்தவர்களுக்கான சிகிச்சைகள் இப்போதும் தொடர்கிறது. வீதிகளுக்கான சிகிச்சை எப்போது என்பதுதான் தெரியவில்லை. இந்த ஊர்களுக்குப் பெயர் வைத்தவர்கள் தீர்க்கதரிசிகள் என்றார் ஒரு அன்பர். ஏனென்று கேட்டதற்கு மழை காலத்தில் இந்த வீதிகள் எல்லாம் வாய்க்கால்கள் ஆகி விடும் என்பதை முன்னுணர்த்துவது தானே இவற்றுக்கு எட்டாம் வாய்க்கால். பத்தாம் வாய்க்கால் என முன்னரே பெயரிட்டனர் என்றார். குளக்களின் பெயா களினால் குறிக்கப்படும் ஊர்களுக்கு என்ன பஞ்சமா? நல்ல வேளை இடங்களின் பெயர்களில் ஊர்கள் இல்லாமல் போனது வீதிகளே திருத்தப்படாத நிலையில் ஊடகங்களில் அபிவிருத்தி சூறாவளியாய் சுழன்றடிக்கிறது. வீதிகளே திருத்தப்படா நிலையில் ஏனைய விடயங்களான வைத்திய வசதிகள், கல்வித் தேவைகள் அடிப்படைப் போக்குவரத்து வசதிகள் பற்றிப் பேசி என்ன பயன். தொலைத்தொடர்பும், மின்சாரமும் இன்னும் இந்த மக்களுக்கு ஆடம்பரப்பொருட்களே கட்டிட நிர்மாணப்பொருட்கள். தொலைத் தொடா புச்சாதனப் பொருட்கள், மின்சாரக்கருவிகள் தாங்கிய பாரிய கொள்கலனைத் தாங்கிச்செல்லும் பாரஊர்திகளை வேடிக்கை பார்ப்பதும் மட்டுமே இவர்களுக்கு இப்போ பொழுதுபோக்கு. வேறு என்ன செய்யமுடியும்? சமாதானப் பயணத்தின் பதாகையுடன் அபிவிருத்தி அரசகட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கே இப்போதும் போய்க்கொண்டிருக்கிறது. இங்கு மட்டுமேன் இடைக்கால நிர்வாக வரவைக் காட்டுகிறார்கள் என்பதுமட்டும் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. கிளிநொச்சி இப்போது சர்வதேச அரங்கில் கொழும்புக்கு இணையான இடத்தைப் பெற்றுக்கொண்ட ஒரு குவிமையம். உலங்கு வானூர்தித் தரையிறக்கத்துக்கான காற்றுத் திசைகாட்டி நிரந்தரமாகவே பொருத்தப்பட்ட ஒரு மைதானத்தைக் கொண்ட ஓரு நகரமாகும். முன்பு வடநாட்டின் நெற்களஞ்சியம் எனச் சொல்லப்பட்ட ஒரு சிறுபட்டினம். போஸ்காட் கமக்காரர்களின் வங்கி நிலுவைகளை சரிந்து விடாது பேணிய ஒரு அட்சய பாத்திரம். பல சுவாரசியமான கதைகளைக் கொண்ட இந்தப் போஸ்காட் கமக்காரர்களிடம் வயல் கொட்டில்களில் கூலிகளாக இருந்தவர்களுக்கும் இப்போது பிரச்சினை இருபத்தைந்து முப்பது வருடங்களுக்கு மேலாக வயற்காட்டில் நிலைத்தொரு தமது உழைப்பைப் பிணைத்திருந்த இவர்களுக்கு மீள்குடியேற்ற உதவி கிடைக்குமா எனக் கேள்வியொன்றும் உண்டு. ஒரு காலத்தில் வடக்கின் உற்பத்திகளான செத்தல் மிளகாய், சின்ன வெங்காயம், கருவாடு, வாழைக்குலை என்பவற்றை இங்கே வைத்துத்தான் தெற்கின் வியாபாரிகள் மலையகத்து மரக்கறிக்கும், குருநாகல் தேங்காய்க்கும் பரிமாறிக்கொண்டனர். வடபகுதியின் மிகப்பெரிய இரவு, பகல் வாராந்த சந்தையும் இங்கேதான் கூடியது. 86,90,91 இல் இராணுவ சப்பாத்துக்களால் சீரழிந்து போன இந்த நகரம் 1996 இல் 'சத்ஜய' வால் முற்றாகவே அழிந்து போனது. அப்போது அழிவின் எல்லைப் பரப்பு அகன்று விரிந்தது. அந்தக் காலங்களில் சிலுவை யேசுவை சிலந்தி மூடிற்று பிள்ளையார் பலி பீடத்தில் களிம்பு படர்ந்தது மாமர ஊஞ்சல்கள் இற்று வீழ்ந்தன சருகடர்ந்த முற்றத்தில் பாம்புகள் அரைந்தன. (ஹம்சத்வனி) இழப்புக்கள். உடமைகளையும் கடந்து உயிர்களையும் காவு கொண்டது. உயிர்வாழ்வதற்கு வேறு வழியறியாது அயற்கிராமங்களை அண்டி வந்தவர்களில்100 ற்கு மேற்பட்டோரின் எலும்புக்கூடுகள் ஓயாத அலைகள் இரண்டின் பின் பல்வேறு இடங்களிலும் கண்டெடுக்கப்பட்டது. 184 போ இரண்டு வருடங்களில் காணாமல் போயிருக்கின்றனர். எலும்புக் கூடுகளின் நகரம் என அழைக்கப்பட இது காரணமாயிற்று. இவர்கள் ஒவ வொருவரிலும் உலகின் தலைசிறந்த பிரஞ்சுச் சிறுகதையாளன் மாப்பசானளின் "நல்ல நண்பர்கள்" சிறுகதையின் உணர்வலைகள் பட்டுத்தெற}த்தன. இந்த உணர்வலைகளைத் தாங்கி தன் கவிதைகள் ஊடேவெளிவந்தான் கவிஞன் ஒருவன். மனம் எகிறி, எகிறி காற்றை விசாரித்தது. ஊருக்குள் வந்து உடல் சிதைந்து கூடான உறவுகளின கதை கூறமுடியாது காற்று விம்மிற்று. (அநாமிகன்) துயரத தை சுமந த மனிதர்கள தலை நிமிர்ந தனர். அவர்கள தோள நிமிர்த தி தலை உயர்த த வழிசமைத தது ஓயாத அலைகள இரண டு. இதுவே பின னாளின வெற றிக கெல லாம வழிசமைக கும சமர்களின அத திவாரத தின மூலக கல லாயிற று. இந த வெற றியின உணர்வுகளும உளியாகி காதறியச செதுக கியது. நம பிக கை துளிh த் துவிட ட மகிழ வழிக கும வாழ வை பலரும பாடினர். எனினும நிலமெங கும முளைத திருந த மிதிவெடிகள மக களின வரவையும வாழ வையும தாமதிக க வைத தது. முற்றத்தில படர்ந்திருந்த நெருஞ்சிகளின் சாம்பலை அள்ளிச் சென்றது- காற்று அச்சம துறந்த ஆட்களின் பாடலில் நிரம்பி வழிந்தன -வெளிகள். (அன்ரன் அன்பழகன்) உற்பத்தி மையமாய், வணிக மையமாய், போரின் மையமாய் திகழ்ந்த இந்தப் பட்டணம் இப்போது சமாதானத்தின் மையமாகவும் திகழ்கிறது. நகரமையத்தினூடே நெடுஞ்சாலை வழியே நகர்கின்ற பார ஊர்திகளைப் பார்த்தும், தன் புன்னகையை மௌனத்துள் கரைத்துக் கொள்கிறது இந்நிலம். இந்த நிலைமை வன்னிப் பெருநிலப்பரப்புக்கு மட்டுமல்ல. மட்டக்களப்பின் படுவான்கரைக் கிராமங்களுக்கும் திருகோணமலையின விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கும் பொதுமையாக அமைகிறது. - sethu - 06-21-2003 தமிழ் மக்களைச் சீண்டுவது சமாதானத்திற்கான வழியாகாது! ஜெயராஜ் புhPந்துணா வு உடன்படிக்கையின் அடிப்படையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழான கைது நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருக்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்த}ன் கீழ் மத்திய வங்கிக் குண்டு வெடிப்பு வழக்கில் தீh ப்புக் கூற நீதிமன்றம் காட்டிய அவசரம் ஏன்? அரசாங் கத்தின் சமாதான முயற்சிகளுக்கு நீதிமன்றம் போட முயன்ற முட்டுக்கட்டையா? அன்றி அரசாங்கம் விடுதலைப் புலிகள் மீது செலுத்த முனையும் அழுத்தமா? தமிழ் மக்களின் உணர்வுகளை சீண்டுவது போன்றும், அவமதிப்பது போன்றும் உள்ளது கொழும்பு மேல் நீதிமன்றம் மத்திய வங்கி குண்டு வெடிப்பு தொடர்பாக வழங்கியிருந்த தீர்ப்பு. இத்தீர்ப்பானது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களுக்கு 200 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அறிவிப்பதாகவுள்ளது. விடுதலைப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கிச் செல்கின்றவர்களுக்கு ஒடுக்கு முறை அரசுகள் நீண்ட கால சிறைத்தண்டனைகள் அறிவிப்புச் செய்வதும் மரணதண்டணைகளை விதிப்பதும் வரலாற்றில் புதியதொன்றல்ல. இதில் சிலர் தண்டனையை அனுபவிப்பதும் சிலர் தண்டனைக்கு உட்படும் வாய்ப்பற்று பின்னர் தேசிய விடுதலை வீரர்கள் என ஏற்றுக் கொள்ப்படுவதும் வரலாற்றில் பல இடங்களில் காணக்கூடியதொன்றே. இந்த வகையில், தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குச் சிறீலங்கா நீதிமன்றம் விதித்த தண்டனையானது நடைமுறையில் சாத்தியப்பாடற்ற ஒன்றே. ஆயினும் இத்தீர்ப்பானது சிறீலங்கா அரசின் நடவடிக்கைகள் குறித்து தமிழ் மக்களுக்கு பலத்த ஏமாற்றத்தையும் சீற்றத்தையும் கொடுக்கும் ஒன்றாகியுள்ளது. இதனை வெளிப்படுத்தும் வகையில் தமிழர் தாயகமெங்கும் தமிழ் மக்கள் பெரும் கண்டனப் பேரணிகளையும் கூட்டங்களையும் நடாத்தி வருகின்றனர். தமிழ் மக்கள் இதற்கு அப்பால் தமது சீற்றத்தை வெளிப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இருப்பதற்கு தற்போதைய அரசியல் சூழ்நிலையே காரணமாகும். ஆனால் ஆட்சியாளர்கள் இவ விடயத்தில் பொறுப்புணர்வுடன் செயற்படுவதாகத் தெரியவில்லை. திரு. பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்களின் தேசியத் தலைவர் என்ற நிலையில் இருப்பவர் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் அவரின் தலைமையிலேயே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இதனை ஏனைய தமிழக் கட்சிகள் கூட ஏற்றுக் கொண்டுள்ளன. இந்நிலையில் தமிழீழத் தேசியத் தலைவருக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்ப்பானது தேசியத் தலைவரை மட்டுமல்ல தமிழ் மக்களையும் சீண்டும் செயலாகும். மத்திய வங்கி மீதான தாக்குதல் நடத்தபட்ட சம்பவமானது ஒரு குற்றவியல் நடவடிக்கையல்ல, அது விடுதலைப் போராட்டம் தொடர்பான ஓர் போர் நடவடிக்கையாகும். இதனைக் குற்றவியல் நடவடிக்கை என்ற hPதியில் பார்ப்பது தவறாகும். ஏனெனில் போராட்டத்தின் நடவடிக்கையாகப் பார்க்கப்படுமானால் சமாதானப் பேச்சுக்களும் அரசியல் தீர்வு முயற்சிகளும் அர்த்தமற்றவையாகிவிடும். அரசாங்கத் தரப்பு நீதித்துறை தமது கடமையைச் செய்கிறது என்று கூறுவது இவ விடயத்தில் ஒருபொறுப்பற்ற, தட்டிக்கழிக்கும் நடவடிக்கை போன்றதாகும். ஏனெனில் நீதித்துறை இவ வரசாங்கத்தின் ஓர் அலகு என்பதும் இவ வரசாங்கம் இயற்றும் சட்டத்தின் அடிப்படையிலேயே நீதித்துறை செயற்பட்டு வருகின்றது என்பதுமே யதார்த்தமாகும். அது மாத்திரமல்ல, நீதித்துறையின் செயற்பாடானது நாட்டின் முக்கிய பிரச்சினைகளைத் தீர்த்துவைக்க அரசாங்கம் மேற்கொள்ளும் சமாதான முயற்சிகளுக்கு குந்தகமானதாக அமைதல் என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதொன்றுமல்ல. சட்டம் தமது கடமையைச் செய்தல் என்பது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் நாட்டின் அமைதியும், சமாதானமும் ஏற்படுவதை சட்டத்தின் பேரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பாதிப்பாக இருப்பது வரவேற்கத்தக்கதாக எவ வாறு இருத்தல் முடியும். இதற்கும் மேலாக பல நு}ற்றுக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கையில் இவ வழக்கில் நீதித்துறை குறிப்பாக இவ வழக்கை விசாரித்த நீதிபதிகள் விரைவு காட்டியது ஏன் என்பது கேள்விக்குரியதொன்றே. இவ வழக்கின் தீர்ப்பானது இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் நோக்கில் மேற்கொள்ப்படும் சமாதான முயற்சிகளுக்கு குந்தகமானதாக அமையும் என நீதிபதிகள் உணரத்தவறியது ஏன்? நீதித்துறை இவ வழக்கில் விசேட கவனம் செலுத்தி தீர்ப்புக்கூற அவசரம் காட்டியதெனின் அரசாங்கமானது இவ விடயத்தில் அக்கறைகாட்டி இத்தீர்ப்பு வெளிவருவதை தாமதித்து இருக்கலாம். இதுவொன்றும் புதிய வழிமுறையல்ல. ஆட்சி அதிகாரங்கள் கைமாறும் போது தனிப்பட்ட குற்றவியல் வழக்குகளே கிடப்பில் போடப்படுகையில் அரசியல் தொடர்புடைய வழக்குகளை நாட்டின் நலன் கருதி தாமதப்படுத்துதல் என்பது மக்கள் விரோதச் செயலாக ஆகிவிடமாட்டாது. இந்த வகையில் பார்க்கையில் அரசாங்கமும் பொறுப்பற்ற hPதியில் செயற்பட்டதாக கருதவே இடமுண்டு. இதனால் அரசாங்கம் சமாதான முயற்சிகளில் காட்டும் அக்கறை குறித்துச் சந்தேகமும் கேள்வியும் எழும்புவது தவிர்க்க முடியாததாகிறது. ஏனெனில் மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பானது ஒரு வகையில் அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் செய்து கொண்டுள்ள புரிந்துணர்வு உடன்பாட்டிற்கு விரோதமானதும் கூட. புரிந்துணர்வு உடன்பாட்டின் பிரகாரம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான கைதுகள் இடம்பெறுவது நிறுத்தப்படுகின்றன. ஆனால் ஏற்கனவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு இச்சட்டத்தின் கீழ் தண்டணை வழங்குவதை புரிந்துணர்வு உடன்பாடு தடுத்து நிறுத்தாது விடினும் இச்சட்டத்தை பயன்படுத்த முனைவதானது வரவேற்கத்தக்க சமாதான முயற்சிகளுக்கு அனுசரணையான நடவடிக்கையை மேற்கொள்வதாக இருக்கமாட்டாது. ஏனெனில் பயங்கரவாதத் தடைச்சட்டமானது மனித அடிப்படை உரிமைகளுக்கு மாறறான மக்கள் மீதான ஒரு ஒடுக்குமுறைச் சட்டம் என ஏற்கனவே பல தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாக உள்ளது. இச்சட்டம் ஒழிக்கப்படும் பட்சத்திலேயே மக்களுக்கு நீதி கிடைக்கப்பெறும் என்பது பொதுவான அபிப்பிராயமும் ஆகும். ஆனால் இச்சட்டத்தின் கீழ் தீர்ப்பொன்று வெளிவருவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளமையானது தற்போதைய அரசியல் சூழ்நிலையைப் பாதுகாக்க அது முற்படவில்லையோ? என்ற சந்தேகத்தை தோற்றுவிப்பதாகின்றது. அவ வாறு இல்லாவிடில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் மீதான தீர்ப்பொன்றிற்கு அரசாங்கம் தேவை ஏற்பட்டிருக்கமாட்டாது. ஆட்சியாளர்கள் தமது தேவைகளுக்கேற்ப நீதித்துறையை பயன்படுத்துவது என்பது ஆரோக்கியமானதொன்றல்லதான் ஆனால் ஆட்சியாளர்கள் தமது நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வதற்காகவே பயங்கரவாதத் தடைச்சட்டம் போன்றவற்றை உருவாக்கி நீதிமன்றங்களைக் கொண்டு அமுல்ப்படுத்தி வருகின்றனர் என்பதே யதார்த்தமாகும். இந்த வகையிலேயே 1979 யுூலையில் கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் ஓர் தற்காலிக சட்டமாக, ஏற்பாடாகவே கொண்டு வரப்பட்டது. தற்பொழுதும் அதே நிலையிலேயே அது தொடர்கின்றது. ஆனால் இச்சட்டத்தினால் பல ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் யுவதிகள் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். ஆனால் இச்சட்டம் மனித அடிப்படை உரிமைகளுக்கு மாறானது என்பதும் ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல, நீதித்துறைக்கும் நீதிபதிகளுக்கும் தெரியாததல்ல. ஆகையினால் அதன் பிரகாரம் தீர்ப்பு வழங்கப்படும் போது அது நீதிக்குப் புறம்பானது, மனித உரிமைகளுக்கு மாறானது என்பது அறியப்பட முடியாததொன்றாக இருக்க முடியாது. இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்புக்களை அவசரமாக வழங்க நீதிமன்றங்கள் மீதே சந்தேகங்கள் தோன்றுகின்றன. அதே போன்றே சமாதான முயற்சிகளில் தீவிர அக்கறையுடன் செயற்படுவது போன்று செயற்பாடுகளை மேற்கொள்ளும் அரசாங்கம் புரிந்துணர்வு உடன்பாட்டின் கீழ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெறுவது தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தீர்ப்புக்கள் வழங்கப்படுவதையும். பயங்கரவாத தடைச் சட்டத்தையும் இல்லாது ஒழித்து விட முயற்சிக்காது அதனை வைத்துக்கொள்ள முற்படுவதும் அரசாங்கம் மீதான சந்தேகங்களுக்கு காரணமாகியுள்ளது. ஆனால் அரசாங்கத்தின் இச்செயற்பாடுகள் தமிழ் மக்களின் உணர்வுகளை சீண்டுவதாக அமைவது சமாதான முயற்சிகளுக்கும் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கைக்கும் ஏற்றதல்ல. தமிழ் மக்கள் கடந்தகால சிங்கள ஆட்சியாளர்களால் கசப்பான அனுபவங்கள் பலவற்றைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இதனால் அவர்கள் மீதான நம்பிக்கையும் அடிமட்டத்திலேயே உள்ளது. ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது அதற்கு சற்று மாறுபாடான சற்று மேம்பட்ட விதத்திலேயே அவர்கள் அபிப்பிராயம் கொண்டுள்ளனர். இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாதுகாத்துக் கொள்வதானால் தமிழ் மக்களின் உணர்வுகளை கிளறிவிடும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும். - sethu - 06-21-2003 புதிய கதைகள் ;புதிய நியங்கள் 1 யாரிடமும் அச்சமில்லை. போர் அனுபவம் அதிகமில்லை. எனினும் விடுதலை முனைப்பு அதிகமாக இருந்ததால், இதைப்பற்றி அவர்கள் கவலை கொள்ளவில்லை. கோப்பாய் சிறேசரடியில் அவர்கள் எதிரிக்கான வலையை விரித்தார்கள். (இதைத் தொடர்ந்து தாயகமெங்கும் இழுத்து விரிக்கப்பட்ட வலைகளில் சிக்கிய அசோகச்சக்கரம் சீராக உருளமுடியாமல் திணறியது தனிக்கதை) (ழுpநசயவழைn டீயஎயn) பவான் நடவடிக்கையைத் தொடங்கிய இந்திய அமைதிகாக்கும்(?) படையினர் யாழ்ப்பாண நகரப்பகுதியிலிருந்து நகரத்தொடங்கி விட்டிருந்தனர். இதைச்சற்றும் எதிர்பார்த்திராத மக்கள் நம்ப முடியாத அதிர்ச்சியுடன் வாசல்களைப் புூட்டிக் கொண்டு வீடுகளுக்குள் அடைந்து கொண்டனர். விடுதலைப் புலிகள் மகளிர் படையணியின் ஒரு அணி - 2ம் லெப் மாலதி, கஸ்து}ரி, தயா, விஜி இன்னும் சிலர் கோப்பாய் வெளியில் எதிர் நடவடிக்கைக்குத் தயாராகிக் கொண்டனர். ஐப்பசி மாதம் மழை எனினும் அன்று வானத்து நட்சத்திரங்கள் இருட்டடிப்புச் செய்யப்படவில்லை. நிலவு, தலைக்கு மேலேயே மிதந்து கொண்டு இருந்தது. கண்களைக் கூசச் செய்யும் ஒளியுடன் கோப்பாய் - கைதடி வீதியில் திரும்பின. காவற் கடமையில் நின றவர் யாருடைய ஊர்தியென்று அறிவதற்காக எழுந்து நின்றார். வந்த ஊர்திகள் சடுதியில் நின்றன. அதில் வந்த இந்திய இராணுவத்தினர் குதித்தனர். நு}று நரிகள் சேர்ந்து ஊழையிடுவது போன்றதொரு ஒலியை எழுப்பியவாறு இவர்களை நோக்கி ஓடிவந்த படையினரை இவர்களின் துப்பாக்கிகள் வரவேற்றன. இரவின் அமைதியைக் குலைத்தவாறு அந்த வெளியில் சண்டை நடந்தது. இந்திய இராணுவம் தம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு பெண்கள் படையோடு மோதியது. பெண்கள் பற்றி அவர்களிடமிருந்த கற்பனைத் தத்துவங்கள் உடைந்து விழுகின்ற அளவுக்கு அந்த சண்டை நடந்தது. தனது தொடையில் ஏற்பட்ட காயத்தின் நிலைமையைப் புரிந்துகொண்ட மாலதி தன் கையிலிருந்த சுடுகலனை வீரவேங்கை விஜியிடம் கொடுத்தார். "இதைக் கொண்டுபோய் அண்ணையிட்டைக் குடு. நான் குப்பி கடிக்கப்போறன்" மாலதியை விட்டுவிட்டுப் போக விஜி தயாராக இல்லை. "நான் உன்னை விடமாட்டன் மாலதி" விஜி மாலதியை இழுத்துப்போக முயற்சித்தார். ஆனால் மாலதியின் உறுதியே வென்றது. "இதைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடு" அந்த நேரம் மிகவும் அரிதாகவும், எல்லோரது நேசிப்புக்கும் உரியதாக இருந்த ஆ-16ஐ தங்களெல்லோருக்கும் தருவதற்காக தலைவர் எடுத்த முயற்சிகளைப் புரிந்து கொண்டதனால், அன்றைய சூழலில் உலகின் நான்காவது வல்லரசுடனான போரில் அந்த ஆயுதம் ஆற்றவேண்டிய பங்களிப்பைப் புரிந்து கொண்டதால் வந்த வார்த்தைகள். 2 திண்ணை மாநாட்டில் ஒன்று கூடியவர்களுக்கு இதை நம்பச் சற்றுச் (சற்று என்ன சற்று? முற்று முழுதாகவே) சிரமமாகவே இருந்தது. "உந்தப் பெரிய இந்தியன்காரன் நடுச்சாமத்தில முன்னாலை வந்து நிக்கேக்கை உந்தப் பொடிச்சியள் அவங்களைச் சுட்டிருக்குங்களோ?" சீக்கியப் படைப்பரிவினரின் அரைப் பனை உயரமும் எங்கள் பெண்களின் ஐந்தடி உயரமம் அவரைக் கேள்வி கேட்க வைத்தன. ஏற்கனவே லெப். கேணல் விக்ரர் அவர்கள் வீரச்சாவடைந்த மன்னார்- அடம்பன் சண்டையில் மகளிர் படையணி பங்கேற்றிருந்ததான கதைகளை அரைகுறையாகக் கேள்விப்பட்டிருந்த போதும், அவர்களது ஐயங்கள் தெளியவில்லை. கேள்விகளோடு மாநாடு தொடர்ந்தது. 