Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243

Full Statistics

Online Users
There are currently 392 online users.
» 0 Member(s) | 389 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,009
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,033
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,502
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,253
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,532
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,745
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,262
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 37,887
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,934
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,203

 
  முகமூடித் திருடர்கள்...!
Posted by: sharish - 07-25-2003, 03:19 PM - Forum: கவிதை/பாடல் - Replies (2)

<b>முகமூடித் திருடர்கள்...!</b>

எமது இதயத்தில் இன்னும்
ஈரம் எஞ்சியிருக்கிறது
எமது நெஞ்சுக்குள் இன்னும்
பாசம் பொங்கி வழிகிறது
எமது தோள்களில் இன்னும்
துயரம் தங்கியுள்ளது

இந்த ஈரம் காயும்வரையும்
பாசம் தீரும் வரையும்
துயரம் ஆறும்வரையும்
அதற்குப்பின்னும்....
என்றும்.....
புலத்திற்கும் தாய் நிலத்திற்கும்
இடையிலான...
தொப்பிள்க்கொடி உறவு
தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்...!

இதை அறுத்தெறியவோ...
அல்லது...
சிதைத்தெறியவோ
எவராலும் இயலாது...!

இதை அறுத்தெறிய என்று
வருகிறார்க் அவர்கள்...
ஊடகங்கள் என்னும்
முகமூடி அணிந்துகொண்டு...!

இது சாத்தியமாகுமா..?

வானவில் என்னும் பெயரில்
வஞ்சனையால் எம் நெஞ்சோடு
விளையாட விழைகிறார்கள் அவர்கள்
நினைவழியா நெஞ்சத்து நிழலை
வினைவிதைத்து மறைத்துவிட
நினைக்கிறார்கள் அவர்கள்

ஊர் அறிந்த
உலகமே பயந்த
எங்கள் தாய் சேய் உறவை
உருக்குலைக்க நினைக்கிறார்கள்
இது சாத்தியமாகுமா..?

என் அன்புக்குரியவர்களே...
உங்களை நான் குற்றம் சொல்லவில்லை...!
நீங்கள் பாவம்
எதுவும் அறியாதவர்கள்...!

மழை பொழிந்துகொண்டிருக்கிறது என்றால்
ஆசையோடு வீதியில் இறங்கி
நனையத்தான் விரும்புவீர்கள்
ஆனால் வந்த மழை...
ஒரு ஆபத்தான புயலின் ஆயத்தமென
அப்போது நீங்கள் அறியமாட்டீர்கள்...!

தென்றல்க்காற்று...
மலரோடு மோதி நல்ல
மலர்வாசம் சுமந்து வருகுதெனில்
நீங்களும் ஆசையோடு
சுவாசிக்கத்தான் விரும்புவீர்கள்
ஆனால்...
தென்றல்க்காற்றோடு கொடிய விஷமும்
கலந்து வருவதை அப்போது நீங்கள்
அறியமாட்டீர்கள்...!

என் அன்புக்குரியவர்களே...
நீங்கள் பாவம்
எதுவும் அறியாதவர்கள்
உங்களை நான் குற்றம் சொல்லவில்லை
அவர்களைத்தான் நான்
குற்றம் சொல்கிறேன்...!

அவர்கள் யார்..?
எங்கிருந்து வந்தார்கள்...?

குணப்படுத்த முடியாத வியாதியாக
காயங்கள் ஆறியும்
அழிக்கமுடியாத அடையாளங்களாக
எம் இதையங்களில்
கொடிய கோடரிகளால் கொத்தி
காயப்படுத்தியவர்களாக
அவர்கள் அன்றும் இன்றும்
எங்கள் எதிரிகளாகவே
இருக்கிறார்கள்...!

அவர்கள் யார்..?
எங்கிருந்து வந்தார்கள்...?
தயவுசெய்து நாங்கள் அவர்களை
யாரென்று குறிப்பிட வேண்டாம்...!
ஏனெனில் அவர்கள்...
மனிதம் இல்லாதவர்கள்
இதயம் இல்லாதவர்கள்
அவர்கள் பெயர்களை
குறிப்பிட வேண்டாம்
ஏனெனில்...
புனிதமாய் இருக்கிறது எங்கள் நா
அவர்கள் பெயரை உச்சரித்து
அசுத்தம் செய்ய...
நாங்கள் விரும்பவில்லை
ஆகையினால் நாங்கள்
அவர்கள் நாமங்களை
உச்சரிக்க வேண்டாம்...!

