Yarl Forum
கட்டுநாயக்கா... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12)
+--- Thread: கட்டுநாயக்கா... (/showthread.php?tid=8278)



கட்டுநாயக்கா... - P.S.Seelan - 07-22-2003

கட்டுநாயக்கா

<b>முகமாறியா வீரருக்கஞ்சலி.</b>

விழி சிவந்த மைந்தர் குருதியிலே
ஆழிந்ததுவே பேரினத்தின் ஆணவம்
பேய்கள் முற்றத்து இரும்புப் பறவைகள்
சிறகொடிந்தெ சிதறின
சிங்களத்தின் வாசலிலே
அமைதிக்காய் ஏந்திய மடிதனிலே
எச்சமிட்டு மிச்சமின்றி அழித்த அரக்கர்
விதைத்த வினை அறுவடையில்
கட்டு நாயக்கா கலங்கியதோ!
விண்ணேறி வந்த பகைப் புலத்துப்
பறவையெல்லாம் மண்ணுர்ந்து சென்று
தகர்த்த எம் மினத்து முகமறியா
வீரத் தவப் புதல்வரே!
மனம் சிலிர்க்க உமை நினைத்து
தமிழரெல்லாம் தலைநிமிர்ந்தே
உம் தாழ் பணிந்து
அஞ்சலித்து நிற்கின்றோம்.

ஒன்றுபடு தமிழா

அன்புடன்
சீலன்


- sethu - 07-22-2003

அப்பாதப்பினது அரும்தப்பு