3 அங்கம் - பருத்தித்துறை துறைமுகத்தடி. காலம் - 1993 நடுப்பகுதி. பார்வையாளர்கள் - துறைமுகத்தடியில் நின்ற திண்ணை மாநாட்டாளர்கள். நடிகர்கள் - கடலில் கைகளை வீசிக் கால்களை அடித்தவாறிருந்த சில தலைகள் காட்சி புள்ளிகளோ, கோடுகளோ விழாமல் மிகத் தெளிவாகத் தெரிகின்றது. கடலில் கொஞ்சம் மனிதர்கள் நீந்துகின்றார்கள்லு}. அது தெரிகிறது. யார் அவர்கள்? அரைக் காற்சட்டைகளை அவர்கள் அணிந்திருந்தார்கள். "ஆம்பிளையளோ?" தலையிலே முடி கொண்டையிட்டிருப்பது போலவும் தெரிகின்றது. "பொம்பிளையளோ" "என்ன பொம்பிளையளோ" "அதுவும காற்சட்டைகளோடையே?" "கடல் பொங்கி ஊரை அழிக்கிறதுக்குத்தான் உந்தக் கூத்தெல்லாம் நடக்குது" "அப்படியெண்டா வெள்ளைக்காரனின்ரை உடலுமெல்லே பொங்கவேணும். அங்கை எல்லாரும்தானே குளிக்கினம்?" இது ஒருவர் "அது ரோசமில்லாத கடல். பேசாமக் கிடக்கும். எங்கட கடல் அப்பிடியே" இது மற்றவர் திண்ணை மாநாட்டாளர்களின் அனல் பறந்த கருத்துப் பரிமாற்றல் களுக்குகிடையில் கடற்புலிகள் மகளிர் படையணி ஐந்து மைல் நீச்சலை நிறைவு செய்து, தனது கடல் நடவடிக்கைகளை ஆரம்பித்து வ}ட்டிருந்தது. மாநாடு முடிவுறவில்லை. கிளாலிக் கடல் நீரேரியில் பயணம் செய்த மக்களைத் தாம் விரும்பிய நேரங்களிலெல்லாம் கொன்று குவித்துக் கொண்டிருந்த சிறீலங்காக் கடற்படைக்குச் சவால் விட்டவாறு கடற்புலிகளின் படகுகள் விரைந்து கொண்டிருந்தன. மக்களை நெருங்க முடியாத சிறீலங்காப் படகுகள் தள்ளியே நின்று கொண்டன. இருளில் கரும்புள்ளிகளாக விரைந்து சாகசம் காட்டுகின்ற இவர்களின் படகுகளில் போகின்றவர்களை உற்றுஉற்றுப் பார்த்தவாறு சாவு அச்சமற்ற ந}ம்மதியுடன் திண்ணை மாநாட்டாளர்கள். ஒரு தொடுகையில் (இயந்திரப் படகொன்றுடன் கயிற்றால் பிணைக்கப்பட்டு கட்டி இழுக்கப்படும் ஏனைய பயணிகள் படகுகள்) பயணம் செய வதை கண்டுகொண்ட கிளாலிக் கடல் நீரேரிக்குச் ச}ரிப்பை அடக்க முடியவில்லை. தனது அலைக் கரங்களை அடித்தவாறு அது உருண்டு சிரித்தது. நடந்த புதினத்தை கேள்வியுற்ற மீனினங்களும் திண்ணை மாநாட்டாளர்களின் முகங்களைப் பார்ப்பதற்காக நீர் மட்டத்துக்கு மேலே துள்ளித் துள்ளிக் குதித்தன. 4 தென்மராட்சியில் முக்கிய நகர்களில் ஒன்றான சாவகச்சேரி எங்களிடம் இழந்த நகரை மீளப் பிடிப்பதற்கான கடும் முயற்சியில் சிறிலங்காப் படையினர். மட்டுப்படுத்தப்பட்டளவில் நின்ற எம்மவர்களுக்கும் மலையான பலத்துடன் நின்ற படையினருக்குமிடையே அன்று கடும் மோதல் தொடங்கியது. கட்டிடக் காட்டிடையே பக்கம் பக்கமாக இருதரப்பும் நின்று மோதிக் கொண்டன. ஒவ வொரு காப்பரணும் தமது நிலைமையைச் சொல்லிச் சொல்லிச் சண்டை பிடித்தது. "எங்களில் ஒரு ஆள் காயம்" "ரெண்டு பேர் வீரச்சாவு" "நானும் காயம்" பெரும்பாலான எமது காப்பரண்கள் விழுந்துவிட்டன. வ}ழுகின்ற கடைசி நிமிடத்திலும் எதிரிகளை விழுந்தின. அந்த ஒரு காப்பரண் மட்டும் விழவேயில்லை. அங்கிருந்து படையினரை நோக்கி எதிர்த்தாக்குதல் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அதற்குள் நின்றது மேஜர் கயல்விழி. கயல்விழி இன்னமும் முழுமையாகப் படையினரால் சுற்றிவளைக்கப்படவில்லை. எமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் அவர்கள் வருவதற்கு ஒரு பாதை இன்னமும் பாதுகாப்பாகவே இருந்தது. அந்த ஒரு பாதையால் வெளியேறி வருமாறும், உதவி அணிகளை அழைத்து, அணிகளை மீளமைத்துக் கொண்டு போய் அடித்து இடங்களைப் பிடிக்கலாம் என்றும் வழங்கப்பட்ட கட்டளையை கயல்விழி ஏற்றுக் கொள்ளவில்லை. "கடைசி வரைக்கும் சாவகச்சேரியை விடவேண்டாம்" என்ற தனது அணியினரின் கடைசி வேண்டு கோளையே அவர் ஏற்றுக்கொண்டார். "நான் பின்னுக்கு வரமாட்டென். அந்தப் பாதையால hPமை உள்ளுக்கு அனுப்புங்கோ. நான் நிக்கிற இடத்திலிருந்து அடிச்சுக்கொண்டு போய்ப் பிடிப்பம். விட்டா, திரும்பிப் பிடிக்கிறது கஸ்ரம்" இது கயல்விழி. உதவியணிகள் அரியாலையிலிருந்தும், வாதரவத்தையிலிருந்தும் கொழும்புத்துறையிலிருந்தும் வந்து சேரத் தாமதமாகும் என்பது கயல்விழிக்கு தெரியாததல்ல. எவ வளவு நேரமானலும் அவர்கள் வந்து சேரும்வரை தமது நிலையைத் தக்கவைத்திருப்பதென கயல்விழியும் கயல்விழியோடு நின்றவர்களும் முடிவெடுத்தனர். இப்போது இவர்களைச் சூழவும் படையினர்தான். "ரவுண்ட் அப்புக்குள்ள நிக்கிறம். நாங்கள் சமாளிப்பம். நீங்க ஆக்களைத் தாங்கோ" இவர்கள் நின்ற வீட்டின் மதிலோடு படையினரின் தலைகள் தெரிந்தன. "மதிலோடை வந்து நிக்கிறவங்களைச் சுட்டுக்கொண்டிருக்கிறம். ஆக்களை அனுப்புங்கோ" மதிலைக் கடந்து உள்ளே குதித்த படையினர் மதிலுக்கும் இவர்கள் நின்ற காப்பரணுக்குமிடையே வெட்டப்பட்டிருந்த நகர்வகழிக்குள்ளே இறங்கினார்கள். "பக்கத்தில வந்திட்டாங்கள். நாங்கள் சுட்டுக்கொண்டிருக்கிறம்" படையினரின் Pமு டுஆபு அடி இவர்களின் காப்பரண் சுவரை அதிர வைப்பது கயல்விழியின் தொலைத்தொடர்புக் கருவியுூடே எல்லோருக்குமே கேட்டது. மிக நெருங்கிய படைவீரன் ஒருவன் இவர்கள் வீசிய குண்டு வெடித்து சிங்களத்தில் அலறியதும் கேட்டது. அவர்களின் நிலைமை எல்லோருக்கும் விளங்கியது. சாவகச்சேரி நகரை இழக்கக்கூடாது என்ற முடிவில் உறுதியோடு கடைசி வரை முயன்ற கயல்விழியின் குரல் கடைசியாக ஒலித்தது. "எங்களுக்குக் கிட்ட அவன் வந்திட்டான். இனி எங்கடை தொடர்பு உங்களுக்கு இருக்காது" காற்று தனது வீரவணக்கத்தைச் செலுத்தியது. 5 அந்த தந்தையால் நம்பவே முடியவில்லை. எனது மகள் வீரச்சாவா? அதற்குள்ளாகவா? இப்போதுதானே போனாள்? அதற்குள் எப்படி அவள் ஒரு மேஜராகலு}.? அவர் தனது கேள்விகளைக் கேட்டு, அழுது ஆறுவதற்கு அவரது மகளின் வித்துடல் அங்கே வரவில்லை. அவரின் மகளை அறிந்தவர்கள் வந்தார்கள். அந்தச் சண்டையில் அவரது மகள் வெளிக்காட்டிய ஆற்றலைச் சொன்னார்கள். என் மகளா? என் மகளா? கேள்வி அவரிடம் மட்டுமல்ல அவரருகிலிருந்த திண்ணை மாநாட்டாளர்களிடமும்தான். அவர்களுக்கு எல்லாமே புரிந்ததுபோலவும் இருந்தது. ஒன்றுமே புரியாதது போலவும் இருந்தது. கொஞ்சக் காலமாகவே நாட்டில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் கேள்விகளுக்கும் ஆச்சரியங்களுக்கும் எப்போது இந்த அனைத்துக்கும் அப்பாற்பட்டவைகள் நிகழத் தொடங்க}ன அங்கயற்கண்ணி காலத்திலிருந்தா? 6 கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணியின அம்மா அழுது ஓய்ந்தபின் மகளை நினைத்து ஆச்சரியப்படத்தொடங்கினார். "நாப்பத்தைஞ்சு அடி ஆழக் கடலிலை தனியப் போனவளோ" அவ வளவு ஆழத்தில நிலம் இருட்டா இருக்குமே? என்னெண்டு போனவள்? என்னோடை இருக்கும்மட்டும் இரவில வீட்டுக்கு வெளியாலை போறதுக்கு நான் வேணும் அவளுக்கு. அவள்லு}லு} என்னெண்டு?" அப்போதும் அருகிருந்து ஆச்சரியப்பட்டுக்கொண்டிருந்த திண்ணை மாநாட்டாளர்கள் இப்போது எல்லாவற்றையும் கடந்த நிலைக்கு, இயல்புநிலைக்கு வந்துவிட்டிருந்தனர். திண்ணையில் கூடியிருந்து கதைத்துக் கொண்டிருந்தவர்களின் கவனம் வீட்டுக்குள் கேட்ட சத்தங்களால் கலைந்தது. நிலத்தில் தடியால் அடிக்கும் ஒலி. அவர் திடுக்கிட்டு எழும்பினார். ஏதோ புூச்சி பொட்டோ? இவன் சின்னவன் கண்டுவிட்டு அடிக்கிறானோ? பெரியபிள்ளை மூலை மேசையில் இருந்து படிக்கிறாள். பயந்துவிடப் போகிறாள். பாய்ந்தடித்து வீட்டினுள் ஓடியவர் திடுக்கிட்டு அலறினார். குறை உயிரில் கிடந்த பாம்பைத் தடியில் து}க்கியபடி மகள் வந்து கொண்டிருந்தாள். "மண்ணெண்ணையை எடுத்து வாங்கோ. கொழுத்துவம்" என்றாள். - sethu - 06-21-2003 து}ரனின் பார்வையில்... இரண்டாம் கண்டத்தைத் தாண்டிய சமாதானம் முதற் கட்டத்தையே நிராகரிககும் சனாதிபதி தாய்லாந்தின் மரபியல் நம்பிக்கையின் பிரகாரம் அந்நாட்டு மக்களின் பாரம்பரிய சம்பிரதாயங்களின் அடிப்படையில் எந்தவொரு மகிழ்ச்சிகரமான முன்னேற்றகரமான நிகழ்வுகள் நடந்தாலும் அவற்றை அடையாளப்படுத்துவதற்கான 'சோலே' மரக்கன்றினை நடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. நம்பிக்கைகளும், நம்பிக்கையின்மையும், எதிர்பார்ப்புக்களும், சந்தேகங்களும், ஆதரவும், எதிர்ப்பும் என முரண்பாடான அம்சங்கள் சுற்றி வளைத்து நிற்கும் சூழ்நிலையில் சிறீலங்கா அரசும், விடுதலைப் புலிகளும் தாய்லாந்தில் தமது இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் 'சோலே' மரக்கன்றினை ஒன்றிணைந்து நாட்டியிருக்கிறார்கள். இது அந்த நாட்டு மக்களினதும், மண்ணினதும் பாரம்பரிய நம்பிக்கைகளை மட்டுமல்ல, எங்கள் பிரச்சினைகள் குறித்து அவர்கள் காட்டும் அக்கறையையும், இனநெருக்கடி சமாதானமான முறையில் தீரவேண்டும் என்பதில் அந்த நாட்டின் அரசு காட்டும் பெருவிருப்பார்வத்தையும் கௌரவிக்கும் நடவடிக்கையேயாகும். நாட்டப்பட்டது வெறுமனே ஒரு 'சோலே' மரம்தான் என்றாலும் அது சமாதானம் மீதான நம்பிக்கையின் குறியீடாகவே அர்த்தப்படுகிறது. அதற்கு ஊற்றப்பட்ட நீரும் அது நேராக கம்பீரமாக வளர்வதற்கு பக்கத்துணையாக நாட்டப்பட்ட 'தடிகளும்' அந்த மரம் எக்கட்டத்திலும் சரிந்தோ முறிந்தோ போய்விடாது ஆழவேரூன்றி அகலக்கிளை பரப்பி வளரவேண்டும் என்பதற்காகத்தான். சமாதான முன்னெடுப்புக்களும் அப்படியே பக்கபலத்துடனும், உறுதியான ஆதரவுடனும் தனது நிதானமான வளர்ச்சியையும் இலக்கு நோக்கிய உறுதியான முன்னேற்றத்தினையும் காணவேண்டும் என்ற தாய்லாந்தின் மனித அக்கறையையும் இந்த 'சோலே' மர நாட்டலின் அர்த்தம் வெளிப்படுத்தி நிற்கிறது. பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் மட்டுமல்லாது உலக மக்கள் சமாதானமாக வாழவேண்டும் என்ற அபிலாசைகளையும் கொண்ட தாய்லாந்தின் மக்களுக்கும், அரசுக்கும் தமிழ் மக்கள் "நன்றி" வார்த்தைகளால் கூறமுடியாத ஒன்றாகும். அந்த 'சோலே' மரக்கன்று நன்றியின் குறியீடாகவும் அர்த்தம் கொள்ள வைக்கும். தாய்லாந்தே உனக்கு எங்களின் பணிவான வந்தனம். சிறீலங்காவின் பேரினவாதிகளுக்கு 'புத்தம்' என்பதன் தத்துவம் 'அமைதி' என்பதன் அடிப்படையில்தான் உள்ளது என்பதை விளக்கியமைக்கு நன்றி. 'நித்திய கண்டம் புூரண ஆயுள்' எனத் தமிழில் ஒரு பழமொழியுண்டு. சிறீலங்காவில் சமாதானம், அமைதி என்பதற்கு நித்திய கண்டம்தான்லு} ஆனால் இனவெறியும், போரும், மதவாதமும் ஏற்படுத்திவரும் அழிவுகளுக்கும், கொடுமைகளுக்கும் அப்பால் அவ வப்போதும் அவை நம்பிக்கையுடன் துளிர்விடுவதும் பின்னர் மீண்டும் சிதைக்கப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இது ஒரு வரலாறாகவே தொடர்கிறது. 'திம்பு'வில் தொடங்கி இப்போது தாய்லாந்தைக் கடந்து நோர்வேக்கு அடியெடுத்து வைக்கும் நிலையில் சிறீலங்காவின் இனப்பிரச்சினைக்கான சமாதான முயற்சிகள் இன்னமும் தளராத நம்பிக்கையுடன் இருப்பது மகிழ்ச்சியை மட்டுமல்லாது வியப்பையும் ஊட்டும் விடயமேயாகும். அறுதிப் பெரும்பான்மையற்ற அரசும், பெரும்பான்மையான அதிகாரத்தைக் கொண்ட சனாதிபதியும் சமாதானம் குறித்த விடயங்களில், முன்னெடுப்புக்களில் தொடர்ந்து முரண்பட்டுக்கொண்டே இருக்கும் நிலையில் சமாதானம் மீதான மக்களின் விருப்பார்வம் என்ற ஆதரவுப் பலத்தை மட்டும் நம்பியே ரணிலின் அரசு சமாதானம் நோக்கிய நகர்வுகளை மேற்கொள்கிறது என்றே கூறவேண்டும். சமாதானத்திற்கு மட்டுமல்ல, ரணிலின் அரசுக்கும் கூட இப்போதைய நிலையில் நித்திய கண்டம் புூரண ஆயுள் என்ற நிலைதான் தொடர்கிறது. இந்த நிலையிலும் மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு அமைய சந்திரிகாவின் விருப்பத்திற்கு மாறாக தாய்லாந்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைகள் அதன் இரண்டாவது 'கண்டத்தையும்' வெற்றிகரமாக நம்பிக்கையுூட்டும் வகையில் தாண்டி மூன்றாவது கட்ட பாய்ச்சலுக்கு தயார்படுத்தும் நிலையை எட்டியுள்ளது. இந்த இரு கட்ட பேச்சுக்களும் ஒரு அரசியல் தீர்வு குறித்த முன்னோடிப் பேச்சுக்களாக, பரஸ்பரம் இரு தரப்பினரும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கான புரிந்துணர்வின் அடிப்படையிலான பேச்சுக்களாக இருந்த போதிலும் கூட சிறீலங்காவின் சனாதிபதி அதன் மீது வெறுப்புக் கொண்டவராக அதனை நிராகரிப்பவராகவே உள்ளார். 'சமாதானம்' என்ற சொல்லைக் கூட அதிகாரத்தொனியடன் உச்சரிக்கும் ஒரு அகங்காரமே அவரில் இருந்து வெளிப்பட்டு வருகிறது. அவரது சொல்லும் செயலும் அண்மைக் காலங்களில் மிகவும் அருவருக்கத்தக்க, ஒரு சனாதிபதிக்கு எந்த வகையிலும் ஒவ வாத ஒன்றாகவே வெளிப்பட்டுவருகிறது. சமாதானத்தை நோக்கிய நகர்வுகளில் புலிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்த்து நடப்பதை அவர் முற்றாகவே நிராகரிக்கிறார். தடை செய்யப்பட்ட நிலையில் -இரண்டாம்தர அடிமை நிலையில் புலிகளை வைத்துக் கொண்டுதான் பேச்சுக்களை நடத்த வேண்டும் என்பதில் அவர் விடாப்பிடியாகவே இருக்கிறார். இயல்பு வாழ்க்கை என்ற விடயத்தை வரையறை செய்யவேண்டும் என்கிறார். அரசோ பிரச்சினையின் இராணுவ ஆக்கிரமிப்பு முற்றுகையை நீக்குவதில் அவருக்கு உடன்பாடே இல்லை. பேச்சுவார்த்தைக்கான கால எல்லை என்பதை வரையறை செய் வேண்டும் என்கிறார். அரசோ பிரச்சினையின் ஆழம் அதிகம் என்பதால் காலவரையறை சாத்தியமற்றது என்ற நிலைப்பாட்டைக் கொண்டதாக உள்ளது. ஜே.வி.பி, சிகல உறுமய போன்ற பேரினவாத சக்திகளின் நெருக்கமும் அவர்களின் நெருக்குதல்களும் சமாதானம் குறித்து நியாயமான அணுகுமுறைகளை மேற்கொள்ள சந்திரிகாவைத் தடுக்கும் காரணிகளாக வியுூகமமைத்துள்ளன. இவர்களைவிடவும் புற ஆதரவு எதுவும் இல்லை கட்சி மற்றும் அரசியல் hPதியாக அவருக்கு இல்லாததால் இதனை புறக்கணிக்க முடியாதவராகவும் அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. நோர்வே சமாதானம் தொடர்பான பங்களிப்பையும் பேச்சுக்களின் போதான அனுசரணையையும், குறிப்பாக அதில் எரிக் சோல்ஹெய்ம் அவர்களின் தீவிரமான அக்கறையையும் முற்றும் முழுதாகவே சந்திரிகா எதிர்ப்பவராக உள்ளார். இவை சில முக்கியமான கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயங்களாகும். விரும்பியோ விரும்பாமலோ சந்திரிகாவை பேச்சுவார்த்தை தொடர்பான நிகழ்ச்சி நிரல்களில் இருந்து முற்றாக புறக்கணிக்க முடியாத நிலை, தவிர்க்க முடியாத அம்சமாகியுள்ளது. சந்திரிகா நிராகரித்தாலும், புறக்கணித்தாலும், அவமதித்தாலும் கூட பேச்சுவார்த்தை தொடர்பான முன்னேற்றங்களை அவரிடம் போய் விளக்க வேண்டிய கட்டுப்பாடு அரசுக்கு இருக்கவே செய்கிறது. இது ஒரு அரசியல் நாகாPக சம்பிரதாயத்தின் அடிப்படையில் அமைந்ததாகும். ஆனால், இந்த விளக்கத்தையும், விபரிப்பதையும் கேட்கும் நிலையில் அவர் இல்லைலு}. எதிர்காலத்திலும் அவ வாறு இருக்கப்போவதுமில்லை. இதேவேளை சந்திரிகாவின் அங்கிகாரமும் அனுசரணையும் இல்லாமல் எந்தவொரு தீர்வையும் நடைமுறைப்படுத்துவதென்பது தற்போதைய அரசியலமைப்பின் அடிப்படையில் அரசுக்கு சாத்தியமற்றதேயாகும். நிறைவேற்று அதிகார பலம் சனாதிபதியின் கையிலேயே உள்ளது. முடிவெடுக்கும் சக்தியாக அவரே உள்ளார். இதுவே சமாதானமும், சிறீலங்காவும் எதிர்கொள்ளப்போகும் எதிர்கால அவலங்களுக்கும், ஆபத்திற்கும் காரணியாகவும் விளங்கப்போகிறது. சந்திரிகாவின் அதிகாரங்களை 'வெட்டாமல்' அதிகார பலமற்ற அரசால் அது எவ வளவு மக்களின ஆதரவைக் கொண்டதாக இருந்தாலும் கூட, எந்தவிதமான தீர்வையும், திட்டங்களையும் அமுல்படுத்துவதென்பது முடியாத காரியம். இந்த நிலையில்தான் அரசும் புலிகளும் தமது பேச்சுவார்த்தைகளின் இரண்டாவது 'கண்டத்'தைத் தாண்டியுள்ளார்கள் என்று கூறவேண்டியுள்ளது. சனாதிபதியின் ஆதரவோ, அங்கீகாரமோ இல்லா நிலையில்தான், சர்வதேசத்தின் ஆதரவுப் பலத்தினையும், மக்களின் சமாதானம் மீதான அபிலாசைகளையும் நம்பித்தான் நோர்வேயில் நடைபெறத் திட்டமிட்டுள்ள மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரல்கள் தயாரிக்கப்படவுள்ளன. அரசும் புலிகளும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமான நம்பிகையுூட்டும் வகையில் அமைந்ததென அறிக்கைவிட்ட வேளையில் சந்திரிகாவுக்குள் ஒரு எரிமலை கொதித்துக் கொணண்டுதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. சமாதான நகர்வுகளின் வெற்றி சந்திரிகாவின் அரசியல்வாழ்வுக்கு கிடைக்கும் தோல்வி மட்டுமல்லலு}. முற்றுப்புள்ளியும் கூட. இதனை அவர் அனுமதிக்கப்போவது கிடையாது. அடிக்கடி அவர் கூறும் அல்லது எச்சரிக்கும் தனது 'அதிகாரப் பலப் பிரயோகம்' என்பதை எப்போது பயன்படுத்தப் போகிறார். இன்னும் இரு மாதங்களின் பின்னர் அவர் எப்போதும் அதைப் பயன்படுத்தி இந்த அரசை ஆட்சிக் கலைப்புச் செய்ய முடியும். அதனைவிடவும் வேறு வழி அவருக்கு கிடையவே கிடையாது. மற்றொரு தேர்தலை உடன் சந்திக்கும் மனோபலம் அவருக்குமில்லை. அவரின் சக தோழர்களுக்கும் கிடையாது. இந்நிலையில் 'ரணில்' நெருக்கடிகளைத் தவிர்க்கவும் மக்களிடம் தனது அரசியல் நேர்மையைக் கூறி மீண்டும் ஒரு அறுதிப் பெரும்பான்மையைக் கோரத் தானே ஆட்சியைக் கலைத்து பதவிவிலகலாம். ஆனால் நொண்டிச் சாட்டுக்களுக்குப் பெயர்பெற்ற சந்திரிகா உடன் தேர்தலை நடத்தமாட்டார் என்பதும் சர்வ நிச்சயமான விடயம். அப்படி அவர் நடத்த முன்வந்தால் அவர் அரசியல் தற்கொலை செய்யப்போகிறார் என்பதுதான் அர்த்தம். இந்த இக்கட்டான சூழ்நிலை தென்னிலங்கையில் ஒரு பாரது}ரமான அரசியல் குழப்பம் ஏற்படவே வழிவகுக்கும். குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கக் காத்திருக்கும் மக்கள் ஆதரவற்ற பேரினவாத சக்திகள் அதற்கு காலம் பார்த்துக் காத்திருக்கின்றனர்லு}. இந்தக் கட்டத்தில், சமாதானம் தொடர்பான அடுத்து வரப்போகும் கட்டங்கள் எத்தனை கண்டங்களைத் தாண்ட வேண்டியிருக்கப் போகின்றது என்பதை சிந்திக்காமல் இருக்கவும் முடியாது. நோர்வேயும், சர்வதேச சமாதான ஆதரவு சக்திகளும் இந்த நிலையில் என்ன நடவடிக்கைகளை எடுக்கும். இதுவும் ஒரு மில்லியன் டொலர் பெறுமதியான கேள்வியாக இப்போதுள்ளதுலு}. இந்நிலையில் வடக்கிலும், கிழக்கிலும் வெட்டப்பட்ட குண்டுவீச்சால் சிதறிப்போன எஞ்சித் தப்பிப் பிழைத்துள்ள மரங்கள் யாவும்லு}. குறிப்பாக பனைகளும் பனைகளும் தென்னைகளும் தாய்லாந்தில் நாட்டப்பட்ட 'சோலே' மரக்கன்றினை எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் மட்டுமல்ல ஏக்கத்துடனும் பார்த்தவண்ணமேயுள்ளனலு}.. சந்திரிகா தாய்லாந்து மண்ணினதும் மக்களினதும் பாரம்பரிய நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுப்பாரா அல்லது அதனை சிதைக்கப் போகிறாராலு}..? அவர்கள்தான் முடிவெடுக்கவேண்டும். - sethu - 06-21-2003 இடைக்கால நிர்வாக சபைக்கு என்ன நடந்தது-நிலாந்தன் சனாதிபதி சந்திரிக்காவால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் தமது விசுவாசத்தை நிரூபிக்கச் சமாதானத்தைப் பலியிடத் துணிந்தமையென்பது அபகீர்த்திக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பாதுகாக்கும் ஒரு பாரம்பரியத்தில் எதிர்பார்திருக்கப்பட வேண்டிய ஒன்றே. ஆங்கிலத்தில் ஒரு வசனம் உண்டு. ழே துரளவiஉந ழே Pநயஉந என்று. இதன் அர்த்தம் நீதி இல்லை என்றால் சமாதானமும் இல்லை என்று வரும். அண்மையில் சிறீலங்காவின் நீதித்துறை சமாதான முயற்சிகளுக்கு எதிராக இரண்டு தீர்ப்புக்களை வழங்கியிருக்கிறது. முதலாவது 19வது திருத்தச் சட்டத்தின் மீதான தீர்ப்பு மற்றது மத்திய வங்கிக் குண்டுத் தாக்குதல் வழக்கின் மீதான தீர்ப்பு. கடந்த சுமார் 10 மாதகால சமாதான முயற்சிகளைப் பொறுத்தவரை அதன் எதிரிகள் மேற்கொண்ட எல்லாவித சதி முயற்சிகளோடும் ஒப்பிடுகையில் மேற்படி தீர்ப்புக்கள் பாரது}ரமானவை. குறிப்பாக 19ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிரான தீர்ப்பு யதார்த்தத்தில் சமாதான முயற்சிகளுக்குள்ள வரையறைகளை உணர்த்திவிட்டது. கடந்த 10 மாத காலத்திலும் சமாதானத்துக்கு எதிரான சக்திகளை மிகவும் சந்தோசப்படுத்திய அவர்களுக்கு புத்துணர்ச்சியுூட்டிய ஒரு தீர்ப்பு அது. வியாபாரிகளைப் பொறுத்தவரை ஒரு நன்நாள். அச்சட்டத்திருத்தம் கொழும்பில் அதிகமதிகம் புலிகளோடு சேர்த்தே கதைக்கப்பட்டது. புலிகள் கேட்பதை எல்லாம் ரணில் விக்கிரமசிங்க கொடுப்பதற்குத் தடையாகக் காணப்படும் சனாதிபதியைப் பலவீனப்படுத்த புலிகளும் அரசாங்கமும் சேர்ந்து வகுத்த திட்டம் இதுவென்ற அபிப்பிராயம் படித்த சிங்களவரில் ஒரு பகுதியினர் மத்தியில் பரவலாகக் காணப்பட்டது. மேலோட்டமாகப் பார்த்தால் மேற்படி தீர்ப்பு சனாதிபதியின் அதிகாரங்களைப் பாதுகாப்பது போலத் தோன்றும். ஆனால் ஆழமாகப் பார்த்தால் அது சமாதானத்தின் வழியில் காணப்படும் ஒரு கெட்ட சகுனம். சனாதிபதி சந்திரிக்காவால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் தமது விசுவாசத்தை நிரூபிக்கச் சமாதானத்தைப் பலியிடத் துணிந்தமையென்பது அபகீர்த்திக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பாதுகாக்கும் ஒரு பாரம்பரியத்தில் எதிர்பார்த்திருக்கப்பட வேண்டிய ஒன்றே. இத்தனைக்கும் இத்திருத்தச் சட்டத்தை வளர்த்தது சட்ட மற்றும் அரசியலமைப்பு விவகாரங்களில் நிபுணர்கள் என்றழைக்கப்பட்ட பேராசிரியர் பு.