07-25-2003, 03:19 PM
<b>முகமூடித் திருடர்கள்...!</b>
எமது இதயத்தில் இன்னும்
ஈரம் எஞ்சியிருக்கிறது
எமது நெஞ்சுக்குள் இன்னும்
பாசம் பொங்கி வழிகிறது
எமது தோள்களில் இன்னும்
துயரம் தங்கியுள்ளது
இந்த ஈரம் காயும்வரையும்
பாசம் தீரும் வரையும்
துயரம் ஆறும்வரையும்
அதற்குப்பின்னும்....
என்றும்.....
புலத்திற்கும் தாய் நிலத்திற்கும்
இடையிலான...
தொப்பிள்க்கொடி உறவு
தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்...!
இதை அறுத்தெறியவோ...
அல்லது...
சிதைத்தெறியவோ
எவராலும் இயலாது...!
இதை அறுத்தெறிய என்று
வருகிறார்க் அவர்கள்...
ஊடகங்கள் என்னும்
முகமூடி அணிந்துகொண்டு...!
இது சாத்தியமாகுமா..?
வானவில் என்னும் பெயரில்
வஞ்சனையால் எம் நெஞ்சோடு
விளையாட விழைகிறார்கள் அவர்கள்
நினைவழியா நெஞ்சத்து நிழலை
வினைவிதைத்து மறைத்துவிட
நினைக்கிறார்கள் அவர்கள்
ஊர் அறிந்த
உலகமே பயந்த
எங்கள் தாய் சேய் உறவை
உருக்குலைக்க நினைக்கிறார்கள்
இது சாத்தியமாகுமா..?
என் அன்புக்குரியவர்களே...
உங்களை நான் குற்றம் சொல்லவில்லை...!
நீங்கள் பாவம்
எதுவும் அறியாதவர்கள்...!
மழை பொழிந்துகொண்டிருக்கிறது என்றால்
ஆசையோடு வீதியில் இறங்கி
நனையத்தான் விரும்புவீர்கள்
ஆனால் வந்த மழை...
ஒரு ஆபத்தான புயலின் ஆயத்தமென
அப்போது நீங்கள் அறியமாட்டீர்கள்...!
தென்றல்க்காற்று...
மலரோடு மோதி நல்ல
மலர்வாசம் சுமந்து வருகுதெனில்
நீங்களும் ஆசையோடு
சுவாசிக்கத்தான் விரும்புவீர்கள்
ஆனால்...
தென்றல்க்காற்றோடு கொடிய விஷமும்
கலந்து வருவதை அப்போது நீங்கள்
அறியமாட்டீர்கள்...!
என் அன்புக்குரியவர்களே...
நீங்கள் பாவம்
எதுவும் அறியாதவர்கள்
உங்களை நான் குற்றம் சொல்லவில்லை
அவர்களைத்தான் நான்
குற்றம் சொல்கிறேன்...!
அவர்கள் யார்..?
எங்கிருந்து வந்தார்கள்...?
குணப்படுத்த முடியாத வியாதியாக
காயங்கள் ஆறியும்
அழிக்கமுடியாத அடையாளங்களாக
எம் இதையங்களில்
கொடிய கோடரிகளால் கொத்தி
காயப்படுத்தியவர்களாக
அவர்கள் அன்றும் இன்றும்
எங்கள் எதிரிகளாகவே
இருக்கிறார்கள்...!
அவர்கள் யார்..?
எங்கிருந்து வந்தார்கள்...?
தயவுசெய்து நாங்கள் அவர்களை
யாரென்று குறிப்பிட வேண்டாம்...!
ஏனெனில் அவர்கள்...
மனிதம் இல்லாதவர்கள்
இதயம் இல்லாதவர்கள்
அவர்கள் பெயர்களை
குறிப்பிட வேண்டாம்
ஏனெனில்...
புனிதமாய் இருக்கிறது எங்கள் நா
அவர்கள் பெயரை உச்சரித்து
அசுத்தம் செய்ய...
நாங்கள் விரும்பவில்லை
ஆகையினால் நாங்கள்
அவர்கள் நாமங்களை
உச்சரிக்க வேண்டாம்...!
என் அன்புக்குரியவர்களே...
அவர்களை மன்னிக்க நான்
விரம்பவில்லை
அவர்களை மறப்பதற்கும்
என்னால் முடியவில்லை
இருப்பினும்...
