Yarl Forum
வன்னி ரெக்.... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தமிழ்க் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=4)
+--- Forum: தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=19)
+--- Thread: வன்னி ரெக்.... (/showthread.php?tid=8349)



வன்னி ரெக்.... - kuruvikal - 06-21-2003

வன்னி ரெக் என அழைக்கப்படவுள்ள உயர் தொழில் நுட்ப நிறுவனம் வரும் திங்கட்கிழமை கிளிநொச்சியில் திறக்கப்படவுள்ளமை...வடபுலத்தில் அமையவுள்ள முதல் வெளி நாட்டு கல்வித்தரத்துக்கு இணையான உயர் தொழில் நுட்ப நிறுவனமாகும்! வடபுலமும் சரி கிழக்கும் சரி இது வரை ஒரு பொறியல் பீடத்தை அங்கு இயங்கும் இரு வேறு பல்கலைக்கழகங்களிலும் அமைக்க சிறிலங்கா அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லை வெறும் நில ஒதுக் கோடு பல காலம் ஓடிவிட்டது!
இவ் உயர் கல்வி நிறுவன திறப்பு ஈழத்து மாணவ மணிகள் அமெரிக்க கல்வித்தரத்துக்கு ஒப்பான கல்வியைப் பெற வழிவகுக்கும்!
இவ்வளப்பரிய கல்விச் சேவையை செய்யும் அனைத்து உள்ளங்களுக்கும் மாணவர்களாகிய எமது பாராட்டுக்கள்....பேராசிரியரும் யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரும் இலங்கையில் மட்டுமன்றி சர்வதேச புகழ் பெற்றவருமான பேராசிரியர் துரைராஜாவின் கனவுகளில் ஒன்று நிறை வேறுவதை இட்டு மக்கள் மகிழ்வு கொள்ளவேண்டும்!
ஈழத்து மாணவமணிகளே இது உங்களூக்கு கிடைத்த ஒரு வரமெனக் கருதி உங்கள் கல்வியை தொடர வாழ்த்துக்கள்! கடந்த காலங்களில் சரியான கல்வி வாய்ப்பின்றி பல மாணவர்கள் தமது கல்வியை பாதியில் நிறுத்திக் கொண்ட துன்ப நிலை களையும் காலம் ஈழத்துக்கு வரும் காலம் நெருங்கிவிட்டது எனவே மாணாவர்களே சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெறவும் வாழ்த்துகிறோம்!

தகவல் தமிழ் நெற்...தொடுப்பு...
http://news.tamilnet.com/art.html?catid=13&artid=9258


- sethu - 06-21-2003

நண்றி உதயன் . கொம்


- kuruvikal - 06-21-2003

என்ன சேது என்ன நடந்தது......மேலா சரியா வாசிக்கல்லப்போல...அது சரி வாசிக்க எங்க நேரம் கிடக்கு..பக்கத்தை நிரப்புறதுதானே நோக்கம்....அப்படித்தானே....?!


- sethu - 06-21-2003

உதயனில் இந்த தகவல் ஒருதடவை வாசித்ததாக கூறினேன் முhத்தவரே


- sOliyAn - 06-22-2003

ஒரு சொல் எழுதினால் 100 சொல் எழுதினமாதிரி!!


- sethu - 06-22-2003

சோளியன் படையப்பா சொன்னமாதிரி கிடக்கு


- mathe - 06-27-2003

இவ் "வன்னி ரெக்" சம்பந்தமான செய்திகள், தொடர்புகள், ஆவணங்களை கீழுள்ள இணையத்தளங்களில் இருந்து பெறலாம்.

1. http://www.vanni.org/
2. http://www.ittpo.org/


- sethu - 06-28-2003

நண்றி மதி