| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 326 online users. » 0 Member(s) | 323 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,165
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,169
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,572
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,271
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,562
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,993
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,392
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,060
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,966
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,230
|
|
|
| புறநானுறு என்னும் புதிர் |
|
Posted by: சாமி - 09-28-2003, 08:13 PM - Forum: தமிழும் நயமும்
- Replies (5)
|
 |
புறநானூறு முதல் இருநூறு பாடல்களை எளிமைப்படுத்தி முன்னுரையுடன் கொடுத்திருந்ததும், உயிர்மை பதிப்பகம் பிரசுரித்ததும் உங்களுக்கு நினைவிருக்கலாம். இப்போது பிற்பாதியான இருநூறு பாடல்களின் முடிவுவரை வந்துவிட்டேன். இப்பாதியில் குறிப்பிடத்தக்க பாடல்கள் இருந்தாலும், தனிப்பாட்டு 310ம் பாடலைக் கொஞ்சம் தனிப்படுத்திச் சொல்ல விரும்புகிறேன். இதைப் பற்றி ஏ.கே.ராமானுஜன் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். 1983ல் யாழ்ப்பாணத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசியபோது, இந்தப் பாடலை இயல்பாக மேற்கோள் காட்டியபோது பாதியில் கூட்டமே மௌனமாக சற்று உறைந்து போனதாம். காரணம்? பாடலைப் பாருங்கள்.
பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சி,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர் நிறங் கொண்ட களிறட்டு ஆனான்,
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே!
5
உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
மான்உளை அன்ன குடுமித்
தோல் மிசைக் கிடந்த புல்அண லோனே!
* * *
பால் உண்ணப் பிடிவாதம் பிடித்தபோது
இவன் தாய் கோபித்தவளைப்போல கோலை உயர்த்த
பயந்து சாப்பிட்டான்.
போரில் இப்போது யானைகளைக் கொன்¢றவன்
மார்பில் அம்பு தைத்திருப்பதைக் காட்ட
கவனிக்கவில்லை புண் என்று நினைத்தேன் என்றான்
குதிரையின் பிடரி போன்ற குடுமியும்
இளம்தாடியும் கொண்டவன்
புறநானூற்று இளைஞனுக்கும் - ஈழப்போராளிக்கும் இருக்கும் இத்தனை ஒற்றுமைதான் ராமானுஜனை பிரமிக்கவைத்தது. அந்தக் கூட்டத்தினரை திகைக்கவைத்தது. இந்தப் பாட்டு எந்தச் சூழ்நிலையில் எதற்காக எழுதப்பட்டது? இது உலக வழக்கா போன்ற பல கேள்விகள் எழுந்தாலும் இந்த அளவுக்கு இன்றைய யதார்த்தத்திற்கு அருகில் இருப்பது வியப்பே.
மான் உளை என்பதற்கு குதிரையின் பிடரி மயிர் என்றுதான் அர்த்தம். மானுக்கு பிடரி கிடையாது. சங்க காலத்தில் மா என்றால் கதிரை மான் என்றாலும் சிலசமயம் குதிரை. புறநானூறின் பிற்பகுதிப் பாடல்களில் மகட்பாற் காஞ்சி என்கிறவகையில் பல பாடல்கள் உள்ளன. மகளைக் கட்டிக்கொடுக்க தகப்பனோ, அண்ணன்மார்களோ மறுப்பதால் வரும் பிரச்னைகளைப் பற்றி ஊரார் கவலைப்படுவது. மேலும் சில பிரமிக்கத்தக்க உவமைகள் உள்ளன.
பாம்பு சட்டையை உரிப்பதுபோல் என் வறுமை நீங்கட்டும் என்கிறார் ஓர் ஏழைப் புலவர். வேங்கடம் இரண்டு பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளி venus கிரகம் பாதை மாறினால் நாட்டுக்குத் தீங்கு வரும் என்கிற நம்பிக்கை குறிப்பிடப்படுகிறது. மறைமுகமாக அதை நாங்கள் நம்பவில்லை என்று புலவர் சொல்லாமல் சொல்கிறார். (வெள்ளி எப்படிப் போனால் என்ன, எங்களுக்கு பரிசு கிடைத்துவிடும்!)
