![]() |
|
TRT Tamil oli/TTN - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: குறும்படங்கள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=51) +--- Thread: TRT Tamil oli/TTN (/showthread.php?tid=8074) Pages:
1
2
|
TRT Tamil oli/TTN - yarl - 09-28-2003 இந்த வானொலி பற்றி அதிகம் பலர் அலட்டிக்கொள்வதில்லை.ஆனால் அமைதியாக தனது முறையில் பயணித்துக்கொண்டிருக்கிறது.வாழ்த்துக்கள் விடயத்திற்கு வருகிறேன் நேற்று தற்செயலாக இந்த வானொலியில் ஒரு நாடகம் கேட்டேன் பெயர் விடிவெள்ளி. குறும் படத்திற்கான சகல அம்சங்களும் கொண்டிருந்தது.தூரதிர்ஸ்டவசமாக அது வானொலி வடிவம் கொண்டிருந்தது என நினைக்கத்தோன்றியது. மிக அருமையான கதை இயக்கம். எழுதியவர் பெயரும் இயக்கமும் அவசரமாக கூறியபடியால் கிரகிக்கமுடியவில்லை.தயாநிதி கல்லாறு சதீஸ் என பெயரடிபட்டதாக ஞாபகம் குறும்பட விற்பனர்கள் அஜீவன் கண்ணன் போன்றோர் இந்தக் கதையை பாPசீலித்து இதை குறும்படமாக்கவேணடும். இதற்கு ரிரிஎன் போன்ற ஊடகங்களும் ஒத்துழைக்கவேண்டும் எம்மவர்களை நதிமுhலம் ரிசிமுhலம் பார்க்காமல் ஈழவர் என பார்த்து ஊக்குவிப்போம். செய்வார்களா? - vaiyapuri - 09-28-2003 உண்மைதான் றேடியோக்கள்ல போற சில கதைகள் தரமானவை. ஆனாலும் பாருங்கோ நீங்கள் கேட்ட மாதிரி உதையெல்லாம் பாக்காம எங்கட மனுசாள் முன்னுக்கு வரமாட்டினம்... அதாவது மற்றவர்கள வளர்த்துவிட மாட்டினம்.. உண்மையான கலையார்வத்தோட எந்த வானொலியும் இல்லை எந்தத் தொலைக்காட்சியும் இல்லையென்டுதான் பாருங்கோ சொல்லோனும். இந்தியா டுடேயில நடிகர் மயில் சாமியின்ட டைமுக்கு காமெடி நிகழ்ச்சியின்ட புூர்விகம் போட்டிருக்கினம்...பாவமாக் கிடக்கு.. இன்டைக்கு சன் டிவியில சாமி 125 வது நாள் விழாவாம்...உந்த ரஜினி காந்து பேசைக்க.. அவன் எப்புடிப்பட்டவனாயிருந்தாலும் சொன்னாரு பாருங்க சில உண்மைகள... உது எங்கடை மீடியாக்காரங்களுக்கும் பொருந்தும்...! <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> எம்மவர்களை நதிமுhலம் ரிசிமுhலம் பார்க்காமல் ஈழவர் என பார்த்து ஊக்குவிப்போம். செய்வார்களா? <!--QuoteEnd--><!--QuoteEEnd--> Re: TRT Tamil oli/TTN - Mullai - 09-29-2003 [quote]யாழ்/yarl[/color] எம்மவர்களை நதிமுhலம் ரிசிமுhலம் பார்க்காமல் ஈழவர் என பார்த்து ஊக்குவிப்போம். செய்வார்களா? இது ஏறக்குறைய பூனைக்கு மணிகட்டுற வேலை மாதிரிரிரிரிரிரி... Re: TRT Tamil oli/TTN - AJeevan - 09-30-2003 [quote=Mullai][quote]யாழ்/yarl[/color] எம்மவர்களை நதிமுhலம் ரிசிமுhலம் பார்க்காமல் ஈழவர் என பார்த்து ஊக்குவிப்போம். செய்வார்களா? இது ஏறக்குறைய பூனைக்கு மணிகட்டுற வேலை மாதிரிரிரிரிரிரி... <img