| Welcome, Guest |
You have to register before you can post on our site.
|
| Forum Statistics |
» Members: 8,982
» Latest member: lucilegr4
» Forum threads: 9,058
» Forum posts: 83,244
Full Statistics
|
| Online Users |
There are currently 490 online users. » 0 Member(s) | 487 Guest(s) Applebot, Bing, Google
|
| Latest Threads |
±ôÀÊ ÀÈ¢ì¸Ä¡õ
Forum: நகைச்சுவை
Last Post: UsArgum
01-10-2026, 09:07 AM
» Replies: 28
» Views: 10,810
|
Mrs.Sirimao Bandaranayake
Forum: நகைச்சுவை
Last Post: GeraTep
11-14-2025, 10:46 AM
» Replies: 14
» Views: 3,502
|
Farty time
Forum: நகைச்சுவை
Last Post: ㄹㅈㄷㄹㅈ
08-26-2025, 03:48 PM
» Replies: 11
» Views: 5,796
|
கனவே கலைகிறதே
Forum: பொழுதுபோக்கு
Last Post: KULAKADDAN
04-30-2006, 06:37 PM
» Replies: 0
» Views: 6,340
|
Karuna Cadres were captur...
Forum: பிறமொழி ஆக்கங்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:17 PM
» Replies: 4
» Views: 8,764
|
என்ன நடந்தது யாழிற்கு?
Forum: உங்கள் கருத்துக்கள்
Last Post: ஜெயதேவன்
04-30-2006, 06:03 PM
» Replies: 42
» Views: 31,860
|
முடியுமானால் முயற்ச்சியுங...
Forum: போட்டிகள்
Last Post: Subiththiran
04-30-2006, 05:00 PM
» Replies: 15
» Views: 14,742
|
**சுடேக்கு** புதிர் விளைய...
Forum: போட்டிகள்
Last Post: kavithaa
04-30-2006, 04:30 PM
» Replies: 63
» Views: 39,490
|
புல்மோட்டையில் தாக்குதல்
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: Sriramanan
04-30-2006, 04:10 PM
» Replies: 2
» Views: 8,125
|
போதனை வேண்டாம்! பு...
Forum: செய்திகள் : தமிழீழம்
Last Post: alika
04-30-2006, 03:13 PM
» Replies: 4
» Views: 6,357
|
|
|
| ஆபாசத் தளங்களில் நுழைவதை நிறுத்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தரு |
|
Posted by: சாமி - 10-06-2003, 07:34 PM - Forum: இணையம்
- Replies (2)
|
 |
ஆபாசத் தளங்களில் நுழைவதை நிறுத்த இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தரும் வசதி
இணைய தளங்கள் மக்களுக்கு எல்லாவிதமான தகவல்களையும் தந்து வருகின்றன. இதனால் தான் இப்போது கம்ப்யூட்டர் வாங்கும் அனைவரும் கூடவே இன்டர்நெட் இணைப்பையும் சேர்த்தே வாங்குகின்றனர். கம்ப்யூட்டர் விற்பனை செய்திடும் நிறுவனங்களும் கூட இலவச இணைப்பாக மூன்று அல்லது ஆறு மாத இணைய இணைப்பை இலவசமாக வழங்குகின்றன.
தங்கள் பிள்ளைகளின் கல்விக்கும், அறிவு வளர்ச்சிக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் இன்டர்நெட் பெரிதும் பயன்படும் என்று பெற்றோர்கள் எண்ணுகின்றனர். அது உண்மையும் கூட.
எனினும் சில நேரங்களில், பிள்ளைகள் இன்டர்நெட் பயன்படுத்தும் போது அவர்கள் வயதில் காணக்கூடாத பல தளங்களில் நுழைந்து விடுகிறார்கள். ஆபாசம், வன்முறை, இன/மத/மொழி வெறி போன்றவற்றை துõண்டுகிற தளங்களில் நுழைந்து நேரத்தை வீணடிப்பதுடன் சிந்தனையையும் மாசு படுத்திக் கொள்கின்றனர்.
பொதுவாகவே புத்திமதிகள் கூறுவதை குழந்தைகள் விரும்புவது கிடையாது. அதே நேரத்தில் அவர்களை எந்நேரமும் நம்மால் கண்காணித்துக் கொண்டிருக்கவும் முடியாது. அப்படியானால் மோசமான தளங்களை அவர்கள் காண இயலாமல் எப்படித் தடுக்க முடியும்? இதற்காகவே சில சாப்ட்வேர் தொகுப்புகள் உள்ளன. இவற்றை Parental control என அழைக்கின்றனர்.
Parental control எனப்படுகிற இந்த சாப்ட்வேர்
தொகுப்புகளில் ஒன்றை (எ.டு.Netnanny, Cyber patrol, cyber sitter, surf control போன்றவை) நாம் நம் கம்ப்யூட்டர்களில் நிறுவிக் கொள்ளலாம். ஆனால் மோசமான தளங்களில் நுழையவிடாமல் தடுக்கிற இவ்வகை பேரன்டல் கன்ட்ரோல் சாப்ட்வேர்கள் பெரும்பாலும் இலவசமாக கிடைப்பதில்லை. சரி விலைக்கு வாங்கலாம் என நினைத்தால் அவற்றை விற்பனை செய்திடும் நிறுவனப் பிரதிநிதிகள் இந்தியாவில் யாரும் இல்லை. அப்படியானால் இதற்கு வழி தான் என்ன? இங்குதான் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் நமது உதவிக்கு வருகிறது.
இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் Content Advisor மூலம் மோசமான தளங்களில் நுழையவிடாமல் தடுக்க முடியும். பாஸ்வேர்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே இவற்றில் நுழையும்படி செய்யலாம்.
இன்டர்நெட் எக்ஸ்புரோரரை இயக்குங்கள். Tools=>Internet options ஆகியவற்றை அழுத்துங்கள். டயலாக் பாக்ஸ் ஒன்று கிடைக்கும். அதன் content என்ற டேபை கிளிக் செய்யுங்கள். Enable என்பதை கிளிக் செய்யுங்கள். Ratings என்பதன் கீழ் Language, Nudity, sex மற்றும் violence ஆகியவற்றிற்கான தளங்களில் நுழையவிடாமல் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தடுத்துக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம்.
ஒவ்வொன்றிற்கான ஸ்லைடரையும் இழுத்து இந்த செட்டிங்குகளில் நீங்கள் மாறுதல்களைச் செய்யலாம்.
அணீணீணூணிதிஞுஞீ குடிtஞுண் டேபை அழுத்தி, அங்கே அனுமதிக்க விரும்புகிற அல்லது அனுமதிக்க கூடாத தளங்களின் பெயர்களை டைப் செய்ய வேண்டும். தளத்தின் பெயரை டைப் செய்து Approved Sites பட்டனை அழுத்தினால் அந்த தளம் அனுமதிக்கப்படும் Never பட்டனை அழுத்தினால் அந்த தளம் அனுமதிக்கப்படாது.
