| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,243
Full Statistics
|
| Online Users |
There are currently 323 online users. » 0 Member(s) | 320 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,182
|
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: SMPXrArgum
10-23-2025, 05:42 AM
» Replies: 27
» Views: 10,178
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,575
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,272
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,566
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 30,999
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,394
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 38,064
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 7,968
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,232
|
|
|
| வணக்கம் .. நண்பர்களே ... |
|
Posted by: inian - 09-30-2003, 08:39 PM - Forum: அறிமுகம்
- Replies (9)
|
 |
வணக்கம்.. தமிழில் இத்தகைய புத்தம்புது இணையத் தளங்கள் வருவது மிகவும் மகிழ்வைத் தருகிறது .. இத்தகைய களம் அமைத்த பெரியோருக்கும் .. துணை நிற்கும் நண்பர்களுக்கும் நன்றி சொல்லி இங்கு நுழைகின்றேன் ....
|
|
|
| பாரிஸில் ஈழக்குழந்தைகள் |
|
Posted by: Mullai - 09-30-2003, 07:25 PM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (11)
|
 |
<img src='http://www.kumudam.com/kumudam/06-10-03/37.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.kumudam.com/kumudam/06-10-03/37t.jpg' border='0' alt='user posted image'>
இலங்கயில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக ஈழத் தமிழர்கள் உலகத்தின் பல நாடுகளுக்குச் சென்று அகதிகளாய் வாழ்க்க நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்க எப்படிப்பட்ட... எத்தகய பிரச்னகளில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பத எடுத்ச் சொல்கிறார் பிரான்சில் வசிக்கும் ஈழத் எழுத்தாளரான சி. புஷ்பராஜா....
வெளிநாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழ்க் குழந்தகள் எதிர்கொள்ளும் பிரச்னகள் வினோதமான; பரிதாபத்திற்குரிய. பிரான்சில் வாழும் எங்கள் குழந்தகளின் தாய்மொழி ஏறக்குறய பிரெஞ்சுதான் என்றாகிவிட்ட.
பிரான்சில் இருக்கும் தமிழர்கள் பலரும் ஆண், பெண் வித்தியாசமில்லாமல் அலுவலகங்களில் பணி செய்கிறார்கள். எனவே, குழந்த பிறந்த ஒன்றிரண்டு ஆண்டுகளுக்குள் நர்சரிப் பள்ளிகளில் சேர்த்விட்டு, வேலக்கும் போக ஆரம்பித்விடுகிறார்கள். நர்சரிப் பள்ளிகளில் நிறய குழந்தகள் பிரெஞ்சுக் குழந்தகள்தான். ஆகவே, சிறுவய முதலே பிரெஞ்சு மொழி சரளமாக ஈழக் குழந்தகளுக்குப் பேச வருகிற.
வீட்டுக்கு வந்தால் அம்மா, அப்பாக்கள் தமிழில்தான் பேசுவார்கள். எனவே, குழந்தகளும் தமிழில் பேசுவார்கள். என்றாலும், முழுக்க முழுக்கத் தமிழிலேயே சிந்தித், தமிழிலேயே பேச அவர்களால் முடிவதில்ல. தன் சகோதரர், சகோதரிகளுடன் பேசும்போகூட குசுகுசுவென்று பிரெஞ்சு மொழியிலேயே பேசிக்கொண்டிருப்பார்கள்.
எனக்கு நான்கு குழந்தகள். வீட்டில் என்னோடு கதக்கிறபோ நன்றாகத் தமிழில் பேசுவார்கள். ஆனால், அவர்களுக்குள்ளே பேச வேண்டுமென்றால் பிரெஞ்சு மொழிதான்.
பிரான்சில் வசிக்கும் தமிழ்க் குழந்தகளுக்கு பிரெஞ்சு மொழி என்றால், ஜெர்மனியில் வசிக்கும் தமிழ்க் குழந்தகளுக்கு ஜெர்மன்தான் தாய்மொழி. இங்கிலாந்தில் வசிக்கும் குழந்தகளுக்கு இங்கிலீஷ்.