இப்போது நான் பயப்படுகிறேன்...!
எங்கள் குரல்வளைகளை நசுக்கிய
பகைவர்கள் பட்டியலில் இருந்து
இவர்கள் விடுபட்டுப் போவார்களோ
என்னும் பயம் எனக்கு...!
இவர்கள் வேண்டுமென்றே
எங்கள் இனத்தை அழித்தவர்கள்
எங்கள் குழந்தைகளை கொன்றவர்கள்
மாய மானுருவில் வரும்
அவர்களைக்கண்டு
மனது சிலவேளை மயங்கக்கூடுமோ
என்றுநான் அஞ்சுகிறேன்
எம் இனத்தை அகதிகளாக்கி
அடிமைகளாக்கி அடிமாடுகளாக்கி
அலையவிட்டவர்கள் அவர்கள்
எம் குழந்தைகளின் நெஞ்சில்
இருந்து இரத்தம் சொட்டச் சொட்ட
ஏறி மிதித்தவர்கள் அவர்கள்
அப்படிப்பட்ட கொடியவர்களை
எங்கள் நினைவழியா நெஞ்சு
மெல்ல மெல்ல மறந்திடுமோ
என நான் அஞ்சுகிறேன்...!
யார் அவர்கள் என என்னிடம்
சிலர் கேட்கலாம்
அவர்களை நான்
எப்படி விபரிப்பது....?
கத்தியை நினைவுபடுத்தும்
பயங்கரம் அவர்கள்
இரத்தத்தை விரும்புகின்ற
அரக்கர்கள் அவர்கள்
காட்டுவாசிகளைப்போல் நடமாடும்
நாட்டுவாசிகள் அவர்கள்
இதைத்தவிர இவர்களை எப்படி
விபரிப்பது..?
இதைத்தவிர இவர்களை எப்படி
வர்ணிப்பது..?
இப்படிப்பட்டவர்களை
எப்படி மன்னிப்பது..?
பகற் காற்றே
பனி நிலவே
ஈரப்புல்வெளியே
குளிர்மலரே
நாங்கள் அவர்களுடன் பேசுவதில்லை
நீங்கள் அவர்களுக்கு சொல்லுங்கள்...
இன்னும் மண்வாசம்
அழிந்துவிடவில்லை
இன்னும் எம் பாசம்
புதைந்துவிட வில்லை
இன்னும் எம் தொப்புள்க்கொடி உறவு
அறுந்துவிட வில்லை என்று
அம்மா தமிழீழ மாதா....
நீயும் இந்த நிலைகண்டு
கலங்குகிறாயா..?
கலங்காதே...
இந்தப் பேய்கள் கூட்டத்தால்
உன் சேய்கள் இன்னும்
இறந்துவிட வில்லை
உன்னை மறந்துவிடவும் இல்லை
இதிலிருந்து...
ஒரு உண்மை மட்டும் எங்களுக்கு
தெளிவாக புரிகிறது தாயே...
அவர்கள்...
எங்களைக்கண்டு அஞ்சுகிறார்கள்
அவர்கள் எங்கள் பலம் கண்டு
பயப்படுகிறார்கள்
எங்கள் மண்வாசம் சுமந்த
மனசுகண்டு அவர்கள்
பொறாமைப்படுகிறார்கள்
ஆதலால்தான்...
அவர்கள் எங்கள் மனங்களை
சிதைக்க
ஒற்றுமையை உடைக்க
தாய்பிள்ளை உறவை ஒழிக்க
ஊடகங்கள் என்னும் போர்வையில்
வந்திருக்கிறார்கள்...!
அன்னையே...
அவர்கள் யாரென்று கேட்காதே
ஏனெனில்...
அவர்களை உனக்கு
ஏற்கனவே தெரியும்
உன் தேகத்தில் இருக்கும்
அழியாத காயங்கள் அவர்களை
நினைவுபடுத்தும்
அவர்கள் எப்போது வந்தார்கள்
என்றும் கேட்காதே
ஏனெனில்...
அவர்கள் எமையழிக்க
அடிக்கடி வருபவர்கள்...!
அன்னையே...
உனது பிள்ளைகள் எப்போது
இதை உணர்ந்துகொண்டார்கள்
என்று மட்டும் கேள்...!!!