General டேபை அழுத்துங்கள். Users can see sites that have no rating என்பதை தேர்வில் இருந்து கழற்றிவிடுங்கள். இனிமேல் அனுமதிக்கப்பட்ட தளங்களைத் தவிர வேறு எந்த தளத்திலும் இவர்கள் நுழைய முடியாது. Supervisor can type a passwod to allow users to view restricted content என்பதைத் தேர்வு செய்யுங்கள். அனுமதிக்கப்படாத தளத்தின் வெப் பக்கம் திரையில் தோன்ற ஆரம்பிக்கும்பொழுது பாஸ்வேர்டை டைப் செய்யும்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கூறும். சரியான பாஸ்வேர்டை டைப் செய்தால் அந்த வெப் பக்கம் திரையில் தெரியும்; இல்லையெனில் தெரியாது.
அனுமதிக்கப்படாத தளங்களின் ஒவ்வொரு வெப் பக்கமும் டவுன்லோடாகும் பொழுது பாஸ்வேர்ட் கேட்கப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Supervisor password என்ற பகுதியில் உள்ள Create password பட்டனை அழுத்தி Content Advisor என்பதற்கான பாஸ்வேர்டை டைப் செய்யுங்கள். மறுபடியும் அதே பாஸ்வேர்டை மீண்டும் டைப் செய்யுங்கள். பாஸ்வேர்டை நினைவில் வைத்திருப்பதற்கான சிறு குறிப்பை டைப் செய்து Okசொல்லுங்கள்.
இனிமேல் Content Advisor என்பதற்கான செட்டிங்கை மாற்ற முயலும்பொழுது அல்லது அது வேண்டாம்/வேண்டும் என செட்டிங் கொடுக்கும் பொழுது இந்த பாஸ்வேர்டை டைப் செய்ய வேண்டும். எனவே பாஸ்வேர்டை மறந்து விடாதீர்கள்.
Ok பட்டனை அழுத்தி Content Advisor டயலாக் பாக்ஸை மூடுங்கள். இனி இணையத்தில் வேண்டாத தளங்கள் எதுவும் பெற முடியாது.
நன்றி: தினமலர்
மாற்றுவதற்கான உதவி: பொங்கு தமிழ் (நன்றி)
|
|
|
| பயம் இருக்கும் வரை தான் பக்தி இருக்கும்! |
|
Posted by: சாமி - 10-06-2003, 07:23 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- Replies (4)
|
 |
தென்கச்சி சுவாமிநாதன்: அது 1985ம் வருஷம்ன்னு நினைக்கிறேன். அப்ப நான் நெல்லை வானொலி நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னோட நண்பர் ஒருத்தர் ஒரு புகைப்படத்தை கொண்டு வந்து, என்னிடம் காண்பித்து ஒரு அதிர்ச்சியான தகவலைச் சொன்னார்.
நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் பகுதியில் அகத்தியர் மலை, பொதிகை மலை உள்ளது. என்னோட நண்பர் அகத்தியர் மலைக்குப் போய், அங்குள்ள அகத்தியர் அருவியில் குளித்து முடித்து ஞாபகார்த்தமாக அந்த மலை தெரியுற மாதிரி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
வீட்டிற்கு வந்து அந்த புகைப் படத்தை கழுவிப் பார்த்தால் ஆவி தெரியுற மாதிரி மலைக்கு மேலே வெள்ளையா சின்ன வெளிச்சம் அந்த புகைப்படத்தில் இருந்தது. பேயோ, பிசாசோ என அலறியபடி என்னிடம் கொண்டு வந்து காட்டினார். முதல்ல நான் கூட குழம்பிப் போயிட்டேன். சரி, விசாரிக்கலாமேன்னு கலர் லேபிலே போய் கேட்டால், "அது ஏதோ பிரிண்டிங் மிஸ்டேக்காகி விட்டது; வேற பிரிண்ட் போட்டுத் தர்றோம் சார்' என்றனர்.
இன்னொரு சம்பவம்... ஒவ்வொரு கிராமத்திலயும், ஒவ்வொரு பேய் பிரபலம். எங்க ஊர்ல கொள்ளி வாய்ப் பிசாசு பயம் ஜாஸ்தி. கிராமத்தில் கடலை பயிர் போட்டிருப்பாங்க. நடு ராத்திரியில், திருட்டுப் பசங்க கடலையைப் பறிச்சுட்டு போயிடக் கூடாதுங்கறதுக்காக இந்த கொள்ளிவாய்ப் பிசாசு பயத்தை ஏற்படுத்தியிருந்தாங்க.
ராத்திரியில போனா கடலைக் காட்டுல நெருப்பு எரியும். பக்கத்துல விசாரித்தால் பிசாசு தான் தீயை தின்னுதுன்னு சொல்வாங்க. கடலைக்கு காவல் காக்கற ஆளுங்கதான் நெருப்பை வச்சு பயமுறுத்தியிருக்கின்றனர் என்று கொஞ்ச நாள் கழித்துதான் எனக்கே விவரம் புரிஞ்சது.
பொதுவாக இந்த மாதிரி வதந்தி பரப்பும் விஷயத்தை மனநல மருத்துவர்கள் "டாமினோ எபெக்ட்' என்கின்றனர். அதாவது, எண்ணங்கள் ஒருத்தர்கிட்டயிருந்து இன்னொருத்தர்கிட்ட போகும். வதந்தியும் இந்த மாதிரி தான் வேகமாகப் பரவும். அதனால மூட நம்பிக்கைகள் ஏற்படும். மனிதன் இருக்கும் வரை பயம் இருக்கும்; பயம் இருக்கும் வரை தான் பக்தியும் இருக்கும்.
நன்றி: தினமலர்
|
|
|
| அனைவரும் இதை உறுதியாக உரத்துச்சொல்வோம் ! |
|
Posted by: shanthy - 10-06-2003, 02:07 PM - Forum: சுமுதாயம் (வாழ்வியல்)
- No Replies
|
 |
[size=18]கள நண்பர்களுக்கு வணக்கம் ! மின்னஞ்சலில் எனக்கு வந்திருக்கும் கீழ்க்காணும் கடிதத்தினை கள உறவுகளின் கவனத்துக்கும் அனுப்புகிறேன். இதில் விதண்டாவாதங்களைத் தவிர்த்து நமது ஆதரவையும் வழங்குவோம். இல்லை முரண்பாடெனில் தவிர்க்கலாம். இம்முயற்சியைச் செய்வோரின் அடிமுடிகளைத் தேடுவதை விடுத்து முடிந்தால் இம்முயற்சியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் , யுவதிகளுக்கு ஆதரவளிக்கலாம். இதில் உடன்படுவோர் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்புங்கள். அவர்களையும் இணையுங்கள்.
அன்புடன் சாந்தி.
