| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 376 online users. » 0 Member(s) | 373 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,008
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,031
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,499
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,251
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,529
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,740
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,259
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,883
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,931
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,191
|
|
|
| கேட்போம் - கற்போம் - தெளிவோம் |
|
Posted by: இளைஞன் - 07-11-2003, 10:46 AM - Forum: இணையம்
- Replies (22)
|
 |
வணக்கம் நண்பர்களே...
இன்றைய உலகில் வழமையான அடிப்படைத் தேவைகளான உடை, உணவு, உறையுளுடன்
புதிதாகச் சேர்ந்திருப்பது தகவல் மற்றும் தொடர்பூடகங்களாகும். அதன் அடிப்படையில்
இன்று அனைவருக்கும் அவசியத் தேவையாகி வளர்ந்துவருவது கணணியும், இணையமும்
ஆகும். புலம் பெயர்ந்து வாழும் மண்ணில் பொதுவாக தமிழர்கள் அனைவரும் கணணி
வைத்திருக்கிறார்கள். பெற்றோர்கள் தமக்காக அல்லாவிடினும், படிக்கின்ற தமது
பிள்ளைகளிற்காக ஒன்றை வாங்கி வைத்திருக்கிறார்கள். கணணி பற்றிய அறிவில்லாவிட்டாலும்
கூட, தற்பெருமைக்காக வாங்கி வைத்திருப்பவர்கள் சிலர். "அந்த வீட்டில் இருக்கிறது" நமது
வீட்டில் இருந்தால் என்ன?" என்ற போட்டியோடு வாங்கி வைத்திருப்பவர்கள் சிலர். அதே போல்
தான் இணையமும். இணையத்தை தகவற் களமாக அல்லது தொடர்பூடகமாகப் பயன்-
படுத்துகிறார்களோ இல்லையோ அது வேறு விடயம். மொத்தத்தில் கணணி வைத்திருப்பவர்களும்
இணைய இணைப்பு உள்ளவர்களும் அிதிகமாகி வருகிறார்கள் என்பது உண்மை.
எனவே இணையம் பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ளவும், அதுபற்றிய சந்தேகங்களைத் தெளிவு
படுத்திக் கொள்ளவும், புதிய பாடங்களைக் கற்றுக்கொள்ளவும், ஏற்படும் பிரச்சினைகளிற்கான
தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளவும் வசதியான முறையில் யாழ் கருத்துக் களத்தில் இந்த இணையம்
பகுதி அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே நண்பர்களே, இணையத்தில் உங்களிற்கு ஏற்படும் சந்தேகங்கள்,
பிரச்சினைகளை இந்தத் தலைப்பின் கீழ் முன்வையுங்கள். அதற்கான தீர்வுகளும், ஆலோசனைகளும்
இணையத் துறையில் ஆர்வமும், அறிவும் உள்ளவர்களால் வழங்கப்படும்.
[b]கவனத்திற்கு: இணையம் சார்ந்த கேள்விகள் மட்டுமே இங்கு எழுதப்படல் வேண்டும்.
நேரடியாகக் கணணி சார்ந்தவை கணணிப் பகுதிக்குள் எழுதப்படல் வேண்டும்.
|
|
|
| ஈழத்தமிழரின் குரல் சிறையில்..ஓராண்டு நிறைவு |
|
Posted by: kuruvikal - 07-11-2003, 08:00 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (2)
|
 |
<img src='http://thatstamil.com/images10/vaiko-250.jpg' border='0' alt='user posted image'>
ஈழத்தமிழருக்காக அவர்களின் துயர்கண்டு இதயத்தால் வருந்தி குரல் கொடுத்த உண்மைத்தலைவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகச் பொதுச் செயலர் வை கோபாலசாமி (வை கோ), ஈழத்தமிழருக்கும் அவர்தம் குழந்தைகளான புலிகளுக்கும் சார்பாக பேசியதெனக் கூறி இதே ஈழத்தமிழரின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதை மறந்து அவர் மீது பொடா என்ற பயங்கரவாத தடை சட்டம் என்ற புதிய சட்டத்தை பரிசோதித்து அவரை சிறையில் தள்ளி தனது ஈழத்தமிழர் விரோதக் கொள்கையை வெளிப்படுத்தி இன்றுடன் ஒருவரிடம் பூர்த்தியாகிறது....!