src='http://www.yarl.com/forum/files/tv.jpeg' border='0' alt='user posted image'> ஏலுமெண்டா இதுகளை மீடியாக்கள் வச்சுக் கொண்டிருக்கிறவைகள்ட காதில போடுங்கோ. இங்க எத்தினை கலைஞர்கள் இருக்கினம். யாரையாவது தேடிப் போனவையோ? இல்ல ஒரு போனாவது போட்டவையோ? இல்ல நீங்க ஏதாவது செய்து தாருங்கோ , அதுக்கான செலவை தாரம் எண்டு சொன்னவையோ? இங்க செய்யிற டீவி விளம்பரத்தயும் கூட அவனுக்கு குடுக்காதேங்கோ, அவன் செஞ்சா எங்கட டீவியில போட மாட்டம் எண்டு சொன்னவையும் இருந்தவை. ஒரு டீவிக்கில்ல இது எல்லாருக்கும்தான். ஒரு கலைஞனாயிருந்தா எங்கயும் போறதுக்கு சுதந்திரம் வேணும். அவங்களோட கதைச்சா இவங்களோடு கதைக்கிறது புடிக்காது. இவங்களோட கதைச்சா அவங்களோடு கதைக்கிறது புடிக்காது. உங்கட பிரச்சனையில நாங்கள் ஏனப்பா பலியாக வேணும்? நல்ல கலைஞனுக்கு கருத்துகளை முன் வைக்கிறதுக்கு நேர்மை வேணும். வழியிறவன் எப்பிடி மற்றவனுக்கு வழி சொல்றது? மணி ஆட்ட ஒண்டும் தேவையில்ல. இந்தியாவில போய் புறோகிறாம் வாங்கிறதுக்கு நதி மூலம் ரிசி மூலம் பாக்கிறவையாக்கும். <img src='http://www.galttech.com/spot/wallpaper.jpg' border='0' alt='user posted image'> முகம் தெரியாதவங்களத் தேடிப் போறதுக்கு வழி தெரியுதாம். முத்தத்தில நிக்கிறவனத் தெரியயில்லையாம்.காலம் வரும் ஆச்சி............ ஏறக்குறைய பூனைக்கு மணிகட்டத் தேவையில்ல, அது அப்பிராணி. கட்ட வேண்டியவங்களுக்கு........... மணி கட்டிற நேரம் தேவையானதை கட்டிக் கொள்ளட்டும். உலகம் உருளும் ஆச்சி......... உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம். அஜீவன் - Mathivathanan - 09-30-2003 <img src='http://www.gogalt.com/wallpaper/small/pumpkins.jpg' border='0' alt='user posted image'> முழுப்பூஷணிக்காய் தேடுவாரற்றுக்கிடக்கு. யாராவது மறைச்சாவது வையுங்கோ.. அழுகி மணக்கும்வரை அல்லது கிடாரங்களும் அரிசியும் தயார்பண்ணுங்கோ.. கொஞ்சமெண்டாலும் மறைக்கலாம். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->படம் மாறிய காரணத்தால் கருத்துக்கானபடம் தேடிப்பிடித்து போடப்பட்டுள்ளது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Re: TRT Tamil oli/TTN - yarl - 09-30-2003 முகம் தெரியாதவங்களத் தேடிப் போறதுக்கு வழி தெரியுதாம். முத்தத்தில நிக்கிறவனத் தெரியயில்லையாம்.காலம் வரும் ஆச்சி............ Re: TRT Tamil oli/TTN - nalayiny - 09-30-2003 <!--QuoteBegin-AJeevan+-->QUOTE(AJeevan)<!