................................. திகதி
................................................. யேர்மனிய நகரம்
பரிணாமப்படிநிலை வளர்ச்சியில் மிருகங்களிடமிருந்து தன்னை வேறுபடுத்தி உணர்ந்து கொண்ட மனித இனம், தன் சிந்தனை வளர்ச்சி காரணமாக தன்னை பக்குவப்படுத்தி, பண்படுத்தி உயர்திணை என உயர்ந்திடும் வழிகொண்டான். அந்தந்த குமுகாயங்கள் தம்மை மையப்படுத்தி வாழ்வியலை மேற்கொண்டபோது இனங்கள் உருவாகின. இவ்வாறே தமிழராகிய நாமும் நமக்கென்று, நம்மை நாம் என அடையாளப்படுத்தும் இன, மொழி, கலாச்சார, பண்பாட்டு, மரபியல் விழுமியங்களோடு தனியரு இனம் என உருவெடுத்தோம்.
இன்று நாம் பேணும், பெருமை பேசும் வழக்கங்களும், வாழ்வாதாரங்களும், உறவுமுறை பேணும் உன்னதங்களும் ஒன்றும் இயற்கை விதிகள் அல்ல ! நேரிய வழியில் நிமிர்ந்திட எண்ணி காலம் காலமாய் நம்மினம் கடைந்தெடுத்திட்ட, நம்மைத்தாங்கும் விழுதுகள் ! பல்வேறு காலகட்டங்களில் அந்நியப்படையெடுப்புக்களும், ஆக்கிரமிப்புக்காலனித்துவங்களும் நம்முடைய இருப்புக்கு சவால்களாகிய போதும், எம்மை நாம் இழந்து விடவில்லை.
இவ்வகயிலே நாம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இப்போது இருக்கின்றோம். ஆதிக்க சக்திகளின் திட்டமிடப்பட்ட நெருக்குதல்களுக்கிடையிலும், இனச்சுத்திகரிப்பு வலைகளுக்கிடையிலும் பல்லாயிரக்கணக்கான எம் இளைய உறவுகளின் உயிர்களின் மகோன்னத அர்ப்பணிப்பில் சுதந்திரத்திற்கான போராட்டம் ஒன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இராணுவ, அரசியல்,பொருளாதார விடுதலையுடன் , ஆணும் பெண்ணும் சரிசமபங்காளர்களான சமூகவிடுதலையையும் வென்றெடுக்க வேண்டிய பணி நம் அனைவரிடத்திலும் உள்ளது. தாய்வழிச்சமுதாயமான தமிழரிடையே, பெண்ணை பலவீனமான ஒரு போகப்பதுமையாகச் சித்தரிக்கும் ஊடுருவல்களின் உச்சக்கட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பாலியல் அடிமட்ட இச்சைகளை தீர்த்துக்கொள்ளும் கழிவாய்ப்பண்டமாகவே பெண்கள் தொடர்ந்தும் இந்தியத்தமிழ்த்திரைப்படங்களில் காட்டப்பட்டு வருகிறார்கள். சமூக, வாழ்வியல் அம்சங்களைப் பின்தள்ளி , அடிமட்ட இச்சைகளுக்குத் தீனி போட்டுப் பணம் சேர்க்கும் பண்பாட்டு விபச்சாரத்தில் பல திரைப்படத்துறையைச் சார்ந்தவர்கள் ஈடுபட்டு வருவது கண்கூடு. ஒரு பெண்தலைமையின் கீழே இந்நிலை தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டு வருவது வேதனைக்குரியது, வெட்கத்துக்குரியது. இருந்தும் பாரத மாதாவின் பலகாலப்பெருமைகளை வெறுமனே பேசிக்காலம் போக்காமல், வீச்சோடு இவற்றை எதிர்த்து நிற்கும் தமிழ்நாட்டின் அந்த ஒரு சில அமைப்புக்களோடும், தரமான படைப்புக்களைத் தரும் திரைத்துறையினரோடும் நாமும் மானசீகமாக இணைகின்றோம்.
எந்தவிதமான சமூகப்பொறுப்பும் அற்று பணம் பொறுக்குவதிலேயே கண்ணாயிருந்து, கலையென்ற போர்வையில் கேவலமான பாடல்வரிகளையும், காட்சிகளையும், படங்களையும் எடுத்துக்குவிக்கும் இத்துறையிலுள்ள அனைவரையும் நாம் கடுமையாக இத்தால் கண்டிக்கின்றோம். ஈனத்தனமான பாடல்வரிகளைக்கொண்ட கல்யாணம் தான் கட்டி, ஜெமினி ஜெமினி, நான் ரெடி நீ போன்ற தாயின் சேலையை விற்றுப் பணம் பண்ணுபவர்களை, பகிரங்கமாக மன்னிப்புக்கேட்டு ஒதுங்குமாறு கண்டிக்கின்றோம்.
மதிப்புக்குரிய சுபாஷ் சந்திரபோஷ், பகவத் சிங், லக்ஷ்மி பாய் போன்ற மாபெரும் வீரர்களின் உறுதி செறிந்த அர்ப்பணிப்புக்களால் சுதந்திரத்தைப் பெற்றெடுத்த இந்திய மண்ணிலிருந்து , எங்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தாற்பரிய, வரலாற்று அறிவு ஏதுமின்றி கும்மாளம், கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற உங்கள் முதலீடுகளை இத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள் !
Discovery channel இல் வரும் மிருகங்களிடமிருந்து மனிதர்களாகிய நாம் வித்தியாசப்படுகின்றோம் என்பதை அறிந்து கொள்ளாத பாய்சிற்கும், அமரிக்ககொடியுடன் இந்திய ஏழைமக்களின் அடிவயிற்றைச் சுரண்டி, கடைநிலை வழியில் காசு பண்ணும் இவ்வெடுப்பிற்கு U/A முத்திரை போட்ட சென்சார் பார்டு (jzpf;iff;FO) விற்கும் எமது கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கின்றோம்.
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த குடியாக மேடைகளில் முழக்கப்படும் இனம் , நாளை கல்லாகிக்கிடந்ததாலே மண்ணாகிப்போனவொரு இனமாகி விடக்கூடாது என்பதை மனதில் இருத்துவோம்.
பல்வேறு சமூகப்பொறுப்புகளில் உள்ள நாம், நம்முடைய மானிட சமூகப்பொறுப்புக்களை உணர்ந்தவர்களாக எமது கையெழுத்துக்கள் மூலம், இவ்வாறான சுயவிமர்சனமற்ற பொறுப்பற்ற பண்பாட்டு விபச்சாரத்தினை இனியும் நம்மிடையே அனுமதியோம் என்று உறுதிபூணுகின்றோம். இப்படியான தரமற்ற வெளியீடுகளை ஐரோப்பிய திரைப்பட- பாடல் விநியோகத்தர்கள், தமிழால் வாழும் தொலைக்காட்சி நிறுவனங்கள், வானொலி நிறுவனங்கள், தமிழ்-இந்திய கடைகள், பத்திரிகைகள், இணையத்தளங்கள், சஞ்சிகைகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சித்தயாரிப்பாளர்கள் என அனைவரையும், இதுவரை உள்ளதை நீக்கவும், இனிமேல் தவிர்க்கவும் தமிழர் விழுமியங்களுக்கான நுகர்வோர் பாதுகாப்பை முன்வைக்கும் நாம் நம்மோடு இணைந்து கொள்ளுமாறு கோருகின்றோம் !