புறநானூறின் வற்றாத ஆச்சரியம் பிற்பாதியிலும் தொடர்கிறது. ஆனால் பல பாடல்கள் முழுமையாக இல்லை. பாட பேதங்களும் உள்ளன. விரைவில் நானூறு பாடல்களையும் ஒரு புத்தகமாக 'உயிர்மை' பதிப்பிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். முதல் இருநூறு விற்றுத் தீர்ந்தது மற்றொரு வியப்பு.
- சுஜாதா
ந்ன்றி: அம்பலம்.கொம்
|
|
|
| இது ஒரு சமூக விடுதலை |
|
Posted by: சாமி - 09-28-2003, 07:58 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
பெண்களை விட உடற்கூற்றியல்hPதியான ஆண்கள் பலமானவர்கள்தான். எனினும் வேலைகளை இலகுவாக்கும் பல கண்டுபிடிப்புக்களை அவர்களே செய்கின்றார்கள். தங்களது பணிகளை விரைவாகச் செய்து முடித்துவிட்டு மிகுதி நேரங்களை உலலாசமாகக்செலவிடவே அவர்கள் விரும்புகின்றனர். ஆனால் பெண்கள் அப்படியல்ல. முதலாளித்துவப்பொருளாதாரத்தில் அவர்களது பொறுமை காரணமாக அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.
முழுமையாகப் பார்க்க - http://www.nilavu.com/content/mangai/1/m1.htm
|
|
|
| குதிரை-பாம்பு-நண்டு- வாத்து-முயலுக்கு திருமணம் உலக அமைதி வேண |
|
Posted by: சாமி - 09-28-2003, 07:45 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
குதிரை-பாம்பு-நண்டு- வாத்து-முயலுக்கு திருமணம் உலக அமைதி வேண்டி சென்னையில் நடந்தது
முயல், நண்டு, எலி, வான்கோழி ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடத்தி வைத்தபோது எடுத்தபடம்.
சென்னை, செப். 29- குதிரை, கழுதை, பாம்பு, நண்டு, வாத்து, முயலுக்கு உலக அமைதி, மழைவேண்டி நேற்று சென்னையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
திருமணம்
உலக அமைதி, மக்கள் வளம்,நலம் பெற வேண்டியும், மழை வேண்டியும் சென்னை கே.கே.நகர் மல்டி விநாயகர் கோவில் வளாகத்தில் நேற்று 18 வகை பட்சி மிருகாதி ஜுவராசிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சியும், 2 ஏழை ஜோடிகளுக்கு சீர்வரிசை தந்து திருமணம் மற்றும் 80 வயது முடிந்த முதியவர்ஜோடி ஒன்றுக்கு சதாபிஷேகமும் நடைபெற்றது. வாஸ்து நிபுணர் ஆர்.கே.பகவதிராஜ; இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
பூனை-எலி
முதலில் சதாபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 2 ஏழை ஜோடி களுக்கு திருமணம் நடந்தது. தொடர்ந்து குதிரை, கழுதை, மாடு, நாய், வாத்து, வான் கோழி, முயல், பாம்பு, பூனை, எலி, கவுதாரி, குரங்கு, மீன், நண்டு, காகம், உடும்பு, கிளி, பன்றி ஆகியவை ஜோடி ஜோடியாக மேடைக்கு கொண்டு வரப்பட்டன. பொழிச்சலூர் வாசுதேவன் மந்திரங்கள் ஓதி அவற்றிற்கு தாலி கட்டினார். அப்போது கெட்டிமேளம் முழங்கியது. அங்கு கூடியிருந்து ஆயிரக்காணவர்கள் மஞ்சள் அரிசி தூவி வாழ்த்தினார்கள்.
சண்டி ஹோமம்
முன்னதாக அதிகாலை 5.30 மணி அளவில் வாஸ்து, கணபதி, சண்டி ஹோமங்களும், கோமாதா பூஜை, கஜ பூஜை, அஸ்வபூஜை ஆகியவையும் நடைபெற்றன. இதற்காக சூரிய வடிவில் யாக சாலை அமைக்கப்பட்டது. 52 ஓதுவார்கள் அமர்ந்து மந்தி ரங்கள் ஓதினார்கள்.
