Welcome, Guest
You have to register before you can post on our site.

Username
  

Password
  





Search Forums

(Advanced Search)

Forum Statistics
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244

Full Statistics

Online Users
There are currently 464 online users.
» 0 Member(s) | 461 Guest(s)
Applebot, Bing, Google

Latest Threads
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,810
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,517
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,797
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,340
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,766
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,861
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,745
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 39,494
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,125
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,357

 
  விபத்தா..? கொலையா..?
Posted by: Mathivathanan - 10-05-2003, 06:48 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (117)

விபத்தா..? கொலையா..?

சடலங்களையோ வாகனங்களையோ விபத்து நடந்த இடத்திலிருந்து அகற்றக்கூடாது இராணுவ பொலீஸாருக்க நீதிவன் கண்டிப்பான உத்தரவு

"விபத்துச் சம்பவம் ஒன்று இடம் பெற்று அதில் ஒருவர் உயிரிழந்தால் அந்த சடலத்தையோ, சம்பவத்துடன் தொடர்புடைய வாகனங்களையோ நீதிவான் பார்வையிட முன்னர் அப்புறப்படுத்தக்கூடாது."

இப்படி பொலீஸாருக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளார் யாழ் மேலதிக நீதிவான் திருமதி சிறீநிதி நந்தசேகரன்.
பிரதான வீதி, கன்னியர்மடச் சந்தியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற விபத்துத் தொடர்பான மரணவிசாரணை அன்று இரவு யாழ் ஆஸ்பத்திரியில் இடம்பெற்றது. அச்சமயம் அங்கு சமுகமளித்திருந்த இராணுவ மற்றும் இராணுவப்பொலீஸ் அதிகாரிகளுக்கே மேற்கண்ட அறிவுறுத்தலை நீதிவான் விடுத்தார்.
சம்பவம் நடந்த இருமணி நேரத் திற்குப்பின்னர் தமக்குத் தகவல் தரப்பட்டமைக்கும் நீதிவான் விசனம் தெரிவித்தார்.
ஒரு விபத்துச் சம்பவம் நடந்து சம்பவத்தில் ஒருவர் இறந்தால், உட னடியாக அதனை நீதிவானின் கவனத்துக்குக் கொண்டுவரவேண்டும். விபத்தில் சிக்கியவர் படுகாயம் அடைந்திருந்தால், அவர் காயமடைந்து கிடந்த இடத்தில் அடையாளமிட்ட பின்னர் அவரை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல முடியும்.
இந்தச் சம்பவத்தில் அந்த நடைமுறை முழுமையாக செயற்படுத்தப் படவில்லை. சம்பவ இடத்துக்கு நான் வருவதற்கு முன்பே சடலங்களும் சம்பந்தப்பட்ட டிரக் மற்றும் மோட்டார் சைக்கிளும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன. இவை அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் எப்படி முறையான விசாரணையை நடத்த முடியும்.
எதிர்காலத்தில் இந்த நடைமுறையை இராணுவத்தினரும் இராணுவப் பொலீஸாரும் ஒழுங்காகச் செயற்படுத்தவேண்டும்.
இப்படி நீதிவான் தெரிவித்தார்.
சம்பவ இடத்துக்கு நேற்றுக் காலை சென்ற நீதிவான் சம்பவ இடத்தின் வரைபடங்களைப் பெற்றதுடன் சில தடயப் பொருள்களையும் சேகரித்துள்ளார்.
இதன் பின்னர் தமது பங்களாவில் மரணவிசாரணைகளை நடத்தி சாட்சியங்களைப் பதிவு செய்தார்.
[size=14]உயிரிழந்தவர்களுக்கு ஏற்பட்டது விபத்து மரணம் எனத் தீர்ப்பளித்த நீதிவான் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு பூரண அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும்படி இராணுவ பொலீஸாருக்கு உத்தரவிட்டார்.
சம்பந்தப்பட்ட டிரக்கின் சாரதியான கோப்ரல் காமினி திஸநாயக்கவை எதிர்வரும் 13ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கும்படியும் நீதிவான் உத்தரவிட்டார்.

[size=14]நேற்று வானொலிப் பேட்டியில் அரசியல்த்துறைப்பேச்சாளர் இ.ப. கொலை என வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.. :?: :?: :?:

http://www.uthayan.com/news/newsmain.htm

Print this item

  ஈர உணர்வுகள் ... :!:
Posted by: vaiyapuri - 10-04-2003, 07:25 PM - Forum: கவிதை/பாடல் - Replies (4)

நிலத்திலிருந்து
ஆவியாகி
மேகம் தொட்டதும்
மழையாகி

நிலம் தொட
வந்து செல்லும்
மழையே மழையே..!

நீ நிலம் தொட்டுப் - பின்
உள் உறைந்து
செழிப்பில் - ஒரு
கதை சொல்லி

தோன்றித் தோன்றி
மறைகிறாய்
நெடு நாட்களில்
தோன்றாமலும்
விடுகிறாய்..

ஐயகோ.

நீ தோன்றும் நாள் பார்த்து
வரட்சியும்
நீ மறையும் நாள் பார்த்து
விதை நிலமும்
உணர்வுகளைக் கொட்டுகின்றன..

நாங்களும் தான்,

நிலமிழந்தோம்
நிஜமிழந்தோம்
நினைவிழந்தோம்
நிர்க்கதியானோம்

கண்டதெல்லாம் மறந்து போச்சு..
அந்தக் கோர நினைவுகளைத் தவிர !
கொண்டதெல்லாம் இழந்துமாச்சு..
அந்தக் கனவின் உணர்வினைத் தவிர !

உணர்வுகளுக்குள் ஒரு ஈரம்
இன்னமும்
உருக்குலையாமல் தொக்கு நிற்குது

உயிர்களுக்குள் ஒரு மாற்றம்
அது இன்னமும்
உருவெடுக்காமல் தோற்று நிற்குது

ஏனென்றும் தெரியவில்லை
எதுவென்றும் புரியவில்லை
இனிமேலும் பொறுமையில்லை..

என் மூச்சது முடிந்திடுமோ ?
தாகம் தீர முன்
உயிரதுவும் மாய்ந்திடுமோ ?

ஏக்கம் - அது வாழவும் விடுவதாயில்லை..!

புழுதிக் காற்றிலும்
மண்ணின் வாசத்திலும்
மீண்டும் உருண்டு புரள.,

ஆலமரத்தின் அடியிலும்
என் தாய் மண்ணின் மடியிலும்..
அருதியாய் - நான்
இறுதியாய் - தாங்கி நிற்கும்

மூச்சுக்காற்றுக்காய் ஈர உணர்வுகளுடன்........ :!:

வையாபுரி.

Print this item

  சுவாமி சுகபோதானந்தா தொகுப்பலிருந்து.
Posted by: nalayiny - 10-04-2003, 08:45 AM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்) - Replies (18)

குற்றம் கண்டுபிடிக்கும் குணம்

எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடிக்கும் குணம் நம்மில் பலருக்கு இருக்கிறது.
அடுத்தவர் செய்யும் குற்றங்களைக் கண்டுபிடிப்பதில் அப்படியொரு அலாதியான
சந்தோஷம். இப்படிக் குற்றம் கண்டுபிடிப்பதையே வழக்கமாக வைத்துக்
கொண்டிருந்தால் நாளடைவில் அது போதை வஸ்து மாதிரி ஆகிஇ நமது அறிவுப்
பார்வையை குறுகலாக்கிவிடும்.

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் பைனான்ஸ் மானேஜர் ஒருவர் நடந்து
போய்க் கொண்டிருந்தபோது திறந்திருந்த டிரெயினேஜ் பள்ளத்துக்குள்
விழுந்துவிட்டார். குடலைப் புரட்டி எடுக்கும் சாக்கடை நீரில் கழுத்துவரை மூழ்கிய
நிலையில் அவர் தத்தளித்துக் கொண்டிருந்தபோதுஇ அந்தப் பக்கமாக அவரது
அலுவலகத்தில் பணிபுரியும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் வந்தார்.