ஒரு இனத்தின் நேரிய முன்னேற்றத்திற்கு சகல தளங்களிலும் அடிவருடிகளை இனம் காணுதலும், நீக்கி நிமிர்தலும் அவசியமானவை. அதுவே நம்மை சமூக, அரசியல், மொழி, பண்பாட்டுத் தளங்களில் முன்னேற்றி நிற்கும். நம்முடைய இக்கோரிக்கை உரிய முறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு மாற்றம் ஏற்படாத பட்சத்தில், யேர்மன் சிறுவர் பாதுகாப்பு அமைப்பினூடாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்திய உயர்விழுமியங்களை காப்பாற்றத்துடிக்கும் தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகளுடன் அனைவரும் இதை உறுதியாக உரத்துச்சொல்வோம் ! வெல்வோம் ! !
இணைப்பு : கையெழுத்துப்படிவங்கள்
|
|
|
| JUDICIAL PROCESS AND LAW IN EELAM COURTS |
|
Posted by: Mathivathanan - 10-06-2003, 08:15 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
[size=14]LTTE ADMITS PRABHAKARAN HAS THE POWER TO CHANGE VERDICTS, INTERVENE IN JUDICIAL PROCESS AND CHANGE LAW IN EELAM COURTS
By Walter Jayawardhana reporting from Los Angeles
October 06.11.30 AM: S. Pararajasingham, the legal advisor to the Liberation Tigers of Tamil Eelam in an interview with the BBC's Sinhala language service said the terrorist group's Supremo Velupillai Prabhakaran had the power to change verdicts of the Eelam courts, intervene in the judicial process and even change the law itself as the need arises.
The statement, broadcast Sunday October 5, confirmed the contention of many foreign observers that the LTTE courts were only political extensions of the terrorist group, did not follow due process, did not enjoy any judicial independence at all and refused to pay attention to the rule of law. Opposition Tamil groups accused the Eelam Courts as only part of a fascist administration that totally rejected a multi-party polity that existed in the rest of the country.
In an interview with the BBC's Sandeshaya, usually extremely friendly and supportive of the rebel group and accused by a JVP political leader as white washing the Tamil Tigers, the LTTE's legal advisor said they would only give up the capital punishment given to its accused, mostly for political opposition and other serious crimes only after a political settlement with the Sri Lanka government. He said among 24,000 cases tried by Eelam courts appointed by terrorist leader Velupillai Prabhakaran only 4 had been given the capital punishment, so far.
Asked from where they derived the power to give capital punishment to their accused, after reminding him that the courts could be accused of murder under Sri Lanka's law, the legal advisor said the power came from their political leader Velupillai Prabhakaran and said even the Sri Lankan courts derived its power from the country's political leadership. In short, according to this description Prabhakaran was above law
Sri Lanka's judiciary, receives its power through the people's sovereignty deriving through the constitution of Sri Lanka. Comparatively, the LTTE believes all its power come from its Supremo Velupillai Prabhakaran and accused by the opponents of teaching Tamil children, that he was Sun God.
But Pararajasingham said, after a political settlement, the LTTE would give up imposing capital punishment on the accused tried by the Eelam judiciary, that had been accused by opponents as Kangaroo Courts and Pseudo Judiciary.
In Sri Lanka, capital punishment has been suspended and Interior Minister John Ameratunga following the LTTE, is trying to revive the capital punishment
Asked how people charged by the Eelam courts were abruptly released on the intervention of the others, Pararajasingham said when Sri Lanka Monitoring Mission (SLMM) or the Sri Lanka government intervenes with the political wing of the LTTE, and they contact Prabhakaran he could discharge the accused.
At this stage S. Pararajasingham admitted Prabhakaran could intervene in the proceedings, change verdicts or even change the law.
Dinasena Rathugamage, a contract reporter working for the BBC's Sandeshaya interviewed Pararajasingham
http://www.go2lanka.com/stories/061003.html
|
|
|
| More to Tamil Tiger legitimacy than overseas trips |
|
Posted by: Mathivathanan - 10-06-2003, 07:59 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- No Replies
|
 |
<span style='font-size:25pt;line-height:100%'>More to Tamil Tiger legitimacy than overseas trips</span>
By Lindsay Beck
COLOMBO (Reuters) - It's a long way from the jungles of northern Sri Lanka to the pubs of Ireland.
And the distance from rebel group to legitimate political organisation may be even greater for the Liberation Tigers of Tamil Eelam (LTTE), analysts and diplomats said.
Dublin is the latest in a series of overseas trips for the rebels, who hope to put finishing touches this week on a plan to restart stalled peace talks to end two decades of war -- and do it in public on the international stage.
"I think it's mainly to get them greater legitimacy -- for them to be able to interact with foreign governments. That would be the primary motive," Jehan Perera, of the independent National Peace Council, said of the rebels' globe-trotting.
But that effort at image-building has been clouded by charges from human rights groups that the Tigers continue to forcibly recruit child solders and that they are undermining confidence in the peace process by murdering political opponents.
The Dublin meeting, which runs through Friday, comes just several days after the U.S. State Department re-designated the LTTE as a "foreign terrorist organisation" that "continues to engage in terrorist activities".
While applauding the Tigers for continuing with a peace process that started when a ceasefire was signed in February 2002, Deputy Secretary of State Richard Armitage said the Tigers still had to prove they were sincere.
The United States "will be prepared to deal with the group as a legitimate political entity in Sri Lanka only after the organisation renounces terrorism and ceases terrorist acts," he was quoted as saying in a U.S. Embassy statement.
Peace talks with the government to permanently end the war that has killed 64,000 have taken the Tigers to Thailand, Japan, Berlin and Oslo since they began last year.
Since the talks broke down in April, after the rebels walked out for being excluded from an aid planning meeting in Washington, their travels have continued.
LTTE leaders have met with advisers in the Tamil diaspora in Paris and have studied federal models of government in countries such as Belgium and Switzerland.
"They will go to as many European capitals as they can manage. It is part of their public relations strategy," said one Western diplomat.
Critics in Sri Lanka charge the welcome abroad for the Tigers is out of line with their actions, including their refusal to comply with monitors overseeing the truce signed 19 months ago who ruled a new rebel camp violated the truce.
But others say their travels expose them to a world outside their war-torn environment and gives them a taste of the kind of lives they could lead if the peace process succeeds.
"To the extent that it makes if more difficult for them to go back to war, I think it's a good thing," said Perera.