இந்த விழாவில் சபாநாயகர் காளிமுத்து கலந்து கொண்டு உலக சமாதனம் வேண்டி 100 புறாக்களை பறக்கவிட்டார்.
வலம்புரிஜான் பேசும் போது, பூகம்பம் வருவதை கண்டுபிடிக்கும் கருவிகள் கூட இன்றைய தினம் தோல்வி அடைந்துவிட்டன. ஆனால் ஒருவகை நண்டு மட்டும் 18 மணி நேரத்துக்கு முன்பே பூகம்பம் வருவதை கண்டறிந்து கொள்கிறது. அத்தகைய நண்டை ஜப்பானில் தொட்டியில் வளர்க்கிறhர்கள் என்றார். திருவாடு துறை முத்துகுமாரதம்பிரான் சுவாமிகள், கருணாகரன் சுவாமிகள் மிருக திருமணம் பற்றி கூறும்போது, மிருக பட்சிகளை மனம் குளிர வைப்பதன் மூலம் நாட்டில் உணவு தானியம் பெருகும், மழை பெய்யும் இவை செழித்தால் மக்கள் நலமுடனும் வளமுடனும் வாழ்வார்கள். 2000ம் ஆண்டுகளுக்கு பிறகு இதுபோன்ற நிகழ்ச்சி இப்போது தான் நடைபெறுகிறது என்றனர்.
முன்னதாக கே.மனோகரி, பி.ராதாபகவதி குத்துவிளக்கு ஏற்றி மணவிழாவை தொடங்கி வைத்தனர். சண்டி ஹேhமத்தை ஆர்.கே. பகவதிராஜ; தொடங்கி வைத்தார். மலர், செல்வசீமான், பரமானந்தம் ஆகியோர் வரவேற்றனர். பட அதிபர் பி.டி.செல் வகுமார் நன்றி கூறினார்.
விழா முடிந்ததும் 1000 பேருக்கு திருமண விருந்து பரிமாறப்பட்டது.
நன்றி: தினகரன்
|
|
|
| இந்தியாவில் இனியும் ஜனநாயக ஆட்சி வேண்டுமா? |
|
Posted by: சாமி - 09-28-2003, 07:32 PM - Forum: செய்திகள்: உலகம்
- No Replies
|
 |
ப.சிவராமலிங்கம், நேதாஜி நகர், உசிலம்பட்டி யிலிருந்து எழுதுகிறார்: தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் சர்வாதிகாரப் போக்கு, காங்கிரஸ் கட்சியில் கேலிக்கூத்து, பா.ஜ.,வின் கோமாளித்தனமான நடவடிக்கை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பிற கட்சிகளின் நிலையில்லாத தன்மை, சுயநலப்போக்கு மற்றும் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள கட்சிகளின் பச்சோந்தி தனமான விபரீத கூட்டணி போன்றவற்றை பார்க்கும் போது நமது இந்திய நாட்டிற்கு இன்னும் ஜனநாயக (ஆட்சி) அரசியல் தேவைதானா என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்திய மக்களுக்கு ஏற்பட்ட கஷ்டம், துன்பங்களைக் காட்டிலும் தற்போதைய அரசியல்வாதிகளிடமும், அரசு ஊழியர்களிடமும் மக்கள் படும் கஷ்டங்கள் சொல்லி மாளாது.
கடந்த 50 வருடமாக நமது ராணுவத்தினரின் பாதுகாப்பு சேவைகள் யாராலும் மறக்க முடியாது. சீனப் போர், பாகிஸ்தான் போர், பங்களாதேஷ் போர், கார்கில் போர்களின் போது நமது ராணுவத்தினரின் வீரம், நமது இந்திய சரித்திரத்தில் பொன் எழுத்தில் இடம் பெற்றுள்ளது.