டு. பீரிஸ் போன்றோரே. இச்சட்டத்திருத்தம் இப்படியொரு முடிவை அடையக் கூடும் என்பதை ஏனிந்த நிபுணர்கள் ஊகிக்காமல் விட்டார்கள்? இத்தீர்ப்பு சமாதானத்தை அதன் அடுத்த கட்டங்களுக்கு நகர்த்துவதற்குரிய தளத்தைப் பலவீனப்படுத்திவிட்டது. இது சமாதானத்துக்கான நிகழ்ச்சி நிரலை மாற்றி வரையும்படி செய்து விட்டது. முதற்கட்டப் பேச்சுக்களின் நிகழ்ச்சி நிரலின் இடைக்கால நிர்வாகசபை பற்றிய உரையாடல் தவிர்க்கப் பட்டதற்குரிய பின்னணி இதுதான் என்று கொழும்பிலிருந்து க}டைக்கும் தகவல்கள் கூறுகின்றன. அதாவது இடைக்கால நிர்வாக சபை ஒன்றை நிறுவுவதானால் பாராளுமன்றத்தில் 2ஃ3 பெரும்பான்மை ஆதரவு அவசியம். ஏனெனில் ஒற்றையாட்சி அமைப்பின் கீழ் இடைக்கால நிர்வாக அமைப்பொன்றை சாதாரண சட்டங்களின் கீழ் கொண்டுவர முடியாது. அதற்கு விசேட சட்டமூலம் கொண்டுவரப்பட்டு அது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மூலம் நிறைவேற்றப்பட வேண்டும். சில சமயம் விவகாரம் நீதிமன்றத்திடமும் விடப்படலாம். ஆனால் 19வது திருத்தச் சட்டத்தை நீதிமன்றம் நிராகரித்து விட்டிருந்த ஒரு பலவீனமான பின்னணியில் இடைக்கால நிர்வாக சபைக்காக 2ஃ3 பெரும்பான்மை ஆதரவைக் கோரும் வாக்கெடுப்பை நடாத்துவது. விவேகமானது அல்ல என்று அரசாங்கம் கருதியதாக கூறப்படுகிறது. இதனால் சமாதானம் செய்பவர்கள் நேர்வழியில் சிந்திப்பதைத் தவிர்த்து அரசியலமைப்பில் முட்டுப்படாத விதத்தில் குறுக்கு வழியில் மாற்று ஏற்பாடுகளைக் குறித்துச் சிந்திக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் உண்டாகியது. இதன் விளைவே கூட்டுச் செயலணிகள். இங்கேயும் தாம் நீதிமன்றம் போகப்போவதாக யுத்த வியாபாரிகள் கூச்சலிட்டார்கள். செயலணிகள் அரசியலமைப்புக்கு உட்பட்டவைகளாயிருக்க வேண்டும் என்று சந்திரிக்கா கூறலாம். முஸ்லிம்கள் கிழக்கில் ஏற்கனவே தமது விவகாரங்களைக் கவனிப்பதற்கென்று ஒரு அமைச்சரவைப் பெற்றிருக்கிறார்கள். இந்த அமைச்சின் கீழ் இதுவரை காலமும் அவர்கள் பெற்றுவரும் நன்மைகளைப் பாதுகாக்கும் விதத்திலேயே செயலணிகளுக்கு அதிகாரம் பகிரப்பட வேண்டும் என்று அவர்கள் வற்புறுத்தினார்கள். இதெல்லாம் இப்படியிருக்க செயலணிகள் யாருக்குப் பதில் கூறும் அமைப்புக்களாயிருக்க வேண்டும் என்பதில் அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் அபிப்பிராய பேதங்கள் தோன்றியதாகவும் கூறப்படுகின்றது. செயலணிகள் பிரதமரின் அலுவலகத்துக்குப் பதில் கூறும் அமைப்புக்களாயிருக்க வேண்டும் என்று அரசாங்கம் கேட்டது. புலிகளோ அவை சுயாதீனமான அமைப்புக்களாயிருக்க வேண்டும் என்று கேட்டார்கள். தற்சமயம் புனர்வாழ்வு, புனரமைப்பு போன்ற பணிகளை பிரதமரின் நேரடிக் கட்டுபாட்டிலிருக்கும் திட்ட அமுலாக்கல் அமைச்சே மேற்கொண்டு வருவதால் செயலணிகளைப் பிரதமரின் அலுவலகத்திற்குப் பதில் கூறும் அமைப்புக்களாக உருவாக்கினால் சட்ட மற்றம் நிர்வாகப் பிரச்சினைகள் வராது என்று அரசாங்கம் கருதியதாகக் கூறப்படுகிறது. ஆனால் செயலணிகள் அதிகாரப் பகிர்வின் கருக்களைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் இதில் ஆகக் குறைந்த பட்சம் பலஸ்தீன மற்றும் கோசோவா மாதிரிகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் தமிழர் தரப்பில் வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. உபகுழுக்கள் புலிகள் கேட்டபடியே சுயாதீனமாக இயங்கும். அரச அமைப்புக்கள் எதற்கும் அவை பதில்கூற வேண்டியதில்லை. பதிலாக, பேச்சுக்களில் கலந்து கொள்ளும் இருதரப்புப் பிரதிநிதிகளும் பதில் கூற வேண்டியிருக்கும். இது ஒப்பீட்டளவில் சுயாதீனமானது, தனித்துவமானது. உத்தேச இடைக்கால நிர்வாக சபையின் கருக்கள் இதில் காணப்படுகின்றன. இதில் வரும் ளுரி - உப என்ற சொல் யுத்த வியாபாரிகளின் கவனத்தை அதிகம் ஈர்க்காத அல்லது ஒன்றாயிருக்கலாம். உபகுழுக்கள் என்பதால் நடைமுறையில் ஒரு நடமாடும் இடைக்கால நிர்வாக சபைதான் என்று யாரேனும் ஒரு யுத்தவியாபாரி கனவு கண்டு விழித்தெழுந்து கூச்சல் போடலாம். கோர்ட்டுக்கும் போகலாம். ஆனால் இடைக்கால நிர்வாக சபையிலிருந்து உபகுழுக்கள் வரை படிப்படியாக நிகழ்ந்து வரும் உருவ மாற்றம் உள்ளடக்க மாற்றங்கள் ஒன்றைக் காட்டுகின்றன. அது - கொழும்பில் ரணில் எவ வளவு பலவீனமாக இருக்கிறார் என்பது. சமாதானத்தைப் பொறுத்தவரை அவர் நியுூயோர்க்கிலும் லண்டனிலும் பலசாலி போலத் தோன்றலாம். ஆனால் கொழும்பில் அவர் மிகவும் பலவீனமானவராகத் தோன்றுகிறார். இந்நிலையில் - வெற்றிகரமாகச் சமாதானம் செய்வது என்பது வெற்றிகரமாகச் சந்திரிகாவைக் கையாள்வதுதான். ஒரு கனவான் அரசியலுக்குரிய விழுமியங்களை மதித்து விட்டுக் கொடுத்துப் பேரம் பேச சனாதிபதி சந்திரிகா தயாராக இருப்பதாக தெரியவில்லை. எனவே அவரைத் தனிப்பைப்படுத்தும் ஒரு வியுூகத்தில் புலிகளையும் பங்காளிகளாக்குவதைத் தவிர ரணிலுக்கு வேறு தெரிவுகள் இருப்பதாகத் தெரியவில்லை. சந்திரிகாவை விடவும் புலிகளுடன் ஒரு கனவான் அரசியலைச் செய்ய அவர் தயாராகிவிட்டது போலத் தெரிகிறது. இது விசயத்தில் புலிகள் ரணிலை அனுசரித்தப் போவதன் மூலம் சிங்களவர்களை பிரித்தாள எத்தனிப்பதாக ஒரு பகுதி படித்த சிங்களவர்கள் கூச்சலிடுகிறார்கள். பிரித்தானியப் பல்கலைக்கழகத்தில் கலாநித}ப்பட்டம் பெற்ற அன்ரன் பாலசிங்கம் பிரித்தானியரின் அதே பிரித்தாளும் உத்தியைப் பாவித்து இரு பிரதான சிங்களக் கட்சிகளையும் பிரிக்கப் பார்க்கிறார் என்று சம்பிக்க லியனாராயச்சி என்ற பத்தி எழுத்தாளர் டெய்லி மிரரில் எழுதுகிறார். சந்திரிகாவுக்கு எதிராக ரணிலைப் பலப்படுத்துவதன் மூலம் புலிகள் ரணிலிடம் இருந்து எதையோ இரகசியமாக பெற முயல்வதாக ஒரு சந்தேகம் படித்த சிங்களவரில் ஒரு பகுதியினர் மத்தியில் பரவி வருகிறது. 19ஆவது திருத்தச் சட்டத்தின் மீதான தீர்ப்பை ஊக்குவித்த அபிப்பிராயப் பின்புலம் இதுவே என்று ஊகிக்கப்படுகிறது. ஆனால் இடைக்கால நிh வாக சபையிலிருந்து செயலணிகள் என்றும் உபகுழுக்கள் என்றும் நிகழ்ந்து வரும் பெயர் மற்றும் உருவ உள்ளடக்க மாற்றங்கள் எல்லாவற்றுக்கும் பின்னால் பரஸ்பரம் விட்டுக்கொடுத்து பேரம் பேசும் ஒரு பாரம்பரியம் மெல்லத் துளிர்த்து வளர்ந்து வருகிறது. இது யுத்த வியாபாரிகளின் முகவர்கள் போலத் தொழிற்படும் மீடியாக்காரர்களுக்கு தெரிவதேயில்லை. இவர்கள் பரப்பும் வதந்திகளால் வசியஞ் செய்யப்பட்ட ஒரு பகுதி படித்த சிங்களவருக்கும் தெரியவதில்லை. அம் முறை சமாதானம் செய்வதில் உள்ள மிகவும் கவர்ச்சியான மிகவும் முதிர்ச்சியான மிகவும் நம்பிக்கையுூட்டும் ஓரம்சமே அதுதான். பரஸ்பரம் விட்டுக்கொடுத்து பேரம் பேசும் ஒரு வித கனவான் அரசியல். யுத்த வியாபாரிகளுக்குத் தலைமை தாங்கிவரும் ஒரு சனாதிபதியைப் பாதுகாக்கும் அரசியலமைப்பின் வரையறைக்குள் சர்வதேச நகரில் பலவீனமாகவும் காணப்படும் ஒரு பிரதமரும் சிறுபான்மை மக்களும் சேர்ந்து செய்யக் கூடிய ஆகக் கூடியபட்ச விஞ்ஞான புூர்வமான அணுகுமுறையும் இதுதான். - sethu - 06-22-2003 தமிழர் மத்தியில் இசை வளர்த்ததும் வளர்க்க வேண்டியதும். தமிழர் மத்தியில் வழங்கும் இசையினை 4 வகையாக வகுக்கலாம். 01 செவ்விய இசை 02 நாட்டாரிசை 03 வெகுஜன இசை 04 மக்களிசை செவ்விய இசைக்கு ஒரு வரலாறுஉண்டு. இவ்விசையைக் கர்நாடக இசை, தமிழிசை என அழைக்கும் மரபு எம்மத்தியில் உண்டு. கர்நாடக இசை, தமிழிசை சம்பந்தமாக ஏராளமான நு}ல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளன. செவ விய இசையை வளர்ப்பதற்கென எம்மத்தியில் ஒரு பிரிவினர் இருந்து வந்துள்ளனர். அரசாலும், பிரபுக்களாலும் கோயில்களாலும், நிறுவனங்களாலும் இம்மரபு போஸிக்கப்பட்டதனால் இது வளர்க்கப்பட்டுள்ளதுடன் இவ விசைமரபே தமிழர் இசைமரபாகக் கூறப்பட்டுள்ளது. செவ விய இசைக்குச் சமாந்தரமாக நாட்டாரிசையும் தமிழர் மத்தியில் இருந்துள்ளது. இவ விசை மக்களின் அன்றாட வாழ்வுடன் பின்னிப் பிணைந்திருந்தமையால் இது அழியாமல் இருந்துவந்துள்ளது. எனினும் கால மாற்றத்திற்கு ஏற்ப மாற்றம்பெற்றும் வந்துள்ளது. செவ்விய இசையும், நாட்டாரிசையும் ஒன்றிலிருந்து ஒன்று பெற்றும், கொடுத்தும் வளர்ந்து வந்துள்ளமையை இசை வரலாறு மூலம் அறிகிறோம். தமிழ் இசை வரலாறு எழுதியோர் நாட்டாரிசையை அதனுடன் இணைத்தாரில்லை. 19ம் நு}ற்றாண்டில் பார்ளி நாடக மரபின் வருகையுடன் வெகுஜன இசைமரபு தமிழர் மத்தியில் புகுகின்றது. கர்நாடக இந்துஸ்தானி இசைகளை பார்ளி நாடக மரபு மக்கள் மத்தியில் கொண்டு செல்கிறது. பின்னணிச் சினிமா (1930களில்) இவ வெகுஜன இசையை வளர்க்கும் ஊடகமாயிற்று. அதன்பின் வானொலி, ரெலிவிஸன் என்பன வெகுஜன இசை வளரக் காரணிகளாயின. வெகுஜனக் கலாச்சாரம் என்பது தொழில்நுட்ப உதவியுடன் செய்யப்படும் மாய்மாலம் என்பர். பணம் மீட்டும் பண்புடைய இவ வெகுஜன கலாச்சாரம் மக்களை மயக்கத்தில் ஆழ்த்தக்கூடியது. இது செவ விய கலாச்சாரத்தினதும் நாட்டுப்புற கலாச்சாரத்தினதும் வீரியத்தை நீர்த்துப் போக வைக்கும் தன்மையுடையது. 19ஆம் நு}ற்றாண்டில் எழுந்த இந்த வெகுஜன இசை(சினிமா இசை) செவ விய இசையையும், நாட்டுப்புற இசையையும் மக்கள் மத்தியில் ஜனரஞ்சகப் படுத்தியதாயினும் அவற்றின் வீரியத்தை குறைத்து விட்டது. 20ம் நு}ற்றாண்டில் இவ வெகுஜன இசை, பணம் பண்ணும் முதலாளிகளினால் திட்டமிட்டு வளர்க்கப்பட்டதை காண்கிறோம். சினிமாவில் 1930 களில் செவ விய இசை பு . இராமநாதன் போன்றோருக்கூடாகவும், 1950, 60 களில் கர்நாடக இசையை அடித்தளமாகக் கொண்ட மெல்லிசை ஆ.ளு விஸ்வநாதன் போன்றோருக்கூடாகவும், 1970 களில் கிராமிய இசை இளையராஜா போன்றோருக்கூடாகவும், 1980 களில் சிறப்பாக மேல்நாட்டிசையும் குறிப்பாக கிராமிய, கர்நாடக இசைகள் ரகுமானுக்கூடாகவும், சினிமாவுக்கூடாக வெகுஜன இசையாக பரிணமிப்பதை காண்கிறோம். இவ விசை மரபே இன்று பட்டி தொட்டிகளிலெல்லாம் கேட்கப்படுகிறது. இச்சினிமா இசையில் செவ விய, கிராமிய இசைகள் ஜனரஞ்சகப் படுத்தப்பட்டன. மக்களை மயக்கத்திலாழ்த்திய இவ விசைப் போக்கிற்கு மாற்றாக எழுந்த இசைமரபே மக்களிசை மரபாகும். இவ் விசை மரபு, மக்கள் நலநாட்டம் கொண்ட மக்களியக்கங்களாலும் தனிப்பட்டோராலும் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் பிரச்சினைகளை மக்களுக்குணர்த்த செவ விய இசை, நாட்டாரிசை கலந்த ஒருவித இசை மரபினை இவ விசையாளர் பயன்படுத்தினர். ல்னிவாசன் இதன் முன்னோடியாவார். பாடகர்களின் குரல் வளத்தை மாத்திரமே அடிப்படையாகக் கொண்ட கொயர் இசைக்கு அவர் முக்கியத்துவமளித்தார். ரூசூ009;நிறுவனங்களுக்குள்ளும், கோயில்களுக்குள்ளும் மேலோங்கிகளுக்குள்ளும் ஒடுங்கிக்கொண்ட கர்நாடக சங்கீதத்துக்கும் மக்களை மயக்கத்திலாழ்த்திய பாத்தனமான சினிமா சங்கீதத்திற்கும் மாற்றாகத் தோன்றிய இம் மக்கள் சங்கீதம், மக்கள் கலை இலக்கிய மன்றம், தமிழிசை இயக்கம், நக்ஸல்பாரிக் குழுவினர் போன்ற நிறுவனங்களாலும் குணசேகரன், தேவேந்திரன் போன்றோராலும் முன்னெடுக்கப் படுகின்றன. ரூசூ009;தமிழ்நாட்டு அரசியல், சாதிப் பிரச்சினை, பெண்ணுரிமை, சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பன இப்பாடல்களின் கருவாக அமைந்துள்ளன. ரூசூ009;தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் கரிசல்காட்டுப் பாடல்கள், தன்னானே குழுவினரின் நக்ஸல்பாரி இயக்கம் சார்ந்தோர் வெளியிட்ட சமூக அரசியல் இயக்கப் பாடல்கள் தலித்துகளின் கஸ்டங்களை விளக்கும் குணசேகரனின் பாடல்கள் என்பன ஒலி நாடா வடிவில் இன்று பரவலாக விற்பனையாகின்றன. இவை கணிசமான அளவு மக்களைக் கவர்ந்துள்ளதுடன் மக்களைச் சிந்திக்கவும் வைக்கின்றன. ரூசூ009;ஈழத்துத் தமிழர் மத்தியிலும் இந்த நான்கு வகை இசை மரபுகளையும் காண்கிறோம். தமிழகத் தொடர்பு காரணமாக ஈழத்துத் தமிழர் மத்தியில் பண்டுதொட்டு இன்று வரை ஒரு செவ விய இசை மரபு இருந்து வந்துள்ளது. அரசவை, பெரும் கோயில்களை மையமாகக் கொண்டு வாழ்ந்த இசை வேளாளர் இம் மரபை வளர்த்துள்ளனர். இம்மரபு இன்று கல்வி நிறுவனங்களினால் வளர்க்கப்படுகின்றது. ரூசூ009;நாட்டாரிசையை வளர்க்கும் முயற்சிகள் 1960 களில் ஈழத்தமிழர் மத்தியில் உண்டாயின. ஆனால் அவை திட்டமிட்டு வளர்க்கப்படவில்லை. ரூசூ009;வெகுஜன இசை ஈழத்துக்கு என்று இல்லாவிடினும் தமிழ்நாட்டு வெகுஜன இசையே எமது வெகுஜன இசையாயிற்று. இன்று இவ விசை மரபினை தமிழ்நாட்டிலிருந்து இங்கு இறக்குமதியாகும் சினிமாவும், தமிழகச் சினிமாக் கலைஞர்களும், எமது நாட்டு வானொலியும், தொலைக்காட்சி நிறுவனங்களும் பெருமளவில் பரவலாக்கி வளர்த்து வருகின்றன. இவற்றிற்கு மாற்றீடாக எழுந்த மக்களிசை மரபொன்றும் எம்மத்தியில் உண்டு. ரூசூ009;1970 களில் எம்மத்தியில் எழுந்த மெல்லிசையில் மக்களிசை மரபின் ஊற்றுக்களைக் காணமுடியும். நாட்டுப்பற்று, மக்கள் பிரச்சினைகள் என்பன அவற்றில் பேசப்பட்டன. தமிழ் தேசிய இயக்கங்கள் தம் கருத்துப் பிரச்சாரத்திற்கு ஒரு வலிமை வாய்ந்த ஆயுதமாக மக்களிசையைப் பயன்படுத்துகின்றன. கர்நாடக இசை, நாட்டாரிசை கலந்து உருவான இவ விசை மூலம், பெண்கள் பிரச்சினை (சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலைய இசை ஒலி நாடா) போன்றனவும் கூறப்படுகின்றன. ரூசூ009;ரூசூ009;ஏற்கனவே வளர்ந்திருந்த செவ விய இசை மரபையும், குணாம்சமுள்ள நாட்டாரிசை மரபையும் வெகுஜன இசை அழித்தொழிக்கும் இக்காலகட்டத்தில் இதற்கு மாற்றாக அலைகடலில் ஒரு துரும்பெனக் காட்சி தருவது இம் மக்களிசை மரபேயாகும். ரூசூ009;உலகெங்கணும் அடக்கப்படும் மக்களிடம் இம் மக்களிசை மரபைக் காணுகிறோம். அமெரிக்காவில் மக்கள் பிரச்சினைகளையும் வியட்நாம் எதிர்ப்புப் பிரச்சாரங்களையும் பொப்பில் பாடிய பொட்டிலன், ஜோன் பயஸ் என்போர் வளர்த்த மக்களிசை லத்தீன் அமெரிக்க நாடுகளின் மக்களிசை 3ம் உலக நாடுகளின் மக்களிசை இயக்கம் என்பன மக்களிசை இயக்கம் என்பது உலகம் தழுவியது என்பதற்கு உதாரணங்களாகும். ரூசூ009;தமிழர் இதுவரை வளர்த்தவை செவ விய இசையும், வெகுஜன இசையுமே. அடக்கப்படும் இனங்களோடும், நாடுகளோடும், மக்களோடும் தமிழ்நாட்டு மக்களிசையினரும் இலங்கை நாட்டு மக்களிசையினரும், ஈழத்தமிழ் மக்களிசையினரும் இணைந்து இன்று வளர்க்க வேண்டியது மாற்று இசையான மக்களிசையே. இப்பணி அங்கொன்று இங்கொன்றாக நடைபெறினும் திட்டமிட்டு ஒருங்கிணைந்து தம் ஆற்றல்களைக் குவிமையப்படுத்திச் செயலாற்றுவதன் மூலமே இம் மக்களிசை மரபு வளர்ச்சியைச் சாதிக்க முடியும். - sethu - 06-22-2003 போராட்டத்துடன் இணைந்தே வளர்க்கப்பட்டுள்ள தமிழீழப் பெண்களின் ஆளுமை பெண்கள் காலம் காலமாக அடக்குமுறைக்குள்ளாவது பற்றியும், உரிமைகள் மறுக்கப்படுவது பற்றியும் இன்று பல்வேறு தரப்பினரும் விழிப்படைந்து வருகின்றனர். இதனையொட்டிய பல திட்டங்களும், செயற்பாடுகளும் தனிநபர்களாலும், சிறு குழுக்களாலும், நிறுவனங்களாலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஊடகங்களும் இவ விடயத்தில் சற்று விழிப்படைந்துள்ளது. பால்நிலைக்கல்வி வகுப்புக்கள், கருத்தரங்குகள் என்பனவும் நடந்தேறி வருகின்றன. இதனால் பெண்கள் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டுள்ளதுடன், தமது உரிமைகளைப் பெறும் வகையில் தம்மை முன்னேற்றவும் துணிந்துள்ளனர். மாற்றங்கள் படிப்படியாக நிகழத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெருந்தொகையான பெண்கள் இணைந்து போர்க்களம் செல்கிறார்கள் என்ற விடயம் தமிழீழ எல்லைக்குள் வாழ்பவர்கள் மட்டுமல்லாது இலங்கை முழுவதும் ஏன் உலகநாடுகள் முழுவதும் அறிந்தவோர் விடயமாகும். ஆனால் இவர்களின் வளர்த்தெடுப்புமுறை பற்றியோ, பயிற்சி பற்றியோ, களத்தில் போரிடும் திறன் பற்றியோ இவர்களின் ஏனைய செயற்பாடுகள் பற்றிய ஆழ அகலங்கள், ஒட்டுமொத்த ஆளுமைவிருத்தி பற்றிய விடயங்கள் வெளித்தெரியாத தொன்றாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போதுள்ள அமைதியான சூழ்நிலையில் விடுதலைப் புலிகளின் மகளிர் அணியினர் வடக்கு, கிழக்கிலுள்ள சிலஇடங்களில் நடத்திய தமிழீழ பெண்கள் பேரெழுச்சி நிகழ்வில் முதன்முறையாக தம்மை மக்களுக்கு அறிமுகப்படுத்த விளைந்துள்ளனர். இந்நிகழ்வு விடுதலைப்புலி உறுப்பினராக இணைந்து பல சாதனைகள் செய்து முதல் வீரச்சாவடைந்த 2ம் லெப். மாலதியின் நினைவு நாளான ஒக்டோபர் பத்தாம்திகதி நடாத்தப்பட்டது. இந்நாளையே விடுதலைப் புலிகள் தமிழீழ பெண்கள் தினமாகவும் பிரகடனப்படுத்தியுள்ளனர். இத்தினம் பற்றிய செய்தியே இதுவரை காலமும் பலராலும் அறியப்படாதிருந்தது. 10.10.2002 அன்று கிளிநொச்சியில் நடந்த மகளிர் பேரெழுச்சி நிகழ்வில் கலந்து கொண்டதில் என்னால் அவதானிக்க முடிந்தவற்றையும், ஏற்பட்ட மனப்பதிவுகளையும் உங்களோடு பகிர்ந்துகொள்ளலாமென நினைக்கிறேன். தமிழீழ பெண்கள் பேரெழுச்சி நிகழ்வின் முதலாவது நிகழ்வான இராணுவ அணிவகுப்பே பார்ப்போரை திக்குமுக்காடச் செய்து விட்டது. ஏனெனில் அத்தனை நேர்த்தியும் வேகமும் கொண்டதாய் ஒவ வொரு அணிகளும் சென்று மறைந்தன. புகைப்பிடிப்பாளர்களும், வீடியோ படப்பிடிப்பாளர்களும் இவற்றைத் துரத்திக்கொண்டு தமது கமறாத்திரைகளுக்குள் அடக்கப் படாதபாடுபட்டனர். மகளிரின் பதினொரு படையணிகள் இதில் பங்கேற்றன. இவையனைத்தும் ஓர் அடிப்படைத்தளத்துள் நின்றிருந்த போதும் ஒவ வொன்றும் தமக்கான தனித்துவங்களைக் கொண்டிருந்தன. அணிந்திருந்த சீருடைகளிலும், பிடிக்கப்பட்ட கொடிகளிலும், சின்னங்களிலும் ஒவ வொரு அணிகளும் தம்மை வேறுபடுத்திக் காட்டின. ஓர் இராணுவ அணியின் வடிவமைப்பின் வேகத்திற்கு ஈடுகொடுக்கும் வகையிலும், பயன்படுத்திய மேலைத்தேயபாண்ட் வாத்திய இசைக் கருவிகளுக்கேற்பவும் "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகமென்றே நீ கூறுலு}." என்ற விடுதலைக் கானங்களிலொன்று அணியின் வேக நடையின்போது இசைக்கப்பட்டது. பின்னர் மைதானத்துள் நடந்தமெதுவான அசைவுகளுக்கு 'எங்கள் தோழர்களின் புதைகுழியில்' என்ற பாடல் பொருத்தமாக அமைந்திருந்தது. சிறு சிறு இடைவெளிகளில் கரடிப்போக்கு சந்தியில் ஆரம்பமான இவ வணிகள் கிளிநொச்சி மத்திய மைதானத்துள் ஒன்று சேர்ந்து அணிவகுத்து பெரும் பரப்பிலான இடத்தினைப் பிடித்து பெரும் இசைஎழுப்பி, பெரும் நகர்வினைப் புலப்படுத்தியது. இது சூழ நின்றிருந்தோரை பெரும் பரபரப்பிற் குள்ளாக்கியது. இதனைத் தொடர்ந்து 'ஜெயசிக்குறு' இராணுவ நடவடிக்கையில் ஏ-9 பாதையுூடான இராணுவ நகர்வினை எதிர்த்து மன்னகுளத்தில் பெண் போராளிகள் சமர் செய்ததன் 'மாதிரிச்சமர்' நிகழ்வொன்று நிகழ்த்திக்காட்டப்பட்டது. பற்றைகளுக்குள்ளும், மரங்களுக்குள்ளும் நிகழ்த்திக் காட்டப்பட்ட இச்சமர் பெரும் வெடிச்சத்தங்களையும் துப்பாக்கிச் சூடுகளையும் கண்முன்னே காண்பித்தது. மிகவும் தத்ரூபமான முறையில் நிகழ்த்தப்பட்ட இம்மாதிரிச்சமர், தமிழீழப் பெண்கள் படையணியின் இராணுவ வளர்ச்சியினையும் பலத்தினையும் காட்டி நின்றது. இது பெண்களின் உடல் உள ஆளுமை விருத்தியின் எல்லையினைக் கோடு காட்டியது. பொதுவாக ஆசிய மரபில் வந்த பெண்கள் பயந்தவர்கள், மென்மையானவர்கள், நிதானமற்றுக் குழம்புபவர்கள், எதற்கும் தயங்கி நிற்பவர்கள், ஆண்களில் தங்கியிருப்பவர்கள், இலகுவில் அழும், சிரிக்கும் இயல்பு கொண்டவர்கள் என்ற கருத்துருவாக்கம், கணிப்பீடு அனைத்தையும் தகர்த்தெறியும் வகையில் தமிழீழப் பெண்கள் படையணி பெண்கள் உடல், உள ஆளுமை கொண்டுள்ளனர் என்பதனை இச்சமர் திட்டவட்டவமாக காட்டி நின்றது. இவர்கள் தமிழீழ எல்லைக்குள் வாழும் பெண்களுக்கு மாத்திர மல்ல, உலகிலுள்ள பெண்கள் அனைவருக்குமே தன்னம்பிக்கையினையும், உற்சாகத்தினையும் வழங்கக்கூடியவர்கள் என்றால் அதில் மிகைப்பாடு ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன். மேலும் தொடர்ந்து நிகழ்ந்த கலைநிகழ்வுகள் மூலம் இவர்கள் பல்வேறு விடயங்களை மக்களிடம் முன்வைத்திருந்தனர். குறிப்பாக சாதாரணமாயிருந்த பெண்களாகிய தாம், காலத்தின் தேவையையும் கட்டாயத்தையும் அறிந்து போராட்டத்தில் இணைந்தது பற்றியும் தேசியத் தலைவரின் வழிகாட்டலில் தம் வளர்ச்சி நடந்தேறியது பற்றியும் குறிப்பிட்டனர். ஓர் இன ஒடுக்குமுறையில் ஆக்கிரமித்தல், ஆளுதலின் குறியீடாக சிங்களப் பேரினவாதம் தமிழ்ப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தமை பற்றியும் இவ விடத்தில் பெண்கள் போர்க்களம் செல்லும் அவசியம் பற்றியும் வலியுறுத்தினர். மேலும் தாம் சும்மாயிருந்து சூம்லு}சூம் காளியென்று தாயத்துக் கட்டி அந்நியப் பேய்களை விரட்டவில்லை. நித்திரையற்ற இரவுகளை நிரந்தரமாக்கி உடலிலும், உள்ளத்திலும் பல வலிகளைத் தாங்கி, தியாகங்களை செய்து பெற்றதே இந்த யுத்த நிறுத்த உடன்படிக்கை என்றனர். எனினும் நாம் மிகவும் சாதாரணமானவர்கள் எங்களைப் பற்றிய அதீத கற்பனைகளை வளர்த்துக்கொள்ளாதீர்கள் என்றனர். இக்கருத்தினை நிறுவுதற்போல் கூடியிருந்த பெருந்திரளில் சில விடயங்களை அவாதானிக்க முடிந்தது. சீருடையில் இருந்த பெண் போராளி ஒருவர் துவாயால் ஏந்திய ஒரு குழந்தையை மடியில் வைத்து பால் பருக்கிக் கொண்டிருந்தாள். பின்பு வாரியெடுத்து முத்தமிட்டு தோள்களில் போட்டுக்கொண்டாள். அது பெற்ற பிள்ளையா பிறர் பிள்ளையா என்ற ஆய்வுக்கு நான் போகவில்லை. அவளிடம் தாய்மை, அன்பு, பாசம் வெளிப்பட்டது. இதனை சீருடையில் கண்டபோதுதான் ஆச்சரியமாயிருந்தது. இருவேறு உன்னத நிலைகள் ஒருங்கே சங்கமித்தது. எனினும் அவை ஒன்றுக்கொன்று முரண்பட்டவை இல்லை என்பதை புரிய முடிந்தது. இதனைவிட பெண் போராளிகள் சிலர் திருமணமாகி தம் கணவன் பிள்ளைகளுடன் வந்திருந்தனர். சீருடையில் நின்ற பெண் போராளிகள் பலர் எழுச்சி நிகழ்வுக்கு வந்திருந்த பலருடன் மகிழ்வாக உறவாடுவதைக் காணமுடிந்தது. சிறு பிள்ளைகளுடன் விளையாடியதையும் காணமுடிந்தது. கலை நிகழ்வுகளிலும் பெண் போராளிகள் தமது திறமைகளை நிலைநாட்டினர். மிக அழகாக ஆடவும் பாடவும் தெரிந்திருந்தனர். களத்தில் நிற்கும் போராளி பரதநாட்டியம் ஆடுவது என்பது போராளி பற்றிய பொதுவான நினைப்பிற்கு முரணானது. சீருடையற்று பாத்திரங்களுக்கேற்ப ஆடையணிந்து ஆடிய போது இவர்கள் போர்வீரர்கள் என்ற எண்ணமே தோன்றவில்லை. சீருடையுடன் வரும் பாத்திரங்கள் பல பாவதங்களைலு} அபிநயித்து நடனமாடிய போதுதான் போர்வீரர்கள் பற்றிய புதிய பரிமாணம் பெறப்பட்டது. மற்றும் இப்பேரெழுச்சி நிகழ்விற்கான ஒழுங்குபடுத்தல்கள் சிறப்பான முறையில் அமைந்திருந்தது. இந் நிகழ்வுக்காக ஏலவே கொடுக்கப்பட்ட விளம்பரங்கள், கிளிநொச்சி மத்திய மைதானத்தில் கூடும் ஒன்றரை இலட்சம் மக்களினதும் வீதிக் கட்டுப்பாடுகள், வாகனப் போக்குவரத்து ஒழுங்குகள், இரவு நிகழ்வு சூழலில் மின்விளக்கு வசதிகள், மைதான அலங்காரங்கள், மைதானத்தில் இடப்பட்ட பெரிய மேடையும் இடமும், மேடை வடிவமைப்பு, இசைக்குழுவினருக்கான தனிமேடை, முழுப்பார்வையாளருக்கும் நிகழ்வுகள் தெரியும் வகையில் வைக்கப்பட்ட பெரும் திரைகள், மேடையின் இரு மருங்கிலும் நிகழ்ச்சி செய்வோர் கூடும் தனியான தகரக்கொட்டகைகள், மைதானத்தில் மக்கள் ஒழுங்காக நிகழ்வுகளுக்கேற்ற வகையில் அசையும் முறைக்கான கட்டுப்படுத்தல் கோடுகள், குடிநீர் தாங்கிகள், மலசலகூட வசதிகள், ஒலி ஒளி ஏற்பாடுகள், நிகழ்ச்சி அறிவிப்புக்கள், ஊடகவியலாளர் ஆசன ஒதுக்கீடுகள், சிற்றுண்டி, குடிபான பரிமாற்ற ஒழுங்குகள் என்பன மிக நேர்த்தியாக மிக வசதியாக காலக்கிரமத்துக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன. இந்நிலை யுத்தத்தினால் முற்றாக அழிக்கப்பட்ட பிரதேசத்தில், வளங்களற்ற பிரதேசத்தில் ஒழுங்குபடுத்தல் என்பது பெரும் சவாலான விடயமே. இது மகளிர் படையணியின் மற்றுமொரு பக்கத்தினை, பொதுவிடயங்களை செயற்படுத்தும்திறனை, முகாமைத்துவதிறனைக் காட்டியது. இப்பேரெழுச்சி நிகழ்வினை பெண்போராளிகளே பெரும்பாலும் நின்று நடத்திய போதும், விடுதலைப் புலிகளின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த ஆண்போராளிகளும் இணைந்தே இந்நிகழ்வினை ஒழுங்கு செய்திருந்தனர். இவர்களிடையே ஆண், பெண் படையணி என்ற பிரிக்கப்பட்ட மனப்பாங்கு கிடையாது. இரு படையணிகளும் இணைந்தே பல காரியங்களை சாதித்து வருகின்றனர். ஆரம்ப மகளிர் படையணிக்கான பயிற்சிகளை ஆண் போராளிகளே வழங்கியுள்ளனர். இது தொடர்பாக ஆரம்ப கடற்புலி பெண் உறுப்பினர் கருத்துத் தெரிவிக்கையில் "ஆரம்பத்தில் கடற்படைத்தாக்குதல் தொடர்பான பயிற்சிகளை ஆண்போராளிகளே வழங்கினர். பின்னர் அவர்களிடம் பயிற்சி பெற்றுசிறப்புத் தளபதியாயிருந்த லெப்.