பைனான்ஸ் மானேஜர்னா கணக்கைத் தவிர வேற எந்த விஷயமும் தெரியாதுனு
சொல்வாங்க. அதுக்காகக் கண்ணுகூடவா தெரியாது? என்று மானேஜர் மீதிருந்த
தனது காழ்ப்பு உணர்ச்சியைக் கொட்டிவிட்டுஇ நடையைக் கட்டினார் அவர்.

அடுத்ததாக மானேஜரின் பக்கத்து வீட்டுக்காரர் வந்தார். என்ன சார்... இந்தப்
பள்ளத்துக்கு முன்னால கொட்டையா சிவப்பு எழுத்தில் 'ஜாக்கிரதை'னு பலகை
வெச்சிருக்கே! அதைப் பார்க்கலையா? ஹும்... நீங்கள்லாம் மானேஜர் உத்தியோகம்
பார்த்து என்னத்தைப் பெரிசா கிழிக்கப் போறீங்களோ? என்று சலித்துக்கொண்டே
ஒரு கையால் தன் மூக்கை மூடிக்கொண்டுஇ இன்னொரு கையை சாக்கடைப்
பள்ளத்தில் கிடக்கும் மானேஜரை நோக்கி நீட்டினார்.

ஆனால்இ மானேஜரைத் தொட முடியாத அளவுக்கு அந்தப் பள்ளம் மிகவும் ஆழமாக
இருந்தது. வேறு வழியின்றி அவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டார்.

அடுத்ததாகஇ அந்தப் பக்கம் மானேஜரின் நெடுநாளைய நண்பர் வந்தார். கழிவுநீர்ப்
பள்ளத்தில் மானேஜர் விழுந்து கிடப்பதைப் பார்த்து பதைபதைத்த அவர்இ தனது
சட்டையைக்கூடக் கழற்றாமல் அந்தச் சாக்கடைக்குள் குதித்தார். இந்தாஇ என்
தோள்மீது ஏறிஇ முதலில் நீ வெளியே போ! என்று மானேஜரை அந்தச்
சாக்கடையிலிருந்து வெளியேற்றினார்.

இந்தக் கதையில் வரும் மார்க்கெட்டிங் எக்ஸிகியூடிவ் மாதிரியோ அல்லது பக்கத்து
வீட்டுக்காரர் மாதிரியோஇ அடுத்தவர்களிடம் குறை காணும் நபர்களாகத்தான் நம்மில்
பலர் இருக்கிறோம் என்பது கசப்பான உண்மை.

கணவனும் மனைவியும் ஒருவர்மீது ஒருவர் குறை கண்டுபிடிக்காமல் வாழவேண்டும்.
தன் மனைவி குறையே இல்லாத முழுமையான மனைவியாக இருக்க வேண்டும்
என்று எதிர் பார்க்காதவர் யாரோஇ அவர்தான் உண்மையில் குறையே இல்லாத
முழுமையான கணவன்.

என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என் வீட்டுக்கு வந்து பாருங்கள். கட்டில்இ நாற்காலிஇ
சோபாஇ தையல் மெஷின் என்று எல்லா இடத்திலும் அழுக்குத் துணியாக இறைத்து
வைத்திருக்கிறாள். ஒரு வாரத்துக்கு முன்னால் வைத்த வத்தல் குழம்புஇ இரண்டு
வாரத்துக்குமுன் வைத்த ரசம் என்று பிரிஜ்ஜே நாறிக் கொண்டிருக்கிறது. இந்தக்
குற்றங்களை எல்லாம் அவளுக்கு நான் எடுத்துச் சொல்லக்கூடாதா? என்று சிலர்
கேட்கக்கூடும்.

தாராளமாகச் சொல்லுங்கள். ஆனால்இ அதற்குமுன் மிகச் சிறந்த புத்திமதி எது
என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஆயிரம் வார்த்தைகளில் புத்திமதி
சொல்வதைவிடஇ முன்உதாரணமாக நாமே வாழ்ந்து காட்டுவதுதான் மிகச் சிறந்த
புத்திமதி!

நான் சொல்வதை நம்புவதற்குச் சிரமமாகஇருந்தால்இ இந்த விளையாட்டை உங்கள்
குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.

ஒன்றுஇ இரண்டுஇ மூன்றுஇ நான்குஇ ஐந்துஇ ஆறுஇ ஏழு... என்று வரிசையாகச்
சொல்வேன். நான் ஏழு என்று சொல்லும்போது நீ கைதட்ட வேண்டும். சரியா?
என்று கேட்டுவிட்டுஇ ஒன்று இரண்டுஇ மூன்று... என எண்ணத் தொடங்குங்கள். ஆறு
என்று சொல்லும்போதேஇ நீங்கள் திடீரெனக் கைதட்டிப் பாருங்களேன். குழந்தையும்
சட்டென்று கை தட்டிவிடும்.

இதிலிருந்து தெரிவது என்ன?

குழந்தைகள் நாம் சொல்வதைப் பின்பற்றுவதில்லை. நாம் செய்வதைத் தான்
பின்பற்றுகின்றன. குழந்தைகள் மட்டுமில்லைஇ பெரியவர்களும் இப்படித்தான்.

அடுத்தவர்களுக்காக இல்லாவிட்டாலும் சுயநலமான காரணத்துக்காவது
அடுத்தவர்மீது குற்றம் காண்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சரி சுவாமிஇ நம் குழந்தையே ஒரு தப்பு செய்கிறது. அல்லது அலுவலகத்தில்
நமக்குக் கீழே வேலை செய்பவர் ஒரு தப்பு செய்கிறார். அடுத்த வீட்டுக்காரன்
குப்பையை எடுத்து வந்து நம் வாசலில் கொட்டுகிறான். யாரிடமும் குற்றம்
கண்டுபிடிக்கக்கூடாது என்று அப்போதும் வாய்மூடி மௌனியாக இருந்துவிட
வேண்டியதுதானா? என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

ஒருவர் செய்யும் தவறுகளைஇ அவருக்கு உணர்த்தக்கூடாது என்று நான் சொல்ல
வரவில்லை. ஆனால்இ அதை அவரே ரசிக்கும்படி சுட்டிக் காட்டலாம்.

ஒரு முறை யார் அழகு என்று ஸ்ரீதேவிக்கும் மூதேவிக்கும் சர்ச்சை உண்டாகி
விட்டது. தீர்வு சொல்லும் படி இருவரும் நாரதரை அணுகினார்கள். நாரதரோ
நிஜமாகவே சிக்கலில் மாட்டிக்கொண்டு விட்டார்!

ஸ்ரீதேவியாகிய லட்சுமி தான் அழகு என்றால்இ மூதேவிக்குக் கோபம் வந்து தன்
வீட்டிலேயே தங்கிவிடுவாள். மூதேவிதான் அழகு என்றால்இ ஸ்ரீதேவி
கோபித்துகொண்டு தன் வீட்டைவிட்டு வெளியேறி விடுவாள். என்ன செய்வது என்று
தெரியாமல் விழித்த நாரதர்இ யோசிப்பதற்கு நேரம் எடுத்துக்கொள்ளும் விதமாகஇ
எங்கே... சற்று முன்னும் பின்னுமாக நடந்து காட்டுங்கள் என்றார்.

ஸ்ரீதேவியும் மூதேவியும் நாரதர் முன் கேட்வாக் நடை நடந்தார்கள். சட்டென நாரதர்இ
"ஸ்ரீதேவி வரும்போது அழகு. மூதேவி போகும் போது அழகு!" என்று சொல்ல... இரு
தேவிகளுக்குமே பூரிப்பு!

அங்கே ஜெயித்தது ஸ்ரீதேவியுமல்லஇ மூதேவியுமல்ல... நாரதர்தான்!

சுவாமி சுகபோதானந்தா தொகுப்பலிருந்து.