த.சரீஷ்
21.07.2003(பாரீஸ்)
எமது இதயத்தில் இன்னும்
ஈரம் எஞ்சியிருக்கிறது
எமது நெஞ்சுக்குள் இன்னும்
பாசம் பொங்கி வழிகிறது
எமது தோள்களில் இன்னும்
துயரம் தங்கியுள்ளது
இந்த ஈரம் காயும்வரையும்
பாசம் தீரும் வரையும்
துயரம் ஆறும்வரையும்
அதற்குப்பின்னும்....
என்றும்.....
புலத்திற்கும் தாய் நிலத்திற்கும்
இடையிலான...
தொப்பிள்க்கொடி உறவு
தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்...!
இதை அறுத்தெறியவோ...
அல்லது...
சிதைத்தெறியவோ
எவராலும் இயலாது...!
இதை அறுத்தெறிய என்று
வருகிறார்க் அவர்கள்...
ஊடகங்கள் என்னும்
முகமூடி அணிந்துகொண்டு...!
இது சாத்தியமாகுமா..?
வானவில் என்னும் பெயரில்
வஞ்சனையால் எம் நெஞ்சோடு
விளையாட விழைகிறார்கள் அவர்கள்
நினைவழியா நெஞ்சத்து நிழலை
வினைவிதைத்து மறைத்துவிட
நினைக்கிறார்கள் அவர்கள்
ஊர் அறிந்த
உலகமே பயந்த
எங்கள் தாய் சேய் உறவை
உருக்குலைக்க நினைக்கிறார்கள்
இது சாத்தியமாகுமா..?
என் அன்புக்குரியவர்களே...
உங்களை நான் குற்றம் சொல்லவில்லை...!
நீங்கள் பாவம்
எதுவும் அறியாதவர்கள்...!
மழை பொழிந்துகொண்டிருக்கிறது என்றால்
ஆசையோடு வீதியில் இறங்கி
நனையத்தான் விரும்புவீர்கள்
ஆனால் வந்த மழை...
ஒரு ஆபத்தான புயலின் ஆயத்தமென
அப்போது நீங்கள் அறியமாட்டீர்கள்...!
தென்றல்க்காற்று...
மலரோடு மோதி நல்ல
மலர்வாசம் சுமந்து வருகுதெனில்
நீங்களும் ஆசையோடு
சுவாசிக்கத்தான் விரும்புவீர்கள்
ஆனால்...
தென்றல்க்காற்றோடு கொடிய விஷமும்
கலந்து வருவதை அப்போது நீங்கள்
அறியமாட்டீர்கள்...!
என் அன்புக்குரியவர்களே...
நீங்கள் பாவம்
எதுவும் அறியாதவர்கள்
உங்களை நான் குற்றம் சொல்லவில்லை
அவர்களைத்தான் நான்
குற்றம் சொல்கிறேன்...!
அவர்கள் யார்..?
எங்கிருந்து வந்தார்கள்...?
குணப்படுத்த முடியாத வியாதியாக
காயங்கள் ஆறியும்
அழிக்கமுடியாத அடையாளங்களாக
எம் இதையங்களில்
கொடிய கோடரிகளால் கொத்தி
காயப்படுத்தியவர்களாக
அவர்கள் அன்றும் இன்றும்
எங்கள் எதிரிகளாகவே
இருக்கிறார்கள்...!
அவர்கள் யார்..?
எங்கிருந்து வந்தார்கள்...?
தயவுசெய்து நாங்கள் அவர்களை
யாரென்று குறிப்பிட வேண்டாம்...!
ஏனெனில் அவர்கள்...
மனிதம் இல்லாதவர்கள்
இதயம் இல்லாதவர்கள்
அவர்கள் பெயர்களை
குறிப்பிட வேண்டாம்
ஏனெனில்...
புனிதமாய் இருக்கிறது எங்கள் நா
அவர்கள் பெயரை உச்சரித்து
அசுத்தம் செய்ய...
நாங்கள் விரும்பவில்லை
ஆகையினால் நாங்கள்
அவர்கள் நாமங்களை
உச்சரிக்க வேண்டாம்...!
என் அன்புக்குரியவர்களே...
அவர்களை மன்னிக்க நான்
விரம்பவில்லை
அவர்களை மறப்பதற்கும்
என்னால் முடியவில்லை
இருப்பினும்...
