இளைஞன் Wrote:Quote:வாருங்கள் þº¡ì ,
எங்கள் வரவேற்பறைகளில்
மலர்களில்லை - அது
வாடிவிடும் என்பதால் - நம்
தமிழ் தாய் மொழி
இருக்கிறது - என்றும்
இளமை குன்றாமல் - உங்களை
வரவேற்க .....................
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இசாக் என்னும் இனிய கவிஞனைக் களத்தில் வரவேற்றோம். <b>அப்போது அ ஜீவன் கவிதை பெற்றது.</b>
அஜீவன் அண்ணா, நீங்கள் கமராக் கவிஞர் என்று எண்ணியிருந்தோம், ஆனால் இப்படி ஒரு அவதாரம் ஏற்கனவே எடுத்ததா? இப்போது பிறந்ததா? எப்படியாயினும் மகிழ்ச்சி.
நன்றி இளைஞனே,
நமக்கு தெரியாமல் நமக்குள் எத்தனையோ நல்லவை இருக்கின்றன. நல்லவற்றை செயல்படுத்த முயற்சித்தால் நாம் பேசுகின்ற சமூகம் மேன்மையடையும். சில வேளைகளில் அவற்றையெல்லாம் தள்ளி முண்டியடித்துக் கொண்டு வன்முறைத் தனமான தீயவை வெளிப்படத் துடிக்கும். இவற்றை அடக்குவதற்கும் மன அடக்கம் தேவை. சிலர் காமத்துக்கு மட்டும் மன அடக்கம் தேவையென்று நினைக்கிறார்கள்.இல்லை எங்கும் - எல்லாவற்றிற்கும் மனதை அடக்க மன அடக்கம் தேவை.
நமக்குள்ளேயே நமக்குத் தேவையானவை இருக்கிறது.
அடிமனம் சொல்கிறது , புறமனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
<img src='http://www.igougo.com/photos/homePageGallery/italy.jpg' border='0' alt='user posted image'>
இருப்பது என்றும் அழியாது. இல்லாதது எதுவும் புதிதாக தோன்றவும் செய்யாது.
வடிவங்கள் மாறும். தோற்றங்கள் மாறும்.
ஆனால் வாழ்வின் ஆழ்ந்த இரகசியம் மட்டும் எப்போதும் அப்படியே இருக்கும்.
தனிமனிதர்கள் வருவார்கள், போவார்கள் ,கடல் அலைகள் எழுந்து பொங்கி வீழ்ந்து மறைவது போல. தனிமனிதனுக்குள் இருப்பதுவும் , அலைகளுக்குள் இருப்பதுவும் அழிவதில்லை...............
நல்லவை தொடர்ந்தால் நலம் பெறும் சமூகம்.
அன்புடன்
அஜீவன்