சில ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் லண்டன் சென்றிருந்தோம். என் நண்பருக்கு இரண்டு பெண் குழந்தகள். அந்தக் குழந்தகள் என் மகனோடு தமிழில் பேசினார்கள். இவனும் பதில் சொன்னான். ஆனால் திடீரென ஆங்கிலத்தில் அவர்கள் ஏதோ கேட்க, என் மகன் திக்குமுக்காடிப் போய்விட்டான். அவன் பிரெஞ்சில் பதில் சொன்ன அவர்களுக்குப் புரியவில்ல. இதனால் கடுப்பாகிப்போன என் மகன், அவனுக்கு இங்கிலீஷில் தெரிந்த ஒரே ஒரு கெட்ட வார்த்தயச் சொல்லிவிட்டான். அந்தப் பெண் குழந்தகள் அதக் கேட்டு கேவிக் கேவி அழ ஆரம்பித்விட்டார்கள்.
இந்தத் தலமுற குழந்தகளுக்காவ தமிழ் தெரிகிற; பேசுகிறார்கள். இனி வரும் குழந்தகளுக்கு அகூட சாத்தியமா என்று தெரியவில்ல. இந்தக் குழந்தகளெல்லாம் மீண்டும் இலங்கக்கே சென்று வாழ்க்க நடத்த வேண்டுமென்கிற நில ஏற்பட்டால் எப்படிப் பேசிப் பிழப்பார்கள் என்று புரியவில்ல.
குழந்தகள் ஓரளவுக்கு வளர்ந் டீன்ஏஜ் பருவத்த அடந்விட்டால், வேறுவிதமான பிரச்னகள் முளக்க ஆரம்பித் விடுகின்றன. பிரெஞ்சுக் குழந்தகளுக்கு பன்னிரண்டு வய ஆகிவிட்டாலே பெற்றோர்கள் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அப்பா ஆபீஸ§க்குப் போய்க் கொண்டிருப்பார். மகள் தன்னுடய பாய்ஃப்ரெண்ட்டோடு சுற்றிக் கொண்டிருப்பாள்.
பிரெஞ்சுக் குழந்தகள் பள்ளிக்கூடம் முடிந்த பிறகு நேராக வீட்டுக்கு வரமாட்டார்கள். பாய்ஃப்ரெண்ட், கேர்ள் ஃப்ரெண்ட் என்று சுற்றிவிட்டுத்தான் வருவார்கள். ஆனால் தமிழ்க் குழந்தகள் அப்படியல்ல. பள்ளிக்கூடம் விட்டபிறகு நேராக வீட்டுக்கு வந்விடுவார்கள். பிரெஞ்சுக் குழந்தகளெல்லாம் எங்கெல்லாமோ போகிறார்கள். என்னவெல்லாமோ செய்கிறார்கள். நாம் மட்டும் நல்லபிள்ளயாக வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறோமே என்ற குழப்பம் அவர்களிடம் இருக்கிற. பிரெஞ்சுக் குழந்தகள் மாதிரி நாம் வாழ்ந்தால் என்ன... என்கிற சிந்தனயும் அவர்களிடம் இருக்கிற.
என் நண்பர் ஒருவர், தன் மகன அழத்க்கொண்டு வாக்கிங் போனார். போகிற வழியில் ஒரு ஈழத் தமிழரின் பெண்ணப் பார்த்தார். என்ன! நம்மூர்ப் பெண்ணா! இவ்வளவு மோசமா இருக்காளே! என்று கமெண்ட் அடித்விட்டார். அய்யோ! அப்பா! அவள் கண்ணப் பாருங்க! எவ்வளவு அழகாக இருக்கு! என்று அப்பாவிடம் சொல்கிற மகன்களும் உண்டு. அத அனுமதிக்கிற அப்பாக்களும் உண்டு.
பிரான்சில் ஈழக் குடும்பங்களில் சின்னப் பெண்கள் வயக்கு வந்விட்டால் அத மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடுகிறார்கள். அந்த விழாவுக்கு பாரீஸில் உள்ள எல்லோரயும் அழக்கிறார்கள். அந்த விழாவில் நாள் முழுவம் அந்தச் சின்னக் குழந்த படுகிறபாடு ரொம்பவே அதிகம்.
திருமணம் என்றாலும் ஏக தடபுடலாகத்தான் இருக்கும். எல்லோரும் எல்லோரயும் அழப்பார்கள். ஏற்கெனவே பல கல்யாணங்களுக்குப் போய் மொய் எழுதியவர்கள், அந்த மொய்ப் பணத்த வசூல் செய்வதற்காகவே கல்யாணம் நடக்கும் விநோதம் பாரீஸில் நடக்க ஆரம்பித்விட்ட.