"The negative is, it would strengthen their belief they're a democratic entity. Their expectations are increasing. They're being treated as a legitimate government and they'll want negotiations to proceed on that basis," he said.
http://in.news.yahoo.com/031006/137/287id.html
|
|
|
| எதிர்காலவியல் இலக்கியமும் பிறவகை இலக்கியங்களும் |
|
Posted by: சாமி - 10-05-2003, 11:35 AM - Forum: தமிழும் நயமும்
- No Replies
|
 |
எதிர்காலவியல் இலக்கியங்கள்
இலக்கிய இயல்பு
இலக்கிய நோக்கம்
இலக்கியப் பயன்
காலச் சூழலுக்கு ஏற்ப புதிய புதிய பொருண்மைகள் இலக்கியத்துள் இடங்கொள்கின்றன. அவ்வகையில் இன்று எதிர்காலவியல் படைப்பிலக்கியத்துள்ளும் தடம் பதித்துள்ளது. தூது, உலா, பிள்ளைத்தமிழ் என்பன போன்ற உரைநடையிலக்கியத்துள் பொருணிலை அடிப்படையில் காணும் தனிவகையாக 'எதிர்காலவியல் இலக்கியம்' அமைகின்றது. அதன் அறிமுகமாக இக்கட்டுரை அமைகிறது.
எதிர்காலவியல் இலக்கியமும் பிறவகை இலக்கியங்களும்
படைப்பாளர் தாம் கண்ட, கேட்ட, அறிந்த, நடந்த, நடக்காத, நிகழ்வுகளைக் கொண்டு தம் புலமையால், கற்பனை வளத்தால் புத்தாக்கங்களைத் தருகின்றனர் என்ற நிலையில் எல்லாவகை யிலக்கியங்களும் ஒன்றுபடுகின்றன.
கருத்துகளைப் பயன்படுத்த இவர் கையாளும் மொழிநடை குறிப்பிட்டுச் சுட்டப்பட வேண்டியதாகும். அறிவியல், தொழில்நுட்பப் புரட்சியே எதிர்காலவியலுக்கு அடிப்படையாக் கருதப்படுவதால் அறிவியற் சொற்களும், கலைச்சொற்களும் அதிகமாகப் பயன்படுத்தப்படுகின்றன. அவை பற்றிய அறிவு இருந்தால்தான் இப்படைப்புகளை முழுமையாகச் சுவைக்க முடியும். பொழுதுபோக்குப் புனைகதைகளை எழுதப்படிக்கத் தெரிந்த கதை ஆர்வலர் அனைவரும் படிப்பதுபோன்று இதனைப் படிக்க இயலுமா என்பது ஐயமே. ரோலர் கோஸ்டர், ஸப்ஸானிக் 75, பாலவினைல் (கி.பி.2084; 1-1-3) போன்று பல சொற்கள் இடையிடுவதைச் சான்றாக்கலாம்.
படைப்பாளர் சுஜாதா, 'விஞ்ஞானக் கதை' என்பது வேறு ஜாதி. இந்தக் கதைகளை உணர்ந்து கொள்ளக் கொஞ்சம் சிந்தனையை நீங்கள் கூர்மைப்படுத்திக் கொள்ளவேண்டும். மற்றொரு காலத்தில் மற்றொரு சூழ்நிலையில் கதைகள் நடைபெற்றாலும் நாம் அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய உணர்ச்சிகளையும் அவை சொல்லும், மெலிதான சித்தாந்த தத்துவப் பின்னணிகளும் தென்படும் எனத் தன் தேவன் வருகை, சிறுகதைத் தொகுதி முன்னுரையில் மொழிந்திருப்பதும் சுட்டத்தக்கது.
மற்றும் சுஜாதா, ஆய்வாளருக்கு அளித்த பதிலில், 'இவ்வகைப் படைப்புகளுக்கு அடிப்படை நிகழ்கால அறிவியல் மற்ற இயல்களில் செய்யும் ஆராய்ச்சிகளின் எதிர்காலச் சாத்தியக் கூறுகளை எண்ணிப் பார்த்து அது எந்தத் திசையில் செல்லலாம் என்று சிந்திக்கும் 'எதிர்நீட்டலில்' (extrapolation) உள்ள ஆர்வமும் சவாலும் ஆகும். இந்தக் காரியம் அத்தனை எளிதல்ல' என்று இவ்வகைப் படைப்புகளைப் படைப்பதற்கும் தனித்திறமை தேவை என்பதை வலியுறுத்தியுள்ளார். உயர் அறிவியல் அறிவு மிக இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
இங்கு அறிவியல் கதைகள் அனைத்தும் எதிர்காலவியல் இலக்கியமாகிவிட முடியாது என்ற உண்மையையும் குறித்தல் தேவையாகும். அறிவியல் கதைகள் அண்மை அல்லது வெகுதொலைவில் இருக்கும் எதிர்காலம் பற்றிய சிந்தனையை உள்ளடக்கும் போதுதான் அவை எதிர்காலவியல் இலக்கியமாகின்றன. எதிர்காலத்தையடிப்படையாக்கிப் படைக்கப்படும் எவ்வகையிலக்கியமும் இதன்பாற்படும் என்பதும் நவிலற்பாலது.
உலா, மடல், பள்ளு, பிள்ளைத்தமிழ் என்பன போன்று 'இவ்வகைக்குரிய பாடுபொருள் இது மட்டுந்தான்' என்ற வரையறை எதிர்காலவியல் இலக்கியத்திற்கு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எதனையும் பேசலாம்; அந்த எதுவும் அறியலோடும் தொழில்நுட்பங்களோடும் இணைந்துரைக்கப்படவேண்டும் என்பது மட்டும் கண்டிப்பாகிறது.
காப்பியம், புராண இலக்கியங்களில் காண்கின்ற மீயியற்கை நிகழ்வுகள் போன்று இங்கும் படைப்பாளர் தம் மிகைக் கற்பனைகளை நடக்கக்கூடிய நிகழ்வுகள் எனப் படைக்கின்றனர். அதில் தேவர்களும் மிகையாற்றல் கொண்ட மானிடரும் வியத்தக சாதனைகளைச் செய்ய எதிர்காலவியல் இலக்கியங்களில் அவை, இயல்பு நிலையிலேயே மானிடரால் நிகழ்த்தப்படுகின்றன. இதற்கு அறிவியலின் பன்முக வளர்ச்சி காரணமாக்கப்படுகிறது. எனவேதான் நிகழக்கூடும் எனும் வாய்ப்புக் கூறினைக் கற்பார் பெறமுடிகிறது. சான்றாகச் சந்திரனில் விண்வெளி ஆய்வுக்கூடத்தில் மானிடர் வாழுதல், பிற கோள்களோடு தொடர்பு கொள்ளுதல், சூரிய ஒளியில் பெற்ற மின்சாரத்தால் இரவைப் பகலாக்குதல் (கி.பி.2081) போன்றவற்றைச் சுட்டலாம்.