டில்லியில் குடியரசு சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் நமது ராணுவத்தினரின் கம்பீரம், கடமை உணர்வு, வீர நடையைப் பார்த்து வியப்படையாதவர்களே கிடையாது.
நமது இந்தியா முன்னேற வேண்டுமானால் லஞ்சம் இல்லாத ஊழல் இல்லாத, தொழில் வளமிக்க, விவசாயத்தில் தன்னிறைவு மற்றும் தொழில்நுட்பம், விஞ்ஞான வளர்ச்சி, கல்வி, வேலை வாய்ப்பு என்று எல்லா துறைகளிலும் முதன்மை நாடாக இந்தியா முன்னேற வேண்டுமானால் இந்தியாவில் உள்ள முக்கிய துறைகள் எல்லாம் ராணுவ கட்டுப்பாட்டில் தான் இனி இருக்க வேண்டும்.
எம்.எல்.ஏ., எம்.பி., தேர்வு கூட ராணுவத்தினரின் நேரடி விசாரணையின் பின்பு தான் போட்டியிட அனுமதி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் வரும் காலத்தில் அரசியல்வாதிக்கும், அரசு ஊழியர்களும், ரவுடிகளும், தாதாக்களும் மாவட்ட வாரியாக, தாலுகா வாரியாக இந்தியாவை பிரித்து கொள்ளையடித்து நாசப்படுத்தி விடுவர்.
அரசியல் சேர்ந்தவுடன் பத்து தலைமுறைக்கு சொத்து சேர்க்க வேண்டும் என அரசியல்வாதி கொள்ளையடிக்கிறான்.
அரசு ஊழியத்தில் சேர்ந்தவுடன் அரசு ஊழியர்கள் எப்படியெல்லாம் எவ்வளவு லஞ்சம் வாங்கி பணம் சம்பாதிக்க வேண்டும் என திட்டம் போடுகிறான்.
மனம் வேதனைப்பட்டு எழுதுகிறேன்... மாநிலத்தில் ஒரு கட்சியுடன் கூட்டு இல்லை என்றும் மத்தியில் கூட்டு உள்ளது என்றும், தமிழ்நாட்டு மக்களையெல்லாம் முட்டாள் என்று நினைத்து ஒரு கட்சியின் தலைவர் கூறுகிறார்.
எந்த அரசியல் கட்சி தலைவராவது கீழ்மட்ட மக்களைப் பற்றி சிந்தித்ததுண்டா? வரும் காலத்தில் வேலையில்லாத் திண்டாட்டம் இந்தியாவில் பூதாகரமாக வெடிக்கப் போகிறது. அதைக் காட்டிலும் தண்ணீர் பிரச்னை இன்னும் சில வருடங்களில் இந்திய மக்கள் குடிக்க நல்ல தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட வைக்கப் போகிறது! பார்லிமென்ட் கூட்டத் தொடரில் நடக்கும் கேலிக்கூத்துகள் சட்ட சபையில் நடக்கும் சர்க்கஸ் காட்சிகளைப் பார்க்கும் போது நமக்கு இன்னும் ஜனநாயகம் தேவைதானா என எண்ணத் தோன்றுகிறது.
நமது அரசியல் கொள்ளையர்களிடமிருந்தும், அரசு ஊழியர்களான லஞ்ச பேய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றிக் கொள்ள, இந்தியாவை ராணுவத்திடம் ஒப்படைத்தால் தான் கீழ்தட்டு மக்கள் நிம்மதி மூச்சுவிட முடியும்.
நன்றி: தினமணி
|
|
|
| 30 வயதில் வளர்ச்சி நின்று விடுகிறதா? |
|
Posted by: சாமி - 09-28-2003, 07:29 PM - Forum: மருத்துவம்
- No Replies
|
 |
"மனிதனின் இள வயதிலேயே, அதாவது முப்பது அல்லது அதற்கு முன்பாகவே, அவனது தனி மனித பண்புகளில் மாற்றம் ஏற்படுவது நின்று விடும்படியாக அவனது ஜீன்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன'', என்பது ஒரு பரவலான கருத்து. ஆனால், அவ்வாறு இல்லை என்கிறது அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு (ஏ.பி.ஏ.,) .