ஈழத்தமிழருக்கு ஆதரவென்றால் தான் தேர்தலில் வெற்றி என்றிருந்த கட்சிகள் அவர்களின் பெயர் சொல்லி ஆட்சிப்பீடம் ஏறிய கட்சிகள் அவர்களைக் கைவிட்ட நேரம், பேச்சுச் சுதந்திரம் பறிக்கப்பட்ட நேரத்திலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக தேசம் என்று கூறிக்கொள்ளும் மண்ணிலிருந்து ஈழத்தமிழருக்காய் குரல் தந்த சில குரல்களில் முதன்மையானது வை கோவின் சிங்காரக் குரல் என்றால் அது மிகையாகாது...சிங்களமே பதறித்துடிக்குமளவிற்கு அவருடைய குரல் சர்வதேசமெங்கும் ஈழத்தமிழருக்காய் ஒலித்தது.... அதன் அதிர்வுகள் இன்றும் பலனைத்தந்து கொண்டுதான் உள்ளன என்பதும் உண்மையே! சொந்த நலனுக்கப்பால் தூய்மையான இன நலனுடன் குரல் தந்த அந்த நீதியின் இருப்பிடத்தை சிறையிலிட்டு அடக்கிவிட எண்ணின ஜனநாயகக் குரல்வளை கவ்வும் முதலைகள்..நிச்சயம் காலம் அவர்களுக்கு உண்மை உணர்த்தும்..உண்மை உறக்கியதாக வரலாறும் இல்லை...
ஈழத்தமிழருக்காய் குரல் தந்த அந்த உறவு சிறையில் ஒரு வருடத்தை கழித்து துன்பப்படும் இன்னிலையில் அவரின் துன்பங்கள் அவருக்கு சாதனையின் படிக் கற்களாக அமைய வேண்டும் என மனத்தால் உறுதி வழங்கி ஈழத்தமிழர் என்றும் உங்கள் பின்னால் நன்றிக்கடனுக்காகவேனும் அணிவகுத்து நிற்பர் என்று உங்கள் அன்புக்கரம் உறவுக்கரம் நேசக்கரம் பற்றி எமது ஆறுதல் வார்த்தைகளை பகிர்ந்து கொள்கின்றோம்! உங்கள் துன்பங்கள் விரைந்தே நீங்க இறைவனையும் பிரார்த்தித்து நிற்கின்றோம்!
மேலதிக தகவல் தொடர்பு....
http://thatstamil.com/news/2003/07/11/vaiko.html
|
|
|
| சினிச் செய்திகள்... |
|
Posted by: kuruvikal - 07-10-2003, 11:47 AM - Forum: சினிமா
- Replies (174)
|
 |
<img src='http://www.thatstamil.com/images10/cinema/meena6-500.jpg' border='0' alt='user posted image'>
திருமணப் பேச்சோடு திரைப்பட வாய்ப்புத்தேடி அலைந்த மீனா அது கிடைக்காத்தால் TV சீரியலில் நடிக்க முடிசெய்து சின்னத்திரை நுளைகிறாராம்...அப்ப எனி அம்மணியை சின்னத்திரையில் கணலாம் போல...மீனாவின் ரசிக ரசிகைகளான பெற்றோரினால் எனி வீடுகளில் பிள்ளைகளின் கல்வி பாதிப்படையவும் நேரிடலாம்...!
பானுப்பிரியா சுகன்யா நளனி கெளதமி ரேவதி ரஞ்சிதா சுகாசினி குஷ்பு ரோஜா விந்தியா ராதிகா என சின்னத்திரையில் அழுது புலம்புவர் வரிசையில் மீனாவும் அழுது புலம்ப வருகிறார் போலும்...
சினிமாவைவிட TV சீரியல்களே பாடசாலைப் பரீட்சைப் பெறுபேறுகள் வீழ்ச்சியடைய முக்கிய காரணம் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயம்!
|
|
|
| வில்லிசை - கலை |
|
Posted by: இளைஞன் - 07-10-2003, 08:26 AM - Forum: பொழுதுபோக்கு
- Replies (38)
|
 |
வணக்கம் நண்பர்களே...