--QuoteEBegin--> ஒரு டீவிக்கில்ல இது எல்லாருக்கும்தான். ஒரு கலைஞனாயிருந்தா எங்கயும் போறதுக்கு சுதந்திரம் வேணும். அவங்களோட கதைச்சா இவங்களோடு கதைக்கிறது புடிக்காது. இவங்களோட கதைச்சா அவங்களோடு கதைக்கிறது புடிக்காது. உங்கட பிரச்சனையில நாங்கள் ஏனப்பா பலியாக வேணும்? நல்ல கலைஞனுக்கு கருத்துகளை முன் வைக்கிறதுக்கு நேர்மை வேணும். வழியிறவன் எப்பிடி மற்றவனுக்கு வழி சொல்றது? . உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம் உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம். அஜீவன்<!--QuoteEnd--><!--QuoteEEnd--> நியாயமான மனக்கொதிப்பு. - veera - 09-30-2003 அஜீவன் சொல்வதில் உண்மையிருக்கின்றது. ஆனாலும் அதையும் தாண்டிய இன்னுமொரு உண்மை இருக்கிறது. அதாவது எப்படிப்பட்ட கலைஞர்களுக்கு இவ்வகையான புறக்கணிப்புக்கள் அதிகமாக வருகின்றன என்றால்,அது இரண்டு வகையினர்க்கு. அதாவது அடிப்படையில் நிறையத் திறமைகள் இருக்கும்,ஆர்வ மிகுதி,திறமைக்கு இடம் கிடைக்கவேண்டும் என்ற அவா கொண்டவர்கள் மற்றையது மிக முக்கியமாக வளர்ந்த கலைஞர்கள். அதாவது இவர்கள் தமது துறையிலே தனித்துவத்தைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அல்லது இவர்களை ஆதரித்துப் பலன் பெறும் பக்குவம் நமது ஊடகங்களிடம் வெகு குறைவாகவே காணப்படுகின்றது. இதுவே பின்னர் அவர்களாகவே அவர்களுக்கென ஒரு ஊடகத்தை அல்லது வழியை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்ற நிலையை உருவாக்குகிறது. அதாவது அஜீவன் என்ற திறமைசாலியை மற்றவகள் ஆதரிக்கத் தவறுவதனால் யாருடைய தயவுமின்றி தன்னைத் தானே உலகக்கு அடையாளம் காட்டவேண்டிய நிர்ப்பந்தம் அஜீவனுக்கு உருவாகின்றது. உண்மையில் இதற்கு யார் காரணம் அஜீவன்? கலைஞர்களா?ஊடக நிர்வாகங்களா? - nalayiny - 09-30-2003 யாருமே பொறுப்பல்ல. திறமை உடையவர்கள் எப்படியாவது மிளிரத்தான் செய்வார்கள். சுூரியனின் வெளிச்சத்தை யாருமே மறைத்து விட முடியாது. இத்தகைய தனித்துவம் கூட ஒரு பெருவெற்றியே படைப்பாளிக்கு. ஒரு கலைஞனை கட்டிப்போட நினைப்பது பெரும் தவறு. அவனை சுயமாக இயங்க விடுவதே சிறந்த படைப்புக்கு வழிகோலும். அடுத்து ஒரு உண்மையான கலைஞன் ஒரு கூட்டுக்குள் தன்னை ஒருபோதும் முடக்கிக்கொள்ள விரும்பான். வேண்டுமானால் எல்லோரையும் துறந்து தனித்து வாழத்துணிவான். - veera - 09-30-2003 திருமதி நளாயினி அவர்கள் எழுதியதில் பெரிய தத்துவமே உள்ளது. <!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin--> ஒரு உண்மையான கலைஞன் ஒரு கூட்டுக்குள் தன்னை ஒருபோதும் முடக்கிக்கொள்ள விரும்பான். <!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆனால் ஒவ்வொரு கலைஞனுக்கும் அவன் மிளிர்வதற்கும் ஒரு தளம் வேண்டுமே அதற்கென்ன செய்வது? திறமையுடையவர்கள் எப்படியாவது மிளிர்வது தான் இன்றைய நிலையாயிருக்கிறது..கண்டறிந்து களம் கொடுப்பதற்கு ஆளில்லையே? - kuruvikal - 09-30-2003 அநுபவங்களே ஒரு மனிதனை முழு மனிதனாக்குகிறது...