''அறிவியல் சாதனைகளைச் செய்வதற்கு, (இத்தகு) அறிவியல் கதைகள் ஒரு தூண்டுகோலாக இருப்பதுடன் மனித சமுதாயத்தில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அல்லது ஏற்பட வாய்ப்பளிக்கக்கூடிய மாற்றங்களை ஒரு நிழலாக நமக்குக் காட்டியது (காட்டுவது) மிகவும் பயனுள்ளதாகும்'' என்று எதிர்காலவியலறிஞர் ஆ.யோகமூர்த்தி கூறுவது பிற இலக்கியங்களினின்றும் இது தனித்து நிற்பதற்கான மற்றொரு கருத்தை அறிவித்தலாகும். இதனை அவர் தம் 'சுற்றுச்சூழல் எதிர்காலச் சிந்தனை' எனும் நூலில் மிக விரிவாகப் (பக்.80-87) பல சான்றுகள் கொண்டு நிறுவியுள்ளார்.
மேனாட்டார் அறிவியல் சிந்தனைகள் இவ்வகையிலக்கியங்களுக்கு அடிப்படையாதலும் உண்டு!
எதிர்காலவியல் இலக்கியங்கள்
எதிர்காலவியல் அடிப்படையில் தமிழில் தோன்றியுள்ள இலக்கியங்களில் எது முதலாவது எனத் தௌ¤வாகக் குறிக்க இயலவில்லை. அறிந்தவரையில் வல்லிக்கண்ணன், 1942 (செப்) நவசக்தி இதழில் படைத்த 'கி.பி.2001'ஐ முதலாவதாகக் கொள்ளலாம். தொடர்ந்து சுஜாதா பல சிறுகதைகளும் (தேவன் வருகை, கம்ப்யூட்டரே கதை சொல்லு) புதினங்களும் (என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, வாசனை, மஞ்சள் ரத்தம்) படைத்து வளர்த்து வருகிறார். கஸ்தூரி ரங்கன் தினமணிக்கதிரில் எழுதிய 'கி.பி.2081' தொடர்கதையும் இதன் பாற்படுவதே. அவ்வப்போது வார இதழில் ஆர்னிகா நாசர் இவ்வகைச் சிறுகதை படைத்து தனக்கென ஓரிடத்தைத் தக்க வைத்துள்ளார். (பில்லியனில் ஒருவன், ஆனந்த விகடன் 20.11.94) மற்றும் கிருஷ்ணா டாவின்ஸ்கி.....என மிகச் சிலரே இதில் ஈடுபாடு காட்டியுள்ளனர்.
(''நான் படித்த நாவல்களின் பாதிப்பு சொர்க்கத் தீவில் இல்லவே இல்லை என்று சூடம் அணைத்துச் சத்தியம் பண்ணுவதற்கு நான் தயாராக இல்லை. நிச்சயம் இருக்கிறது. ஹக்ஸ்லியின் போக்கனாவ்ஸ்கி முறையைப் பற்றி ஒரு அத்தியாயத்தில் குறிப்பிட்டிருக்கிறேன். லெவின் ஒரு வயது எல்லைக்குப்பின் மக்கள் கொல்லப்படுவதைத் தன் புத்தகத்தில் சொல்லியிருக்கிறார்.
சுஜாதா; சொர்க்கத்தீவு; முன்னுரை ப.7.)
இவ்வகையிலக்கியம் தமிழில் மேலும் சிறப்புறுவதற்கு, நல்ல வாய்ப்பிருப்பதை ஆனந்த விகடனில் வெளிவந்த சிம்புவின் சிரிப்புத் துணுக்குகள் காட்டுகின்றன. அடுத்த நூற்றாண்டில் விமானப் பயணிகள் எண்ணிக்கை உயரும் என்ற செய்தியை எதிர்காலக் கணிப்பில் இவர் வான் வெளியில் விமானங்களின் எண்ணிக்கைப் பெருக்கால் பறவைகள் பறக்க முடியாது திணறுவதாக 'நான் பறந்து ஒருவாரமாகப் போகுது! ஒரே நெருக்கடி.... இனிமே நடந்துதான் போகணும்னு நினைக்கிறேன்' எனும் துணுக்கில் காட்டிச் சிரிக்க வைக்கிறார். பிக்பாக்கெட் கேஸ்தான்! பர்சை எடுத்துட்டு.... மறதியில் பஸ்ஸ§ன்னு நினைச்சுக் குதிச்சுட்டான் என்பதும் மற்றொரு சான்றாகும்.
பொதுவாக எதிர்காலவியல் இலக்கியம் உரைநடையைக் கையாள்வதே அதன் இயல்புநோக்கில் எளிதாகிறது. எனினும் கவிதையில் ஆங்காங்கே ஒரு சில தோன்றி நம்மை மகிழ்விக்கின்றன. இவற்றால் வடிவ வரையறையும் இவ்விலக்கியத்திற்கு இல்லை என்பதும் புலனாகிறது. பாரத சமுதாயத்தின் ஒருமையை விழைந்த பாரதி,
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம்.
...........................
காசி நகர்ப் புலவர் பேசும் உரைதான்
காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம்
(பாரத தேசம்)
எனப் பாடி, பிற கவிஞரையும் எதிர்கால நலன் எண்ணிப் பாட வழிகாட்டுகிறார். இங்கு உடுமலை நாராயண கவி எழுதி, என்.எஸ்.கிருஷ்ணன் பாடி மிகவும் புகழ்பெற்ற பாடலென்றும் சுட்டத்தக்கது.
விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி
மேனாட்டானை விருந்துக் கழைச்சிக் காட்டப்போறேன்டி
தஞ்சாவூர் ஏட்டை மிதிச்சு தலைகீழாப் பாடம்படிச்சு
பொஞ்சாமி புருஷன் இல்லாம
புள்ளையும் குட்டியும் பிறக்கறாப்பல
(விஞ்)
அஞ்ஞானத்தை அழிக்கப் போறேன்டி
அணுசக்தியாலே ஆயுளு விருத்திப் பண்ணப் போறேன்டி
......................
புஞ்சை நிலத்துப் பருத்திச் செடியில
புடவை ரவிக்கை வேட்டி காய்க்க
பஞ்சைக் கிழவர் தன்னை வாலப்பருவ மாக்கி
நாட்டைக் காக்க
கைத்திறமையைக் காட்டப் போறேன்டி
..........................
பள்ளிக் கூடத்துக்குப் போகாம பிள்ளைகள்
பாடம் படிக்க வேணும்........''
எனும் அப்பாடல் கவிஞரின் திறம்பட்ட எதிர்காலச் சிந்தனைகளை புலப்படுத்துகிறது. நகைச்சுவைக்காக எழுதப்பட்ட பாடலாயினும் இதனுள் எதிர்காலவியல் இலக்கிய இயல்பு நன்கு கால் கொண்டிருப்பது பாராட்டத்தக்கது. இன்று பெருஞ் செல்வாக்குடன் திகழும் புதுக்கவிதை வடிவிலும் சில கவிதைகளை இவ்விலக்கியப் பொருண்மையதாக இனம் காண முடிகிறது. சான்றிற்கு மு.மேத்தாவின்
நாளை
உலக வீதிகளில் / ஊர்வலம் போகும் / ஆயுதங்கள்
வீடுகளுக்குள் ஒளிந்தபடி / எட்டிப்பார்க்கும்/
மனிதன்......... (என்னுடைய போதிமரங்கள், ப.28)
எனும் கவிதையையும் துறவியின்,
காற்றில் உடையும் பலூன்கள்
எண்பது கோடி / இந்தியர்கள் / என்னமாய்
ஏளனப் படுகிறார்கள் / ஐநூறு நாடாளுமன்ற
உறுப்பினர்களால்/
அழுக்குத் துணிகளாய் / அரசியல் சட்டங்கள்
எப்போது நாம் / வெளுக்கப் போகிறோம்?