என் அன்புக்குரியவர்களே...
அவர்களை மன்னிக்க நான்
விரம்பவில்லை
அவர்களை மறப்பதற்கும்
என்னால் முடியவில்லை
இருப்பினும்...
இப்போது நான் பயப்படுகிறேன்...!

எங்கள் குரல்வளைகளை நசுக்கிய
பகைவர்கள் பட்டியலில் இருந்து
இவர்கள் விடுபட்டுப் போவார்களோ
என்னும் பயம் எனக்கு...!

இவர்கள் வேண்டுமென்றே
எங்கள் இனத்தை அழித்தவர்கள்
எங்கள் குழந்தைகளை கொன்றவர்கள்
மாய மானுருவில் வரும்
அவர்களைக்கண்டு
மனது சிலவேளை மயங்கக்கூடுமோ
என்றுநான் அஞ்சுகிறேன்

எம் இனத்தை அகதிகளாக்கி
அடிமைகளாக்கி அடிமாடுகளாக்கி
அலையவிட்டவர்கள் அவர்கள்
எம் குழந்தைகளின் நெஞ்சில்
இருந்து இரத்தம் சொட்டச் சொட்ட
ஏறி மிதித்தவர்கள் அவர்கள்
அப்படிப்பட்ட கொடியவர்களை
எங்கள் நினைவழியா நெஞ்சு
மெல்ல மெல்ல மறந்திடுமோ
என நான் அஞ்சுகிறேன்...!

யார் அவர்கள் என என்னிடம்
சிலர் கேட்கலாம்
அவர்களை நான்
எப்படி விபரிப்பது....?

கத்தியை நினைவுபடுத்தும்
பயங்கரம் அவர்கள்
இரத்தத்தை விரும்புகின்ற
அரக்கர்கள் அவர்கள்
காட்டுவாசிகளைப்போல் நடமாடும்
நாட்டுவாசிகள் அவர்கள்
இதைத்தவிர இவர்களை எப்படி
விபரிப்பது..?
இதைத்தவிர இவர்களை எப்படி
வர்ணிப்பது..?
இப்படிப்பட்டவர்களை
எப்படி மன்னிப்பது..?

பகற் காற்றே
பனி நிலவே
ஈரப்புல்வெளியே
குளிர்மலரே
நாங்கள் அவர்களுடன் பேசுவதில்லை
நீங்கள் அவர்களுக்கு சொல்லுங்கள்...
இன்னும் மண்வாசம்
அழிந்துவிடவில்லை
இன்னும் எம் பாசம்
புதைந்துவிட வில்லை
இன்னும் எம் தொப்புள்க்கொடி உறவு
அறுந்துவிட வில்லை என்று

அம்மா தமிழீழ மாதா....
நீயும் இந்த நிலைகண்டு
கலங்குகிறாயா..?
கலங்காதே...
இந்தப் பேய்கள் கூட்டத்தால்
உன் சேய்கள் இன்னும்
இறந்துவிட வில்லை
உன்னை மறந்துவிடவும் இல்லை

இதிலிருந்து...
ஒரு உண்மை மட்டும் எங்களுக்கு
தெளிவாக புரிகிறது தாயே...
அவர்கள்...
எங்களைக்கண்டு அஞ்சுகிறார்கள்
அவர்கள் எங்கள் பலம் கண்டு
பயப்படுகிறார்கள்
எங்கள் மண்வாசம் சுமந்த
மனசுகண்டு அவர்கள்
பொறாமைப்படுகிறார்கள்
ஆதலால்தான்...
அவர்கள் எங்கள் மனங்களை
சிதைக்க
ஒற்றுமையை உடைக்க
தாய்பிள்ளை உறவை ஒழிக்க
ஊடகங்கள் என்னும் போர்வையில்
வந்திருக்கிறார்கள்...!