பிரான்சில் வசிக்கும் எல்லா ஈழத் தமிழர்களயும் ஒரே மாதிரியாகச் சொல்லிவிட முடியா. நிறய வியாபாரிகள் இருக்கிறார்கள். அவர்களின் வேல, அங்குள்ள தமிழர்களுக்கு வேண்டிய எல்லா பண்டங்களயும் வரவழத்த் தருவதான். தமிழ்நாட்டில் கிடக்காத அற்புதமான அரிசி எங்களுக்கு பிரான்சில் கிடக்கிற. அரிசியக் கழுவ வேண்டிய அவசியம் இருக்கா. அத நாங்கள் அப்படியே உலயில் போட்டுவிடுவோம். கத்தரிக்காய், வெண்டக்காய், புடலங்காய் என எல்லா காய்கறிகளும் நிறய கிடக்கின்றன.
பாரீஸில் சிவன், முருகன், பிள்ளயார் கோயில்கள் இருக்கின்றன. நாட்டவிட்டு ஓடி வந்தவர்களுக்கு ஒரே நம்பிக்க கடவுள் நம்பிக்கதான். ஆனால், இன்னும் சிலருக்குக் கோயில் என்றால் பிசினஸ் ஆகிவிட்ட. பாரீஸில் உள்ள அம்மன் கோயில முழுக்க, முழுக்க புலிகளே நடத்தி வருகின்றனர்.
பாரீஸில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் பலர் நாடு பற்றி, விடுதலப் போராட்டம் பற்றியெல்லாம் அவ்வளவாக அக்கறப்படுவதில்ல. நாட்ட விட்டு ஓடி வந்திருக்கிறோம். இங்கு வாழும் வாழ்க்கக்கும் எந்த நிச்சயமும் இல்ல. எனவே, வாழுகிற வர நிறய சம்பாதிக்க வேண்டும், சந்தோஷமாக இருக்க வேண்டும்; என்கிற உணர்வு அவர்களிடத்தில் அதிகமாக இருக்கிற.
இன்னும் சிலர் இலக்கியம், அரசியல், விஞ்ஞானம் மாதிரியான விஷயங்கள விரிவாகப் பேசி, தங்கள் இருப்ப நிலநாட்டிக் கொள்கிறார்கள்.
நானும் ஒரு முன்னாள் போராளிதான். இலக்கியம், சமூகம் பற்றி நிறய பேசுகிறேன்; படிக்கிறேன். இலக்கியச் சந்திப்பு என்கிற அமப்பின் மூலமாகப் பல இலக்கியக் கூட்டங்கள நடத்கிறோம். அடுத்த இலக்கியக் கூட்டம் நெதர்லாந்தில் நடத்தப் போகிறோம். ஈழ விடுதலயில் என் அனுபவங்கள ஈழப் போராட்டத்தில் என சாட்சியம் என்கிற தலப்பில் ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறேன். இந்தப் புத்தகம் பரபரப்பாக பேசப்படும் என்ப என் நம்பிக்க என்றார்.
_ஏ.ஆர். குமார்
நன்றி குமுதம்
|
|
|
| "Indian national facing execution in Singapore!" |
|
Posted by: சாமி - 09-30-2003, 05:11 AM - Forum: செய்திகள்: உலகம்
- Replies (5)
|
 |
"Indian national facing execution in Singapore!"
The date of execution is 3 October 2003.
Amnesty International - International Secretariat
1 Easton Street, London WC1X 0DW http://www.amnesty.org
PUBLIC AI Index: ASA 36/004/2003 26 September 2003
Further Information on UA 177/03 (ASA 36/001/2003, 19 June 2003) Imminent execution
SINGAPORE Arunprakash Vaithilingam (m), aged 24, Indian national
The execution of Arunprakash Vaithilingam has reportedly been scheduled for 3 October, following the rejection of his appeal for clemency to the President of Singapore.
Arunprakash Vaithilingam, a migrant worker from India, was sentenced to death in December 2002 after being convicted of the murder of his room-mate, who was stabbed to death during a drunken argument. At his trial, Arunprakash Vaithilingam stated that he had not intended to kill his room-mate and that initially he did not even realize he had stabbed him. He and several friends who had witnessed the argument immediately rushed the wounded man to hospital, but he was pronounced dead shortly afterwards. Despite eyewitness evidence, the Singapore High Court found Arunprakash Vaithilingam guilty of murder, an offence which carries a mandatory death sentence.
