Yarl Forum
விசேட மருத்துவச் செய்திகள் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28)
+--- Thread: விசேட மருத்துவச் செய்திகள் (/showthread.php?tid=8297)

Pages: 1 2


விசேட மருத்துவச் செய் - kuruvikal - 07-08-2003

<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/nm/20030708/mdf312475.jpg' border='0' alt='user posted image'><img src='http://i.cnn.net/cnn/2003/HEALTH/07/08/conjoined.twins/story.twins.file.ap.jpg' border='0' alt='user posted image'><img src='http://i.cnn.net/cnn/2003/HEALTH/07/08/conjoined.twins/story.operation.1700.ap.jpg' border='0' alt='user posted image'>

ஈரானைச் சேர்ந்த சட்டப் பட்டதாரிகளான இரண்டு பெண்மணிகள்(வயது 29) தலை ஒட்டிப் பிறந்து வாழ்ந்து வநதனர். அவர்கள் தெளிவான இரண்டு மூளைகளை கொண்டிருந்த போதும் அவற்றிற்கிடையே இணைப்பும் காணப்பட்டது.அவ்விணைப்பை அகற்றி தம்மையும் பிரித்துக் கொள்ள ஆசைப்பட்ட அவர்களுக்கு சிங்கப்பூரில் வைத்து சிறப்பு சத்திர சிகிச்சை வைத்தியர் குழு ஒன்று சத்திர சிகிச்சை மேற் கொண்டு இருவரையும் பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் அதிக இரத்தக் கசிவு காரணமாக குருதிச் சுற்றோட்டம் பாதிக்கப்பட்டு 50 மணி நேர சத்திர சிகிச்சை முயற்சிகள் பலனின்றி Ladan(Left) உயிரிழந்தார் அவரைத்தொடர்ந்து 1.5 மணி நேரத்தின் பின் அவரின் சகோதரி Laleh Bijani யும் உயிரிழந்தார்.....!
இவர்களின் உயிரிழப்புக்கள் அவசியமானதுதானா......மருத்துவர்களினால் சத்திர சிகிச்சைக்கு முன்னரே இவ்வாறனதொரு சத்திர சிகிச்சையின் பின்விளைவுகள் எப்போதும் வெற்றிகரமாக அமையாது என்பது தெரிந்தும் ஏன் இவர்களை கொலை செய்தனர்....?!

Our thanks to CNN.com,Yahoo and Reuters.


- Paranee - 07-08-2003

சில நேரங்களில் மருத்துவங்கள் பொய்த்து விடுகின்றன.

அவர்களின் இறுதிநேர நிகழ்வுகள் என தொலைக்காட்சிகளில் காண்பிக்கும்போது மனது நெருடலாக இருக்கின்றது. சத்திரசிகிச்சை செய்யத்தேவையில்லாத நிலையில் அவர்கள் இருந்தார்கள்.

எதுவாகினும் மருத்துவர்கள் இத்தகைய ஒரு சத்திரசிகிச்சை பற்றி அறிந்திருப்பீர்கள். அந்தவகையில் சந்தோசம்
ஆயிரம் கொலைசெய்துதான் படிக்கவேண்டும் என்று இதைத்தான் சொல்வார்களோ


- இளைஞன் - 07-08-2003

கொலை என்று இதனைக் கூறமுடியாது.
வரக்கூடிய விளைவுகள் பற்றி அவர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அனைத்துக்கும் துணிந்து இரு சகோதரிகளும் சம்மதித்திருக்கிறார்கள். அதுதவிர அவர்கள் தங்களின் ஆசையின் தூண்டுதலினாலேயே மருத்துவர்களை அணுகியிருக்கிறார்கள். எனவே இந்த விடயத்தை முன்னறிவிப்புடன் நடந்த விபத்து என்றே கருதவேண்டும்.

எது எப்படியாக இருப்பினும், பரணீ அண்ணா எழுதியது போன்று மருத்துவர்களால் இதன்மூலம் ஏதோ ஒரு பாடம் கற்றுக்கொள்ளப்பட்டிருக்கும். இனி அந்தப் பாடம் இப்படியான அடுத்த ஒரு சத்திரசிகிச்சைக்குத் துணைகொடுக்கும்.