Print this item

  அங்கினை இங்கினை பொறுக்கி யாழில்.
Posted by: nalayiny - 10-04-2003, 08:22 AM - Forum: தமிழும் நயமும் - Replies (5)

<!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
:wink:

மொழிநடை இராம.கி

--------------------------------------------------------------------------------

"மொழி என்பது வெறும் கருத்துப் பரிமாற்றத்திற்குத் தானே? இதை ஏன் தலையிற் தூக்கி வைத்துக் கொண்டு
இந்தத் தமிழர்கள் காலம் காலமாய்க் கூத்தாடுகிறார்கள்? இந்தக் கூத்தில் தமிழ்த்தாய் என்றொரு படிமம்
கொடுத்துத் தமிழை ஒரு அம்மன் போல ஆக்கி நெய் விளக்கேற்றி ஆலத்தி காட்டிப் பூசை செய்து......
மொத்தத்தில் தமிழர்கள் வெறி பிடித்து அலைகிறார்கள். இவர்களுக்கு இதே பிழைப்பாய் போய்விட்டது;
மொழி என்று வந்தால் உணர்ச்சி வயப் பட்டுஇ அணங்கு வந்தது போல அரற்றுகிறார்கள். தவிரஇ இந்திய
மொழிகளுக்கெல்லாம் தாயான (?) வடமொழியை எதிர்த்துப் புலம்புகிறவர்கள் இவர்கள் மட்டுமே! இந்தியன்
என்ற உணர்வே இவர்களுக்குக் கிஞ்சித்தும் கிடையாது."

"மொழி என்பது மாறிக் கொண்டே இருக்கும் என்று தமிழர்களுக்குத் தெரியாதா? மாற்றத்திற்கு ஏற்பப் பழக
வேண்டியதுதானே? எப்படிப் பேசுகிறோமோஇ அப்படி நடை பழகினால் என்ன? இதில் என்ன தூய தமிழ்இ
தனித்தமிழ்இ மண்ணாங் கட்டி? இப்படியெல்லாம் அடம் பிடித்தால்இ அப்புறம் சங்க காலத்திற்குப் போக
வேண்டியதுதான்; சங்க காலத்தில் கூட வடமொழி மிகச் சிறிதாவது கலந்துதானே எழுதினார்கள்; இந்த
நிலையில் இன்றைக்கு ஆங்கிலம்இ வடமொழி கலக்காமல் தமிழில் எழுத முடியுமா? அப்படி எழுதினால் அது ஒரு
செயற்கையாக இல்லையா? ஆங்கிலத்தின் வாயிலாய் எவ்வளவு செய்திகள் சொல்லப் படுகின்றன? அவை
ஒவ்வொன்றிற்கும் சொல் கண்டுபிடித்துக் கொண்டிருந்தால்இ வாழ்நாள் தீர்ந்துவிடாதா? மற்றவர்கள் முன்னே
போய்விட மாட்டார்களா?"

மேலே கூறிய வகையில் பேசுபவர்கள் தமிழர்களுள்ளும்இ தமிழர்கள் அல்லாத மற்ற இந்தியர்களுள்ளும்
இருக்கிறார்கள். காலத்தின் கோலம் இன்றைக்கு இவர்களை வலிந்தவர்களாகஇ படித்தவர்களாகஇ
மிடையக்காரர்களாகஇ பொதுக் கருத்தை உருவாக்குவதில் பெரும் தாக்கம் உடையவர்களாக மக்கள் நடுவில்
ஆக்கி வைத்திருக்கிறது. இதன் விளைவாகத் தமிழ் பற்றிப் பேசுவதே இன்றையத் தமிழகத்தில் இகழ்வானதாக
எண்ணப்படுகிறது. இதற்குத் தோதாக இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்துஇ இது நாள் வரை தமிழ்
பற்றித் தமிழகத்தில் வாய் கிழியப் பேசிவந்தவர்கள் பலரும் (குறிப்பாக அரசியலிற் பங்கு
கொள்பவர்கள்)இ கொள்கைப் பிடிப்பில் தளர்ந்து போய்இ வாழ்க்கையின் போக்கால் நொய்ந்துஇ பணம்இ
சொத்துஇ பதவி என்று எல்லாவற்றிற்கும் ஆட்பட்டு தற்காத்து தற்கொண்டவை மட்டுமே பேணி நீர்த்துப்
போனார்கள். தமிழைப் பற்றிப் பேசுபவர்கள் இன்றைக்கு மிகக் குறைந்து போனார்கள்.

இந்த நிலையில் தான் இக்கட்டுரையில் மொழிநடை பற்றி கொஞ்சம் சிறிதளவு அலச முற்படுகிறேன்.

மொழி என்பது கருத்துப் பரிமாற்றத்திற்காக உள்ளதுதான். இதில் யாருக்கும் இரண்டு கருத்துக் கிடையாது.
ஆனால் கருத்துப் பரிமாற்றம் எழ வேண்டுமானால் நான் எழுப்புகின்ற ஓசை உங்களுக்குப் புரிய வேண்டும்இ நீங்கள்
எழுப்புவது எனக்குப் புரியவேண்டும் அல்லவா? சரியாகச் சொன்னால்இ குறிப்பிட்ட ஓசைகளின் படிமங்கள் நம்
இரண்டு பேர் மனங்களின் உள்ளே இருக்க வேண்டும் அல்லவா? இதைப் பற்றி விளங்க ஒரு சில காட்டுகளைப்
பார்ப்போம்.

தென்மாவட்டங்களில்இ குறிப்பாக மதுரைப் பக்கம்இ சில போதுகளில் நம் மக்கள் குலவையிடுகிறார்கள்.
இந்தக் குலவைச் சத்தம் ஒரு வாழ்த்துக்கான அறிகுறிஇ பண்பாட்டின் தொகுதி என்று நமக்கு புரிந்தால் அல்லவாஇ
நாமும் குலவையிடுவோம்? அது தெரியவில்லையெனில் குலவை என்பது ஏதோ ஒரு பொருள் அற்ற கூப்பாடாக
அல்லவா தெரியும்?

இதே போலஇ நம்மிடம் பேசும் போது இன்னொருவரைக் குறித்து "ஆமாஇ இவுங்க என்னத்தைக் கிழிச்சாங்க?"
என்று நண்பர் ஒருவர் சொல்லுகிறார்; இங்கே "எதைச் செய்தார்கள்?" என்றல்லவா அந்த நண்பரும்இ நாமும்
பொருள் கொள்ளுகிறோம். இந்தப் புரிதல் இல்லாதஇ குறிப்பாகத் தமிழர் அல்லாத ஒருவருக்கு இந்தப்
பொருட்பாடு விளங்குமா?

இன்னும் ஒரு எடுத்துக் காட்டைப் பார்ப்போம். எழுத்தாளர் கி.இராசநாராயணன் பல்வேறு நாட்டுப்புறக்
கதைகளைத் தொகுத்து வெளியிட்டு உள்ளார். அதில் ஒரு கதை இப்படிப் போகும். தம்பிக்காரன் ஒருவன் ஊர்
மணியமாக இருந்தபோதுஇ ஊருக்குள் ஒரு தாய் இறந்த வீட்டில்இ "உங்களுக்கு மட்டுமாஇ அவர்கள் தாயாக
இருந்தார்கள்? ஊருக்கே தாயாக இருந்தார்கள்" என்று சொன்னதைக் கேட்டுஇ பிறிதொருநாள் அவனுடைய
அண்ணன்காரன் தான் மணியமாக நடந்து கொள்ளவேண்டிய பொழுதில்இ தங்கள் ஊரில் ஒருவனின் மனைவி இறந்த
வீட்டில்இ "உங்களுக்கு மட்டுமாஇ அவர்கள் மனைவியாய் இருந்தார்கள்...." என்று சொல்லி அடிவாங்கிக் கட்டிக்
கொண்டானாம். "எந்த இடத்தில் எப்படிச் சொல்லுவது? எதைச் சொல்லுவது? எப்படி மொழியைப்
பயன்படுத்துவது?" என்று பண்பாட்டைத் தெரிந்தால் அல்லவாஇ நாம் இப்படி அடிவாங்காமல்இ கிறுக்கன் என்று
பெயர் வாங்காமல் இருக்க முடியும்? இடம்இ பொருள்இ ஏவல் அறிந்து பேச முடியும்? இதற்கு நல்ல மொழிநடைஇ
பண்பாட்டு மரபுகள் தேவையல்லவா?

நம்மூரில் போய்இ ஒருவரின் வரவேற்பை "வெதுவெதுப்பாக இருந்தது" என்று சொல்ல முடியுமோ? "இதமாக
இருந்தது" என்றல்லவா சொல்லவேண்டும்? இதற்குத் தமிழ்நடை தெரியத்தானே வேண்டும்?