எனக்கு ஆழ்ந்த தொடர்பு இல்லாத துறைக்குள் கால் வைக்கிறேன். அத்துறைக்குள்
அல்லது அத்துறையோடு நெருங்கிய பிணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் வண்ணமே
இந்தச் சிறிய தொடக்கம்.
புலம்பெயர் வாழ்வில் நம் கலைகள் வளர்க்கப்படுகின்றனவா? அவை எந்த வகையில்
வளர்க்கப்படுகின்றன? அவற்றில் காலத்திற்கேற்ற, சமுதாய வளர்ச்சிக்கேற்ற மாற்றங்கள்
நிகழ்ந்துள்ளனவா? அந்தக் கலைகளிற்கான ஊடகங்களின் பங்களிப்பென்ன? மக்களின்,
மக்களின் "மாண்புமிகுக்களின்" பங்களிப்பென்ன? ஆதரிக்கிறார்களா? அலட்சியப்-
படுத்துகிறார்களா? மொத்தத்தில் புலம்பெயர் தேசங்களில் கலைஞர்களிற்கு உரிய
அங்கீகாரம் கொடுக்கப்படுகிறதா? அவர்கள் சமுதாயத்தால் தனது எதிரொலி என்ற
எண்ணத்தோடு அரவணைக்கப்படுகிறார்களா?
இத்தனை கேள்விகளிற்கும் விடை நான் தரப் போவதில்லை. நீங்களும், கலைஞர்களும்
உங்களோடு சேர்ந்து நானும் விடைகளை ஆராய்வோம்.
சரி...ஏன் நான் இந்த விடயத்துள் இப்பொழுது நுழைந்தேன். காரணம் என்ன? இருக்கிறது.
"தமிழ் தொலைக்காட்சி இணையத்தில்" நாச்சிமார் கோயிலடி இராஜன் அவர்களின்
வில்லிசை நிகழ்ச்சி ஒன்று சில நாட்களுக்கு முன்பு ஒளிபரப்பானது. உங்களைப் பொறுத்த
மட்டில் அந்த வில்லிசை நிகழ்வு எப்படியோ தெரியாது. ஆனால் என்னைப் போன்ற
இளைஞர்களிற்கு நீண்ட காலத்தின் பின்னர் காணக்கிடைத்த அற்புத நிகழ்வு. கடைசியாக
நான் வில்லிசை பார்த்து மகிழ்ந்தது கொழும்பில் பாடசாலையில் படித்த போது. ஆனால்
வில்லிசை என்றால் ஒன்றில் சினிமாப் பாடல்கள், அல்லது வரலாற்று நிகழ்வுகள் அதுவும்
அல்லாவிடில் புராணக் கதைகள் தான் அதிகம் சொல்ப்பட்டிருக்கிறது. இது எனது
அனுபவத்தில் மட்டும்.
இன்றைய தற்போதைய சூழலையும் சமுதாயத்தின் நிலையையும், கலை வடிவில்
மக்களைச் சென்றடையும் வகையில் தரும் கலைஞர்கள் வெகு குறைவே என்பது எனது கருத்து.
ஈழத் தமிழர்களைப் பொஞத்தமட்டில் அது மெல்ல மாறி வருகினும். சில நேரங்களில்
நாம் தனியே நிகழ்காலமாகப் போராட்டத்தை மட்டுமே கருதுகிறோம் என்றும் எண்ணத்
தோன்றுகிறது. தேசம் தேசியம் தன்னாட்சி எல்லாம் அவசியம்தான். ஆனாலும் இவற்றை
எல்லாம் உரித்துடைய மக்கள் புலம்பெயர்ந்து வாழும் வாழ்க்கையும் கவனிக்கப்படவேண்டியதே.
அந்த வகையில் கலையில், இலக்கியத்தில் இவற்றைப் பிரதிபலிப்பவர்கள் சிலர்.
