![]() |
|
அவளுக்காக.... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: அவளுக்காக.... (/showthread.php?tid=8342) |
அவளுக்காக.... - sharish - 06-23-2003 <b>அவளுக்காக....</b> காலைப்பொழுதில் பொன்விழா ஒன்றில் தீபங்கள்ஏந்தி நீ வந்துநின்றாய் வாசலிலே ஆனால்... என் இதய வாசலெங்கும் நீ ஏந்திவந்தது தீபங்கள் அல்லா தீப்பந்தங்கள்..! என் மனவானானில் பறப்பதற்கு இடமில்லையென்றா புறப்பட்டுச் சென்றாய்..? என் மலர்தோட்டத்தில் உனக்கு மலரில்லை என்றா மறந்து சென்றாய்..? இப்போது பார் உனக்காக... பலரின் பார்வைகளைத்தாண்டியும் என் தோட்டத்தில் விண்மீன்களைக்கூட மலர்களாக்கி மலர்த்தியிருக்கிறேன் மயங்கிக்கிடந்தேன் மங்கையே என் மயக்கம் கலைத்ததுன் மர்மவிழிகள்தான் பல ராகங்கள் என்னைச்சுற்றி சங்கீதம் பாடும்போதும் அந்த சந்தங்கள் கூட சத்தம்போடும் ஓசையாய்தான் எனக்குள்...! சில காதல்மேகங்கள் என்னைச்சுற்றி காதல் மழைதூவ கவியும்போதும்... மோதல்காரர்கள் என்னை சுற்றிவளைப்பதுபோல்த்தான் எனக்குள்...! ஆனால்... உன்குரல் கேட்டுத்தான் மயக்கம் தெளிந்தேன் கண்கள் விழித்து உறக்கம் கலைத்து காத்திருந்த எனக்கு கடைசியிலே மிஞ்சியது கன்னத்தில் கீறிய கண்ணீர் ஓவியங்கள்தான் கண்ணீர் விழுந்து கரைந்துவிடும் என்றா-உன் கண்மைதொட்டு கவிதை வரைந்திருப்பேன்...!? கன்னத்தைக் கண்ணீர் நனைக்குமென்றா எண்ணத்தில் உன்னைவைத்து காவியம் படைத்திருப்பேன்..!? த.சரீஷ் 17.06.2003(பாரீஸ்) - kuruvikal - 06-23-2003 கண்ணா - நவீன கோபியர் விளையாட்டு நீயறிந்தும்- தூய மனது மயங்கி புனித காதல் கொண்டு கண்ணீர் ஓவியம் வாங்கியுன் காதலுக்காய் காவியம் படைத்தாய் அது போதும் கோபியரின் காதல் திருட்டு அம்பலமாகவே! கண்ணீர்க் காவியமும் நல் கருத்துரைத்தால் அதுவும் சிரஞ்சீவியே காதலுக்குப் புகழே! உன் கண்ணீர் ஒவியம் தாஜ்மகாலை வென்று நிற்கட்டும்! |