அன்னையே...
அவர்கள் யாரென்று கேட்காதே
ஏனெனில்...
அவர்களை உனக்கு
ஏற்கனவே தெரியும்
உன் தேகத்தில் இருக்கும்
அழியாத காயங்கள் அவர்களை
நினைவுபடுத்தும்
அவர்கள் எப்போது வந்தார்கள்
என்றும் கேட்காதே
ஏனெனில்...
அவர்கள் எமையழிக்க
அடிக்கடி வருபவர்கள்...!
அன்னையே...
உனது பிள்ளைகள் எப்போது
இதை உணர்ந்துகொண்டார்கள்
என்று மட்டும் கேள்...!!!


த.சரீஷ்
21.07.2003(பாரீஸ்)

Print this item

  முறுகல்நிலை தெடர்கின்றது..
Posted by: GMathivathanan - 07-24-2003, 09:43 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (36)

கடந்த.. சிலநாட்களாக நடைபெறும்.. சம்பவங்கள்.. கப்பல்.. கவுக்கும்.. முயற்சிபோறே.. தெரிகின்றது.. முயற்சிப்பது.. யாராகவிருக்கலாம்.. முடிவுசெய்ய..

[size=14]S.Lanka truce under strain as rebels defy monitors COLOMBO, July 23 — Tamil Tiger rebels have declined to dismantle a camp in government-held territory, Sri Lanka's truce monitors said on Wednesday, putting more strain on a ceasefire weakened by lack of direct talks.

Under the terms of the Norwegian-brokered truce between the government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) signed in February last year, combatants are not allowed to build camps or carry weapons in areas controlled by the other side.
The monitors ruled earlier the camp in the northeast of the island was in a government-held area, but the Tigers' political wing leader S.P. Thamilselvan said they would make their own land survey before agreeing to remove the camp.
''Thamilselvan gave a negative answer and they will not abide by the ruling on the Wan Ela camp,'' said Agnes Bragadottir, spokeswoman for the Sri Lanka Monitoring Mission (SLMM).
She said the head of the mission was awaiting a written response from the rebels and would travel to the LTTE headquarters in the country's north on Thursday to talk with them.
The ceasefire marks the longest lull in fighting since the war over a separate Tamil state in the north and east began in 1983, but monitors have complained that the Tigers have been restricting their movements and not complying with rulings.
The Tigers suspended peace talks in April after six rounds of negotiations, and have yet to respond to a government proposal on power sharing aimed at restarting the peace process.
Copyright 2003 Reuters Limited. All rights reserved. Republication or redistribution of Reuters content is expressly prohibited without the prior written consent of Reuters.

http://famulus.msnbc.com/FamulusIntl/reute...p?reg=ASIA#body

Print this item

  தமிழ் வானொலி லண்டனிலிருந்து
Posted by: sethu - 07-24-2003, 06:26 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (12)

The anti-LTTE Eelam National Democratic Liberation Front (ENDLF) says that the only solution to the Sri Lankan Tamil problem is to get the ruling United National Front (UNF) and the opposition Peoples' Alliance (PA) to come out with a joint proposal for a federal system and have India to back it to the hilt.

V Ramraj, ENDLF's Central Committee member and its organiser in Europe, told Hindustan Times that Tamils who believed in democracy and the unity of Sri Lanka, were unable to stem the tide of militancy and separatism represented by the LTTE because the two major Sinhala political parties had not bothered to make an alternative, joint offer of a federal structure. Whenever a government had made an offer, the party in opposition would scuttle it.

"The Tamil people do not know what the two main political formations in the country have for them. The UNF and the PA must therefore come out with a joint constitutional package and place it before the Tamil people," Ramraj said.

And, equally importantly, the package must enjoy the full backing of India, he said. "There can be no solution which does not have India's backing," he noted.

"Anti-LTTE groups like the ENDLF, EPRLF-V, EPDP, PLOTE and a section of the TULF can take on the LTTE politically if such a package were on offer," he said. In Ramraj's view, despite the LTTE's military power and ability to intimidate or eliminate its opponents or rivals, it can be matched on the political battlefield, if the opposition groups are armed with a good political package.

The PA had brought out a devolution package when it was in power in 2000, but the UNP (as the UNF was at that time) scuttled it. The UNP government itself was badly divided on the solution contained in the Indo-Sri Lanka Accord in 1987. Ramraj pointed out that the UNP, in its incarnation as UNF, had been ruling since December 2001, but was yet to make an offer.

The UNF's thesis is that a solution can be found only in the process of negotiating with the LTTE. But peace talks with the LTTE have been held six times, but till date, nothing has emerged. Neither the government nor the LTTE has any blueprint of a federal structure.