கேணல் நளாயினி அக்கா என்பவரே எமக்கான பயிற்சிகளை வழங்கினார். அதன் வழியே பயிற்சிகள் தொடரப்படுகின்றன" என்றார். பெண்கள் இயல்பாகவே தொழில்நுட்ப அறிவும் நாட்டமும் குறைந்து காணப்படுகின்றனர். ஆண்களே இவ விடயங்களில் ஆர்வமாக விளங்குகின்றனர். காரணம் காலம் காலமாக ஆண்கள் வெளியில் சென்று பல்வேறு தொழில்முறைமைகளை பயின்றுவர பெண்கள் வீட்டிலிருந்து பிள்ளைகளையும் வீட்டையும், சுற்றுப்புறச் சூழலையும் பராமரித்துக்கொண்டு ஓர் மாறுபாடற்ற வாழ்வு வாழ்ந்து வந்தமையாகும். ஆனால் கடற்புலி பெண் உறுப்பினர்கள் சிலர் இவ வெழுச்சி நிகழ்வில் தாக்குதல் படகொன்றினை மக்கள் பார்வைக்கு வைத்திருந்து அதன் இயக்கம் பற்றிய விளங்கங்களை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலி பெண் உறுப்பினர்கள் தாக்குதல் படகு தயாரிப்பது பற்றியும், அவற்றை இயக்குவது பற்றியும் தொலைநோக்கு தொடர்பு அறிதல் பற்றியும், விமான எதிர்ப்புப் பீரங்கி, கடற்தாக்குதலுக்குரிய 50 கலிபர்கள் என்பவற்றின் இயக்கு முறைகள் பற்றியும், ஆங்காங்கே கொண்டுள்ள தகவல்மையங்கள் பற்றியும், இலக்குகளை இனம்காணல், கணித்தல், குறிவைத்தல் என்பவை பற்றியும், கட்டளை அதிகாரியின் செயற்பாடு பற்றியெல்லாம் பேசிய போதும் படகில்நிற்கும் தாம் ஒவ வொரு வரும் படகின் ஒவ வொரு விடயம் பற்றியும் கூறிய போது காலம் காலமாக பெண்கள் வளர்க்கப்பட்ட மரபில் வளர்ந்தவர்கள் தானே இவர்கள். இவர்களிடம் இத்தனை திறன் எப்படி வந்தது என்றே எண்ணத்தோன்றியது. இவர்களிடம் "தற்போது நீங்கள் தாக்குதல்படகு, ஆயுதங்களைப் பற்றிய விடயங்களை வெளியிடுகிறீர்கள். எதிரி இதற்கேற்ற வகையில் தன்னைத் தயார்ப்படுத்தக்கூடும் என்ற அச்சம் இல்லையா?" எனக் கேட்டபோது. கடற்புலி ஆரம்ப உறுப்பினரும், தொலைநோக்கு தகவல் அறிபவருமான பெண் ஒருவர் மிக நிதானமாகவும் சிறு அலட்சியமாகவும் சிரித்துவிட்டு "எமது படகுகளையும், ஆயுதம் பற்றியும் அறியலாமே தவிர எமது போர் முறைகளையோ, உத்திகளையோ அறியமுடியாது. அவற்றையும் சரியான மனவலிமையையும் தலைவர் எமக்குத் தந்துள்ளார். அவை இருக்குமளவும் எமது வெற்றி நிச்சயமானது" என்றாள். தமிழீழ பெண்கள் படையணியினது மிகுந்த கருத்தியல் தெளிவினையும், நிதானமான போக்கினையும் கொண்டு விளங்குகிறது என்பதனை இவர்களின் உரையாடல்கள் மூலமும் மகளிரணி அரசியல் பொறுப்பாளரான தமிழினி அவர்களின் உரை, பேட்டி என்பவற்றிலிருந்து புரியமுடிகிறது. இவர்கள் தம்மைத்தாமே நிர்வகிக்கின்ற திறமையினையும், தமது செயற்பாடுகளைத்தாமே முன்னெடுக்கும்நிலையிலும் கட்டமைக்கப்படுவதனை ஒரு சில விடயங்கள் சுட்டிக்காட்டுகிறது. இதில் மகளிர்படையணி உறுப்பினர்கள் ஒரு தீர்மானிக்கும் சக்திகளாக அரசியல் கட்டமைப்புக்குள் இருக்கின்றனர் என்பதே ஒரு முக்கிய விடயமாகும். மற்றும் பெண் போராளிகள் நடத்தும் பத்திரிகை-சுதந்திரப்பறவை, சஞ்சிகைகள் இங்கு வெளிவருவதும் பெண்களே தீர்மானிக்கும் முடிவெடுக்கும் நிலையில் இருப்பதனையும் தம்மை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் தமது கொள்கைகளை பிரகடனப்படுத்தவும், வளர்க்கவும் உதவியாக அமையும். இன்று இலங்கையில் பன்னாட்டு நிறுவனங்களது செறிந்த வியாபாரமோ-அதோனோடொட்டிய காலாச்சாரமோ, பல்வேறு ஊடக கலாச்சாரமோ, மலிகைப்படங்களின் பாதிப்போ இடம்பெறாத ஒரு தேசம் என்றால் அது வன்னிப்பெருநிலப் பரப்பாகவே இருக் கிறது. இதனால் இங்கு இருக்கும் ஒவ வொரு விடயங்களும் தனித்துவமானதாகவும், சூழல்சார்ந்ததாகவும், நிலைத்து நிற்பதாகவும் வலுவுடன் விளங்குகிறது. இவ வகையில் தமிழீழப் பெண்களும் அவர்கள் வளர்த்தெடுப்பும் ஆரோக்கிய மானதாக அமைந்துள்ளது. - sethu - 06-22-2003 பெண்ணின் கலாசாரம் ஒரு சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட அல்லது இணைக்கப்பட்ட வாழும் முறை, அரசியல், கலைகள், ஆடை ஆபரணங்கள் போன்றவற்றிலுள்ள தனித்தன்மை அந்த சமூகத்தின் கலாச்சாரமாகக் கொள்ளப்படுகிறது. வாழும் காலங்களில் ஒரு இனம் அடையாளம் காட்டப்படுகிற தன்மையை இந்த கலாச்சாரம் பிரதிபலிக்கிறது. சமூகத்தில் உள்ள பெண்களின் நடைமுறை பாவனையே இதில் முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் பெண்களது எண்ணங்கள், உணர்வுகள் செயற்பாடுகள் மனித வாழ்வை அவள் எவ வாறு வடிவமைக்க விரும்புகிறாள் என்பவற்றை அவளால் முழுமையாக சரியான விதத்தில் வெளிப்படுத்த முடிகிறதா என்பது பெரிய கேள்விக்குறியாகவே எம் கண்முன் நிற்கிறது. எந்த அளவுகோலுடன் இவள் இதைத் தீர்மானித்துக் கொள்கிறாள் என்பது இங்கே முக்கியமாகிறது. இன்றைக்கு சமயம், கலை, பொருளாதாரம், இலக்கியம், தொடர்புூடகம், எனப் பல்வேறுபட்ட சகல கலாச்சாரச் செயற்பாட்டுத் தளங்களிலும் பெண்கள் ஈடுபட்டு வருவதை நாம் காண்கிறோம். ஆண்களால் மட்டுமே செய்ய முடியும் எனக்கருதப்படும் அபிவிருத்தி வேலைகள், தீர்மானம் எடுத்தல், ஒழுங்கமைத்தல், நிர்வகித்தல், தலைமை ஏற்றல் போன்ற செயற்பாடுகளில் இன்றைக்கு பல பெண்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். ரூஙூஸசூசி; எமது நாட்டில் நிலவிய போர்ச்சூழல் ஆண்களின் இயங்கு தளத்தில் ஓரளவு இடைவெளி ஏற்படுத்த}ய நிலையில் பெண்கள் வீட்டுக்குள் இருந்துவிடமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை கண் முன்னாலேயே நாம் பார்க்கிறோம். இங்கே பெண்களின் பங்களிப்புக்கான தேவை ஏற்படுமிடத்து அவர்கள் வெளியே வந்து செயற்படுவதற்கான சாதகமான நிலை ஏற்படுகிறது. இவர்கள் தாம் சார்ந்த துறைகளின் செயற்பாடுகளில் இந்த கலாசாரத்தை எவ வகையில் பிரதிபலிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்த கலாச்சாரத்தின் பெறுமதி கவனத்தில் கொள்ளப்படுகிறது. பெண்களின் செயற்பாடுகளினூடாக கணிக்கப்படுகின்ற இந்த கலாச்சாரத்தை தீர்மானிக்கின்ற பொறுப்பும் பெண்களிடமே உள்ளதை நாம் ஒப்புக்கொண்டேயாகவேண்டும . இந்தப் பொறுப்பை எத்தனை பெண்கள் சரியாக புரிந்துகொள்கிறார்கள். ஏதோ ஒரு அதிகார வர்க்கத்தால் பெண்கள் மீது திணிக்கப்பட்ட இந்த கலாச்சாரத்தின் தன்மை சரியானதுதானா என்று எத்தனை பேர் சிந்திக்கிறார்கள். இந்த விதமாக அமைந்து விட்ட இந்த கலாச்சாரத்தின் ஆடம்பரங்கள் பெண்களுக்குத் தேவையா? என்ற கேள்வி இன்று பலராலும் முன் வைக்கப்படுகின்ற கருத்தாகிறது. ரூஙூஸசூசி; பட்டாடைகளும் நகைகளும் ஆடம்பரமான சடங்குகளும்தான் எமது கலாச்சாரம் என்பதை ஏற்றுக் கொள்ளும் அறியாமையிலிருந்து நமது பெண்கள் விழித்துக் கொள்ள வேண்டும். நகையும் பட்டாடையும் ஆடம்பரமான வாழ்வும்தான் தனக்குப் பெருமைதரும் என்று பெண் நினைப்பாளேயானால் அது போன்ற முட்டாள்த்தனம் வேறு இல்லை. தன் கல்வியாலும் தன்னம்பிக்கையாலும் ஆளுமையாலும் மனிதப் பண்புகளாலும் ஒரு பெண் நிமிர்ந்து நிற்பாளேயானால் அதுதான் சமூகத்தில் அவளுக்கு பெருமை தரும் விடயம குறைந்த பட்சம் இந்த விதமாய் நிமிரும் பெண்கள் என்றாலும் தமது வாழ்வை எளிமையானதாகவும் ஆடம்பரமற்றதாகவும் ஆக்கிக்கொண்டால் சமூகத்தில் மற்றவர்கள் பின்பற்றகூடிய முன் உதாரணமாக திகழ்பவர்களாக இருக்க முடியும். போரினால் நலிவுற்றிருக்கும் நமது தேசத்தின் இன்றைய தேவை ஆடம்பரங்களை துறத்தல். எளிமையான வாழ்வை தேர்ந்தெடுத்தல். இது சாத்தியமாவது பெண்களின் செயற்பாட்டிலேயே தங்கியிருக்கிறது. சமூகத்தில் எந்தப்பிரச்ச}னை என்றாலும் அதற்கு முகம் கொடுக்கும் பெரும் பொறுப்பு பெண்களுக்கே உள்ளது. அநேகமான பெண்களின் வாழ்நிலை சராசரிக்கும் கீழாகவே அமைந்துள்ளது. போரின் நடுவேயான பல இழப்புக்களை தாங்கியவர்களாகவே இவர்களில் பலர் இருக்கிறார்கள். இத்தகைய நிலைமையில் எமது கலாச்சாரங்களின் ஆடம்பரங்கள் சுமைகளாக அழுத்துவதை பெண்கள் அனுமதிக்கக் கூடாது. எமது இயற்கை வளங்களுக்கு பொருந்தக்கூடிய விதத்தில் எமது கலாச்சாரத்தை அமைக்கத் தவறினால் எமது இனம் பாரிய அழிவை எதிர் நோக்குவதை தவிர்க்க முடியாமல் இருக்கும். பொதுவாகவே பெண்கள் ஆடம்பரமோகம் கொண்டவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு இதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது என்பதை பல பெண்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய சமூகத்தில் பலவிடையங்களில் பெண்களே பெண்களுக்கு எதிரிகளாகவும் தம்மை அடையாளம் காட்டுகிறார்கள். பெண்ணே பெண்ணிடமிருந்து விடுதலை பெறவேண்டும் பெண்ணே பெண்ணை சமமாய் நடாத்த முன்வரவேண்டும். சகமனிதரை நேசிக்கும் மனிதப் பண்பையும் எளிமையான வாழ்வை ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தையும் எமது கலாச்சாரமாக பெண்கள் ஏற்றுக் கொள்வதே இன்றைய காலத்தின் தேவையாகிறது. தாமரைச்செல்வி - sethu - 06-22-2003 விடுதலைச் சிறகசைக்கும் பெண்ணும் அவளைச் சுற்றியுள்ள சமூக வேலிகளும் எமது விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து எழுச்சி பெற்றிருக்கும் பெண்கள். பெண் விடுதலை , சமூகவிடுதலை, தேச விடுதலை என்ற நிலைப்பாட்டில் முழுவிடுதலை கோரி நிற்கின்றனர். போரிடுகின்றனர். இந்த நிலைப்பாடும் செயற்பாடும் நமது பெண் வாழ்விலும் சமூக அமைப்பிலும் ஒரு பெரும் உடைப்பே, புதிய பாய்ச்சலே கவனிக்கவேண்டிய திருப்பமே. அத்துடன் பெண் வாழ்விலும் நமது சமூக இயங்கு நிலையிலும் வித்தியாசமான அனுபவமாகவே இது அமைந்திருக்கிறது. கருணாகரன். பெண் சமத்துவம் குறித்த கருத்தாடல்கள் செயற்பாடுகள் இன்று தீவிரமான நிகழ்நிலையிலிருக்கின்றன. அல்லது சமூக நிகழ்ச்சித் திட்டத்திலிருக்கின்றன. பெண் எனும் அடையாளத்தை வைத்து சமூகம் பெண்கள் மீது விதிக்கும் நிபந்தனைகளை வெற்றி கொள்ளவும் கூறிய சிந்தனை விழிப்பும் செயற்பாடும் பெண்களிடையே வேண்டப்படுகிறது. இது பெண்களிடம் மட்டுமின்றி முழு சமூகத்திடமும் வேண்டப்படுகின்றது என்பதே பொருத தமானது. ஏனெனில் ஒடுக்கப்படுவோருடைய விடுதலை என்பது ஒடுக்குவோரினது விடுதலையுமாகும் என்ற உண்மையின் அடிப்படையிலானதாக இது அமைகிறது. இன்று நமது பெண் நிலைப்பாடு எவ வாறிருக்கிறது. பெண் வாழ்வு எவ வாறிருக்கிறது என்று பார்ப்பது முதலில் முக்கியமாகிறது. எமது விடுதலைப் போராட்டத்துடன் இணைந்து எழுச்சி பெற்றிருக்கும் பெண்கள். பெண் விடுதலை , சமூகவிடுதலை, தேச விடுதலை என்ற நிலைப்பாட்டில் முழுவிடுதலை கோரி நிற்கின்றனர். போரிடுகின்றனர். இந்த நிலைப்பாடும் செயற்பாடும் நமது பெண் வாழ்விலும் சமூக அமைப்பிலும் ஒரு பெரும் உடைப்பே, புதிய பாய்ச்சலே கவனிக்கவேண்டிய திருப்பமே. அத்துடன் பெண் வாழ்விலும் நமது சமூக இயங்கு நிலையிலும் வித்தியாசமான அனுபவமாகவே இது அமைந்திருக்கிறது. இந்த நிலைபாட்டிலும் செயற்பாட்டிலும் இயங்கும் பெண்கள் பெண் சமத்துவம். பெண்விடுதலை, பெண்ணியம் சார்ந்த சிந்தனைகளிலும் சமூகப் பிரக்ஞையிலும் சமூகமாற்றத்திலும் ஆர்வம் கொண்டோராகவும் தெளிவுடையவராகவும் இருக்கின்றனர். சிந்தனை விழிப்பு மட்டுமன்றி செயற்திறன் உடையோராகவும் இருக்கின்றனர். சமூகத்தின் பெரும் பகுதியாக பெண்கள் இருப்பதுபோல கல்வி கற்கும் நிலையிலும் பெண்களே இன்று கூடுதல் இடத்திலிருக்கிறார்கள். கல்வி மூலமான வேலைகளில் ஆரம்ப நிலை. இடைநிலை உத்தியோகம் பார்க்கும் பெண்களே அதிகமாக இருந்த நிலைமாறி உயர்நிலைகளிலும் தொழிநுட்பவியலிலும் இன்று அவர்கள் இடம் பிடித்து வருகிறார்கள். உடல் உழைப்பாளர்களாக விவசாயம் மற்றும் கூலி உழைப்பாளர்களாக இருக்கும் பெண்களும் தமது உரிமைகளிலும் உழைப்பு முறைகளிலும் தெளிவு பெற்று வருகின்றார்கள். சுமூக நிலைமை இதுவாக இருந்தாலும் பெண் சமத்துவம், பெண்விடுதலை குறித்த பெண்ணியம் பற்றிய தெளிவு அறிவும் சமூகமாற்றம் குறித்த சிந்தனையும் இந்தப் பெண்களிடம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகவே நிலைமையுள்ளது. மரபுகளால் கட்டுண்டு, பண்பாட்டு இறுக்கங்களுள் சிக்குண்டு அவற்றை விட்டு வெளிவரத் தயங்கும் மனோ நிலையுடையோராகவே இருhகள் இருக்கின்றனர். போராடும் தரப்பினரும் பெண் விடுதலை, பெண்ணியம் குறித்துச் சிந்திப்போரும் ஒருகுறியீடாகவே இன்றும் நமது சூழலில் இருக்கின்றனர். இது நமக்கும் புதிதல்ல. எந்த நல்ல விடயங்களிலும் சீரியலான செயற்பாடுகளிலும் நமது சமூகம் அப்படித்தானிருக்கிறது. அக்கறை புூர்வமாக இயக்கம் தரப்பு குறைவாகவும் மந்தத்தனமுடைய தரப்பு கூடுதலாகவுமே உள்ள சமூக அமைப்பைக் கொண்டவர்கள் நாமென்பதால் நமது சூழல் அப்படித்தானிருக்கும். நமது கல்வி நமது சூழல் பற்றிய அறிவையோ அக்கறையையோ வழங்குவதில்லை. அதுபோல் தன்னைப் பற்றி அறியவும் உணரவும் கூடிய, தன்நிலை பற்றி தூர நோக்குடன் சமூகவியல் பண்பில் சிந்திக்கக்கூடிய ஆற்றலையோ பண்பையோ வழங்குவதுமல்ல. இந்நிலையில் கல்விக்கப்பாலன பொது அறிவுூட்டல் சமூக அக்களினூடாகவே நாம் புதிய மலர்ச்சியை, சமூக அக்கறையை, தேடலை உருவாக்கவேண்டியுள்ளது. நமது எல்லா வகையதன சமூக வேலைத் திட்டங்களிலும் அவை முன்னைடுக் கப்பட்ட முறைகளிலும் இதனை நன்றாக அவதானிக்கலாம். சமூக சிந்ததனை என்பதே நிறுவனமயப்பட்ட கல்விக் கப்பாலான தனித்த புறம்பான ஒரு சங்கதியாகவே எப்போது மிருக்கிறது. அதேவேளையில் அத்தகைய புறநிலைச் சிந்தனையை செயற்பாட்டு ஆற்றலை நமது கல்வியும் அது சார்ந்த நிறுவனங்களும் ஏற்பதில்லை. அதேவேளை அதை விரோத நோக்குடனேயே பார்க்கின்றது. நமது கல்வி தவிர நம் பண்பாடும் மரபுகளும் கூட இத்தகைய பலவீனங்களையும் குறைபாடுகளையும் கொண்டேயிருக்கிறது. வாழ்வை கல்வியும் பண்பாடும் கணிசமான அளவு தீர்மானிக்கும் காரணிகளாக இருப்பதால் இவற்றின் தாக்கம் இருப்பது தவிர்க்கமுடியாததாகிறது. இந்த இரண்டு அம்சங்களும் முழச்சமூகத்தையும் பாதிப்பதுடன் பெண் வாழ்வையும் அதிகம் தாக்கத்துக்குட்படுத்துகின்றன. மரபின் குறைபாடுகளை உடைக்கக்கூடிய வல்லமையோடு துணிவையோ நமது கல்வி பெண்களுக்கு மட்டுமல்ல சமூகத்துக்கே வழங்கவில்லை. ஆதே வேளை கல்விக் கருத்து நிலையிலும் பெண்ணை ஒரு இரண்டாம்தரப் பிரஜையாகவே வர்னிக்கப்படுகின்றது. கருதும்படி வைத்திருக்கின்றது. சமூக விதி முறைகள் நியமனங்கள் மரபுகளிலும் பண்பாட்டம் சங்களிலும் பெண் அடுத்தநிலைப் பிறவியாகவே கண்ப்பிடப்படுகிறாள். இவற்றை மீறும் துணிவைப் பெறும்விழிப்பு நிலைக்கு நாம் முழப்பெண்களையும் முழச் சமூகத்தையும் தயார்படுத்தவேண்டும். இந்தத் தயார்ப்படுத்தல் சிறு அளவிலாக இயங்கும் பெண் சிந்தனை வட்டத்தை மேலும் அகலமாக்கி முழு மனிதரிடத்தும் கலப்பதாகவேண்டும்.பெண் அடையாளத்தால் ஒடுக்கப்படும் பெண் மட்டும் தெளிவுபெற்றால் போதாது. ஓடுக்கும் முழச் சமூகமும் இந்தத் தெளிவைப் பெறவேண்டும். புதிய புரட்சிகர மாற்றத்துக்கான மனோ நிலைக்கு வளரவேண்டும். ஜனநாயகத்தின் உயரிய அம்சங்களால் புரிந்துகொண்டு அந்தத் தளத்துக்கு தன்னை விரிக்கும் பண்பைப் பெறவும் வேண்டும். போராடும் பெண் சமூகச் சிந்ததனையிலும் செயற்திறனிலும் தேசமாக முழமைபெற்று விரிந்திருக்கிறாள். வீட்டுக்குள், சுவர்களுக்குள், வேலிகளுக்குள் முடக்கப்பட்டும் முடங்கியுமிருந்த நிலையை விட்டு சமூகமாக, தேசமாக பரந்துவிட்டாள். சகல நிலைகளிலும் சமத்துவமாக ஆற்றலையும் அறிவையும் ஆளுமையையும் வெளிப்படுத்தி வருகிறாள். இந்த வெளிப்பாட்டினூடகா அவள் செய்து வரும் செயற் பிரகடனத்தின் பின்னும் நாம் மரபுகளின் பின்னும் பண்பாட்டுக் குறைபாடுகளின் பின்னும் வழமைகளின் பின்னும் இன்னும் இருண்ட பதுங்கு குழிகளை எத்தனை நாளைக்குத்தான் மனச்சாட்சிக்கு விரோதமாக வைத்திருக்கமுடியும். பாரம்பரியங்களிலும் மரபு வழமை பண்பாடு சடங்கு என்ற வளையங்களாலும் ஒடுக்குமுறைக்கு ஆதரவான கல்வித்தடுப்புச் சுவர்களாலும் சிறையிடப்பட்டிருக்கும் பெண் வாழ்வை மீட்கும் நடைமுறையின் தேவைபற்றிய தெளிவே இன்று எல்லோரிடத்திலும் வேண்டப்படுவது. பெண் விடுதலை என்றால் என்ன என்று அறியாத, ஏன் என்று உணராத நிலையே பெரும்பாலும் எமது சமூகத்தில் உள்ளது. பலரிடம் ஒருவித தவறான புரிதலும் விரோத மனப்பாங்குமே காணப்படுகின்றது. நமது அறிவென்பது எத்தகைய பண்பையும் நாகரிகத்தையும் நமக்கு வழங்குகிறறது என்ற கேள்வியை பலரும் எழுப்புவதில்லை. ஓருவரை அடிமைப்படுத்துவதோ, அடுத்தநிலையில் வைத்திருப்பதோ கருதுவதோ எமது பண்பில் இருந்து எம்மைக் கீழிறக்கிவிடுகிறது. எம்மை நாகரிகமற்றவர்களாக்கி விடுகிறது.