மொத்தத்தில் சொன்னால்இ மொழியும்இ அதன் சொற்களும்இ இலக்கணமும்இ நடையும் நம்முடைய நடைமுறையையும்இ
பண்பாட்டையும்இ பழக்க வழக்கங்களையும் அடிப்படையாகக் கொண்டவை. என்னுடைய நடைமுறையும்இ பண்பாடும்இ
பழக்க வழக்கங்களும் உங்களோடு ஓரளவாவது பொருந்தினால் தானே நான் சொல்லுவது உங்களுக்கும்இ நீங்கள்
சொல்லுவது எனக்கும் புரியும்.

இந்த அடிப்படையைச் சொல்வதற்கும்இ புரிபடுவதற்கும் தான் இந்தக் காலத்தில் இவ்வளவு பாடுபட
வேண்டியிருக்கிறது. நாம் ஓவ்வொருவரும் மழலைப் பருவத்தில் இருந்து நமக்கென்று ஒரு சொல் தொகுதியைச்
சேர்த்துவருகிறோம். இது வாழ்வில் நமக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பொறுத்தது. இந்தச் சொல்தொகுதி
வெறும் பத்தோடு இருக்கலாம்; பத்தாயிரமாகவும் இருக்கலாம்; நிரவலாகப் பார்த்தால்இ இன்றைக்கு ஒரு
தமிழனுக்குத் தெரிந்த சொல் தொகுதி வெறும் மூவாயிரத்தில் இருந்து நாலாயிரம் என்றே மொழியாளர்கள்
சொல்லுகிறார்கள்; இது மிகக் குறைவு. குறைந்தது இரண்டு மடங்காக ஏழாயிரத்தில் இருந்து எட்டாயிரமாகத்
தெரிந்தால் தான் எந்தச் செய்தியையும் தமிழில் எளிதாகச் சொல்ல முடியும்; கிரியாவின் இற்றைக்காலத்
தமிழ் அகரமுதலியிலேயே பதினாறாயிரம் வார்த்தைகள் தான் இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இதுவும்
மிகக் குறைவான பதிவீடே!

தமிழ்ச் சொற்கள் நம் வாயில் தடையின்று வரவேண்டி இருக்க. மிகக் குறைந்த அளவே தமிழ்ச் சொற்களை
அறிந்திருந்தால்இ அன்றாட வாழ்வில் நுணுகிய கருத்துக்களை தமிழில் எப்படிச் சொல்வது? குண்டுசட்டிக்குள்ளா
குதிரை ஓட்ட முடியும்? இதன் விளைவாகத்தான் படித்தவர்கள் ஆங்கிலம் கலந்து பழகுவதும் பண்ணித் தமிழ்
பேசுவதும் என இந்தக் காலத்தில் வெளிப்படுகிறது. (அண்மையில் ஒரு பேர் பெற்ற தாளிகையாளர் ஒரு
இணையதளத் தொடக்க விழாவில் பேசினார். முற்றிலும் தமிங்கிலம். கேட்டுக் கொண்டிருந்த பலரும் வியந்து
போனோம். இந்தத் தாளிகையாளரை ஆசிரியராகக் கொண்ட தாளிகை தமிங்கிலத்தையே தன்
நடைமொழியாகக் கொண்டது வியப்பில்லை தான்.) தப்பு யாரிடம்? நம்மிடமா? மொழியிடமா? இப்படி
மெத்தப் படித்தவர்கள் தப்புப் பண்ணப் போகஇ அதைப் பார்த்துப் படிக்காதவர்களும் ஆங்கிலம் கலந்த தமிங்கில
நடைதான் மதிக்கப் படுகிற நடை என்று ஒரு போலியான நடையைச் சரியென்று கருதிஇ கான மயிலாடக்
கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்து ஆடுவது போலப் பயிலுகிறார்கள். மொத்தத்தில் வாலறுந்த
நரியின் கதைதான். எல்லோரும் மடிக்குழைப் பள்ளிக்குப் படையெடுக்கிறார்கள். கண்ணிரண்டும் விற்றுச்
சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?

பிழையை நம்மிடம் வைத்துக் கொண்டுஇ நாம் அறிந்த தமிழ்ச் சொற்களின் தொகுதியைக் கூட்டிக்
கொள்ளாமல்இ நம்மைச் சுற்றி இருக்கும் உற்றார்இ உறவினர்இ சுற்றம்இ நண்பர்களுக்கும் அதைத் தூண்டாமல்இ
ஆங்கிலம் கலந்து பேசிவிட்டு "பின் தமிழில் அதைச் சொல்லமுடியாதுஇ இதைச் சொல்ல முடியாது" என்று
சொல்ல முனைவதுஇ நம் பிழையை மொழியின் மேல் ஏற்றிச் சொல்வது அல்லவா? நம்மில் எத்தனை பேர்
தமிழ்-தமிழ் அகரமுதலியை வாங்கி வீட்டில் வைத்திருந்து அவ்வப்போது பயின்று சொல் தொகுதியைக் கூட்டிக்
கொள்ளூகிறோம்? ஒவ்வொரு சிறு உரையாடலிலும்இ தெரியாமல் ஆங்கிலம் பயின்று பின் அதை உணர்ந்துஇ
அடுத்தமுறை தமிழில் அதைப் பழகுகிறோம்? இந்த நடைமுறை ஒன்றும் பல்பெயர்க்கும் புதுச்சொற்கள் அல்ல.
எல்லோருக்கும் அறிந்த தமிழ்ச் சொற்களே. வாருங்கள் என்று சொல்ல முடியாமல் உழஅந in என்று சொல்லும்
தமிழர்கள் எத்தனை? மகிழ்வதற்கு மாறாக நதெழல பண்ணுகிறவர்கள் எத்தனை? நன்றி சொல்லத் தயங்கி
வாயமௌ பண்ணும் தமிழர்கள் எத்தனை? இது சோம்பலா? அறியாமையா? அல்லது வரட்டுத் தனமா? இரண்டு
தமிழர்கள் ஒருவரை ஒருவர் காணும் போது செய்யும் உரையாடலில் இன்று 40மூ தமிழ் இருக்குமானால்இ இன்னும்
ஒருவாரத்தில் 45மூ தமிழ் இருக்க வேண்டாமா?

தனித்தமிழ் என்பது ஒரு அடையாளம்இ குறியீடு; அதை நோக்கி நாம் போகிறோம். போகும் வழியில்
நல்ல தமிழ் வந்தால் இப்பொழுது போதும். சிலபேரால் 95மூ விழுக்காடு தனித்தமிழ் பேச முடியும்;
இன்னொருவரால் 50மூ விழுக்காடு தான் செய்ய முடியும். இதில் ஒருவர் குறைந்தவர்இ மற்றவர் தாழ்ந்தவர் என்று
எண்ணுவது தவறு. சரியாகப் பார்த்தால்இ இருவரும் தாங்கள் பேசும் தனித்தமிழ் அளவை இடைவிடாது கூட்ட முயல
வேண்டும். அந்த வளர்ச்சி எண்ணம் தான் முகமையானது; எத்தனை விழுக்காடு என்பது ஒரு பொருட்டல்ல. இப்படி
வளர்ப்பு முயற்சியே செய்யாமால் வெறுமே வேதம் பேசிக் கொண்டு வெந்நீர் ஊற்றிக் கொண்டு "அது முடியாதுஇ
இது முடியாதுஇ தமிழர்க்கு வெறி" என்று மந்திரம் ஓதிக் கொண்டு இருப்பதில் பொருள் என்ன?