RECOMMENDED ACTION: Please send appeals to arrive as quickly as possible, in English or your own language:
- urging the authorities to reconsider the decision to refuse clemency in the case of Arunprakash Vaithilingam;
- calling on the authorities to commute his death sentence immediately;
- expressing sympathy for the victims of violent crime, but pointing out that the death penalty has never been shown to have a unique deterrent effect;
- urging the authorities to establish an immediate moratorium on executions, with a view to abolition, in line with recommendations by the United Nations Commission for Human Rights.
APPEALS TO:
Minister of Law
Prof. S. Jayakumar
Ministry of Law
100 High Street
The Treasury #08-02
Singapore 179434
Telegram: Minister of Law, Singapore
Fax: + 65 6332 8842
Salutation: Dear Minister
Attorney General
Chan Sek Keong
Attorney General's Chambers
1 Coleman Street #10-00
Singapore 179803
Telegram: Attorney General, Singapore
Fax: + 65 6332 5984
Salutation: Dear Attorney General
Chief Justice
Yong Pung How
Supreme Court
Supreme Court Building
St Andrew's Road
Singapore 178957
Telegram: Chief Justice, Singapore
Salutation: Dear Chief Justice
COPIES TO: Diplomatic representatives of Singapore accredited to your country.
PLEASE SEND APPEALS IMMEDIATELY.
====
For more information:
TAMIL MIGRANTS INTERNATIONAL
Post Box No: 6075, CHENNAI -600 034.
Email: tamilmigrant@yahoo.co.in
|
|
|
| பேரம் |
|
Posted by: சாமி - 09-30-2003, 05:07 AM - Forum: கவிதை/பாடல்
- No Replies
|
 |
முழம்
மூன்று ரூபாய் என்று
தௌ¤வாகச் சொன்னாள்
அவள்.
இரண்டரை ரூபாய் வீதம்
இரண்டு முழம் கொடு
தெள்ளத் தெளிவாகச்
சொன்னேன் நான்.
மூன்று நிமிடங்களுக்கும்
மேலாக
நீண்டு கொண்டு போனது
முழம் மூன்று ரூபாய்க்கான
அவளது நியாயங்களும்
இரண்டரை ரூபாய்க்கான
எனது விளக்கங்களும்.
இறுதியாக,
ஐந்தரை ரூபாய்க்கு
இரண்டு முழம் பூவை
சுருட்டிக் கொடுத்து விட்டு
இரண்டு அடிக்கு அப்பால்
இயல்பாகத்தான் துப்பினாள்
வெற்றிலைப் பாக்கு எச்சிலை.
ஆயினும்
சந்தேகமாகத்தானிருக்கிறது.
ஷோரூம்காரன்
சொன்ன விலைக்கு நான்
செருப்பு வாங்கி அணிவதை
பார்த்திருப்பாளோ
அந்தப் பூக்காரி?
நன்றி: ஜெயபாஸ்கரன் கவிதைகள்
வெளியீடு
வழுதி வெளியீட்டகம்
எண் 48 (பழைய எண் 1314)
ஆறாம் முதன்மைச்சாலை,
திருவள்ளுவர் நகர்
திருவான்மியூர்
சென்னை-41.
நன்றி : அம்பலம்
|
|
|
| நீதிக் கதைகள் |
|
Posted by: சாமி - 09-30-2003, 05:05 AM - Forum: தமிழும் நயமும்
- Replies (2)
|
 |
இரட்டைச் சோகம்
ஒரு பருந்து மலை உச்சியில் இருந்து கொண்டு, கீழே ஒரு முயல் ஓடுவதைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது, அதைக் கொத்திச் சென்று சாப்பிடும் எண்ணத்தில். அதை ஒரு வேடன் கவனிப்பதை கவனிக்கவில்லை. அவன் குறிபார்க்க சமயம் இருந்து அம்பெய்தி பருந்தை வீழ்த்தினான். பருந்து சாவதற்குமுன் தன் மார்பில் பாய்ந்த அம்பை ஒருமுறை பார்த்தது. அதில் தன் இறகுகள் வைத்து அமைந்திருப்பதைக் கண்டது.
''இது இரட்டை சோகம். என் சிறகிலிருந்து இறகெடுத்துச் செய்த அம்பே என்னைக் கொன்றது'' என்றது.
நீதி:- துரோகம் நம்மிடமே ஒளிந்திருக்கலாம்.
__________________________________
மயக்கமா கலக்கமா
இரண்டு தவளைகள் தம் புதிய சூழ்நிலையை யோசித்தன. ஒரு தவளை பெருமைப்பட்டது. ''பரவாயில்லை இதுவரை மழையில் நனைந்து தவித்துக் கொண்டிருந்தோம். இப்போது நல்ல கதகதப்பான இடம் கிடைத்துவிட்டது. போர்வையும் கிடைத்துவிட்டது. உண்ண உணவும் கிடைத்துவிட்டால் இதைப்போல சுகம் எதுவும் கிடையாது''.