................
கையடக்கப்பதிப்பாய் / மாற்றி / இந்தியாவைக்
கவர்ந்து செல / கட்சிகளுக்குள்ளே / கடும் மோதல்!
................
இது / இப்படியே நீடித்தால் / எதிர்கால இந்தியன்
வாக்குச் சாவடிக்குப் / போக மாட்டான்
ஆயுதசாலையைத்தான் / தேடுவான்
(ஞாபகப் பூக்கள், பக்.64-66).
எனும் கவிதையையும் சுட்டலாம்.
எதிர்காலவியல் இலக்கிய இயல்பு
இன்றைய உலக நடைமுறையிலிருந்து முழுமையாக வேறுபட்ட சூழல்களையும், பழக்கவழக்கங்களையும் கொண்ட சமூகத்தைக் காட்டுவது (ஒன்பதாவது பெண்); எவையேனும் சில கூறுகள் மட்டும் மாறியுள்ளதாகச் சுட்டுவது (சூரியன்) எனும் இருநிலைகளையும் காணமுடிகிறது. அதாவது முற்றிலும் புதிய மனிதர், புதிய வாழ்வியல் என்பது ஒன்று; பழமையும் புதுமையும் கலந்தது மற்றொன்று. முன்னதை அதிவேக மாற்றம் என்றும் பின்னதை மிதவேக மாற்றம் என்றும் குறிப்பிடலாம்.
இவ்வகை யிலக்கியங்கள் நவிலும் எதிர்காலம் அண்மையில் எதிர்கொள் விருப்ப தொன்றாக (காலயந்திரம்) அல்லது பல நூற்றாண்டுகள் கடந்த தொன்றாக (காலமானவர்) அமையக் காணலாம். இவை தாம் எந்தக் காலத்தைக் கற்பனை செய்கின்றன என்பதை நேரடியாக உணர்த்துகின்றன (நகர்வலம்) அல்லது மிகப் பிற்காலத்திய கதை என்பதை மறைமுகமாக எளிதாகக் கதைப்போக்கில் உணரும் வண்ணம் (அடிமை) காட்டுகின்றன.
இவ்வுலகில் தம் வாழ்வில் தாம் காண அல்லது பெற விரும்புவனவற்றை - எதிர்காலத்திலாவது பெறக்கூடும் அல்லது பெற வேண்டுமென எண்ணுவனவற்றையும் இவை கருவாகக் கொள்கின்றன (யயாதி).
சுற்றுப்புறம், சூழல், பழக்கவழக்கம் என அனைத்துக் கூறுகளிலும் புதுமையாக்கம் பொலிவுறுவதைக் காட்டிடினும் அடிப்படைத் தேவைகள் இன, சமய வேறுபாடின்றி அனைவருக்கும் தடையின்றி நிறைவு செய்யப்படினும் தனிமனித நிறைவின்மை அமைவது - நிறைவில் நிறைவின்மை கொள்வது பொதுவான ஒன்றாக உணர முடிகிறது (ஒன்பதாவது பெண்). எனவே சமுதாய வெளிப்புற வாழ்வில் வளர்ச்சி, தனிமனித அகநிலை வாழ்வில் வீழ்ச்சி எனும் முரண் இதன் இயல்பாகிறது.
மானிட உழைப்பு குறைந்து, இயந்திரமயமாதல் காரணமாகத் தனிமனித உணர்வுகளும், உரிமைகளும் பாதிப்புக்குள்ளாவதும் வெளிப்படையாக உணர்த்தப்படுகிறது (அடிமை).
இன்று உலக நாடுகள் சிறப்பான அக்கறை காட்டும் அனைவருக்கும் கல்வி; ஆண் பெண் சமநிலை; வாழ்க்கைத் தர உணர்வு; பொருளாதாரச் சமத்துவம்; மக்கட் தொகை; உலக நாடுகளிடையே அமைதி என்பனவற்றிற்குப் படைப்பாளர் தம் நோக்கில் தரும் தீர்வுகளாகவும் இவ்வகையிலக்கியங்கள் அமைகின்றன.
ஆயின் அவையும் முற்றமுழுக்க நிறைவுடையனவல்ல; அவற்றால் புதிய குறைபாடுகள் தோன்றுவதையும் அவற்றிற்குத் தீர்வுகாண வேண்டியுள்ளதையும் (ரூல் நம்பர் 17) நேரடியாக அல்லது மறைமுகமாக உணர்த்துவதைக் காணலாம். எனவே ஒருவகை முரணிலையை இவ்வகையிலக்கியத்தின் பொதுக்கூறாக எண்ணத் தோன்றுகிறது.
இன்பக் கனவுலகின் எதிர்நிலையாக அமையும் துன்பக்கனவுலகுக் (Dystopia) கற்பிதத்துடன் ஒருங்கு எண்ணும் வகையிலும் சில அமைதல் (வாசல், ரூல் நம்பர் 17) சுட்டற்பாலது.
கதை நிகழ்களன் பரந்து விரிந்து அண்டத்திற்கு அப்பாலும் வேற்றுக் கோள்களுடன் தொடர்புகொண்டு அமைதல் பரவலாகக் காணப்படுகிறது (நகர்வலம்).
காண்டப் பிரிவினை யகன்று உலகம் ஒரு குடைக்கீழ் ஒருங்கிணைந்து செயல்படுவதாகக் காட்டலும் பொதுவானதாக அமைகிறது (தமிழாசிரியர்). இதனால் மனித சமுதாயம் ஒன்றே ஒன்றுதான், அதனுள் பிரிவினைகள் இல்லை என்ற ஒருமையுணர்வு மலர்வதாகக் காட்டப்படுகிறது. எனவேதான், 'அறிவியல் சார்ந்த பொதுவுடைமை' (Scientific Communism) என்ற கருத்தும் எதிர்காலவியல் பற்றி வழங்கப்படுகிறது.
இன்றைய மனிதனின் நிலையிலிருந்து மாறுபட்டு நாளைய மனிதன் பெறப்போகும் வாழ்க்கை வசதி குறித்த வியப்பும், ஒருவகை அடிமைநிலை குறித்த இரக்கமும், இன்றைய தவறுகள் நாளைய சமூகத்தை எங்ஙனமெல்லாம் சீர்குலைக்கக்கூடும் எனும் எச்சரிக்கை கலந்த அச்சமும் (ஒன்பதாவது பெண்) இவ்வகைப் படைப்புகளில் எதிரொலிக்கின்றன.