Ramraj, who is running the Tamil Broadcasting Corporation, the only non-LTTE- controlled, independent Tamil radio station in London, said that the LTTE feared India and was in the process of physically annihilating and neutralising groups which believed in an India-backed solution to the Tamil problem.

The LTTE has so far killed over 40 political activists of rival pro-Indian political groups, including Robert, Jaffna organiser of the EPRLF-V, he said. Of late, the LTTE is also trying to entice these groups by offering them a political role apparently to neutralise them, he said. According to Ramraj, this is mainly to wean them away from India and eliminate the Indian factor in Tamil politics.

Print this item

  விடுபடல் - சிறுகதை
Posted by: Alai - 07-24-2003, 12:49 PM - Forum: கதைகள்/நாடகங்கள் - Replies (4)

[size=18]விடுபடல் - சிறுகதை

_<b>எழுதியவர் - சு. தர்மமகாராஜன், இலங்கை</b>


தன்னைச் சூழவுள்ள மனிதர் கூட்டத்திலிருந்து விலகி மனித நடமாற்றமற்ற நிசப்தமான ஒரு பிரதேசத்தின் ஒரு மூலையில் அடங்கி இருக்க வேண்டும்போல் அவளது உள் மனது தனிமையைத் தேடித் தவித்தது. சுற்றிலும் தாக்கும் பார்வைக் கணைகளிலிருந்து தப்புவதற்கு தனிமைக்குள் அடங்கினால்தான் முடியும். வாழ்க்கையின் பல பிரச்சனைகளின் இறுதித் தீர்வு அதிர்ஷ்டவசமாக அவளுக்கு தனிமையில்தான் கிடைத்திருக்கிறது. யாருடைய தலையீடுகளையும் பொருட்படுத்தாது ஒரு கணத்தில் குற்றவாளியாகவும் இன்னுமொரு கணத்தில் குற்றம் சாட்டுபவளாகவும் சில நேரங்களிலே தானே ஒரு நீதிபதியாகவும் நின்று தன் மனத் தவிப்புகளுக்கான பிரச்சனைகளைத் தீர்த்துக் கொள்ள தனிமை உதவியாய் இருந்திருக்கிறது..

தனது இருபத்தியாறாவது வயதில் முதல் காதல் சாதியாலும் பணத்தாலும் முறித்துக் கொண்டு விலகியபோது உலகமே வெறுத்துப்போய் துவண்டு வீழ்ந்திருந்தபோது தனிமைதான் தீர்வு கொடுத்தது. காதலன் எனும் வேஷத்தில் அவன் தன்னை பயன்படுத்தி ஆசைகள் கொடுத்து இறுதியாய் எதிர்பார்ப்புகளை தவிடுபொடியாக்கித் தள்ளிவிட்டபோது அவள் உண்மையிலும் வாழ்க்கையின் இறுதிக் கிடங்கில் வீழ்ந்ததைப் போல்தான் உணர்ந்தாள். கிடங்கின் ஒரு மூலையில் ஒதுங்கும் தவளையைப்போல் வீட்டின் ஒரு அறையில் அடங்கி குடும்பத்தின் வசவுகளிலிருந்தும் சமூகத்து பார்வைக் கணைகளிலிருந்தும் ஒதுங்கிக் கொண்டாள். அந்த ஒதுங்கலிலான தனிமை அவளை உசுப்பிவிட்டது. வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி இடப்போனவளுக்கு அதிர்ஷ்டவசமாய் தனிமையின் சிந்தனை மீளெழச் செய்தது. அன்றிலிருந்து துக்கமானாலும் தனிமை மகிழ்ச்சியானாலும் தனிமை. யாருடைய உதவியுமின்றி தனிமையாய் மன உணர்வுகளை தனக்குள்ளேயே பகிர்ந்து உள்வாங்கிக் கொள்ள பழகிக் கொண்டாள்.

இன்றும் அப்படித்தான் தனிமை தேவைப்படுகிறது. உள்ளத்துள் உருண்டுக் கொண்டிருக்கும் இனம் காண முடியாத கணக்கும் உருண்டையை உடைக்க மனம் தனிமையைத்தான் தேடுகின்றது. தன்னைச் சுற்றியிருக்கும் கூட்டம் தானாய் கலையும் மட்டும் காத்திருக்க வேண்டுமென்று அவளுக்குத் தோன்றியது.