- kuruvikal - 07-08-2003

மருத்துவத்தில் கருணைக் கொலை என்பதே மிக மிக வரையறைக்குட்பட்ட விடயம், அப்படியிருக்க முழு வளர்ச்சி கண்ட மிக ஆரோக்கியமான ஒருவர் கேட்டதற்கிணங்க மரணத்தை நோக்கி இட்டுச் செல்லக் கூடிய அபாயகரமான சத்திர சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்களுக்கு என்ன தேவையிருந்தது! அப்படி செய்வது அடிப்படை மருத்துவ தர்மத்தை மீறும் செயல் இல்லையா...?! அப்படி அடிப்படை மருத்துவ விதிகளுக்கு அப்பால் மருத்துவத்தின் நோக்கம் செயற்பாடு என்பன நோயாளியின் வேண்டு கோளிற்கிணங்கவாயின் மருத்துவரின் தேவைதான் என்ன...?
சாதாரண உடற்கூற்றியல் அறிவுள்ள ஒருவரே முழு வளர்ச்சி கண்ட ஒருவரில் இப்படியான சத்திர சிகிச்சைகள் வெற்றி அளிப்பது குறைவு என்பது ஊகிக்க கூடியதாகவிருக்க திறமை மிக்க மருத்துவர்கள் ஏன் இச் சத்திர சிகிச்சையை இவர்களுக்கு செய்ய விளைந்தனர்! பணமும் புகழும் இவர்களை மருத்துவ தர்மத்தை மீறி இச் சத்திர சிகிச்சையை செய்யத் தூண்டியதா என்ற நியாய பூர்வமான கேள்வி எழுவது தவிர்க்க முடியாதுள்ளது!
மருத்துவ உலகம் இச் சத்திர சிகிச்சைக்கான உடனடித் தேவையையும் இம் மரணங்களுக்கான காரணத்தையும் விளக்க வேண்டும் அல்லது மனித உயிர்களும் எலி தேரை கரப்பான் போன்று ஆய்வுகூட ஆய்வுத்தேவைகளுக்காக, பணத்தேவைகளுக்காக புகழுக்காக அழிக்கப்படுவது நாளை சர்வ சாதாரண நிகழ்வாகலாம்!


- AJeevan - 07-08-2003

உங்கள் விவாதத்துக்கு தேவையான செய்தியை BBC tamil news கேட:டால் ஓரளவாவது தெளிவு கிடைக்குமென நம்பலாம்.

பீபீசீ தமிழ் ஓசை 08.07.2003 கேளுங்கள்:-

http://www.bbc.co.uk/tamil/2115.ram


- Paranee - 07-09-2003

எதுவாகினும்
மருத்துவம் இன்னும் முன்னேறவேண்டிய தேவை இருக்கின்றது

குளோனிங் கண்டுபிடித்த மருத்துவம் இப்படியான விடயங்களில் ஏன் சறுக்கிக்கொள்கின்றது


- kuruvikal - 07-09-2003

பரணீ குளோனிங் மருத்துவத்துக்குள் அடங்கவில்லை அது உயிரியல் தொழில்நுட்பத்துள்(Bio technology) அடங்குகிறது..மருத்துவம் உட்பட அனைத்து துறைகளிலும் இதுவே முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது...மருத்துவம் என்பது பிரயோகம் அவ்வளவும் தான்.....! உயிரியல் தொழில் நுட்பம்தான் பிரயோகத்திற்கான கருவிகளை கண்டறிந்து முன்னேற்றுகிறது!


- kuruvikal - 07-13-2003

<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39257000/gif/_39257078_twins_info4_416.gif' border='0' alt='user posted image'>

மரணத்துக்கு இட்டுச் சென்ற சத்திர சிகிச்சை பற்றிய விளக்கப்படங்கள்..
மீண்டும் இதே போன்ற ஒரு சத்திர சிகிச்சையை இரண்டு வயதே நிரம்பிய தலை ஒட்டிப் பிறந்த எகிப்திய சிறுவர்களுக்கு அமெரிக்காவில் மேற்கொள்ள இருப்பதாக தெரிய வருகிறது...!

செய்தி , படம்....றொய்டர் செய்தி ஸ்தாபனம் மற்றும் பிபிசி.கொம். (BBC.com)


- Mullai - 07-13-2003

<img src='http://www.vikatan.com/jv/2003/jul/16072003/p16a.jpg' border='0' alt='user posted image'>

<span style='font-size:16pt;line-height:100%'>நன்றி
ஜுனியர் விகடன்</span>


- Guest - 07-15-2003

வணக்கம்!

மருத்துவர்களும் மனிதர்கள் தான் என்பதை மறந்து விடாதீர்கள். தங்களால் முடிந்த ஓரளவுக்குத் தான் அவர்களாலும் முயற்சி செய்ய முடியும். அது வெற்றியளிப்பதும் தோல்வியளிப்பதும் இறைவன் கையில்..........

அன்புடன்
தமிழ்நங்கை


- Guest - 07-15-2003

வெற்றியை இறைவன் விரும்பவில்லையா? ஏன் இறைவனை வம்புக்கு இழுக்கிறீர்கள் நங்கை?!


- Guest - 07-15-2003

படைத்த இறைவனுக்குத்தான் தெரியும் ஒருவரை எப்போது குணமாக்குவது அல்லது எப்போது தன்னிடம் எடுத்துக் கொள்வதென்று. அது வரையில் மருத்துவர்கள் அவர் ஆட்டி வைக்கும் கைப்பொம்மைகளே.
அன்புடன்
தமிழ்நங்கை


- sOliyAn - 07-15-2003

மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று
இறைவன் நினைப்பதுண்டு பாவம்
மனிதனென்று :mrgreen:


- Guest - 07-15-2003

யார் எதை நினைத்தாலும் பரவாயில்லை.
இறைவன் நினைத்துவிட்டான் அந்த உயிர்களை எடுப்பதென்று..
எனவே இப்படியாக எடுத்துவிட்டான்.