* இவர்கள் நடத்திய சமீபத்திய ஆராய்ச்சியின் மூலம் மனிதனின் பண்புகள் அவனது வாழ்நாள் முழுவதும் மாறி கொண்டே தான் இருக்கின்றன என்று கண்டறிந்துள்ளன. மனிதனின் வாழ்நாள் முழுவதும், அவனது குணங்களில் ஒரு சிறிய மாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கும் என்கிறது இவ்வாராய்ச்சி. இருபத்தியொன்றிலிருந்து அறுபது வயது வரை உள்ள ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 514 பேரிடம் அவர்களது ஒத்துக் கொள்ளும் மனம், நரம்பியல் குணங்கள், வெளிப்படையான தன்மை மற்றும் விழிப்புணர்வு போன்றவற்றை ஆராய்ந்தனர் இவ்வாராய்ச்சியில் சஞ்சய் ஸ்ரிவாஸ்தவா, பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆலிவர் ஜான் போன்றவர்கள் நடுத்தர வயதிலும் மாற்றம் ஏற்படுவதாக கண்டுபிடித்துள்ளனர்.
* ஒரு மனிதனின் இருபது வயதுகளில் அதிகமாக இருக்கும் விழிப்புணர்வு தன்மை அவனது வாழ்நாள் முழுவதும் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இது மனிதனின் பொறுப்புணர்ச்சி, சரியான நடவடிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை வைத்து கணக்கிடப்பட்டது. முப்பதுகளில் மிக அதிகமாக அதிகரிக்கும் ஒத்து கொள்ளும் மனப்பாங்கு மனிதனின் தாரளமான, அன்பான உதவிகரமான நடவடிக்கைகள் மற்றும் பிறரிடம் கொண்டுள்ள உறவுகளை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது.
* பெண்களின் நரம்பியல் குணங்கள் வயது ஏற ஏற குறைந்து கொண்டே போனது. ஆனால், ஆண்களில் அது குறையவில்லை. மனதளவில் நிலையற்ற தன்மையினையுடையவர்களை வைத்து இது கண்டறியப்பட்டது. மன அழுத்தம் மற்றும் பிற உடல் நலக் கோளாறுகளுடன் இது தொடர்புடையது.
ணி வெளிப்படையாக இருக்கும் தன்மை ஆண்களிலும், பெண்களிலும் வயது ஏற ஏற குறைந்து கொண்டே போகிறது. இது போன்று பல தனிமனிதப் பண்புகளை பற்றி ஆராய்ந்த அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு, மனிதன் பண்புகள் அவனது வாழ்நாள் முழுவதும் மாற்றமடைந்து கொண்டே இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்துள்ளன.
நன்றி: தினமணி
|
|
|
| TRT Tamil oli/TTN |
|
Posted by: yarl - 09-28-2003, 12:53 PM - Forum: குறும்படங்கள்
- Replies (38)
|
 |
இந்த வானொலி பற்றி அதிகம் பலர் அலட்டிக்கொள்வதில்லை.ஆனால் அமைதியாக தனது முறையில் பயணித்துக்கொண்டிருக்கிறது.வாழ்த்துக்கள்
விடயத்திற்கு வருகிறேன்
நேற்று தற்செயலாக இந்த வானொலியில் ஒரு நாடகம் கேட்டேன் பெயர் விடிவெள்ளி.
குறும் படத்திற்கான சகல அம்சங்களும் கொண்டிருந்தது.தூரதிர்ஸ்டவசமாக அது வானொலி வடிவம் கொண்டிருந்தது என நினைக்கத்தோன்றியது.
மிக அருமையான கதை இயக்கம்.
எழுதியவர் பெயரும் இயக்கமும் அவசரமாக கூறியபடியால் கிரகிக்கமுடியவில்லை.தயாநிதி கல்லாறு சதீஸ் என பெயரடிபட்டதாக ஞாபகம்
குறும்பட விற்பனர்கள் அஜீவன் கண்ணன் போன்றோர் இந்தக் கதையை பாPசீலித்து
இதை குறும்படமாக்கவேணடும்.