எம்மை அறிவற்றவர்களாக்கி விடுகிறது. ஓரு அறிவார்ந்த சமூகம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் ஒரு ஆரோக்கியமான சமூகம் தன்னுள்ளிருக்கும் குறைபாடுகளை நீக்கிவிடும். இதற்குப் பிரதானமாக வேண்டப்படுவதும் சிந்தனையும் சீரிய செயற்பாடும். உண்மையைக் கண்டறிவதும் நிலைமையை உணர்ந்து கொள்வதும் எதிர்காலம் குறித்துச் சிந்திப்பதும் அச்சமூகத்திற்கு அவசியமானது. நாம் இன்று இத்தகையதொ முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். புதிய வாழ்வுக்கான தொடக்கத்தில் புதிய பண்பாட்டுக்கான வேலைத்திட்டத்தில் இருக்கின்றோம். போராட்டமும் யுத்தமும் இருக்கும் தளைகளை அறுத்து புதிய வாழ்வை, விடுதலையைத் தருமென்பார்கள் ஆனால் எமது சூழலின் நிலையில் ஒருபக்கம் இந்த உண்மையைக் கொண்டிருந்தாலும் இன்னும் பெண் தொடர்பான அணுகுமறையிலிருந்து அதன் பாரம்hரியத் தன்மையை விட்டு புதிய பாதையில் பயணிக்க்கத் தயங்குகிறது என்பதே தோன்றுகிறது. யுத்தம் சமூக நெருக்கடியை, பொருளாதார நெருக்கடியைத் தந்தாலும் நமது புலம்பெயர்வு ஏற்படுத்திய ஈடுகட்டல் எனடபது மீண்டும் பழமைகளையும் மரபையும் பேணிக்கொள்ள ஒருவகையில் இச்சமூகத்துக்கு உதவியளிக்கிறது. சீதனம் பெண் ஒரு அழகுப் பொம்மை. பெண் ஒரு இரண்டாம்தரப் பிரஜை என்ற மனப்பாங்கை இன்றும் காப்பாற்றிவருகிறது. பெண் விடுதலை, பெண்ணுரிமை பற்றிய புதிய வியாக்கியானங்களையும் அவற்றின் நியாயப்பாடுகளையும் உண்மையையும் கண்டுகொள்ள விருப்பவதா, காணவேண்டியில்லாத நிலையையே இவை தோற்றுவிக்கின்றன. இந்நிலையில் இப்போது நமக்குள் முக்கிய பணியதார்த்தத்துக்குப் பொருத்தமான புதிய கருத்தூட்டல் உண்மை உணர்த்தல் விழிப்பும் ஆற்றல் வெளிப்பாடுமேயாகும். ஓருபக்கம் தேசமாக விரிந்திருக்கும் பெண் விடுதலை சிறகசைக்கும் பெண் சமூகமாய் மலர்ந்திருக்கும் பெண் இன்iனாரு பக்கம் கலாச்சாரம் என்ற வளையங்களுக்குள் ஒடுங்கிய பெண், மரபு என்ற வட்டங்களுக்குள் சுரண்டுகொண்டிருக்கும். பெண், வழமை னெ;ற சூத்திரத்துள் சுழலும் பெண், இந்த இரண்டு நிலையிலும் சமகாலத்தில் கொண்டிருக்கும் நமது சமூகம் எப்படி இனிப்பயணிக்க வேண்டும் என்பதே நமக்குள்ள தேர்வாகும். - sethu - 06-22-2003 மானுடத்தின் தமிழ்க்கூடல் -மீண்டும் தொடங்கிய மிடுக்கு தான் எரியுண்ட, சாம்பலிலிருந்து மீண்டும் புத்துணர்வுடன் உயிர்த்தெழுமாம் 'பீனிக்ஸ்' என்ற பறவை. -யாழ்ப்பாணமும் ஒரு பீனிக்ஸ் பறவைதான். -எதிரிகள் எத்தனை தரம் அதனைத் தீயிட்டிருப்பார்கள். -எதிரியின் எரியுூட்டலை ஒவ வொருதரமும், தனது அழிவுராத்தன்மையை, எவராலும் அழித்தொழிக்க முடியா ஆத்ம பலத்தை, ஒரு தீக்குளிப்பாகவே எதிர்கொண்டு, புத்துயிர்ப்புடன் மீண்டும் மீண்டும் அது தனது எழுச்சி கோலத்தை விசுவரூபமாக காட்டியே வந்துள்ளது. தான் எரியுண்ட, சாம்பலிலிருந்து மீண்டும் புத்துணர்வுடன் உயிர்த்தெழுமாம் 'பீனிக்ஸ்' என்ற பறவை. -யாழ்ப்பாணமும் ஒரு பீனிக்ஸ் பறவைதான். -எதிரிகள் எத்தனை தரம் அதனைத் தீயிட்டிருப்பார்கள். -எதிரியின் எரியுூட்டலை ஒவ வொருதரமும், தனது அழிவுறாத்தன்மையை, எவராலும் அழித்தொழிக்க முடியா ஆத்ம பலத்தை, ஒரு தீக்குளிப்பாகவே எதிர்கொண்டு, புத்துயிர்ப்புடன் மீண்டும் மீண்டும் அது தனது எழுச்சிக் கோலத்தை விசுவரூபமாக காட்டியே வந்துள்ளது. -இது கதையல்ல..வரலாறு. -காலம் காலமாக அந்நியர்களின் கொள்ளிக்கண்களுக்கு யாழ்ப்பாணம் எப்போதும் எரிச்சலையுூட்டியே வந்துள்ளது. 'விழவிழ எழுவோம் விழவிழ எழுவோம்லு} ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்லு}.' என்ற தமிழீழத்தின் தீர்க்கதரிசிக் கவிஞன் காசி ஆனந்தனின் வரிகள் மிகமிக அழுத்தமான அர்த்தமான வரிகள்தான்லு} -அந்நிய கொள்ளிக்கண்ணர்களின் 'எரியுூட்டல்' பார்வைக்கு யாழ்ப்பாண மண்ணின் 'ஆத்மா' எந்தவொரு கட்டத்திலும் அசைந்து கொடுத்தது கிடையாது. -அந்த மண்ணின் வளம், அந்த மண்ணின் மக்கள், அந்த மக்களின் அறிவு, ஆற்றல், குடிமனை, சுற்றம், நட்பு, கலை, கலாச்சாரம், பண்பாடு எல்லாவற்றையும் தானே அவர்கள் தீக்கிரையாக்கி, அவற்றின் ஆதிமூலத்தையே நிர்மூலமாக்க முயன்றிருப்பார்கள்லு} -எரியுூட்டிய வெற்றிக்களிப்பின் சூடு அவர்கள் மனதில் ஆற முன்னமே யாழ்ப்பாணம் ஒவ வொரு தடவையும் முன்னைய விடவும் பேரெழுச்சி கொண்ட, முன்னைய விடவும் உத்வேகம் கொண்ட, ஆத்ம பலத்துடன் உயிர்ப்புக் கண்டே வந்துள்ளது. -ஆமாம், இது கதையல்ல, வரலாறு...? அந்த மண்ணில் என் காலடி பதியும் ஒவ வொரு தடவையும் என் ஆத்மாவின் ஆத்மாவான யாழ். மண் எனக்குள் உணர்த்துவதும், உரைப்பதும் இதுவே தான்.. 'வாடா..என் செல்வமே.. இத்தனை நாள் எங்கு சென்றாய் உன் பலத்தையும், வளத்தையும், என்றுமே தளராத நம்பிக்கையையும் நான் இன்னமும் உனக்காகப் பாதுகாத்து வைத்திருக்கிறேன் வந்த பகை விரட்டி, வரும் பகையை எதிர்கொள்ள எடுத்துக்கொள்லு}.' -இதனை எனக்கு மட்டுமல்ல உங்களுக்கும் தான் சொல்லியிருக்கும் தாயே உன்னைத் தீயிட வந்த தீயோர்கள் எல்லாருமே தீயில் வெந்து கருகிப்போனார்கள்லு} நீ அப்படியே தீக்குளித்து புடமிட்டபொன்போல் அப்படியே நிற்கிறாய். -கடந்த கால வரலாற்றின் சாட்சியாய், நிகழ்காலத்தின் காட்சியாய், எதிர் காலத்தின் மாட்சியை எடுத்துரைப்பவளாய்.. -இதோ.. அதே பழைய கம்பீரத்துடன் வீரசிங்கம் மண்டபம். -இங்கு மானுடத்தின் தமிழ்க் கூடல் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன... -கொடிகள் அசைந்தாட விழாக்கோலம் கொண்டிருக்கிறது மண்டப முன்புறம். -மண்டபத்தின் வலப்புற வெளியிலும் எதிர்ப்புறத்திலும் விழாவுக்கு வருகை தந்திருப்போரின் வாகனங்கள் மொய்த்துள்ளன. -அருகே போரின் வடுக்களையும் அழிவையும் சுமந்து நிற்கும் றீகல் திரையரங்கு எதையெதையோ சொல்லத்துடிப்பது போன்று கோலம்காட்டி நிற்கிறது. புதர்மண்டியும், புல் வளர்ந்தும் கிடக்கும் புல்லுக்குளம்லு}. அதற்கப்பால தெரியும் அசோகா ஹோட்டல் சோகத்தில் சுவடுகளை வரலாற்றின் பதிவுகளாக்கி நிற்கின்றது. உல்லாசப்பயணிகளின் விடுதியாக இருந்து, பின்னர் மாற்றுக்குழுக்களினதும் இலங்கை-இந்திய இராணுவங்களினதும் வதைமுகாமாகவும் இருந்த அதன் இடிபாடுகளுள் யாழ்ப்பாண வரலாற்றில் இரத்த வாடை வீசும் சில அத்தியாயங்களும் சிக்கியிருக்கவே செய்யும். -றீகல் தியேட்டரையும் புல்லுக்குளத்தையும் வகிடெடுத்துச் சென்ற அந்த ஒற்றையடிப்பாதை இப்போது ஒரு பிரதான இணைப்பாதையாகிவிட்டது. -அதோ- திறந்த வெளியரங்கு அந்த முழுநிலாக்கால நினைவுகளை மீட்க வைக்கிறது. நகைச்சுவை நடிகர் கே.ஏ.தங்கவேலுவின் நாடகங்கள் அங்கு தொடராக நடந்தபோது முன்னிட இருக்கையை பிடிக்க மதில் பாய்ந்து பிடிபட்டு பொலிஸிடம் குட்டு வாங்கியது இந்த இடத்திலல்வாலு} தினகரன் விளையாட்டு விழாவினை இந்த புல்வெளியில் அலைந்தபடிதானே பார்த்து ரசித்தோம். -இந்த முற்றவெளியின் வரலாறே தனி வரலாறு. மாட்டுவண்டில் சவாரி பார்த்துவிட்டு இந்த முற்றவெளியின் முனியப்பர் கோவில் பின்புற, கோட்டை அகழி மதிலின் விளிம்பில் இருந்தபடி கச்சான் கடலை கொறித்தபடி, எதிரே தெரியும் து}க்குமர கட்டடத்தையும் அதற்கு அப்பால் விரிந்த மாலை நேர செவ வானின் சுடரொளியையும் பார்த்துக்கொண்டே நேரம் போவது தெரியாமல் இருந்த காலம்லு}. எரிக்க எரிக்க சுடுகலங்களின் வேட்டுக்கள் தாக்கலு}தாக்க இன்னமும் முனியப்பர் அப்படியே.. அசையாது கம்பீரம் காட்டியபடி அந்தக்கோயில் அப்படியே யாழ்ப்பாணத்தானைப் போல்.. -அதோ அதையடுத்த விளையாட்டரங்கில் பார்வை பதிகையில்லு} அந்த மகாஜனா- ஸ்கந்தவரோதயா கல்லு}ரிகளுக்கிடையேயான 'சம்பியன் கப்' உதைபந்தாட்ட போட்டி நாட்கள் முன்னே விரிகின்றனவே.. -அதற்கு அப்பால் இருந்த பொலிஸ் நிலையமும், அடுத்திருந்த மாநாகரசபைக் கட்டடமும், எதிரேயிருந்த சுப்பிரமணியம் புூங்காவும் அதற்கப்பால் இருந்த நீதிமன்ற வளாகமும். எங்கே..? போர் கொண்டே போயிற்றேலு} -இரண்டரை நு}ற்றாண்டு கால எமது அடிமை வரலாற்றின் சின்னமான அந்தக்கோட்டைலு} ஒல்லாந்தர் கட்டிய பிரமாண்டமான கோட்டைலு}. எமது மக்களின் வீரம் செறிந்த போர் துவம்சம் செய்து விட்டது. அந்தக் கோட்டையின் பிரமாண்டத்தை பண்ணைப்பாலம் பக்கம் நின்றுதான் பார்க்கவேண்டும். இந்தக்கோட்டையில் இருந்துகொண்டுதான் ஒல்லாந்தர், ஆங்கிலேயர், சிங்களவர்கள்- இந்தியர்கள். , பின் மீண்டும் சிங்களவர்கள் எம் மீது ஆக்கிரமிப்பு ஆட்சியை நடத்தினார்கள். அதோ அந்த மூலைப்பகுதிக்குள் நின்றுகொண்டுதானேலு}. ரஸ்யா விண்வெளி வீரர் யுூரி ககாரினை நான் பார்த்தேன்லு}.. மாநகரசபையில் 'அகன்ற திரை'யுடன் (70 அஅ) அமைக்கப்பட்ட றியோ தியேட்டரில் 'கவுண்ட் ஓ மியுூசிக்' 'மை பெயர்லேடி', 'றயன்ஸ் டோட்டர்' என்ற அற்புதமான படங்களைப் பார்த்து விட்டு பொன் கொண்டல் மரம் புூச்சொரியும் வீதி வழியாக நடந்து வரும் போது ஒரு விதமான சந்தோசம் ஏற்படுமேலு} அதைவிட அலாதியானது வேறெதுவுமில்லைலு}.. ஆறுமுகநாவலர் கற்பித்த மத்திய கல்லு}ரியும் அதன் எதிரேயிருக்கும், விளையாட்டு மைதானமும் கலகலப்பிற்கு பஞ்சமில்லாத இடங்கள். காலத்தை வென்று நிற்கும் மணிக்கூட்டுக் கோபுரம் இவ வளவு போரின் அனர்த்தங்களுக்கும் முகம்கொடுத்து இப்போது மீண்டும் புதுப்பொலிவு காட்டி புத்துயிர்த்து நிற்கிறதே! அதுவும் யாழ்ப்பாண மண்ணில்தானே வேர்விட்டு நிற்கிறது!, வெள்ளைக் கலையுடுத்த கலாவல்லியாக காட்சிதரும் யாழ். நு}லகம் தன் அகத்து நு}லையெல்லாம் தீ மனத்தோர் தீக்க}ரையாக்கி ரசித்த பின்னர் கருமை போர்த்தி சோகம் ததும்ப நின்ற கோலம் இன்னமும் மனதைப் பிசைகிறதேலு}. நு}லகம் மட்டும் அதனகத்திலிருந்த நு}ல்களையிழந்து வெறுமையான களஞ்சியம் போலிருக்கிறதேலு}. முகில்கள் மீது நெருப்பெழுதிய அந்த நாள் நள்ளிரவுப் போதின் மன அழுத்தம் இன்னமும் அப்படியேலு}. அன்றைய நாள் விடியும் போது இந்த இடத்தை நோக்கி நானும் எனது நண்பன் பாலாவும் செல்லும்போது மணிக்கூட்டு வீதியில் எரிந்து அரைகுறையாகக் கருகி லு}. காற்றில் பறந்து வந்து வீழ்ந்து கிடந்த அந்த பேப்பர் துண்டை எடுத்துப்பார்த்தபோது நெஞ்சமே கருகியதுலு}.. அது பாரதியார் கவிதைகள். புத்தகத்தின் ஒரு தாள்லு} கையில் எடுத்துப் படித்தது இன்னமும் ஒரு வரலாற்று ஆவணமாய் பாதுகாத்துவரும் அந்தத்தாளில் இருந்த வரிகளில் ஒன்றுலு}. 'கண்ணீரால் காத்தோம் கருகத்திருவுளமோ' இதன் பின்னர்தானே வரலாறு முற்றிலும் தலைகீழாய் மாறத் தொடங்கியது. 'ஒவ வொரு தமிழனும் ஒவ வொரு தீப்பந்தமாய்' மாற வேண்டியதன் அவசியத்தை உணர்த்திய நாள் அதுவல்லவா.. இப்போது அதை எரித்தவர்களே அதற்கு வெள்ளை மையும் அடித்துவிட்டார்கள்.. தங்களினால் ஏற்படுத்தப்பட்ட கறையை மட்டுமல்ல தங்களின் ஆத்ம அசிங்கத்தையும் மறைக்கும் பணிதான் இதில் பளிச்சிடுகிறது. வரலாறு எதையுமே தள்ளிவிடாது அனைத்தையும் உள்வாங்கி பதிவு செய்து வரும் தலைமுறைகளுக்கு வழங்கியே தீரும்.. ரூசூ009; இந்தப் பகுதியெங்கும் ஒரு காலத்தில் கூடிய தமிழ் மானிடர் இடையில் திக்கற்றும் திசையற்றும் செல்லலு}. ஆக்கிரமிப்பு வெறியர்களின் ஈனச்சுவடுகளின் அழுத்தம் தாங்காது இந்தமண் எப்படியெல்லாம் தன் ஆத்மாவுள் அலறியிருக்கும். கனக்கும் மனதுடன் பார்வை வீரசிங்கம் மண்டபத்தின் எதிரே பதிகிறது. அந்த நினைவுத் து}ண்கள்.. வெள்ளையடித்து பளீரெனத்தெரியும் அந்தத் து}ண்கள் தமிழீழ மக்களின் வரலாற்றில் அடக்குமுறை பேரினவாதிகளதும் அவர்களது அடிவருடிகளதும், அவர்களுக்கு ஏவல் பணிபுரியும் காவல்படையினரதும் காட்டுமிராண்டித்தனத்தின் அடையாளமாக அல்லவா அவை நிற்கின்றன. அந்தத் து}ண்கள் எத்தனைதரம் இடிக்கப்பட்டிருக்கும், சிதைக்கப்பட்டிருக்கும் அடையாளமே இல்லாமல் செய்யப்பட்டிருக்கும். ஆனால் அவையும் சாம்பலில் இருந்து உயிர்க்கும் பீனிக்ஸ் பறவைகள் போல் லு} இதோ மீண்டும் இன்றும் அதிக வலிமையுடன், அதிக உறுதியுடன் நிமிர்ந்து கம்பீரம்காட்டி நிற்கின்றன. 1974இன் தைத்திங்கள் பத்தாம் நாள் அன்றைய தினம்லு}. தமிழர் திருநாள் - பொங்கல் பெருநாள் வர நான்கு தினங்களே இருந்த சமயம் அதுவும் ஒரு மானிடத்தின் தமிழ்க்கூடல் நாள்தான்லு} உலகத் தமிழ் மானிடத்தின் தமிழ் குறித்து அதன் பெருமை குறித்து அதன் எதிர்காலம் குறித்து ஆராயும் உலகத்தமிழராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வுகள் நடந்துகொண்டிருந்த நேரம். இரவு. எங்கும் ஒளி வெள்ளம், பரந்துவிரிந்த முற்றவெளிப்பரப்பெங்கும் பிரதான வீதியை மூடி பெருக்கெடுத்து நிறைந்து ததும்பும் தமிழ் மக்கள் வெள்ளம்... நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு உயிர்க்கொடை உத்தமா நினைவாலயம் . இதே வீரசிங்கம் மண்டபத்தின் முன்புறம் அமைக்கப்பட்டிருந்த பெருவரங்கில் அனைத்துலக தமிழறிஞர்கள் குழுமியிருந்தனர். எங்கும் தமிழுணர்ச்சி, பொங்கும் தமிழ் எழுச்சியென யாழ்ப்பாண நகரமே தமிழ்க்கோலம் புூண்டிருந்தது. தைப்பொங்கலுக்கு முன்னேயேலு} தமிழ் பொங்கல் பொங்கி வழிந்து கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து வந்த பேராசிரியர் நயினார் முகம்மது தமிழுணர்ச்சி மேலிட தமிழின் பெருமையை அடுக்கடுக்காக அழகு தமிழில் கூறி தனது பேருரையை நிகழ்த்திக்கொண்டிருந்தார்லு}லு} உலகிலுள்ள மொழிகளுள் மூத்த தமிழின் மேன்மை குறித்த அவரது பேச்சில் கட்டுண்டு ஒன்றியிருந்த மக்கள் தாங்களும் தமிழர் என்ற பெருமிதம் பொங்க சிலையாய் இருந்தனர். பேராசிரியர் நயினார் முகம்மது உணர்ச்சி பீறிட உச்சஸ்தாயியில் உரை நிகழ்த்திக்கொண்டிருந்த அந்தக்கணத்தில்தான் பொறுக்காத பேரினவாத வெறிமிக்க சிறீலங்கா அரசின் காவல்ப்படையினர் தமது வெறியாட்டத்தை நடத்தினர். மின் வயர் துண்டிக்கப்பட்டன. கண்ணீர்ப்புகைக்குண்டுகள் வீசப்பட்டன. மக்கள் அல்லோலகல லோலப்பட்டனர்லு}. திக்குத்திசை தெரியாது ஓடினர், மரண ஓலம் எழுந்தது. எல்லாமே சிலமணித்துளிகளுள் நடந்து முடிந்தன. மறுநாள் போது - இதோ இப்போது இங்கு வெறும் கற்று}ணாய் நிற்போரின் மரணச்செய்திகளையும் ஏனையோர் பலர் குறித்த அவலச்செய்திகளுடனும் விடிந்தது. இவையனைத்தும் நடந்து இருபத்தெட்டாண்டுகள் ஆகிவிட்டனலு}.. ஆனால் இப்பத்தான் நடந்து முடிந்தது போன்று நெஞ்சை இன்னமும் அழுத்துகின்றதேலு} இந்தக் கற்று}ண்கள் -வெறும் நினைவுச் சின்னங்கள் மட்டுமல்ல தமிழ் மக்களின் குறிப்பாக தமிழ் இளைஞர்களின் எழுச்சியின் அடையாளச் சின்னங்களும் கூடலு}.. இப்போதும் இதோ இந்தச் சின்னங்களின்லு} அதே வீரசிங்கம் மண்டபம்லு}.. இரண்டுமே எதிரிகளின் எத்தனையோ தாக்குதல்களுக்கும்- சிதைத்தலுக்கும் முகம்கொடுத்து இன்னமும் ஒன்றையொன்று பார்த்தவண்ணம் நிமிர்ந்து புூரிப்புடன் நிற்கின்றன. சரித்திரச் சான்றுகளாகலு}. வரலாற்றுச் சின்னங்களாகலு}. இப்போது மீண்டும், மானுடத்தின் தமிழ்க் கூடல் நிகழ்வுகள் மற்றொரு தமிழராய்ச்சி மாநாட்டின் சாயலாகவே நடந்து கொள்கின்றன. முன்னர் 1974இல் பேராசிரியர் நயினார் முகம்மது பேசிய குரலின் அதே கம்பீரத்துடனும் அதனைவிட இன்னொரு பங்கு மேலான தமிழின உணர்வுடனும் இன்னொரு பேராசிரியர் பேசிக்கொண்டிருக்கிறார். மண்டபத்தின் வெளியேயுள்ள ஒலிபெருக்கியினு}டாக அது திசையெங்கும் பரவுகிறது. அவரும் நயினார் முகம்மது போன்று ஒரு இஸ்லாமியத் தமிழரேலு} கவிஞர் இன்குலாப் என நன்கு அறியப்பட்ட பேராசிரியர் காஹசல் ஹமீதுதான் அவர். ஒரு கணம் உடல் சிலிர்க்கிறது, வரலாறும் சிலிர்க்கிறது. இப்போது 1974இல் விடப்பட்ட குறையிலிருந்து வரலாறு தொடர்கிறது. அப்போது அருகிருந்து வந்து கண்ணீர்ப்புகைக்குண்டுவீசி மக்களின் தமிழுணர்வைக் குழப்பிய பொலிசார் இருந்த இடத்தின் அடையாளமே இல்லை. ஆனால் எமது அடையாளம் இன்னமும் அப்படியேலு}.. தனது சாம்பலில் இருந்தே உயிர்த்தெழும் பீனிக்ஸ் பறவை போல்.. சற்றுத் து}ரத்தில் மணிக்கூட்டுக் கோபுரத்துக்கு அண்மையில் காவலரண் ஒன்றில் இருக்கும் அந்த சிங்கள இராணுவச் சிப்பாய்களுக்கும் சற்று முன்னர் சிங்கள அறிஞர் ஒருவர் ஆற்றிய உரை கேட்டுத்தானே இருக்கும்! வரலாறு மீண்டும் தமிழினத்தின் மிடுக்கை ஓங்கிப் பறைசாற்றி உயிர்ப்பெழுச்சிகொள்ள வைத்துள்ளதை அவர்களால் புரிந்துகொள்ளமுடியுமா? 'தமிழ்' என்ற பீனிக்ஸ் பறவையின் உயிர்த்தெழுகை சிறகடிப்பின் ஒலிக்காற்றில் கலந்து திசையெங்கும் வியாபிக்கின்றது. ஆமாம் கவிஞர் 'இன்குலாப்'பின் உணர்ச்சி மிக்க உரை பேராசிரியர் நயினார் முகம்மதுவின் '1974' இல் ஆற்றிய உரையின் தொடர்ச்சியாக பிரவாகம் கொள்கின்றது. அது தமிழ் மானுடம் வெல்லும் என்பதற்கான கட்டியமாகவும் அமைந்திருப்பதை உணரக்கூடியதாக உள்ளது. காந்தன்; - sethu - 06-22-2003 யாழ்ப்பாணத்துக்கு வரும் சிங்களவர்கள் இது தான் சரியான தருணம். சிங்களவர்கள் யுத்தத்தில் சலித்துப் போயிருக்கிறார்கள் அவர்களுடைய மனச்சாட்சிகளைத் து}ண்டினாலேயே போதும் அது பாதியளவு சமாதானம் கிடைத்ததற்குச் சமம். ஜெகத் வீரசிங்க ஒரு பிரபல்யமான சிங்கள ஓவியர். புரிந்துணர்வு உடன்படிக்கையின் பின் அவரைச் சந்தித்த ஒரு தமிழ் நண்பரிடம் அவர் யாழ்ப்பாணத்துக்கு வரும் சிங்களவரைப் பற்றி மிகவும் வித்தியாசமான ஒரு விளக்கத்தைக் கூறியுள்ளார். யாழ்ப்பாணத்துக்கு வரும் சிங்களவர்கள் நயினாதீவில் யாத்திரிகைத் தலத்திற்கு வரும் யாத்திரிகர்கள் போலத் தோன்றினாலும் உண்மையில் அவ வாறில்லை என்று ஜெகத் வீரசிங்க கூறுகிறார். இலங்கைத்தீவு முழுவதும் பௌத்தர்களின் புனிதத்தலங்கள் இருப்பதாக சிங்களவர்கள் நம்புவது என்பது இலங்கைத்தீவு முழுவதும் சிங்கள பௌத்தர்களுடையது என்ற அவர்களது நம்பிக்கையின் பாற்பட்டதே என்றும் அவர் கூறுகிறார். எனவே யாழ்ப்பாணத்துக்கு யாத்திரை வருவது என்பதும் அதன் பிரயோக அர்த்தத்தில் இலங்கைத் தீவு முழுவதுமான தமது ஆட்சியுரிமையை உறுதி செய்யும் ஒரு செயலே என்ற தொனிப்பட ஜெகத்வீர சிங்க கூறுகிறார். ஜெகத் வீரசிங்கவின் இந்த விளக்கத்தை அதன் அடுத்த கட்டத்துக்கு வளர்த்துச் சென்றால் பின்வருமாறு வரும்- யாழ்ப்பாணத்தின் மீது படையெடுத்து வந்து அதைப் பிடித்து வைத்திருக்கும் சுமார் 30,000 சிங்களத் துருப்புக்களின் நீட்சியாகவும் அகற்சியாகவுமே இப்பொழுது சிங்களவர்கள் யாழ்ப்பாணத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதாவது இது யாழ்ப்பாணத்தின் மீதான இரண்டாவது படையெடுப்பு, சமாதான காலப்படையெடுப்பு. தாய்லாந்தில் முதற்சுற்றுப் பேச்சுக்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கும் ஒரு சூழலில் இப்படிப்பட்ட விடயங்களை ஏன் எழுத வேண்டும் என்று யாராவது கேட்கக்கூடும். அதுவும் ஒரு விதத்தில் சரிதான். ஆனால் சமாதானத்தின் கண்களுக்குப் புலனாகாத பகுதிகளைக் குறித்து தமிழர்கள் விழிப்பாயிருப்பது அவசியம் என்பதனால் இதை எழுதவேண்டியுள்ளது. அத்தோடு, புரிந்துணர்வுகால விருந்தாளிகளின் உளவியலை மதிப்பிட கடந்த ஆறேழுமாதகால அநுபவம் போதுமானது என்பதனாலும் இதை எழுதவேண்டியுள்ளது. இவைதவிர இங்கு வரும் சிங்களவர்கள் எத்தகைய சித்திரத்தை மனதில் வைத்திருந்தாலும் அவர்கள் திரும்பிச் செல்லும் போது அந்த சித்திரத்தை இயன்றளவு மாற்றி வரையக் கூடிய மிக வாய்ப்பான ஒரு சூழ்நிலை தமிழர்களுக்கு இப்பொழுது கிடைத்திருக்கிறது. ஈழப்போரில் முன்னெப்பொழுதும் இப்படியொரு கட்டம் வந்ததில்லை என்பதனாலும் இதைப்பற்றி எழுத இது உரிய நேரம்தான். யாழ்ப்பாணத்தின் நவீன காலத்தைப் பொறுத்தவரை அது இப்படியொரு கவர்ச்சி மையம் ஆகியது இதுதான் முதற்தடவை. யாழ்ப்பாணம் எப்பொழுதும் ஒரு கவர்ச்சிமையம்தான் என்பதால் தானே எல்லோரும் படையெடுத்து வந்தார்கள். ஆனால் இம்முறை நிலைமை முன்னெப்பொழுதையும்விட வித்தியாசமாகவுள்ளது. அமெரிக்காவின் பிரதியமைச்சர் ஆமிரேஜ் கட்டுநாயக்காவில் வந்திறங்கிய கையோடு அமைச்சர் மொறகொடவையும் அழைத்துக் கொண்டு அடுத்த விமானத்திலேறி நேரடியாக யாழ்ப்பாணத்துக்கு வருமளவுக்கு அதன் கவர்ச்சியும் பெறுமதியும் அதிகரித்துவிட்டன. இத்துணைதொகை சிங்களவர் இப்படித் தொடர்ச்சியாகப் பெருக்கெடுத்து வருவதும் ராஜதந்திரிகளும் து}துவர்களும் ஊடகக்காரரும் மாறிமாறி வருவதும் போவதும் முன்னெப்பொழுதும் நிகழ்ந்திராத ஒன்று. இப்பொழுது இலங்கைத்தீவில் உள்ள மற்றெல்லா நகரங்களையும்விட அதிகம் கவர்ச்சியான ஒரு நகரமாக யாழ்ப்பாணம் மாறியுள்ளது. ஆனால் நாமிங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால்- இது எதுவும் சாதாரண யாழ்ப்பாணத்தவரை அதிகம் தீண்டவில்லை என்பதே. சுரத்தில்லாத ஒரு சாட்சிபோல எல்லாவற்றையும் பற்றின்றிப் பார்த்துக்கொண்டு தானுண்டு தன்பாடுண்டு என்று உள்ளொதுங்கிவிடும் ஒரு போக்கே அங்கு பரவலாகக் காணப்படுகிறது. முன்பொருமுறை கூறப்பட்டது போல யாழ்ப்பாணத்தின் புதிரே சராசரி யாழ்ப்பாணத்தவன்தான் ஆனால் வரும் சிங்களவர்கள் எவரும் அவனுடன் அதிகம் கதைப்பதில்லை. அவனுக்கும் ஆர்வமில்லை. பொதுவாகச் சிங்களவர்கள் நேரடியாக ஆரியகுளம் சந்திக்கு வருகிறார்கள். அங்கே உள்ள விகாரையில் வழிபடுகிறார்கள். சிறிது ஆறிப் பிறகு நயினாதீவுக்குப் போகிறார்கள். அவர்களில் அநேகர் நகரப்பகுதியிலும் அதன் சுற்றயல் பகுதிகளிலும் குறிப்பாகப் பிரதான வீதிகளிலும்தான் நடமாடுகிறார்கள். குறிப்பாக பெண் புலிகளைக் கண்டால் விடுப்பார்வத்தோடு, நெருங்கிக் கதைக்க முயல்கிறார்கள். மற்றும்படி அவர்கள் சாதாரண யாழ்ப்பாணத்தவர்களோடு கதைப்பதைவிடவும் படையாட்களோடு செலவழிக்கும் நேரமே மிகவும் அதிகம். அவர்களுடைய முகபாவம் நடையுடை பாவனை எல்லாவற்றிலும் யாழ்ப்பாணத்தைப் பிடித்து வைத்திருக்கும் சுமார் 30,000 துருப்புக்களை நம்பித்தான் இங்கு வந்தோம் என்பதான ஒரு