அநுபவம் தகுந்த முறையில் உணரப்பாட்டால் அன்றில்.....?! அதுதான் ஊடகங்களுக்கும்....! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- veera - 09-30-2003 புலம் பெயர் நாட்டிலிருக்கும் எந்த ஊடகங்களிடமும் இப்படியான சிந்தனை இருப்பதாகத் தோன்றவில்லை. அனுபவங்கள் பாடங்களாக மாற்றப்பட்ட காலமெல்லாம் பறந்து போச்சு. இப்போதெல்லாம் கமல் போனால் விமல் வருவான் என்ற நினைப்பிருக்கிறது.. யாருக்கு யார் எடுத்துச் சொல்லியும் பிரயோசனமில்லை. - Mathivathanan - 09-30-2003 நீங்கள் சொல்லுறதெல்லாம் சரியப்பா.. உந்தத் திறமையை நிர்ணயிக்கிறது யார்..? எது..? எப்படி..? எப்போது..? எதிர்க்கருத்து எழுதவே வெட்டுவன் கொத்துவன் சுடுவன் முடிப்பன் எண்டு கத்திறான். முகஸ்துதி செய்து உண்மைக்குப் புறம்பாக எழுத தலைக்குமேல் தூக்கி வைத்து நீ கடவுள் எண்டுறான். சரியோ பிழையோ என்னதான் செய்தாலும் தலைக்குமெலை தூக்கிவைச்சுக் கொண்டாடினால்ச் சரி.. பலம்.. ஆதரவு.. சார்பு.. இதுகளுக்குத்தானே இப்ப முதலிடம் கொடுக்கிறறான். நல்லதுக்குக் காலமில்லை. ஊட்டிய நஞ்சு இப்பத்தானே வேலைசெய்யத்தொடங்கியிருக்கிறது. இனி இதுதான் எப்போதும். நமது தலைவிதியை மாற்றமுடியுமா..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->எப்படியாயினும் திறமைக்கு முதலிடம் கொடுக்கும் அன்னியன் தேர்ந்தெடுத்து வளர்க்கவேண்டியதை வளர்ப்பான் அதில்முழுநம்பிக்கை எனக்குண்டு. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- veera - 09-30-2003 திறமைகளை நிர்ணயிப்பது யார் என்பதற்கு யாரிடமும் விடை தேடிப்பயனில்லை. திறமைகள் என்பது ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஒரு கொடை.அது எந்தத் துறையில் வேண்டுமென்றாலும் இருக்கலாம். கருத்துக்களுக்கு எதிர்க்கருத்து எழுதும் எழுத்துத்துறையிலும் அடக்கியாளும் தன்மை நிலவுவதை மறுக்கவே முடியாது. ஒவ்வொரு ஊடகமும் தங்களுக்கென்றொரு தனித்துவத்தைப் பேணுவதாகக் கூறிக்கொண்டு கலைஞர்களை பலிகொள்கிறது என்பது திரு மதிவதணன் கருத்துக்களிலிருந்தும் தெளிவாகிறது. ஆனாலும் தலைவிதியை மாற்ற முடியுமா என்பது சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் தான்! - nalayiny - 09-30-2003 எழுத்துலக்த்தோடும் எம்மைச்சுூழவுள்ள அரசியல் நிலமைகளோடும் போராடித்தான் பெறவேண்டி உள்ளது. தளம் இல்லை என நினைத்தால் அது பலவீனம். தளங்களை எம்வசமாக்கி மிளிர்வது கெட்டித்தனம். எந்த ஒரு சந்தற்பத்திலும் ஒரு உண்மையான படைப்பாளி தோத்துப்போனதாய் சரித்திரமில்லை. சாவின் பின்னாவது பேசப்பட்டதாய் தான் வரலாறு உள்ளது.பெரும்பாலும் உண்மைகள் பலருக்கு கசப்பைத்தான் தருகிறது. veera Wrote:ஆனால் ஒவ்வொரு கலைஞனுக்கும் அவன் மிளிர்வதற்கும் ஒரு தளம் வேண்டுமே அதற்கென்ன செய்வது? - nalayiny - 09-30-2003 இன்றய ஈழத்தமிழ் படைப்பாளிகளின் கருத்தை அழகாக எடுத்து சொல்லி இருக்கிறியள்.