பார்வைக்கு நேரே தெரியும் யன்னலினூடாக வெளியே நோக்கினாள். அங்குமிங்கும் நடமாடும் சனத்துக்கிடையே வெள்ளைக் கொடிகளாலான அலங்காரம் நடைபெற்றுக் கொண்டிருப்பதைக் கண்டவுடன் மனதுக்குள் இருக்கும் அந்த உருண்டை மேலும் கீழும் வேகமாய் உருளத் தொடங்கியது.

நான்கு வருடங்கள் தட்டிக் கழித்தலின்பின் குடும்ப நெருக்கடியில் நசிந்து மனதின் விருப்பம்கூட எண்ணாது குமாருக்கு கழுத்தை நீட்டியபோது பல அலங்காரங்களோடும் மேள முழக்கங்களோடும் பல பெரியோர்கள் ஆசிர்வாதங்களோடும்தான் கழுத்தில் தாலி ஏறியது. கழுத்தில் தாலி கனக்க உடல் மேல் அவன் தேகம் கணக்க சாராய நெடியுடனான முதலிரவின் வேதனை தனிமையைத்தான் தேடியது. தேகங்களின் உணர்வுப் பகிர்தலில் அவனது சுயநலம் அவளை தனிமையில் கண்ணீர் வடிக்க வைத்தது. எல்லை மீறிய போதையுடனான அவனது செயற்பாடுகள் ‘‘போகப் போக சரியாயிடும்’’ என்கிற பெரியோரின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்து சகித்துக் கொண்டாள்.

வாரத்தில் நான்கு நாட்கள் இரவில் அவனது எல்லை மீறிய குடிபோதையும் அதன் பின்னாலான பலாத்காரமான புணர்தலும் தவிர்த்து ஒதுங்கிய போதான அடியையும் உதையையும் அவள் தனிமையோடு பகிர்ந்து கொண்டாள்.

இரவுகள் என்றாலே பயம் எங்கேயாவது ஓடி ஒதுங்கிக் கொள்ள வேண்டுமென்ற அவளது தனிமையான தீர்வு வயிற்றில் உருப்பெற்றிருந்த கருவும் அதனது சகமான வருடலாலும் மெய்மறக்கச் செய்தது.

தனது இரண்டாவது கரு குடிபோதையில் அவன் உதைத்த உதையால் கலைந்துபோன போது தளர்ந்த வாழ்க்கையின் பிடிப்பு தன் இரண்டு வயது பிள்ளையின் மழலை மொழியின் தனிமையில் மீண்டும் பற்றிக் கொண்டது.

போகப் போக தேகத்தின் இச்சை இறந்துபோய் ஒவ்வொரு இரவும் அவனுக்கு ஒரு பிணமாய் புணர்தலில் ஈடுகொடுத்தாள். குடிபோதையின் இயலாமையும் அதனாலான நரம்பின் வீரியக் குறைவும் அவனை பாதியிலேயே சோர்வடையச் செய்தது. அவனது சோர்வும் இயலாமையும் அவளில் சந்தேகம் கொள்ள வைத்தது. சந்தேகத்தின் உச்சத்தில் ஊர்கூட்டி வார்த்தைகளால் அவள் துகிலுரித்தான்.

அவளது மானம்காக்க கிருஷ்ணர்கள் வரவில்லை. பதிலாக தமக்கிடையே கோடு போட்டு பிள்ளையோடு முடங்கிக் கொண்டாள்.

அவள் கணவனை உதறிய சமூகம் அவளை பரிதாபமாய் விமர்சனம் பண்ணியது. ஆனால் அவனிடமிருந்து விலகவிடாது அவளை கலாசாரத்தால் நசுக்கியது.

தன் பிள்ளையின் எதிர்காலம் நினைத்து திருமணமாகி ஐந்து வருடங்களின்பின் முதன் முதலாய் கணவனின் எதிர்ப்பையும் மீறி வேலைக்குச் சென்றாள். எப்போதும் போல் தனிமைதான் அவளுக்கு அந்த தீர்வைக் கொடுத்தது. ஆரம்பத்தில் எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தவன் பின் ஏனோ பேசாது விட்டு விட்டான்.