மொழியை அம்மன் ஆக்குவதுஇ கூத்தாடுவது என்பதெல்லாம் வெறும் உணர்வு வெளிப்பாடுகள்; அவற்றால் எந்தப்
பயனும் கிடையாதுதான்; அதே பொழுது பாரத மாதா என்பதும் ஒரு படிமம் தானே? தாய் நாடுஇ தந்தை நாடு
என்பதும் ஒரு படிமம் தானே? இந்தப் படிமங்கள் முன் வைக்கப் படுகின்றனவே? இப்படி ஒரு படிமம் ஏற்றுக்
கொள்ளக் கூடியதுஇ இன்னொன்று ஏற்றுக் கொள்ளக் கூடாதது என்பது ஒரு ஓரப் பார்வை அல்லவா? தமிழ்த்தாய்
வாழ்த்து என்பது தமிழர் என்ற உணர்வை உறுதிப் படுத்துவதற்காகக் கொண்டு வரப் பட்டது. தமிழருள்ளும் மற்ற
பிரிவினைகள்இ குறிப்பாக சாதிஇ மதம் போன்றவை மேலோங்காது தமிழர் ஓரினம் என்ற படிமத்தை
அழுத்துவதற்காக இந்த வாழ்த்துக்கள் எழுந்தன. இந்தியா என்பது பல தேசிய இனங்கள் கொண்ட ஒரு நாடு
என்பதை மறுப்போர் மட்டுமேஇ இந்தத் தமிழ்த்தாய் என்ற படிமத்தை மறுக்கிறார்கள். இந்தக் கேள்வியை இங்கு
அலசினால் சொல்ல வந்த பொருள் விலகிவிடும் என்பதால் நான் முற்படவில்லை. இப்பொழுது தமிழ் நடை
பற்றி மட்டுமே பேச விழைகிறேன்.

முதலில் கலப்பு நடைக்குச் சிலர் அளிக்கும் சப்பைக் கட்டு.

"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே!"

என்ற தொல்காப்பிய நூற்பாவையே வைத்துக் கொண்டு கலப்பு நடைக்குப் பரிந்து வருபவர்கள் பலரும் உண்டு.
இத்தகைய கூற்றும் பொருந்தாக் கூற்றே. இந்த நூற்பாஇ தமிழில் ஏற்படும் பலுக்கல்இ சொல்இ சொற்றொடர்இ
இலக்கணம் போன்ற மாற்றங்களைப் பற்றியதே ஒழிய வரைமுறை இன்றிக் கடன் வாங்குவது பற்றி அல்ல.

இந்தக் கலப்பு நடைக்குப் பரிந்து வருபவர்கள் தங்களுடைய ஆங்கில நடையில் இப்படிக் கலந்து எழுதுகிறார்களா?
அதை அலுவற் புலனங்களிற் புழங்க முடியுமா? வெறுமே ஆங்கிலம் கடன் வாங்குகிறது என்று சொல்லிக்
கொண்டிருக்கிற இவர்கள் ஐ pயnnகைநைன ய எளைவை என்று எழுதட்டுமே? மற்றவர்கள் நகை தவிர்த்த முறையில்
ஏற்கிறார்களா என்று பார்ப்போம்? பிறகு ஏன் எளைவை பண்ணினேன் என்று எழுதுகிறார்கள். இதைத் தமிழில்
ஏற்க வேண்டுமோ? வந்திருந்தேன் என்று சொல்லுவது இளக்காரமா? இந்த எளைவை என்ற சொல்லைத் தவிர்த்துத்
தமிழில் பேசினால் விளங்காதா? அந்த ஆங்கிலச் சொல்லைத் தமிழர்களுக்குள் பேசும் போது தவிர்த்தால்
என்ன? அதை முடிந்த மட்டும் தவிர்த்துப் பாருங்களேன்; அதற்காக முயலுங்களேன்.

சிறுதுளி பெருவெள்ளம் என்பது நல்லதற்கும் உண்டும்; பொல்லாததற்கும் உண்டு. ஆங்கிலச் சொற்களைக் கொஞ்சம்
கொஞ்சமாகத் தவிர்க்கலாம்; அதே போலக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டிவரலாம். ஒன்றில் நம்மொழி
நிற்கும்; இன்னொன்றில் நம்மொழி சிறிது சிறிதாக மறையும். உகப்பு நம்மிடம் தான்.

அடுத்தது வேற்று மொழி ஒலிகளைப் பற்றியது. "இந்த ஒலிகள் எல்லாம் தமிழில் இல்லை; இவையெல்லாம்
வேண்டாமா?" என்ற கேள்வியைச் சிலர் எழுப்புகிறார்கள். நாம் தமிங்கிலம் பழகப் போகிறோம் என்றால்
இந்த ஒலிகள் எல்லாம் தேவையே? தமிழ் ஆளப் போகிறோம் என்றால் இந்த ஒலிகளை பிறைக்குறிக்குள்
ஏதோ ஒரு வகையில் குறிப்பது தவறில்லை. ஆனால் அதற்காகத் தமிழில் புதுக் குறியீடுகள் தேவையில்லை.
வெறும் 31 குறியீடை வைத்து 40-45 ஒலிகளை எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தக்
குறியீடுகளைக் கூட்டிக் கொண்டு போவதில் பொருள் இருக்கும் என்று இதுகாறும் எனக்குத் தோன்றவில்லை. அதே
பொழுது இதை முடிந்த முடிவாகவும் நான் சொல்லவில்லை. இந்தக் கேள்வி அவ்வளவு முகமையில்லாத ஒன்று என்று
நான் நினைக்கிறேன். இதைப் பின்னொரு நாளில் பார்ப்போம்.

அடுத்துஇ நடை பற்றிய உரையாடலில்இ பேச்சுத்தமிழ் எழுத்துத்தமிழ் என்ற இரண்டு நடை இருப்பதைக் கூறி
"பேசுவதுபோல் எழுதினால் என்ன? என்ற கேள்வி நெடுநாளாக இருந்துவருகிறது. பேச்சுத் தமிழ் என்பது
இன்றைக்கு எழுத்தில் இருந்து வெகுதொலைவு விலகித்தான் போயிற்று. இப்படிப் பேச்சுத்தமிழுக்கும்
எழுத்துத்தமிழுக்கும் இடைவெளி ஏற்பட்டுப் பின் புதிய நடை ஏற்றுக் கொள்ளப்பட்டு புதிய இலக்கணம் படைப்பதும்
வழி வழி வந்ததுதான். அதனால் தான் வள்ளுவனும்இ இளங்கோவும்இ கம்பனும்இ பாரதியும் அவர்கள் காலத்தை
ஒட்டிஇ ஒரு குறியீடு ஆனார்கள். அவர்கள் காலத்தில் மொழி நடையை எளிமைப் படுத்தினார்கள். இப்படி
எளிமைப் படுத்திய படிதான் நன்னூல் இலக்கணம் இடைக்காலத்தில் எழுந்தது. இதே போலஇ மு.வ.வின் இலக்கணப்
பொத்தகம் 1960 களில் பெரிதும் பரவியது.

படைப்பாக்கங்களில் முற்றிலும் பேச்சுத்தமிழாகவே எழுதினால் முந்தையத் தமிழோடு தொடர்பற்றுப் போகும்.
அதே பொழுது முற்றிலும் முந்தையத் தமிழாகவே எழுதினால் படிப்போரோடு நெகிழ்வு விட்டுப் போகும்.
இதில் சரியான காவை என்பது நாம் எடுக்கும் வடிவத்தைப் பொறுத்தது. கதை மாந்தர் பேசுவது பேச்சுத்
தமிழாகவும்இ கதையாசிரியன் பேசுவது எழுத்துத்தமிழாகவும் இருப்பது ஓரளவு சரியாக இருக்கலாம். இதுதான்
சரி என்று அடையாளம் காட்ட முடிவதில்லை. கூடிய மட்டும் கொச்சைப் பேச்சைத் தவிர்த்துஇ அதே பொழுது
வட்டார வழக்குகளைத் தவிர்க்காமல் எழுத முடியும்; இதற்குப் பயிற்சி வேண்டும்.

அடுத்த கருத்து துல்லியம் பற்றியது. தமிழில் பலரும் நம் நடையில் பூசி மெழுகினாற் போல பொதுச்
சொற்களை வைத்து துல்லியம் இல்லாமல் சொல்லி வருகிறோம். சொற்களின் ஆழம்இ துல்லியம்இ விதப்பு
(ளிநஉகைiஉவைல) தெரிந்து பயன்படுத்துவது நல்லது. யளமஇ நஙெரசைந என்ற இரண்டு சொற்களுக்கும் கேட்டல்
என்றே இந்தக் காலத்தில் பயன்படுத்துகிறோம். இரண்டும் ஒன்றா? இல்லையே? ஒன்றைக் கேட்டல் என்றும்இ
இன்னொன்றை வினவுதல் என்றும் குறிப்பிட்டுச் சொல்லுவது நம்மில் மிகவும் குறைந்திருக்கிறது. நாம் துல்லியம்
பார்க்காவிட்டால்இ மொழியின் புழக்கம் குறையும்; முடிவில் பண்ணித் தமிழுக்குத் தாவி விடுவோம்.