அதற்கு மற்ற தவளை, ''முட்டாளே! உன் குரல் வளத்தால்தான் இந்த கதி நமக்கு வந்துள்ளது. உண்ண உணவு கிடைப்பதற்கு பதில் நாம் உண்ண உணவாகப் போகிறோம்'' என்றது.
''நீ என்ன சொல்கிறாய்?''¢
''நாம் கதகதப்பாக இருப்பது பாம்பின் வயிற்றுக்குள்¢!''¢
நீதி:- நுணலும் தன் வாயால் கெடும்.
____________________
பலநாள் திருடன்
நரிக்கு வயசாகிவிட்டது. அதனால் சுலபமாக ஆடுகளைப் பிடிக்க முடியவில்லை. மேய்ச்சல் நிலத்தில் ஒரு செம்மறியாட்டைக் கஷ்டப்பட்டு பிடித்து சாப்பிட்¢டது. அதன் மேல்தோல் பாக்கியிருந்தது. 'ஒரு ஐடியா! இந்த தோலைப் போர்த்திக்கொண்டு நான் ஆடுகளுக்கிடையே ஊடாடலாமே! ஒவ்வொரு ராத்திரியும் ஒரு ஆட்டை சாப்பிட்டு கொள்ளலாமே!. என் உணவுப் பிரச்னை தீர்ந்துவிடுமே. இந்த ஐடியா எனக்கு ஏன் முன்பே தோன்றவில்லை' என்று திட்டமிட்டு ஆடுகளுக்கிடையே புகுந்து கொண்டது. சுற்றுப்பட்ட ஆடுகளுக்கு அந்த அன்னியன் யார் தெரியவில்லை. 'குண்டாக இருக்கிறான். நமக்கேன் வம்பு. ஆட்டு ஜென்மங்கள் நாம். கேள்வி கேட்கக்கூடாது' என்று வாளாயிருந்துவிட்டன.
ஆட்டு இடையன் கணக்கில் கெட்டிக்காரன். எண்¢பத்தோரு ஆடுகளில் ஒன்று குறைந்தாலும் அவனுக்கு அந்தாஸாவாகத் தெரியவரும். தினம் ஒரு ஆடு குறைவதை கவனித்து கவலைப்பட்டான். ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது. எங்கே போகின்றன? மேய்ச்சலின்போது ஒருவேளை வழி தவறித் திரிகின்றனவா என்பதை அவனால் கண்டுகொள்ள முடியவில்லை.
ஒருமுறை அவன் பண்ணைக்கு உறவுக்காரர்கள், அவனைப் பார்க்க வந்தார்கள். பண்ணையின் பெருமையை சுற்றிக் காட்டினான். அவர்கள் ''ஆட்டுக்கால் சூப் வைக்க வேண்டும். ஒரு நல்ல கொழுத்த ஆடு கொடு.'' என்றார்கள். ஆட்டுத்தோல் போர்த்திய நரிதான் குண்டாக தெரிந்தது.
''அதோ அந்த ஆட்டை எடுத்துக்கொள்ளுங்கள்''¢ என்றான்.
பதறிப்போன நரி ''அய்யோ நான் ஆடு இல்லை. நரி'' என்றது.
'ஓ! நீதானா, தினம் கணக்கு குறைவதற்குக் காரணம்? போடு'¢ என்று நரியைச் சாகடித்தான்.
நீதி:- எந்த வேஷமும் வெளி வந்துதான் ஆகவேண்டும். எப்போது என்பதில்தான் வேறுபாடு.
______________________
சூரப்புலி நாய்
அந்த நாய்க்கு நல்ல குரல். குரைத்தால், கிராமமே குரைப்பது போல பெரிசாக சப்தம் கேட்கும். இதில் அதற்கு ரொம்ப பெருமை. இதனால் கிராமத்தைச் சேர்ந்த கொல்லர்¢ ஒருவர் அந்த நாயை விலைக்கு வாங்கினார். அது போகிற வருகிறவரையெல்லாம் பார்த்தது, பலமாகக் குரைத்ததைப் பார்த்¢து கொல்லனார் பெருமைப்பட்டார்.