கதையிலக்கிய உத்திகள் இங்கும் மேற்கொளப்படினும், உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம் போன்ற இலக்கிய அணிகளை விட கணினி, மின்னணுக் கருவிகள், தானியங்கிகள் போன்ற தொழில் நுட்பக் கருவிகளும் அவற்றின் செயற்பாடுகளுமே கதைக்களனில், போக்கில் ஆட்சி செலுத்துகின்றன.
(சுஜாதாவின் 'தேவன் வருகை' சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளை அடைப்புக் குறியுள் இருக்கும் பெயர்கள் சுட்டும்.)
எதிர்காலவியல் இலக்கிய நோக்கம்
புதிய புதிய இலக்கிய உத்திகளைக் கொணர விரும்பும் படைப்பாளரின் புதுமை விளைவே இதன் தோற்றத்திற்கும் அடிப்படை. படைப்பாளர் காண விரும்பும் சமுதாயச் சீர்திருத்தத்திற்கும், கனவு வெளிப்பாட்டிற்கும் இவ்வகை நற்களனாகிறது.
எதிர்காலவியல் இலக்கியப் பயன்
தமிழிலக்கிய வரலாற்றில், வளர்ச்சியில் புதியதொரு இலக்கிய வகை வரவேற்கத்தக்க நிலையில் அமைந்துள்ளது.
பொழுதுபோக்கிற்காகச் சிறுகதை, புதினம் எனப் படிக்கும் எளியோர்க்கும், பிறர்க்கும் அறிவியல் வளர்ச்சியை, பயனை எளிய முறையில் விளக்கிச் செல்லும் ஊடகமாக இவ்விலக்கிய வகை பெரும் பயனுடைத்தாகிறது. வெகுவிரைவில் வரவிருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டை, அறிவியல் யுகமாக எதிர்காலவியலாளர் கருதுவதால் அதற்கேற்ப இன்றைய மக்கட் சமூகத்தைத் தயார் செய்யும் நிலையிலும் இவை பங்கேற்கின்றன எனலாம்.
நிகழ்கால இட, இனக் கலவரங்கள், அணு ஆயுதப் போர், வறுமை போன்ற சிக்கல்களால் தம் வழித்தோன்றல்கள் பெறப்போகும் அவலம் குறித்த அச்சம், எச்சரிக்கை என்பன தற்காலத்தவர்க்குத் தம் தவறுகளைத் திருத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பாகவும் பயன்படக்கூடும்.
இன்று தளர்நடை இட்டுக் கொண்டிருக்கும் 'எதிர்காலவியல் இலக்கியம்' மேலும் வளம் பெறுவதற்குரிய சூழல், தென்படுகிறது. இவ்வகைக் கதை எழுத்தாளர் எண்ணிக்கையும் பெருக இடமுண்டு.
- முனைவர் ச.சிவகாமி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தரமணி, சென்னை-113.
நன்றி: அம்பலம்
|
|
|
| இஸ்ரேலிய போர்விமானங்கள் சிலியாவில் |
|
Posted by: Mathivathanan - 10-05-2003, 09:06 AM - Forum: செய்திகள் : தமிழீழம்
- Replies (1)
|
 |
இஸ்ரேலிய போர்விமானங்கள் சிலியாவின் உள் ஊடுருவி இஸ்லாமிக் ஜிகாட் ஹமாஸ் இயக்க பயிற்சித் தளங்கள் பயிற்ச்சிப்பீடங்களைத் தாக்கியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
Israel hits Palestinian 'camp' in Syria
So far the Israeli response has been limited
Israeli forces have attacked a Palestinian "militant training base" inside Syrian territory in response to a Palestinian suicide attack on Saturday, the Israeli army says.
In its statement, the army said the attack was carried out "deep inside Syrian territory", but did not make clear whether air or ground forces were involved.
The statement accused the government in Damascus of supporting terrorism.
Earlier, the army demolished the home of the Palestinian suicide bomber who blew herself up in a packed restaurant in the northern port city of Haifa, killing 19 people.
Two separate locations came under missile raids in Gaza City overnight following an emergency meeting between Israeli Prime Minister Ariel Sharon and senior military officials.
Mr Sharon is under increasing pressure to implement a cabinet decision in principle to "remove" Palestinian leader Yasser Arafat, who is blamed by Israel for much of the violence.
To try to prevent this, international activists have gone to Mr Arafat's Ramallah compound to act as human shields.
But Israeli sources say that, for now, Israel will not try to go in and get Mr Arafat, says the BBC's James Reynolds in Jerusalem.
Israel has not said how or when it might remove Mr Arafat, but has acknowledged that an assault could result in his death.
Gaza targeted
Two Israeli missiles were fired at a house in Gaza City, which Palestinian sources say was the home of a Hamas militant. He was not at home at the time.
This awful attack is an opportunity... to implement the Cabinet decision to get rid of Arafat
Dan Naveh
Israeli Health Minister
In pictures: Haifa aftermath
The el-Bureij refugee camp also came under attack but there were no reports of casualties.
The seafront restaurant in Haifa, which was packed with lunchtime diners, has been jointly run by a Jewish and an Israeli Arab family for decades.
The Palestinian militant group Islamic Jihad claimed responsibility for the attack, which came on the eve of the holiest day in the Jewish calendar, Yom Kippur.
The BBC's Orla Guerin in Jerusalem says the Haifa bombing is one of the deadliest attacks in the past three years, and it brings the Middle East to a critical moment.
Four children were among the 19 people killed, as well as several Arabs. About 50 people were injured in the attack.
Arafat under pressure
Israeli Health Minister Dan Naveh said the bombing had created an "opportunity to implement the cabinet decision to get rid of Arafat".
However, our correspondent says Israel would need a green light from the United States to make such a move - something Washington has refused in the past.
Palestinian sources said the suicide bomber was a trainee lawyer, whose brother and cousin were killed by Israeli troops in June.
Yasser Arafat has condemned the attack, saying it endangered Palestinian interests.
RECENT SUICIDE ATTACKS
9 September: 15 killed in Jerusalem and Tel Aviv
19 August: 23 killed in Jerusalem
11 June: 17 killed in Jerusalem
18 May: 7 killed in Jerusalem
5 March: 17 killed in Haifa
History of bomb blasts
Prime Minister-designate Ahmed Qurei, for his part, condemned what he called "an ugly attack" and is reported to have telephoned Haifa Mayor Yona Yahav to express his sorrow.
He urged Palestinian groups "to fully halt these actions that target civilians and harm our legitimate and just national struggle," his office said in a statement.
US President George W Bush called the attack a "despicable" act that underlined the need for the Palestinian leadership to combat terrorism.
But Israel blames the Palestinian Authority for failing to disarm militant groups.
The bombing came as Israel imposed a total closure of the West Bank and Gaza Strip for Yom Kippur - the day of atonement - which runs for 24 hours from Sunday evening.
http://news.bbc.co.uk/1/hi/world/middle_ea...ast/3165394.stm
|
|
|
|