இன்னொன்று வாயால் ஒலித்துப் பலுக்குவது. ஒரு சொல்லைச் சொல்லுகிறோம். அதன் எழுத்துக்களை பிரித்து
ஒலிக்க வைத்துக் காட்டுவதைப் பலுக்குவது என்று சொல்லுகிறோம். ஆங்கிலத்தில் ளிநடடiபெ என்கிறார்கள்.
ஒரு சொல்லை உயிர்த்துக் காட்டுவது
உயிர்தருவித்தல்,உயிர்தரித்தல்,உயிர்ச்சரித்தல்,உய்ச்சரித்தல்,உச்சரித்தல் என்று ஆகும்; இதைத்தான்
ஆங்கிலத்தில் எழஉயடணையவழைn என்கிறார்கள். இங்கே மாத்திரைகளின் நீளம் கூடக் குறைந்து காட்டப்
படுகிறது. இந்த இரண்டுமே இன்றையத் தமிழர்களிடம் மிகக் குறைந்து இருக்கிறது. அதனால் தான் ரகரஇ
றகரத் தகறாறும்இ லகரஇ ளகரஇ ழகரக் குழப்பமும் இருக்கிறது. இகரஇ எகரக் குழப்பம்இ உகரஇ ஒகர மாற்றம்
எல்லாமே உயிர்தருவித்தலின் கோளாறு. நூற்றுக்கு 70 பேருக்கு மேல் தவறாகப் பலுக்குகிறோம். 20மூ ஆவது
உயிர் தருவித்தலில் குறைபடுகிறோம். மொழிநடை பண்படவேண்டுமானால்இ இதுவும் மாறவேண்டும்.

அடுத்தது உள்ளடக்கம் பற்றியது. தமிழ் என்றாலே பழமை பேசுவதற்கும்இ இலக்கியம் உரைப்பதற்கும்இ கவிதைஇ
கதை படைப்பதற்கும் என்று எண்ணிக் கொள்ளுகிறோம். இந்தக் கதைஇ கவிதைஇ கட்டுரைஇ துணுக்குஇ நகை
எல்லாம் வெறும் வடிவங்கள். இவற்றிற்குள் சொல்ல வரும் செய்திகள் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். தமிழ்
சவலைப் பட்டுக் கிடக்கிறது என்கிறோம்; ஆனால் அதைக் கவனிக்க முன் வர மாட்டேன் என்கிறோமே? பல
துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் தமிழில் படைக்க முன் வரவேண்டும். புதிய உள்ளடக்கங்கள் தமிழுக்குள்
வரவேண்டும்;நேற்று எழுந்த செய்தி இன்றைக்குத் தமிழில் வரவேண்டும்; வெறுமே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்
வந்ததை மட்டுமே தமிழில் எழுதி என்ன பயன்? இன்றைய உயிரியலில் ஒரு ஆக்கம்? இன்றையப் பொருளியலில்
ஒரு ஆக்கம்? இன்றையப் பூதவியலில் ஒரு ஆக்கம்? இன்றைய ஓவியம் பற்றி ஒரு ஆக்கம்? இன்றைய மாந்தவியல்
பற்றி ஒரு ஆக்கம்? இன்றையச் சட்டத்துறை பற்றி ஒரு ஆக்கம்? இன்றைய மின்னியல் பற்றி ஒரு ஆக்கம்?
உடற்கூறு பற்றி இன்று வந்த ஒரு ஆக்கம்? இவை எல்லாம் மேலே சொன்ன வடிவங்களில் வரட்டுமே? இன்று
புதிதாய்ப் பிறந்தோம் என்று நாம் ஆக வேண்டாமா? வெறுமே ஒரு சிலர் மட்டும் தனிச் சால் போட்டுக்
கொண்டு கருமமே கண்ணாயினராய் இருப்பது எந்த வகையிற் சாலும்? அவர்களோடு சேர்ந்து என்ன செய்தோம்
என்று நாம் எல்லோரும் எண்ண வேண்டாமா? இதைச் செய்தால் தானே நம் நடையும்இ மற்றவர் நடையும் வளப்படும்.
தமிழின் மொழிநடையும் இந்தக் காலப் புலனங்களுக்கு நெகிழ்ந்து கொடுக்கும்.

மொழி நடை என்பது நம் கையில். அதை ஆற்றுப் படுத்த வேண்டியது நம் பொறுப்பு.

--------------------------------------------------------------------------------

Print this item

  இணைய நிறுவனம்
Posted by: இளைஞன் - 10-04-2003, 07:41 AM - Forum: இணையம் - Replies (1)

வணக்கம் நண்பர்களே...

புதிய இணையத்தள சேவை பற்றிய செய்தி இது.
ஜேர்மனியில் வசிக்கும் தமிழ் இளைஞர் ஒருவரால் இணையத்தளத்தினூடான
நிறுவனம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் கணினி, கணினி
உதிரிப்பாகங்கள் மற்றும் இலத்திரனியற் பொருட்கள் யாவும் பெற்றுக் கொள்ள
முடியும்.

மேலும் இது சட்டமுறைப்படி பதிவு செய்யப்பட்ட நேர்மையான நிறுவனம்
என்பதால், நம்பிக்கைக்கு உரியது என்பதும் குறிப்பிடத்தக்கது. வழமைபோல
பொருட்களுக்கான ஒரு வருட, இருவருட உத்தரவாதங்கள் உண்டு. இன்னொரு
முக்கியமான நன்மை யாதெனில், நீங்கள் நாதாரணமாக கடையில் சென்று
வாங்கும் பொருட்களுக்குக் கொடுக்கும் விலையைவிட, 10 இலிருந்து 25 வீதம்
வரை பொருட்கள் மலிவாக விற்பனை செய்யப்படுகிறது.

இணையத்தளம்: www.net-flash.com
விபரங்களிற்கான மின்னஞ்சல் முகவரி: info@net-flash.com
பொருள் வாங்க - மின்னஞ்சல் முகவரி: sales@net-flash.com

விலை ஒப்பீட்டிற்கான இணையத்தளத்தின் வேலைகள் இன்னும் முடிவுறவுறாத
காரணத்தால், இணையப்பக்கத்தை தற்போது உங்களால் பார்வையிட இயலாது.
எனவே அதுவரை உங்களுக்கு விலை விபரங்களோ, பொருட்களோ தேவைப்படின்
மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளலாம்.

இந்தத் தகவலை உங்களுக்குத் தெரிந்தவர்க்கும், நண்பர்க்கும் அறிவிக்குமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

Print this item

  Baghban
Posted by: Mathivathanan - 10-04-2003, 01:32 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - No Replies

<span style='font-size:25pt;line-height:100%'>Baghban</span>

ஒரு ஹிந்தித் திரைப்படமாயினும் பார்க்கப்படவேண்டிய ஒரு திரைப்படம்
[Image: thumb?height=234&width=234&photoID=187777]
Big B returns to the screen in Baghban, in a complete anti-thesis to his role in skin-flick Boom. And walks away taller in a family drama, overshadowing others.

His role as an over-sexed don in Kaizad Gustad's Boom provoked a lot of anger from his fans. If you hated Amitabh Bachchan in Boom, expect your fury to melt with Baghban. This emotional family drama by Ravi Chopra may not be a great entertainer, but it has its moments.

You might find the film a bit maudlin, but you might also find yourself crying. If even you don't, you can at least hear the sobs in the hall, like we did when we looked around grown-ups wiping their tears unabashedly.

This simple tale of an old couple played by Bachchan and the ravishing Hema Malini is bound to find an echo in everyone's lives.

You are reminded of moments when you have resented your parents' interference or when your children were too caught up with their lives, moments which are a part of everyone's life. Baghban's strength lies in that it is less sermonising and more loving. The first half is about Raj Malhotra (Bachchan) and wife Pooja how their love is still going strong despite 40 long years of matrimony. The veteran actors steal the show and infuse life into what could have been a dull romance at 60.