அவள் உழைப்பின் சந்தோஷத்தைப் பிள்ளையோடு தனிமையில் அனுபவித்தாள். சந்தோஷமாய் வேலைவிட்டு வீடு திரும்பிய ஒரு பொழுதில்தான் அவன் விபத்தில் இறந்த செய்தி கிடைத்தது. ஏனோ மனம் பதறவில்லை. நிதானமாய் ஹாஸ்பிடல் செல்ல அவளுக்கு முன்னமேயே அவன் உறவுகள் கூட்டம் கூடியிருந்தது.

வீடு திருமணத்திற்கு பின் அவனது மரணத்தில் சனநெரிசலால் நிறைந்து காணப்படுகிறது. தனிமையையே நாடிப் பழகியவளுக்கு அதிகளவான சனநடமாட்டம் தொந்தரவைக் கொடுத்தது. ஒரு அறைக்குள்ளேயே அடங்கியவளை உறவினர் கூட்டம் இழுத்து வந்து சவத்தினருகே குந்த வைத்து வேடிக்கைப் பார்த்தது. பிள்ளையை மடியில் வைத்துக்கொண்டு ஒன்றும் செய்வதறியாது மரக்கட்டையாய் அவளும் வேடிக்கைப் பார்த்தாள்.

இன்று இரண்டாவது நாள். இன்னும் சிறிது நேரத்தில் அவனது இறுதிப் பயணம். அவள் மனம் தவித்தது. ஆவல் கொண்டது. எதற்காகவென்று இனம் காண முடியாது தடுமாறியது. பிள்ளையின் தலை வருடியவாறே உயிரற்ற அவனது முகத்தைப் பார்த்தாள். போதை வெறியில் வாயில் எச்சில் வடித்தபடி புணரத்துடிக்கும் அந்த விகாரமான முகத்தைவிட உயிரற்ற உப்பிய முகம் சற்ற ஆறுதலை அளித்தது.

மரண வீட்டில் கூட்டம் சலசலத்தது. அவளை பெண்கள் கூட்டம் தனியறையில் அமர்த்தியது. திருமணத்திற்கு பின் மீண்டும் ஒரு அலங்காரம். அவள் நினைவுகள் பின் நகர்ந்து மீண்டன. அறையிலுள்ள சிறுயன்னலினூடாக பார்வையை செலுத்தினாள். அவனுக்கான இறுதி மரியாதை செலுத்துவதில் குழுமியிருந்த கூட்டம் மும்முரமாய் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. உள்மனம் வெளிக்காட்ட இயலாத ஒரு உணர்வால் நிறைந்திருந்தாலும் அதன் கனம் முனனிலும் பார்க்கக் குறைவதை உணர்ந்தாள். அக்கூட்டத்தினரிடையே தன் பிள்ளையின் முகம் கண்டு மனம் பதறியது. கண்கள் நீர்த்திரையால் வெளிகாட்சிகளை மங்கலாக்கின.

இப்போது அவளுக்கான நேரம். ஒரு சில சடங்குகளை முடித்து இரு பெண்கள் கைப்பிடித்து சவத்தினருகே புரட்டிப் போட்ட ஒரு உரலில் அவளை அமர வைத்தார்கள். அவர்களது முகத்தில் அப்பியிருந்த சோகம் கண்டு அவளுக்கு ஆச்சரியமாயிருந்தது. தனக்குள் இல்லாத ஒன்று அவர்களுள் வெளிப்படுவதில் இருந்த ஹாஸ்யத்தை மனதுக்குள்ளேயே ரசித்தாள். சவத்துக்கு முதுகுகாட்டி அமர்ந்ததில் மனதுக்கு சற்று ஆறுதலாய் இருந்தது.

நேரம் போகப் போக அவள் மனது இருப்புக் கொள்ளவில்லை. சடங்குகளினாலான சங்கடத்தை தவிர்க்க தலையை கவிழ்த்து நிலம் பார்த்தாள். அவளை சுற்றியிருந்த பெண்களின் கால்கள்தான் கண்ணில் பட்டது. அவை தன் கால்களிலும் பார்க்க நேர்த்தியாக இருப்பதைப் போல் தோன்றியது. திடீரென்று பெண்களிக் கால்களது இடமாற்றம் அவளை உசுப்பியது.

