Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழத்தமிழரின் குரல் சிறையில்..ஓராண்டு நிறைவு
#1
<img src='http://thatstamil.com/images10/vaiko-250.jpg' border='0' alt='user posted image'>

ஈழத்தமிழருக்காக அவர்களின் துயர்கண்டு இதயத்தால் வருந்தி குரல் கொடுத்த உண்மைத்தலைவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகச் பொதுச் செயலர் வை கோபாலசாமி (வை கோ), ஈழத்தமிழருக்கும் அவர்தம் குழந்தைகளான புலிகளுக்கும் சார்பாக பேசியதெனக் கூறி இதே ஈழத்தமிழரின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதை மறந்து அவர் மீது பொடா என்ற பயங்கரவாத தடை சட்டம் என்ற புதிய சட்டத்தை பரிசோதித்து அவரை சிறையில் தள்ளி தனது ஈழத்தமிழர் விரோதக் கொள்கையை வெளிப்படுத்தி இன்றுடன் ஒருவரிடம் பூர்த்தியாகிறது....!

ஈழத்தமிழருக்கு ஆதரவென்றால் தான் தேர்தலில் வெற்றி என்றிருந்த கட்சிகள் அவர்களின் பெயர் சொல்லி ஆட்சிப்பீடம் ஏறிய கட்சிகள் அவர்களைக் கைவிட்ட நேரம், பேச்சுச் சுதந்திரம் பறிக்கப்பட்ட நேரத்திலும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக தேசம் என்று கூறிக்கொள்ளும் மண்ணிலிருந்து ஈழத்தமிழருக்காய் குரல் தந்த சில குரல்களில் முதன்மையானது வை கோவின் சிங்காரக் குரல் என்றால் அது மிகையாகாது...சிங்களமே பதறித்துடிக்குமளவிற்கு அவருடைய குரல் சர்வதேசமெங்கும் ஈழத்தமிழருக்காய் ஒலித்தது.... அதன் அதிர்வுகள் இன்றும் பலனைத்தந்து கொண்டுதான் உள்ளன என்பதும் உண்மையே! சொந்த நலனுக்கப்பால் தூய்மையான இன நலனுடன் குரல் தந்த அந்த நீதியின் இருப்பிடத்தை சிறையிலிட்டு அடக்கிவிட எண்ணின ஜனநாயகக் குரல்வளை கவ்வும் முதலைகள்..நிச்சயம் காலம் அவர்களுக்கு உண்மை உணர்த்தும்..உண்மை உறக்கியதாக வரலாறும் இல்லை...

ஈழத்தமிழருக்காய் குரல் தந்த அந்த உறவு சிறையில் ஒரு வருடத்தை கழித்து துன்பப்படும் இன்னிலையில் அவரின் துன்பங்கள் அவருக்கு சாதனையின் படிக் கற்களாக அமைய வேண்டும் என மனத்தால் உறுதி வழங்கி ஈழத்தமிழர் என்றும் உங்கள் பின்னால் நன்றிக்கடனுக்காகவேனும் அணிவகுத்து நிற்பர் என்று உங்கள் அன்புக்கரம் உறவுக்கரம் நேசக்கரம் பற்றி எமது ஆறுதல் வார்த்தைகளை பகிர்ந்து கொள்கின்றோம்! உங்கள் துன்பங்கள் விரைந்தே நீங்க இறைவனையும் பிரார்த்தித்து நிற்கின்றோம்!

மேலதிக தகவல் தொடர்பு....
http://thatstamil.com/news/2003/07/11/vaiko.html
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply
#2
ஒரு பாராளுமன்ற உறுப்பினர்.
இது தவிர தனது கட்சியில் இன்னும் நாலு உறுப்பினரை பாராளுமன்றத்தில் வைத்திருப்பவர்.
பிரதமமந்திரியின் நெருங்கிய நண்பர்.
மத்தியில் செல்வாக்குள்ளவர்.
இவ்வளவு இருந்தும் என்ன?
ஒரு மானில முதலமைச்சரின் அரசியல் பழிவாங்கலை தடுக்கத்தான் யாருமில்லை.
Reply
#3
வேலியே பயிரைமேஞ்சால் கறையானைத்தட்டி என்ன பிரியோசனம்.
அதுமட்டுமோ ஆருக்காக கதைச்சாரோ அவையள் சும்மா இருக்கினம்.
Reply


Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)