இப்போது நான் பயப்படுகிறேன்...!
எங்கள் குரல்வளைகளை நசுக்கிய
பகைவர்கள் பட்டியலில் இருந்து
இவர்கள் விடுபட்டுப் போவார்களோ
என்னும் பயம் எனக்கு...!
இவர்கள் வேண்டுமென்றே
எங்கள் இனத்தை அழித்தவர்கள்
எங்கள் குழந்தைகளை கொன்றவர்கள்
மாய மானுருவில் வரும்
அவர்களைக்கண்டு
மனது சிலவேளை மயங்கக்கூடுமோ
என்றுநான் அஞ்சுகிறேன்
எம் இனத்தை அகதிகளாக்கி
அடிமைகளாக்கி அடிமாடுகளாக்கி
அலையவிட்டவர்கள் அவர்கள்
எம் குழந்தைகளின் நெஞ்சில்
இருந்து இரத்தம் சொட்டச் சொட்ட
ஏறி மிதித்தவர்கள் அவர்கள்
அப்படிப்பட்ட கொடியவர்களை
எங்கள் நினைவழியா நெஞ்சு
மெல்ல மெல்ல மறந்திடுமோ
என நான் அஞ்சுகிறேன்...!
யார் அவர்கள் என என்னிடம்
சிலர் கேட்கலாம்
அவர்களை நான்
எப்படி விபரிப்பது....?
கத்தியை நினைவுபடுத்தும்
பயங்கரம் அவர்கள்
இரத்தத்தை விரும்புகின்ற
அரக்கர்கள் அவர்கள்
காட்டுவாசிகளைப்போல் நடமாடும்
நாட்டுவாசிகள் அவர்கள்
இதைத்தவிர இவர்களை எப்படி
விபரிப்பது..?
இதைத்தவிர இவர்களை எப்படி
வர்ணிப்பது..?
இப்படிப்பட்டவர்களை
எப்படி மன்னிப்பது..?
பகற் காற்றே
பனி நிலவே
ஈரப்புல்வெளியே
குளிர்மலரே
நாங்கள் அவர்களுடன் பேசுவதில்லை
நீங்கள் அவர்களுக்கு சொல்லுங்கள்...
இன்னும் மண்வாசம்
அழிந்துவிடவில்லை
இன்னும் எம் பாசம்
புதைந்துவிட வில்லை
இன்னும் எம் தொப்புள்க்கொடி உறவு
அறுந்துவிட வில்லை என்று
அம்மா தமிழீழ மாதா....
நீயும் இந்த நிலைகண்டு
கலங்குகிறாயா..?
கலங்காதே...
இந்தப் பேய்கள் கூட்டத்தால்
உன் சேய்கள் இன்னும்
இறந்துவிட வில்லை
உன்னை மறந்துவிடவும் இல்லை
இதிலிருந்து...
ஒரு உண்மை மட்டும் எங்களுக்கு
தெளிவாக புரிகிறது தாயே...
அவர்கள்...
எங்களைக்கண்டு அஞ்சுகிறார்கள்
அவர்கள் எங்கள் பலம் கண்டு
பயப்படுகிறார்கள்
எங்கள் மண்வாசம் சுமந்த
மனசுகண்டு அவர்கள்
பொறாமைப்படுகிறார்கள்
ஆதலால்தான்...
அவர்கள் எங்கள் மனங்களை
சிதைக்க
ஒற்றுமையை உடைக்க
தாய்பிள்ளை உறவை ஒழிக்க
ஊடகங்கள் என்னும் போர்வையில்
வந்திருக்கிறார்கள்...!
அன்னையே...
அவர்கள் யாரென்று கேட்காதே
ஏனெனில்...
அவர்களை உனக்கு
ஏற்கனவே தெரியும்
உன் தேகத்தில் இருக்கும்
அழியாத காயங்கள் அவர்களை
நினைவுபடுத்தும்
அவர்கள் எப்போது வந்தார்கள்
என்றும் கேட்காதே
ஏனெனில்...
அவர்கள் எமையழிக்க
அடிக்கடி வருபவர்கள்...!
அன்னையே...
உனது பிள்ளைகள் எப்போது
இதை உணர்ந்துகொண்டார்கள்
என்று மட்டும் கேள்...!!!
த.சரீஷ்
21.07.2003(பாரீஸ்)
sharish