உங்கடை 7 எச்சரிக்கையும் வீண் எண்டது இப்ப புர்pயுது.தலைவிதி கூட மாறும் மாத்தி எழுதப்படும் கவலை வேண்டாம்.எவ்வளவு காலத்துக்கு தாளம் போடுவினம்.?தாளம்போட்டு களத்தை நிர்வகிப்பது போலவோ என்னவோ? இதுக்கை நீங்கள் பொறுக்கி எடுத்து விளங்கி கொள்ளுவியள் என நினைக்கிறன். Mathivathanan Wrote:நீங்கள் சொல்லுறதெல்லாம் சரியப்பா.. உந்தத் திறமையை நிர்ணயிக்கிறது யார்..? எது..? எப்படி..? எப்போது..? - veera - 09-30-2003 nalayiny Wrote:எழுத்துலக்த்தோடும் எம்மைச்சுூழவுள்ள அரசியல் நிலமைகளோடும் போராடித்தான் பெறவேண்டி உள்ளது. தளம் இல்லை என நினைத்தால் அது பலவீனம். தளங்களை எம்வசமாக்கி மிளிர்வது கெட்டித்தனம்தான் வரலாறு உள்ளது.பெரும்பாலும் உண்மைகள் பலருக்கு கசப்பைத்தான் தருகிறது. ஒரு கலைஞன் வாழும் போது அடைய முடியாததை இறப்பின் பின்னர் அடைவதில் திருப்தி காண்பதென்றால் ஏன் இந்தப் போராட்டங்களெல்லாம்.. என்றாவது நம் பெயர் சொல்லட்டும் என்று அனைத்து கலைஞர்களும் ஒதுங்கி விடலாமே? அனைவரும் ஒதுங்கி நின்றாலும் கூட நான் ஏற்கனவே சொன்னது போன்று கமல் போனால் விமல் வந்து இடத்தை நிரப்பும் நிலைதான் வருமேயொழிய திறமைசாலிகளின் திறமைகள் இறதியில் ஏட்டுச் சுரக்காய் தான். திருமதி நளாயினி எழுதியதில் இருந்து நான் சுட்டிக்காட்டியுள்ள விடயங்களில் சிலவற்றுடன் ஒத்துப்போகலாம் ஆனால் ஒட்டு மொத்தமாக நடப்பது நடக்கட்டும் என்று ஒதுங்கிவிடும் நிலை... எனும் விதியை மாற்றியெழுதுங்கள்! அதற்காக ஏதும் வழியுண்டா என்று பாருங்கள். - AJeevan - 09-30-2003 <span style='color:red'><b>குமுறும் நெஞ்சங்கள்.............</b> யாழ்/yarl Wrote:<b>எம்மவர்களை நதிமூலம் ரிசிமூலம் பார்க்காமல் ஈழவர் என பார்த்து ஊக்குவிப்போம். Mullai Wrote:<img src='http://www.indianchild.com/images/oldlady.gif' border='0' alt='user posted image'> Mathivathanan Wrote:<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/cartoon_futurama_farnsworth.gif' border='0' alt='user posted image'> veera Wrote:<img src='http://www.yarl.com/forum/files/veera.1.gif' border='0' alt='user posted image'>உண்மை ,தாண்டிய இன்னுமொரு உண்மை இருக்கிறது. nalayiny Wrote:<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/peace.gif' border='0' alt='user posted image'> veera Wrote:<img src='http://www.yarl.com/forum/files/veera.1.gif' border='0' alt='user posted image'> veera Wrote:<img src='http://www.yarl.com/forum/files/veera.1.gif' border='0' alt='user