தோரணையிருக்கிறது. இது அவர்கள் தமிழர்களோடு நெருங்கிப்பழக முடியாதபடி ஒரு இடைவெளியை வைத்திருக்கிறது. தவிர, மொழியும் ஒரு தடை. யாழ்ப்பாணத்துக்கு வரும் சிங்களவரில் அநேகர் கீழ் மத்திய தர வர்க்க அல்லது அடி மட்டச் சிங்களவர்கள்தான். ஏனெனில் அவர்களில் அநேகர் அங்கேயுள்ள துருப்புக்களின் உறவினர்கள். அவர்களுக்கு அநேகமாக ஆங்கிலம் தெரியாது. யாழ்ப்பாணத்தின் புதிய தலைமுறைக்கோ சிங்களம் தெரியாது ஆங்கில அறிவும் குறைவு. இந்நிலையில் வர்த்தகர்கள் மட்டுமே வரும் சிங்களவர்களோடு உரையாடக் கூடியவர்களாகக் காணப்படுகிறார்கள். தமிழ் வர்த்தகர்களைப் பொறுத்தவரை அவர்களுக்குள்ள தென்னிலங்கைத் தொடர்புகள் காரணமாக அநேகமாக சிங்களம் தெரிந்தவர்களாகக் காணப்படுகின்றார்கள். தமிழர்களில் எப்பொழுதும் அதிகம் சிங்களம் பேசும் பிரிவினர் வர்த்தகர்களும் சிறிதளவு அதிகாரிகளும்தான். இதனால் வரும் சிங்களவர்களுடன் ஓரளவுக்கேனும் தொடர்புகளை வைத்திருப்பது வர்த்தகர்களே. மற்றும்படி சாதாரண யாழ்ப்பாணி இது எதனாலேயும் அதிகம் அருட்டப்படாதவனாய் எதையும் பொருட்படுத்தாதவனாய் வீண்சோலி எதற்கு என்று உட்சுருங்கும் ஒரு நிலையே பொதுப்போக்காயுள்ளது. இத்தகைய ஒரு பின்னணியில் அங்கு வரும் சிங்களவரை வரவேற்கவோ உபசரிக்கவோ உரிய, ஒருங்கிணைக்கப்பட்ட சிவில் ஏற்பாடுகள் எதுவும் இல்லை. அவர்கள் தங்கி நிற்கவும் சாப்பிடவும் போதிய வசதிகளும் இல்லை. ஜெகத் வீரசிங்க கூறுவதுபோல அவர்கள் புதிய படையெடுப்பாளர்களோ இல்லையோ அவர்களுடன் மனந்திறந்து உரையாடவும் தமிழர்களைப் பற்றிய அவர்களது மிகப்பழைய இறுகிய முற்கற்பிதங்களை உடைக்கவும் ஒரு புதிய சித்திரத்தை அவர்களிடத்தில் கொடுக்கவும் உரிய நிறுவன மயப்பட்ட ஏற்பாடுகள் எதுவும் அங்கேயில்லை. வரும் வழியில் அவர்கள் ஆனையிறவைப் பார்க்கிறார்கள். அது இப்பொழுது ஒரு உயிருள்ள போர்க்கால மியுூசியம் அதுகூட நினைத்துத் திட்டமிட்டு வடிமைக்கப்பட்டதல்ல. யுத்தத்தின் மிச்சங்களாய் அங்கே விடப்பட்ட சில போர்த்தளபாடங்களும் அழிவுகளும் இடிபாடுகளும் சேர்ந்து அப்பகுதியை ஒரு உயிருள்ள மியுூசியமாக்கி விட்டுள்ளன. கிளிநொச்சியைப் போல ஆனையிறவும் ஒரு மக்கள் வாழிடமாக இருந் திருந்தால் அங்கேயும் சனங்கள் மீளக்குடியமரும் ஒரு நிலை வந்திருக்கும். அப்பொழுது தவிர்க்கவியலாதபடி ஆனையிறவிலிருந்து யுத்தகால எச்சங்கள் அகற்றப்பட்டிருக்கும். ஆனால் அதிஸ்டவசமாக ஆனையிறவு ஒரு மக்கள் வாழிடம் அல்ல என்பதால் இப்பொழுது அதன் வழியாகப் பயணம் செய்யும் சிங்களவருக்கு ஒரு ஆகக்குறைந்த பட்ச செய்தியையாவது கொடுக்கக் கூடியதாயிருக்கிறது. மற்றும்படி, வரும் சிங்களவருக்கு யாழ்ப்பாணத்தில் நிற்கும் தமது பிள்ளைகள் சமாதானத்தால் உயிர்ப்பிச்சை தரப்பட்ட அற்ப பலியாடுகளாயிருக்கிறார்கள் என்ற குரூரமான யதார்த்தம் கவர்ச்சியாகவும் கூராகவும் கூறப்படவில்லை என்பதே மெய்நிலை. துப்பாக்கியும் சீருடையுமாக சந்திகள் தோறும் வீரம் காட்டும் தமது பிள்ளைகள் யாழ்ப்பாணத்தின் மார்பின் மீதே அட்டகாசமாக நின்று போஸ் கொடுக்கிறார்கள் என்பதும். அவர்களுடைய பாரமான சப்பாத்துக்களினடியில் யாழ்ப்பாணத்தின் இதயம் நசுங்கிக் கிடப்பதும் அநேகமான சிங்களப் பெற்றோருக்கு விளங்குவதில்லை. தமிழர்களிடமும் அதை விளங்கப்படுத்த உரிய ஏற்பாடுகள் பெருமளவு இல்லை. இந்த இடத்தில் விடுதலைப் புலிகளால் வெளியிடப்படும் சிங்களப் பத்திரிகையான 'தேதுன்ன' (வானவில்) பற்றிக் கூறவேண்டும். படித்த சிங்களவர் மத்தியில் குறுகிய காலத்துள் விரைந்து பரவி வரும் "தேதுன்ன" மிகக் கடினமான ஆனால் மிகப் பொறுப்பு வாய்ந்த ஒரு பணியைத் தொடங்கியுள்ளது. பிரதமரின் அலுவலகத்திலிருந்து தமக்கு மேலும் பல "தேதுன்ன" பிரதிகள் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டிருப்பதாக ஒரு தகவல் கூறுகிறது. சிங்கள வெகுசனங்களை மனோவசியம் செய்ய இதுதான் உரிய தருணம். அவர்கள் வன்னியைக் கடந்து யாழ்ப்பாணத்தக்குத்தான் போகிறார்கள். அவர்களில் எத்தனைபேர் வன்னிக்கு வர விரும்புகிறார்கள்? இது எதைக் காட்டுகிறது? ஜெகத் வீரசிங்க கூறுவது போல அவர்கள் தமது பிள்ளைகளோடு சேர்ந்து யாழ்ப்பாணத்தின் மீதான நிலையற்ற வெற்றியைக் கொண்டாட வருகிறார்கள். அவ வாறாயின்- நிச்சயமாகத் தமிழர்கள் அவர்களை மறித்துக் கதைக்க வேண்டும். கவர்ச்சியான ஏற்பாடுகளின் மூலம் (உதாரணமாக புகைப்படக் காட்சிகள் போன்றன) அவர்களை மறித்து உரையாட வேண்டும். சில யுத்த வியாபாரிகளின் பொக்கற்றுக்களை நிரப்பத்தான் அவர்களுடைய பிள்ளைகள் இங்கே அனாமதேயமாக மடிகிறார்கள் என்ற உண்மை அவர்களுக்குக்கு கட்டாயம் கூறப்பட வேண்டும். இந்தப் பிராந்தியத்திலேயே அதிகம் தப்பியோடிகளை உடைய ராணுவம் சிறீலங்கா ராணுவம்தான் என்பதும் அதற்கான காரணங்கள் எவை என பதும் தர்க்கபுூர்வமாக அவர்களுக்குக் கூறப்படவேண்டும். இப்பொழுது யாழ்ப்பாணத்தைப் பிடித்து வைத்திருக்கும் அதே தொகை ராணுவ வீரர்கள் (30,000) தென்னிலங்கையில் தப்பியோடிகளாய் பாதாள உலகக் கும்பல்களில் தஞ்சம் புகுந்திருப்பது அவர்களுக்குக் கூறப்படவேண்டும். இலங்கைத்தீவு எப்படி யுத்தகள அநுபவம் உடைய பாதாள உலகக் கும்பல்களின் தீவாக மாறியது என்று அவர்களுக்குக் கூறப்பட வேண்டும். இதுதான் சரியான தருணம். சிங்களவர்கள் யுத்தத்தில் சலித்துப் போயிருக்கிறார்கள் அவர்களுடைய மனச்சாட்சிகளைத் து}ண்டினாலேயே போதும் அது பாதியளவு சமாதானம் கிடைத்ததற்குச் சமம். - sethu - 06-22-2003 தகவல் தொழில்நுட்ப புரட்சியும் அதன் விளைவுகளும் தகவல் தொழில்நுட்பம் என்பது கணணித் தொழில்நுட்பத்தினை தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பத்துடன் இணைத்துக் கூறுவதற்கு விபரிக்கும் ஒரு பதமாகும். தகவல் தொழில் நுட்பம் என்பது ஒரு தகவல் முறைமையின் தொழில்நுட்பக் கூறு அல்லது ஒரு நிறுவனத்தின் முழுமுறைமையின் சேகரிப்பு எனலாம். இன்றைய நவீன உலகில் மக்களிடையே செல்வாக்குப் பெற்று விளங்கும் துறைகளில் தகவல் தொழில்நுட்பம் என்னும் துறையே முன்னணியில் உள்ளது. வானொலி, தொலைக்காட்சி போன்றவையும் பின்னர் தொலைத் தொடர்பு சாதனமுமே ஆரம்ப கால தகவல் தொழில்நுட்ப சாதனங்களாகக் காணப்பட்டன. எனினும், கடந்த நு}ற்றாண்டின் இறுதிப்பகுதியில் அறிமுகமான 'தகவல் தொழில்நுட்பப் புரட்சி' என்னும் பதத்தோடும் அதனோடு புதிதாகப் புகுந்து கொண்ட வலைப்பின்னல் தொலைநகல், மின்னஞ்சல் போன்ற சாதனங்களோடு கணணியும் இணைந்து கொண்டதோடு இது உண்மையிலேயே மக்கள் மனங்களில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியும் விட்டது. இன்று உலகின் எல்லாத் துறைகளிலுமே தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் தாக்கம் காணப்படுகிறது. இதனால், இன்று உலக சமூகத்தில் வாழும் ஒவ வொரு மனிதனும் அதனைக் கற்றிருக்கவோ இல்லை அது பற்றி அறிந்திருக்கவோ வேண்டியதன் அவசியம் உணரப்பட்டுள்ளது. இவ வாறெல்லாம் முக்கியத்துவம் பெற்று விட்ட இத்துறைக்கு அறிஞர்களால் பல்வேறுபட்ட வரைவிலக் கணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தகவல் தொழில்நுட்பம் என்பது கணணித் தொழில்நுட்பத்தினை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்துடன் இணைத்துக் கூறுவதற்கு விபரிக்கும் ஒரு பதமாகும். தகவல் தொழில் நுட்பம் என்பது ஒரு தகவல் முறைமையின் தொழில்நுட்பக் கூறு அல்லது ஒரு நிறுவனத்தின் முழுமுறைமையின் சேகரிப்பு எனலாம். இவ வாறு இன்னும் பல வரைவிலக்கணங்கள் இதற்கு வழங்கப்பட்டுள்ள போதிலும், இவ வரைவிலக்கணங்க@டாக தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் கதாநாயகன் கணணிதான் என்பதனைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இத்துறையின் செயற்பாடானது விளையாட்டுத் துறையில் ஆரம்பித்து பாரிய நிறுவனங்கள்- அரச அலுவலகங்கள் வரை பரந்துபட்ட அளவில் காணப்படுகிறது. ஆரம்ப காலங்களில் ஒரு தொழிற்சாலையின் அமைவிடத்திற்கு போக்குவரத்து வசதி எவ வளவு அவசியமானதாக நோக்கப்பட்டதோ அதேபோன்று இன்று இவற்றின் உற்பத்திக்கு உதவும் மூலப் பொருட்களில் ஒன்றுபோல் ஆகிவிட்டது இந்த தகவல் தொழில்நுட்பம். இந்தத் தகவல் தொழில்நுட்பப் புரட்சியால் உலகம் பல மாற்றங்களை பெற்றிருக்கிறது. இன்றைய உலக வல்லரசுகளினதோ அல்லது அவ வாறான குழுக்களினதோ கருத்துக்கள் என்றில்லாமல் எல்லோருடைய கருத்துக்களையும் எல்லோரும் புரிந்து கொண்டு சுயமாகவும் சுதந்திரமாகவும் ஒரு முடிவினை தாமே மேற்கொள்ள இந்தத் தகவல் தொழில்நுட்பம் பெரும் பங்களிப்பை ஆற்றி வருகிறது. ஒரு நாட்டின் விரிவான அபிவிருத்திக்கும் அதில் வாழும் மக்களின் தொழில்நுட்ப திறனை சர்வதேச தரங்களுக்கேற்ப உயர்த்தவும் அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவும் உலகப் போட்டிகளுக்கு ஈடுகொடுக்கவும் வளங்களின் உச்ச பயனைப் பெறவும் வேலையில்லாத் திண்டாட்டங்களை ஒழிக்கவும் இத்துறை பேருதவி புரிகிறது. இன்றைய, பரபரப்பான உலகில் தமது அன்றாடக் கடமைகளையே தீர்த்துக் கொள்ள வகையின்றி அந்தரிக்கும் மக்களுக்கு இத்துறை ஒரு வரப்பிரசாதமே. ஏனெனில் தற்கால சனநெருக்கடியும் போக்குவரத்து நெருக்கடியும் நிறைந்த உலகில் தமது விரல்களின் அசைவுகளின் மூலமே தேவையின்றிய செலவுகளையும் அலைவுகளையும் தவிர்த்து மிகவும் திருப்தி கரமான முறையில் தமது தேவைகளைப் புூர்த்தி செய்யவும் முடிகிறது. பாரிய நிறுவனங்களும் மற்றும் பல்வேறுபட்ட அமைப்புக்களும் தங்களின் பண்டங்களையும் சேவைகளையும் மிகக்குறைந்த முதலீடுகளோடு மக்கள் மத்தியில் தங்களைப் பிரபல்யப்படுத்திக் கொள்ளவும் தமது நோக்கங்களைப் புூர்த்தி செய்யவும் மிகவும் குறைந்த செலவில் நிறைந்த பயனைப் பெறவும் இந்தத் தகவல் தொழில்நுட்பம் வழியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இவ வாறெல்லாம் மனித முன்னேற்ற வாழ்வியலோடு ஒன்றிப்போய்விட்ட இன்றைய நவீன தகவல் தொழில்நுட்பம் அவர்களின் வாழ்வியல் மேம்பாட்டில் எவ வளவு பின்னிப் பிணைந்திருக்கிறதோ அதே போல் அவர்களின் சீரழிவிற்கும் காரணமாய் இருந்துள்ளமையையும் இருக்கின்றமையையும் மறுத்துவிட முடியாதன. மனித வலுவைக்குறைத்து அதேவேளை அதன் சக்தியை உச்சநிலைக்கு கொண்டு செல்லல், விளம்பரம், சினிமா என்று அவரவர்க்கு ஏற்ற வகையில் மனிதர்களின் மனங்களை ஆட்டிப் படைக்கிறது இத்துறை. இத்துறைகளோடு நேரடியாகத் தொடர்புடையோர் மட்டுமல்லாமல் இவற்றின் வெளியீடுகளை நுகர்ந்து கொள்வோரே இதனால் அதிக பாதிப்புக் குள்ளாகின்றனர். தற்காலத்தில் எங்கும் வானொலிப் பெட்டி, தொலைக்காட்சி என்று வெகு சாதாரணமாகி விட்டது. அன்றாடம் நாம் பயன்படுத்தும் 'டோச்லைட்'களில் கூட வானொலிக் கருவியின் இணைப்பு. இவ வாறான பல்வேறு உபகரணங்களை நாம் ஒரே வேளையிற் கையாள்வதால் எமது கவனங்கள் பல்வேறு திசைகளில் சிதறி விரும்பத்தகாத எதிர் விளைவுகளையெல்லாம் ஏற்படுத்தி விடுகிறது. இவ வாறெல்லாம் பல்வேறு பெறுபேறுகளையும் தந்து கொண்டிருக்கும் இன்றைய தகவல் தொழில்நுட்பப் புரட்சியை எமது சமுதாயமும் கற்றுக் கொண்டதோ இல்லையோ அதன் இறுதி வெளியீடுகளான பிரச்சாரப் பீரங்கிகளின் வாயில் சிக்கித் தவிப்பது உண்மையே. அந்த வகையில் எல்லா நல்ல விடயங்களிற்குமே சில எதிர்மறையான விளைவுகளும் ஏற்பட்டு விடுவது வழமையே. ஏதோ ஒன்றைப் பின்னணியாகக் கொண்டு அது அரசியலாகவும் இருக்கலாம், சமூகவியலாகவும் இருக்கலாம், இவை அனைத்திற்கும் அப்பால் விளம்பரத் துறையாகவோ விஞ்ஞான ஆராட்சித் துறையாகவோ எதுவாகவும் இருக்கலாம். இவற்றில் ஒன்றைப் பின்னணியாகக் கொண்டு மக்களின் மனங்களைச் சூழ்ந்து கொண்டுள்ள இத்துறையின் விளைவுகளை சமூகங்களின் வழிகாட்டிகள் மிகத்தெளிவாக இனம் கண்டு அவற்றினை மக்களுக்குப் புரிய வைத்து காய்களைத் தவிர்த்து கனிகளைக் கவர்வதன் மூலம் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் புரட்சிகரமான பயனை எமது சமூகம் சரியான முறையில் பயன்படுத்த வகை செய்வது இவைகளோடு தொடர்புடை யோரின் பொறுப்பு மிக்க கடமையாகும். -குணாளன்- - sethu - 06-22-2003 உலகம் கிராமமாகியும், தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தும் மானிட சமுதாயம் மகத்தான சாதனைகள் படைக்கின்ற புதிய மிலேனியத்தில் குட்டித்தீவுகளாய் எத்தனை கிராமங்கள். ஜெயசிக்குறூய் காலத்தில் உலகஊடகவியலாளர்களின் பார்வைமையமாக இருந்த அம்பகாமம் இன்று யாராலும் திரும்பிப்பார்க் கப்படாமல் கிடக்கிறதே! அரசுகள் மாறியென்ன ஆட்சியாளர்கள் மாறியென்ன அம்பகாமங்களும், பாலைப்பாணிகளும் அப்படியேதான் இருக்கப்போகின்றனவோ? வரலாற்றில் கால் பதித்த இந்தக் கிராமம் வாழ்வதற்காய் தவம் கிடக்கிறது. நிழலற்ற வீதியில் நீண்டதூரம் ஓடிக்கொண்டிருந்தேன். சீரற்ற பாதை, ஆனால் இது ஒரு நெடுஞ்சாலை. சிதைந்து போய்க்கிடக்கிறது. யுத்தத்தின் காயங்கள்தான் வழிநெடுக. ஒட்டுசுட்டானிலிருந்து மாங்குளம் வீதியில் போய்க்கொண்டிருக்கிறேன். வழியில் பல கிராமங்களைக் காணவில்லை. சில இடங்களில் ஒன்றிரண்டு சிறுகுடிசைகளும் ஓரிரண்டு மனிதர்களும் தெரிகின்றன. தொலைவுக்கொரு சிறு கடை. ஆட்கள் வருகிறார்களோ இல்லையோ அடுப்புப் புகைகிறது. நான் அம்பகாமம் போய்க் கொண்டிருக்கிறேன். மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் ஒலுமடுவிலிருந்து ஐந்து மைல் தொலைவில் (இங்கே இன்னும் மைல் கல்தான் உண்டு) இருக்கிறது அம்பகாமம், தனித்திருக்கும் காட்டுக்கிராமம். முரசுமோட்டை 201ஃ2 மைல் என்று கைகாட்டித் தூண் காட்டிய பாதையில் மிதிவண்டியைத் திருப்பினேன். செப்பமான செம்மண் தெரு அது. இருமருங்கும் அடர்வனம். மனதுள் ஒருவகை அச்சமும் கூடவே இருந்தது. வீதியில் போவோர் வருவோர் எவரையுமே காணவில்லை. கரை நெடுக இராணுவ இருப்பைக் காட்டிய தடயங்கள் ஏராளமாயிருந்தன. இராணுவத்தின் ஒரு கோட்டையாக இந்தப்பகுதி இருந்திருக்குமோ என்று எண்ணத் தோன்றியது. மிதிவெடி அச்சம் கலவரமூட்டியது. கரையிலே மிதிவண்டியை விடாது நடுவாலேயே ஓடினேன். என்னை அறியாமலேயே இன்றைய பயணம் வேகமாக இருந்தது. இருமருங்கும் பார்த்தபடி 35 நிமிடங்கள் மிதித்திருப்பேன். கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு ஓலைக்கூரை தென்பட்டது. இதயம் சற்று அமைதியடைய, அவ விடத்தை அண்மித்தபோது அது ஒரு ஆலயம் என்பதைத் தெரிந்துகொண்டேன். போரால் அந்த ஊர் பட்ட துன்பத்தை அந்த ஆலயத்தின் இடிபாடுகள் சொல்லாமல் சொல்லி நின்றன. உடைந்த ஓட்டுத்துண்டுகளை பொறுக்கிக்கொண்டு ஒரு முதியவர் அங்கே நின்றார். அவரிடம் ஐயா இந்த இடம் எது? என்று மெல்லப் பேச்சுக்கொடுத்தேன். 'இதுதான் தம்பி அம்பகாமம், புள்ளையாரிட்டையே வந்தனி. நேத்தி ஏதும் கட்டோணுமே ராசா' என்றார் 'இல்லை' என்று மொட்டையாய் சொல்லி அவரது எதிர்பார்ப்பைச் சிதைக்காது 'இந்த ஊரைப்பாப்பமெண்டு வந்தனான்' என்றேன். 'நல்லது தம்பி' என்று தொடர்ந்தார் முதியவர். அவருடன் உரையாடியதிலிருந்து அதுதான் மம்மில் பிள்ளையார் கோவில் என்பதையும் மிகவும் புதுமையானதாக அவர்கள் அதை நம்புகின்றார்கள் என்பதையும் இந்தக் கிராம மக்களும் அயற்கிராமங்களில் உள்ளவர்களும் நோய் நொடி, பாம்புக்கடி எதுவானாலும் இங்கு வந்து நூல்போட்டுத்தான் மாத்துவார்களாம் என்பதையும் தெரிந்து கொண்டேன் அவர்தான் அந்தக்கோயில் புூசகர். பெரியவரிடம் விடைபெற்று நகர்ந்தபோது, கண்ணில்பட்டது மண்டைஓடு. ஒன்றல்ல முன்னாலிருந்த வேலியில் அங்கங்கு சிவப்பும் வெள்ளையுமாய் மண்டையோட்டு குறிகளும் எச்சரிக்கை அறிவிப்புகளும், வெடிபொருட்கள் கவனம். மிதிவெடி கவனம் எங்களின் பசிய காடுகளுக்கு பகை கொடுத்த பரிசுகள் (இங்கு பாரபட்சமின்றி இருக்கின்றவோ?) அப்படியே 100 மீ தூரம் சென்றிருப்பேன். வெள்ளை அடிக்கப்பட்ட ஒற்றைக் கட்டிடத்தில் பாடசாலை. அது முஃஅம்பகாமம் அ.த.க. வித்தியாலயம் புதிதாக இப்போது அமைக்கப்பட்டிருக்கிறது. அயலில் வீடுகள் எதையும் காணவில்லை. வளைந்து சென்ற பாதையால் சற்றுத்தூரம் சென்றபோது தூரத்தூர குடிசைகள் தென்பட்டன. காய்ந்துபோன தொண்டையை நனைக்க எண்ணி ஏதாவது ஒரு வீட்டில் தண்ணீர் குடிப்போம் என்று போனபோது மாமர நிழலில் ஒரு அம்மா கை மாத்தி மாத்தி நெல்லுக் குத்திக்கொண்டு நின்றா. என்னைக் கண்ட அந்த அம்மா இன்முகம் காட்டி வரவேற்று தண்ணீர் கேட்ட எனக்குப் புளித்தண்ணீர் தந்து உபசரித்தார். நான் மரத்தின் கீழ் கிடந்த குத்தியில் இருக்க மீண்டும் நெல்லைக்குத்தத் தொடங்கினா. நான் அவவிடம் கதைகொடுக்க 'தம்பி இஞ்ச ஒரு முப்பதஞ்சு குடும்பம் இருக்குது ராசா. உந்தப் பாழாப் போன ஆமியால நாங்கள் ஊரவிட்டு ஓடி இப்பதான் திரும்பவும் பயிர் பச்சையள வைக்கிறம். போனதுகள் கொஞ்சம் இஞ்சால இன்னும் வரேல்ல. எனக்குத் தெரிஞ்சபடிக்கு உந்தப்பள்ளிக்கூடம் 36 ஆம் ஆண்டு வந்தது. இண்டைக்கும் உந்த ஒரு கட்டிடமும், எண்டைக்கும் ஒண்டு அல்லது ரெண்டு வாத்திமாரும் ஒரு முப்பத்தஞ்சு நாப்பது பிள்ளையளும்தான் படிக்கிறவ. அஞ்சு மட்டும் படிச்சிட்டு கொஞ்சம் நிக்கும், மிச்சம் ஒலுமடுவோ, மாங்குளமோ போகுங்கள். ஒலுமடு அஞ்சு கட்ட, மாங்குளம் எட்டுக்கட்ட சயிக்கிளிலதான் போகோணும். நானும் உந்தப்பள்ளிக்கூடத்தில எங்கட யாழ்ப்பாண வாத்தியாரிட்ட காதில முறுக்கு வாங்கினனான். (இதைச் சொல்லும்போது அம்மா பெருமிதப்படுவதை நான் உணர்ந்தேன்) தனது ஊர்பற்றியும் தங்கள் வாழ்வியல் பற்றியும் ஏதோ தனக்குப்பட்டதெல்லாத்தையும் என்னிடம் ஒரு நட்புணர்வுடன் அந்த முதியபெண் பகிh ந்துகொண்டார். அதுமட்டுமன்றி 'தம்பி பகலில திரியிறது பரவாயில்லை இரவில இதுவழிய திரியாத ராசா, பொழுதுபட்டா உந்தப்பாதயளில பெரிசு நிக்கும் (பெரிசு என்றால் யானையாம்) சிலவேளை புலியும் வரும்' (நிச்சயமாக அது காட்டுப்புலி) என்று என்னை எச்சரிக்கவும் செய்தா. அவரிடம் விடைபெற்றுக்கொண்டு அப்பாலே செல்கையில் இன்னொரு முதியவரைக் கண்டேன். காய்ந்துகிடக்கும் வயல் வெளியில் மாடுகளை ஓட்டிவந்தார். அவரை மறித்து உரையாடினேன். அவர் மறக்க முடியாதபடி சில விடயங்களைச் சொன்னார். அம்பகாமத்தில் ராணுவம் நிலைகொண்டிருந்தபோது அங்கிருந்த குளத்தின் உட்பக்கமாக அவர்கள் அரண் அமைக்க குளக்கட்டை வெட்டியிருக்கிறார்கள். அதனால் குளம் உடைந்துவிட்டது. இப்போது வயலுக்கோ சிறு பயிர்ச்செய்கைக்கோ போதிய நீரில்லை எல்லா இடமும் வரண்டு காய்ந்து போய்க்கிடக்கிறது. இந்த ஊருக்கே அந்தக் குளம் ஒரு பெரும் செல்வம். வன்னியின் அநேகமான குடியிருப்புக்கள் குளத்தை ஆதாரமாக வைத்தே அமைந்திருக்கின்றன. இப்போது இங்கே சரியாக விவசாயத்தில் ஈடுபடவும் முடியவில்லை. வேட்டைக்கு, தேன் எடுப்பதற்கு என்றும் போகமுடியாது. இன்னும் மிதிவெடி அச்சம் நீங்கவில்லை. முன்பு பெரும் காடாக இருந்த இந்த இடம் இப்பொழுது உருக்குலைந்து போயிருக்கிறது. அழகான அமைதியான, நிறைவான அம்பகாமம் பீதி நிரம்பித் தனித்துக்கிடக்கின்றது. இரண்டு வருடங்களுக்கு முன்பு எல்லாம் ஊடகங்களிலும் பெரும் கவனிப்பைப் பெற்றிருந்த இந்தக் கிராமம் யார் பார்வைக்கும் தெரியாதிருக்கிறது. ஜெயசிக்குறுவின் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மையம், உக்கிர சமர்க்களமாயிருந்த பகுதி இன்று அமைதியில் உறைந்திருக்கிறது. பிரித்தானியர் ஆட்சியின்போது கண்டிவீதி அம்பகாமம் ஊடாகவே போனது. இப்போது பழைய கண்டி வீதியாகிவிட்டது. வயல் வெளியைத்தாண்டி சென்றபோது சிறு வீடுகள். அவை கழிய மீண்டும் அடர்காடு. இரண்டு மைல் தூரம் சென்றிருப்பேன் மீண்டும் ஒரு சிறிய கிராமம் அது புலுமச்சிநாதகுளம் என்று அம்மா சொன்னது ஞாபகம் வந்தது. அதனையும் கடந்து ஓடினேன். சரியாக இருபது நிமிடங்கள் கழிய கிழக்கு மேற்காகச்செல்லும் மாங்குளம் முல்லைத்தீவு வீதியை அடைந்தேன். ஒலுமடுப்பக்கமாக மிதிவண்டியைத் திருப்பி பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலை முன்பிருந்த இடத்தில் வீதியருகில் நின்ற புளியமரத்தின் கீழ் சற்று இளைப்பாறினேன். மனதுள் ஆயிரம் கேள்விகள்; ஒரு பனடோல் வாங்கக்கூட 5 மைல் போக வேண்டும். வாத்தியார் கந்தோருக்கு 18ஃ20 மைல் போக வேண்டுமா? சந்தை என்றால் நீண்ட பெருங்காட்டுக்குள்ளால் சீரற்ற காட்டுப் பாதையால் வட்டக்கச்சி அல்லது மாங்குளம் வந்து மல்லாவி, கிட்டிய வைத்தியசாலை 16 மைலில் எந்தவொரு அடிப்படை வசதியுமின்றி இந்த மக்கள் எப்படி வாழ்கிறார்கள்? உலகம் கிராமமாகியும், தகவல் தொழில்நுட்பம் வளர்ந்தும் மானிட