Once the old man retires, the couple wants to move in with the sons. The four children are reluctant and decide to have one parent over for six months each. Separation brings about suffering, aggravated by the children's indifferent behaviour. Thankfully, there are no sadistic daughters-in-law here like in Avataar (Rajesh Khanna, Shabana Azmi), the film closest in theme. Only, the children have moved on with their lives, consumed by the pressures of big city life.

Salman Khan makes a brief appearance as the adopted son, and is a picture of the obedient offspring. Only, the picture is larger than life again. He sleeps at his father's feet and has his parents photograph along with the idols of gods. Gloss over these idiocies and an average soundtrack and Baghban is the Hum Aapke Hain Kaun? of an unhappy family.
http://timesofindia.indiatimes.com/cms.dll...how?msid=215095

Print this item

  Å¡º¢ôÀ¢ý §¿ºý
Posted by: þ.þº¡ì - 10-03-2003, 12:02 PM - Forum: அறிமுகம் - Replies (26)

«ýÒ Á¢ì¸ ¾Á¢ú ¦¿ïºí¸§Ç!
¿¡ý Å¡º¢ôÀ¢ý §¿ºý
Å¡öôÒ¸¢¨¼ìÌõ §À¡¦¾øÄ¡õ
ÀÊô§Àý. Å¡ú쨸§Â ´Õ À¡¼º¡¨Ä!
«ôÀÊ¡¸ ¾¡ý þíÌ Ñ¨Æó§¾ý,
þýÚ
¯í¸Ç¢ø ´ÕÅÉ¡¸
¯í¸Ç¢ý «È¢Å¡÷ó¾ À¾¢ôÒ¸¨Ç ÀÊô§Àý
Å¡öôÒ ¸¢¨¼ìÌõ §À¡Ð
±ÉìÌ ¦¾Ã¢ó¾Åü¨ÈÔõ À¾¢ô§Àý

<b>¾Á¢ÆÃ¡ö ¦¿¸¢ú§Å¡õ
¾Á¢Æ¢ø §Àº¢ Á¸¢ú§Å¡õ

à §¿Âý
[b]þ.þº¡ì</b>

Print this item

  கண்ணிக்கு அஞ்சும் கன்னி...!
Posted by: kuruvikal - 10-03-2003, 11:25 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

ஜெவின் பாதுகாப்பில் மாற்றம்: புல்லட் புரூ ஃப் கார் உடை பயன்படுத்த முடிவு

<img src='http://thatstamil.com/images14/jaya-45.jpg' border='0' alt='user posted image'>

சென்னை:

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தியதன் எதிரொலியாக, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாயுடுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்த காரணத்தால்தான் கண்ணி வெடித் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் ஆந்திர நக்சல்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் ஆதரவும், ஆட்களும் உள்ளதால் ஜெயலலிதாவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டள்ளது. குறிப்பாக வீரப்பனின் காட்டுப் பகுதியில் தமிழ்த் தீவிரவாத இயக்கங்களுககும் நக்சலைட்டுகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக நம்பப்படுகிறது.

ஆந்திராவில் மிக பலத்த பாதுகாப்பில் இருக்கும் நாயுடுவையே தாஙகள் நினைத்த நேரத்தில், நினைத்தபோது தாக்க முடியும் என்பதை நக்சலைட்டுகள் காட்டிவிட்டனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நக்சல்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளால் நிச்சயம் ஆபத்து வரலாம் என மத்திய, மாநில உளவுப் பிரிவுகள் கருதுகின்றன.

தற்போது ஜெயலலிதாவுக்கு தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் 'முதல் ரிங்' பாதுகாப்பு வழங்குகின்றனர். இது தவிர தமிழக போலீசாரின் கமாண்டோ படை 'இரண்டாவது ரிங்' பாதுகாப்பு வழங்குகின்றனர்.

நாயுடு மீதான தாக்குதலைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் முதல்வர் ஜெயலலிதாவின் பாதுகாப்பில் சில மாற்றங்களைச் செய்ய வலியுறுத்தியுள்ளது.

இனிமேல் வெளியில் செல்லும்போது குண்டு துளைக்காத உடைகளை அணியுமாறு ஜெயலலிதா அறிவுறுத்தப்பட்டுள்ளார். அதேபோல, குண்டு துளைக்காத காரை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், ஜெயலலிதா இனிமேல் காரில் செல்லும்போது அந்த வழியில் செல்போன்கள், ரிமோட் கண்ட்ரோல் கருவிகள் போன்றவற்றை செயலிழக்கச் செய்யும் எலெக்ட்ரானிக் ஜாமர்களை பயன்படுத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுதவிர தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலக பகுதியில் ஆட்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, சென்னை நகரில் சில குறிப்பிட்ட இடங்களில் நடக்கும் விழாக்களில் மட்டுமே இனிமேல் ஜெயலலிதா கலந்து கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கலைவாணர் அரங்கம், சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம், அண்ணா பல்கலைக்கழக அரங்கம், தலைமைச் செயலக மாநாட்டு அரங்கம் ஆகிய பாதுகாப்பு மிக்க இடங்களில் நடக்கும் கூட்டங்கள், விழாக்களில் மட்டுமே ஜெயலலிதா கலந்து கொள்வது நல்லது என்று மத்திய உளவுப் பிரிவும், போலீசாரும் முதல்வரிடம் தெரிவித்துள்ளனர்.

வெளியூர்களுக்குச் செல்வதாக இருந்தால் விமானம் அல்லது ஹெலிகாப்டரை பயன்படுத்தி வருகிறார் ஜெயலலிதா. அதையே தொடர்ந்து கடைபிடிக்குமாறும் அவர் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதற்கிடையே தமிழக ஆந்திர எல்லை சீல் வைக்கப்பட்டுள்ளது. திருப்பதியில் இருந்து நக்சலைட்டுகள் தமிழகத்துக்கோ அல்லது கர்நாடகத்துக்கோ தப்பலாம் என்பதால் இரு மாநில எல்லைகளும் சீல் வைக்கப்பட்டு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதிகளில் ஏராளமான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வாகன சோதனைகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

இந் நிலையில் கண்ணிவெடிக் தாக்குதல் நடந்த இடத்தில் இருந்து மேலும் 8 வெடிக்காத கண்ணிவெடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
-------------------------------------
மேலும் சில தகவல்கள்....
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/39400000/jpg/_39400772_naidu203.jpg' border='0' alt='user posted image'>
நாயுடு

நாயுடுவை சந்தித்த கலாம், அத்வானி
சென்னை:

நக்சலைட்டுகளின் கண்ணி வெடித் தாக்குதலில் படுகாயமடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர் ஜனாதிபதி அப்துல் கலாமும் துணைப் பிரதமர் அத்வானியும்.

இன்று காலை சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத் வந்த அத்வானி நேராக ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் உள்ள நாயுடுவின் இல்லத்துக்குச் சென்று அங்கு ஓய்வில் உள்ள நாயுடுவைச் சந்தித்தார். இருவரும் 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

இதன் பின்னர் நாயுடுவைச் சந்தித்த ஜனாதிபதி அப்துல் கலாமும் இன்று ஹைதாரபாத் வந்தார். அவரை அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்று நாயுடுவின் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். பின்னர் நாயுடுவிடம் உடல் நலம் குறித்து விசாரித்துவிட்டு பிற நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கிளம்பினார் கலாம்.

முன்னதாக நேற்று சிறப்பு விமானம் மூலம் திருப்பதி வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் இருந்து ஹைதராபாத் கொண்டு செல்லப்பட்டார். கழுத்து எலும்பு உள்பட 3 எலும்புகள் உடைந்து போயுள்ள அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

துபாய் செல்ல இருந்த இந்த விமானம் நேற்று முன் தினமே நாயுடுவுக்காக சென்னையில் இருந்து திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து துபாய் பயணிகள் மும்பை அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து வேறு விமானங்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் நாயுடுவுக்கு சிகிச்சை தர அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் தனி ஹெலிகாப்டரில் திருப்பதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே நாயுடு மீது கண்ணி வெடித் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு முதல்வர் ஜெயலலிதாவும் திமுக தலைவர் கருணாநிதியும் கடும் கண்டனம் தெவித்துள்ளனர்.