ஒருமுறை கிராமத்து பஞ்சாயத்து தலைவர் மகளைப் பார்த்து நாய் உற்சாகமாகக் குரைத்து, துரத்தியது. அந்தப் பெண் தன் தந்தையிடம், ''என்ன தலைவர் நீங்கள்? கிராமத்து கண்ட கண்ட நாய்களெல்லாம் என்னைப் பார்த்து குரைப்பதைத் தடுக்க முடியவில்லையே!'' என்றாள்.
உடனே கொல்லரைக் கூப்பிட்டு, நாயைக் கட்டிப் போடும்படி சொன்னார்.
அவர் நாயை சங்கிலி கொண்டுவந்து ஒரு பெரிய மரத்துடன் இணைத்துக் கட்டிவிட்டார். நாயால் நகர முடியவில்லை. நாய் இதையும் பெருமையாக நினைத்துக் கொண்டு ''பார்! நம் எஜமானர் என் திறமையை வியந்து மரத்தை இழுப்பதற்காகக் கட்டிப் போட்டிருக்கிறார்'' என்று அதை இழுக்க முற்பட்டது. கிராமத்தவர் கைகொட்டிச் சிரித்தார்கள். நாய் அதை பாராட்டு என்று எண்ணிக்கொண்டு இன்னும் பலமாக இழுத்தது.
நீதி:- சிலருக்கு எது தண்டனை, எது பாராட்டு என்பதே தெரியாது.
நன்றி
அம்பலம்
|
|
|
| அனுபவங்கள் .. |
|
Posted by: vaiyapuri - 09-28-2003, 09:11 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
உதயங்கள் எத்தனையோ
மறைந்து மறைந்து வெளுக்கின்றன
பொழுதுகள் மாறுகின்றன
விநாடிகள் நிமிடங்களாகின்றன
நிமிடங்கள் மணித்தியாலங்களாகின்றன
மணித்தியாலங்கள் நாட்களாகின்றன
நாட்கள் மாதங்களாகின்றன
மாதங்கள் வருடங்களாகின்றன
வருடங்கள் வயதைத் தருகின்றன
வயதுகள் எதனைத் தருகின்றன.........?
வாழ்க்கையில் எதனைக் கற்றோம்..?
இன்பத்தில் எதனைக் கண்டோம்..?
துன்பத்தில் எதனைப் பார்த்தோம்..?
உண்மையில்....
எதனைத்தான் உணர்ந்தோம்..?
வருடிய தென்றல்
வருடிவிட்டுச் சென்று விடுகிறது
வீசிய புயலும்
அழித்துவி;ட்டு ஓய்ந்து விடுகிறது
தண்ணீரிலும்
கண்ணீரிலும்
தத்தளிப்பிலும்
பரிதவிப்பிலும்
என்றும் கலந்திருக்கிறோம்..
என்றுதான் உணரப் போகிறோம்..?
எது ..எதைத் தந்தது
எதனால் எது கிடைக்கப்போகிறது
எதை எதனால் அடையக்கூடியது
எதற்கு எதெல்லாம் தேவைப்படுகிறது..?
அனுபவங்கள் தான் பதில் சொல்ல வேண்டும் !
அன்புடன்,
வையாபுரி.
|
|
|
| ரசித்த நகைச்சுவை |
|
Posted by: Mullai - 09-28-2003, 08:42 PM - Forum: நகைச்சுவை
- Replies (124)
|
 |
<img src='http://www.cheap-auto-car-insurance-quotes.com/Clipcartoons6.gif' border='0' alt='user posted image'><span style='font-size:30pt;line-height:100%'>ஆறுதல்</span>
சாலையின் குறுக்கே போன பெண்மணியை கார் ஒன்று இடித்துக் கீழே தள்ளிவிட்டு தப்பியோடிவிட்டது
"பெண்மணிக்குக் காலில் காயம். ரத்தம் வழிந்தது.
யாராவது என்னை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போங்களேன்" - அவள் புலம்பினாள்
பலர் வேடிக்கைமட்டும் பார்க்க, ஒருவர் மட்டும் துணிச்சலோடு ஆட்டோவை அழைத்து வந்து அவளை ஏற்றிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.
வழியில் அவர் அவளிடம் பேச்சுக்கொடுத்தார்.
"தப்பாக நினைக்காதீங்க... உங்க பேர், விலாசம் தந்தா உதவியாயிருக்கும்."
சொன்னாள்
"எந்தக் கார் உங்க மேலை இடிச்சதுன்னு சொல்லமுடியுமா?"
"ஆம்பாஸ்டர் கார்!"
"கார் நிறம் தெரியுமா?"