இதற்கு ரிரிஎன் போன்ற ஊடகங்களும் ஒத்துழைக்கவேண்டும்
எம்மவர்களை நதிமுhலம் ரிசிமுhலம் பார்க்காமல் ஈழவர் என பார்த்து ஊக்குவிப்போம்.
செய்வார்களா?
|
|
|
| கனவுகள் பலிக்குமா ? |
|
Posted by: Paranee - 09-27-2003, 03:18 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (5)
|
 |
கனவுகள் பலிக்குமா ?
நான் நேற்றிரவு கனவுகண்டேன். ஏதோ ஒரு வார்த்தை nஐயலலிதா அம்மாவைப்பற்றி தவறாக கூறியமைக்காக என்னை கைதுசெய்வதாக.. இன்று ஆனந்தவிகடன் பார்த்தபோது வை.கோபால்சாமி அவர்கள் தான் கைதுசெய்யப்படப்போவதாக சிக்காகோவில் பறந்துகொண்டிருந்தபோது கனவுகண்டதாக கூறியுள்ளார். எங்கேயோ உதைக்கின்றது
|
|
|
| இப்படியும் நடக்கிறது... |
|
Posted by: kuruvikal - 09-27-2003, 12:04 PM - Forum: பொழுதுபோக்கு
- Replies (19)
|
 |
<img src='http://thatstamil.com/images14/thaali-60.jpg' border='0' alt='user posted image'>
300 பெண்களின் தாலிகளுடன் கோவில் பூசாரி எஸ்கேப்!
மாங்கல்ய பூஜை என்ற பெயரில் 300க்கும் மேற்பட்ட பெண்களிடம் தாலியை வாங்கிய கோவில் பூசாரி அவற்றை அடகு வைத்து விட்டு லட்சக்கணக்கான பணத்துடன் தலைமறைவாகி விட்டார்.
கடலூர் மாவட்டம் வடலூல் சீதாராமன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் பூசாரியாக இருந்து வந்தவர் லட்சுமி நரசிம்மன். இவர் கோவிலுக்கு வரும் பெண்களிடம், ராமர் பாதத்தில் உங்களது தாலிகளை 48 நாட்கள் வைத்து பூஜை செய்தால், தோஷம் அனைத்தும் விலகி சுபிட்சம் பெறுவீர்கள் என்று கூறியுள்ளார்.
பூசாரியே சொல்லியதால் பெண்கள் தங்களது தாலிகளை கழற்றிக் கொடுத்துள்ளனர். கழுத்தில் மஞ்சளைக் கட்டிக் கொண்டனர். தாலிச் சரடும் தங்கத்தில் இருந்தால் அவற்றை செயின்களோடு சேர்த்து வாங்கியுள்ளார். இதில் பெரும்பாலான பெண்கள் தங்களது கணவருக்குத் தெரியாமல் தாலியைக் கழற்றித் தந்துள்ளனர்.
தாலியைத் தர தயங்கிய பெண்களிடம், கணவருக்கு தோஷம் இருப்பதாகவும் பூஜை செய்யாவிட்டால் அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்றும் மிரட்டியுள்ளார். இப்படியாக சுமார் 300 பெண்களில் பல சைஸ்களில் மாங்கல்யத்தை வாங்கியுள்ளார்.
இந்தத் தாலிகளுக்கு பூஜை நடப்பதாக பூசாரி கூறியதால், தினமும் பெண்கள் வந்து அவர் தந்த பூவை மட்டும் வாங்கிச் சென்றனர். நெடுநாட்களாக பூஜை நடப்பதாகவே அவர் கூறிக் கொண்டிருந்தால் சந்தேகமடைந்த சில பெண்கள் தங்களது கணவன்மார்களிடம் விஷயத்தைக் கூற, அவர்கள் பூசாரியின் வீட்டுக்குள் புகுந்து தர்ம அடி தந்து தாலியை மீட்டுச் சென்றுள்ளனர்.