சமுதாயம் மகத்தான சாதனைகள் படைக்கின்ற புதிய மிலேனியத்தில் குட்டித்தீவுகளாய் எத்தனை கிராமங்கள். ஜெயசிக்குறூய் காலத்தில் உலக ஊடகவியலாளர்களின் பார்வை மையமாக இருந்த அம்பகாமம் இன்று யாராலும் திரும்பிப்பார்க்கப்படாமல் கிடக்கிறதே! அரசுகள் மாறியென்ன ஆட்சியாளர்கள் மாறியென்ன அம்பகாமங்களும், பாலைப்பாணிகளும் அப்படியேதான் இருக்கப்போகின்றனவோ? வரலாற்றில் கால் பதித்த இந்தக் கிராமம் வாழ்வதற்காய் தவம் கிடக்கிறது. - sethu - 06-22-2003 அன்புள்ள வகியனுக்கு வணக்கம், எப்படியிருக்கிறாய்? நளினிக்கும் பிள்ளைகளுக்கும் எங்களின் அன்பைச் சொல். சுகவிசாரிப்பைக் கூறு. மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்று உன்குரலைக் கேட்டதில் நிறையச் சந்தோசம். நேரில் பார்க்க முடியாவிட்டாலும், கதைக்க வாய்த்ததில் ஒரு நிறைவு. கனிவான அதேகுரல், அதே பா}வு, அதே உரிமை, எல்லாவற்றின் மீதுமான அதே அக்கறை. கண்டம் மாறிப் போய்க் கனகாலம் ஆனபோதும் சொந்த ஊருக்குத் திரும்புவது பற்றியே இன்னும் சிந்தித்துக்கொண்டிருக்கிறீர்கள். நாதனுடன் பேசும்போது அவனும் ஊர்திரும்புவதையே விரும்புகிறதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இப்பொழுது வெளிநாடுகளிலிருந்து இங்கே வரும் நம்மவர்களின் தொகை பெருகியிருக்கிறது. சொந்த நாட்டுக்கு வருவதில் அவர்களுக்கிருக்கும் ஈடுபாட்டையும் சொந்த ஊரில் நிற்கும்போது அவர்களடையும் சந்தோசத்தையும் நிறைவையும் பார்க்கின்றேன். இந்தத்தவிப்பு சாதாரணமானதல்ல. இதுவே உங்களுக்குள்ளும் ஆட்டிப்படைக்கிறது. எப்பொழுதும் அந்நியத் தன்மை நிரம்பிய மனதுடன் ஒரு பிறத்தியானாக ஓரிடத்தில் இருப்பதையும் பிறத்தியானாக ஓரிடத்தில் நடத்தப்படுவதையும் சகிக்க முடிவதில்லை. உனக்குள்ளிருக்கும் சமூகவிழிப்பு மேலும் சொந்த தாயகத்தை நோக்கி உன் கவனத்தைத் திருப்புகிறது. நாதன் பெரிய அவாவுடன் எப்ப ஊருக்கு நிரந்தரமாகத் திரும்பி நிம்மதியாக வாழலாம் என்று தவிக்கின்றான். இந்தப் புரிந்துணர்வு காலத்தின் சிறு அமைதிக்குள்ளேயே எத்தனை மாற்றங்கள் நிகழ்கின்றன? உறவுகள் வருகின்றன. சேருகின்றன. விருந்தினர்களும் வெளியாட்களும் வருகிறார்கள். வியாபாரிகள் வருகிறார்கள். புதிய பொருட்களும் வருகின்றன. எங்கும் மெல்லியதொரு மகிழ்ச்சியும் ஆரவாரமும் புூத்துத் தானிருக்கிறது. இது தொடருமா? சடுதியாக வாடிவிடுமா? என்று யாருக்கும் தெரியாது. ஆனால், எல்லோரிடமும் இந்த சமாதான நடவடிக்கை பற்றிய அச்சமும் கேள்வியும் உண்டு. புரிந்துணர்வு நடவடிக்கையில், அதிலுள்ள பல விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு பின்னடிக்கிறது. அரசை நீதியாகச் செயற்படத் தூண்டும் மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் நடக்கின்றன. இன்னும் சமாதானப் பேச்சுவார்த்தை தொடங்கவில்லை. தொடங்கும் காலப்பகுதியோ நிகழ்ச்சி நிரலோ இன்னும் முன்வைக்கப்பட்டதாகவும் தெரியவில்லை. எல்லோரையும் விட நாம்தான் இதில் அதிகம் கவலைப்பட வேண்டியிருக்கிறது. பிரச்சினை எங்களுடையது. அதற்கான போராட்டத்தை, எத்தனையோ தடைதாண்டி சுமையேற்று, வலிகளைத்தாங்கி நடந்து வந்த பெரும் பயணத்தை நிகழ்த்தியவர்கள் நாம். வெற்றியோ தோல்வியோ அதிகம் பாதிப்பது நம்மைத்தான். இதனால்தான் நாம் விழிப்பாக இருக்கிறோம். இந்த விழிப்பு போராடும் மக்களுக்கு எப்போதும் அவசியம். இந்த விழிப்புடன்தான் இங்கே கண்டனப் பேரணிகளும் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களும் நடக்கின்றன. பழைய பாதைகள் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளன என்றார் ஒரு நண்பர். ஒரு பாதை திறப்பு என்பது அது புதிய பாதையாக இருக்க வேண்டும். உண்மையான அர்த்தத்தில். ஆனால், ஏற்கனவே இருந்த பாதையைப் புூட்டிவிட்டு மீண்டும் திறப்பதை புதிதாகப் பாதை திறப்பதாகவே அரசு காட்டவிளைகிறது. புதிதாகப் பயணங்கள் நிகழ்கின்றன. புதிய சூழல் பிறந்திருக்கிறது என்று பலரும் எழுதுகிறார்கள். பேசுகிறார்கள். ஒரு சமூகத்தின் வளர்ச்சியை மட்டுப்படுத்திவிட்டு, தடுத்துவிட்டு பின்பு சிறு இடைவெளியை அளிப்பதனூடாக அதிலேற்படும் சிறு மாற்றத்தை புதிய சூழல், புதிய வளர்ச்சியென்பதா? அதன் இயல்பான வளர்ச்சிக்கு அனுமதித்திருந்தால், அல்லது அரசு பாரபட்சம் காட்டாதிருந்தால் இப்போதுள்ள நிலைமையைவிட இன்னும் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்குமே. சமாதானப் பேச்சுவார்த்தையும் தீர்வும்கூட அரசாங்கத்தாலும் சில ஊடகங்களாலும் இப்படித்தான் நோக்கப்படுமோ, கையாளப்படுமோ என்று அஞ்சுகிறேன். எல்லாவற்றையும் பறித்துவிட்டு அல்லது தடுத்துவிட்டு பின்பு சிறிதளவைத் தருவதனூடாக முழுவதையும் கொடுத்துவிட்டதான ஒரு மயக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், நாம் விழிப்பாகவே இருக்கிறோம். புரிந்துணர்வு உடன்படிக்கைக் காலமாகிய இப்போதைய சூழலில் பலவும் ஓரளவுக்கு சுமூகமடைந்துவருகிறது. அல்லது அப்படித் தோற்றம் தருகிறது. ஆனால், இதற்குள் ஒரு நிறைவான மகிழ்ச்சியும் மலர்ச்சியும் ஏற்பட்டிருப்பது உண்மை. இதை சகலரும் நிறைவானதாகவும், உயிர்ப்புள்ளதாகவும் மாற்றவேணும். சகலருக்கும் சமாதானத்தை முழுமைப்படுத்துவது தவிர்க்கமுடியாத ஒரு அவசிய பணியாகும். ஒரு காலகட்டத்தில் போர்பற்றிப் பேசினோம். இப்பொழுது அதிகமதிகம் சமாதானம்பற்றிப் பேசுகிறோம். நாம் சமாதானம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது மறுபக்கத்தில் போர்பற்றி அரசதரப்பில் சிந்தித்துக்கொண்டிருப்பதாகவும் பேசிக்கொள்கிறார்கள். கடந்தகாலங்களில் நமக்கு ஏற்பட்ட அனுபவங்களும் அப்படித்தானே இருந்தன. எனவே எதனையும் நாம் சந்தேகிக்காமலும் இருக்கமுடியாதல்லவா? நண்பனே? உன்னுடன் அன்று கதைத்தபிறகே நான் உடுத்துறைக்குப் போனேன். முன்பு போல தரவைக்குள்ளால் போகமுடியாது. அந்தப்பாதை இன்னும் மிதிவெடி அச்சத்திலிருந்து மீளவில்லை. இப்போது அது புழக்கத்திலுமில்லை. மாவிலங்கைத் தோட்டம் உட்பட எங்கும் தென்னைகளெதுவும் இல்லை. வீடுகளோ, வேறு மரங்களோ என்று ஒன்றும் மிஞ்சவில்லை. பதிலாக மண்ணரண்களும் முட்கம்பிச் சுருள்களும் மிதிவெடிகளும் நிறையவுண்டு. கைவிடப்பட்ட சிதைந்துபோன காவலரண்கள் தானுண்டு. புதுக்காட்டுச் சந்தியாலதான் பயணம் நடக்கிறது. தரவை விரிந்து ஊர்களையும் தன்வசப்படுத்தியிருக்கிறது. கடற்கரையில் மட்டும் சிலவீடுகள் பாதியாகவும் அரை குறையாகவும் மிஞ்சியிருக்கின்றன. சனங்கள் கடற்கரைப்பக்கமாக வரத்தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் குறைவாகத் தானிருக்கிறார்கள். தொழில் மெல்ல தொடங்கியிருக்கிறது. ஆனாலும் கொழும்புக்கு மீனோடு லொறி ஓடுகிறது. தரவையில் எந்த வீடும் மிச்சமில்லை. வயலுக்குள்ள வல்லிபுரம் அண்ணைகோடை வெங்காயம் வைக்கிற ஞாபகம் வருகிறது. இப்ப வயலெது, வளவு எது என்றும் பிரித்தறிய ஏலாது. வல்லிபுரம் அண்ணை வவுனியாவில ஒரு கொமினிகேசன் சென்ரர் (தொலைபேசித் தொடர்பகம்) வைத்து நடத்திக்கொண்டிருக்கிறார். தமிழ்ப்பகுதிகளில் வன்னி தவிர மற்றெங்கும் இதுவொரு புதுத்தொழில். அதேமாதிரி மிக்சர் கடைகளும் அப்பிள் கடைகளும் வழிக்குவழி புதிசா முளைச்சிருக்குதுகள். இப்பொழுது கொமினிகேசன் சென்ரர்களும் லொட்ஜ்களும் முக்கியமான அம்சமாகிவிட்டன. ஈழத்தமிழர் வாழ்க்கையில் ஒவ வொரு தொலைத் தொடர்பகங்களிலும் தங்கள் உறவினரின் தொலைபேசி அழைப்புக்காக தினமும் பலர் காத்திருக்கிறார்கள். இதில் பாதிப்பேர் லொட்ஜ்களில் வாரக்கணக்காக, மாதக்கணக்காகத் தங்கி தொலைபேசியில் கதைப்பதற்காகவும் காசு வருவதற்காகவும் காத்திருக்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்து வரும் காசில் பெரும் பகுதி ரெலிபோனுக்கும் லொட்ஜுக்கும் சாப்பாட்டுக்கடைக்கு மேபோகுது. இதுக்கொரு மாற்றுவழியை யாரும் யோசிப்பதாகவும் தெரியவில்லை. போக்குவரத்துச் செலவு, தங்குமிடச் செலவு, ரெலிபோன் செலவு, தவிர பிறசெலவுகள், அலைச்சல், காசு இன்றும் வரவில்லை என்று 'உண்டியல்' செய்பவர்கள் செய்யும் தாமதம் எல்லாவற்றுக்கும் பதிலாக மாதா மாதமோ அல்லது குறிப்பிட்டதொரு காலப்பகுதியிலோ வங்கிக@டாக பணத்தை வெளிநாடுகளிலுள்ளோர் இங்கே அனுப்பலாம். வேண்டுமானால் மிக அவசியமானவற்றுக்கு தொடர்புகொள்ளலாம். சொந்தத் தொலைபேசியில்லாதவர்கள் படும் சிரமமும் செய்யும் செலவும் சொல்லிமாளாது. இதை நீங்கள் நிச்சயம் கவனமெடுக்கவேண்டும். வகி, யாழ்ப்பாணத்தைவிட வவுனியா நிறைப்பெருத்த மாதிரியும் மாறியிருப்பதாகவும் தெரியுது. வடபகுதியின் ஒரு முக்கியமான நகரமாக வவுனியா வந்துவிட்டது. தொண்ணுhறுக்குப் பிறகு வடபகுதிக்கான இடைத்தங்கல் களமாகவும் தொடர்புமையமாகவும் வவுனியாதான் இருந்து வந்திருக்கிறது. புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு முந்திய டீ.டீ.ஊ யின் ஒலிபரப்பில் கூட, நீ இதனை அவதானித்திருப்பாய், ஊடகங்களில் மட்டுமல்ல மக்களின் பெரும்பாலான தேவைகளுக்கும் அரச நிர்வாக தொடர்புகளுக்கும் வவுனியாதான் மையம். யாழ்ப்பாணம் 85க்குப்பிறகு யுத்தத்தின் மையப்பிடிக்குள் சிக்கியிருந்ததால் அதன் முகம் பெருமளவுக்கும் சிதைக்கப்பட்டேயிருக்கிறது. இப்பொழுது குண்டு வீச்சால் கட்டிடங்களும் மரங்களும் சிதைந்துவிட்டன. சொத்திழப்பும் உயிரிழப்பும் அதனை வெறுமையாக்கியிருக்கிறது. சனங்கள் ஒவ வொருபோதும் விட்டோடி விட்டோடி அது சோபையிழந்துவிட்டது. பலவற்றுக்குப் பாரமரிப்பாளர்களும் இல்லை உரித்தாளரும் இல்லை. பதிலாக இவர்களில் பலர் வவுனியாவுக்குப் பெயர்ந்து வவுனியாவில் வாழத்தொடங்கி நகராக்கியிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் இப்போது மின்சாரம் வந்திருக்கிறது. ஓரளவுக்குப் பாதைகள் போடப்பட்டிருக்கின்றன. போக்குவரத்தும் சீராகத் தொடங்கியிருக்கிறது. இழந்துபோன வாழ்வை ஈடேற்ற ஒவ வொரு யாழ்ப்பாணத்தாரும் உழைக்க வேண்டியிருக்கிறது. அப்படித்தான் அவர்கள் இப்போதிருக்கிறார்கள். யாருக்கும் ஓய்வில்லை ஒவ வொருவரும் இரண்டு அல்லது மூன்று வேலை செய்கிறார்கள். நீண்ட நாட்களின் பின் கொழும்புக்கும் போயிருந்தேன். கொழும்பும் நிறைய மாறித்தானிருக்கிறது. தங்களின் வாழ்க்கைத் தேவைகளுக்காகவும் வாழ்க்கை வசதிகளுக்காகவும் உழைத்தல், சிந்தித்தல் என்பதே பொதுமொழியாகியிருக்கு. கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்திலும் இதுதான் நிலைமை. ஒருகுட்டிக் கொழும்பாக யாழ்ப்பாணம் உருவாகி வருகிறது. அல்லது மாற்றப்பட்டு வருகிறது என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்திலிருந்து புராதன பொருட்களெல்லாம் கொழும்புக்கும் பிற இடங்களுக்கும் விலைப்பட்டுப்போய்க்கொண்டிருக்கின்றன. கவர்ச்சிகரமான விலையைக் கொடுத்து இந்தப் பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள். எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வெறுங்கையர்களாக நிற்கப்போகிறோமா என்று அகிலன் கேட்கிறான். 'யாழ்ப்பாணத்தின் பல ஓவியங்களும் நல்ல புகைப்படங்களும் அழிந்து போய்விட்டன. சில பாதுகாக்க வசதியற்றிருக்கின்றன' என்று இன்னொரு நண்பர் ஆதங்கப்பட்டார். இப்போது கணணியில் இவற்றை சேமித்துப் பாதுகாக்க வாய்ப்பிருந்தும் ஒருவரும் இதற்கு முயற்சிக்கவில்லை. சிந்திப்பதாகவும் தெரியவில்லை. யுத்தத்தில் எதுவும் அழிந்து போகலாம் என்பதால் முடிந்தளவுக்கு எல்லாவழிகளிலும் பாதுகாக்க வேண்டியவற்றைக் காக்க வேண்டுமல்லவா! அன்புடன் விதுல்யன் - sethu - 06-22-2003 15 ஆம் ஆண்டு நீங்காத நினைவில் உலக வரலாற்றிலே ஓர் புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் மட்டுமல்லலு}. தமிழீழ மக்கள் புரட்சியின் திறவுகோல், ஈழ விடுதலைப் போராட்டத்தின் அகிம்சைத் தீ. அணையாவிளக்கு, அகிம்சையால் எழுந்த பாரதமெனும் நாட்டுக்கு, அகிம்சையின் அர்த்தம் கற்பித்த புலிவீரன். இந்திய-சிறீலங்கா ஒப்பந்தமெனும் சூழ்ச்சிப் பொறியோடு, தமிழீழ மக்களின் துன்பங்களையும், வேதனைகளையும் வெட்டி வீழ்த்தி விடுவோமென்று கூறிக்கொண்டு பாரதப் படைகள் எம் மண்ணில் காலூன்றியபோது தமிழீழ மக்களின் மகிழ்ச்சி உச்சிமேவிப் பிரவாகித்தது. ஆனால் இந்திய அரசின் கபடம் மெல்லமெல்ல வெளிவரத் தொடங்கியபோது ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து பன்னிருநாட்கள் தண்ணீருமின்றி உண்ணாநோன்பிருந்து தமிழீழ விடிவிற்காய் உயிர்த்தியாகம் செய்தான் தியாகி திலீபன். 1963.11.27 இல் ஊரெழு என்னும் கிராமத்தில் பிறந்த இராசையா பார்த்தீபன் என்னும் திலீபன் கல்வியில் சிறந்துவிளங்கி பல்கலைக்கழக மருத்துவபீட அனுமதியைப் பெற்றார். தமிழீழ மக்களின் இன்னல்கண்டு தனது கல்வியை உதறித்தள்ளி 1983 காலப் பகுதியில் லெப். கேணல் பொன்னம்மான் அவர்களின் தொடர்பு மூலமாக தன்னை விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைத்துக்கொண்டான். ஆரம்ப காலங்களில் இயக்க அரசியல் வேலைகளில் ஈடுபட்ட திலீபன், பின்னர் யாழ். மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டான். இக்காலப்பகுதியில் சிறீலங்காப் படைகளுடனான நேரடி மோதல்களிலும் தனது திறமையினை வெளிப்படுத்தி வந்தான். மக்கள் மத்தியில் மிக அன்பாகப் பழகியதுடன் அவர்களது முன்னேற்றத்துக்காக பல அமைப்புகளையும் நிறுவினான். விடுதலைப் புலிகள் அமைப்பையும் பல புதிய பரிமாணங்களிற்கு இட்டுச் செல்ல வழிவகுத்துச் செயற்பட்டான். களத்தில், சுதந்திரப் பறவைகள் உட்பட பல பத்திரிகைகளை ஆரம்பித்து செயற்படுத்தினான். விடுதலைப் புலிகளின் மாணவர் அமைப்பு, மகளிர் அமைப்பு, சுதந்திரப் பறவைகள் அமைப்பு, தேச பக்தர் அமைப்பு என்பவற்றுடன் தமிழீழ கிராமிய நீதி மன்றங்கள், விழிப்புக் குழுக்கள், சர்வதேச உற்பத்திக் குழுக்கள், தமிழீழ ஒலி ஒளி சேவைக் கட்டுப்பாட்டுச் சபை, தமிழர் கலாசார அவை என இவன் ஆரம்பித்து நெறிப்படுத்திய பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். இவ வாறு விடுதலைக்காய் தீவிரமாக உழைத்துவந்த லெப்.கேணல் திலீபன் இந்திய-சிறீலங்கா ஒப்பந்தத்தை சிறீலங்கா அரசு மீறுவது கண்டு, பயங்கரவாதத் தடைச்சடத்தின் கீழ் தடுப்புக் காவலிலும், சிறைகளிலும் உள்ளோர் விடுவிக்கப்படவேண்டும், இடைக்கால அரசு நிறுவப்படும்வரை 'புனர்வாழ்வு' என்னும் சகல வேலைகளையும் நிறுத்தவேண்டும். வடக்கு கிழக்கில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும், இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில் உள்ள ஊர்காவற் படையினரின் ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் என்பவற்றில் குடியிருக்கும் இராணுவ பொலிஸ் நிலையங்கள் அகற்றப்படவேண்டும் என ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து பல்லாயிரக் கணக்கான மக்கள்திரள் முன் தண்ணீருமின்றி தன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தான் திலீபன், பன்னிரு நாட்கள் தன்பாராமுகத் தன்மையினால் திலீபன் என்னும் தியாக வீரனை சாவின் வாய்க்குத் தீனியாக்கியது பாரத அரசு. 'மக்கள் புரட்சி வெடிக்கட்டும், சுதந்திர தமிழீழம் மலரட்டும்' என்று கூறி மரணித்த அந்த மாவீரனின் 15ஆம் ஆண்டு நினைவுடன் ஒன்றுபட்டு மக்கள் சக்தியாய் எழுந்துநின்று, தினம் தினம் தீக்குளித்து போராடி நிற்கிறது எம்மினம். - sethu - 06-22-2003 தெளிவு "இப்படித்தான் மட்டக்களப்பில் ஒருகடைக்கு கிட்ட எங்கட பெடியள் கண்ணிவெடி வைக்கப் போனவங்கள் அந்தக்கடைக்காரரும் எங்கட தீவிர ஆதரவாளர். அப்ப இவையள் சொல்லி இருக்கினம் கடையைப்புூட்டிக்கொண்டு போகச் சொல்லி தாங்கள் அமத்தப் போறம் எண்டு. அதற்கு அவர் சொன்னாராம் தம்பிமாரே நான் கடையைப்புூட்டிப் போட்டுப்போனா வழமையாக வாறவங்களுக்கு சில வேளை சந்தேகம் வந்துவிடும், பிறகு தெரியும்தானே அதால வழமை போலவே இருக்கிறன் நீங்கள் உங்கட வேலையைப்பாருங்கோ நடப்பதைப் பிறகு பார்ப்பம் என்று, அதற்கு எங்கட ஆக்களும் ஓமென்று போட்டுப் போயிற்றினம். உயர் போர் அழுத்தம் நிறைந்த சூழலில்தான் ஒரு இராணுவ மருத்துவராக கடமையாற்றுவதும். அதனால் ஏனைய போரளிகளுடன் வழமைக்கு மேலாக ஏற்பட்ட நெருக்கமான உறவும் மகிழ்சியைக கொடுக்கின்றது. எனினும் இதற்கு மேலாக எல்லைப்படை வீரர்கள் அப்பகுதியில் ஆற்றும் விபரணத்திற்கு அப்பாற்பட்ட பணியும் இவர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. அத்துடன்லு}மக்கள் புரட்சி வெடிக்கட்டும் எனும் திலீபண்ணாவின் கூற்று நிதர்சனமாவதும் ஒருவகை ஆத்ம திருப்தியைக் கொடுக்கின்றது. இளம் பனைவடலிகளுக்கு இடையில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு பதுங்குகுழிக்கு அருகில் அவன் படுத்திருக்கிறான். நேற்றைய எறிகணை வீச்சினால் சிதைந்து வேரோடு பிரட்டி விடப்பட்டிருக்கும் அச்சிறு பனைவடலியைப் பார்க்கும் போது ஆச்சா}யமும் அச்சமும் கலந்த உணர்வு எட்டிப் பார்க்கவே செய்கின்றது. எவ வளவு எறிகணை மற்றும் ஏனைய வெடிச்சத்தங்கள் கேட்டபோதும், சேதங்களை விளைவித்த போதும் வேலை நேரத்தில் அதனைப் பெரிதுபடுத்தாத தன்மையும், பின்னர் நேரடி விளைவுகளைப் பார்க்கும் போது ஏற்படும் உணர்வும் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதையிட்டு இவன் தன்னுள் பலமுறை வியந்துள்ளான். குடாரப்பு தரையிறக்கம் நடைபெற்று இன்றுடன் பதினைந்து நாட்கள் காலத்துள் கரைந்து விட்டது. தொடராக இன்று மதியம்வரை நடைபெற்ற மூர்க்கத்தனமான எதிரியின் உயர்வலு எறிகணைத் தாக்குதலினால் அச்சிறு பிரதேசம் சின்னா பின்னமாக சிதைக்கப்பட்டிருக்கின்றது. இந்த ஊடறுப்புப் பிரதேசங்களைத் தக்கவைத்தால்தான் ஆனையிறவை வீழ்த்தலாம். அரசியல் இராணுவாPதியில் போராட்டத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்! எனத் தலைவர் முதல் தளபதிகள் வரை விளக்கியதனால் தோற்றம் பெற்ற, தாம் சாகத்துணிந்து சாதிக்க வந்தவர்கள் எனும் கருத்துருவாக்கம் அவர்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்றால் மிகையாகாது. உயர் போர் அழுத்தம் நிறைந்த சூழலில்தான் ஒரு இராணுவ மருத்துவராக கடமையாற்றுவதும். அதனால் ஏனைய போரளிகளுடன் வழமைக்கு மேலாக ஏற்பட்ட நெருக்கமான உறவும் மகிழ்சியைக கொடுக்கின்றது. எனினும் இதற்கு மேலாக எல்லைப்படை வீரர்கள் அப்பகுதியில் ஆற்றும் விபரணத்திற்கு அப்பாற்பட்ட பணியும் இவர்களை உற்சாகம் கொள்ள வைத்துள்ளது. அத்துடன்லு}மக்கள் புரட்சி வெடிக்கட்டும் எனும் திலீபண்ணாவின் கூற்று நிதர்சனமாவதும் ஒருவகை ஆத்ம திருப்தியைக் கொடுக்கின்றது. மேற்படி எண்ணங்களால் சூழப்பட்டவன் எப்படியும் இண்டைக்கு அவருடன் கதைத்துவிட வேண்டும் என தன்னுள் எண்ணிக்கொள்கின்றான். இவர்களுடன் இணைந்ததில் இருந்து அவரை இவன் கவனித்த வண்ணமே வருகின்றான். தன்னிலை மீறி உறங்கினால் அன்றி அவர் ஓய்வெடுத்ததே இல்லையென்று சொல்லலாம். பதுங்கு குழிவெட்டுதல், காயக்காரர்களை தூக்கி வருதல், தேவையான இடங்களுக்கு உடனடி விநியோகங்கள் செய்தல், காவலரண்களின் முன்னால் நாற்ற மெடுத்துக் கொண்டிருக்கும் பகைப் பிணங்களைப் புதைத்தல் என ஓடியோடி ஏதாவதொருவேலை செய்து கொண்டிருந்தார். இவன் நிலக்கீழறை அமைத்தல் போன்ற கடின வேலைகளைச் செய்ய முற்படும் போதெல்லாம் "டொக்டர் தாங்கோ நான் செய்யிறன் நீங்கள் ரெஸ்ற் எடுத்தால்தான் தட்டித்தவறி நான் காயப்பட்டாலும் வடிவாகக் கவனிப்பீர்கள்" எனக் கூறியபடி இவனிடம் இருந்து மண்வெட்டியைப் பறிக்காத குறையாக வேண்டுவார். இவனும் எதுவுமே கூறாது புன்சிரிப் பொன்றுடன் அதனைக் கொடுத்து விடுவான். இன்னும் இருபத்தைந்து போராளிகளளவில் காயப்பட்டிருந்தனர். அவர்களுக்கான அவசரசிகிச்சைகளை போராளி மருத்துவர்கள் செய்துகொண்டிருந்தனர். அப்பொழுது அவரும் கூடவேநின்று வாகனங்களில் இருந்து இறக்குதல், ஏற்றுதல் போன்ற இன்னோரின்ன உதவிகளைச் செய்து கொண்டிருந்தார். ஒருவாறு காயக்காரர்களை பின்னுக்கு அனுப்பிமுடிய இவர்கள் ஓய்வெடுக்கத் தொடங்குகின்றார்கள், அப்பொழுது ஏதோவொரு காவலரண்பகுதியில் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என பகுதிப் பொறுப்பாளர் அறிவிக்க இவன் உடனேயே அப்பகுதிக்குச் சென்று விட்டான். ஆனால் அவர்கள் இன்று 'ரேண்' மாறும் முறை. புதிய அணிகள் உள்ளெடுக்கப்பட இவர்கள் பின்னுக்கு அனுப்பப்படுவார்கள். அவரை அழைத்து வர