"ஆபத்து அவசரத்திலை யார் அதையெல்லாம் பார்த்தது"
"சரி போகட்டும்..... அது சொந்தக் காரா? இல்லை டக்ஸியா?"
"இதையெல்லாம் அங்கே இருந்தவங்க யாராச்சும் பார்த்து வைச்சிருந்தால்தான் உண்டு. அவங்களைத்தான் கேக்கணும்"
"வழக்குன்னு வரப்போ உங்க சாட்சியம் முக்கியமாச்சே. நீங்க எதையும் பார்க்கலியா? அந்தக் காரிலை எத்தனை பேர் இருந்தாங்க?"
"உம்... அதைப் பார்த்தேன்.! ரெண்டே பேர்! ஓரு ஆம்பளை! அவர் பக்கத்திலை ஒருத்தி"
"அப்படியா?"
"அந்தம்மா அரக்கு கலர்ல பட்டுப் புடவை கட்டியிருந்தாங்க! தலை நிறைய கனகாம்பரம் பூ! கழுத்தில ரெட்டைவடச் செயின் அப்புறம் சின்னதா ஒரு நெக்லஸ்! வைரத்தோடு.... தலைமுடி டை அடிச்சிருந்தாங்கண்ணு நினைப்பு..."
"ரொம்பப் பேசாதீங்க... மயக்கமா வந்திடப் போகுது." என்று ஆறுதல் சொல்லிவிட்டுப் பேச்சை நிறுத்திக் கொண்டார் துணைக்கு வந்தவர்-
-பர்வதவர்த்தினி
|
|
|
| கணணித்தமிழ், அடுத்தது..? |
|
Posted by: சாமி - 09-28-2003, 08:30 PM - Forum: கணினி
- No Replies
|
 |
தமிழ் பிசி என்று ஒரு அமைப்பை லினக்ஸ் ஆர்வலர்கள் சேர்ந்து அமைத்தோம்¢ (லினக்ஸா லைனக்ஸா? யாராவது விளக்கினால் உபகாரமாக இருக்கும்¢) ரெட் ஹாட் இதற்கு நல்ல ஆதரவு தருகிறார்கள். தமிழ் இணையப் பல்கலைக்கழகமும் ஆதரவளித்திருக்கிறது. தமிழ்சார்ந்த மென்பொருள் அமைப்பதற்கு ஓப்பன் சோர்ஸ்¢ என்னும் திறந்தவெளி அமைப்புத்தான் சரிப்பட்டு வருகிறது. ஆளாளுக்கு தமிழைக் காப்பபாற்றியே தீருவேன். நான் காப்பாற்றுவதுதான் சரியான காப்பாற்றல் உன் காப்பாற்றல் வெத்து என்கிற மனப்பாங்கு தமிழர்களிடையே இருக்கும்வரை அவரவர் போக்குக்கு காப்பாற்றட்டும் என்று விட்டுவிட்டு, அவைகளில் நல்லவை சிறந்தவை புழக்கத்தில் வந்து மற்றவை தாமாகவே வழியில் உதிர்ந்துவிடும். இல்லையென்றால் டிஸ்¢கி, டாம், டாப், இஸ்கி, யுனிகோடு என்று எத்தனை குறியீட்டுத்தரங்கள், ரோமன், ஃபோனிட்டிக், பழைய தட்டச்சு, புதிய தட்டச்சு என்று எத்தனை விசைப்பலகை ஒதுக்கீடுகள்! இவைகளில் எது பிழைக்கும்.