இந் நிலையில் திடீரென்று பூசாரி லட்சுமி நரசிம்மனின் வீடு பூட்டிக் கிடந்தது. தனது குடும்பத்துடன் அவர் தலைமறைவாகியிருந்தார்.
அப்போது தான் அவர் 300 தாலிகளுடன் எஸ்கேப் ஆனதும், அந்தத் தாலிகளை ஒரு அடகுக் கடையில் வைத்து பணம் பெற்றுக் கொண்டு ஊரை விட்டு காலி செய்ததும் தெரியவந்தது.
தாலியைக் கழற்றிக் கொடுத்தவர்களில் நெய்வேலி மின் கழக உயர் அதிகாரிகள் சிலரின் மனைவிகளும் அடக்கம் என்று கூறப்படுகிறது. அந்த அடகுக் கடை ஆசாமிக்கும் பூசாரிக்கும் லிங்க் இருக்கலாம் என்று தெரிகிறது.
தங்களது கணவர்களுக்கு இந்த விஷயம் தெரியாது என்பதால், இதுவரை தாலியை இழந்த பெண்கள் யாரும் நேரடியாக காவல் நிலையத்தில் புகார் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
புகார் வந்தால் தான் நாங்கள் ஏதாவது செய்ய முடியும் என்கின்றனர் போலீசார்.
தகவல் தற்ஸ் தமிழில் இருந்து பிரதி எடுக்கப்பட்டது...!
உதவி சுரதாவின் பொங்குதமிழ்...!
|
|
|
| மின்தாள்களும் தாள்திரைகளும் |
|
Posted by: Mullai - 09-27-2003, 11:55 AM - Forum: கணினி
- No Replies
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>மின்தாள்களும் தாள்திரைகளும்.</span>
மின்தாள்களும் தாள்திரைகளும்.
இன்றைக்கு Nature என்ற முன்னனி அறிவியல் சஞ்சிகையில் வெளியாகியிருக்கும் ஒரு ஆய்வுக் கட்டுரை என்னைக் கவர்ந்திழுத்தது. சாதாரண காகிதத் தாளை ஒத்த அமைப்பில் கணினி (மற்றும் பிற மின்சாதனங்களுக்கான) விழியத் திரை இப்பொழுது சாத்தியமாகியிருக்கிறது.
<img src='http://www.nature.com/nsu/030922/images/eink_180.jpg' border='0' alt='user posted image'>
One display device could hold an entire library.
© Philips Electronics
நெதர்லாந்து நாட்டின் பிலிப்ஸ் (ஆமா, நம்ப ஊர்ல ரெண்டு பாண்ட் டிரான்சிஸ்டர் விப்பாங்களே, அவுகதான்) ஆராய்சிக்கூடத்தில் கண்டுபிடிக்கப்பட இது ஒரு சராசரி தாளைப் போலத்தான் இருக்கும், ஆனால் இதில் சலனப்படங்களைப் பார்க்க முடியும்.
சில மாதங்களுக்கு முன் அமெரிக்காவின் இ-இங்க் என்னும் நிறுவனம், மின்துளைபரவல் (electrophoresis) என்னும் கருத்தின் அடிப்படையிலான மின்தாள்களைத் தயாரிப்பதைப் பற்றி அறிவித்தது. இம்முறையில் நேர் மற்றும் எதிர் மின்தூண்டலுக்கு உள்ளாகும் நுண்துகள்கள் தாளின் (பாலிமர் பரப்பு) மேற்பரப்பை நோக்கி இழுக்கப்பட்ட, பரப்புக்கு அருகில் வரும் கருப்புத் துகள்களினால் தாளில் எழுத்துக்கள் உருவாகிறது. எழுத்துக்களின் அமைப்பை கணினித் திரைகளை இயக்கும் விடியோ இயக்கி (video driver) மூலம் இயக்க, தாளில் மாறுபடும் எழுத்துக்களை அச்சிடமுடியும் என்று நிரூபித்தார்கள். இம்முறையைப் பயன்படுத்தினால், ஒரு முழுப் புத்தகத்தை (கம்பராமாயணம் முழுக்க) ஒரு தாளிலேயே அடக்கிவிட முடியும்.