இன்னொருவன் சென்றிருந்தான். இண்டைக்கு தவறவிட்டால் பிறகு சந்தர்ப்பம் கிடைக்காது இவன் யோசித்துக் கொண்டிருக்கும் போது அவரும்வேறு சிலரும் சில இலகு இயந்திரத்துப்பாக்கிகளைச் சுமந்தவண்ணம் வந்து கொண்டிருக்கிறார்கள் "இதுகள் ஆமியின்ர பொடிகளோட கிடந்தது" எனக்கூறிய வண்ணம் அருகில் கொண்டு வந்து போடுகிறார்கள். ஆயுதங்கள் வாங்க பொன் கொடுத்த மக்கள் இன்று அவற்றைத் தாங்களே அள்ளி வருகின்றார்கள். அப்பொழுது ஒருவன் வந்து சொல்கின்றான், "டொக்டர் உங்களையும் மெயின் மெடிசினுக்கு வரட்டாம் பிறகு தேவையென்றால் அனுப்பிறதாம்" தனது நெற்றியைச் சுருக்கி ஏதோ கேட்க நினைத்தவன் எதுவும் கேட்காமல் எழும்புகின்றான். "அண்ணை! கேக்கிறன் என்று குறை நினைக்காதீங்கோலு}. எனச்சற்று இழுத்தவன் அவரின் ஆமோதிப்பை எதிர்பாh க்காமலேயே தொடங்குகின்றான் "நீங்கள் கலியாணம் செய்திட்டீங்களோ?" "ஓம்" "பிள்ளையள்" "மூன்றுவயதில் ஒரு பெடியனும், ஒருவயதில் ஒரு பிள்ளையும் இருக்கு" யு9 பாதையில் இருந்து இவர்கள் தொண்டமனாறு நீரேரிக்கரையை நோக்கி நடக்கின்றார்கள். எதிரியின் எறிகணை விமான பீரங்கிக்குண்டு வீச்சுக்களினால் சிதைந்தும் எரிந்தும் காணப்படும் பற்றைகளும் ஊடறுப்புத்தொடரை உடைத்து இவர்களை முற்றுகையினுள் கையகப்படுத்தும் நோக்கத்துடன் பலமுறை முனைந்து மூக்குடை பட்டதால் சிதைந்து போய்க்கிடக்கும் பகைவன் கனரக வாகனங்களும், சற்றுத்தள்ளி ஆங்காங்கே புதைக்கப்படாமல் தவறவிடப்பட்டிருந்த அழுகிய பகைவனின் சடலங்களும் ஊதிப்பருத்து வெடித்த வான்நோக்கி கால்கள் நீட்டிக் காணப்படும் இறந்த கால்நடைகளினது உடல்களில் இருந்து வெளிவரும் நாற்றம் என எல்லாம் சேர்ந்து இன்னவென்று சொல்ல முடியாத சூழல் ஒன்றை பிரசவித்துள்ளன. இவர்கள் அவற்றைச் அசாதாரணமாக பார்த்தவண்ணம் எதிரி எறிகணை குத்தும் சத்தங்கள் ஏதாவது கேக்கிறதா! எனக் காதுகளைத் தீட்டிய வண்ணம் தனது சம்பாசனையை தொடந்து கொண்டு செல்கின்றார்கள். "நீங்கள் எங்களோட நிக்கேக்க வீட்டு யோசனைகள் வராதோ" "வரத்தானே செய்யும்" "அப்படியிருந்தும் எப்படி எங்களோட அதுவும் இப்படியான இடத்தில வேலை செய்ய முடியுது" இக் கேள்விக்குச் சற்றுயோசித்தவர், "எப்படி வீட்டு யோசனைவாறது தவிர்க்க ஏலாதோ அப்படித்தான் நாங்கள் இன்னேரத்தில் பங்களிப்புச் செய்யிறதும் தவிர்க்க முடியாததாகி விட்டது" எனப் பதிலிறுக்கின்றார். "நீங்கள் என்ன சொல்லுறீகள்" "தம்பி! இறந்த உண்மை எங்கையும் பொருந்தும்" "எந்த உண்மை?" "சாகத்துணிந்தவனே வாழத்தகுதியானவன் அதனை வன்னி நிலம் தெளிவாய் வெளிக்காட்டுது" சொல்வது அவராக இருந்த போதிலும் போராளியான இவன் மனதில் இறக்கை முளைக்கின்றது. இப்பொழுது தொண்டமனாறு நீரேரியை சிறுபடகு ஒன்றில் கடந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடன் இரண்டுகாரர்களும், வேறுசிலரும் பயணிக்கின்றார்கள். இடையே கடல் மண் தட்டுப்பட இவர்கள் இறங்கி படகைத் தள்ளி மீண்டும் ஏறிச் செல கின்றார்கள். ஏரியின் நடுவில் நின்ற பார்க்கும் போது இரண்டு கரைகளிலும் காணப்படும் பல நூறு பனைமரங்களின் உச்சி வட்டுடன் அறுந்து வ}ழுந்திருந்தது. ஏரியினுள் எறிகணை கிபிர்க்குண்டுகள் வீழ்ந்து வெடித்ததால் உருவான பாரிய பள்ளங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. இவர்கள் கரையை வந்தடைந்து விட்டார்கள். அங்கு தயாராகநின்ற 'ரக்ரர்' இல் காயக்காரர்களையும் ஏற்றி தாங்களும் ஏற்றிக் கொள்கின்றார்கள். இப்போது ஓர் வெட்டைப் பகுதியை கடந்து கொண்டிருக்கிறார்கள். அப்பகுதிக்கே உரித்தான அந்த விபாPதம் நடக்கிறது. இவர்களுக்குச் சில நூறு மீற்றர்கள் முன்னால் வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளும் அதனால் எழும்புகை மண்டலங்களும் இவர்களை நோக்கி விரைந்து வருகின்றது. கண்ணிமைக்கும் நேரத்தினில் நடக்கப்போவதை ஊகித்த அவர்கள் இருவரும் ஓடும் 'ரக்ரரில்' இருந்து பாய்ந்து நிலத்தில் வீழ்ந்து படுக்கவும் ஒரு எறிகணை 'ரக்ரர் இஞ்சினில்' வீழ்ந்து வெடிக்கவும், ஏனையவை இவர்களைத் தாண்டிச்சென்று விழவும் புகைமண்டலங்களால் இவர்கள் சூழப்படவும், என அனைத்தும் சில கணங்களினுள் நடந்தேறிவிட்டன புகையடங்கியவுடன் எழுந்து பார்க்கின்றார்கள். சாரதியும் இன்னொருவரும் இறந்திருந்தனர். 'ரக்ரர்' பெட்டியில் இருந்த காயக்காரரும் மற்றும் சிலரும் சிறுகாயங்களுக்குட்பட்டிருந்தனர். உடனே காயமடைந்தவர்களுக்கான முதலுதவியை செய்கின்றார். உரிய இடத்திற்கு நிலைமையை வோக்கியில் அறிவிக்கின்றனர். சிறிது நேரத்தில் இன்னொரு 'ரக்ரர்' வர அனைவரும் அதில் ஏற அது சீறிப் பாய்கின்றது. அவர்கள் கட்டைக்காட்டுப் பகுதியில் இயங்கிக்கொண்டுடிருந்த பிரதான மருத்துவநிலையை வந்தடைந்து விட்டார்கள். நொந்து வந்திருக்கும் அவர்களிடம் நிலைமையை விசாரிக்க தெரிந்த முகங்களுக்கு கூடநேரம் இருக்கவில்லை. அப்பகுதி வேகமாக இயங்கிக் கொண்டிருக்கிறது. முகமாலைப் பகுதியில் காயமடைந்து கொண்டுவரப்பட்டிருந்த பல போராளிகளிற்கு அவசர சத்திரசிகிச்சை அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களின் சவரஞ செய்யப்படாத முகமும் இரத்தச் சிவப்பேறிய கண்களும் அவர்களின் தொடர் வேலைப் பழுவை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன இவர்களுடன் வந்திருந்த காயக்காரர்களிற்கும் உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இவர்கள் இருவரும் அங்கிருப்பவர்களிற்கு உதவிகள் செய்வதில் ஈடுபடுகின்றனர். அம்மருத்துவமனையில் இருந்து வன்னித்தள மருத்துவமனைக்கு காயக்காரர்களை அனுப்புவதற்கான ஒழுங்கு நடைபெறுகின்றது. அப்போது அங்கு வந்த எல்லைப் படை வீரர்களிற்கு பொறுப்பான போராளி அவரையும் வன்னிக்குச் செல்லும்படி பணிக்கின்றார். சற்றுத் தயங்கிய அவ வீரர் இன்னும் சில நாட்கள் நிற்கப்போவதாக கூறுகின்றாh . அந்த நேரம் குறித்த பொறுப்பாளரிற்கு, முகமாலை பகுதியில் சண்டை நடப்பதாகவும் ஆட்கள் தேவைப்படுவதாகவும் அறிவித்தல் வருகின்றது. அவர் அம்மருத்துவ நிலையில் உதவிக்கு நின்ற வீரர்களை ஒழுங்கமைத்து உரிய இடத்திற்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபடுகின்றார். அப்பொழுது குறித்த எல்லைப்படை வீரரும் அவர்களுடன் இணைந்து கொள்கிறார். முன்றாம் நாள் விரைந்து வந்து நின்ற வாகனத்தில் இருந்து சில காயக்காரர்கள் இறக்கப்படுகிறாh கள். அவசரமான மீள உயிர்ப்பு அளித்தல், உயிh காத்தலுக்கான சிகிச்சைகள் என்பன செய்யப்படுகின்றன. அப்பொழுதுதான் அம்மருத்துவன் அவ எல லைப்படை வீரரையும் கவனிக்கிறான். அவரிக்கு வலது கால் முழங்காலிற்கு கீழாக சிதைந்துள்ளது. மயங்கிய நிலையில் இருக்கும் அவரிடம் அனுமதிபெறாமலேயே அக்காலை வெட்டியகற்றுகின்றார்கள். சாதாரண மருத்துவமுறைப்படி நோயாளியின் அனுமதியின்றி இவ வாறு செய்ய முடியாதுதான் எனினும் வழமைபோல் போர்க்காலத்தில் மீறப்படும் மரபுகளினுள் இதுவும் அடங்குகின்றது. பல பேருக்கு இவ வாறு செய்திருந்த போதும் ஏனோ இவனுக்கு இது அதிகமான கவலையைக் கொடுக்கின்றது. அதேவேளை சிகிச்சை முடிந்து மயக்கமருந்தின் தாக்கத்தில் இருந்து முற்றாக விடுபடாத இவர்களுக்குப் பொறுப்பாகப் போன போராளி "டேய் எல்லைப்படைக்காரரை பங்கருக்குள் படுக்கச்சொல்லுங்கடாலு}. காத்துப்படாட்டிலும் பரவாய் இல்லைலு}" என திரும்பத்திரும்ப சொல்லிக் கொண்டிருப்பது ஏனைய ஈனக் குரல்களையும் தாண்டி வந்துகொண்டிருக்கிறது. சில நாட்களாக இவனுக்கு அவ வெல்லைப்படை வீரரைப்பார்த்து ஆறுதல் சொல்ல வேண்டுமென்ற எண்ணம் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. காயக்காரர்களை ஏற்றிச்செல்லும் வாகனம் ஒன்றில் இவனும் வன்னித்தள மருத்துவமனைக்கு செல்கின்றான். அங்கு அவர் அருகில் இருந்து மெல்லத் தலையைக் கோதிவிடுகிறான். அவர் கேட்கின்றார் "ஏன் தம்பி வந்தனீங்கள்" இவன் அதற்கு எதுவும் சொல்லாது கேட்கின்றான். "நீங்கள் கால் போனதையிட்டுக் கவலைப்படவில்லையா?" "எப்படித்தம்பி கவலைப்படாமல் இருக்கமுடியும்?" இவன் எதிர்பார்த்ததிற்கு மாறான பதில் கிடைத்ததால் உருவான கவலைச்சாயை முகத்தில் அப்பிக்கொள்கின்றது. அதனையும் அவதானித்தவர் தொடர்கின்றார், "தம்பி நீங்கள் கேள்விப்பட்டீங்களோ தெரியாது" என்றவர் அவனின் அனுமதி இன்றியே தான் அறிந்த சம்பவத்தை சொல்லத் தொடங்குகின்றார். "இப்படித்தான் மட்டக்களப்பில் ஒருகடைக்கு கிட்ட எங்கட பெடியள் கண்ணிவெடி வைக்கப் போனவங்கள் அந்தக்கடைக்காரரும் எங்கட தீவிர ஆதரவாளர். அப்ப இவையள் சொல்லி இருக்கினம் கடையைப்புூட்டிக்கொண்டு போகச் சொல்லி தாங்கள் அமத்தப் போறம் எண்டு. அதற்கு அவர் சொன்னாராம் தம்பிமாரே நான் கடையைப்புூட்டிப் போட்டுப்போனா வழமையாக வாறவங்களுக்கு சில வேளை சந்தேகம் வந்துவிடும், பிறகு தெரியும்தானே அதால வழமை போலவே இருக்கிறன் நீங்கள் உங்கட வேலையைப்பாருங்கோ நடப்பதைப் பிறகு பார்ப்பம் என்று, அதற்கு எங்கட ஆக்களும் ஓமென்று போட்டுப் போயிற்றினம். அண்டைக்கு என்று வந்த ஆமிக்காரங்களுக்கு என்ன நடந்ததோ தெரியாது. கடையில் வந்து நின்றவங்கள் அவரையும் தங்களுடன் வரும்படி கேட்டிருக்கிறாங்கள் இவரால் மறுக்க முடியவில்லை. மறுத்தால் அவங்களுக்குச் சந்தேகம் வந்துவிடுமோ என்ற பயம். உடனே மனிசியட்டைப் போய்ச்சொன்னார் என்னை வரட்டாம் நான் போறன் சில வேளை நான் திரும்பவராமல் போகலாம் பிள்ளையளை மட்டும் படிப்பிச்சுப்போடு என்று. அவவிற்கும் விசயம் தெரியாது. அவங்களும் அமத்திப் போட்டாங்கள்" என்று கூறியவர் சிறிது இடைவெளிவிட்டு பெருமூச்சோடு தொடர்கின்றார். "இவையோடு ஒப்பிடுகையில் நாங்கள் எந்த மூலைக்கு" என சொல்லியவாறு இவன் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்கிறார். இவனும் ஏதும் கூறாமலேயே அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறான். நான் இந்த ஆளுக்கு ஆறுதலாக இருக்கும் என்று வந்தால் இந்த ஆள் எனக்கெல்லோ ஆறுதல் சொல்லுது என இவன் தன்னுள் எண்ணியிருக்க வேண்டும். இவனின் எண்ண ஓட்டத்தை அவரும் புரிந்திருக்க வேண்டும் அவர் கேட்கிறார், "தம்பி உங்கட இடத்தில் காயக்காரர் வாறது நிண்டுற்றுதா" "இல்லை" "அப்ப ஏன் வந்தனீங்கள்" "உங்களைப் பார்த்தாத்தான் கொஞ்சம் நிம்மதியாய் இருக்கும் என்றுதான்" "எனக்கும் உண்மையில் நீங்கள் வந்தது சந்தோசமாக இருக்குத்தான், ஆனால்..." "என்ன இழுக்கிறீங்கள் சொல்லுங்கோ" "இல்லைத்தம்பி கேக்கிறன் என்று குறை நினையாதையுங்கோ!" "பரவாய் இல்லை சொல்லுங்கோ" "நீங்கள் இங்க நிக்கேக்க அங்க காயக்காரர் தட்டித்தவறிக் கூட வந்தா உங்களிற்கு குற்ற உணர்வாக இருக்காதா" அவரின் கேள்வி இவனைத்திடுக்கிட வைத்தது. - sethu - 06-22-2003 எல்லாமே சற்று மாறுபாடாக இருந்தது. வாசலில் காவலுக்கு நின்ற சிப்பாய்களில் வழமையான விறைப்பு இல்லாமல் சாதுவான இலகுத்தன்மை இருந்தது. ஆளைச் சோதிப்பவன் தலை அசைத்து அனுமதித்துவிட்டு சுவரில் காலை முண்டு கொடுத்து நின்றான். சற்றுத் தயங்கி நின்ற செல்லப்பு சிரித்து சமாளித்து நடந்தார். கேணல் நாற்காலியில் சாதுவாக சாய்ந்திருந்தான். முகத்தில் வழமையான இறுக்கம் தளர்ந்து ஏதோவொரு மாறுதல் தென்பட்டது. கிழவரை அமரும்படி கூறினான். தேனீருக்கு உத்தரவு கொடுத்து விட்டு சினேகபுூர்வமாக புன்னகைத்தான். கிழவரிடமிருந்து வழமையான பயம் கலந்த, சமாளித்த வெற்றி கொள்ளும் சிரிப்பே எதிரொலியாக இருந்தது. அது நடிப்பு என்பதை கேணல் அறிவான். அவன் கிழவரை நன்றாகவே எடை போட்டிருந்தான். அவரின் பணிவு, பௌவியம் எல்லாம் இராஜதந்திரமானது என்றும் அந்த, முதியவரின் நினைவெல்லாம் தன் மக்களின் நலனில் மட்டும்தான் என்பதையும் அவன் அறிவான். மற்றும்படி அந்தக் கிழவனின் எண்ணத்தில் வேறு எதுவுமே இல்லை என்பது அவனுக்கு நன்றாகத் தெரியும். அவனுக்கும் இது விருப்பமான பணியல்ல. இத்தொழிலுக்கு விரும்பியும் அவன் வரவில்லை. ஆனந்தா கல்லூரி மைதானத்தில் நிற்கும் போதெல்லாம் எதிரியின் பந்து வீச்சை எப்படி சிதறடிப்பதென்பதே அவன் கனவாக இருந்தது. கிறிக்கட், கிறிக்கட் அதுவே அவனது நினைவு முழுவதும் நிரவி இருந்தது! அவனைப் பொறுத்தவரை, அதுவொரு அருமையான விளையாட்டு, கவனத்தை ஒருமைப்படுத்தி, பந்தின் வேகம், திரும்பல் ஆகியவற்றை நுணுக அவதானித்து பந்தை அதன் போக்குக்கேற்ப திருப்பி அல்லது அடித்து ஓட்டங்களை குவிக்கவேண்டும். நினைப்பது மாதிரி இதொன்றும் இலகுவானதல்ல. கவனத்தின் சின்ன சிதறல் அல்லது ஓர் சிறு தவறு ஆள் அவுட். அவன் நல்லதொரு துடுப்பாட்ட வீரன், விளையாட்டு மைதானத்தைவிட்டு விலகி இவ வளவு நாட்களாகியும் அது கற்றுத் தந்த பாடங்களை அவன் மறப்பதில்லை. ஆனால், வெற்றிகளையே எப்போதும் அவன் விரும்பினான். தோல்விகளை ஏற்கமுடியாமல் தடுமாறினான். அது விளையாட்டு, இது யுத்தம், ஆனந்தா கல்லூரி மைதானம் போன்று இது சுகமானதல்ல. இங்கு வெற்றியையும் தோல்வியையும் தீர்மானிப்பது சிந்தப்படும் இரத்தம். ஆனால் அவனது பலவீனம் இங்கும் தொடர்ந்தது. தோல்விகள் அருகில் வரும்போது இப்போதும் அவன் தடுமாறினான். கேணல் கடவாய்ப் பல்லுக்குள் சாதுவாக சிரித்துக் கொண்டே 'நாங்கள் நாளை போகிறோம்' என்றான் ஆங்கிலத்தில். கிழவர் தாக்குண்டார். மனதிற்குள் பரவசம் பற்றிப் படர்ந்தது. 'அப்போ, இனி விடுதலையா?' கேள்வி எழுந்து விஸ்வரூபமாடியது அடுத்த நொடி அவரின் சிறு மகிழ்ச்சி சிதறியது. 'நாளை புது றெஜிமென்ட் இந்த பகுதியை பொறுப்பேற்கும், நாங்கள உங்களை விட்டு விலகுகிறோம்' என்றான் கேணல். கிழவர் எதுவும் பேசவில்லை. சிறு மௌனத்தின் பின்பு அவனே தொடர்ந்தான். 'நான் உங்களைலு} உங்களை மட்டும் மதிக்கிறன். உங்களோட மனம் விட்டு பேச விரும்புறன். அதற்காகத்தான் வரச்சொன்னேன்' அவன் நிறுத்தினான். கிழவர் நிமிர்ந்திருந்தார். முதன் முதலாக இவன் பேச சந்தர்ப்பம் தருகிறான். ஏனென்று தெரியவில்லை. ஏதோ தெரிந்து கொள்ளவிரும்புகின்றான். நல்லது, இந்தச் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாது என்ற முடிவோடு, 'சரி பேசலாம்' என்றார் கிழவர். 'நீங்கள் ஏன் எங்களை புரிந்து கொள்கின்றீர்கள் இல்லை. உங்களை விடுவிக்கத்தானே நாங்கள் இவ வளவு கஸ்ரப்படுறம்' கிழவர் அவனை நன்றாகப் பார்த்தார். அவன் இந்தமுறை பயன்படுத்திய 'நீங்கள்' என்ற வார்த்தை தன்னைக்குறிக்கவில்லை என்றும் அக்கேள்வி தன் இனத்தை நோக்கி கேட்கப்பட்ட கேள்வி என்பதையும் கிழவர் உணர்ந்துகொண்டார். 'விடுவிப்பு என்று எதை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள், அதை யார் தீர்மானிக்க வேண்டும். என்னுடைய விடுதலை எது என்னுடைய சுதந்திரம் எது என்பதை நான் அல்லவா முடிவு செய்யவேண்டும்' அவனது விழிகளிற்குள்ளால் அவனது உணர்வுகளின் மாறுபாடுகளை அனுமானித்துக் கொண்டே கிழவர் தொடர்ந்தார். 'அதெல்லாம் இருக்கட்டும் எங்களை நீங்கள் யாரிடம் இருந்து விடுவிக்கப் போகிறீர்கள்' கிழவர் கேணலின் முகத்தைவிட்டு விழிகளை அகற்றவில்லை. அவன் மௌனமாகவே இருந்தான். 'இது நான் பிறந்து வளர்ந்த மண், இப்ப எனக்கு எழுபத்தைந்து வயது, நான் அறிய அப்ப இங்க ஒருத்தரும் ஆயுதங்களோட அலையேலை. இப்போ மட்டும் இப்பிடி ஏன்' கேணல் கையை உயர்த்தி நிறுத்தினான். 'இந்தச் சின்னத்தீவில இரண்டு நாடுலு}.' நிறுத்தி முகத்தைச் சுழித்தவன் கேட்டான், 'தேவையா' 'ஆருமே கேட்கவில்லையே' கேணலின் விரிந்த விழிகளைப் பார்த்துக் கொண்டே கிழவர் தொடர்ந்தார். 'அந்த நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டதுலு} உங்களால' கடைசிச் சொல்லை சற்று அழுத்திச் சொல்லிவிட்டு குனிந்தவர் நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டே. 'இதில் வேதனை என்னவென்றால் இங்கு ரெண்டு நாடுகள் இருந்தது உங்களுக்கு நல்லாவே தெரியுமல்லவா' என்றார். அவன் சாதுவாக சிரித்தான், 'அரசியல் வேண்டாம்' என்று தலையசைத்தான். அரசியலுக்காகவே காலம் காலமாக இங்கு யுத்தம், யுத்தமே அரசியல்தான். இந்நாட்டின் அரசியல்தான் இவனுக்கு இந்த உடையை மாட்டி இங்கு வீசிவிட்டிருக்கிறது. இது இவனுக்கு தெரியாததல்ல. ஆனால், பேச்சை மாற்ற விரும்புகிறான் என்பதை உணர்ந்து கிழவர் நிறுத்தினார். அவன் தடுமாறி இருப்பது தெரிந்தது. குழம்பிய கண்கள் சிவந்திருந்தன. 'நான் உங்களிடம் தோற்றுவிட்டேன்' என்று சொல்லி மௌனமானான். திடீரென, மேசை லாச்சியை திறந்து கோப்பொன்றை எடுத்து மேசையில் போட்டான். 'உங்களுக்கு விருப்பமென்டா இதை திறந்து பாருங்கோ..' சிறிது நேரம் அக்கோப்பையே பார்த்தவன் உணர்ச்சி வசப்பட்டவனாக நிமிர்ந்தான். 'ரெண்டு வருசம்லு} ரெண்டு வருசம், இதற்குள்ள நான் முப்பது சோல்டியேசை இழந்திருக்கிறன். முப்பது சண்டை இல்லாமல், எந்த வெடிச்சத்தமும் கேட்காமல் முப்பதுபேர்.., இங்கு நாங்கள் ஆரோட சண்டை பிடிச்சம், என்னத்தோட சண்டை பிடிச்சம், நிலவு, நிழல், இருள், சத்தம், சரசரப்பு எல்லாத்துக்கும் சுட்டம், எல்லாவற்றோடும் சண்டை பிடிச்சம்.. இந்த பைலை பாருங்கோ தவறுதலான சூட்டில் மட்டும் ஐந்துபேர் அந்தக் கோப்பை விரித்து மேசையில் வீசினான். கிழவரில் சலனமில்லை. இவன் தன் இராணுவ விடயங்களை ஏன் தன்னுடன் பகிர்ந்து கொள்கிறான் என்பதுதான் அவருக்குப் புரியவில்லை. ஆனால், மனதால் நன்றாக தாக்கப்பட்டு விட்டான் என்று மட்டும் புரிந்தது. 'நீங்க ஒவொருவரும் எங்களை வெறுக்கீறிங்க. குடிக்கிறதற்கு தண்ணி தரேக்கைகூட ஏதோவொரு விருப்பமின்மையை சிரித்துக்கொண்டே வெளிப்படுத்துறீங்கள்லு} உங்கட சின்னதுகளுக்கு கூட இதை கற்றுத் தந்திருக்கிறீங்கலு} ஓர் அன்னியத் தன்மை, விலகி ஒதுங்கும் இயல்புலு} இதுகளால என்ர ஒவ வொரு படைவீரனும் பாதிக்கப்பட்டிருக்கிறான் தெரியுமா? எறிந்த கோப்பை திரும்பவும் கையில் எடுத்து தாள்களைத் தட்டினான். 'மனநிலை சீரில்லா படை வீரர்களை வைத்துக்கொண்டு யார்தான் என்ன செய்ய முடியும்? மூளை குழம்பிப்போன ஒருவனால என்னுடைய மூன்று பையன்கள்.. அவனோடு சேர்ந்து நாலுபேர்.' சொல்லிவிட்டு கோப்பை திரும்பவும் மேசையில் வீசினான். அவனுடைய தேகம் படபடத்தது. கண்கள் மேலும் சிவந்து கலங்கிப் போயிருந்தன. முகமும் தேகமும் வியர்த்திருந்தது. அவன் தன்நிலை இழந்திருந்தான். 'என்னைப் பொறுத்தவரை உங்கள் ஒவ வொருவரையும் தேடித்தேடி ஓட ஓட விரட்டிச் சுட வேண்டும் என்பதே விருப்பம்' இறுதியாக அவன் தன்னை வெளிக்காட்டினான். இங்கு கூத்தாடும் பேரினவாதப் பேயின் சின்னங்களில் அவனும் ஒருவன். சாதாரண மனிதனாக அவன் மாற விரும்பினாலும் அவனால் முடியாது. ஏனெனில் அது அவனுக்குள் விதைக்கப்பட்டு விட்டது. அப்படியே இவன் மாறினாலும் ஆகப்போவது எதுவுமே இல்லை. இவன் கருவி, இயக்குபவனை விடுத்து கோடரியை கோவிப்பதில் அர்த்தமில்லை. இவனது மூலம் வேறு. அது திடமானது. கல்லுப்போன்ற உறுதியானது. உணர்வோ உணர்ச்சியோ அற்றது. இவன் இவனது படைவீரர்களோடு போகலாம், வேறொருவன் அவனது ஆட்களோடு வரலாம். இதனால் மாறுதல்கள் எதுவும் நிகழப்போவதில்லை. மாறுதல்கள் தானாக நிகழ்வதுமில்லை. மாறும் மாறாதது என்று எதுவுமில்லை. கிழவர் வெளியில் வந்தார். நெஞ்சிற்குள் ஏதோ இலகுவாக இருந்தது. தன்னையுமறியாமல் நெஞ்சு நிமிர்ந்திருந்தார். கர்வம் தலைக்கேறி இருந்தது. இந்த இரண்டு வருடமாக தன்னுடைய சனம் மௌனமாகவே ஒரு பெரும் போராட்டத்தை நடத்தி இருக்கின்றது. அதுவும் இந்த கர்வம் பிடித்த கேணலே ஒப்புக்கொள்ளுமளவிற்கு நடந்திருக்கின்றது என்பதை நினைக்க அவருக்கு பெருமையாகவும் இருந்தது. வாசலில் காவலர்கள் சாதுவான சிரிப்புடன் போகச் சொல்லினர். அருகில் அந்த வால் மடங்கிய வெறி நாய் நின்றது. வாயில் மாலையாக வீணீர்வடிந்தது. திகைத்து நின்றார். அதன் வாயிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருந்தது. நெஞ்சு திக்கென்றது. கண்களை திரும்பத் திரும்ப வெட்டிப்பார்த்தார். வெள்ளையாகவும் சிலநேரங்களில் சிவப்பாகவும் மாறி மாறி அதுகோலம் காட்டியது. அது வீணீராகத் தான் இருக்கவேண்டும். திடமான முடிவுக்கு அவரால் வரமுடியவில்லை. அவர்கள் போகும்போது இதனை கூட்டிச் செல்ல மாட்டார்கள் என்பது அவருக்கு நன்றாகவே தெரியும். இதற்கு இந்த மண்தான் நிரந்தரம். அடுத்த பெரும் மழைக்கு எங்காவது வீதியில் செத்துக்கிடக்கும். கிழவர் தன்னையுமறியாமல் வானத்தைப் பார்த்தார். மழை வருவதற்கான குணம் குறி இல்லை. வெறி நாயை மீண்டும் பார்த்தார். அதற்கு ஆயுள் சில நாட்கள் கூடவாக இருக்கலாம் என நினைத்தபடி நடந்தார். |