"துமிழ் தொலைக்காட்சி இணையம்" ஒளிபரப்பிய அந்த நிகழ்ச்சியில் நாச்சிமார் கோயிலடி
இராஜன் அவர்கள் மிகவும் சிறப்பாக புலம்பெயர் வாழ்வின் சீர்கேட்டையும், அவர்கள் வாழும்
சூழலையும் மையப்படுத்தி வில்லிசை வடிவில் தந்திருந்தார். இசைகளின் இடையே கதைகளைச்
சொல்லும்போது அவருடைய அபிநயங்கள் (கையசைவுகள், கண்ணசைவுகள்) எல்லாம்
கதைக்கு மிகவும் பலம்சேர்ப்பனவாக அமைந்திருந்தன. அவற்றோடு தமிழர்களின் சில பழக்க
வழக்கங்களை நையாண்டி பண்ணுவதும், பின்னர் அதனிடையில் தமிழரின் தனித்தன்மை இழக்கா
வண்ணம் அவர்களின் பெருமையைச் சொல்வதும் வரவேற்கத் தக்கதாய் இருந்தது.
இதுதான் இன்றைய தேவை. எத்தனை காலத்திற்குத்தான் இன்னமும் பழம் பெருமைகளைப்
பேசித் திரியப் போகிறோம். இன்று நாம் என்ன செய்கிறோம்? இவற்றையெல்லாம் கலைஞர்கள்
கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
நாச்சிமார் கோயிலடி இராஜன் அவர்கள் போன்ற கலைஞர்களை, தமிழ் இளைஞர்களிற்கு அதிலும்
குறிப்பாகப் புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களிற்கு அறிமுகப்படுத்தி வைக்கவேண்டும். இந்தக்
கலைஞர்கள் மூலம் இப்படியான கலைகளை இன்னும் எப்படிப் புதிதாக மாற்றியமைக்கலாம்,
புதிய தொழில்நுட்பங்களோடு சேர்த்து மக்களைச் சென்றடையக் கூடிய வழிமுறைகள் என்ன
என்பது பற்றி சிந்திக்கத் தொடங்க வேண்டும். எப்போதுமே ஒரே மாதிரி இருந்தால் கலை வாழாது.
கலையென்பது தன்னுள்ளும் தன்னைச்சுற்றியும் மாற்றத்தை உண்டு பண்ணவேண்டும்.
அதற்கு "நாச்சிமார் கோயிலடி இராஜன்" போன்ற கலைஞர்கள் முன்வரவேண்டும். அவர்களிற்கு நமது
ஊடகங்கள் கைகொடுத்து வரவேற்று அரவணைக்க வேண்டும். இங்கு இன்னொரு விடயத்தையும்
சொல்லிவிடுகிறேன். சில "மாணபுமிகுக்கள்" தமிழர் மத்தியில் இருக்கிறார்கள். சிலர் அல்ல பலர்.
இவர்கள் கலைஞர்களையும் கலையையும் வளர விடுவதில்லை. "தமிழைக் கேலிசெய்கிறார்கள்,
தமிழர்களை நையாண்டி செய்கிறார்கள், சமயத்தைப் பழிக்கிறார்கள், எங்களையும் நையாண்டி
செய்கிறார்கள்" என்று இவர்கள் கத்துவார்கள். உண்மையாணவர்களாய் இருந்து உண்மைகளை
ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். இவர்களையெல்லாம் ஒருபுறம் தள்ளி வைத்துவிட்டு எம் தமிழ்க்
கலைஞர்களே வாருங்கள், வேகமாக வாருங்கள், தமிழ் வளர்க்க! தமிழ்க் கலை வளர்க்க!
சரி நண்பர்களே... நீங்களும் "தமிழ்த் தொலைக்காட்சி இணையத்தில்" நடந்த வில்லிசை நிகழ்ச்சியைப்
பார்த்தீர்களா? உங்கள் கருத்தென்ன? அந்நிகழ்வு பற்றிய உங்கள் விமர்சனங்களை முன்வையுங்கள்.
புலம்பெயர் வாழ்வும் கலையும் பற்றிய உங்கள் கருத்துக்களையும் முன்வையுங்கள். கலைஞர்களை
அரவணைத்துத் தமிழோடு பயணிப்போம்.