posted image'> Mathivathanan Wrote:<img src='http://www.yarl.com/forum/images/avatars/gallery/general/cartoon_futurama_farnsworth.gif' border='0' alt='user posted image'> இந்த இதயக் குமுறல்களில் உண்மையான வேதனைகளைக் காண முடிகிறது. என் இதயத்தை வருடிய பகுதிகளைத் தேர்வு செய்து அலங்கரித்திருக்கிறேன். இது ஒன்றும் அலங்கார வளைவல்ல. வளையாத சிலர் சிந்திக்க வேண்டிய அழகுத் தேர்வுகள்............... மேலே இருப்பவற்றை தட்டிக் கழிக்க மனசாட்சியுள்ள எவராலும் முடியாது. எமது ஊடகங்கள் உருப்பட வேண்டுமானால் ஒரு மூலமும் பார்க்காமல் எங்கு திறமைசாலிகள் இருக்கிறார்களோ அவர்களை வரவேற்று அவனது படைப்புகளுக்கான செலவுகளை , அவனது ஊதியத்தை சரியான நேரத்தில் கொடுக்க கூடிய தகமையை உருவாக்க வேண்டும்.இவர்கள் ஓசியிலேயே பேப்பர் வாசித்த கதைகளை எங்களிடம் விட வேண்டாம். உங்கள் பிரச்சனைகள் , எங்களுக்குத் தேவையில்லை. நாங்கள் வாழ , எமது தேவைகளை நிர்வர்த்தி செய்ய எங்களுக்கும் பொருளாதாரம் தேவை. இவர்கள் இவற்றை மூடும் போது நடு வீதியில் நிற்பவர்கள் எத்தனை பேர்? உங்கள் புகழுக்காக பலிக்கடாவாக முடியாது. இப்படி மாய்ந்து வெளியேறிய பின் இவர்கள் படும் அவமானமும் , வேதனையும் எத்தனை எத்தனை? இவை தொடரக் கூடாது. உங்களுக்கு அரசியல் கருத்து வேறுபாடான திறமையான கலைஞ்ஞர்களின் ஆதரவு தேவையா? அவர்களை உங்களுக்குள் வைத்துக் கொள்ள பயமா? அவர்களுடன் பேசி அவர்கள் வெளியில் இருந்து படைப்புகளை செய்து தருவதற்கான வழிமுறை களைச் செய்யலாம். யாரும் அடுத்தவன் விருப்பு வெறுப்புகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள மாட்டான். வேலை செய்வோர் ஒன்றும் கொத்தடிமைகள் அல்ல. அவரவர் வேலை என்ன, எத்தனை மணி நேரம் என்பதில் தெளிவான வரையறைகள் பின் பற்றப் படல் வேண்டும். வேலை செய்யும் போது உங்கள் கட்டுப் பாட்டை மீறாமல் இருந்தால் போதும். ஊடகத்தை விட்டு வெளியேறிய பின் கலைஞர்களின் தனிப்பட்ட வாழ்கையை துப்பறிவது, ஊடகங்களின் விருப்பு வெறுப்பக்கானவர்களை இனம் தெரிந்து அவர்களோடு தொடர்புகளை துண்டிக்க நச்சரிப்பது போன்ற தனி மனித சுதந்திரத்துக்கு எதிரான செயல்களைத் தவிர்க்க வேண்டும். இது அடிப்படை. அடுத்தது கலைஞருக்கான பயிற்சி பட்டறைகள். புதிய தொழில் நுட்ப விடயங்களை கற்பதற்கான வசதிகளை செய்ய வேண்டும்............................. ஊடகங்கள் பற்றி தெரியாத ஒருவர் ஊடகம் ஒன்றை உருவாக்கியிருந்தால் , அவர் ஊடக தொழில் நுட்பம் தெரிந்த ஒருவரை பொறுப்பாளாராக்கி அவரிடம் பொறுப்புகளை கொடுத்து , விலகி நிற்கும் மனம் வேண்டும். அழகானவர்கள் மட்டுமே ஊடகங்களுக்கத் தேவையென்பதில்லை. திரைக்குப் பின்னால் அறிவு சார்ந்தவற்றை திட்டமிட அறிவானவர்களும் தேவை. இது