ஒரு சீலையின் மறைவில் இரு பெண்களது உதவியோடு அவள் அணிகலன்கள் கழன்ற வீழ்ந்தன. நெற்றிப் பொட்டு துடைக்கப்பட்டது. இறுதியில் ஒரு வெட்டவெளி அமைதியில் அவளது கழுத்தில் கனத்துக் கொண்டிருந்தது அறுந்து வீழ்ந்தது. அவள் கண்களிலிருந்து இரு சொட்டு கண்ணீர் துளிகள் வழிந்து கன்னத்தில் உருண்டோடின.

ஏதோ ஒரு இருக்குப் பிடியிலிருந்து விடுபட்டதைப் போல் அவள் நெஞ்சுக் குழியிலிருந்து பலமாய் ஒரு பெருமூச்சு வெளிவந்தது.

முற்றும்

_<b>சு. தர்மமகாராஜன், இலங்கை</b>

நன்றி - குமுதம்

Print this item

  அனுபவம்
Posted by: Paranee - 07-24-2003, 09:51 AM - Forum: தமிழ் /தமிழர் - Replies (11)

வணக்கம்
எழுதிப்பழகுங்கள்
வேதனையான ஒருவிடயத்தை உங்கள்முன் வைத்துக்கொள்கின்றேன். எழுதிப்பழகுகங்கள் எழுதப்பழகுங்கள்.
கடந்த இரண்டு வருடங்களாக எழுத்துவேலை குறைந்து வந்துள்ளது. அதனால் இப்போது எழுதமுற்பட்டால் கையில் ஒரு நடுக்கம். எழுத்து வழுக்கி ஓடும் தன்மை. ஏற்படுகின்றது. அதை எண்ணி கவலைப்படுகின்றேன். எக்காரணம்கொண்டு எழுதிக்கொள்வதை தவிர்த்துக்கொள்ளாதீர்கள். அலுவலகவேலைகளிலும் சரி வீட்டிற்கு கடிதம் எழுதுவதிலும் சரி நான் கணனிமூலமே செய்துகொள்வேன். கைகொண்டு கையொப்பம் மட்டும் இட்டுக்கொள்வேன். அதன் பலாபலனை இப்போது அனுபவிக்கின்றேன். கவிதைகூட கணனியில் எழுதி எழுதி பழகியதால் கையால் பேனையை எடுத்து எழுதுமுயன்றால் கை பதறுகின்றது
எனவே அன்பு நண்பர்களே
உங்கள் எழுத்துப்பழக்கத்தை எக்காரணம் கொண்டும் என்னைப்போல பின்னுக்கு போடாதீர்கள். அதன் பலனை நான் இப்போது அனுபவித்துஅனுபவித்து வேதனைகொள்கின்றேன். அழகுற எழுதுபவன் நான் என்று படிக்குமு; காலத்தில் பெருமிதம் கொள்வேன். தற்பேர்து எனது எழுத்தே எனக்கு வெறுப்பைத்தருகின்றது. இது ஒரு அவமானவிடயமாகவே நான் கருதிக்கொள்கின்றேன். இப்படியான அனுபவங்கள் உங்களிற்கும் இருக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

நட்புடன்
பரணீதரன்

Print this item

  பாக்தாத் நகரில் இலங்கையர் சுட்டுக்கொலை
Posted by: sethu - 07-23-2003, 06:57 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்காக ஈராக்கில் பணிபுரிந்து வந்த இலங்கையரொருவர் நேற்றுச் செவ்வாய்க்கிழமை பாக்தாத் நகரில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நதீர்h ரண்முத்து என்பவர் பாக்தாத்தில் உள்ள செஞ்சிலுவைச் சங்க பணிமனையில் தகவல் தொழில் நுட்பப் பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.

ரண்முத்து அவரது காரில் பயணஞ் செய்து கொண்டிýருக்கும் போது இனந்தெரியாதோரால் சுடப் பட்டுள்ளார்.

உள்@ýர் நேரம் காலை 11 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது கார் சாரதி படுகாயமடைந்துள்ளார்.

37 வயதான ரண்முத்து 1992 ஆம் ஆண்டு முதல் செஞ்சிலுவைச் சங்கத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார். திருமணமான இவருக்கு 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

ஈராக்கில் 1980 ஆம் ஆண்டு முதல் செஞ்சிலுவைச் சங்கத்தினர் பணிபுரிந்து வருகின்றனர். இப்போது அங்கு சுமார் 850 பேர் பணியாற்றுகின்றனர்.