நன்றி
|
|
|
| காதலி கனவானால்.... |
|
Posted by: kuruvikal - 07-09-2003, 03:53 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (1)
|
 |
<img src='http://images.webshots.com/ProThumbs/10/39910_wallpaper280.jpg' border='0' alt='user posted image'>
அர்புத வர்ணம்
மலர்களாய் வாசம் பரப்ப
வசந்தமும் வந்தது
கனிவால் கனிந்த உள்ளம்
கன்னியுன்
இதயக்கதவு திறக்க காவலிருக்க
கண்ணோடு வந்து கதை பேசி
கண்ணோடு மறைந்தாய்
கண்டதேன் உன்னை காணாது
கலங்கி அருகிரு கடலையில் தேட
அலையெங்கும் நீயானாய்
ஐயகோ.. பேரலை ஒன்று
சீதையுன்னை சீரழிக்க
சிந்தை கலங்கி
அருகில் தேடினேன்
அம்மா வந்து விடிந்த சேதி சொல்ல
அட கன்னியவள் கனவானால்!
|
|
|
| குழந்தைப் பேறு இல்லாதவர்கள் |
|
Posted by: Alai - 07-08-2003, 10:36 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
<img src='http://www.fruitlife.de/encyclopedia/images/kiwi/kiwi1.gif' border='0' alt='user posted image'>
குழந்தைப் பேறு இல்லாதவர்கள்
நிறையக் கிவிப் பழம் சாப்பிட்டால்
குழந்தை உண்டாவதற்குரிய சாத்தியங்கள் உண்டாம்.
நீண்ட காலமாக குழந்தை இல்லாத தம்பதிகள்
டொக்டர் என்.எஸ்.மூர்த்தி அவர்களின் ஆலோசனைப் படி
கிவிப் பழம் சாப்பிட்டு
குழந்தை பெற்றார்களாம்.
தகவல் - டொக்டர் என்.எஸ்.மூர்த்தி-
ஐபிசி வானொலி - நாமும் நல வாழ்வும்.
|
|
|
| விசேட மருத்துவச் செய்திகள் |
|
Posted by: kuruvikal - 07-08-2003, 02:04 PM - Forum: மருத்துவம்
- Replies (33)
|
 |
<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/nm/20030708/mdf312475.jpg' border='0' alt='user posted image'><img src='http://i.cnn.net/cnn/2003/HEALTH/07/08/conjoined.twins/story.twins.file.ap.jpg' border='0' alt='user posted image'><img src='http://i.cnn.net/cnn/2003/HEALTH/07/08/conjoined.twins/story.operation.1700.ap.jpg' border='0' alt='user posted image'>
ஈரானைச் சேர்ந்த சட்டப் பட்டதாரிகளான இரண்டு பெண்மணிகள்(வயது 29) தலை ஒட்டிப் பிறந்து வாழ்ந்து வநதனர். அவர்கள் தெளிவான இரண்டு மூளைகளை கொண்டிருந்த போதும் அவற்றிற்கிடையே இணைப்பும் காணப்பட்டது.அவ்விணைப்பை அகற்றி தம்மையும் பிரித்துக் கொள்ள ஆசைப்பட்ட அவர்களுக்கு சிங்கப்பூரில் வைத்து சிறப்பு சத்திர சிகிச்சை வைத்தியர் குழு ஒன்று சத்திர சிகிச்சை மேற் கொண்டு இருவரையும் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அதிக இரத்தக் கசிவு காரணமாக குருதிச் சுற்றோட்டம் பாதிக்கப்பட்டு 50 மணி நேர சத்திர சிகிச்சை முயற்சிகள் பலனின்றி Ladan(Left) உயிரிழந்தார் அவரைத்தொடர்ந்து 1.5 மணி நேரத்தின் பின் அவரின் சகோதரி Laleh Bijani யும் உயிரிழந்தார்.....!
இவர்களின் உயிரிழப்புக்கள் அவசியமானதுதானா......மருத்துவர்களினால் சத்திர சிகிச்சைக்கு முன்னரே இவ்வாறனதொரு சத்திர சிகிச்சையின் பின்விளைவுகள் எப்போதும் வெற்றிகரமாக அமையாது என்பது தெரிந்தும் ஏன் இவர்களை கொலை செய்தனர்....?!
Our thanks to CNN.com,Yahoo and Reuters.
|
|
|
|