முல்லையவர் அந்த நங்கைகளை மொடல் அழகிகள் போல் சித்தரிக்கும் இந்தப் படத்தை இணைக்காமலிருந்திருந்தால் நல்லது

அவர்கள் இறந்துவிட்ட சரித்திரங்கள்.. ! இந்தியப்பத்திரிகைகளுக்கு இப்படியான வேலைசெய்வது சாதாரணம் அதற்கு நீங்கள் துணைபோக வேண்டாம்.

இந்த விகடன் காரன் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இப்படியாக நடந்து அதை குமுதத்தில் இவர்கள் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று மொடல் அழகிகளி;ன் உடலில் இறந்தவர்களின் தலையைப்போட்டு பிரசுரித்திருந்தால் விளங்கியிருக்கும் வேதனை.

மருத்துவத்தில் நம்பிக்கையிருந்தாலும் கடவுள் நாடினால் மட்டுமே தாம் உயிர் பிழைப்போம் என்று நம்பிக்கையுடன் பேட்டிகொடுத்துவிட்டுச் சென்ற இந்த சரித்திரச்சிற்பங்களின் வேறு நல்ல
படங்களை தேடி இணைக்கலாமே!


- Guest - 07-15-2003

இறைவன் இருக்கின்றானா..?


- TMR - 07-15-2003

<img src='http://ragi.8m.com/tw.jpg' border='0' alt='user posted image'>


- TMR - 07-15-2003

Check

Arrow http://www.webulagam.com
படச்செய்திகள்

:!: :!: :!: :!: :!: :!: :!: :!: Arrow


- kuruvikal - 07-15-2003

தயவு செய்து உங்கள் அபரிமிதமான இறை நம்பிக்கை அது இது என்று எல்லாவற்றையும் இன்னொரு தலைப்பில் ஆராய்ந்தால் விசேட மருத்துவச் செய்திப்பகுதியில் மருத்துவம் சார் செய்திகள் படிக்க வருபவர்களுக்கு ஒத்துழைப்பாக அமையும் செய்வீர்களா....?! எங்கே பாப்பம் இறைவன் சொன்ன பொறுமை நிதானம் தெளிவான பார்வைகள் உங்களிடம் உண்டோ என்று...!


- kuruvikal - 07-19-2003

ஐரோப்பாவில் HIV (எயிட்ஸ் வைரஸ்) தொற்றுக்குள்ளானவர்களில் 10 சதவீதம் பேரில் தற்போது பாவிக்கப்படும் எயிட்ஸ் தற்காலிக நிவாரணி மாத்திரைகளுக்குகான எதிர்ப்பை காண்பிக்கும் வைரஸ்கள் ( Resistant strains) கண்டு பிடிக்கப்பட்டுள்ளனவாம்...இவை சீரற்ற மருந்து உட்கொள் முறையை கையாண்டதால் தான் உருவாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்...... :roll:

For more...Click here.... http://hivinsite.ucsf.edu/


- kuruvikal - 07-21-2003

<img src='http://us.news2.yimg.com/us.yimg.com/p/nm/20030721/mdf320705.jpg' border='0' alt='user posted image'>

மார்பகங்களினுள் செலுத்தப்பயன்படும் சிலிக்கன் பை

உலகில் நவநாகரிகத்தின் உச்சத்தில் உள்ள பெண்கள் தங்கள் உடலழகை மெருகூட்டும் வகையில் தங்கள் மார்பகங்களினுள் சிலிகனால் (இரசாயன மூலகம்.. Si ) ஆன பைகளை சிறிய சத்திர சிகிச்சை மூலம் செலுத்தி தமது மார்பகங்களை எடுப்பாகக் காட்டி வந்தனர்...குறிப்பாக கொலிவூட் நடிகைகள் அப்படித்தான் செய்துள்ளனராம்...இப்பொழுது இவர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல் ஒன்று வந்துள்ளது...இவ்வாறு சிலிக்கன் பைகளை மார்பகங்களினுள் செலுத்தியவர்களுக்கு நீண்ட கால அடிப்படையிலான நோய்கள் வர வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டள்ளது...அத்துடன் மார்பகங்களினுள் உள்ள நோயெதிர்ப்பு சக்திக்குரிய கலங்களை உற்பத்தி செய்யும் சுரப்பிக்குள்ளும் இந்த சிகிக்கன் மூலகங்கள் பரவி பாதிப்பை ஏற்படுத்துகின்றனவாம்...
எனவே இப்படியான இயற்கைக்கு மாறான செயற்பாடுகள் இந்தப் பெண்களுக்கு தேவையா...?! :roll:

Our thanks go to Science - Reuters and yahoo.com