Yarl Forum
காதல்... காதல் - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: காதல்... காதல் (/showthread.php?tid=8068)



காதல்... காதல் - சாமி - 09-28-2003

என்ன சொல்வதென்று
தெரியவில்லை,
என்னைப் பற்றிக் கொண்டு
உன்னைப்பற்றிக் கேட்பவர்களுக்கு.

ஆசைமுகம்
மறந்து போகலாம்
ஆளையே மறந்து போகலாமா?
என்று யாரிடமோ
சொல்லிக் கொண்டு போகிறான்,
என்னையும், உன்னையும்
புரிந்து கொள்ளும்
மனிதமற்ற வேலாயுதம்.

கண்களைப் பார்த்து
பேசுவதும்
காதுபடப் பேசுவதும்
வேறு வேறாக இருக்கிறது
இந்த மனிதர்களுக்கு

என்னை நீ
ஏமாற்றி விட்டுப் போய்விட்டதாக
நாலு பேரிடமாவது
சொல்லா விட்டால்
அன்றிரவு
உறக்கங்கெட்டு அலைகிறான்
- வி.பி.ரங்கன்

உன் காதலை
அவள் புரிந்துகொள்ளவில்லையா?
என்றென்னைக் கேட்டுக் கேட்டு
துக்கம் கக்குவதே
தினசரி வேலையாகி விட்டது
தயாளனுக்கு.

உன்னைப் பற்றி
நான் சொல்லும் எதுவும்
எடுபடாமலே போய்விடுகிறது.
ஆணையும், பெண்ணையும்
காதலர்களாகப் பார்த்தே
பழக்கப் பட்டுப்போன
இவர்களிடம்.

உன் பொருட்டு
நான் படும் அவஸ்தைகளுக்கு
முற்றுப் புள்ளியாக,
அழைத்து வந்து இவர்களுக்கு
காட்டிவிட்டுப் போகலாமல்லவா?
உன் சந்திரசேகரனை.
- ஜெயபாஸ்கரன்

நன்றி: ஜெயபாஸ்கரன் கவிதைகள் (முதல் தொகுப்பு)

வெளியீடு
வழுதி வெளியீட்டகம்
எண் 48(பழைய எண் 1314)
ஆறாம் முதன்மைச்சாலை,
திருவள்ளுவர் நகர்
திருவான்மியூர்
சென்னை-600 041.


நன்றி: அம்பலம்


- PATCHI - 09-29-2003

காதல்..

சாதல்
ஆதல்
அழிதல்
கூடல்
ஊடல்
வாழ்தல்
இல்லையேல் நாறல்.....!

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

உயிரிருக்கும் வரை பேதை மனிதன் கெர்ள்ளும் போதைகளில் இதுவும் ஒருவகையோ..???

ஷ்..பட்சி வந்திடுச்சு..பட்சி வந்திடுச்சு..


- kuruvikal - 09-29-2003

பட்சிகள்...நல்லா உறைக்க வைக்குது சின்னக் கவிதை... கடுகு சிறிது காரம் பெரிது போல..!
:twisted: <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->