![]() |
|
தீ சுமந்த மனசு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தீ சுமந்த மனசு (/showthread.php?tid=8341) |
தீ சுமந்த மனசு - sharish - 06-23-2003 [b]தீ சுமந்த மனசு என் அன்புத் தாய்மொழியே என்றும் அழியாத தமிழ்மொழியே தாயை நினைத்தே தவிக்கிறேன் தமிழை நினைத்தே துடிக்கிறேன்-நீ தடக்கி விழுவதை படிக்கிறேன் இன்று... நினைவில் தீயைச் சுமக்கிறேன் உலகம்முழுதும் பேசும் மொழியென பெருமை கொண்டாய் நேற்று-உன் உயிரைச் சுமந்து அலைந்து திரிகிறாய் இதுதான் நிலமை இன்று சொந்த மண்தன்னை இழந்து வந்தாய் பாவி சிங்களத்தாலே-உன் சொந்த மொழியாம் தமிழை மறந்தாய் கோவில் மந்திரத்தில் கூட மூட நம்பிக்கை மூடிக்கிடந்தால் முளைக்காதப்பா விதைப்பு தூங்கிக் கிடக்கும் புதியதமிழரை தூயதமிழ் கொண்டெழுப்பு சொந்தமொழியை மறந்து திரிந்தாய் அந்தக்காரணம் என்னா...?-நீ மந்திரம் சொல்வதும் மாற்றான் மொழியில் அந்தக்காரணம் என்னா..? மூடநம்பிக்கை சேற்றில் குதித்தாய் முந்தைய மூடர்களாலே-நீ மூச்சுத்தினற மூழ்கித்தவித்தாய் அந்தக்காரணம் என்னா..? மூடநம்பிக்கை மூடிக்கிடந்தால் முளைக்காதப்பா விதைப்பு தூங்கிக் கிடக்கும் புதியதமிழரை தூயதமிழ் கொண்டெழுப்பு த.சரீஷ் பாரீஸ்(13.06.2003) - kuruvikal - 06-23-2003 தாயாகி நின்ற அவள் இன்று செவிலிகளால் தத்தெடுக்கப்பட்ட நம்மவர் சித்தம் கலங்கி செவிலி தன் சிங்காரம் காட்டிப் புகழ் தேட அன்னையவளோ கோடிக்கரையில் வாழ்வுக்காய் அலையும் நிலை கொண்டாள் ஆனாலும் தமிழுக்காய் வாழும் மறவர் கூட்டம் அவள் பிள்ளைகளாய் உலாவருதல் கண்டு அவள் சற்றே நிம்மதி கொண்டாள்! நாமும் மறவர் அணியில் கலந்திடுவோம் அன்னையவள் செழிப்புக்காய்! செவிலி பிடியில் அலைபவரே தாய்க்குப் பின் தான் செவிலி எனும் உண்மை உணரும்! தாயின்றேல் உமக்கொரு வாழ்வில்லை! நாமம் இல்லை! - vaiyapuri - 06-25-2003 எனக்குப் பிடித்த வரிகள் இவை.வாழ்த்துக்கள் குருவிகள். <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> தாயின்றேல் உமக்கொரு வாழ்வில்லை! நாமம் இல்லை :!: <!--QuoteEnd--><!--QuoteEEnd--> |