Print this item

  குடில்
Posted by: Guest - 07-23-2003, 08:03 AM - Forum: இணையம் - Replies (253)

தமிழில் புதிதாக இணையம் இணைப்பிலிருந்தபடியே அமைக்கும் முறை வந்துள்ளது.ஆங்கிலத்தில் புளொக் என்பார்கள் .தமிழில் இப்போதைக்கு குடில்.

இது அமைக்கும் முறைபற்றி எதேச்சையாக விளக்கியுள்ளேன்.செய்து பார்த்துவிட்டு கருத்து தாருங்கள்

அதன் பயன் அதிகம்..

http://aayutham.blogspot.com/

Print this item

  விசேட உலகச் செய்திகள்...
Posted by: kuruvikal - 07-22-2003, 07:31 PM - Forum: செய்திகள்: உலகம் - Replies (6)

<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/ap/20030722/capt.1058888348.iraq_nyet170.jpg' border='0' alt='user posted image'>

ஈராக்கில் அமெரிக்க படைகள் இன்று நடத்திய தாக்குதல் ஒன்றில் சதாமின் இரண்டு புதல்வர்கள் இறந்திருக்கக் கூடும் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்....சம்பவ இடத்திலிருந்து 4 பேரின் உடல்கள் மீட்க்கப்பட்ட போதும் அவை அடையாளம் காண முடியாது சிதைந்துள்ளதால் டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது....

இப்படித்தான் முன்னரும் சதாம் இறந்து விட்டார் என்று அமெரிக்கப்படைகள் இரு தடவைகள் கதைகட்டின என்பதும் அவையெல்லாம் ஈராக் மக்களை குழப்பவே என்பதும் பின்னர் தெரிய வந்தது...!

<img src='http://eur.news1.yimg.com/eur.yimg.com/xp/reuters_ids/20030722/i/2257359794.jpg' border='0' alt='user posted image'>

உலகப் புகழ் பெற்ற பிரான்ஸ் தேசத்து ஈபிள் கோபிரத்தின் உச்சியிலிருந்து புகை கிளம்பிய வண்ணமுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....இதற்கான காரணத்தை அதிகாரிகளும் தீயணைப்புப் படையினரும் தேடி வருகின்றனராம்....

Our Thanks to AP. Reuters and Yahoo.com

Print this item

  கட்டுநாயக்கா...
Posted by: P.S.Seelan - 07-22-2003, 12:49 PM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (1)

கட்டுநாயக்கா

<b>முகமாறியா வீரருக்கஞ்சலி.</b>

விழி சிவந்த மைந்தர் குருதியிலே
ஆழிந்ததுவே பேரினத்தின் ஆணவம்
பேய்கள் முற்றத்து இரும்புப் பறவைகள்
சிறகொடிந்தெ சிதறின
சிங்களத்தின் வாசலிலே
அமைதிக்காய் ஏந்திய மடிதனிலே
எச்சமிட்டு மிச்சமின்றி அழித்த அரக்கர்
விதைத்த வினை அறுவடையில்
கட்டு நாயக்கா கலங்கியதோ!
விண்ணேறி வந்த பகைப் புலத்துப்
பறவையெல்லாம் மண்ணுர்ந்து சென்று
தகர்த்த எம் மினத்து முகமறியா
வீரத் தவப் புதல்வரே!
மனம் சிலிர்க்க உமை நினைத்து
தமிழரெல்லாம் தலைநிமிர்ந்தே
உம் தாழ் பணிந்து
அஞ்சலித்து நிற்கின்றோம்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்

Print this item

  நுழைவாயில் - அறிமுகம்
Posted by: Bharathi - 07-21-2003, 01:57 PM - Forum: அறிமுகம் - Replies (89)

Anbu Nanbarkale... vanakkam. yaaludan inaivathil enakku mikavum makilchi. Aanaal ennal TSCII avarangal font..ai inge upayokikka mudiya villai. Viraivil baamini..udan santhikka muyarchikkireen. Ungal muyarchikalukku vaalthukkal. Angilaththil eluthiyatharkku mannikkavum.

Print this item