இதற்கிடையே 'கிளேமோர் மைன்' எனப்படும் கண்ணி வெடியை 6 மாதங்களுக்கு முன்பே திருப்பதி மலைப் பாதையில் நக்சலைட்டுகள் புதைத்துவிட்டதாகவும், திருப்பதி கோவிலில் கருட சேவையின்போது ஆந்திர முதல்வர் அங்கு வருவது மரபு என்பதால், அந்த நாளில் தாக்குதல் நடத்த 6 மாதத்துக்கு முன்பே திட்டம் தீட்டப்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது.

மேலும் நாயுடுவின் கார் வரிசையில் 20 கார்கள் வந்துள்ளன. இதில் பெரும்பாலானவை வெள்ளை நிற அம்பாசிடர் கார்கள். இதில் சரியாக நாயுடுவின் காரை அடையாளம் வைத்து கண்ணிவெடியை வெடிக்கச் செய்துள்ளனர் நக்சலைட்டுகள்.

மேலும், நாயுடுவின் கார் வரும் நேரம், அந்த கார் வரிசையின் வேகம் இதையும் மிகத் துல்லியமாக அறிந்து வைத்து குண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இது ஆந்திர போலீசாருக்கும் மத்திய உளவுப் பிரிவினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாரின் ரகசிய வயர்லெஸ் உரையாடல்களை நக்சலைட்டுகள் தொடர்ந்து ஒட்டு கேட்டு வந்திருக்க வேண்டும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

இந் நிலையில் இன்று தனது வீட்டில் நிருபர்களைச் சந்தித்த சந்திரபாபு நாயுடு, இது எனக்கு இறைவன் கொடுத்துள்ள மறு ஜென்மமாகவே கருதுகிறேன். இந்த மறு பிறவியை நான் மக்களுக்கே அர்ப்பணிக்கப் போகிறேன் என்றார்.
-------------------------------------------------

தகவல்கள் சுரதாவின் பொங்குதமிழ் கொண்டு தற்ஸ் தமிழில் எடுக்கப்பட்டவை...!

Print this item

  புலியும் அமெரிக்காவும்....!
Posted by: kuruvikal - 10-03-2003, 10:50 AM - Forum: செய்திகள்: உலகம் - No Replies

புலிகள் மீதான தடையை நீட்டித்தது அமெரிக்கா

வாஷிங்டன்:
விடுதலைப் புலிகள் இயக்கம் உள்பட 25 அமைப்புகளை தீவிரவாத இயக்கங்களாக அமெரிக்கா மீண்டும் அறிவித்துள்ளது.

1997ம் ஆண்டில் இந்த அமைப்புகளை தீவிரவாத இயக்கங்களாக அமெரிக்கா அறிவித்து, இந்த இயக்கங்களுக்கு அமெரிக்காவில் வசிக்கும் யாரும் எந்தவித உதவிகளையும் செய்யக் கூடாது என தடை விதித்தது. இந்தத் தடை 1999ம் ஆண்டில் நீட்டிக்கப்பட்டது. இந்த தடை இன்றுடன் (அக்டோபர் 3) காலவதியாகிறது.

இதையடுத்து இந்தத் தடையை அமெரிக்கா நேற்று மீண்டும் நீட்டித்தது.

எல்.டி.டி.ஈ தவிர பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ், காஷ்மீரில் இயங்கி பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளான லஷ்கர்ஏதொய்பா, ஜெய்ஷ்ஏமுகம்மத் ஆகிய அமைப்புகள் உள்பட 25 அமைப்புகளை தீவிரவாத இயக்கங்களாக அறிவித்து தடையை நீட்டித்துள்ளது.

:evil: :twisted: :roll: :twisted: :evil:
----------------------------------------------------
தகவல் பிரதி எடுக்கப்பட்ட இடம் தற்ஸ் தமிழ் டொட் கொம்....உதவி சுரதாவின் பொங்குதமிழ்...!

Print this item

  எது உண்மை ..?
Posted by: Mathivathanan - 10-03-2003, 01:05 AM - Forum: செய்திகள் : தமிழீழம் - Replies (28)

புலிக்கொடி ஏற்றுவது குறித்து கண்காணிப்புக்குழு - புலிகள் பேச்சு
ஜ தமிழ்மாறன் ஸ ஜ திங்கட்கிழமை, 29 செப்ரெம்பர் 2003, 5:23 ஈழம் ஸ
வடக்கு கிழக்கு மாகாணத்தில் படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இடம்பெறும் வைபவங்களில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட தமிழீழ தேசியக் கொடியை ஏற்றுவது தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

கிளிநொச்சியிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகத்தில் மு.ப. 10 மணிக்கு ஆரம்பித்த சந்திப்பு பி.ப. 1.30 மணி வரை நீடித்தது. போர்நிறுத்த கண்காணிப்பு குழுத் தலைவர் டெலிவ்சனும், புலிகள் தரப்பில் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், மற்றும் யாழ். அரசியல் துறை பொறுப்பாளர் இளம்பரிதி, வவுனியா அரசியற் பொறுப்பாளர் எஸ். எழிலன், திருமலைமாவட்ட அரசியற் பொறுப்பாளர் இ. கௌசல்யன், அம்பாறை மாவட்ட அரசியற் பொறுப்பாளர் பாவா ஆகியோரும் கலந்து கொண்டார்கள். அத்தோடு வடக்கு கிழக்கின் சகல மாவடங்களிலுமுள்ள புலிகள் தரப்பு போர் நிறுத்த கண்காணிப்பு குழு பிரதிநிதிகள் மாவட்ட இணைப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் இடம்பெறும் வைபவங்களில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட தமிழீழ தேசியக் கொடியை ஏற்றுவது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து போர் நிறுத்த கண்காணிப்பு குழுத்தலைவர் டெலிவ்சன் இச்சந்திப்பில் பிரஸ்தாபித்தார்.

புலிக் கொடியை ஏற்றுவது தொடர்பாக மறுபரிசீலனை செய்யுமாறு போர் நிறுத்த கண்காணிப்புக் குழுத்தலைவர் டெலிவ்சன் கேட்டுக் கொண்டார்.

இதனையடுத்து அரசியற்துறைப்பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன், தமிழீழ தேசியக் கொடியின் முக்கியத்துவம் குறித்து விளக்கியதுடன் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் சின்னமாக தமிழீழ தேசியக்கொடி விளங்குகின்றது என்றும் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறக்கணித்து சிறீலங்கா தேசியக் கொடிக்கு பதிலாக தமிழ் மக்கள் தமிழீழ தேசியக் கொடியை ஏற்றி வைபவங்களை ஆரம்பிக்கிறார்கள் எனவும் தெரிவித்ததுடன் கொடியின் தத்துவம் தொடர்பாகவும் விரிவாக விளக்கமளித்தார்.

இதனைத் தொடர்ந்து மேற்படி சந்திப்பு குறித்து போர் நிறுத்த கண்காணிப்பு குழுத்தலைவர் டெலிவ்சன் கருத்து தெரிவிக்கையில்:-

'போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமுலாக்குவது தொடர்பாக புலிகள் தரப்பிலிருந்து எதிர்பார்க்கும் விடயங்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக படையினரின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியேற்றுவது தொடர்பாக பிரஸ்தாபிக்கப்பட்டது. புலிகள் தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர். இது குறித்து நாம் அரசாங்கத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்போம்.

மேலும் போர் நிறுத்தக் கண்காணிப்பு குழுவின் புலிகள் தரப்பு பிரதிநிதிகள், மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளர்களை மூன்று வாரங்களுக்கு ஒரு தடவை கிளிநொச்சியில் சந்தித்து போர் நிறுத்த ஒப்பந்த அமுலாக்கத்தில் எழக்கூடிய நடைமுறைப்பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது என்றார்.

நேற்று பி.ப. 4 மணிக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மாவட்ட அரசியற் பொறுப்பாளர்களையும் சமாதான செயலக மாவட்ட இணைப்பாளர்களையும் போர் நிறுத்த கண்காணிப்பு குழுத்தலைவர் சந்தித்தார்.

நன்றி: நமது ஈழநாடு

http://www.yarl.com/cgi-bin/frame/smartfra...w.eelampage.com

Print this item