போன்ற ஒரு ஆரம்பம் தொடக்கப் பட்டால் எமது ஊடகங்கள் நிலைக்கும். நமது ஊடகங்களில் இந்திய நிகழ்சிகளைத் தவிர்த்துப் பார்த்தால் , உருப்படியாக நம்மால் செய்யப் படுவது செய்தியும் , தொலைபேசி நிகழ்சிகளும்தான். எத்தனை அவலங்கள் , புலம்பெயர் வாழ்வுகளில்......... இவற்றைச் செய்யக் கலைஞர்கள் இருக்கிறரர்கள். இவர்களை நாடாதது யார்? <span style='color:red'>மேடையில் ஆடினால்தான் கலைக்கும் கலைஞனுக்கும் பெருமை. அவன் வீட்டுக்குள் கத்தினால் ஓலம். வீதியில் கத்தினால் பைத்தியம். கலைஞன் தன் திறமைகளை வெளியிட களம் ஒன்று வேண்டும். அது இருந்தும் முறையாக பயன் படுத்தப்படாமல் இருக்கிறது. இன்று டெலிபோன் வானோலி நிகழ்சிகள்தான் தொலைக்காட்சிகளை நிரப்புகின்றன. இதற்கெல்லாம் ஏன் தொலைக் காட்சிகள்? வானோலியே போதுமே? எதிர்கால சமுதாயத்துக்கு இந்த ஒப்பாரிகள் தேவைப் படாது. எமது குழந்தைகள் இந்த நாடுகளில் கல்வி கற்று இவர்களது ஊடகங்களில் தமது திறமைகளை வெளிப்படுத்துவார்கள். நாங்கள் கடையை மூடி விட்டு மரத்தடி - சந்தி போன்ற இடங்களில் பழம் கதைகள் பேசிக் கொண்டிருப்போம்............. </span> Mathivathanan Wrote:[size=18]எப்படியாயினும் திறமைக்கு முதலிடம் கொடுக்கும் அன்னியன் தேர்ந்தெடுத்து வளர்க்கவேண்டியதை வளர்ப்பான் அதில்முழுநம்பிக்கை எனக்குண்டு. தீர்க்கதரிசனமான வார்த்தை மதிவதனன்,நன்றி. நமது முகங்களாவது தெரியட்டுமே..... அன்புடன் AJeevan - kuruvikal - 09-30-2003 பிரச்சனையே தீயவையும் நல்ல வேஷம் போடுவதுதான்....நல்லவனாய்க் காட்டி நஞ்சூட்டும் பிறவிகளுக்கு மத்தியில் கெட்டவனாய் எதிரியாய் இருப்பது எத்தனையோ மடங்கு மேல்...விரைவில் முடிவுகள் எடுக்கப்படவும் உதவும்...! அந்நியம் என்பது ஒன்றும் இல்லை...மனிதன் மனிதனாக இருப்பவனுக்கு திறமை வளர்க்க இடமளிப்பான்...அதற்காய் மனித உருவில் இருப்பவன் எல்லாம் மனிதனல்ல....! அதே போல் திரைகளில் வருபவனும் மனிதனா...?! திரையில் வருபவையும் மனிதனுக்கு உகந்ததுதானா....பார்க்க வேண்டியது திரையை ரசிப்பவனின் கடமை...படைப்பாளி சிந்திக்காவிட்டால்...பார்வையாளன் சிந்திக்க வைப்பான்...! :twisted: <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
- Mathivathanan - 10-01-2003 குருவிகாள் இங்கு பேசப்பட்ட விடயம் வேறு.. நல்லவன் கெட்டவன் அரசியல் அல்ல. நமது பிள்ளைகளை டாக்டர்களாக எஞ்சினியர்களாக எக்கவுண்டன்களாக திறமையின் பிரகாரம் வளர்த்து எடுக்கத்தொடங்கிவிட்டார்கள். அதற்குத்தக்க ஊதியமும் கொடுத்து திறமைக்கேற்ப உயர்வுகளும் கொடுத்து சமமாக பார்க்கும் அன்னியனை போற்றாவிட்டாலும் தூற்றாமலிக்க ஏற்ற பக்குவம்கூட இல்லாமலப்போய்விட்டதா.? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|