<img src='http://www.nature.com/nsu/030922/images/colour_170.jpg' border='0' alt='user posted image'>
Full-colour displays can be made
with three sub-pixels of yellow, cyan and magenta.
© Hayes & Feenstra
ஆனால் இம்முறையைக் கொண்டு அதிவேக மாறுபாடுகளைக் கொண்ட சலனப்படங்களைக் காட்டமுடியாது. இதற்கு முக்கிய காரணம், மின்துளைபரவல் மிகவும் மெதுவான செயல் (கிட்டத்தட்ட மில்லிநொடிகள் தேவை). இன்றைக்கு பிலிப்ஸ் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவின்படி வண்ணத்தில் சலனப்படங்களைத் தாளில் காட்டுவது சாத்தியமாகியிருக்கிறது. இது அடிப்படையில் மின்ஈரமாக்கல் (electrowetting) என்னும் கருத்துப்படி அமைந்தது. இம்முறையில் துகள்கள் (தின்மப்பொருள்கள்) கிடையாது. இது எண்ணைய் போன்ற திரவத் திட்டில் நிறங்களைக் கொண்ட பல்வேறு சாயங்கள் (dyes) நகர்ந்து பரப்புக்கு வருவதால் சாத்தியமாகிறது. தின்மத் துகள்களைக் காட்டிலும், திரவங்களை மிக எளிதில் நகர்த்தலாம். மேலும் இத்தகைய இயக்கம் மின்துளைபரவலைவிட வேகமாக நிகழ்கிறது.
பிலிப்ஸ் விஞ்ஞானிகள் இம்முறையைப் பயன்படுத்தி மூவண்ணத் திரை (தாள்திரை) இயக்கிக்காட்டியிருக்கிறார்கள். நெருக்கமாக அமைக்கப்பட்ட துணைபடக்கலம் (subpixel) மூன்றில் அடிப்படை நிறங்கள் மூன்றையும் மின்ஈரமாதல் முறையில், வெவ்வேறு விகிதங்களில் தாளின் மேற்பரப்புக்குக் கொண்டுவர நெருங்கிய இவை கலவையாகி நம் கண்ணுக்குப் பல வண்ணங்களையும் காட்டுகின்றன. (இதே முறையில்தான் தற்பொழுது மடிக்கணினிகளில் திரவப்படிகங்கள் (liquid crystal, LCD) அமைக்கப்பட்டுவருகின்றன. ஆனால் மூன்று வேறு துணைபடக்கலங்கள் இருப்பதால் நேர் குத்தாகப் பார்க்காமல் கண்களைச் சாய்த்துப் பார்க்கும்பொழுது இடமாற்றுத் தோற்றப்பிழை (parallax error) ஏற்படுகிறது. புதிய கண்டுபிடிப்பில் சாயங்கள் எல்லா கோணங்களிலும் பிரகாசமாக இருப்பதால் இந்தப் பிழை தவிர்க்கப்படுகிறது).
இது அடிப்படை ஆராய்ச்சி முடிவுதான், இதிலிருந்து தொழில்நுட்பமாக வடிவெடுத்துக் கருவியாக பரிணமிக்க நிறைய நாட்கள் ஆகலாம். ஆனால், ஆய்வக நிலையிலேயே இது நடைமுறைத் தொழில்நுட்பத்தைவிட மேம்பட்டதாக நிகழ்த்திக் காட்டப்பட்டிருப்பது விரைவில் சந்தைக்கு வரலாம் என்ற நம்பிக்கையைத் தருகிறது.
வந்த உடன் ஒன்று வாங்க வேண்டும். கழிவறை, படுக்கை, சாப்பாட்டு மேசை, மார்க்கெட்டிங் சந்திப்புகள், காலை இரயில் பயணம் என்று தினசரிக்கு ஒன்றுக்கு மேல் தேவைப்படும் என்றுதான் தோன்றுகிறது.
Hayes, R. A. & Feenstra, B. J. Video-speed electronic paper based on electrowetting. Nature, 425, 383 - 385, doi:10.1038/nature01988 (2003). Article
நன்றி- Venkat`s Weblog
|
|
|
|