தமிழைக் கணிப்பொறியில் பார்க்கும் பிரமிப்பு முதலில் ஓயவேண்டும். இதுவரை செய்ததே போதும் என்று தமிழர்கள் உணரும்வரை தினப்படி புதிய முயற்சிகளில் நாம் நேர விரயம் செய்துகொண்டு, மற்ற அத்தியாவசியங்களை கவனிக்காமல் விட்டுவிடுவோம். இதன் காரணங்களை இப்போது அலசுவதில் பயனில்லை. புதிதாக தமிழில் ஏதேனும் மென்பொருள் சூழ்நிலையை முயலும்போது நமக்கு தேவைப்படுவது ஒருகலைச் சொல் அடைவு. எல்லோரும் பயன்படுத்துமாறு கலைச்சொற்களை ஓரிடத்தில் ஒரு வலைமனையில் பதிப்பித்து அதை ஊற்றுக்கண்ணாக எல்லோரும் பயன்படுத்தவேண்டும். இந்த கலைச் சொற்களின் அவசியத்தைத்தான் நாங்கள் முதலில் உணர்ந்தோம். இதற்கு ஓப்பன் ஆஃபீஸ் போன்ற மேல்மேசை சூழலுக்கு ஏற்ற எண்ணாயிரம் வார்த்தைகளை முதலில் பதிப்பித்தோம.¢ இப்போது கேடிஇ மோசிலா போன்றவைக்கு உண்டான தனிப்பட்ட வார்த்தைகளையும், செய்திகளையும், தமிழாக்கிக்கொண்டிருக்கிறோம். இவைகளில் மாறுதல்கள் செய்ய சில யோசனை கூறுகிறார்கள். இந்த யோசனைகள் மதிப்பிட்டு உடனடியாக மாற்றங்கள் செய்யவும் ஓப்பன் ஆபிஸ் சூழல் அனுமதிக்கிறது. தமிழ் மொழிக்கு இவ்வாறு அதன் உலகளாவிய ஆர்வக்கோளாறுகளையும் மீறி நல்லது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
தமிழில் இந்த ஆண்டின் சென்னை இணைய மாநாடு முடிந்த கையோடு, தமிழில் இதெல்லாம் சாத்தியம். தமிழ் எழுத்துகளை கணிப்பொறியில் பார்க்கலாம், தமிழிலக்கியங்களை தகவல்தளமாக அமைக்கலாம் போன்ற மேம்போக்கான பயன்பாடுகளைக் கடந்து, தமிழில் வாணிபம் உலகளாவிய வர்த்தகம் செய்ய தமிழ் மொழி அறிவு மட்டும் போதும் என்கிற சூழ்நிலை உருவாகத் தொடங்கும்.
பாரதி, ''சிங்க மராட்டியர் தம் கவிதை கொண்டு, சேரத்துத் தந்தங்கள் பரிசளிப்போம்'' என்ற சொன்னது இப்போது யூனிகோடு மூலம் சாத்தியமாகியிருக்கிறது.
- சுஜாதா
நன்றி: அம்பலம்
|
|
|
| காதல்... காதல் |
|
Posted by: சாமி - 09-28-2003, 08:28 PM - Forum: கவிதை/பாடல்
- Replies (2)
|
 |
என்ன சொல்வதென்று
தெரியவில்லை,
என்னைப் பற்றிக் கொண்டு
உன்னைப்பற்றிக் கேட்பவர்களுக்கு.
ஆசைமுகம்
மறந்து போகலாம்
ஆளையே மறந்து போகலாமா?
என்று யாரிடமோ
சொல்லிக் கொண்டு போகிறான்,
என்னையும், உன்னையும்
புரிந்து கொள்ளும்
மனிதமற்ற வேலாயுதம்.
கண்களைப் பார்த்து
பேசுவதும்
காதுபடப் பேசுவதும்
வேறு வேறாக இருக்கிறது
இந்த மனிதர்களுக்கு
என்னை நீ
ஏமாற்றி விட்டுப் போய்விட்டதாக
நாலு பேரிடமாவது
சொல்லா விட்டால்
அன்றிரவு
உறக்கங்கெட்டு அலைகிறான்
- வி.பி.ரங்கன்
உன் காதலை
அவள் புரிந்துகொள்ளவில்லையா?
என்றென்னைக் கேட்டுக் கேட்டு
துக்கம் கக்குவதே
தினசரி வேலையாகி விட்டது
தயாளனுக்கு.
உன்னைப் பற்றி
நான் சொல்லும் எதுவும்
எடுபடாமலே போய்விடுகிறது.
ஆணையும், பெண்ணையும்
காதலர்களாகப் பார்த்தே
பழக்கப் பட்டுப்போன
இவர்களிடம்.
உன் பொருட்டு
நான் படும் அவஸ்தைகளுக்கு
முற்றுப் புள்ளியாக,
அழைத்து வந்து இவர்களுக்கு
காட்டிவிட்டுப் போகலாமல்லவா?
உன் சந்திரசேகரனை.
- ஜெயபாஸ்கரன்
நன்றி: ஜெயபாஸ்கரன் கவிதைகள் (முதல் தொகுப்பு)
வெளியீடு
வழுதி வெளியீட்டகம்
எண் 48(பழைய எண் 1314)
ஆறாம் முதன்மைச்சாலை,
திருவள்ளுவர் நகர்
திருவான்மியூர்
சென்னை-600 041.
நன்றி: அம்பலம்
|
|
|
|